சிறுவனை கடித்தும் அடித்தும் சித்திரவதை செய்த சிறிய தாய்
Posted in இலங்கை செய்திகள்

சிறுவனை கடித்தும் அடித்தும் சித்திரவதை செய்த சிறிய தாய்

சிறுவனை கடித்தும் அடித்தும் சித்திரவதை செய்த சிறிய தாய்

சிறுவனை கடித்தும் அடித்தும் சித்திரவதை செய்த சிறிய தாய் ,லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளஹா தோட்டத்தில் வசிக்கும் 10 வயது சிறுவன் ஒருவன் தனது சிறிய தாயாரினால் கடந்த சில தினங்களாக கொடூர சித்திரவதைக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சிறுவன் அடிக்கப்பட்டு கடிக்கப்பட்டு பல வகையான சித்திரவதைகளை ஏற்படுத்தி உள்ளதாகவும் அதனை விசாரித்து அறிந்த பாடசாலை சமூகம் லிந்துலை பொலிஸ் இணையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சித்திரவதைக்கு உள்ளான சிறுவன் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் அனுப்பப்பட்டுள்ளார்.

அதே சமயம் நேற்றைய தினம் சம்பவத்துடன் தொடர்புடைய சிறிய தாயார் பொலிஸாரினால் வரவழைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தினர். விசாரணைகளை தொடர்ந்து குறித்த பெண் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் நுவரெலியா மாவட்ட நீதவால் முன்னிலையில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சிறுவனின் சிறிய தாயார் ஒரு குழந்தையின் தாய் மாத்திரமல்லாது தற்போது கர்ப்பிணி தாயாரும் கூட. கொடூர சித்திரவதைக்கு உள்ளான சிறுவனின் தாய் கொழும்பில் பணியாற்றி வருவதோடு சிறுவனின் சிறிய தாயாரிடம் பாதுகாப்பிற்காக விட்டுச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது

11 இந்திய மீனவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

11 இந்திய மீனவர்கள் கைது

11 இந்திய மீனவர்கள் கைது

11 இந்திய மீனவர்கள் கைது ,இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு கடற்பரப்பில் வைத்து குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை

மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை

மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை ,தனிநபர்கள் சிலர் தங்களை அதிகாரிகளாக அடையாளம் காட்டி சட்டவிரோதமான முறையில் வர்த்தக நிறுவனங்களில் பணம் வசூலிப்பதாக வெளியான தகவலை அடுத்து உள்நாட்டு இறைவரி திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு, பாணந்துறை, நீர்கொழும்பு, வென்னப்புவ, மினுவாங்கொடை உள்ளிட்ட பிரதேசங்களில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தின் பெயரிலான வங்கிக் கணக்குகளில் வைப்புத்தொகை மூலம் மட்டுமே வரி செலுத்துதல்களை மேற்கொள்ள வேண்டும் என தெளிவுபடுத்தியுள்ளது.

எந்தவொரு பணமும் அல்லது காசோலைகளும் தங்கள் அதிகாரிகளால் நேரடியாக வசூலிக்கப்படுவதில்லை என்றும் அதிகாரிகள் போல வரும் நபர்களிடம் பணத்தை ஒப்படைக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

வேட்பாளர்களின் மாத வருமானம்
Posted in இலங்கை செய்திகள்

வேட்பாளர்களின் மாத வருமானம்

வேட்பாளர்களின் மாத வருமானம்

வேட்பாளர்களின் மாத வருமானம் ,ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களின் மாத வருமானம் வெளியாகி உள்ளது.

இதில் அதிக மாத வருமானம் பெரும் வேட்பாளராக திலித் ஜயவீரவும், குறைந்த மாத வருமானம் கொண்ட வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வேட்பாளர்களின் மாத வருமானம்
வேட்பாளர்களின் மாத வருமானம்

இலஞ்சம், ஊழல் மற்றும் சொத்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவலுக்கமைய இந்த தகவல் வெளியாகி உள்ளது.

இரண்டாவது அதிகூடிய மாதாந்த வருமானம் சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ எனவும் அவரது மாத வருமானம் 13 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது தேர்தல் ஆணைக்குழுவிடம் தமது சொத்துக்கள் மற்றும் கடன்களை சமர்ப்பிக்க வேண்டிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்

அர்ச்சுனா அறிவிப்பு பெண்களுக்கு 200 000 சம்பளம் அர்ச்சுனா அறிவிப்பு,அர்ச்சுனா இராமநாதன் பெண்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் வழங்குவதாக தெரிவித்துள்ளார் .
Posted in இலங்கை செய்திகள்

பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் 14 பேர் பலி

பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் 14 பேர் பலி

பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் 14 பேர் பலி ,நேபாளத்தில் இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 14 பேர் பலியாகினர்.

நேபாளத்தில் பொக்காராவில் இருந்து கத்மண்டு நோக்கி 40 இந்தியர்கள் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். தனா ஹூன் மாவட்டத்தில் உள்ள மார்ஸ்யாங்டி ஆற்றின் அருகேயுள்ள பாதையில் சென்றபோது பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

பயணிகள் தண்ணீரில் மூழ்கிய நிலையில், மீட்புப்பணிகளை உள்ளூர் மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது. உள்ளூர் நீச்சல் வீரர்கள் உதவியுடன் ஆற்றில் விழுந்த 16 பேர் மீட்கப்பட்டனர்.

மேலும் 14 பேர் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

நெடுஞ்சாலையில், பஸ் வந்து கொண்டிருந்த போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், பஸ் மீது பாறைகள், மண் கொட்ட, சாலையில் இருந்து பஸ் அப்படியே ஆற்றில் விழுந்துள்ளது.

காலநிலை மாற்றம், இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட இதுபோன்ற விபத்துகளினால் கடந்த ஜூலை மாதம் வரை 62 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

நாம் தமிழர் கட்சி சீமான் பேச்சு
Posted in சீமான் பேச்சு

நாம் தமிழர் கட்சி சீமான் பேச்சு

 நாம் தமிழர் கட்சி சீமான் பேச்சு, அடித்து நொறுக்கிய அட்டகாச பேச்சு .மரம் நாடு நிழல் பெரு என்ற கொள்கையை விதைத்து பயணிக்கும் சீமான் அவர்களது தெளிவான அரசியல் பேச்சு .

வீடியோ

SRM வேளாண் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் சீமான் சிறப்புரை
Posted in சீமான் பேச்சு

SRM வேளாண் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் சீமான் சிறப்புரை

SRM வேளாண் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் சீமான் சிறப்புரை,அனல் பறந்த சீமான் பேச்சு ,அதிர்ந்த அரங்கம் .

அண்னன் சீமான் பேச்சை முழுமையாக காணொளியில் பாருங்கள் மக்களே

வீடியோ

விஜயை வீழ்த்த நடக்கும் சதிகள் அடித்து நொறுக்கிய சீமானின் பதிலடி
Posted in இலங்கை செய்திகள் சீமான் பேச்சு

விஜயை வீழ்த்த நடக்கும் சதிகள் அடித்து நொறுக்கிய சீமானின் பதிலடி

விஜயை வீழ்த்த நடக்கும் சதிகள் அடித்து நொறுக்கிய சீமானின் பதிலடி

விஜயை வீழ்த்த நடக்கும் சதிகள் அடித்து நொறுக்கிய சீமானின் பதிலடி,தமிழீழ விடுதலைக்கு சீமான் போல இளையதளபதி விஜய் பேச ஆரம்பித்துள்ளார் .

அவரது கோடியில் யானை மற்றும் வாகை பூ உள்ளது ,இந்த பூவானது விடுதலை புலிகள் பயன்படுத்தியதாகும் .

அதனால் இப்பொழுது எழுந்துள்ள சர்ச்சை .காணொளியில் சீமான் விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ள இந்த பேச்சை பாருங்கள் .

