பௌசிக்கு கடூழிய சிறைத் தண்டனை
Posted in இலங்கை செய்திகள்

பௌசிக்கு கடூழிய சிறைத் தண்டனை

பௌசிக்கு கடூழிய சிறைத் தண்டனை

பௌசிக்கு கடூழிய சிறைத் தண்டனை ,முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏ. எச். எம்.பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனையும் அதனை 10 வருட காலத்திற்கு ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று (27) உத்தரவிட்டுள்ளார்.

ஏ. எச்.எம் ஃபௌசி குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அவரை குறித்த குற்றத்திற்காக குற்றவாளி என அறிவித்து நீதிபதி இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளார்.

அதேபோல், 4 இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

2010 இல், ஏ. எச். எம் ஃபௌசி அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக கடமையாற்றிய போது, ​​நெதர்லாந்திலிருந்து அமைச்சின் பேரிடர் முகாமைத்துவ நடவடிக்கைகளுக்காக கிடைத்த சுமார் 2 கோடி ரூபா

பெறுமதியான சொகுசு வாகனத்தை தனது தனிப்பட்ட பாவனைக்காக பயன்படுத்தியமை, அதற்காக அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகளை ஈடுபடுத்தியமை மற்றும் வாகனத்தின் பராமரிப்புக்காக நிதியமைச்சின்

சுமார் 10 இலட்சம் ரூபா பணத்தை செலவழித்தமை போன்ற 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு

இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஏ. எச். எம் ஃபௌசி தனது வழக்கறிஞர் மூலம் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதன்போது, 62 வருட அரசியல் அனுபவமுள்ள சிரேஷ்ட அரசியல்வாதி ஒருவர் இவ்வாறு செயற்படுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது எனவும், எனினும் அவர் முதல் சந்தர்ப்பத்திலேயே இலஞ்சம் வாங்கிய குற்றத்தை

ஒப்புக்கொண்டதையும், தற்போது 86 வயதான முதியவர் என்பதையும் கருத்தில் கொண்டு குறைந்த பட்ச தண்டனை வழங்குவதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.

ஏ. எச். எம்.பௌசியின் கைரேகைகளைப் பெறவும் நீதிபதி இதன்போது உத்தரவிட்டார்.

தேர்தல் மேடையில் சஜித்துடன் அர்ச்சுனா
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

தேர்தல் மேடையில் சஜித்துடன் அர்ச்சுனா

தேர்தல் மேடையில் சஜித்துடன் அர்ச்சுனா ,திருகோணமலை தேர்தல் மேடையில் சஜித் பிரேமதாசாவுடன் தேர்தல் மேடையில் ஒன்றாக மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் வீற்றிருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன .

கீழே உள்ள காணொளியில் இவற்றை பார்க்க

வீடியோ

https://www.youtube.com/watch?v=J9OZc2g0Hfc
சஜித்துக்கு தேர்தலில் அர்ச்சுனா ஆதரவு
Posted in இலங்கை செய்திகள்

சஜித்துக்கு தேர்தலில் அர்ச்சுனா ஆதரவு

சஜித்துக்கு தேர்தலில் அர்ச்சுனா ஆதரவு

சஜித்துக்கு தேர்தலில் அர்ச்சுனா ஆதரவு ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு தனது ஆதரவு வழங்க உள்ளதாக நேற்று அறிவித்துள்ளார் .

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள இவ்வேளையில் சஜித்துக்கு தனது ஆதரவு இருக்குமென , அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அடக்குமுறைக்கு உள்ளாக்க பட்டு வரும் சிறுபான்மை தமிழர்களுடைய விடுதலையை வென்றெடுக்க ,நேரிய நிகழ்ச்சி நிரலை அர்ச்சுனா இராமநாதன் முன்னெடுத்துளளார் .

விடுதலை புலிகளை அழித்தொழிக்க இந்தியா இராணுவம் இலங்கை வந்தடைந்த 1987 ஆம் ஆண்டு முதல் மிக பெரும் நெருக்கடி புலிகளுக்கு ஏற்பட்டது .

அவ்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி வந்த அதே விடுதலை புலிகளை சஜித் பிரேமதாசாவின் தந்தையான ரணசிங்க பிரேமதாசா காப்பற்றினார் .

இந்தியா இராணுவத்தை இலங்கையை , விட்டு ஓட ஓட விரட்டியடித்தார் ,அதனை அடுத்து தமிழீழ விடுதலை புலிகளுக்கு இரண்டு லாரிகளில் ஆயுதம் வழங்கினார் .

அத்துடன் பாதிக்க பட்ட தமிழ் சிங்கள மக்களுக்கு வீடுகளை கட்டி கொடுத்தார் ,அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கு உணவு ,மற்றும் இலவசமாக சீருடைகளை வழங்கினார் .

அதனை கருத்தில் கொண்டு தற்போது சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவக மக்கள் நாயகன் ,வீர புதல்வன் அர்ச்சுனா இராமநாதன் தற்போது களத்தில் குதித்துள்ளார் .

அந்த வரலாற்றை சிறப்பு முடிவினை அவரை நேசிக்கும் மக்கள் ஏற்று களமாட தயராகி வருகின்றனர் .

