எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு ,2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தல் தொடர்பில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பு, எல்பிட்டிய உள்ளூராட்சி சபையின் தேர்தல் அதிகாரியினால் இன்று (26) அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கட்டுப்பணத்தை செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் செப்டம்பர் 11 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரையும் மேற்கொள்ள முடியும் எனவும்,
வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது செப்டம்பர் 9 ஆம் திகதி முதல் செப்டம்பர் 12 ஆம் வரை காலி மாவட்ட ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் திரு.சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
- இலங்கையில் சமூகப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார ஆதரவிற்காக 100 மில்லியன் டாலரை ஆசிய வளர்ச்சி வங்கி அங்கீகரித்துள்ளது.

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரியாத் மற்றும் தம்மம் விமானச் சேவைகளை நவம்பர் 1 வரை நிறுத்தி வைத்துள்ளது.

- கல ஓயா ஆற்றின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை

- இலங்கை முழுவதும் 30,000-க்கும் மேற்பட்ட நிலச்சரிவு அபாயம்

- கனமழையால் 14 பெரிய நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன









