தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை
Posted in இலங்கை செய்திகள்

இதுவரையில் தேர்தல் நிலவரம்

இதுவரையில் தேர்தல் நிலவரம்

இதுவரையிலான தேர்தல் நிலவரங்கள் தற்போது தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளால் வெளியாகியுள்ளது. அதனடிப்படையில்,

உள்ளூராட்சித் தேர்தலில் இன்று காலை10 மணிவரையிலான இடம்பெற்ற வாக்களிப்பு வீதம்,

நுவரெலியா 22 %, பதுளை 22 %, மொனராகலை 15 %, அனுராதபுரம் – 20 %, யாழ்ப்பாணம் 18 %, மன்னார் 23 %, வவுனியா 31.5 %, திகாமடுல்ல 24%

கம்பஹா 20 %, மாத்தறை 20 %, களுத்துறை 20 %, பொலனறுவை 21 %, கொழும்பு 18 %, புத்தளம் 20 %, காலி 19 %, இரத்தினபுரி 20 %

அம்பாந்தோட்டை 19 %, கிளிநொச்சி 22 %, மாத்தளை 25 %, கேகாலை 20 %, கண்டி 21 %

அனைத்து பிரதேசங்களிலும் சுமூகமாக வாக்களிப்புக்கள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன.

யாழ்ப்பாண மாவட்டத்திலேயே 17 மாநகர சபைகளுக்கு மூவாயிரத்து 519 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 1 மாநகர சபை, 3 நகர சபைகள் மற்றும் 13 பிரதேச சபைகள் என்ற கட்டமைப்பில் உள்ளூர் அதிகார சபைகள் இருக்கின்றன.

மலையகத்தில் மக்கள் ஆர்வமாக சென்று தத்தம் வாக்குப்பதிவினை மேற்கொண்டுவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நீர்கொழும்பு மாநகரசபைக்கான தேர்தல் தொகுதியில் மக்கள் மந்தகதியில் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்ற போதிலும், அதிக எண்ணைக்கையானோர் வாக்களித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மன்னாரில் 114 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுவருகின்றன.

இத் தேர்தல் இன்று காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறும் அதேநேரம் ஒவ்வோர் நிலையத்திலும் அதிகூடிய பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும், வாக்களித்ததன் பின்னர் அமைதியாக வீடுகளுக்குச் செல்லுங்கள் என்றும்,

நாட்டின் சட்டம் மற்றும் பொது ஒழுங்கை முறையாகக் கடைப்பிடியுங்கள் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளவர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். தேர்தல்கள் ஆணைக்குழு தனக்கான பொறுப்பை நிறைவேற்றியுள்ளது. இனி உங்களின் பொறுப்பை நிறைவேற்றுங்கள்.

சுதந்திரமானதும் நீதியானதுமான வகையில் தேர்தலை நடத்த சட்டத்தின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும்.

வாக்களிப்பு நிலையத்தினுள் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தல், படம் எடுத்தல், காணொளிகளைப் பதிவு செய்தல், ஆயுதங்களை வைத்திருத்தல், புகைப் பிடித்தல், மதுபானம் அருந்துதல் அல்லது போதைப்பொருட்கள் உபயோகித்தல்,

மதுபானம் அருந்திவிட்டு அல்லது போதைப்பொருள்கள் பாவனையுடன் வாக்கெடுப்பு நிலையத்துக்குச் செல்லுதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் சட்டம் மற்றும் பொது ஒழுங்கை நாட்டு மக்கள் அனைவரும் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். வாக்கெடுப்பு நிலையத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் முழு வாக்கெடுப்பு நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.

ஆகவே, அவதானத்துடன் செயற்பட வேண்டும்.” – என்றார்.

இந்நிலையில், கண்டி – பேராதனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னொருவ பிரதேசத்தில் உள்ள வாக்கெடுப்பு நிலையம் ஒன்றில் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த பெண் அரச உத்தியோகத்தர் ஒருவர்

திடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.


வாக்குச் சீட்டில் இப்படி செய்யாதீர்கள்
Posted in இலங்கை செய்திகள்

வாக்குச் சீட்டில் இப்படி செய்யாதீர்கள்

வாக்குச் சீட்டில் இப்படி செய்யாதீர்கள்

வாக்குச் சீட்டில் இப்படி செய்யாதீர்கள் நாளை நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலின்போது வாக்களிக்கையில் மக்களே இப்படி செய்யாதீர்கள் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்புக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க,

வாக்காளப் பெருமக்களே வாக்களிக்க வரும்போது, தேசிய அடையாள அட்டை, வாகன அனுமதி பத்திரம் மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவற்றை எடுத்து வரவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