தேர்தல் தொடர்பில் 1000 முறைப்பாடுகள்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் தொடர்பில் 1000 முறைப்பாடுகள்

தேர்தல் தொடர்பில் 1000 முறைப்பாடுகள்

தேர்தல் தொடர்பில் 1000 முறைப்பாடுகள் ,ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 31 ஆம் திகதி முதல் தற்போது வரை மொத்தம் 925 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவற்றில் தேர்தல் விதிகளை மீறியமை தொடர்பில் 901 முறைப்பாடுகளும், வன்முறை தொடர்பில் ஒரு முறைப்பாடும், மேலும் 23 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஒரு மாதத்திற்குள் சுமார் 1,000 முறைப்பாடுகள் பெறப்படுவது மிகவும் பாரதூரமான நிலைமை எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சுமார் 250 முறைப்பாடுகள் பெவரல் அமைப்புக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்த அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, இந்த நிலைமை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்

காதுகளால் வாகனம் இழுத்து சாதனை
Posted in இலங்கை செய்திகள்

காதுகளால் வாகனம் இழுத்து சாதனை

காதுகளால் வாகனம் இழுத்து சாதனை

காதுகளால் வாகனம் இழுத்து சாதனை ,தென்மராட்சியின் சாதனை நாயகன் செல்லையா திருச்செல்வம் 1,500 கிலோகிராம் எடையுள்ள ஹயஸ் வாகனத்தை 100 மீட்டர் தூரம் தனது இரு காதுகளால் கட்டி இழுத்து சாதனை படைத்துள்ளார்.

நேற்று (25) காலை 9.00 மணியளவில் யாழ்.கொடிகாமம், நட்சத்திர மஹால் முன்றலில் ஏ9 வீதியில் இந்த சாதனை நிகழ்வு இடம்பெற்றது.

வாகனத்தை வெற்றிகரமாக காதுகளால் இழுத்து சாதனை புரிந்த செல்லையா திருச்செல்வம் இதன்போது கெளரவிக்கப்பட்டார்.

இதேவேளை, தமிழ்நாடு, கொழும்பு, யாழ்ப்பாணம் என முன்னர் பல தடைகள் செல்லையா திருச்செல்வம், தனது தாடியால் பல்வேறு வாகனங்களை இழுத்து சாதனைபுரிந்து சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு ,2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தல் தொடர்பில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி, 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பு, எல்பிட்டிய உள்ளூராட்சி சபையின் தேர்தல் அதிகாரியினால் இன்று (26) அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கட்டுப்பணத்தை செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் செப்டம்பர் 11 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரையும் மேற்கொள்ள முடியும் எனவும்,

வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது செப்டம்பர் 9 ஆம் திகதி முதல் செப்டம்பர் 12 ஆம் வரை காலி மாவட்ட ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் திரு.சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

சிந்துயா கணவர் மரணம் நடந்தது என்ன
Posted in இலங்கை செய்திகள்

சிந்துயா கணவர் மரணம் நடந்தது என்ன

சிந்துயா கணவர் மரணம் நடந்தது என்ன ,மன்னர் மாவட்டட மருத்துவமனையில் ,மருத்துவ தவறின் காரணமாக படுகொலை செய்யப்பட்ட சிந்துயா கணவர் தற்கொலை செய்துள்ளார் .

இவர் மருத்துவ மாபியாக்களினால் திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மக்கள் மன்றம் பேசிக்கொள்கிறது .

மாமி ,மற்றும் சிசுவை விட்டு பிரித்து சென்ற மருத்துவ மாபியா கும்பல் ,இவரை மிரட்டி அச்சுறுத்தி அதன் பின்னர் படுகொலை செய்துள்ளதாவே நிகழ்வுகளை வைத்து நோக்க முடிகிறது என சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .

காணொளியில் மேலதிக முழுமையா விடயங்கள்

தபால் மூல வாக்கெடுப்பு தொடர்பான தகவல்
Posted in இலங்கை செய்திகள்

தபால் மூல வாக்கெடுப்பு தொடர்பான தகவல்

தபால் மூல வாக்கெடுப்பு தொடர்பான தகவல்

தபால் மூல வாக்கெடுப்பு தொடர்பான தகவல் ,ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களர்களுக்கு முகவரியிடப்பட்ட பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்குச் சீட்டுகள் அடங்கிய பாதுகாக்கப்பட்ட பொதிகளை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (26) ஆரம்பமாகவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், வாக்காளர் அட்டை விநியோகம் செப்டம்பர் 3 ஆம் திகதி தொடங்கும் என்றும், செப்டம்பர் 8 ஆம் திகதி அதற்கான சிறப்பு நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் காரணமாக ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்துச் செய்யப்படுவதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

எவரேனும் அத்தியாவசிய காரணங்களுக்காக விடுமுறை எடுக்க வேண்டுமாயின், மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி தபால் மா அதிபரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் அர்ச்சுனாவுடன் நேரலையில் பேசிட வாருங்கள் இப்போது
Posted in அர்ச்சுனா இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

மருத்துவர் அர்ச்சுனாவுடன் நாள்தோறும் நேரலையில் பேசிட வாருங்கள்

மருத்துவர் அர்ச்சுனாவுடன் நாள்தோறும் நேரலையில் பேசிட வாருங்கள்

மருத்துவர் அர்ச்சுனாவுடன் நாள்தோறும் நேரலையில் பேசிட வாருங்கள் .மக்கள் விடியலுக்காக களம் இறங்கி போராடும் அர்ச்சுனா இராமநாதன் அவர்களுடன் நேரடியாக நேரலையில் நீங்கள் பேசலாம் .

நாள்தோறும் எமது டிக் டாக் நேரலையில் பேசுகின்றார் ,மக்கள் கருத்துக்கு பதில் வழங்குகிறார் .

லண்டன் நேரம் மதியம் 4.00 மணி முதல் இராணுவு 8,00 மணிவரை இந்த நேரலை இடம்பெறுகிறது .இலங்கை நேரம் இரவு எட்டு மணி முதல் 11,00 ,மணிவரை .

பாசமுள்ள நெஞ்சங்களே ,மக்கள் நாயகன் விடுதலை வீரனுடன் பேச இன்றே எழுந்து வாருங்கள் ,புதிய சரித்திரம் படைப்போம் .வரலாற்றை மாற்றுவோம் .இது உங்களுக்கான நேரம் .


எமது tik tok நேரலையில் கலந்து கொள்ள கீழே உள்ள அழுத்துங்கள்

video

click here video

சீமானோடு அர்ச்சனா கொண்டாடும் மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

சீமானோடு அர்ச்சனா கொண்டாடும் மக்கள்

சீமானோடு அர்ச்சனா கொண்டாடும் மக்கள்

சீமானோடு அர்ச்சனா கொண்டாடும் மக்கள் ,நாம் தமிழர் கட்சி உடைய சீமான் அவர்களுடன் இணைந்து பணியாற்ற போவதாக தற்பொழுது அர்ச்சுனா அவர்கள் தெரிவித்து இருக்கிறார்.

2009 ஆம் ஆண்டு எமது நாட்டில் எமது தமிழ் மக்கள் சிங்கள அரசு பயங்கரவாத அரசினால் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் அதன் பின்னர் உதயமானது நாம் தமிழர் கட்சியாகும்.

அந்த கட்சியினுடைய வருகையை அடுத்து தமிழகத்தில் புலி கொடி கட்டி பறந்தது. முப்படைகளை கட்டி ஆண்ட எங்கள் தலைவர் பிரபாகரனுடைய கொள்கைகளை எடுத்து சீமான் உலக பரப்பில் பரப்பினார்.

சமூக ஊடகங்கள் வாயிலாக தமிழீழ விடுதலைப் புலிகளுடைய கோட்பாடுகள் கொள்கைகள் மழுங்கடிக்கப்பட்டு மறைக்கப்பட்டு வந்த நிலையில் ,

அதனை தாங்கி பிடித்து தூக்கி பிடித்து விடுதலைப்புலிகள் இருக்கின்ற காலத்தில் எவ்வாறு எழுச்சி இருந்ததோ அதை எழுச்சியை தக்க வைத்துக் கொண்டவர் சீமான்.

விடுதலை புலிகளுடைய ஆயுத போராட்டம் அழிக்கப்பட்டது, அந்த ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டாலும் ,அந்த ஆயுதப் போராட்டத்தில் இடம்பெற்ற யுத்த கள காட்சிகள் போல,

சீமான் ஒவ்வொரு மேடைகளிலும் தலைவர் பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் முழங்கியதே தமிழ் மக்கள் மத்தியில் அவர் கடவுளாக பார்க்க வைத்தது.

அவ்வாறான காலப் பகுதியில் 15 வருடங்கள் கழித்து தற்பொழுது இலங்கை ஈழ மண்ணில் சீமானாக அர்ச்சனா வெடித்து பறந்து இருக்கின்றார் .

அவ்வாறான அர்ச்சனாவை மக்கள் இரண்டாவது சீமானாகவே இன்று வரை பேசி வருகின்றனர்,ஏற்று கொண்டனர் .

அண்ணன் சீமான் மூத்தவராகவும் , தம்பி சீமான் அர்ச்சுனவாகவும் இப்பொழுது மாற்றம் பெற்றிருக்கின்றார்.

இரண்டு பேரும் ஒரு திசையில் பயணிக்கிறார்கள் அவர்கள் எங்களுடைய விடுதலை நோக்கி பயணிக்கிறார்கள் ஆதலால் இந்த மண் ,மக்கள் ,விடுதலை மிக விரைவில் வெற்றி கொடி கட்டு என்பதாகவே.

சீமனோடு ஒன்றித்த பயணிக்க போவதாகவும் அவரை அவரை நான் அவர்கள் அண்ணனாக ஏற்றுக் கொண்டுள்ளதாக தற்பொழுது அர்ஜுனார் ராமநாதன் அவர்கள் தெரிவித்துள்ளது அவருக்குள் ஏற்பட்ட ஒரு புரிதலாக பார்க்கின்றோம்.

விடுதலைக்காகவே சீமானும் போராடிக் கொண்டிருக்கின்றார் அந்த விடுதலைக்காகவே அர்ச்சனா ராமநாதன் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

இருவரும் இரு நாடுகளில் ஒரே கொள்கையோடு பயணிக்கிறார்கள் இதுதான் எங்களுடைய ஒற்றுமையை காண்பிக்கின்றது.

