வித்தியா கொலையாளிகளை காப்பற்றியவர் சைக்கிள் கட்சியுடன் |அருச்சுனா அதரவு
Posted in விசேட செய்திகள்

வித்தியா கொலையாளிகளை காப்பற்றியவர் சைக்கிள் கட்சியுடன் |அருச்சுனா அதரவு

வித்தியா கொலையாளிகளை காப்பற்றியவர் சைக்கிள் கட்சியுடன் |அருச்சுனா அதரவு

வித்தியா கொலையாளிகளை காப்பற்றியவர் சைக்கிள் கட்சியுடன் |அருச்சுனா அதரவு வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளார் .

இந்த விடயம் திட்டமிடப்பட்ட நிலையில் நடத்த படும் நாடகம் என்பதாகவே பார்க்க படுகிறது .

காணொளியில் முழுமையான விபாரங்கள் .

இதில் அழுத்தி காணொளிகளை பார்க்க

சின்வார் இறப்பு வெளியான காட்சிகள்
Posted in உலக செய்திகள்

சின்வார் இறப்பு வெளியான காட்சிகள்

சின்வார் இறப்பு வெளியான காட்சிகள்

சின்வார் இறப்பு வெளியான காட்சிகள் தற்போது இஸ்ரேல் இராணுவம் வெளியிட பட்டுள்ளது .

தாக்குதலை நடத்திய பின்னர் அவர் இறந்து விட்டார் என்பதை உறுதி படுத்திய காட்சிகளை தற்போது வெளியிட்டுள்ளது .

இவர்கள் தங்கி இருந்த வீட்டு கமராக்களை கைக்கிங் செய்து அதன் பின்னர் தாக்குதலை நடத்தியதாக தெரிகிறது .

அதனால் தான் இஸ்ரேல் இராணுவம் தமது தாக்குதல்களை மிக கன கட்சிதமாக நடத்தியுள்ளது என்பதை இந்த விடயம் எடுத்து காட்டுகிறது .

சிரியாவில் பெரும் தாக்குதல் எரியும் கட்டடம்
Posted in உலக செய்திகள்

சிரியாவில் பெரும் தாக்குதல் எரியும் கட்டடம்

சிரியாவில் பெரும் தாக்குதல் எரியும் கட்டடம்

சிரியாவில் பெரும் தாக்குதல் எரியும் கட்டடம்,சரியா தலைநகர் டமாக்கஸ் அருகில் மிக பெரும் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றதில் மாடி கட்டடங்கள் பற்றி எரிகின்றன .

இஸ்ரேல் இராணுவம் தொடராக சிரியா மீது வலிந்து தாக்குதல்கள் மேற்கொண்ட வண்ணம் உள்ளது .

ஈரான் மிக முக்கிய இராணுவ ஆயுத கூடங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

எனினும் முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை .

துருக்கியில் 1100 போராட்டக்காரர்கள் கைது
Posted in உலக செய்திகள்

துருக்கியில் 1100 போராட்டக்காரர்கள் கைது

துருக்கியில் 1100 போராட்டக்காரர்கள் கைது

துருக்கியில் 1,100 போராட்டக்காரர்கள், பல பத்திரிகையாளர்கள் கைது ,தெஹ்ரான், மார்ச் 24 (MNA) – ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனின் முக்கிய போட்டியாளர் கைது செய்யப்பட்டதிலிருந்து, பல ஆண்டுகளில்

துருக்கியின் மிக மோசமான அமைதியின்மையைத் தூண்டியதில் இருந்து, பத்திரிகையாளர்கள் உட்பட 1,100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

கடந்த வாரம் எக்ரெம் இமாமோக்லு கைது செய்யப்பட்ட பின்னர் இஸ்தான்புல்லில் தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள், பின்னர் துருக்கியின் 81

மாகாணங்களில் 55க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு பரவி, கலகத் தடுப்பு போலீசாருடன் மோதல்களைத் தூண்டி சர்வதேச கண்டனத்தைப் பெற்றதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.

துருக்கியின் நீண்டகாலத் தலைவர் எர்டோகனை வாக்குப் பெட்டியில் தோற்கடிக்கக்கூடிய ஒரே அரசியல்வாதியாக 53 வயதான பிரபலமானவர் பரவலாகக் காணப்படுகிறார்.

