பெற்றோல் பௌசர் விபத்து 140 பேர் பலி 50 பேர் காயம்
பெற்றோல் பௌசர் விபத்து 140 பேர் பலி 50 பேர் காயம்
பெற்றோல் பௌசர் விபத்து 140 பேர் பலி 50 பேர் காயம் ,நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் பெற்றோல் ஏற்றிச்சென்ற பௌசர் விபத்துக்குள்ளானதில், 140 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
புதன்கிழமை (16), நெடுஞ்சாலையில் செல்லும்போது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பௌசர் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தால் பௌசரில் இருந்த பெற்றோல் கசிந்து வெளியேறியது. அங்கிருந்த மக்கள் கசிந்த பெற்றோலை சேகரிக்க விரைந்தனர்.
அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடிய நிலையில், பௌசர் தீப்பிடித்து எரிந்தது. இதில் 140 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர் என, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நைஜீரியாவில் சரக்கு ரயில் போக்குவரத்து மிகப்பெரிய தோல்வி அடைந்ததால், வீதி மார்க்கமாக பௌசர்களில் எரிபொருள்கள் எடுத்துச்செல்லப்படுகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு பொருளாதார தடை விதிக்கப்படும் அபாயம்
இந்தியாவுக்கு பொருளாதார தடை விதிக்கப்படும் அபாயம்
இந்தியாவுக்கு பொருளாதார தடை விதிக்கப்படும் அபாயம் ,இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க கனடா ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் வசித்து வந்த சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.
இவ்விவகாரத்தில் இரு நாடுகள் இடையே விரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க கனடா ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
16 பவுண் திருட்டு நகைகளுடன் 5 பேர் கைது
16 பவுண் திருட்டு நகைகளுடன் 5 பேர் கைது
16 பவுண் திருட்டு நகைகளுடன் 5 பேர் கைது ,யாழ். தென்மராட்சியில் சாவகச்சேரிப் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை மூலம் திருடப்பட்ட 25 லட்சம் ரூபா பெறுமதியான 16 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஐந்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 10 ஆம் திகதி சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெருடாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் பகல் வேளையில் நுழைந்த கொள்ளையர்கள்
வீட்டில் இருந்த 16 பவுண் நகைகள் மற்றும் தொலைபேசி ஆகியவற்றைத் திருடிவிட்டு தப்பித்திருந்தனர்.
கணவன் – மனைவி இருவரும் பணிக்குச் சென்று வீடு திரும்பிய நிலையிலேயே வீட்டில் திருட்டு இடம்பெற்றிருப்பது கண்டறியப்பட்டு அது
தொடர்பில் பாதுகாப்புக் கமராவின் ஆதாரத்துடன் சாவகச்சேரிப் பொலிஸில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், பொலிஸார் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை திருட்டுச் சந்தேகநபர்களான இரண்டு பெண்கள் மற்றும் நகைகளைப் பெற்றுக் கொண்ட வர்த்தகர்கள் இருவர் உட்பட ஐவரைக் கைது செய்துள்ளனர்.
இலஞ்சம் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு
இலஞ்சம் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு
இலஞ்சம் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு ,பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற நபரை மட்டக்குளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மட்டக்குளி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரிக்கு நேற்றைய தினம் (16) ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு போதைப்பொருள் கடத்தலை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்குமாறு கோரியுள்ளார்.
சந்தேகநபர் மாதாந்தம் 100,000 ரூபாயை இலஞ்சமாக வழங்க விரும்புவதாக அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு குறித்த பொலிஸ் அதிகாரி அறிவித்துள்ளார்.
இதையடுத்து, குறித்த சந்தேக நபரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து, சந்தேகநபர் 50,000 ரூபாயை வழங்க முற்படும் போது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
கெஹலியவின் பெயர் நீக்கம்
கெஹலியவின் பெயர் நீக்கம்
கெஹலியவின் பெயர் நீக்கம் ,கொழும்பு, வத்தேகம கல்வி வலயத்தின் கண்டி, குண்டசாலை பிரிவுக்குட்பட்ட ‘கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்பப் பாடசாலை’ என்ற பெயரை உடனடியாக மாற்றுவதற்கு மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ்.அபயகோன் நேற்று அனுமதியளித்துள்ளார்.