ஆம் என் தம்பி அர்ச்சனா மக்களுக்காக போராடுகிறான் அவர்கள் ஆதரவாக போராடுகிறான், அதனால் அவளுடன் நான் ஒன்றித்த பயணிப்பேன் .

என்பதுதான் அண்ணன் சீமான் உடைய நினைவாகவும் கொள்கையாகவும் இருக்கும் .

நாங்கள் முடிந்தால் அன்னான் சீமானுடன் பேசுவோம் இருவரும் ஒன்றித்த பயணிப்பதற்காக நாங்கள் கண்டிப்பாக நாங்கள் ஒற்றுமையாக இணைந்து பணியாற்றுவோம் என்பதை மீளவும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

தடம் மாறாத திசையில் எங்களது இனமான விடுதலைக்காக அண்ணன் சீமான் அவர்களும் ,அண்ணன் அர்ச்சுனா அவர்களும் ஒரு திசையில் பயணிக்கிறார்கள் .

அவர் பின்னால் இந்த இரண்டு பேரை ஆதரிக்கின்ற இந்த ஈழ மக்களும் இந்த உலகத் தமிழர்களும் ஒன்றாக நிற்போம் என்பதை உறக்க இந்த அரங்கில் எடுத்துரைத்திருக்கின்றார் எங்களது அர்ச்சனா.

தடம் மாற பயணிப்போம் தடைகளை உடைத்தெறிந்து இனமானம் காப்போம் .இப்பொழுது எங்களோடு இரு சீமான்கள் .

ஈழ தாய் இப்பொழுது தான் கொஞ்சம் புன்னகை விடுகிறாள் .விதைகள் முளைக்கின்றன ,கிளைகள் வெடிக்கின்றன ,இலைகள் முளைக்கின்றன .இனமான காற்று இப்பொழுது புயலாக வீசுகிறது .

-வன்னி மைந்தன் –

சிந்துஜாவின் கணவர் மரணம் அர்ச்சுனா கவலை
Posted in இலங்கை செய்திகள்

சிந்துஜாவின் கணவர் மரணம் அர்ச்சுனா கவலை

சிந்துஜாவின் கணவர் மரணம் அர்ச்சுனா கவலை ,சிந்துஜாவின் கணவர் அன்புள்ள தம்பி மரியராஜ் அவர்கள் காலமானதாக அறிய வருகின்றேன்.
இச்செய்து உண்மையோ பொய்யோ எனக்கு சரியாக தெரியவில்லை.
நெஞ்சம் கன கனக்கறது..


அரசியல் ஆட்டங்களால் ஒரு குழந்தையின் தாயையும் தந்தையையும் பலி கொடுத்துக் கொண்டே மன்னரர் சமூக அமைப்புகளும் இதர பல அரசியல்வாதிகளும் தங்களுடைய அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள்..


வைத்தியசாலை தொடர்பாக சார்பாக இருந்து வழக்குகளை திசை திருப்பிக் கொண்டிருந்த சிவகரன் அவர்கள் மற்றும் வைத்தியசாலையின் ஊடக சந்திப்பிற்கு மரியராஜ் அவர்கள் எவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்பது பற்றியும் ஒரு மாற்றுக் கருத்து இருக்கிறது..


எது எப்படியோ..
ஒரு குழந்தையின் தாயையும் தந்தையும் கொலை செய்து சந்தோஷமடைந்திருக்கிறோம்..
மன்னார் வைத்தியசாலை விவகாரம் திட்டமிட்ட ரீதியில் இவ்வாறே இழுத்தடிக்கப் படுகிறது.


வவுனியா வைத்தியசாலை விவாரத்திலும் இவ்வாறான ஒன்றை நடக்க விடாமல் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயல்பட நிர்பந்திக்க வேண்டும்..
அன்புள்ள மரியராஜ் தம்பி மற்றும் தங்கை சிந்துஜா உங்கள் ஆன்மா இப்போது உங்கள் குழந்தையை நோக்கி பார்த்த வண்ணம் இருக்கும்..


நெஞ்சம் கனத்த படி எழுதுகிறேன்..
பிள்ளையை நான் எடுத்து வளர்க்கவும் தயாராக இருக்கிறேன்..
கர்த்தரே அந்தக் குழந்தையை ஆசீர்வதியும்..

பெண் ஒருவர் வெட்டி கொலை
Posted in இலங்கை செய்திகள்

பெண் ஒருவர் வெட்டி கொலை

பெண் ஒருவர் வெட்டி கொலை

பெண் ஒருவர் வெட்டி கொலை ,ஹொரணை, சிரில்டன்வத்தை பகுதியில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக நேற்று (24) மாலை இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிரில்டன்வத்தை, மீவனபாலன பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபருக்கும், அவருடைய வீட்டுக்கு அருகில் வசித்த நபருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக உயிரிழந்தவர் மற்றும் அவரது சகோதரரால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கொலையைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் கானன்வில பிரதேசத்தில் வசிக்கும் 40 மற்றும் 44 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம்

இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம்

இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் ,ஹமாஸ் தலைவர் படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தி வருவதால், அடுத்து 48 மணி நேரத்திற்கு அவசர நிலையை இஸ்ரேல் அறிவித்துள்ளது.