வீடியோ

இஸ்ரேல் கப்பலை தாக்கிய ஹவுதி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் கப்பலை தாக்கிய ஹவுதி

இஸ்ரேல் கப்பலை தாக்கிய ஹவுதி


இஸ்ரேல் கப்பலை தாக்கிய ஹவுதி ,ஏமன் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட கப்பலை நேரடியாக தாக்கியது என அறிவித்திட்டுள்ளது .


செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் இரண்டு புதிய சியோனிச எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக யேமன் ஆயுதப்படையின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யாஹ்யா சாரி அறிவித்தார்.

பாலஸ்தீனத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அவர்களது போராளிகளுக்கும் ஆதரவாகவும், அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் ஆக்கிரமிப்புக்கு பதிலடியாகவும், செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் யேமன் ஆயுதப்படைகள் இரண்டு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டதாக சாரீ கூறினார்.

இந்த நடவடிக்கைகளில் எண்ணெய் டேங்கர் “SOUNION” ஐ குறிவைத்து தாக்க பட்டது .

அதன் உரிமையாளர் சியோனிஸ்டுகளுடன் தொடர்புடையவர், என சாரீ கூறினார், எண்ணெய் டேங்கர் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் துறைமுகங்களுக்குள் நுழைவதற்கு முற்பட்ட பொழுதே தாக்க பட்டுள்ளது .

“இந்த எண்ணெய் டேங்கர் செங்கடலில் நகரும் போது துல்லியமாகவும் நேரடியாகவும் தாக்கப்பட்டது,” என்று அவர் மேலும் கூறினார்.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் துறைமுகத்திற்குள் நுழைவதற்கான தடையை மீறியதன் காரணமாக இஸ்ரேலிய-இணைக்கப்பட்ட Sw North Wind I கப்பலை குறிவைத்து மற்ற நடவடிக்கை ஒன்றும் ஆம்பிக்க பட்டது .

“இந்த கப்பல் ஏடன் வளைகுடா மற்றும் செங்கடலில் நகரும் போது நேரடியாகவும் துல்லியமாகவும் தாக்கப்பட்டது என்றார் .”

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிரான பாலஸ்தீனத்தின் போராட்டத்திற்கு யேமன் மக்கள் தங்கள் வெளிப்படையான ஆதரவை அறிவித்துள்ளனர்,

அக்டோபர் 7 ஆம் தேதி ஆட்சி காசா மீது பேரழிவுகரமான போரைத் தொடங்கிய பின்னர், பிரதேசத்தின் பாலஸ்தீனிய எதிர்ப்பு இயக்கங்கள் ஆக்கிரமிப்பு நிறுவனத்திற்கு எதிராக ஆபரேஷன் அல்-அக்ஸா புயல் என்று அழைக்கப்படும் திடீர் பதிலடித் தாக்குதலை நடத்தியது.

காசாவில் குறைந்தது 27,948 பேரைக் கொன்று 67,459 நபர்களைக் காயப்படுத்திய இஸ்ரேலிய தரை மற்றும் வான்வழித் தாக்குதல்கள் முடிவுக்கு வரும் வரை தங்கள் தாக்குதல்களை நிறுத்தப் போவதில்லை என்று ஏமன் ஆயுதப் படைகள் கூறியுள்ளன.

டிசம்பரில் அமெரிக்காவும் பிரிட்டனும் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஏமனை குறிவைத்து இராணுவக் கூட்டணியை அறிவித்த பின்னர் ஹவுதிகள் தமது தாக்குதலை தீவிர படுத்தியுள்ளன .

https://www.youtube.com/watch?v=AB9fv-Lsoxk
இஸ்ரேல் ஈரான் போர் வெடிக்கும் அபாயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் ஈரான் போர் வெடிக்கும் அபாயம்

இஸ்ரேல் ஈரான் போர் வெடிக்கும் அபாயம்

இஸ்ரேல் ஈரான் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ,இஸ்ரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன .

ஈரான் நாட்டுக்கு பயணம் செய்த பலஸ்தீன ஹமாஸ் மக்கள் விடுதலை போராளிகள் முக்கிய தலைவராக விளங்கிய இஸ்மாயில் காணிய படுகொலை செய்யப்பட்டதை அடுத்து ,அதற்கு பழிவாங்கும் தாக்குதலை ஈரான் நடத்த முற்படுகிறது .

அதனை அடுத்தே எப்பொழுதும் ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்த கூடும் என்ற அபாயம் காணப்படுவதால் ,இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது .

இந்த படதமான கால பகுதியில் பகுதி மேலாக விமானங்கள் பறக்க தடைகள் விதிக்க பட்டுள்ளன .

ஈரான் ஆப்கானிஸ்தான் எல்லையில் போர் போர் பதட்டம் அதிகரித்துள்ள நிலையில் ,தற்போது விமான பறப்புக்கள் வேறு திசை மாற்றி பறக்க விட பட்டுள்ளதால் ,ஈரான் இஸ்ரேல் என்பன விரைவில் மோதி கொள்ள போவதாக தெரிவிக்க படுகிறது .

உக்ரைனில் மோடி
Posted in உலக செய்திகள்

உக்ரைனில் மோடி

உக்ரைனில் மோடி

உக்ரைன் நாட்டுக்கு இந்தியா பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்துள்ளார் .

1991 ஆண்டுக்கு பிறகு இந்திய பிரதமர் ஓருவர் உக்ரைனுக்கு பயணம் செய்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இந்த பயணத்தின் பொழுது அரசியல் வர்த்தக பொருளாதாரம் தொடர்பாக பேச பட உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ரஷ்ய உக்ரைனுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்று கொண்டிருக்கும் இந்த கால பகுதியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்துள்ளமை குறிப்பிட தக்கது .

அரியநேத்திரனுக்கு சிறீதரன் ஆதரவு
Posted in இலங்கை செய்திகள்

அரியநேத்திரனுக்கு சிறீதரன் ஆதரவு

அரியநேத்திரனுக்கு சிறீதரன் ஆதரவு

அரியநேத்திரனுக்கு சிறீதரன் ஆதரவு ,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் சந்தித்து கலந்துரையாடினார்.

சந்திப்புக்கு பின்னர் இருவரும் கூட்டாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி என்ன முடிவை எப்போது எடுத்தாலும் தனிப்பட்ட முறையில் எனது ஆதரவு அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும். கட்சி என்ன முடிவை எடுக்கிறதோ எடுக்கவில்லையோ அது எவ்வளவு தூரம் எம்மை தள்ளப்போகிறதோ என்பதை தமிழ் மக்கள் தீர்மானிப்பார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக எனது ஆதரவு அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும். தமிழ் மக்கள் காத்திரமான ஒரு செய்தியை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வழங்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அரியநேத்திரன், தான் களமிறங்கும் சங்கு சின்னத்தை சிபாரிசு செய்தவர் சிறீதரன் எம்பி என தெரிவித்தார்.

மேலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் தமக்காக குறியீடாக சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

ஆற்றில் விபத்து இருவரை காணவில்லை
Posted in இலங்கை செய்திகள்

ஆற்றில் விபத்து இருவரை காணவில்லை

ஆற்றில் விபத்து இருவரை காணவில்லை

ஆற்றில் விபத்து இருவரை காணவில்லை ,பெந்தர ஆற்றில் இரண்டு சுற்றுலா படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காணாமல் போயுள்ளனர்.

