கைபா துறைமுகம் மீது தாக்குதல்
கைபா துறைமுகம் மீது தாக்குதல்
இஸ்ரேல் கைபா துறைமுகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈராக்கிய போர் படைகள் தெரிவித்துள்ளன .
நீண்ட தூரம் பறந்து வந்த விமானங்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது .இந்த தாக்குதலினால் பலத்த இழப்பு இஸ்ரேலுக்கு ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஆறு முனைகள் ஊடக இஸ்ரேல் உள்கட்டமைப்புகளை மீது ஈரான் ஆதரவு படைகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .
இவ்வாறான பல்முனை தாக்குதல்களை சமாளிக்க முடியாத நிலையில் ,இஸ்ரேல் தற்போது திணறி வருகிறது .
முன் வைத்த காலை பின் வைக்க முடியாது இஸ்ரேல் திணறிய வண்ணம் உள்ளதை மேற்படி விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .
இஸ்ரேல் பலஸ்தீன போர் ஆரம்பிக்க பட்ட நிலையில் ,இந்த கைபா துறைமுகம் பலத்த தாக்குதல்களுக்கு உள்ளாகி இருந்தமை குறிப்பிட தக்கது .
எரியும் எண்ணெய் கூதம்
எரியும் எண்ணெய் கூதம்
எரியும் எண்ணெய் கூதம் ,ரஷ்யா Glubokinskaya oil கிடங்கு மீது உக்ரைன் விமானங்கள் நடத்திய தக்குதலில் அந்த எண்ணெய் கூதம் பற்றி எரிகிறது .
மிக நேர்த்தியான முறையில் ஊடுருவி பறந்த விமானங்கள் ரஷ்ய உள் கட்டமைப்புக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது .
இவர்கள் நடத்தும் இந்த தக்குதல் காரணமாக ரஷ்ய படைகளிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
உக்ரைன் உள்ளே நுழைந்து ரஷ்யா இது போன்ற தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் ,அதற்கு பதிலடியாக தற்போது ,உக்ரைனும் ரஷ்யா உள்ளே நுழைந்து தாக்குதலை நடத்துகிறது .
இந்த தாக்குதலினால் பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. .
- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்

- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா

- ஈரான், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தீர்மானத்தை நிராகரித்தது

- பஹ்ரைன் அமெரிக்கா கடற்படை தளம் கடும் சேதம்

- இஸ்ரேலிய தூதரகம் திறக்கப்படுவதற்கு எதிராக ஸ்லோவேனிய தலைநகரில் எதிர்ப்புப் பேரணி

- சவூதி அரேபியா மீதான ஹூதி தாக்குதல்

- ஈரான் விமானங்களுக்கு அமெரிக்கா தடை

- தெற்கு லெபனான் பகுதிகள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல், வீடுகளுக்குத் தீ வைத்தது

- இஸ்ரேலியக் குடியேற்றங்களிலிருந்து இறக்குமதிக்குத் தடை பிரிட்டன் அறிவிப்பு

188மக்கள் வெள்ளத்தில் சிக்கி பலி
188மக்கள் வெள்ளத்தில் சிக்கி பலி
188மக்கள் வெள்ளத்தில் சிக்கி பலி யாகியுள்ளதக சூடான் செய்திகள் தெரிவிக்கின்றன ,சொன்னால் 10 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி இந்த உயிரிழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
வெள்ளத்தினால் பாதிக்க பட்ட பகுதிகளில் ,மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன .
இந்த வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை 129,650 மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .12,420 வீடுகள் முற்றாக இடிந்து சேதமாகியுள்ளன .
மொத்தமாக இதுவரை 1,223 மக்கள் பலியாகியுள்ளதாக பிந்தி வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .
விமானம் தாக்குதல் பலத்த தேசதம்
விமானம் தாக்குதல் பலத்த தேசதம்
விமானம் தாக்குதல் பலத்த தேசதம்,ரஷ்யா தற்கொலை விமானங்கள் உக்ரைன் மீது கடும் தாக்குதல் நடத்தியதில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது .
உக்ரைன் டொன்ஸ்டாக் பகுதியை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் ,உக்ரைன் மக்கள் இருவர் பலியாகியும் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
எதிரிகளின் உள்கட்டமைப்புக்களை முற்றாக தாக்கி அழிக்கும் நடவடிக்கையில் ரஷ்ய தீவிர கவனம் செலுத்தி வருவதை ,தற்போது இடம்பெற்று வரும் தாக்குதல்கள் தெளிவாக எடுத்து காண்பிக்கின்றன .
இடை விடாது தொடரும் உக்ரைன் ,ரஷ்ய தாக்குதல்களினால் .உக்ரைன் பலமான சேதங்களையும் இழப்பையும் சந்தித்துள்ளது .
இதில் இருந்து உக்ரைன் மீண்டு வரும் ஐம்பது ஆண்டுகள் பிடிக்கும் என தெரிவிக்க படுகிறது .
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

- மட்டால விமான நிலையத்தில் மான் வேட்டையாடி மான் இறைச்சி கடத்தல்

- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

உங்கள் வாக்கை நீங்கள் விரும்பியவருக்கு அளியுங்கள் அர்ச்சுனா
உங்கள் வாக்கை நீங்கள் விரும்பியவருக்கு அளியுங்கள் அர்ச்சுனா
உங்கள் வாக்கை நீங்கள் விரும்பியவருக்கு அளியுங்கள் அர்ச்சுனா ,உங்கள் வாக்கை தீர்மானிப்பதற்குரிய சகல உரிமையும் தமிழனுக்கு உண்டு..
நான் ஜனாதிபதி தேர்தலில் இருந்து முற்றாக கருத்து தெரிவிப்பதை நிறுத்தி விடுகிறேன்..
உங்கள் வாக்கை நீங்கள் விரும்பியவருக்கு அளியுங்கள்.
எந்த சிங்கள ஜனாதிபதியும் தமிழரின் கோரிக்கைகளுக்கு மன சுத்தியுடன் செவி சாய்க்க மாட்டார்கள் என்பது வரலாறு..
ஆனால் இந்த தேர்தலானது தமிழர்களின் வாக்கை மட்டுமே நம்பி இருப்பதால் ஒருமுறை முயன்று பார்க்கலாம் என்று யோசித்தேன்..
அனுராவிடன் கதைக்கும்போது இந்திமா மூலம் அவர்கள் தமிழருக்கு எதிரானவர்கள் என்பதை புரிந்து கொண்டேன்..
சஜித் பிரேமதாஸ் அவர்களுடன் அவர் அழைத்து வர சொன்னதால் கண்டியிலிருந்து கொழும்பு வந்து சென்று கதைத்தேன்..
அவர் என்னை அவர் கட்சியில் சேர்ப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டினார்..
ஒரு தமிழனாக நான் மாட்டேன் என்று சொன்னேன்..
ஆனால் அவரை ஆதரிப்பதற்கு ஒரு மக்களை அணுகக்கூடிய ஜனாதிபதியாக நான் கருதியே அவரிடம் சென்றேன்..
ஆனால் தமிழ் முஸ்லிம் உறவுகளின் விரிசலை அவர் மேலும் மேலும் வலுப்படுத்தினாரே ஒழிய இன ஒற்றுமையை அவர் அந்த மேடையில் வலுப்படுத்தவில்லை..
முஸ்லிம் அரசியல்வாதிகள் நான் மேடையில் இருப்பதை விரும்பவில்லை..
அவர் அதை கையாண்ட பக்குவம் ஒரு முதிர்ச்சியற்ற ஜனாதிபதி என்பதை எடுத்துக்காட்டியது..
நான் மேடையில் இருந்து இறங்கி வந்து மறுபடியும் சொன்னேன் ஒரு தமிழனை நீங்கள் இவ்வாறு நடத்துவது உங்களுக்கு தமிழ் மக்களுக்கான அங்கீகாரத்தை இல்லாமல் பண்ணும். அவருடைய பாதுகாப்பு உத்தியோகத்தரிடம திரும்பவும் சொல்லவும் என்று..
எனக்கு தன்னுடைய காரில் இருக்குமாறும் தான் வந்து கதைப்பதாகவும் சொல்லப்பட்டது..
அவர் காரில் ஏறி இருப்பதற்கு தமிழன் முப்பது வருடம் தன் உயிரை மாய்த்து ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்தவில்லை..
அவ்வாறு நான் ஏறி இருந்திருந்தால் சில வேளைகளில் பொதுமக்கள் நான் ஏதோ டீல் கதைப்பதாக நினைத்திருப்பார்கள்..
இதனால்தான் எனது தொலைபேசிகள் எப்போதுமே ரெக்கார்ட்டில் இருக்கும்..
சுயநலவாதிகள் எனக்கு எதிராக திரும்புகின்ற போது நான் எப்போதுமே அவர் ரெக்கார்டிங் களை அவர்களுக்கு காட்டுவது வழக்கம்..
சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருந்தால் மட்டுமே அவர்கள் கதைத்ததை நான் பொதுமக்களுக்கு காட்டுவது வழக்கம்..
மைந்தன் சிவா எனப்படுகின்ற மிகவும் ஒரு அடி முட்டாள் என்னைப் பற்றி எழுதிய பின்பு தான் அவர்கள் முஸ்லிம்களூடாக அதை பரப்பப்பட்ட போது
பாராளுமன்ற உறுப்பினர் திஸஸ அத்தநாயக்க விடம் மற்றும் ராதாகிருஷ்ணன் எம்பி இரு வருடமும் சொல்லிவிட்டு தான் நான் அந்த ரெக்கார்டிங் வெளியில் பொது மக்களுக்காக விட்டேன்..
தங்களுடைய அரசியல் லாபங்களுக்காக தமிழ் மக்களை அடக்கி வைக்கும் போது எனது சுயமரியாதையை இழந்து சஜித் பிரேமதாச அவர்களுக்கு நான் ஒருபோதும் உதவ முடியாது..
இதிலிருந்து சஜித் பிரேமதாச, தான் பக்குவம் அற்றவர் அல்லது அவரின் பின்னால் இருப்பவர்கள் அவரை பகடைக்காயாக பயன்படுத்தி
பாராளுமன்றத் தேர்தலில் வாக்குகளை பெறவே முயற்சிக்கிறார்களே அன்றி அவரை ஜனாதிபதியாக மாற்றிப் பார்க்க எந்த ஒரு முயற்சியை எடுக்கவில்லை.. இவை முக்கியமாக முஸ்லிம் எம்பி களுக்கானது..
இதிலிருந்து சஜித் பிரேமதாஸ் அவர்களின் அத்தியாயம் முடிக்கப்படுகிறது..
அவர் அவ்வாறு நடந்து கொண்டமைக்குரிய முக்கியமான காரணம் உமா சந்திர பிரகாஷ் எனப்படுகின்ற முட்டாள் என்பது அவருக்கு இப்போது தெரிந்திருக்கிறது..
நான் எனது தொலைபேசிகள் அனைத்தையுமே முடிவுறுத்தி விட்டேன்…
இனிமேல் சஜித் பிரேமதாச அத்தியாயம் விடைபெறுகிறது..
ரணில் விக்ரமசிங்க அவர்கள் முழு தமிழ் எம்பிக்களும் டீல் அடித்து தன்னுடன் இருப்பதால் தமிழ் வாக்குகள் கிடைக்கும் என நினைத்து தமிழர்களின்
பிரதிநிதியாக இதுவரை காலமும் எமது பொதுமக்களை ஏமாற்றிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவில் வெல்லலாம் என நினைக்கிறார்கள்..
முக்கியமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்னுடைய நம்பிக்கை வலயத்தில் இருந்து நான் இழந்ததுக்கு காரணம் எனது முன்னாள் சட்டவாளர் சிலஸ்டின் அவர்கள் மட்டுமே..
அவர்கள் அமைச்சரின் ஏகப்பிரதிநிதியாக எனது மற்றுமொரு சட்டவாளர் அன்டன் புனித நாயகன் அவர்களுடன் சேர்ந்து என்னை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவின் ஆளாக காட்டுவதற்கு திட்டமிட்ட ரீதியில் ஆஸ்திரேலியாவில்
வசிக்கின்ற எனக்கு சார்பாக உதவி செய்து கொண்டிருந்து சுமந்திரனின் அடியாளான பாலா விக்னேஷ்வரன் அவர்களுடன் இணைந்து என்னை இபிடிபி ஆக காட்டி தமிழ் மக்களிடம் இருந்து பிரிப்பதற்காக செய்த முயற்சிகள்.
அதுமட்டுமல்ல ஏழாம் திகதி நான் மன்னார் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட போது பொதுமக்களை சந்திக்க விடாமல் அண்டன் புனித நாயகம் அவர்கள் தனது காரில் ஏற்றி அங்கும் இங்குமாக அலைத்து திட்டமிட்ட ரீதியில் மக்களை
என்மேல் கோபப்பட செய்து மறுபடியும் புதுமைதானத்தில் கொண்டே இறக்கி குழப்பம் செய்தது பாலா விக்னேஸ்வரனுடனும் அண்டன் புனித நாயகத்துடனும் எனது தொடர்புகளை நிறுத்திக் கொண்டதற்குரிய காரணம்..
இவர்கள் எனக்கு உதவுவது போன்று திட்டமிட்ட ரீதியில் என்னை எனது மக்கள் ஆதரவை குறைப்பதற்கு முயன்ற போது எல்லாம் அறிந்து கொண்ட நான் அமைதியாக இருந்தேன்…
மேலும் அஜித் எனப்படும் சாவகச்சேரியை சேர்ந்த டக்ளஸ் அவர்களின் கையாள் திட்டமிட்ட ரீதியில் என்னை வளைத்து போட முயன்றதும் அவர்களுடைய தொடர்பையும் துண்டித்துக் கொண்டேன்..
அது தவிர தம்பிராசா எனப்படுகின்ற எனக்கு யார் என்றே தெரியாத ஒருவர் என்னை உரிமை கூறுகின்ற போது நான் அவரிடமிருந்தும் தொடர்புகளை எப்போதோ அறுத்து கொண்டேன்..
இராமநாதன் அர்ச்சுனா எனப்படுகின்ற வைத்தியரை அரசியலால் கொலை செய்ய நடந்த சதிகள் இவை மட்டுமல்ல இதற்கு மேலும் மேலும் சொல்ல எவ்வளவோ இருக்கிறது..
எனக்கு ஒன்று ஒரு நம்பிக்கையான நட்பு வட்டம் சாவகச்சேரியில் இருக்கிறது..
அவர்கள் தான் என்னை சாவகச்சேரியில் தூக்கி வைத்து சந்தோசம் கொண்டார்கள்..
நான் அவர்களுடன் மீண்டும் போய் இணையும் வரை தயவுசெய்து எனது சாவகச்சேரி நட்பு வட்டம் பொறுமையாக இருக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்..
இப்போது அனுராவிக்கோ சஜித்துக்கோ ரணிலுக்கோ என் சார்பில் எந்த ஆதரவும் கொடுப்பதற்கு தயாராக இல்லை..
புது வேட்பாளர் பற்றிய மக்களின் கருத்து அவர்களுடைய சுய சிந்தனை சரியாக இருந்தால் ஒற்றுமையாக பொது வேட்பாளருக்கு உங்கள் வாக்குகளை அளிக்கலாம்..
ஆனால் மீண்டும் ஒரு விடயம் சொல்ல விரும்புகிறேன்…
அனுரா அவர்கள் ஜனாதிபதியானால் ரணில் அவர்கள் அவரிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு ஒதுங்க போவதில்லை..
அனுரா அவர்கள் சிறைபிடிக்கப்படுவார்கள் அல்லது இராணுவத்தால் கொல்லப்படுவார்.. அப்போது பொதுமக்கள் பாதையில் இறங்கி இந்த நாடு மீண்டும் ஒரு 1987 போன்ற பட்டலாந்து படுகொலையை சந்திக்கும்..
அதற்குரிய அமெரிக்காவின் ஆதரவும் இந்தியாவின் ஆதரவும் ரணில் அவர்களுக்கு தாராளமாக உண்டு..
இராணுவ ஆட்சி நிறுவப்படுமாயின் பல தலைவர்கள் கொலை செய்யப்படலாம்..
பொதுமக்கள் கொத்துக்கொத்தாக பாதைகளில் சுட்டுக் கொல்லப்படலாம்..
இவை எனது எதிர்கூறல் மட்டுமே..
சஜித் அவர்கள் வெற்றி பெற்றால் மீண்டும் அதே பாதாள லோக அரசியல்வாதிகள் பாதுகாக்கப்படுவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை..
பாராளுமன்றம் ஒருபோதும் கலைக்கப்படாது..
மாகாண சபை தேர்தலோ உள்ளூர் ஆட்சி சபை தேர்தலோ மீண்டும் வைக்கப்படும்..
அனுரா அவர்கள் காணாமல் ஆக்கப்படுவார்கள்..
பொதுமக்கள் கிளர்ச்சி எழும்.. மீண்டும் கொலைகள் நடந்தேறும்..
ரணில் அவர்கள் ஜனாதிபதி ஆனாலும் அதே பாதாள கூட்டங்கள் அதே பாராளுமன்ற உறுப்பினர்கள் அதே தமிழ் மக்களுக்கான எதிரான கெடுபிடிகள் எப்போதுமே இருக்கும்..
இன்னும் ஐந்து வருடங்களுக்கு இராணுவமயமாக்கல் மேலும் விஸ்தரிக்கப்பட்டு தமிழர்களின் இனம் அழிக்கப்படும்..
முஸ்லிம்கள் எப்போதுமே ரணிலுடன் இருப்பதால் தமிழர் எதிரான திட்டமிட்ட இனவெளிப்பு கட்டாயம் நடந்தேறும்..
கடந்த வருடத்தில் மட்டும் 80,000 தமிழர்கள் இலங்கையில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள்..
வெளிநாட்டு உதவி உள்ள தமிழர்கள் வெளியேறுவார்கள்..
நான் சிறைபிடிக்கப்பட்டு கொல்லப்படுவேன்..
மீண்டும் அதே தமிழ் எம்பிக்கள் பொத்துவில் இருந்து புண்ணாக்கை கொண்டு வந்து பொதுமக்களை ஏமாற்றுவார்கள்.
அதே புலம்பெயர் தமிழர் கூட்டங்கள் ஒரு சில புலிக்கொடிகளுடன் சீமானுடன் அங்கேயும் இங்கேயும் ஓடித் தெரியும்..
எல்லா கடைகளிலும் உண்டியல் வைக்கப்படும்…
மீண்டும் பொதுமக்கள் வெளிநாட்டில் குளிர்களில் உழைக்கின்ற பணங்கள் சேர்க்கப்பட்டு ஐநா சபை மற்றும் சர்வதேச உதவிகளுடன் தமிழருக்கு நீதி கிடைக்கும் என இன்னும் ஒரு இருபது வருடம் இழுத்தடிக்கப்படும்..
தமிழின விகிதாசாரம் மெல்ல மெல்லமாக அழிக்கப்பட்டு இன்னும் இருபது முப்பது வருடங்களில் தமிழினம் இலங்கையை விட்டு மொத்தமாக வெளியேறும்..
நானும் இதர பல தமிழர்களும் காணாமல் ஆக்கப்படுவோம்..
இவற்றிற்கு உள்ளே சிறந்த தெரிவு எதுவென்பது பொது வேட்பாளராக இருந்தால் அங்கேயும் பிரச்சனைகள் உள்ளது..
பொது வேட்பாளரை வைத்துக்கொண்டு ஐநாவிற்கு போய் நீதி கிடைத்த வரலாறு 2009 இல் இருந்து இன்றுவரை நடக்கவில்லை..
பொது வேட்பாளர் என சொல்லப்படுகின்ற கூட்டங்கள் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் நன்றாக பணங்களை சேர்த்து பிள்ளைகளுக்கு ஹெலிகாப்டரில் சாமத்திய வீடும் ரீச்சா மற்றும் ஐ பி சி போன்ற ஊடகங்களை நடத்தியும் மிச்சம் இருக்கின்ற தமிழர்களையும் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும்..
எமக்கென உள்ள தலைமை வெற்றிடமாக உள்ளது என சிவனடியான் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்..
நல்லதொரு தலைமையை தேடுங்கள்..
அது நிச்சயமாக சுமந்திரனோ சாணக்கியனோ ஸ்ரீதரனனோ அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவோ அல்லது அரிய நேந்திரனோ அல்ல..
இவைதான் எனக்குத் தெரிந்த அரசியல் அறிவு..
இவை பிழை என்றால் சரியான கருத்தை சொல்லுங்கள்..
ஒரு உண்மையான தலைமை தமிழனுக்கு கிடைக்கும் வரை யாழ்ப்பாணமோ மட்டக்களப்போ மிஞ்சப் போவதில்லை..
நான் அரசியலில் இருந்து விலகுகிறேன்..
நான் ஏற்கனவே வைத்திய சேவையில் இருந்து விலக்கப்பட்டு விட்டேன் திட்டமிட்ட ரீதியில்..
பெரும்பாலும் காணாமல் ஆக்கப்படுவேன்..
என்னை எதிர்த்த ஒவ்வொரு தமிழனும் தன்னைத்தானே நொந்து கொள்ளும் நாட்கள் விரைவில் வரும்..
எனக்குத் தெரிந்தவை எல்லாம் தமிழனுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே..
இருந்தேன் சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்த அட்டூழியங்களை வெளியில் சொன்னேன்..
மன்னர் போய் சிந்துஜாவின் நீதியை கேட்டேன்..
அவை சம்பந்தமாக எனது தமிழ் உறவுகளாலேயே விமர்சிக்கப்பட்டேன்..
இப்போது கூட ஓடிக்கொண்டே இருக்கிறேன்..
உயிருக்கு பயந்து அல்ல.
உயிருக்கு பயந்தவன் முஸ்லிம் மேடையில் இருந்து இறங்கி நான் போய் வருகிறேன் என சொல்லிவிட்டு வந்திருக்க மாட்டான்..
உயிருக்கு பயந்தவன் சஜித் பிரேமதாசவின் ஓடியோ லீக் பண்ணி இருக்க மாட்டான்..
உயிருக்கு பயந்தவன் இவ்வளவு விமர்சனங்களையும் தெளிவாக முகப்புத்தகத்தில் எழுத மாட்டான்..
என் தொழிலை இழந்து இருக்கிறேன்..
என் குடும்பத்தை என்னால் சென்று பார்க்க முடியாது..
எனது உடலையும் பேராதனை வைத்தியசாலைக்கு இப்போதோ எழுதிக் கொடுத்து விட்டேன் முதன் முதலாக..
எனது உறுப்புகள் அனைத்தும் தானமாக வழங்கப்பட்டு விட்டன..
என் உயிரை தமிழனுக்காக கொடுத்திருக்கிறேன்..
என் எதிரிகளுக்கு என் என்ன வேண்டும்??
தமிழனாக தமிழனுக்கு பிறந்தேன்..
என் உயிர் மூச்சு இருக்கும் வரை தமிழுக்காக எனது இதயம் துடித்துக் கொண்டிருக்கும்..
உங்களால் முடிந்தால் இவற்றில் ஒன்றையேனும் செய்து பாருங்கள்..
குடும்பம் தொழில் உயிர் உடல்..
ஒன்றையேனும் செய்துவிட்டு பதிவிடுங்கள்..
இருந்தால் உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு..
எப்படி வசதி?
தமிழனின் தாகம்…..
மக்களால் அதிகம் விரும்பப்பட்ட விரும்பப்படுகின்ற தமிழ் மெடிக்கல் அட்மின்..
வைத்திய கலாநிதி இராமநாதன் அர்ச்சுனா.
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