மேற்காசிய நாடான இஸ்ரேல், பலஸ்தீனியர்கள் வசிக்கும் காசா மீது கடந்தாண்டு அக்டோபரில் இராணுவ தாக்குதல் துவக்கியது. அதை எதிர்த்து, காசாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‛ஹமாஸ்’ அமைப்பினர் போரிட்டு வருகின்றனர்.

பலஸ்தீன மக்களுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் ஆதரவாக, அண்டை நாடான லெபனானில் இருக்கும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஹமாஸ் தலைவர் ஈரானில் கொல்லப்பட்டார். இதற்கு இஸ்ரேல் தான் காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. ஹமாஸ் தலைவர் படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வடக்கு இஸ்ரேல் மீது நேற்று

நள்ளிரவு முதல் ஹில்புல்லா படையினர், 70 ரொக்கெட் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். குறிப்பாக, இஸ்ரேல் இராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 25) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் போர் இராணுவ அமைச்சரவை கூட்டம் நடந்தது.

அடுத்து 48 மணி நேரத்திற்கு இராணுவ அவசரநிலையை அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. லெபனான் நாட்டில் இஸ்ரேலை ஒட்டிய பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விட வேண்டும்

என்றும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இதன் மூலம் காசாவில் நடத்தியதுபோன்ற பெரிய அளவிலான தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி விட்டது தெரியவந்துள்ளது.

டெலிகிராம் நிறுவனர் கைது
Posted in உலக செய்திகள்

டெலிகிராம் நிறுவனர் கைது

டெலிகிராம் நிறுவனர் கைது

டெலிகிராம் நிறுவனர் கைது ,டெலிகிராம்’ சமூக வலைதளத்தின் நிறுவனர் பாவல் துரோவ், பாரிசில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் பேஸ்புக், டுவிட்டர் போன்று முக்கிய செயலியாக அறியப்படுவது டெலிகிராம். துபாயை அடிப்படையாக கொண்டு இயங்கி

வரும் இந்த செயலியை ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பாவல் துரோவ் என்பவர் நிறுவினார். இவர், பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் இரட்டை குடியுரிமையை பெற்றவர்.

டெலிகிராம் ஆப்பை மேம்படுத்தாமல் பணமோசடி, போதை பொருள் கடத்தல் போன்ற குற்றச்செயல்கள், ஆபாச மற்றும் பாலுணர்வைத் தூண்டும் வகையில் பதிவுகள் வெளியிட

உடந்தையாக இருந்தது போன்ற புகார்களினால் பிரான்ஸ் கைது வாரண்ட் பிறப்பித்து இருந்தது.

இந்நிலையில், அஸர்பைஜானில் இருந்து தனி விமானம் மூலம் செல்லும் போது பாரிஸ் அருகே உள்ள பொர்காட் விமான நிலையத்தில் வைத்து பாவல் துரோவை அதிகாரிகள் அதிரடியாக கைது

செய்துள்ளனர். ஆனால் அவரது கைது விவரம் குறித்து பிரான்ஸ் தரப்பில் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.

முன்னதாக, ரஷ்யா, உக்ரைன் போரின் போது அதிகாரப்பூர்வமற்ற, இருநாடுகளின் மோதல் பற்றியும், அது தொடர்பான அரசியல் நடவடிக்கைகள்

குறித்தும் தவறான செய்திகளை வெளியிடும் முக்கிய மையமாக டெலிகிராம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது

அர்ச்சுனா அரசியலுக்கு வந்தது தவறு
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா அரசியலுக்கு வந்தது தவறு

அர்ச்சுனா அரசியலுக்கு வந்தது தவறு

 அர்ச்சுனா அரசியலுக்கு வந்தது தவறு ,மருத்துவர் அர்ச்சனா ராமநாதன் அரசியலுக்குள் வருகை தந்தது மிகப்பெரும் தவறு என கடந்த தினம் நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதிநிதி யோகி அவர்கள் எமக்கு தெரிவித்திருந்தார்.

 மருத்துவத்துறையில் அவர் கொடி கட்டி பறந்திருக்க வேண்டுமே தவிர அவர் அரசியலுக்கு வருவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு விடயமாக அவர் தனது பதிவில் வெளியிட்டு இருந்தார்.

 அரசியலுக்கு வருவதற்கு இன்னொருவருக்கு தடைகளை விதிப்பதற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எவ்வாறு முற்படலாம் என்கின்ற கேள்வியை நாம் எழுப்பி நிற்கின்றோம்.

 கடந்த 15 வருடங்களாக மக்களுக்கு மிகப்பெரும் உதவிகளை செய்து வருவதாக கூறிக் கொள்ளும் நாடு கடந்த அரசாங்கம், மற்றும் ஏனைய விடுதலை புலிகளும் கட்டமைப்புகள், தமிழருக்கு இந்த 15 வருடங்களில் செய்தது என்ன என்கின்ற கேள்வியை எழுப்புகின்றோம்.

 அடித்தட்டு மக்களினுடைய அடக்குமுறைகள் வலிகள் வேதனைகள் துயரங்கள் துன்பங்களை புரிந்து கொள்ள முடியாது, தங்களது பெட்டிகளை நிரப்புகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற இவ்வாறான புலிகளினுடைய காட்சிகள் ,அல்லது வியாபாரிகள் இவ்விதம் ஏன் பேசுகிறார்கள் என்கின்ற சந்தேகம் இப்பொழுது எழுந்துள்ளது.