நேற்று (22ஆம் திகதி) பிற்பகல் அளுத்கமவில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் பணி முடிந்து ஆட்களை ஏற்றிச் சென்ற படகும் பெந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுலாப் படகுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

பெந்தர சுற்றுலா விடுதியொன்றில் இருந்த இருவர் விபத்தில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களின் அடையாளம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பில் கடற்படையினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அளுத்கம மற்றும் பெந்தர பொலிஸ் நிலையங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

432 கோடி ரூபாவுக்கு பிரைவேட் ஜெட் வாங்கிய சூர்யா
Posted in உலக செய்திகள்

432 கோடி ரூபாவுக்கு பிரைவேட் ஜெட் வாங்கிய சூர்யா

432 கோடி ரூபாவுக்கு பிரைவேட் ஜெட் வாங்கிய சூர்யா

432 கோடி ரூபாவுக்கு பிரைவேட் ஜெட் வாங்கிய சூர்யா ,தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, சொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் ஜொலித்து வருபவர் சூர்யா. அவர் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகி இருக்கிறது. அப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார்.

வரலாற்று கதையம்சம் கொண்ட பேண்டஸி திரைப்படமான இதை ஞானவேல் ராஜா தயாரித்து உள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக பொலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார்.

கங்குவா திரைப்படம் வருகிற ஒக்டோபர் மாதம் 10- ஆம் திகதி திரைக்கு வர உள்ளது.

அதுமட்டுமின்றி அவர் தயாரிப்பில் தற்போது இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. அதில் ஒன்று தான் மெய்யழகன். இப்படத்தை 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கி இருக்கிறார்.

இப்படத்தில் சூர்யாவின் சகோதரர் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்து உள்ளார். மெய்யழகன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 27 ஆம் திகதி திரைக்கு வருகிறது.

இதுதவிர சூர்யா தயாரிப்பில் மற்றொரு படமும் தயாராகி வருகிறது. அப்படத்தில் சூர்யா தான் கதாநாயகனாக நடிக்கிறார். அப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.

சூர்யா 44 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படி பிசியான நடிகராக வலம் வரும் சூர்யா, தற்போது சொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கி இருக்கிறாராம். Dassault Falcon என்கிற அந்த பிரைவேட் ஜெட்டின் விலை 120 கோடிரூபாய் (இலங்கை மதிப்பில் 432 கோடி ரூபாய்) இருக்குமாம்.

இந்த தனி விமானத்தில் நவீன தொழில்நுட்பமும், பாதுகாப்பு வசதிகளும் அதிகளவில் உள்ளதாம்.

தமிழ் திரையுலகில் முன்னதாக நயன்தாரா, ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் தனி விமானம் வைத்திருக்கும் நிலையில், தற்போது சூர்யாவும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

ஒரு வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஒரு வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

ஒரு வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

ஒரு வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு ,யாழில் காய்ச்சல் காரணமாக ஒரு வயதுக் குழந்தை ஒன்று பரிதாபமாக உயரிழந்துள்ளது.

தம்பாட்டி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த பிரேமநாத் நிஹாரிகா (வயது 1) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த குழந்தைக்கு பிற்பகல் ஒரு மணியளவில் காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த குழந்தை சிகிச்சைக்காக

அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி குழந்தை 21ஆம் திகதி இரவு 11 மணியளவில் உயிரிழந்தது.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

4மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

4மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

4மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

இதன்படி, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நிலவும் சீரற்ற காலநிலையினால் ஆறுகளின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாக நீர்பாசனத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

களுகங்கை, ஜின்கங்கை மற்றும் நில்வளா கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது

தலதாவின் முடிச்சால் தடுமாற்றம்
Posted in இலங்கை செய்திகள்

தலதாவின் முடிச்சால் தடுமாற்றம்

தலதாவின் முடிச்சால் தடுமாற்றம்

தலதாவின் முடிச்சால் தடுமாற்றம் ,இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி தலதா அத்துகோரள பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக பாராளுமன்றத்தில் அறிவித்துள்ள போதிலும் அது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் இன்னும் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.

இதனால் வெற்றிடமான பதவிக்கு தனது எம்.பி.யில் இருந்து ஒரு எம்.பி.யை நியமிப்பது சிக்கலாக மாறியுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் கூறுகிறார்.