- மட்டால விமான நிலையத்தில் மான் வேட்டையாடி மான் இறைச்சி கடத்தல்

- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

வெற்றியாளன் நானே அனுரா முழக்கம்
வெற்றியாளன் நானே அனுரா முழக்கம்
வெற்றியாளன் நானே அனுரா முழக்கம் .இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் நானே வெற்றியாளன் என அனுர திசாநாயக்க தெரிவித்துள்ளார் .
பலத்த போட்டிகளும் வேகமான பரப்புரைகளை இடம்பெற்று வரும் கால பகுதியில் இப்பொழுது இவ்விதம் முழங்கியுள்ளார் .
தோற்க போகிறவர்களும் நாங்களே வெற்றியாளர்கள் என்ற தேர்தல் கால பகுதியில் முழங்கி வருகின்றனர் ,
ஆகவே இந்த தேர்தல் இப்பொழுது சூடு பிடித்துள்ளது
நாடு ஆபத்தான பாதையில் ரணில்
நாடு ஆபத்தான பாதையில் ரணில்
நாடு ஆபத்தான பாதையில் ரணில் ,நாடு மிக ஆபத்தான பாதையில் சென்று கொண்டிருப்பதாக குண்டு ஒன்றை போட்டு இருக்கிறார்.
எமது நாடும் மக்களும் நன்றாக இருக்க வேண்டுமாக இருந்தால் , வரி அதிகரிப்பதற்காகவே நாட்டையும் நாட்டு மக்களுடைய வாழ்வாதாரத்தையும் பலப்படுத்த முடியுமென ரணில் விக்கிரமசிங்க தேர்தல் கூட்ட பரப்புரையின் போது தெரிவித்துள்ளார் .
சர்வதேச நாணய நிதியம் வரிக்குறைப்பை அதிகரிக்கப்பட்ட வேண்டும் என்கின்ற பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன் வைத்து கடனை வழங்கி இருந்தது.
தேர்தலை மையமாக வைத்து நடவடிக்கையில் ரணில் அரசாட்சி ஈடுபட்டது அதனை அடுத்து தற்போது இந்த விடயத்தை அவர் தெரிவித்திருக்கின்றார்.
இதனுடைய நோக்கம் தேர்தல் முடிவுற்றதும் அதில் மிகவும் அதிகரிக்கப்பட்டு மக்களது தலைகள் மீது பொருளாதார சுமைகள் விலைவாசிகள் அதிகரிக்கப்பட்டு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தப்படும் என்பதாய் அவரது பேச்சாக அமைகின்றது.
கோடிகளை கொள்ளையடித்து தமது கோட்டைகளை பலப்படுத்தி சுகபோக வாழ்க்கையில் வாழ்ந்து வருகின்ற அரசியல் வாதிகளுக்கு மக்கள் தொடர்பாக அக்கறை இல்லை என்பதை இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .
- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

- மட்டால விமான நிலையத்தில் மான் வேட்டையாடி மான் இறைச்சி கடத்தல்

- ஈரான், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தீர்மானத்தை நிராகரித்தது

மனைவிக்கு தீ மூட்டிய கணவர்
மனைவிக்கு தீ மூட்டிய கணவர்
மனைவிக்கு தீ மூட்டிய கணவர் ,குடும்பத் தகராறில் கணவனால் மனைவிக்கு தீ வைத்து எரித்ததில் படுகாயமடைந்த மனைவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது .
இந்தச் சம்பவம் அச்சுவேலியில் பிரதேசத்தில் , ஞாயிற்றுக்கிழமை (25) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில், இரு பிள்ளைகளின் தாயான பாலகிருஷ்ணன் நிருத்திகா (வயது 28) என்பவரே படுகாயமடைந்துள்ளார் .
குறித்த பெண்ணுக்கும் அவரது கணவனுக்கும் இடையே முரண்பாடு இருந்து வந்துள்ள நிலையில், மது போதையில் வந்த கணவன் அவருடன் முரண்
பட்டுள்ளார். இந் நிலையில் பெண்ணின் அபயக்குரல் சத்தம் கேட்டதும் அவர்களின் வீட்டின் அருகே வசித்து வந்த பெண்ணின் சகோதரன் உதவிக்கு ஓடி பார்த்த போதுஅவரது சகோதரி தீயில் எரிந்துகொண்டிருந்துள்ளார் .
உடனடியாக அயலவர்களின் உதவியுடன் பெண் மீட்கப்பட்டு அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்
இதனிடையே, அங்கிருந்தவர்களால் தாக்கப்பட்ட பெண்ணின் கணவரும் யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது .
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
பேஸ்புக் மூலம் போதை பார்ட்டி 43 பேர் கைது
பேஸ்புக் மூலம் போதை பார்ட்டி 43 பேர் கைது
பேஸ்புக் மூலம் போதை பார்ட்டி 43 பேர் கைது ,நீர்கொழும்பு கடற்கரையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஹெரோயின், கஞ்சா மற்றும் சட்டவிரோத சிகரெட்களுடன் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் 43 பேர் கைது
செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்களத்தின் மேல் மாகாண உதவி ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கலால் திணைக்களத்தினால் அமுல்படுத்தப்படும் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த சுற்றிவளைப்பு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் அவர்களில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தகர்கள் மற்றும் பல்வேறு தொழில் செய்பவர்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் குழுவில் 10 இளம் பெண்களும் 33 இளைஞர்களும் இருந்துள்ளனர்.
முகநூல் ஊடாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு வந்துள்ள இவர்கள் தங்காலை, மாரவில, கிரிந்திவெல, ஹிகுராக்கொட, பூகொட, நீர்கொழும்பு, ஜாஎல, திகன, ஹொரண ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது
செந்தூரா உனக்கு செந்தமிழன் பதில் கடிதம்
செந்தூரா உனக்கு செந்தமிழன் பதில் கடிதம்
செந்தூரா உனக்கு செந்தமிழன் பதில் கடிதம் ,மருத்துவ மாபியாக்கள் வலையமைப்பில் வீதி உலா வரும் விருந்தகமே செந்தூரா உனக்கொரு செந்தமிழின் பதில் மடல் .
கற்றவனாக காட்டி கொள்ளும் செத்தவனே உனக்கொரு செந்தமிழன் ஏற்ற மடல் .
கோமாளிகள் இந்த மன்றில் இப்படியும் உலவி கொண்டுள்ளார்கள் என்பதற்கு உந்தன் பித்தலாட்டங்கள் ஒரு உதாரணம் என்பதை இப்பொழுது கண்டு கொள் ,
உனக்காக எழுதப்பட்ட ஒரு மடல் காதில் போட்டு வாயைஆட்டு வா .
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

- மட்டால விமான நிலையத்தில் மான் வேட்டையாடி மான் இறைச்சி கடத்தல்

- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

உதவி கேட்டார் சஜித் என்னிடம் அர்ச்சுனா
உதவி கேட்டார் சஜித் என்னிடம் அர்ச்சுனா
உதவி கேட்டார் சஜித் என்னிடம் அர்ச்சுனா ,கதறி அழுத அர்ச்சுனா வீடியோ .
எதிரிகளினால் திட்டமிட்ட சூழ்ச்சியில் சிக்கி ,மன உளைச்சலை வழங்கி அதன் ஊடாக மக்கள் மத்தியில் அர்ச்சுனா கீழ் நிலையான அஒருவராக அர்ச்சுனவை சித்தரிக்க வைக்கும் நகர்வில் எதிரிகள் ஈடுபட்டுள்ளனர் .
வலிந்து சீண்டி கோபத்தை ஏற்படுத்தி அதன் ஊடக அரசுன்னாவின் வாயில் வருகின்ற தவறான வார்த்தைங்களை வைத்து ,அவரது நற்பெயருக்குகலங்காத்தை ஏற்படுத்தும் வகையில் ,எதிரிகள் நடந்து கொண்டது இந்த காணொளியில் வெளியாகியுள்ளது .
மக்களே பாருங்கள் நம்ம அர்ச்சுனா அழுகின்றார் ,வார்த்தைகள் இடறி வீழ்கின்றன ,ஏன் அவ்விதம் பேசினார் என்பது இதில் பாருங்கள் .
இப்படி தேர்தல் முடியும் வரை எதிரிகள் செய்ய போகிறார்கள் என்பதற்கான முன் மாதிரி நடவடிக்கையாக இது பார்க்க படுகிறது .
ஆனால் இது போன்ற வலைகளுக்குள் அர்ச்சுனா சிக்க மாட்டார் என நம்புகிறோம் .
தாக்குவோம் இஸ்ரேலை ஈரான்
தாக்குவோம் இஸ்ரேலை ஈரான்
தாக்குவோம் இஸ்ரேலை ஈரான் ,இஸ்ரேலை 9 முனைகள் ஊடக தாக்குவோம் என ஈரான் மீளவும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது .
ஈரானுக்கு விருந்தாளியாக சென்ற ஹமாஸ் மக்கள் இயக்கத்தின் தலைவராக காணப்பட்ட இஸ்மாயில் கனியாவை இஸ்ரேல் ஈரானில் வைத்து படுகொலை புரிந்ததது .
அதனை அடுத்து தற்பொழுது ,இஸ்ரேல் எம்மீது மிக பெரும் தாக்குதல் ஒன்றை நடத்திட ஈரான் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது .
இதுவரை ஏன் இஸ்ரேலை ஈரான் தாக்கவில்லை என்ற விடயமே பெரும் பேசு பொருளாக பேச பட்டு வரும் நிலையில் தற்பொழுது ,மீளவும் இஸ்ரேலை நேரம் வரும் பொழுது தாக்குவோம் எனவும் அந்த தாக்குதல் ஒன்பது முனைகள் ஊடக தாக்க படும் என்ற கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது .
இதனை அடுத்து தற்பொழுது இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் மிக பெரும் முறுகல் ஏற்பட்டுள்ளது .
எவ்வேளையும் எங்கிருந்தும் மோதல்கள் வெடிக்கலாம் என்கின்ற நிலை காணப்படுகிறது .
- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்

- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா

- ஈரான், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தீர்மானத்தை நிராகரித்தது

- பஹ்ரைன் அமெரிக்கா கடற்படை தளம் கடும் சேதம்

எரியும் எண்ணெய் டாங்கிகள்
எரியும் எண்ணெய் டாங்கிகள்
எரியும் எண்ணெய் டாங்கிகள் ,ஈராக் எல்லையில் எரிபொருளை சுற்றி சென்று கொண்டிருந்த பல டாங்கிகள் திடீரென தீப்பிடித்து எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன .
எண்ணெய் டாங்கிகள் திடீரென பற்றி எரியும் காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .
இந்த பவுசர் ஏன் எதற்கு எரிகின்றன என்பது தொடர்பாக இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை .
குண்டு தாக்குதல் நடத்த படத்தில் இந்த எண்ணெய் பவுசர்கள் பற்றி எறிந்துள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன .
குறித்த சம்பவம் தொடர்பாக ஈராக்கிய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்

- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா

- ஈரான், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தீர்மானத்தை நிராகரித்தது

- பஹ்ரைன் அமெரிக்கா கடற்படை தளம் கடும் சேதம்

சுட்டு வீழ்த்தப்பட்து 60 விமானம்
சுட்டு வீழ்த்தப்பட்து 60 விமானம்
சுட்டு வீழ்த்தப்பட்து 60 விமானம் ,உக்ரனை தாக்கிட ரஷ்ய அனுப்பிய 81 தற்கொலை தக்குதல் வெடிகுண்டு விமானங்களில் 60 எம்மால் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்த பட்டதாக உக்ரைன் வான்காப்பு படைகள் அறிவித்துள்ளன .
கடந்த 24 மணித்தியாலத்தில் உக்ரைன் முக்கிய உள் கட்டமைப்புக்களை இலக்கு வைத்து ரஷ்ய போர் விமானங்கள் ,ஏவுகணைகள் கொண்டு கடும் தாக்குதலை நடத்தியது .
இதன் பொழுதே அறுபது விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டதாகவும் ,ரஸ்யாவுடன் நீண்டதூர ஏவுகணைகள் பத்தும் கூடவே வானில் இடைமறித்து தாக்கி அழிக்க பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .
உக்ரைன் மற்றும் ரஸ்யாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்

- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா

- ஈரான், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தீர்மானத்தை நிராகரித்தது

- பஹ்ரைன் அமெரிக்கா கடற்படை தளம் கடும் சேதம்

ஏவுகணைகள் ஓடும் இஸ்ரேல் மக்கள்
ஏவுகணைகள் ஓடும் இஸ்ரேல் மக்கள்
ஏவுகணைகள் ஓடும் இஸ்ரேல் மக்கள் ,வடக்கு இஸ்ரேலை இலக்கு வைத்து லெபனான் ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் நடத்தியுள்ளது .
டசினுக்கு மேற்பட்ட ரொக்கட் ,ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,இந்த தாக்குதலில் இஸ்ரேலை இராணுவ முகாம்கள் மற்றும் ,மக்கள் வாழ்விடங்கள் என்பன தாக்குதலுக்கு இலக்காகி உள்ளன .
இஸ்ரேலுய மக்கள் வீடுகள் மீதும் தாக்குதல் நடத்த பட்டுள்ளதால் ,வீடுகளுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன .
தொடர்ந்தும் இஸ்ரேலை லெபனான் ஹிஸ்புல்லா இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
லெபனானுக்குள் நுழைந்து இஸ்ரேல் தாக்குதலை நாடத்துவதால் அதற்கு பதிலடியாக இப்பொழுது ,ஹிஸ்புல்லா போராளிகள் திருப்பி தாக்குதலை தீவிரமாக நடத்திய வண்ணம் உள்ளனர் .
- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்

- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா

- ஈரான், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தீர்மானத்தை நிராகரித்தது