 எதிர்க்கட்சி இல்லாமல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்குள்ளே அடிதடிகள் ரகளைகள் இடம் பெற்று வருகின்றன, உள் வீட்டு சண்டைகள் உச்சம் அடைந்து காணப்படுகின்றன.

 தனது பதவியே பறிபோய் விடுமோ என்கின்ற அச்சத்தில் நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமராக இருக்கின்ற உருத்திர குமார் தவித்துக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறான தற்காலத்தில் தற்போது மக்களுக்கு இனிய விடியலுக்காக போராடிக் கொண்டிருக்கின்ற அர்ஜுன இராமநாதன் அரசியலுக்கு வந்தது தவறு என நாடு கடந்த அரசாங்கம் கூறிக் கொள்வது காமெடியாகவே பார்க்க முடிகிறது.

 அர்ச்சனாவை அரசியலுக்கு வருவது தவறு என மிரட்டுகின்ற இவரது மிரட்டல் நாடகங்களுக்கு ஒரு புற்றுப்புள்ளி வைக்கபடும் ,இந்த கோமாளி அரசியல்வாதிகளை மக்கள் பார்த்து .கொள்வார்கள்

வைத்தியர் அர்ஜுனா இராமநாதன் அவர்களே நீங்கள் எழுந்து நடவுங்கள் .

இவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்பதாக நாங்கள் இப்பொழுது சொல்லிக் கொள்கிறோம் ஏனென்றால் உங்களுடைய பல விடையங்கள் எங்களுக்கு தெரியும் என்பதால்.

சிந்துஜாவின் கணவர் தற்கொலை
Posted in இலங்கை செய்திகள்

சிந்துஜாவின் கணவர் தற்கொலை

சிந்துஜாவின் கணவர் தற்கொலை

 சிந்துஜாவின் கணவர் தற்கொலை ,மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாய் சிந்தியாவின் கணவரான எஸ்தன் என்கின்றவர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தனது மனைவியை பறிகொடுத்து மன அழுத்தத்தில் சிக்கித் தவித்து வந்த இவருக்கு அரசியல் ரீதியாக பல்வேறுபட்ட அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வந்ததாகவும் ,அதனுடைய உச்சகட்ட மான உளைச்சல் காரணமாக இவர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 காதல் மனைவி இறந்த நிலையில் தற்பொழுது ஏதும் செய்ய முடியாத நிலையில் பல இன்னல்களுக்கும் சிக்கி தவித்து வந்த கணவர் தற்பொழுது அரலி விதையினை உண்டு தற்கொலை செய்துள்ளார் என்ற சம்பவம் வெளியாகி இருக்கின்றது.

 தவறான மருத்துவ சிகிச்சையின் காரணமாகவே தற்பொழுது மனைவி இறந்ததாக வழக்கு தொடரப்பட்டு வருகின்ற நிலையிலும், 5 பேருக்கு பணிகளை நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட வந்திருந்தது அதனை அடுத்து தற்பொழுது கணவர் தற்கொலை செய்யப்பட்டுள்ளார்.

 இவரை தற்கொலை செய்து அரசியல்வாதிகள் தோன்றினர் அல்லது இவர் தற்கொலை செய்தாரை என்கின்ற விடயமே கேள்வியாக எழுந்துள்ளது.

 கடுமையான மன அழுத்தம் கொடுத்து அரசியல்வாதிகளின் கொலை மிரட்டல் காரணமாக அது உச்ச மன உளைச்சலுக்கு சென்றிருந்த இவர் தற்பொழுது தற்கொலை செய்திருக்க கூடும் என்று மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது.

 மருத்துவமனைகள் தம்மை தான் காத்துக் கொள்வதற்காக தற்பொழுது அப்பாவிகள் விளையாடி வருகின்ற செயல்பாடாகவே தற்பொழுது சிந்தியாவின் கணவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் காணப்படுவதாக மக்கள் பேசிக் கொள்கின்றனர்.

மருத்துவர் அர்ச்சுனாவை கொல்வதற்கு சதி
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

மருத்துவர் அர்ச்சுனாவை கொல்வதற்கு சதி

மருத்துவர் அர்ச்சுனாவை கொல்வதற்கு சதி

மருத்துவர் அர்ச்சுனாவை கொல்வதற்கு சதி என மருத்துவர் அர்ச்சுனா நூலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .

அந்த பதிவு பிவருமாறு ..

,என்னை கொல்வதற்குரிய ஒலிப்பதிவு கிளிநொச்சியில் இருந்து ஒரு நபரால் கதைக்கப்பட்டது என்னுடைய கைக்கு வந்துள்ளது..


வெகுவிரைவில் சம்பந்தப்பட்ட நபரின் விபரத்துடன் போலீஸ் கம்ப்ளைன்ட் ஒன்றை இட்ட பின்பு மக்களுக்கு தெரியப்படுத்துவதாக இருக்கிறேன்..


என்னை கொல்வதற்கு தன்னுடைய ஆட்களிடம் 25 கோடி வந்துள்ளது என காசு ட்ரான்ஸ்பர் ஆகி இருக்கிறது என்று அவர் கதைத்துள்ள ஆடியோ ஆதாரம் என்னுடைய கையில் உள்ளது.


பிரபல அரசியல்வாதி ஒருவரின் பின்புலம் இருப்பதாக நான் அறிகிறேன் போலீசார் அதனை விசாரணையில் கொண்டு வருவார்கள் என நினைக்கின்றேன்..

என அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .மக்கள் ஆதரவை பெற்ற அரசியல் வெள்ளை வேட்டிகளை ஓடவிட்டு கொண்டிருக்கும் ,வீரமகன் அர்ச்சுனாவை எவ்வாறு எனினும் இல்லாது அழிக்க வேண்டும் என்ற நிலையில் இந்த கட்சிகள் ஈடுபட்டுள்ளதை இந்த விடயம் அம்பல படுத்தியுள்ளது .

இந்த தகவல் வெளியானதை அடுத்து மக்கள் கொந்தளிப்பில் உறைந்துள்ளனர் .

மனைவிக்கு ஆப்பு சுகுணன் வைத்தியர்
Posted in இலங்கை செய்திகள்

மனைவிக்கு ஆப்பு சுகுணன் வைத்தியர்

மனைவிக்கு ஆப்பு சுகுணன் வைத்தியர்

மனைவிக்கு ஆப்பு சுகுணன் வைத்தியர் ,வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கலான் ஆராய்ச்சியாளர் சுகுணன் குணசிங்கம் எப்படியான ஆள்? என்ன செய்யிறவர்?? என்று கேட்டுத் தெரிஞ்சு கொள்ளச் சொன்ன காரணத்தினால் திருமதி.பிரசாந்தி சுகுணனுக்கு அப்போது தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டு விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மாணவன் ,அவரது தாய் ஆகியோரை டீச்சர் கொலை மிரட்டல் விடுத்த நிலையில் இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுதியது .

அதனை அடுத்து தற்போது கல்வி அமைச்சினால் மாற்றம் செய்ய பட்டுள்ளார் .மக்கள் மத்தியில் மிக பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது .

இதனை அடுத்து தற்போது அவசரமாக மாற்றம் எய்யப்பட்டுள்ளதுடன் ,கொலை மிரட்டல் விடுத்த நிலையில் அது தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தியுயுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

அரசியல் கட்சி ஒன்றின் பின்புலத்தில் இருந்து மக்களை மிரட்டி அடக்கும் நோக்கில் இவர் ஈடுபட்டு வருகிறார் என்ற விடயம் , தற்போது அம்பலமாகியுள்ள நிலையில் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்க பட்டுள்ளது .

அர்ச்சுனா அறிவிப்பு பெண்களுக்கு 200 000 சம்பளம் அர்ச்சுனா அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பெண்களுக்கு 200 000 சம்பளம் அர்ச்சுனா அறிவிப்பு

அர்ச்சுனா அறிவிப்பு பெண்களுக்கு 200 000 சம்பளம் அர்ச்சுனா அறிவிப்பு

பெண்களுக்கு 200 000 சம்பளம் அர்ச்சுனா அறிவிப்பு,அர்ச்சுனா இராமநாதன் பெண்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் வழங்குவதாக தெரிவித்துள்ளார் .

புதிய தொழில் நிறுவங்களை உருவாக்கி மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு செல்லாது அவர்களை இலக்கு வைத்தே வேலை வாய்ப்பை ஏற்படுத்துவேன் என அவர் தெரித்துள்ளார் .

கண்ணீரோடு அலைகின்ற பெண்களுக்கு அவர்களது கண்ணீரை துடைத்து எமது நாட்டில் வைத்தே சிறந்த தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவேன் என அரசின் இராமநாதன் தெரிவித்துள்ளார் .

எமது டிக் டாக் நேரலையில் கலந்து கொண்டு சிறப்பித்த போதே இதனை தெரிவித்த்தார் .

இவரது இந்த பேச்சை கேட்ட மத்திய கிழக்கில் பணிபுரியும் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .இதனை அடுத்து அர்ச்சுனா இராமநாதனுக்கு ஆதரவாக மக்கள் பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்ற்னர் .

அடிப்படைச் சம்பளத்தை 57 500 வரை அதிகரிப்போம்
Posted in இலங்கை செய்திகள்

அடிப்படைச் சம்பளத்தை 57 500 வரை அதிகரிப்போம்

அடிப்படைச் சம்பளத்தை 57 500 வரை அதிகரிப்போம்

அடிப்படைச் சம்பளத்தை 57 500 வரை அதிகரிப்போம் ,இதுவரை நாட்டில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் ஏழ்மையினாலும் வறுமையினாலும் பிடிக்கப்பட்டிருப்பதால் அழுத்தங்களுக்கும் அசௌகரியங்களுக்கும் உள்ளாகி இருக்கின்றார்கள்.

மொத்த நாட்டு மக்களையும் வறுமையில் இருந்து மீட்டெடுக்கும் மனிதாபிமான செயற்பாட்டிற்கு ஐக்கிய மக்கள் சக்தி பிரவேசித்திருக்கிறது.

இதுவரை காலமும் அரச உத்தியோகத்தர்களை நாட்டுக்கு நஷ்டமானவர்களாகவும் சுமையானவர்களாகவும் இந்த அரசாங்கம் கருதி வந்தாலும், தற்பொழுது இந்த

அரசாங்கத்திற்கு அரச உத்தியோகத்தர்கள் முக்கியமானவர்களாக மாறி இருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் சந்தர்ப்பவாதமே ஆகும். தமது இடத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக இனிப்பு பண்ட அரசியலை மேற்கொண்டு, அரச உத்தியோகத்தர்களை ஏமாற்றுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரச சேவையால் நாட்டுக்கு நட்டம் ஏற்படுவதாக குறிப்பிட்ட இவர்கள், பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வேலை திட்டங்களை முன்னெடுக்கின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி பொய் வாக்குறுதிகளை வழங்காது. சொல்வதையே செய்கின்றது.

பொய்யான வாக்குறுதிகளுக்கு பதிலாக சரியான திட்டங்களை முன்வைத்து ஐக்கிய மக்கள் சக்தியின் யுகம் ஆரம்பிக்கப்பட்டவுடன் அவை நிறைவேற்றப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் வாழ்க்கைச் செலவு என்பனவற்றில் பொருத்தமான திருத்தங்களை மேற்கொள்ள விசேடமான ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு, இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய செயல்படுத்துவோம்.

அரச ஊழியர்களுக்கு 2025 ஜனவரி முதல் சம்பளத்தை 24% ஆக அதிகரித்து அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற 17,800 வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை 25,000 வரை அதிகரிப்போம்.

அனைத்து அரச ஊழியர்களின் குறைந்த பட்ச அடிப்படைச் சம்பளம் 57,500 ரூபாவாக அதிகரிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் பத்தாவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (23) பிற்பகல் வரகாபொல நகரில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் போலவே அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். இந்த மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்பொழுது காணப்படுகின்ற வரிக் கொள்கையினால் அரச ஊழியர்கள் உட்பட தொழிலாளர் வர்க்கமே பாரிய அழுத்தங்களுக்கு உள்ளாகி இருக்கின்றார்கள்.

தற்பொழுது அரச ஊழியர்களின் பெரும்பாலானவர்களின் சம்பளத்திற்கு அறவிடப்படுகின்ற வரி 6 – 36% வரையிலான உழைக்கும் போது செலுத்தும் வரி வீதம் 24% வரை குறைக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

🟩 சிறந்த அரச சேவைக்காக பல சலுகைகள்.

அரச ஊழியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவுகள் மாத்திரம் வழங்கப்படுவதோடு மேலதிக வருமானங்கள் இல்லை. சம்பளத்திற்கான வரி அளவிடப்படுகின்ற போது அவர்களால் சிறந்த அரச சேவையை வழங்கக்கூடிய மனநிலை கிடைப்பதில்லை.

அதனால் நாம் இந்த சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கு மேலதிகமாக அரச சேவையை நவீன மயமாக்கி e-ஸ்ரீலங்கா, e-கவர்ன்மென்ட் வேலை திட்டங்களின் ஊடாக சிறந்த அரச நிர்வாகத்தையும்,

சிறந்த பயிற்சிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

அரச ஊழியர்களின் பிள்ளைகளுக்கு கல்வியும் பாதுகாப்பும் வழங்கப்படும். இவை வாக்குறுதிகள் அல்ல. நாட்டை கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் ஆகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 நாட்டையும் அதிகாரத்தையும் கைப்பற்ற விரும்புகின்ற மத நம்பிக்கையற்றவர் மத உரிமைக்கும் அழுத்தம் விடுகின்றார்.

புத்தசாசன அமைச்சின் ஊடாக கிராமங்களிலும் சந்திகளிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள புத்தர் சிலைகளை கணக்கெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றே இது நடந்து வருகிறது. இதே கணக்கடுப்பு ஏனைய இனங்களுக்கும் வரலாம். ஏனைய இனங்களில் மதஸ்தானங்களை கணக்கெடுக்கும் நிலை ஏற்படலாம். மதசார்பற்ற சமுதாயம் ஒன்றை உருவாக்கவே முயற்சிக்கின்றார்கள்.

இன்று பௌத்த தர்மத்திற்கே இவ்வாறான ஆணைகளை பிறப்பிக்கின்றனர். நாளை ஏனைய மதங்களுக்கு அழுத்தங்களை கொடுக்கலாம். மக்களின் மத உரிமையை இல்லாமல் செய்கின்ற முயற்சி என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அத்தோடு, தனது தந்தை புத்த சாசன அமைச்சையும் ஏனைய மதங்களுக்கான தனித் தனி அமைச்சுக்களையும் உருவாக்கினார்.

இன்று தற்போதைய அரசாங்கமும் ஆட்சி அதிகாரத்தை பெற முற்படுகின்ற மதசார்பற்றவர்கள் மதங்களைப் பின்பற்றும் உரிமையை இல்லாத செய்ய முற்படுகின்றனர். இந்த வெட்கங்கெட்ட செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்று தெரிவிப்பதாக தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் எந்த மதத்தையும் பின்பற்றுவதற்கு உரிமை உண்டு.

இந்த கணக்கெடுப்பை மேற்கொண்டு மதச்சார்ப்பற்ற நிலையை தோற்றுவிக்க நடவடிக்கை எடுத்து வரும் அரச அதிகாரிகளுக்கு எதிராக எமது ஆட்சியில் உரிய நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.