நான்கு நாட்களுக்குள், பல தசாப்தங்களுக்கு முன்னர் எர்டோகனின் அரசியல் எழுச்சியைத் தொடங்கிய பதவியான இஸ்தான்புல்லின் மேயராக இருந்து,

ஊழல் மற்றும் பயங்கரவாத விசாரணையின் விளைவாக கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, மேயர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமை, 2028 ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரதான எதிர்க்கட்சியான CHP இன் வேட்பாளராக அவர் பெருமளவில்

வாக்களிக்கப்பட்டார், கட்சியின் 1.7 மில்லியன் உறுப்பினர்களுக்கு அப்பால் திறந்த வாக்குச்சீட்டுடன் – 15 மில்லியன் வாக்குகளை ஈர்த்தது.

திங்கட்கிழமை அதிகாலை, “போராட்டங்களைச் செய்தி வெளியிட்டதற்காக” AFP புகைப்படக் கலைஞர் உட்பட 10 துருக்கிய பத்திரிகையாளர்களை போலீசார் வீட்டில் கைது செய்தனர், MLSA உரிமைகள் குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவர்களில் பெரும்பாலோர் ஞாயிற்றுக்கிழமை தாமதமாக பல்லாயிரக்கணக்கானோர் திரண்ட நகர மண்டபத்திற்கு வெளியே நடந்த

வெகுஜன ஆர்ப்பாட்டங்களை செய்தி வெளியிட்டதாகக் கூறியது, இந்த நடவடிக்கையை இமாமோக்லுவின் மனைவி கண்டித்துள்ளார்.

“பத்திரிகை உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு என்ன செய்யப்படுகிறது என்பது சுதந்திரத்தின் விஷயம். இதைப் பற்றி நம்மில்

யாரும் அமைதியாக இருக்க முடியாது” என்று திலேக் கயா இமாமோக்லு X இல் எழுதினார்.

ஈரான் இராணுவம் தயார் நிலையில் போர்வெடிக்கும் அபாயம்
Posted in உலக செய்திகள்

ஈரான் இராணுவம் தயார் நிலையில் போர்வெடிக்கும் அபாயம்

ஈரான் இராணுவம் தயார் நிலையில் போர்வெடிக்கும் அபாயம்

ஈரான் இராணுவம் தயார் நிலையில் போர்வெடிக்கும் அபாயம் உள்ளதை ஈரான் இராணுவ உயர் அதிகாரிகள் படை முகாம்களுக்கு சென்று நடத்திய சந்திப்பின் மூலம் தெரிகிறது .

இஸ்ரேல் இராணுவம் வலிந்து மீளவும் பலஸ்த்தீனம் காசா மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

இதனை அடுத்தே ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் என்பன இணைந்து மிக பெரும் தாக்குதல்களை நடத்த திட்டம் இட்டுள்ளன .

இதனை அடுத்தே தற்போது ஈரான் இராணுவத்தின் முப்படைகளும் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளனர் .

எவ்வேளையும் ஈரானை இஸ்ரேல் தாக்கலாம் எனவும் ,அவ்வேளை மிக பெரும் போராக இது வெடிக்கும் அபாயம் உள்ளதாக மத்திய கிழக்கு செய்திகள் தெரிவிக்கின்றன .

சவேந்திர சில்வா உட்பட்ட யுத்தகுற்றவாளிகள் மீது பிரித்தானியா தடை விதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சவேந்திர சில்வா உட்பட்ட யுத்தகுற்றவாளிகள் மீது பிரித்தானியா தடை விதிப்பு

சவேந்திர சில்வா உட்பட்ட யுத்தகுற்றவாளிகள் மீது பிரித்தானியா தடை விதிப்பு

சவேந்திர சில்வா உட்பட்ட யுத்தகுற்றவாளிகள் மீது பிரித்தானியா தடை விதிப்பு ,-பிரித்தானியா் வாழ் தமிழ் இளையோரின் 3 வருட தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி-

இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் யுத்த குற்றவாளியுமாகிய ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை தளபதி வசந்த கர்ணங்கொட, இரணுவ தளபதி ஜெகத்

ஜயசூரிய மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோர் மீது பிரித்தானியா இன்று (24 மார்ச் 2025) தடை விதித்துத்துள்ளது.

2020 இல் நடைமுறைக்கு வந்த உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் (Global Human Rights Sanction Regime) கீழ், இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்ட இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்த

குற்றவாளிகளை பிரித்தானிய அரசு, தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி பிரித்தானியாவிலுள்ள இனப்படுகொலையை தடுப்பதற்கும்

தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் (ICPPG) பல வழிகளில் தொடர் போராட்டங்களை மேற்கொண்டுவந்தது யாவரும் அறிந்ததே.

ஏப்பிரல் 2021 இல் ITJP என்ற மனித உரிமைகள் அமைப்பு சவேந்திர சிலவாவுக்கு எதிராக 50 பக்க ஆவணந்தை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்கு (FCDO)

சமர்ப்பித்திருந்தது. அதுபோலவே ICPPGயும் தொடரும் சித்திரவதை பற்றிய ஆதாரங்கள் அடங்கிய அறிக்கைகளை சமர்ப்பித்து, இலங்கை அதிகாரிகளை தடைசெய்யும் படி கோரிக்கை விடுத்தது.

அதனை தொடர்ந்து, ICPPG அனைத்து தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள், அனைத்து மனித உரிமை அமைப்புக்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சித்திரவரையால்

பாதிக்கப்பட்டவரகள் மற்றும் இரண்டாம் தலைமுறை இளையோரை ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை பலவழிகளில் முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில் பிரித்தானியா வாழ் இளையோர் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளதுடன், இணைய வழி கையெழுத்து போராட்டம் ஒன்றையும் ஆரம்பித்தனர். அவர்களின் முயற்சியில் 18 மே 2021 அன்று பிரித்தானிய

பாராளுமன்றில் ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான மக்லோக்லின் ஆன் அவர்களின் மூலம் முன்பிரேரணை (EDM 64) ஒன்று கொண்டுவரப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து பிரித்தானிய பாராளுமன்ற

உறுப்பினர்களையும் தொடர்பு கொண்டு, தொடர் சந்திப்புக்களை நடாத்தி இப்பிரேரணைக்கு 33 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கையெழுத்தும் பெறப்பட்டது.

கறுப்பு யூலை தினத்தை முன்னிட்டு 23 யூலை 2021 அன்று பிரித்தானிய பிரதமருக்கு ICPPG யால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவிற்கு பிரித்தானிய அரசின் வெளிவிவகார அமைச்சின் பதில் திருப்திகரமாக அமையவில்லை. இதனை தொடர்ந்து,

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆயிரக்கணக்கான கடிதங்களை அனுப்பிவைத்துள்ளதுடன், இதுவரை 100க்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து, சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியா தடை

செய்ய FCDO இற்கு அழுத்தம் கொடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். பல பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை வீடியோவில் தெரிவித்து ஒரு வீடியோ

ஆவணத்தையும் வெளியிட்டிருந்தனர். பிரித்தானிய பாராளுமன்றில் விவாதங்களையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

தற்போது ஆட்சியமைந்துள்ள பிரித்தானியாவின் தொழிலாளர் கட்சி கடந்த தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தடையை அறிவிப்பதாக வாக்குறுதி வழங்கியிருந்தது. ஆயினும் இதனை நடைமுறைப்படுத்த தாமதித்ததால், ICPPG இந்த

போராட்டத்தை தொடர்ந்து வந்ததுடன், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும்படியும் பிரித்தானிய அரசுக்கு கோரிக்கை விட்டிருந்தது. அத்துடன் ITJP, Redress, Sri Lanka Campaign,

Tamils For Labour மற்றும் British Tamil Conservatives ஆகிய அமைப்புக்களின் கடும் உழைப்பின் விளைவாக, இன்று பிரித்தானிய அரசு இலங்கை யுத்தகுற்றவாளிகளை தடைசெய்து, அதற்கான பட்டியலை அறிவித்துள்ளது.

இலங்கையில் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டு தப்பிவந்தவர்கள், சித்திரவதை அனுபவித்தவர்கள் மற்றும் பிரித்தானாய வாழ் இளையோரின் இடைவிடாத

போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியே இதுவாகும். இனப்படுகொலைக்கான நீதிப்போராட்டந்தில் இது ஒரு ஆரம்பபடியாக அமையும் என்று நம்பப்படுகிறது.

பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் ,தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்குப் பொறுப்பாக இருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் டி.எம்.யு.எம். திசாநாயக்க, விசேட பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்குப் பொறுப்பாக செயற்பட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.ஏ.ஜே. விஷாந்த, பிரதமரின் பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு, மேலதிகமாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவருக்கு பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கான பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இன்ஸ்டாகிராம் விருந்து 57 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

இன்ஸ்டாகிராம் விருந்து 57 பேர் கைது

இன்ஸ்டாகிராம் விருந்து 57 பேர் கைது

இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தை பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து நிகழ்வில் நடத்தப்பட்ட சோதனையில் 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பமுனுகம, உஸ்வெட்டகொய்யாவ பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சட்டவிரோத போதைப்பொருட்களைப் பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் விருந்து நடத்தப்படுவதாகக் கிடைத்த செய்தியைத் தொடர்ந்து, அங்கு பொலிஸாரால் சோதனை நடத்தப்பட்டது.

நேற்று (23) இரவு நடைபெற்ற இந்த விருந்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் ஐஸ் மற்றும் கஞ்சாவை பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது, ஐஸ் போதைப்பொருள் மற்றும் கேரள கஞ்சா வைத்திருந்ததற்காக 16 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், மேலும், அங்கு இருந்த 07 பெண் சந்தேக நபர்களையும் 34 ஆண் சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன், இந்த விருந்து நடைபெற்ற ஹோட்டலின் உரிமையாளர் 3 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் என்பதுடன், அவர்கள் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்துடன், சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அனுரவின் ஓய்வூதியம் நிறுத்தம்
Posted in இலங்கை செய்திகள்

அனுரவின் ஓய்வூதியம் நிறுத்தம்

அனுரவின் ஓய்வூதியம் நிறுத்தம்

அனுரவின் ஓய்வூதியம் நிறுத்தம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகப் பெற்று வந்த ஓய்வூதியம் அடுத்த மாதம் முதல் நிறுத்தப்படும் என்று பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து பாராளுமன்ற நிதி இயக்குநருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஒரு ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினராக ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்திருந்தால், அவர் பாராளுமன்ற ஓய்வூதியத்திற்கு உரிமையுடையவர், மேலும் அவர் ஓய்வு பெற்றவுடன், அவர் ஜனாதிபதி ஓய்வூதியத்திற்கும் உரிமையுடையவர்.

இந்த வழியில் இரண்டு ஓய்வூதியங்களை விரும்பவில்லை என்று அனுர குமார திசாநாயக்க கடந்த 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினராகப் பெறும் ஓய்வூதியப் பலன்களை நீக்குவதாக அனுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் அறிவிப்பதற்கு முன்பு, அவர் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கும் கடிதம் மூலம் தகவல் தெரிவித்திருந்தார்.

பாராளுமன்றச் செயலாளர் நாயகம் அந்தக் கடிதத்தை அதன் நிதி இயக்குநருக்கு அனுப்பியுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் சிறப்பு சுற்றறிக்கை வெளியீடு
Posted in இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் 06 முறைப்பாடுகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் 06 முறைப்பாடுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய 06 முறைப்பாடுகள், ஞாயிற்றுக்கிழமை தமக்கு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் விதிகளை மீறியது தொடர்பில் இந்த முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அதில் தேர்தல் வன்முறை தொடர்பான எந்த முறைப்பாடும் பதிவாகவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.

மாத்தளையில் மூன்று முறைப்பாடுகளும் கெபிதிகொல்லாவ,மொனராகலை மற்றும் பொலன்னறுவையில் இருந்து மூன்று முறைப்பாடுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் 2025 மே 06 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகிந்த மகன் யோஷித ராஜபக்‌ஷ தப்பினார்
Posted in இலங்கை செய்திகள்

மகிந்த மகன் யோஷித ராஜபக்‌ஷ தப்பினார்

மகிந்த மகன் யோஷித ராஜபக்‌ஷ தப்பினார்

மகிந்த மகன் யோஷித ராஜபக்‌ஷ தப்பினார் ,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மகன் யோஷித ராஜபக்‌ஷ, வார இறுதியில் கொழும்பு பார்க் தெருவில் உள்ள இரவு விடுதியில் நடந்த கைகலப்பில் ஈடுபடவில்லை என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெள்ளிக்கிழமை (21) இரவு விடுதிக்கு வெளியே யோஷித ராஜபக்‌ஷவுடன் வந்த ஒரு குழு மோதலில் ஈடுபட்டதை அடுத்து, கொம்பனித் தீவு பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கினர்.

இந்த வாக்குவாதம் சிசிரிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தின் போது கிளப்பைச் சேர்ந்த ஒரு பவுன்சர் காயமடைந்து தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

இரவு விடுதியில் தங்குவதற்கு அடையாள அட்டைகளை அணிவது கட்டாயம் என்று பாதுகாப்பு காவலர் தெரிவித்ததை அடுத்து, இரவு விடுதியின் பவுன்சர்களுக்கும் குழுவிற்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்த மோதல் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

குழு உறுப்பினர்களில் ஒருவருக்கு அத்தகைய பேட்ஜ் இல்லாததால், பாதுகாப்புக் காவலர் நடத்திய விசாரணையின் போது வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் ஏற்பட்டபோது யோஷித ராஜபக்‌ஷவும் அவரது மனைவியும் அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தனித்து போட்டி சஜித் விளக்கம்
Posted in இலங்கை செய்திகள்

தனித்து போட்டி சஜித் விளக்கம்

தனித்து போட்டி சஜித் விளக்கம்

தனித்து போட்டி சஜித் விளக்கம் ,ஐக்கிய மக்கள் சக்தி என்ற தமது கட்சி தனித்தே போட்டிபோயிடும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார் .

ஆடு தமது மகிந்தா ரணிலுடன் கூட்டணி இன்றி தனித்தே போட்டியிட்டு வெல்லும் என அவர் குறிப்பிட்டு எதிராளிகள் பரப்புரைக்கு ஆப்பு வைத்துள்ளார் .

சஜித் ரணில் இணைந்து போட்டியிடுவார் என எதிர் பார்க்க பட்ட நிலையில் இவ்விதம் அவர் தனது கருத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

வீழ்ந்து நொறுங்கிய விமானம் பலர் பலி
Posted in உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய விமானம் பலர் பலி

வீழ்ந்து நொறுங்கிய விமானம் பலர் பலி

வீழ்ந்து நொறுங்கிய விமானம் பலர் பலி ,சோமாலியாவின் மொகடிஷு அருகே நடந்த ஒரு துயர விபத்தில் கென்யாவில் பதிவு செய்யப்பட்ட சரக்கு விமானத்தில் இருந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

சரக்கு விமானம், லோயர் ஜூபா பிராந்தியத்தில் உள்ள டோப்லி நகரத்திலிருந்து ஆப்பிரிக்க யூனியன் படைகளுக்கு பொருட்களை வழங்கிய பிறகு, உள்ளூர் நேரப்படி மார்ச் 22 சனிக்கிழமை மாலை 5:43 மணியளவில் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோமாலிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (SCAA), ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில், மொகடிஷுவிலிருந்து தென்மேற்கே சுமார் 24 கி.மீ தொலைவில் விமான விபத்து நிகழ்ந்ததாக உறுதிப்படுத்தியது.

விபத்துக்குள்ளான விமானம் DHC-5D பஃபலோ ஆகும், இது சீரியல் எண் 109 மற்றும் 5Y-RBA பதிவு கொண்டது.

SCAA படி, இந்த விமானத்தை ட்ரைடென்ட் ஏவியேஷன் லிமிடெட் இயக்கியது.

“விமானத்தில் (POB) ஐந்து பேர் இருந்தனர், அவர்கள் அனைவரும் துயரமாக உயிரிழந்தனர். விமானம் டோப்லியில் (HCDB) இருந்து புறப்பட்டு ஏடன் அப்துல்லே சர்வதேச விமான நிலையத்திற்கு (HCMM) சென்று கொண்டிருந்தது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சோமாலிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் மேலும் கூறுகையில், அரசு நிறுவனங்கள், கூட்டாளிகளுடன் சேர்ந்து, தேடல் மற்றும் மீட்பு நோக்கங்களுக்காக ஏற்கனவே தளத்தில் உள்ளன.

சனிக்கிழமை ஆரம்ப அறிக்கைகள் விமானத்தில் 4 கென்ய நாட்டவர்கள் இருந்ததாகக் குறிப்பிடுகின்றன.

சரக்கு விமானம் சனிக்கிழமை தோப்லியில் இருந்தபோது இயந்திரக் கோளாறுகளை சந்தித்ததாகக் கூறப்படுகிறது, ஆனால் சோமாலிலாந்து தரநிலையின்படி அது சரி செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து பற்றிய கூடுதல் தகவல்கள் கிடைத்தவுடன் அது கிடைக்கும் என்றும், அரசாங்கத்துடன் இணைந்து விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய முழுமையான விசாரணை நடத்துவதாகவும் SCAA தெரிவித்துள்ளது.. .

இஸ்ரேல் தாக்குதல் 50.000 மக்கள் பலி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதல் 50.000 மக்கள் பலி

இஸ்ரேல் தாக்குதல் 50.000 மக்கள் பலி

இஸ்ரேல் தாக்குதல் 50.000 மக்கள் பலி யாகியுள்ளதாக பலஸ்தீன சுகாதாரா அமைச்சு அறிவித்துள்ளது .

கடந்த ஒருவாரத்தில் மட்டும் இஸ்ரேல் மீள் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது .

இந்த தாக்குதலின் விளைவாக 673 மக்கள் பலியாகியும் 1250 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .

இதுவரையான கால பகுதியில் ஐம்பதாயிரம் மக்கள் பலியாகியுள்ளனர் ,மேலும் ஒருலட்சம் வரையிலான மக்கள் படுகாயமடைந்துள்ளனர் .

மிக பெரும் பேரழிவை இஸ்ரேல் நடத்திட அதனை உலகம் தொடர்ந்து விழி மூடி பார்த்து கொண்டுள்ளது குறிப்பிட தக்கது.

பாகிஸ்தான் தாக்குதல் 12 எதிரிகள் பலி
Posted in உலக செய்திகள்

பாகிஸ்தான் தாக்குதல் 12 எதிரிகள் பலி

பாகிஸ்தான் தாக்குதல் 12 எதிரிகள் பலி

பாகிஸ்தான் தாக்குதல் 12 எதிரிகள் பலி என பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது .

ஆப்கானிஸ்தான் எல்லையோரமாக பாகிஸ்தானுக்குள் நுழைய முயன்ற எதிரிகளை
சுற்றிவளைத்து நடத்திய தாக்குதலில் 12 எதிரி படைகள் பலியாகியுள்ளதாக அறிவித்துள்ளது .

இதே பகுதியில் இரு நாட்டு படைகளுக்கு இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது.

இஸ்ரேல் விமானத்தை தளத்தை தாக்கிய ஹவுதி சிக்கிய அமெரிக்கா விமானம்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் விமானத்தை தளத்தை தாக்கிய ஹவுதி சிக்கிய அமெரிக்கா விமானம்

இஸ்ரேல் விமானத்தை தளத்தை தாக்கிய ஹவுதி சிக்கிய அமெரிக்கா விமானம்

இஸ்ரேல் விமானத்தை தளத்தை தாக்கிய ஹவுதி சிக்கிய அமெரிக்கா விமானம் என ஏமன் ஹவுதி அன்சர் அல்லா போர் புலிகள் அறிவித்துள்ளனர் .

இந்த Ben Gurion Airport தளத்தை முதன் முதலாக hypersonic missile லை பயன் படுத்தி தாக்கியுள்ளார்கள் .

பல அடுக்கு பாதுகாப்பு கொண்ட இந்த விமான தளத்தை ஏமன் அன்சார் அல்லா படைகள் நடத்திய சம்பவம் இஸ்ரேல் இராணுவம் மற்றும் அரசை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

காசா மீது மீளவும் இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்துள்ள நிலையில் தற்போது மீளவும் இஸ்ரேல் இராணுவத்தின் முக்கிய நிலைகளை இலக்கு வைத்து ஏமன் அன்சார் அல்லா படைகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

வாய் பேச முடியா தம்பதிகள் கண்ணீர் துடைத்த உறவுகள்
Posted in வன்னி மைந்தன் உதவி

வாய் பேச முடியா தம்பதிகள் கண்ணீர் துடைத்த உறவுகள்

வாய் பேச முடியா தம்பதிகள் கண்ணீர் துடைத்த உறவுகள்

வாய் பேச முடியா தம்பதிகள் கண்ணீர் துடைத்த உறவுகள் கண் கலங்கிய அக்கா மலசலகூடம் இன்றி தவித்த குடும்பம் ,தெரிவித்த கண்ணீர் கதை ,காணொளியை முழுமையாக பாருங்கள் மக்களே.

இந்த உறவுகளுக்கு 136.400 செலவில் வீடு புனரமைத்து வழங்க பட்டுள்ளது .இதற்கு சுவிஸ் ரதி அக்கா 100.00 ரூபாய்கள் மற்றும் ராஜன் அண்ணா 36400 ரூபாய்கள் வழங்கினார் அவர்களுக்கு இவ்வேளை எமது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்

FULL VIDEO CLICK HERE

கனடா அண்ணா செய்த செயல் |நன்றி சொல்ல வார்த்தை இல்லை
Posted in வன்னி மைந்தன் உதவி

கனடா அண்ணா செய்த செயல் |நன்றி சொல்ல வார்த்தை இல்லை

கனடா அண்ணா செய்த செயல் |நன்றி சொல்ல வார்த்தை இல்லை

கனடா அண்ணா செய்த செயல் |நன்றி சொல்ல வார்த்தை இல்லை,மலசலகூடம் இன்றி தவித்த குடும்பம் ,தெரிவித்த கண்ணீர் கதை ,காணொளியை முழுமையாக பாருங்கள் மக்களே

CLICK HERE FULL VIDEO

எட்டு வருடம் தவித்த மக்கள் |கண்ணீர் துடைத்த வெளிநாட்டு உறவுகள் |24 toilet
Posted in வன்னி மைந்தன் உதவி

எட்டு வருடம் தவித்த மக்கள் |கண்ணீர் துடைத்த வெளிநாட்டு உறவுகள் |24 toilet

எட்டு வருடம் தவித்த மக்கள் |கண்ணீர் துடைத்த வெளிநாட்டு உறவுகள் |24 toilet

எட்டு வருடம் தவித்த மக்கள் |கண்ணீர் துடைத்த வெளிநாட்டு உறவுகள் |24 toilet

எட்டு வருடம் தவித்த மக்கள் |கண்ணீர் துடைத்த வெளிநாட்டு உறவுகள் |24 toilet ,எட்டு வருடங்களாக மலசலகூடம் இன்றி தவித்த குடும்பம் ,தெரிவித்த கண்ணீர் கதை ,காணொளியை முழுமையாக பாருங்கள் மக்களே

FULL VIDEO CLICK HERE

மகிந்த மனைவி சிக்கினார் ஊழல் விசாரணைகள் ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

மகிந்த மனைவி சிக்கினார் ஊழல் விசாரணைகள் ஆரம்பம்

மகிந்த மனைவி சிக்கினார் ஊழல் விசாரணைகள் ஆரம்பம்

மகிந்த மனைவி சிக்கினார் ஊழல் விசாரணைகள் ஆரம்பம் ,ஷிரந்தியின் இரண்டு நில பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்த சிஐடி உத்தரவிட்டுள்ளது

கம்பஹாவில் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட நில பரிவர்த்தனைகள் குறித்து சிஐடி விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக துணை தொழிலாளர் அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பாக பதில் ஐஜிபி கோரிக்கை விடுத்துள்ளதாக ஜெயசிங்க கூறினார்.

இம்புல்கொட மற்றும் மாகோலவில் உள்ள நிலங்கள் 2012 இல் வாங்கப்பட்டு 2023 இல் விற்கப்பட்டதாக துணை அமைச்சர் கூறினார்.

மகிந்த ராஜபக்ச ஆன்மீக அறக்கட்டளையின் கீழ் 2012 இல் இஹல இம்புல்கொடவில் ரூ. 500,000 க்கு வாங்கப்பட்ட ஒரு நிலம் ரூ. 10 மில்லியனுக்கு

விற்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிலத்தின் உரிமையாளர் தங்காலை, கார்ல்டன் ஹவுஸைச் சேர்ந்த ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மாகோலவில் ரூ. 01 மில்லியனுக்கு வாங்கப்பட்ட மற்றொரு நிலம் ரூ. 12 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளதாகவும், அதன் உரிமையாளர் தங்காலை, கார்ல்டன் ஹவுஸைச் சேர்ந்த ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ என்றும்

ஜெயசிங்க கூறினார். நில பரிவர்த்தனைகள் தொடர்பான விசாரணைகளில், இந்தப் பத்திரங்கள் அலரி மாளிகையில் வரையப்பட்டு கையொப்பமிடப்பட்டு,

2023 ஆம் ஆண்டு நுகேகொடையில் வசிக்கும் ஒருவருக்கு மாற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.