வாக்களிப்புக்கான தங்களுடைய ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக, அலுவலக அடையாள அட்டை,

தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக விண்ணப்பம் செய்தமைக்கான பிரதி ஆகியவற்றை எடுத்து வரவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், வாக்குச்சீட்டில் கட்சிகளின் பெயர்களுக்கு எதிரே கட்சிகளின் சின்னங்களும் சுயேச்சைக்குழுக்களின் பெயர்களுக்கு எதிரே சுயேச்சைக் குழுக்களின் சின்னங்களும் இருக்கும்,

அதற்கு எதிராக வெற்றுக்கட்டம் இருக்கும், அதில் புள்ளடி (X) இடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தால், ஞாயிற்றுக்கிழமை (04) மாலை அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஒலிப்பதிவில், உரையாற்றி உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க,

வாக்குச்சீட்டில் எழுதவோ, சித்திரம் கீறவோ, கிறுக்கவோ, எண்ணங்களை எழுதவோ, பெயர்களை எழுதவோ வேண்டாம். புள்ளடி (X) இடப்படாத எந்தவொரு வாக்குச்சீட்டும் நிராகரிக்கப்படும் என்றார்.

நாளை நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான பரப்புரைகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தபோதிலும்,

தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளும் அனைத்து மாவட்டங்களிலும் மும்மரமாக நடைபெற்று முடிந்திருக்கின்றது.

தேர்தல் முறைகேடுகளை தவிர்க்கும்பொருட்டு அநேகமான பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளமையும் அறியக்கூடியதாக இருக்கின்ற, அதேநேரம்

ஒரு வாக்குகூட செல்லுபடியற்றதாகி விடக்கூடாது என்பதில் தேர்தல் ஆணைக்குழு முழுக் கவனத்தை செலுத்தி , வாக்காளப் பெருமக்களுக்கு வாக்குச் சீட்டில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

அதிக வாக்குகளால் சிலிண்டர் வெற்றி பெறும்
Posted in இலங்கை செய்திகள்

அதிக வாக்குகளால் சிலிண்டர் வெற்றி பெறும்

அதிக வாக்குகளால் சிலிண்டர் வெற்றி பெறும்

அதிக வாக்குகளால் சிலிண்டர் வெற்றி பெறும் ,பாராளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெறுவதற்காக பலமான அணியுடன் இணைந்து செயற்படுவதாக புதிய ஜனநாயக முன்னணியின் காலி மாவட்ட வேட்பாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

காலியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை கூறிய அவர், கடந்த தேர்தலில் புதிய வாக்கு தளம் கிடைத்தது என்றார்.

அத்துடன், குறித்த வாக்காளர் தளத்தை பலப்படுத்த பாடுபடுவதுடன், ஒவ்வொரு தொகுதியிலும் அதிக

வாக்குகளைப் பெற குழுவாக, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.

காலி மாவட்டம் பொதுத் தேர்தலுக்கு பலமான அணியை களமிறக்கியுள்ளதுடன், தொழில் வல்லுநர்கள் மற்றும் மக்கள் நட்புடன் கூடிய

குழுவொன்று தேர்தலில் போட்டியிடுவதாகம் அதிக வாக்குகளால் சிலிண்டர் வெற்றி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

நான்கு வாக்கெடுப்புக்கள் செல்லுபடியற்றதாக மாற்றம்

நான்கு வாக்கெடுப்புக்கள் செல்லுபடியற்றதாக மாற்றம்

இலங்கை பாரளுமன்றில் இடம்பெற்று வரும் புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பில்
இதுவரை மூன்று வாக்குகள் செல்லுபடியற்றதாக இடம்பெற்றுள்ளது.

இந்த செல்லுபடியற்ற வாக்குகளை யார் பதிவு செய்தார்கள் என்பது தெரியவில்லை ,தொடர்ந்து வாக்குகள் எண்ண பட்டு கொண்டுள்ளன
பாராளுமன்றம் தற்போது பரபரப்பில் உறைந்துள்ளது.

    Posted in இலங்கை செய்திகள்

    வாக்கு எண்ணும் பணிகள் விறு விறுப்பாக ஆரம்பிக்க பட்டுள்ளன

    வாக்கு எண்ணும் பணிகள் விறு விறுப்பாக ஆரம்பிக்க பட்டுள்ளன

    இலங்கையி ஒன்பதாவது பாராளுமன்ற தேர்தல் நேற்று இடம்பெற்றது

    தற்போது அந்த தேர்தல் மக்கள் வாக்கு அழிப்பு விகிதம் தற்போது

    வேகமாக என்ன பட்டு கொண்டுள்ளது


    விரைவில் இதன் முடிவுகள் விரைந்து அறிவிக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது