பஸ் லொறி விபத்து 15பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பஸ் லொறி விபத்து 15பேர் காயம்

பஸ் லொறி விபத்து 15பேர் காயம்

பஸ் லொறி விபத்து 15பேர் காயம் ,ஹொரணை – ரத்னபுர வீதியில், இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் தனியார் பஸ் மற்றும் சிறிய ரக லொறி என்பன நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

இந்த விபத்தில், மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் லொறி சாரதி மற்றும் உதவியாளரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மகிந்தா மகன் வழக்கை விசாரித்த நீதிபதி விலகல்
Posted in இலங்கை செய்திகள்

மகிந்தா மகன் வழக்கை விசாரித்த நீதிபதி விலகல்

மகிந்தா மகன் வழக்கை விசாரித்த நீதிபதி விலகல்

மகிந்தா மகன் வழக்கை விசாரித்த நீதிபதி விலகல் ,கிரிஷ் வழக்கு தொடர்பாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதில் இருந்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன விலகினார்.

இந்த விடயம் தற்போது இலங்கை அரசியலில் பெரு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

தளபதி மல்லியின் சகோதரர் இறுதி நிகழ்வு நேரலை லண்டன்
Posted in இலங்கை செய்திகள்

தளபதி மல்லியின் சகோதரர் இறுதி நிகழ்வு நேரலை லண்டன்

தளபதி மல்லியின் சகோதரர் இறுதி நிகழ்வு நேரலை லண்டன்

தளபதி மல்லியின் சகோதரர் இறுதி நிகழ்வு நேரலை லண்டன் ,லண்டனில் வீதி விபத்தில் பலியான விடுதலை தபதியாக விளங்கிய மல்லியின் சகோதரர் கருணாகரன் அல்லது சிவாவின் அவர்களில் இறுதி நிகழ்வு தற்போது இடம்பெற்று கொண்டுள்ளது .

வீதியை கடக்க முற்பட்ட பொழுது வேகமாக பயணித்த கார்கள் மோதியதில் உயிரிழந்தார் .

அன்னாரின் இறுதி நிகழ்வில் தமது வணக்கங்களை மக்கள் செலுத்திய வண்ணம் உள்ள காட்சிகள் இவை .

குடும்பத்தாரின் ஆறா துயரில் நாமும் பங்கெடுத்து கொள்கிறோம்

CLICK HERE VIDEO

தளபதி மல்லியின் சகோதரர் இறுதி நிகழ்வு நேரலை லண்டன்
தளபதி மல்லியின் சகோதரர் இறுதி நிகழ்வு நேரலை லண்டன்
அதிகாரியை கட்டி வைத்து தீ வைப்பு
Posted in இலங்கை செய்திகள்

அதிகாரியை கட்டி வைத்து தீ வைப்பு

அதிகாரியை கட்டி வைத்து தீ வைப்பு

அதிகாரியை கட்டி வைத்து தீ வைப்பு ,தோட்டத்தில் ஒரு கள அதிகாரி தாக்கி, நாற்காலியில் கட்டிவைத்து, எரியக்கூடிய பொருட்களால் ஊற்றி தீ வைக்கப்பட்டதாகவும், இதனால் அந்த அதிகாரிக்கு பலத்த காயங்கள்

ஏற்பட்டதாகவும் தெரிவித்த பொலிஸார், இந்த சம்பவம், நாகொட, மாபலகம, குடமலானவில் இடம்பெற்றுள்ளது என்றும் தெரிவித்தனர்.

மாபலகா சென்ட்ரலில் உள்ள குடமலானா தேயிலை தொழிற்சாலையில் உள்ள பழைய பங்களாவின் அறையில் இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கள அதிகாரியின் அலறல் சத்தம் கேட்டு, தோட்டத்தில் வேலை செய்தவர்கள் அவரை மீட்டு, தீயை அணைத்து உடனடியாக எல்பிட்டிய மருத்துவமனையில் அனுமதித்தனர். தீ விபத்தில் அந்த நபரின் உடல், தலை மற்றும் முகம் எரிந்து போயுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தீ வைத்த நபரைக் கண்டுபிடிக்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வியாழேந்திரன் கைது பட்டாசு கொளுத்திய இளைஞர்கள்
Posted in இலங்கை செய்திகள்

வியாழேந்திரன் கைது பட்டாசு கொளுத்திய இளைஞர்கள்

வியாழேந்திரன் கைது பட்டாசு கொளுத்திய இளைஞர்கள்

வியாழேந்திரன் கைது பட்டாசு கொளுத்திய இளைஞர்கள் ,முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கைது செய்யப்பட்ட நிலையில், இளைஞர்கள் சிலர் பட்டாசு கொளுத்தி கொண்டாடியுள்ளனர்.

மட்டக்களப்பு நகர் மணிக்கூட்டு கோபுரத்து வீதி சுற்றுவட்டத்தில் நேற்று இரவு பட்டாசு கொளுத்தி கொண்டாடினர்.

மணல் அகழ்வு உரிமம் வழங்குவதற்காக 1.5 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை

புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் எஸ்.வியாழேந்திரன் நேற்று கைது செய்யப்பட்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராணுவத் தளபதிகள் மீதான தடை அரசாங்கம் பரிசீலனை
Posted in இலங்கை செய்திகள்

இராணுவத் தளபதிகள் மீதான தடை அரசாங்கம் பரிசீலனை

இராணுவத் தளபதிகள் மீதான தடை அரசாங்கம் பரிசீலனை

இராணுவத் தளபதிகள் மீதான தடை அரசாங்கம் பரிசீலனை ,இலங்கையின் மூன்று இராணுவத் தளபதிகளும், ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளின் கிழக்கில் இராணுவப் பிரிவின் தலைவராக இருந்த விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மான்

மீதும் தடைகளை விதிக்க பிரித்தானிய அரசாங்கம் எடுத்த முடிவுக்கு இலங்கை தனது பதிலை பரிசீலித்து வருவதாக டெய்லி மிரர் செய்திக்கு தெரியவந்துள்ளது. இவர்கள் பயங்கரவாத அமைப்பிலிருந்து விலகி அப்போதைய அரசாங்கத்துடன் கைகோர்த்தனர்.

முன்னாள் இராணுவத் தளபதிகள் சவேந்திர சில்வா, ஜகத் ஜெயசூர்யா மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகோடா ஆகியோர் அந்த மூன்று இராணுவத் தலைவர்களாவர்.

இலங்கை உள்நாட்டுப் போரின் போது, சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், சித்திரவதை மற்றும்/அல்லது பாலியல் வன்முறை உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் மீறல்களுக்கு அவர்கள் பொறுப்பேற்றதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பயணத் தடைகள் மற்றும் சொத்து முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள், உள்நாட்டுப் போரின் போது சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் போன்ற பல்வேறு மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குப் பொறுப்பான நபர்களை குறிவைக்கின்றன.

வெளியுறவு, கொமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலாளர் டேவிட் லாம்மி கூறுகையில், “இலங்கையில் மனித உரிமைகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

உள்நாட்டுப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குப் பொறுப்புக்கூறலைக் கோருவது உட்பட, அவை இன்று சமூகங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

பொறுப்பானவர்கள் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்வதற்கு தேர்தல் பிரசாரத்தின் போது, நான் உறுதியளித்தேன். கடந்த கால மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குப் பொறுப்பானவர்கள் பொறுப்புக்கூறப்படுவதை இந்த முடிவு உறுதி செய்கிறது.

இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்த புதிய இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற பிரித்தானிய அரசாங்கம் எதிர்நோக்குகிறது, மேலும் தேசிய ஒற்றுமைக்கான அவர்களின் உறுதிமொழிகளை வரவேற்கிறது.

ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, இந்தோ-பசிபிக் அமைச்சர் கேத்தரின் வெஸ்ட் எம்.பி., பிரதமர், வெளியுறவு அமைச்சர், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கில் உள்ள அரசியல் தலைவர்களுடன் மனித உரிமைகள் குறித்து ஆக்கபூர்வமான விவாதங்களை நடத்தினார்,”

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) ஏற்றுக்கொண்ட இலங்கை மீதான தீர்மானத்தை முன்மொழிந்த நாடுகளின் முக்கிய குழுவில் பிரித்தானிய தலைமை தாங்குகிறது. இந்தக் குழுவில் உள்ள மற்ற நாடுகள் கனடா, மலாவி, மாண்டினீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா.

இலங்கை அரசாங்கம் செவ்வ்வாய்கிழமை (25) பிரித்தானிய அரசாங்கத்திற்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.

தேசிய நல்லிணக்கம் குறித்த அதன் கொள்கையுடன் அதை இணைக்க அரசாங்கம் அதன் அதிகாரப்பூர்வ பதிலின் உரையை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தித்தாளுக்குத் தெரியவந்துள்ளது.

ஜெனரல் சில்வா மீதான பிரித்தானிய அரசாங்கத்தின் தடைகள், 2020ஆம் ஆண்டில் அமெரிக்க வெளியுறவுத்துறை அவருக்கு எதிராக இதேபோன்ற நடவடிக்கையைத் தொடர்ந்து வந்தன.

2023ஆம் ஆண்டில், கனடா இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்தா மற்றும் கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோருக்கு அனுமதி அளித்தது. இரண்டு ராஜபக்‌ஷ சகோதரர்களும் இராணுவத்தை வழிநடத்தினர்.

பிரித்தானிய அரசாங்கத்தின் சமீபத்திய நடவடிக்கை இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து வருகிறது.

இலங்கை இராணுவம் மற்றும் அரசியல் தலைவர்கள் தடை செய்யப்பட்ட முந்தைய சந்தர்ப்பங்களில், அப்போதைய அரசாங்கங்கள் இராஜதந்திர வழிகள் மூலம் மறுப்புகளை வெளியிடுவதில் விரைவாக இருந்தன.

கடவுச்சீட்டை மறந்த விமானி: மீண்டும் தரையிறங்கிய விமானம்
Posted in உலக செய்திகள்

கடவுச்சீட்டை மறந்த விமானி: மீண்டும் தரையிறங்கிய விமானம்

கடவுச்சீட்டை மறந்த விமானி: மீண்டும் தரையிறங்கிய விமானம்

கடவுச்சீட்டை மறந்த விமானி: மீண்டும் தரையிறங்கிய விமானம் ,அமெரிக்காவில் இருந்து சீனாவிற்கு கிளம்பிய விமானம் நடுவானில் பறந்த போது, கடவுச்சீட்டை கொண்டு வருவதை மறந்தது விமானிக்கு நினைவுக்கு வந்தது. இதனையடுத்து அந்த விமானம் மீண்டும் அமெரிக்காவிலேயே தரையிறக்கப்பட்டது.

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 257 பயணிகளுடன் யுனைட்டைட் ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் சீனாவின் ஷாங்காய் நகருக்கு கடந்த 22ம் திகதி கிளம்பியது.

விமானம் கிளம்பி இரண்டு மணி நேரம் கடந்த நிலையில், பாஸ்போர்ட் கொண்டு வராததை விமானி உணர்ந்தார். இது குறித்து அவர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அந்த விமானம் மீண்டும் யுடர்ன் எடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தரையிறக்கப்பட்டது.

இதனையடுத்து மாற்று விமானம் மூலம் பயணிகள் ஷாங்காய் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த விமான போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

யாழ்.பேரணியை தடுத்ததால் பதற்றம்
Posted in இலங்கை செய்திகள்

யாழ்.பேரணியை தடுத்ததால் பதற்றம்

யாழ்.பேரணியை தடுத்ததால் பதற்றம்

யாழ்.பேரணியை தடுத்ததால் பதற்றம் ,யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களால் தற்போது பேரணி முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பேரணியை இடைமறித்த பொலிஸார்

பேரணியை நடத்த வேண்டாம் என வலியுறுத்திய நிலையில் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இருந்து ஆரம்பித்த பேரணியை பொலிஸார் தடுத்த போதும் போராட்டக்காரர்கள் முன்னோக்கி சென்றுள்ள நிலையில் தற்போது இடை மறுக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள் நடத்துவதற்கு தேர்தல் சட்டத்தின் படி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் தற்போது பல்கலைக்கழக மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த பேரணிக்கு நீதிமன்றம் ஊடாக தடை உத்தரவு பெறும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் என அறியப்படுகிறது.

நீண்ட கால வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வு கோரி குறித்த பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தோட்டாவுடன் சிப்பாய் கைது
Posted in இலங்கை செய்திகள்

தோட்டாவுடன் சிப்பாய் கைது

தோட்டாவுடன் சிப்பாய் கைது

தோட்டாவுடன் சிப்பாய் கைது ,தனது பையில் துப்பாக்கி தோட்டாவை மறைத்து வைத்துக் கொண்டு ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைய முயன்ற இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இராணுவ சிப்பாய் , சமிக்ஞை படையணியில் இணைக்கப்பட்ட ஒரு சிப்பாய் என பொலிஸார் கூறுகின்றனர்.

சந்தேக நபரான சிப்பாய், ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றுகின்ற நிலையில் கடந்த 20 ஆம் திகதி, அவர் விடுமுறை பெற்று லுனுகம்வெஹெரவில் உள்ள தனது இல்லத்திற்கு சென்று திரும்பி வந்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் பொது நுழைவாயிலுக்கு அருகில் வைத்து ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளால் குறித்த சிப்பாயின் பையை ஸ்கேனர் பயன்படுத்தி சோதனையிட்ட போது பையில் T-56 துப்பாக்கி தோட்டா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் தடை இன்று விளக்கம்
Posted in இலங்கை செய்திகள்

பிரிட்டனின் தடை இன்று விளக்கம்

பிரிட்டனின் தடை இன்று விளக்கம்

பிரிட்டனின் தடை இன்று விளக்கம் ,இலங்கையின்முன்னாள் மூன்று தளபதிகள் உட்பட நான்கு நபர்கள் மீது தடைகளை விதிக்க பிரிட்டன் எடுத்த முடிவு குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளியுறவு அமைச்சு

அறிவிக்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

, முன்னாள் இராணுவத் தளபதிகள் சவேந்திர சில்வா மற்றும் ஜகத் ஜெயசூர்யா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் கருணா

அம்மான் என்றும் அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகிய நான்கு நபர்கள் மீது பிரிட்டன், திங்கட்கிழமை (24) தடைகளை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

பெண்களிடம் அடி வாங்கிய அர்ச்சுனா | சிறுமி கட்டி வைத்து தாக்குதல்
Posted in விசேட செய்திகள்

பெண்களிடம் அடி வாங்கிய அர்ச்சுனா | சிறுமி கட்டி வைத்து தாக்குதல்

பெண்களிடம் அடி வாங்கிய அர்ச்சுனா | சிறுமி கட்டி வைத்து தாக்குதல்

பெண்களிடம் அடி வாங்கிய அர்ச்சுனா | சிறுமி கட்டி வைத்து தாக்குதல்

இதில் அழுத்தி காணொளி பார்க்க

இஸ்ரேல் தாக்குதல் 62 மக்கள் பலி 296 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதல் 62 மக்கள் பலி 296 பேர் காயம்

இஸ்ரேல் தாக்குதல் 62 மக்கள் பலி 296 பேர் காயம்

இஸ்ரேல் தாக்குதல் 62 மக்கள் பலி 296 பேர் காயம் அடைந்துள்ளதாக பலஸ்தீன சுகாதர அமைச்சகம் அறிவித்துள்ளது .

ஒன்றைரை வருடங்கள் கழிந்து தொடரும் இந்த யுத்தத்தில் ,மிக பெரும் இழப்பை பலஸ்த்தீனம் சந்தித்துள்ளது .

கடந்த 24 மணித்தியால தாக்குதலில் உயிரிழப்பு அதிகரித்து காணப்படுகிறது .

உணவு மருந்து பொருட்கள் இன்றி தவிக்கும் மக்கள் மேலதிக சிகிச்சை பெற முடியாது இறந்து போகும் நிலை காண படுகிறது .

இஸ்ரேல் புரிந்து வரும் மனித படுகொலையை தடுக்க முடியாது உலகம் மவுனம் காத்து வருவதே உலக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

அமெரிக்கா விமான கப்பலை துரத்தி தாக்கிய ஹவுதி |வெடித்து சிதறிய ஆயுத களஞ்சியம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா விமான கப்பலை துரத்தி தாக்கிய ஹவுதி |வெடித்து சிதறிய ஆயுத களஞ்சியம்

அமெரிக்கா விமான கப்பலை துரத்தி தாக்கிய ஹவுதி |வெடித்து சிதறிய ஆயுத களஞ்சியம்

அமெரிக்கா விமான கப்பலை துரத்தி தாக்கிய ஹவுதி |வெடித்து சிதறிய ஆயுத களஞ்சியம்.

முழுமையான செய்திகள் பார்க்க காணொளியை அழுத்துங்கள்

இதில் அழுத்தி காணொளி பார்க்க

அமெரிக்காவுக்கு அடிகொடுத்த ஈரான்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு அடிகொடுத்த ஈரான்

அமெரிக்காவுக்கு அடிகொடுத்த ஈரான்

அமெரிக்காவுக்கு அடிகொடுத்த ஈரான் நாட்டின் தலைவர் செயல் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .

ஈரானை மிரட்டும் வகையில் அமெரிக்கா ஜனாதிபதியின் கடிதம் காணப்பட்டு இருந்தது .

ஆனால் உங்களினால் என்ன முடியுமோ அதனை செய்து பாருங்கள் என ஈரான் பதிலடியை கொடுத்து விட்டு பதுங்கியுள்ளது .

இந்த கடித்தல் ஹமாஸ் சிறை பிடித்த அமெரிக்கர்கள் விடுதலை தொடர்பாக எழுதப்பட்டு கோரல் விடுக்க பட்டு இருக்கலாம் என்பதாக கருத படுவதுடன் ,ஈரான் அணு உலைகளை தாக்கி அழிப்போம் என்கின்ற மிரட்டல் டிரம்பினால் விடுக்க பட்டுள்ளது .

இதனால் தற்போது ஈரான் அமெரிக்கா முறுகல் உச்சமடைந்துள்ளது .எவ்வேளையும் மிக பெரும் போர் இஸ்ரேல் ஈரானுக்கு வெடிக்கலாம் என்பதாக மத்திய கிழக்கு சிக்னல் கண்ணப்பிக்கிறது .

குற்றங்களை தடுக்க 5000 சிறப்பு இராணுவம் களமிறக்கம்
Posted in இலங்கை செய்திகள்

குற்றங்களை தடுக்க 5000 சிறப்பு இராணுவம் களமிறக்கம்

குற்றங்களை தடுக்க 5000 சிறப்பு இராணுவம் களமிறக்கம்

குற்றங்களை தடுக்க 5000 சிறப்பு இராணுவம் களமிறக்கும் நடவடிக்கையில் இலங்கை இராணுவம் ஈடுபட்டுள்ளது .

இலங்கையில் பரவலாக துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் தென் மாகாணத்தில் இந்த இராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த படவுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

புதிதாக இராணுவத்தில் சேர்க்க பட்ட இராணுவ சிப்பாய்கள் இந்த சிறப்பு படையில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

யாழில் சிறுமியை கட்டி வைத்து கொடூரம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் சிறுமியை கட்டி வைத்து கொடூரம்

யாழில் சிறுமியை கட்டி வைத்து கொடூரம்

யாழில் சிறுமியை கட்டி வைத்து கொடூரம் ,வடமராட்சி கிழக்கு, குடத்தனை பொற்பதியில் 14 வயது சிறுமி ஒருவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பாக, தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு

பருத்தித்துறை சட்ட வைத்திய அதிகாரி, மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

குறித்த பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி ஒருவர், நேற்று முன்தினம் (23) மாலை, அயலில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார்.

இதன்போது, இனிப்பு வகையை கையாடியதாகக் கூறி, கடையின் உரிமையாளரான ஒரு பெண், சிறுமியை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் உடல் காயங்களுக்கு உள்ளான சிறுமி, அன்று இரவே பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை சட்ட வைத்திய அதிகாரி, சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதைக் கண்டறிந்து, தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, வைத்தியசாலையில் உள்ள பருத்தித்துறை பொலிஸார் மூலம் மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மருதங்கேணி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றபோது, அவர் மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு தாக்கப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தாக்கியதாகக் கூறப்படும் பெண்ணின் வீட்டிற்கு பொலிஸார் சென்றபோது, வீடு பூட்டியிருந்ததால், தொலைபேசி மூலம் அவருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த பொது அமைப்பு ஒன்று, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் தொலைபேசி வழியாக முறையிட்டுள்ளது

சுயேச்சைக் குழுக்களாலும் தாக்கல் செய்யப்பட்ட கணிசமான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக தேர்தல் வழக்குகளுக்கு இவ்வாரத்தில் தீர்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

சுயேச்சைக் குழுக்களாலும் தாக்கல் செய்யப்பட்ட கணிசமான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக தேர்தல் வழக்குகளுக்கு இவ்வாரத்தில் தீர்ப்பு

சுயேச்சைக் குழுக்களாலும் தாக்கல் செய்யப்பட்ட கணிசமான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக தேர்தல் வழக்குகளுக்கு இவ்வாரத்தில் தீர்ப்பு

சுயேச்சைக் குழுக்களாலும் தாக்கல் செய்யப்பட்ட கணிசமான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக தேர்தல் வழக்குகளுக்கு இவ்வாரத்தில் தீர்ப்பு ,எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக பல சபைகளுக்கு அரசியல் கட்சிகளாலும் ,சுயேச்சைக் குழுக்களாலும் தாக்கல்

செய்யப்பட்ட கணிசமான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக தாக்கல் செய்யப்படும் வழக்குகளை இந்த வாரத்திலேயே விசாரித்து தீர்ப்பு வழங்கும் சாத்தியம் இருப்பதாக ,அவ்வாறான சில வழக்குகளில் உயர் நீதிமன்றத்தில் வாதங்களை

முன்வைக்க உள்ளவர்களில் ஒருவரான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .

அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி திருத்தச் சட்ட மூலத்தில் உள்ள ஏற்பாடுகளுக்கு அமைய எழுந்துள்ள சில சட்டப் சிக்கல்கள் தொடர்பிலேயே பல கட்சிகளாலும், சுயேட்சை குழுக்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் இம்முறை நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ,ஐக்கிய தேசிய கூட்டமைப்பு(United National Alliance) , தமிழரசுக் கட்சி ,தமிழீழ விடுதலை அமைப்பு(TELO) போன்றவை உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) மனுக்களை தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் கட்சியின் செயலாளர்,பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் மனுதாரராகவும் ,அவ்வாறே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் ஐக்கிய தேசியக்

கூட்டமைப்புக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் அடிப்படையில் அக் கட்சிகள் சேர்ந்து போட்டியிடவுள்ள சில சபைகளுக்கான நிராகரிக்கப்பட்டுள்ள வேட்பு மனுக்களை பொறுத்தவரை பிரஸ்தாப கூட்டமைப்பின் செயலாளர் எம்.

நயீமுல்லாஹ் மனுதாரராகவும் இருக்கின்ற நிலையில் அவற்றுக்காகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் உயர் நீதிமன்றத்தில் வாதாட உள்ளார்.

காதலியை கடத்திய காதலன் கைது
Posted in இலங்கை செய்திகள்

காதலியை கடத்திய காதலன் கைது

காதலியை கடத்திய காதலன் கைது

காதலியை கடத்திய காதலன் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

இலங்கை மொனராகலை காவல்துறை பிரிவில் வசிக்கும் 14 வயது காதலியை 33 வயது காதலன் கடத்தி சென்ற பொழுதே கைது செய்யப்பட்டுள்ளார் .

காதலியுடன் காதலன் ஒன்றாக தங்கி வாசித்த நிலையை அடுத்து தற்போது காதலி தற்போது மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளார் .

சிறுமியை கடத்தினார் என்கின்ற குற்ற சட்டத்தில் இவர் மீது வழக்கு பைஅத்துள்ளது குறிப்பிட தக்கது .

கனடாவுக்கு செல்ல முயன்ற 11பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

கனடாவுக்கு செல்ல முயன்ற 11பேர் கைது

கனடாவுக்கு செல்ல முயன்ற 11பேர் கைது

கனடாவுக்கு செல்ல முயன்ற 11பேர் கைது செய்ய பட்டுள்ளதாக கட்டுநாயக்க போலீசார் தெரிவித்துள்ளார் .

சட்டவிரோத முகவர் ஊடாக இவர்கள் கனடா செல்வதற்கு அழைத்து வரப்பட்ட பொழுது கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகழ்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இவர்கள் முதல் துபாய்க்கு புறப்படும் விமானம் மூலம் பயணம் செய்யவிருந்த பொழுது கைது செய்யப்பட்டுள்ளனர் .கைதானவர்கள் தீவிர விசாரணைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர் .

தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Posted in இலங்கை செய்திகள்

தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ,நோர்வூட் பிரதேச செயலகத்தால் நிர்வகிக்கப்படும் மஸ்கெலியா, பிரவுன்லோ கிராம அலுவலர் பிரிவுக்கு (320 N) புதிய கிராம அலுவலரை நியமிக்க கோரி, பிரவுன்லோ தேயிலைத்

தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் , செவ்வாய்க்கிழமை (25) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது, ​​பிரவுன்லோ கிராம அலுவலர் பிரிவின் பதில் கிராம அலுவலராக பணிப்புரிவது மஸ்கெலியா பிரிவின் கிராம அலுவலர் என தெரிவிக்கப்படுகிறது.

மஸ்கெலியா கிராம அலுவலர் பிரிவில் சுமார் 5000 மக்கள் தொகையும், பிரவுன்லோ பிரிவில் சுமார் 7000 மக்கள் தொகையும் உள்ளதாகவும்,

இந்த இரண்டு பிரிவுகளிலும் உள்ள சுமார் 3400 குடும்பங்களுக்கு ஒரு கிராம அலுவலர் பணியமர்த்தப்படுவது நியாயமானதல்ல என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

வாரத்தில் ஒரு நாள் மட்டுமே பதில் கிராம அலுவலர் , அலுவலகத்தில் பணிபுரிவதாக சுட்டிக்காட்டும் ஆர்பாட்டகாரர்கள் , சுமார் 3 வருடங்களாக நீடிக்கும் இந்தப் பிரச்சினை குறித்து நோர்வூட் பிரதேச செயலக

அதிகாரிகளுக்கு வாய்மொழியாக மற்றும் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளதாகவும், இதுவரை பிரவுன்லோ பிரிவுக்கு நிரந்தர கிராம

அலுவலர் ஒருவரை வழங்காததால், தோட்டத் தொழிலாளர்கள் உட்பட ஏராளமானோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட கிட்டத்தட்ட 100 பேர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.