கண்டியில் உள்ள பாடசாலைகளில் ஊழல் அரசியல்வாதிகளின் பெயர்களை நீக்குமாறு பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து மாகாண கல்வி திணைக்களத்தின் கட்டமைப்பு குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இப்பாடசாலை இனி குண்டசாலை அரச ஆரம்பப் பாடசாலை என அழைக்கப்படும்.
இதேவேளை, மினிபே கல்வி வலயமான தெல்தெனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளின் பெயரை மாற்றவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், கல்வி அமைச்சின் 1996 ஆம் ஆண்டு சுற்றறிக்கை உயிருடன் இருக்கும் நபர்களின் பெயரை பாடசாலைகளுக்கு வைப்பதை தடை செய்துள்ளதாக வலியுறுத்தினார்.
சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் கொள்முதல் ஊழலில் கெஹலிய ரம்புக்வெல்ல ஈடுபட்டிருந்த போதிலும், அவரது பெயரை பாடசாலைக்கு வைத்திருப்பது பொருத்தமற்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சி நிர்வாகத்துக்கு தடை கோரி வழக்கு
தமிழரசுக் கட்சி நிர்வாகத்துக்கு தடை கோரி வழக்கு
தமிழரசுக் கட்சி நிர்வாகத்துக்கு தடை கோரி வழக்கு ,இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர், பதில் பொதுச்செயலாளர், நிர்வாகச் செயலாளர் ஆகியோர் அந்த பதவியை வகிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்,
2024 ஜனவரி மாதத்தின் பின்னர் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானங்களை சட்டவலுவற்றதாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து,
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரான மார்க்கண்டு நடராசா வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
அதில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், நிர்வாகச் செயலாளர் சேவியர் குலநாயகம் ஆகியோர் எதிராளிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு – கோட்டைக் கல்லாறைச் சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா என்பவரால் கடந்த 10 ஆம் திகதி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உலக முடிவிலிருந்து வீசப்பட்ட சாரதியின் சடலம் மீட்பு
உலக முடிவிலிருந்து வீசப்பட்ட சாரதியின் சடலம் மீட்பு
உலக முடிவிலிருந்து வீசப்பட்ட சாரதியின் சடலம் மீட்பு ,அடித்துக் கொன்று சிறிய உலக முடிவிலிருந்து பள்ளத்திற்கு வீசப்பட்ட ஹாலி எல ரொசெட்வத்தையைச் சேர்ந்த 23 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதியின்
சடலம் 16 நாட்களுக்கு பின்னர் புதன்கிழமை (16) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மடுல்சீம பொலிஸார் தெரிவித்தனர்.
வெல்லவாய குடா ஓயா இராணுவ முகாமின் கமாண்டோ அதிகாரிகள் குழுவொன்று கயிறுகளின் உதவியுடன் புதன்கிழமை (16) பிற்பகல் மடுல்சீம சிறிய உலக முடிவின் பள்ளத்தில் இறங்கி மேற்கொண்ட சோதனையின் போது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
சடலத்தை உரப் பையில் கட்டி கயிறு, மூலம் பெரும் முயற்சியுடன் மேலே எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வைத்தியர் அர்ச்சுனாவுடன் இணைந்து ஊழலுக்கு எதிராக போராடுவோம்
வைத்தியர் அர்ச்சுனாவுடன் இணைந்து ஊழலுக்கு எதிராக போராடுவோம்
வைத்தியர் அர்ச்சுனாவுடன் இணைந்து ஊழலுக்கு எதிராக போராடுவோம்,அர்ச்சுனா வெற்றி வேட்பாளர்கள் லோஜி மற்றும் பிரகாஷ் ஆகியோர் வழங்கியுள்ள அதிரடி செவ்வியினை இதில் காண்க .
ஆளுமையுள்ளவர்களாக இவர்கள் காணப்படுகின்றனர் என்பதை மேற்படி காணொளிகள் காண்பிக்கின்றன .
காணொளியில் அழுத்தி முழுமையான வீடியோ பார்க்க
வடமராட்சியில் தீவீர பிரச்சாரத்தில் வைத்தியர் அர்ச்சுனா குழுவினர்
வடமராட்சியில் தீவீர பிரச்சாரத்தில் வைத்தியர் அர்ச்சுனா குழுவினர்
வடமராட்சியில் தீவீர பிரச்சாரத்தில் வைத்தியர் அர்ச்சுனா குழுவினர்..தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர் .
எதிர்வரும் பாரளுமன்ற தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் ,தற்போது அர்ச்சுனா வெற்றி வேட்பாளர்கள் தமது பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர் .
காணொளியில் முழுமையான விபரம் காண்க .
- ஏமனில் நடந்த சண்டையில் கிட்டத்தட்ட 900 பேர் உயிரிழந்தனர்

- சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில்

- சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஓய்வு

- இந்த ஆண்டு பல அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன

- இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வந்தடைந்தார்

- வணக்கத்துக்குரிய அம்பிட்டியே சுமனரத்ன தேரர் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர் – FUTA

- இந்த மண் மறக்காது: செம்மணி புதைகுழி பற்றிய விழிப்புணர்விற்காக பிரித்தானியத் தமிழர்கள் அணிதிரள்வு

- திணறும் இலங்கை அநுர அரசு

- ஹிங்குரகொடவில் தொல்பொருட்கள் சட்டவிரோதமாக அகழ்வாராய்ச்சி செய்ததற்காக ஐவர் கைது

அமெரிக்கா இஸ்ரேலை அச்சுறுத்துகிறது
அமெரிக்கா இஸ்ரேலை அச்சுறுத்துகிறது
அமெரிக்கா இஸ்ரேலை அச்சுறுத்துகிறது ஆனால் துருப்புக்களை நிலைநிறுத்துகிறது, கொள்கை முரண்பாட்டை வெளிப்படுத்துகிறது
இஸ்ரேலுக்கான இராணுவ உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா
அச்சுறுத்தியது, ஆனால் அதே நேரத்தில் துருப்புகளையும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பையும் நிலைநிறுத்தியது.
ஒரு மேம்பட்ட அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை இஸ்ரேலுக்கு அனுப்பியது, அதை இயக்க 100 துருப்புக்கள், வாஷிங்டன் ஏற்கனவே
பெருமளவில் மானியம் வழங்கிய பரந்த இஸ்ரேலியப் போருடன் அமெரிக்காவின் சிக்கலில் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தைக் குறிக்கிறது.
ஆனால் வரிசைப்படுத்தல் – ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு ஈரானிய பதிலடியை எதிர்பார்த்து – அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் நிர்வாகம் இஸ்ரேலுக்கான அதன் அசைக்க முடியாத ஆதரவால் வளர்ந்து வரும்
பின்னடைவை எதிர்கொள்ளும் நேரத்தில் அமெரிக்க தலையீட்டின் சட்டபூர்வமான தன்மை பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. அமெரிக்க அதிகாரிகள் அதிகாரத்தை முன்னிறுத்த முற்படுவதுடன், காசாவில் இஸ்ரேல்
தொடர்ந்து செய்து வருவது போல, மனிதாபிமான உதவியை தடுக்கும் நாடுகளுக்கு இராணுவ உதவியை தடைசெய்யும் அமெரிக்க சட்டத்தை கடைசியாக அமுல்படுத்துவதாக அச்சுறுத்தும் நிலையிலும் இது வருகிறது.
இரண்டு சமீபத்திய முன்னேற்றங்கள் – இஸ்ரேலுக்கு அமெரிக்கா துருப்புக்களை அனுப்பும் என்ற ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு மற்றும் அதே நாளில் அமெரிக்க அதிகாரிகள் அனுப்பிய கடிதம் காசாவில் மனிதாபிமான
நிலைமையை மேம்படுத்த அல்லது குறிப்பிடப்படாத விளைவுகளை எதிர்கொள்ள இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்தது – நிர்வாகத்தின் சீரற்ற
அணுகுமுறையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இஸ்ரேலின் எப்பொழுதும் விரிவடைந்து வரும் போரைக் கட்டுப்படுத்துவதற்கு சிறிதளவு பொருள் செய்யவில்லை.
செவ்வாயன்று ஒரு செய்தியாளர் சந்திப்பில், வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், அமெரிக்க கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் இணங்கத் தவறினால் என்ன விளைவுகள் ஏற்படும் அல்லது இஸ்ரேலுக்கு
இராணுவ உதவியை நிறுத்தும் பிடென் நிர்வாகத்தின் முந்தைய, நிறைவேற்றப்படாத அச்சுறுத்தலில் இருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது என்பதை கூற மறுத்துவிட்டார்.
இஸ்ரேல் இணங்கத் தவறியதற்கு அமெரிக்கா எவ்வாறு பதிலளிக்கும் என்ற விவரங்களுக்கு அழுத்தம் கொடுத்தபோது மில்லர் செய்தியாளர்களிடம் “நான் இன்று அதைப் பற்றி பேசப் போவதில்லை” என்று கூறினார்.
அர்ச்சுனா இரண்டாவது புதிய தேர்தல் பாடல்
அர்ச்சுனா இரண்டாவது புதிய தேர்தல் பாடல்
அர்ச்சுனா இரண்டாவது புதிய தேர்தல் பாடல் தற்போது வெளியிட பட்டுள்ளது .இந்த பாடல் தற்பொழுது சமூக வாலித்தலங்களில் வேகமாக பரவி வருகிறது .
மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தேர்தல் வெற்றியை பறை சாற்றும் வகையில் இந்த பாடல்கள் உருவாக்கம் பெற்றுள்ளது .
வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடக இந்த பாடல் அறிமுகம் செய்யப்பட்டது .இந்த பாடலை பாடியுள்ளார் – பாவேந்தன் இளங்கோவன் – இசை – இளங்கோ செல்லப்பா – பாடல்வரிகள் வன்னி மைந்தன் – இந்த பாடல் உருவாக்கம் பெறுவதற்கு பின்தளத்தில் நிதி அளித்து உதவி புரிந்துள்ளார் மயூரன் கனடாவில் இருந்து .
இந்த பாடல் அர்ச்சுனா தேர்தல் களத்தில் வெற்றி பெற உழைத்த உங்கள் அனைவருக்கும் எதிரி இணையத்தின் சார்ப்பில் மிக்க நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம் .
30 மணித்தியால இடைவெளியில் இரண்டாவதாக ….ஓடி வாடா தமிழா ..என்ற இந்த பாடலை உருவாக்கி வழங்கிய இசை அமைப்பாளர் அண்ணன் இளங்கோ செல்லாப்பாவிற்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள் .
மக்களே இந்த பாடலை எடுத்து பரப்புங்கள் ,மருத்துவர் அர்ச்சுனா வெற்றி பெற உங்கள் ஆதரவை நீட்டுங்கள் .
- ஏமனில் நடந்த சண்டையில் கிட்டத்தட்ட 900 பேர் உயிரிழந்தனர்

- சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில்

- சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஓய்வு

- இந்த ஆண்டு பல அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன

- இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வந்தடைந்தார்

- வணக்கத்துக்குரிய அம்பிட்டியே சுமனரத்ன தேரர் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர் – FUTA

- இந்த மண் மறக்காது: செம்மணி புதைகுழி பற்றிய விழிப்புணர்விற்காக பிரித்தானியத் தமிழர்கள் அணிதிரள்வு

- திணறும் இலங்கை அநுர அரசு

- ஹிங்குரகொடவில் தொல்பொருட்கள் சட்டவிரோதமாக அகழ்வாராய்ச்சி செய்ததற்காக ஐவர் கைது

எயிட்ஸ் தொற்றால் சுமார் 1 327 பேர் பாதிப்பு
எயிட்ஸ் தொற்றால் சுமார் 1 327 பேர் பாதிப்பு
எயிட்ஸ் தொற்றால் சுமார் 1 327 பேர் பாதிப்பு கடந்த 2023ஆம் ஆண்டு மட்டுமே HIV எயிட்ஸ் தொற்றால் சுமார் 1,327 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு தேசிய எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வடமேற்கு மாகாண கூட்டத்தில்
கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது, குருநாகல் போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் சித்ரன் ஹத்துருசிங்க இதை குறிப்பிட்டார்.
“15 வயது முதல் 29 வயது வரை உள்ள இளைஞர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
2003 முதல், எச்.ஐ.வி எய்ட்ஸ் பரவுவது படிப்படியாக அதிகரித்து வருகிறது.
2030 ஆம் ஆண்டில் இந்த நோயை அகற்றுவதற்கான ஒரு முறையை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.
இந்த நோயாளிகளில் சுமார் 95 சதவீதமானோரை நாம் சிகிச்சைக்கு பரிந்துரைக்க முடியும்.
மருத்துவ நிபுணர்களாகிய நாம் இந்த நோய்களைத் தடுப்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்தாலும் அதற்குத் தேவையான அரசியல் ஆதரவு
கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. அத்தகைய திட்டத்தை வெற்றிகரமாக நடத்த, அரசியல் ஆதரவு தேவை என்றார்.
அதிக வாக்குகளால் சிலிண்டர் வெற்றி பெறும்
அதிக வாக்குகளால் சிலிண்டர் வெற்றி பெறும்
அதிக வாக்குகளால் சிலிண்டர் வெற்றி பெறும் ,பாராளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெறுவதற்காக பலமான அணியுடன் இணைந்து செயற்படுவதாக புதிய ஜனநாயக முன்னணியின் காலி மாவட்ட வேட்பாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
காலியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை கூறிய அவர், கடந்த தேர்தலில் புதிய வாக்கு தளம் கிடைத்தது என்றார்.
அத்துடன், குறித்த வாக்காளர் தளத்தை பலப்படுத்த பாடுபடுவதுடன், ஒவ்வொரு தொகுதியிலும் அதிக
வாக்குகளைப் பெற குழுவாக, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.
காலி மாவட்டம் பொதுத் தேர்தலுக்கு பலமான அணியை களமிறக்கியுள்ளதுடன், தொழில் வல்லுநர்கள் மற்றும் மக்கள் நட்புடன் கூடிய
குழுவொன்று தேர்தலில் போட்டியிடுவதாகம் அதிக வாக்குகளால் சிலிண்டர் வெற்றி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் செய்வதற்கு நிதி தேவையில்லை அர்ச்சுனா
அரசியல் செய்வதற்கு நிதி தேவையில்லை அர்ச்சுனா
உண்மையான அரசியல் செய்வதற்கு நிதி தேவையில்லை அர்ச்சுனா அது என்னுடைய கோட்பாடு. சாதாரண அரசியல் அடிமட்டம் போவதாக இருந்தால் அதற்குரிய நிதியை அரசியல்வாதிகள் இதுவரை பிழையான வழியில்
சேகரித்து உள்ளார்கள். யாழ். தேர்தல் மாவட்டத்தில் ஆறு ஆசனங்களையும் நாங்கள் பெற்றுக்கொள்வோம் சுயேட்சை குழு 17 இன் முதன்மை வேட்பாளர் வைத்தியர் இராமநாதன் அருச்சுனா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் திங்கட்கிழமை (15) நடைபெற்ற வேட்பாளர் அறிமுகம் நிகழ்வில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்: அரசியல் செய்வதற்கு அடிப்படையான எனக்கு எந்தவித நிதியும் தேவையில்லை. எனக்கு போதுமான பணத்தை நான் சேர்த்து வைத்துள்ளேன். இதுவரை காலமும் யாரிடமும் கைநீட்டி பணம் கேட்டது
இல்லை. எங்களுடைய அரசியலை செய்வதற்கு கோடிக்கணக்கில் பணம் தேவையில்லை. நான் 10 கோடி பெறுமதியான வீடு வைத்திருக்கிறேன். மக்கள் எனக்கு தருகிறார்கள். நான் மக்களுக்கு கொடுப்பேன்.
அநுர குமார திசாநாயக்கவால் யாழில் நடைபெற்ற சந்திப்பின் போது மொழிபெயர்ப்பின் போது பிழையான மொழியாக்கம் பகிரப்பட்டு அநுர குமார திசாநாயக்க தமிழர் முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மை
இனத்தவர்களில் பங்களிப்பு இல்லாமல் நான் வெல்லுவேன் ஆகவே நீங்களும் பங்களிப்பு செய்யுங்கள். என்ற கருத்தை பிழையான கருத்தை தமிழ் மக்களிடம் பொருத்தி இருந்தார்கள்.
அரசியலை எப்போது சரியாக பெது மக்களுக்கு சொல்லி கொடுக்கிறோமோ அப்போது தான் உண்மையான அரசியல்வாதி ஆகிறோம். நாங்கள் பார்த்து கொள்கிறோம் நீங்கள் ஓட்டை போடுங்கள் என்று சொன்னது பழைய
அரசியில்வாதிகள், நீங்கள் சொல்லுங்கள் அரசியல் நாங்கள் செய்கிறோம் என்று சொல்வது படித்த அரசியல் ஆகவே நாங்கள் யாரையும் ஏமாற்றப்போவது இல்லை.
கடல் நீரில் மூழ்கிய களுத்துறை
கடல் நீரில் மூழ்கிய களுத்துறை
கடல் நீரில் மூழ்கிய களுத்துறை ,வடக்கு களுத்துறை பிரதேசத்தில் புதன்கிழமை (16) காலை கடல் பெருக்கெடுத்துள்ளதாக களுத்துறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
களுத்துறை கெலிடோ கடற்கரை அருகில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரையில் உள்ள 200 வீடுகள், சுற்றுலா
விடுதிகள், களுத்துறை வீதி அபிவிருத்தி அதிகார சபை அலுவலக வளாகம் மற்றும் பல கறுக்கு வீதிகள் கடல் நீரில் மூழ்கி காணப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு சிவப்பு அறிவிப்பு
மீனவர்களுக்கு சிவப்பு அறிவிப்பு
மீனவர்களுக்கு சிவப்பு அறிவிப்பு ,கடும் மழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் வானிலை அவதான நிலையம் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இன்று (16) காலை 8:00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு நாளை (17) காலை 8:00 மணி வரை செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய வங்கக் கடலில் நேற்று (15) மதியம் 12:00 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் மையம் கொண்டிருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திரா கடற்கரையை நாளை நெருங்கும்.
இதன் விளைவாக, கடல் பகுதிகளில் பலமான காற்று வீசுவதுடன், கனமழை பெய்யும் மற்றும் கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலையின் உயரம் 2.5-3.0 மீற்றர் வரை உயரும் சாத்தியம் காணப்படுகின்றது.
இதன்காரணமாக சிலாபத்தில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் அலைகள் நிலத்தை வந்தடையும் வாய்ப்பும் உள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகள் தொடர்பில் மீனவ மற்றும் கடல்சார் சமூகம் கவனம் செலுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.
இறுதி யுத்த காட்டி கொடுப்பு சிக்கிய 9 வேட்டிகள்
இறுதி யுத்த காட்டி கொடுப்பு சிக்கிய 9 வேட்டிகள்
இறுதி யுத்த காட்டி கொடுப்பு சிக்கிய 9 வேட்டிகள்,வெள்ளை கொடியுடன் சரணடைந்த விடுதலை புலிகள் உறுப்பினர்களை கட்டி கொடுத்த ஒன்பது வெள்ளை வேட்டிகள் தொடர்பான விடயங்கள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .
விடுதலை புலிகள் இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட காரணமாக விளங்கிய ,செல்வராசா கயேந்திரன் ,கயேந்திர குமார் ,செல்வம் அடைக்கலநாதன்
,கிசோர் ,சந்திரநேரு ,சுரேஸ்பிரேமசந்திரன் ,சம்பந்தன் ஆகியோர் ஈடுபட்டுள்ள செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மக்களுக்காக போராடியவர்களை காட்டி கொடுத்த கயவர்கள் இறுதி நேரத்தில் உரையாடிய விடயங்கள் தற்போது வெளியாகியுள்ளன .

அந்த விடயங்கள் ,ஆதாரங்களை கீழே ஆங்கிலத்தில் காண மக்களே .அது தவிர கீழே உள்ள விக்கிலீக்ஸ் இணைப்பையும் அழுத்தி பார்வையிடுக .



- ஏமனில் நடந்த சண்டையில் கிட்டத்தட்ட 900 பேர் உயிரிழந்தனர்

- சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில்

- சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஓய்வு

- இந்த ஆண்டு பல அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன

- இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வந்தடைந்தார்

- வணக்கத்துக்குரிய அம்பிட்டியே சுமனரத்ன தேரர் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர் – FUTA

- இந்த மண் மறக்காது: செம்மணி புதைகுழி பற்றிய விழிப்புணர்விற்காக பிரித்தானியத் தமிழர்கள் அணிதிரள்வு

- திணறும் இலங்கை அநுர அரசு

- ஹிங்குரகொடவில் தொல்பொருட்கள் சட்டவிரோதமாக அகழ்வாராய்ச்சி செய்ததற்காக ஐவர் கைது

ஈரான் மீதான ஆஸ்திரேலியத் தடைகள்
ஈரான் மீதான ஆஸ்திரேலியத் தடைகள்
ஈரான் மீதான ஆஸ்திரேலியத் தடைகள் ‘பாசாங்குத்தனம்’: யூத வக்கீல் குழு
ஆஸ்திரேலிய அரசாங்கம் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்ததை அடுத்து, தடைகள் உட்பட, “இனப்படுகொலை குற்றத்தை
இஸ்ரேல் செய்வதைத் தடுக்க அனைத்து அழுத்தங்களையும் பயன்படுத்த வேண்டும்” என்று ஆஸ்திரேலியாவின் யூத கவுன்சில் ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
முற்போக்கான யூதக் குழு, உலக உணவுத் திட்டத்தின்படி, அக்டோபர் 1 முதல் உணவு எதுவும் நுழையாத வடக்கு காசாவில் 400,000 க்கும் அதிகமான மக்கள் பட்டினியால் வாடும் அபாயத்தில் உள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி பென்னி வோங், “ஈரான் மீது புதிய தடைகளை இன்று வெளியிட்டிருப்பது பாசாங்குத்தனமானது” என்று ஆஸ்திரேலியாவின் யூத கவுன்சிலின் நிர்வாக அதிகாரி மேக்ஸ் கைசர் கூறினார்.
“ஆஸ்திரேலிய அரசாங்கம் இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு எதிராக எந்தவொரு கணிசமான நடவடிக்கையையும் எடுக்கும் வரை நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்,” என்று கெய்சர் மேலும் கூறினார்.
மருத்துவமனை லெபனான் முழுவதும் சேதம்
மருத்துவமனை லெபனான் முழுவதும் சேதம்
மருத்துவமனை லெபனான் முழுவதும் சேதம் ,இஸ்ரேலிய தாக்குதல்கள் லெபனான் முழுவதும் மருத்துவமனை உட்பட கட்டிடங்களை சேதப்படுத்துகின்றன.
லெபனானில் உள்ள பால்பெக்கில் ஒரு கட்டிடத்தை அழித்த ஒரே இரவில் இஸ்ரேலிய தாக்குதல் அருகிலுள்ள அல்-முர்டாடா மருத்துவமனையையும் சேதப்படுத்தியது, அது சேவையை நிறுத்தியது என்று லெபனானின் NNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய போர் விமானங்கள் காசிமியா பகுதியில் சொத்துக்கள் மற்றும் பயிர்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது மற்றும் பிளாட் மற்றும் பர்காஸ் இடையே உள்ள லிட்டானி நதி பகுதியை குறிவைத்தது, என்என்ஏ மேலும் கூறியது.
ஈரானின் அணு அல்லது எண்ணெய் ஆலைகளை தாக்க மாட்டோம் அமெரிக்கா
ஈரானின் அணு அல்லது எண்ணெய் ஆலைகளை தாக்க மாட்டோம் அமெரிக்கா
ஈரானின் அணு அல்லது எண்ணெய் ஆலைகளை தாக்க மாட்டோம் என அமெரிக்காவிடம் இஸ்ரேல் கூறியுள்ளது: அறிக்கைகள்
அமெரிக்க ஊடகங்களின்படி, ஈரான் மீதான திட்டமிட்ட பதிலடித் தாக்குதல்
அணு அல்லது எண்ணெய் நிலையங்களை குறிவைக்காது என்று வெள்ளை மாளிகைக்கு இஸ்ரேல் உறுதியளித்துள்ளது.
பெயரிடப்படாத அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, தி வாஷிங்டன் போஸ்ட், இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு வெள்ளை மாளிகையிடம் ஒரு
எதிர்த்தாக்குதலை இராணுவ தளங்களை மட்டுமே குறிவைக்கும் என்று கருதுவதாக கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது.
வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், அநாமதேய அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, இந்த உறுதிமொழி கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனுக்கும் நெதன்யாகுவுக்கும் இடையேயான அழைப்பிலும், அதே போல்
சமீபத்திய நாட்களில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டினுக்கும் அவரது இஸ்ரேலிய பிரதிநிதியான யோவ் கேலன்ட்க்கும் இடையே நடந்த உரையாடல்களிலும் வந்ததாகக் கூறியது.
ஹெஸ்பொல்லாவின் ஹசன் நஸ்ரல்லா உட்பட பிராந்தியத்தில் தெஹ்ரான்-இணைந்த தலைவர்களை இஸ்ரேல் கொன்றதற்கு பதிலளிக்கும் விதமாக
அக்டோபர் 1 அன்று ஈரான் நாட்டின் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசிய பின்னர் எதிர் தாக்குதலை நடத்துவதாக இஸ்ரேல் உறுதியளித்துள்ளது..














