இந்நிலையில், வெற்றிடமாக உள்ள எம்.பி பதவி குறித்து குறித்து, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க முடியவில்லை என அறியமுடிகின்றது.

கடந்த பொதுத் தேர்தலின் ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட விருப்புப் பட்டியலின் படி முன்னாள் எம்.பியான தலதா அத்துகோரளவுக்கு அடுத்தபடியாக கருணாரத்ன பரணவிதான உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கஜன் துஷ்மந்த ரணிலுக்கு ஆதரவு
Posted in இலங்கை செய்திகள்

அங்கஜன் துஷ்மந்த ரணிலுக்கு ஆதரவு

அங்கஜன் துஷ்மந்த ரணிலுக்கு ஆதரவு

அங்கஜன் துஷ்மந்த ரணிலுக்கு ஆதரவு,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பதில் பொதுச் செயலாளர் சாரதி

துஷ்மந்த ஆகியோர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தங்களது ஆதரவினை வழங்கினர் .

கொழும்பு, ஃப்ளாவர் வீதியில் அமைந்துள்ளது தேர்தல் காரியாலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரு தலைவர்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெறச் செய்யவுள்ளனர் .

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் அங்கஜன் இராமநாதன், 2013 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு வட மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு ,2015 இல் தேசியப் பட்டியல்

உறுப்பினராக முதல் தடவையாக பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு இரண்டாவது

தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவானார். தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவராக கடமையாற்றி வருகின்றார்.

அங்கஜன் இராமநாதன் பாராளுமன்றத்தில் குழுக்களின் பிரதித் தவிசாளராகவும் செயலாற்றி வருகின்றார் .

சாரதி துஷ்மந்த மித்ரபால, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கேகாலை மாவட்டத்தை பிரதிநிதிப்படுத்தி முதன்முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.

கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மக்கள் அரசியல்வாதிகள் சொத்து விபரங்களை பார்வையிடலாம்
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் அரசியல்வாதிகள் சொத்து விபரங்களை பார்வையிடலாம்

மக்கள் அரசியல்வாதிகள் சொத்து விபரங்களை பார்வையிடலாம்

மக்கள் அரசியல்வாதிகள் சொத்து விபரங்களை பார்வையிடலாம் என லஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது .

இவர்கள் தற்போது மக்கள் பார்வையிட இணையம் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது .

அதன் அடிப்படையில் இந்த விடயம் முன் நகர்த்த பட்டு வருகிறது .

வெள்ளை வேட்டிகள் சொத்துக்களை பார்வையிட இந்த இணையதளம் செல்லுங்கள் .மக்களே .

இணையம் பார்வையிட இதில் அழுத்துங்கள்

https://ads.ciaboc.lk

விபத்தில் சிதறியது மருத்துவர் கார்
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் சிதறியது மருத்துவர் கார்

விபத்தில் சிதறியது மருத்துவர் கார்

விபத்தில் சிதறியது மருத்துவர் கார் ,விசேட வைத்தியர் ஒருவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை ஏற்றிச் சென்ற அதிசொகுசு காரொன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துக்கு உள்ளானது.

ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் விசேட வைத்தியர் ஒருவருக்கு சொந்தமான அதிசொகுசு காரே இவ்வாறு விபத்துக்கு உள்ளானது.

பத்தேகம அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு அருகில் 80 ஆவது கிலோமீற்றர் மைல் கல்லுக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் 16-21 வயதுடைய இரண்டு மகன்களும் மனைவியும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்தின் போது 21 வயது மகன் காரை ஓட்டி வந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த கார் மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு தனியார் பேருந்தின் வலது பக்க உடற்பகுதியில் பாதுகாப்பு வேலிக்கு நடுவில் விபத்துக்கு உள்ளாகி மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்ற அதேநேரம், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அம்பியூலன்ஸ் வண்டிகள் வருவதற்கு முன்னர், காரில் சிக்கி காயமடைந்தவர்களை வீதியில் பயணித்த வாகனங்களின் சாரதிகள் கராப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.