- பஹ்ரைன் அமெரிக்கா கடற்படை தளம் கடும் சேதம்

சஜித் பிரேமதாசவுக்கு அர்ச்சுனா பரப்புரை
சஜித் பிரேமதாசவுக்கு அர்ச்சுனா பரப்புரை
சஜித் பிரேமதாசவுக்கு அர்ச்சுனா பரப்புரை ,யாழ்ப்பாணத்தில் நடக்க இருக்கும் மதிப்புக்குரிய எதிர்கால ஜனாதிபதி சஜித் பிரேமதாச அவர்களின் பரப்புரைகள் சகலவற்றையும் தோழி உமாச்சந்திர பிரகாஷ் மட்டுமே கவனித்துக் கொள்வார் அதில் எனது பங்கு சிற்றளவும் இருக்காது என நினைக்கிறேன்.
அவர் சஜித் பிரேமதாஸ் அவர்களின் பிரதிநிதியாக விடும் கருத்துக்களை ஒரு நொடியில் தவிடு பொடியாக்க என்னிடம் தாராளமான தொலைபேசி உரையாடல்கள் உள்ளன.
அவர்களின் குப்பாடி அரசியல் சஜித் பிரேமதாஸ் அவர்களின் வாக்குகளை சிதறடிக்கும் என்பதை தெளிவாக பிரேமதாஸ் அவர்களுடன் சொல்லி உள்ளேன்.
மேலும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தோழி உமா சந்திர பிரகாஷ் சாவகச்சேரி தொகுதியில் கேட்க இருப்பது கூட அவர் எனக்கு எதிராக பொழிகின்ற கருத்துகளுக்கு காரணமாகும்.
நான் அரசியல் செய்வதற்காக அரசியலுக்கு வந்தவன் அல்ல..
ஒரு சாதாரண வைத்திய நிர்வாகியாக ஒரு பொது மக்களின் நலனுக்காக உண்மைகளை வெளி கொண்டு வந்த போது சகல அரசியலும் என் குரல்வலையை நெருக்கியது..
ஆதலால் அரசியலை கையில் எடுத்து அவற்றுக்கான பதிலை சொல்லலாம் என எண்ணியது தவிர எப்போதுமே ஒரு அரசியல்வாதியாக இருக்க வேண்டிய தேவை எனக்கு இருக்கவில்லை..
இருந்திருந்தால் இவ்வளவு குறுகிய காலத்தில் எம்பிபிஎஸ், இரண்டு மாஸ்டர், மூன்று டிப்ளமோ எல் எல் பி எல் எல் எம் செய்ய வேண்டிய தேவை இராமநாதன் அர்ச்சுனா வுக்கு இருந்திருக்காது என்பதை உமா சந்திர பிரகாஷ் போன்ற அரசியல் வந்து உழைக்க நினைக்கின்ற தோழிகள் விளங்கிக் கொள்ள வேண்டும்..
தங்களின் அறிவு மிகவும் கீழ்த்தரமானது என்பதை ஒட்டி நான் மிகவும் வருத்தம் அடைகிறேன்..
தோழி நீங்கள் சாவகச்சேரியில் தானே வாக்கு கேட்க போகிறீர்கள் பாராளுமன்றத் தேர்தலில் அப்போது நாங்கள் சந்தித்துக் கொள்வோம்..
எனக்கும் எதிர்கால ஜனாதிபதி சஜித் பிரேமதாஸ் அவர்களுக்கும் இடையான உரையாடல் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை அதை பொது வழியில் சொல்லும் அளவுக்கு நான் கேவலமானவனும் இல்லை..
தோழி உமா சந்திர பிரகாஷ் அவர்கள் யாழ்ப்பாணத்தில் வெறும் ஆயிரம் வாக்குகளை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு குப்பாடி அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது..
உமா சந்திர பிரகாஷின் இவ்வாறான சுயநலமான கருத்துக்கள்
எமது எதிர்கால ஜனாதிபதி சஜித் பிரேமதாஸ் அவர்களுக்கு பாதகமாக அமையும் எனவும் எனது ஆதரவானது இந்த காட்சி சார்பாக அற்றதும் ஆகும்.
நான் நினைக்கிறேன்
தற்போதுள்ள நிலைமையில் தமிழர்களுக்கு உரிய அடிப்படை சுய நிர்ணய உரிமைகளை கதைத்து கருத்துக்களை முன்வைக்கக்கூடிய ஒரே ஒரு ஜனாதிபதியாக சஜித் பிரேமதாசா அவர்களை அவர்களுடைய தந்தையாரின் வரலாறுகளில் இருந்து தேர்ந்தெடுத்துக் கொண்டது மட்டுமே ஆகும்..
நேற்றைய மேடையில் ஒரு தமிழன் இருக்கக் கூடாது என அவர்கள் கருத்தில் கொண்ட போது நானாகவே கீழ் இறங்கி சென்றேன்..
அவ்வாறு சென்றது எமது எதிர்கால ஜனாதிபதி சஜித் பிரேமதாஸ் அவர்களின் நீங்கள் வடக்கிற்கு செல்லுங்கள் நாங்கள் அங்கே எல்லாவற்றையும் செய்வோம் என கூறப்பட்ட காரணத்தில் ஆகும்..
நான் வடக்கிக்கு வருவது உமா சந்திர பிரகாஷின் எதிர்கால பாராளுமன்றத் தேர்தல் நிலையை நிச்சயமாக சிதறி போக செய்யும் என்பதில் அவர் கருத்துக் கொண்டிருப்பது உண்மைதான்…
உமா சந்திர பிரகாஷ் தனது வாக்கு வங்கி என நினைத்துக் கொண்டிருக்கும் சாவகச்சேரி எனது இதயம்..
சாவடி சேரி வைத்தியசாலைக்காக தான் முதன் முதலில் எனது வேலையை திறந்து மக்களால் தடுக்கப்பட்ட ரீதியில் சுகாதார அமைச்சின் குழுக்கள் நான் விழுந்து கொழும்பு சென்றேன் கதைப்பதற்காக..
இப்போது கூட அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அவர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பிக்கு காரணம் முறையற்ற முறையில் எனக்கு எதிராக செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் நடவடிக்கைகளுக்கு துணை போனதுக்கு மட்டுமே ஆகும்..
எனது சுயலாபத்திற்காக இவற்றையெல்லாம் செய்கிறேன் என சொல்பவர்கள் முடியுமானால் உங்கள் தொழிலை பணயம் வைத்து உங்கள் உயிரை பணயம் வைத்து பொதுமக்களுக்காக ஒரு நன்மையேனும் செய்வதற்கு முன் வாருங்கள்..
எனது மருத்துவ கனவு எனது மருத்துவ நிர்வாக கனவு எனது குடும்பம் எல்லாவற்றையும் அடகு வைத்து பொதுமக்களின் நலன் கருதி நான் ஒரு தனி ஆளாக இந்த போராட்டத்துக்கு நின்ற போது எனக்கு பின்னால் நின்றது சாவகச்சேரி மக்கள் மட்டுமே..
நான் மன்னார் பொது வைத்தியசாலை போனது ஒரு அரசியலாக இருந்திருந்தால் நான் சிறை சென்ற பின்பு வந்து தனி அரசியல் மன்னாரில் செய்திருப்பேன்..
ஒவ்வொரு மன நோயாளர்களும் அதன் பின்பு அந்த சிந்துஜாவின் குடும்பத்தை சிதைக்கின்ற போது நான் மௌனமாகி போனதற்கு காரணம் இதில் அரசியல் புகுந்து விடக்கூடாது என்பதற்காக மட்டுமே..
ஒரு மனச் சுத்தியான எந்த நபரும் சிந்துஜாவின் குடும்பத்தின் பின்னால் நிற்கவில்லை..
எல்லாருக்கும் ஒரு தேவை இருந்தது..
கடைசியில் அன்பு தம்பி சுதன் மரியராஜையும் இழந்திருக்கிறோம்..
மருத்துவ குறைகேடுகளுக்கான எனது போராட்டம் கடைசியில் அரசியல் மயமாக்கப்பட்டு
இப்போது பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளாகி வெற்றிகரமாக மழுங்கடிக்கப்பட்ட போதும் இன்றிலிருந்து ஜனாதிபதி தேர்தல் சார்ந்த அரசியலுக்கு எமது மதிப்புமிகு எதிர்கால ஜனாதிபதி சஜித் பிரேமதாஸ் அவர்களை நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட காரணம்
அவர் முஸ்லிம் தமிழ் மக்களின் விருப்பு வாக்குகளை ஒரு கருத்தில் கொண்ட ஒரு ஜனாதிபதி என்பது மட்டுமே ஆகும்…
எது எப்படியோ உமா சந்திர பிரகாஷ் போன்றவர்கள் தனி சுயநல அரசியல் செய்பவர்கள்..
நான் தமிழன் அரசியலை செய்பவன்..
நான் நிரந்தரமாக சிறைக்கு சென்றாலும் என்றொரு நாள் காணாமல் ஆக்கப்பட்டாலும் எனது இறுதி மூச்சு உள்ளவரை தேசியம் எனது கொள்கை மேதகு எனது தலைவன்..
எனது தமிழ் உறவுகளுக்காக நான் நாளை மரணித்தால் கூட ஒன்று மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நான் ஒரு தமிழனுக்கு பிறந்தவன்.. முஸ்லிம் சிங்கள சமுதாயங்களை சகோதரர்களாக நினைத்து வாழ்ந்தவன்..
என் இறுதி மூச்சுக்காற்று வரை என் தமிழினத்திற்கு துரோகம் செய்ய நினைக்காதவன்..
டீல் என்று நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் உங்களுக்கு ஒரு வார்த்தையாக போனாலும் எந்த சுயநலமும் இல்லாமல் தமிழனுக்காக வாழத் துடித்தவனின் ஒவ்வொரு ரத்தத்தை குடிக்கும் கொசுக்கள் ஆகவே நான் பார்க்கிறேன்.
உங்களால் முடிந்தால் நான் இன்று வரை செய்தவற்றை தனியாக செய்து பாருங்கள்..
இப்படிக்கு
வைத்திய கலாநிதி இராமநாதன் அர்ச்சுனா , என முகநூலில் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .
சஜித் அறிவிப்பு 20 000ரூபா இலவசம்
20 000ரூபா இலவசம் சஜித் அறிவிப்பு
சஜித் அறிவிப்பு 20 000ரூபா இலவசம் ,நாட்டை வங்குரோத்து அடைய செய்த தற்போதைய அரசாங்கத்தில் உள்ள தலைவர்களின் விவேகமற்ற, அக்கறையில்லாத கொள்கைகளினால் இலட்சக்கணக்கானோர் வறுமைக்கு
உள்ளாகி இருக்கின்றார்கள். அவர்கள் வறுமையில் சிக்கி எல்லையற்ற அளவில் அசாதாரண நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அத்தோடு வாழ்க்கைக்கான வழிகள் இன்றி தெளிவான வருமான வரிகள் இன்றி, ஒவ்வொரு நாளுக்கும் மூன்று வேளை உணவையும் பெற்றுக் கொள்ள முடியாத வறிய மக்களுக்காக ஜனசவிய, சமூர்த்தி, அஸ்வெசும, மற்றும்
கெமிதிரிய ஆகிய வேலை திட்டங்களில் உள்ள சிறந்த விடயங்களை ஒன்றாக சேர்த்து, அவற்றின் குறைபாடுகளை நீக்கி, சிறந்த வேலை திட்டமொன்றை முன்னெடுப்போம். உணவுத் தேவை, உணவு தேவை அல்லாத வேறு தேவைகள்
, சேமிப்பு, நுகர்வு, முதலீடு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி போன்ற விடயங்களை கருத்தில் கொண்டும், வறுமை ஒழிப்பு திட்டத்தின் ஊடாக மாதாந்தம் 20 ஆயிரம் ரூபா வழங்கி, 24 மாதங்களில் வறுமையை ஒழிக்கும் தேசிய
வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த பதினாறாவது மக்கள் வெற்றி கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் இன்று(26) முற்பகல் கந்தளாய், சேருவில
நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து யாரும் வறுமையில் இருக்கக் கூடாது. வறுமை எனும் அடிமைத்தனத்திற்கு கட்டுப்படாது. பல்வேறு நிகழ்வுகளினாலும் அரசாங்கத்தின் விவேகம் அற்ற, அக்கறை இல்லாத கொள்கை
திட்டங்களினால் மக்கள் வறுமையில் சிக்கி இருக்கின்றார்கள். வறுமையில் இருந்து கொண்டு கையேந்துகின்ற, சமூகமொன்றை உருவாக்காது, அபிமானம் உள்ள மக்கள் வாழ்கின்ற, எமது நாட்டில் எவருடைய அடிமை சேவகர்களாக இல்லாமல் தன்னம்பிக்கையுடன், தன்னிறைவோடு எழுந்து
நிற்க நம்பிக்கை உள்ள சமூகம் இருப்பதால் குறிப்பிட்ட காலத்துக்குள் வறுமையை இல்லாது செய்வோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த 20,000 ரூபா நிவாரணம் வழங்கப்படுகின்ற போது 24 மாதங்களில் வறுமையை ஒழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வீட்டில் உள்ள பெண்களுக்கு இந்த சலுகைகளை பெற்றுக்கொடுத்து, வீடுகளிலேயே
அனைத்து விடயங்களையும் நேர்த்தியாகவும், வளமாகவும் முன்னெடுப்பதால் அவர்களை மையமாகக் கொண்டே இந்த வேலை திட்டம் முன்னெடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
வறுமை என்பது சுமையல்ல நாட்டை கட்டி எழுப்புகின்ற பின்புலத்தை உருவாக்குகின்றவர் என்ற அடிப்படையில் இந்த நிவாரணங்களை வழங்குகின்றோம். பொய் இல்லாமல் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
பங்களாதேஷில் கிராமிய வங்கி கருத்திட்டத்தின் ஊடாகவும் உலகின் பல நாடுகளிலும் குறுகிய காலத்துக்குள் வறுமைப் பிடியிலிருந்து மீண்டு இருக்கிறார்கள். அதற்கான உதாரணங்கள் உண்டு. இதற்காக அரசாங்கத்தின் நிவாரணங்கள் மற்றும் குறித்த நபர்களின் அர்ப்பணிப்பு என்பன தேவை. நாடு
வீழ்ச்சி அடைந்திருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான நிவாரணங்களை மிகவும் சிரமத்திற்கு மத்தியிலே வழங்குவதால் அதை மக்கள் பொறுப்புணர்வுடன் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக தரமான 50 கிலோ நிறையுள்ள உர மூடையுன்றை 5000 ரூபாவிற்கு வழங்குகின்றோம். மக்களால் சகித்துக் கொள்ள முடியுமான தொகைக்கு உர மருந்துகளை வழங்குவதோடு,
இருட்டடிப்பு வர்த்தகத்தை நிறுத்தவும் நடவடிக்கை எடுத்து, இவற்றை கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் ஊடாக வழங்குவோம். விவசாயிகளுக்கு, மீன்பிடியாளர்களுக்கு, சக்கர வண்டி சாரதிகளுக்கு, பாடசாலை போக்குவரத்து
வழங்குனர்களுக்கும் சக்தி அரசி ஆலை உரிமையாளர்களுக்கும் நிவாரண அடிப்படையில் எரிபொருளை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கொரோனா அச்சுறுத்தல் நாட்டின் வங்கரோத்து நிலை என அனைத்து விடயங்களினாலும் விவசாயிகள் அனைத்து விதங்களிலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தரமற்ற உர விநியோகம், உரத் தட்டுப்பாடு, சேதன உர மோசடி என்பனவற்றினாலும், தமது தங்க
ஆபரணங்களையும் சொத்துக்களையும் அடகு வைத்து விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. எனவே விவசாயிகளுடைய விவசாய கடனை நாங்கள் இரத்து செய்வோம்.
அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களின் நட்புறவாளர்கள், நண்பர்கள், பினையின்றி கடனைப் பெற்றுக் கொண்டு அவற்றை மீள செலுத்தாமல் கடன்களை இரத்திச்செய்திருக்கின்றார்கள். வர்த்தகர்களின் கடன்களையும் இரத்துச் செய்து இருக்கின்றார்கள். இவ்வாறான வர்த்தகர்களின்
கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவி சாய்த்தாலும், இந்த வரிய எளிய விவசாயிகளின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவி சாய்க்கவில்லை.
தனது நட்புறவாளர்களுக்காக சட்டத்தை மீறி இரத்து செய்து, கொடுக்கப்பட்ட இந்தக் கடன் தொகைகள் அனைத்தையும் மீண்டும் அரசாங்கத்திற்கு பெற்றுக்
கொண்டு விவசாயிகளின் கடன்களை அரசாங்கம் இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கும் என்றும் இதன் போது எதிர்க்கட்சித் தலைவர் சுட்டி காட்டினார்.
அத்தோடு விவசாயிகளின் உற்பத்திகளுக்கு நிர்ணய விலை ஒன்றை பெற்றுக் கொடுப்பதோடு, பாரிய ஆலை உரிமையாளர்களின் தந்திரமான ஒப்பந்தங்களின் ஊடாக விவசாயிகளின் நெல்லை குறைந்த விலைக்கு கொள்ளையடித்து அவர்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்கி இருக்கின்றார்கள்.
எனவே இந்த விவசாயிகளின் நெல்லுக்கு நிர்ணய விலையை ஏற்படுத்தி, அவர்கள் இலாபத்தை பெற்றுக் கொள்வதோடு, நுகர்வோருக்கும் தகுந்த
விலையில் அரிசியை பெற்றுக் கொள்ளும் விதமாக விலைசூத்திரமொன்றை அறிமுகப்படுத்துவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்தார்.
பலியான மனைவி கணவன் கைது
பலியான மனைவி கணவன் கைது
பலியான மனைவி கணவன் கைது ,குடும்ப தகராறு காரணமாக தனது ஆசை மனைவியை கணவன் அடித்துக் கொன்றுள்ள சம்பவம் இலங்கையில் இடம் பெற்றுள்ளது.
இலங்கை எப்பாவல பலுகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
நீண்ட நாட்களாக கணவன் மனைவிக்கு இடையில் இடம் பெற்று வந்த முறுகல் தகராறு காரணத்தை அடுத்து சீற்றமுற்ற கணவன் தனது மனைவியை அடித்து படுகொலை செய்துள்ளார்.
கணவன் தாக்குதில் 63 வயது உடைய மனைவி பரிதாபகரமாக பலியானார். அதனை அடுத்து இந்த படுகொலை செய்த 66 வயதுடைய கணவர் தற்போது காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை காலமும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த கணவர் மனைவி தற்பொழுது தமது இறுதி காலங்களில் ஒன்றாக வாழ்ந்து வந்த காலப்பகுதியில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக இந்த படுகொலைய இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
வயதான காலத்தில் உடல் சோர்வு காணப்படும் இவர்களினால் உளவியல் கேள்விக்கும் காணப்படுகின்றனர் காலப்பகுதியில் ஒருவருக்கு ஒருவர் இடையில் இவரோட கருத்து முதல் அதிகமாக காணப்படுகிறது.
கைது செய்யப்பட்ட கணவர் தற்போது விசேட விசாரணையின் பின்னர் தற்பொழுது கொலை குற்றச்சாட்டின் அடிப்படையில் நீதிமன்றம் படுத்தப்பட்டுள்ளார்.
பெண் வைத்தியரை கடத்த முற்பட்ட சாரதி
பெண் வைத்தியரை கடத்த முற்பட்ட சாரதி
பெண் வைத்தியரை கடத்த முற்பட்ட சாரதி ,கடத்திச் சென்றதாக பெண் வைத்தியர் ஒருவர் நோயாளர் காவு வண்டியில் குதித்த நிலையில் அங்கு கூடியவர்கள் சாரதி மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன் இருவர் நெளுக்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா – மன்னார் வீதியில் நேற்று (26.08) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா வைத்தியாசாலையில் இருந்து பம்பைமடு பகுதியில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டியில் உணவு கொண்டு சென்றுள்ளனர். குறித்த உணவை
வழங்கிவிட்டு நோயாளா் காவு வண்டி வவுனியா நோக்கி வந்த போது வீதியில் நின்ற பெண் வைத்தியர் ஒருவர் குறித்த நோயாளர் காவு வண்டியில் மறித்து ஏறியுள்ளார்.
குறித்த ஆயுர்வேத பெண் வைத்தியரை ஏற்றிக் கொண்டு வவுனியா நோக்கி சென்ற நோயாளர் காவு வண்டி வேப்பங்குளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை நிரப்பி விட்டு, மீண்டும் மன்னார் வீதி
ஊடாக பம்பைமடு நோக்கி புறப்பட்ட நிலையில் நோயாளர் காவு வண்டியில் இருந்த பெண் வைத்தியர் நோயாளர் காவு வண்டி கதவை திறந்து கீழே குதித்துள்ளார்.
இதனால் குறித்த பெண் வைத்தியர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு கூடிய மக்களிடம் தன்னை கடத்திச் செல்ல முற்பட்டதாக பெண் வைத்தியர் தெரிவித்ததையடுத்து நோயாளர் காவு வண்டியை மறித்து அதன் சாரதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நெளுக்குளம் பொலிசில் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களும் நோயாளர் காவு வண்டியும் நெளுக்குளம் பொலிசிற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வைத்தியசாலை உதவிப் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் நெளுக்குளம் பொலிசிற்கு சென்று
நோயாளர் காவு வண்டியை விடிவித்துள்ளதுடன் குறித்த முறைப்பாட்டை மீள பெறச் செய்வதற்கான முயற்சிகளும் இடம்பெற்று வருவதாக தெரிய வருகிறது.
இது தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகிறார்கள்.
இதேவேளை, குறித்த சாரதி தனது வீட்டிற்கு செல்ல வாகனத்தை திருப்பிய போதே குறித்த சகோதர மொழி பெண் வைத்தியர் அச்சம் காரணமாக குதித்தாக வைத்தியசாலை தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞனின் வயிற்றில் கத்தி நகவெட்டி
இளைஞனின் வயிற்றில் கத்தி நகவெட்டி
இளைஞனின் வயிற்றில் கத்தி நகவெட்டி ,இந்தியாவின் பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவர் (22) கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
அந்த இளைஞரை அவரது குடும்பத்தினர் மோதிஹாரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதையடுத்து அவருக்கு வைத்தியர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சை மூலம் அவரது வயிற்றில் இருந்து சாவி வளையம், சிறிய கத்தி, 2 நகவெட்டி உள்ளிட்ட உலோகப் பொருட்களை வைத்தியர்கள் அகற்றினர்.
அறுவை சிகிச்சை செய்த வைத்தியர்கள் குழுவின் தலைவர் வைத்தியர் அமித் குமார் கூறுகையில்,
நாங்கள் இளைஞரிடம் கேட்டபோது, அவர் சமீபத்தில் உலோக பொருட்களை விழுங்க தொடங்கியது தெரிய வந்தது.
சிகிச்சைக்கு பின்னர் இளைஞர் நலமாக உள்ளார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அவருக்கு சில மனநலப் பிரச்சனைகள் உள்ளன, அதற்காக அவர் மருந்து உட்கொண்டு வருகிறார். இளைஞர் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கூறினார்.
- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்

- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா

- ஈரான், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தீர்மானத்தை நிராகரித்தது

- பஹ்ரைன் அமெரிக்கா கடற்படை தளம் கடும் சேதம்











































