யாழில் தமிழினப் படுகொலை ஊர்தி
யாழில் தமிழினப் படுகொலை ஊர்தி தமிழினப் படுகொலை நினைவுகூரல் உலகெங்கும் தமிழர்வாழ் பிரதேசங்களில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இருந்து இன்றைய தினம் ஊர்தி பவனி ஆரம்பமானது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில் இந்த ஊர்தி பவனி
ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று இறுதியாக முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது.
“தமிழினப் படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும்”, “தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி வேண்டும்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கட்டப்பட்டு
இனப்படுகொலை நினைவுத்தூபி வைக்கப்பட்டுள்ள நிலையில், வீதிகளில் பயணித்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகின்றதை பார்க்க கூடியதாக இருக்கின்றது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் போது நம் மக்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்தமை வரலாற்றில் மறக்க முடியாது.
ஒவ்வொரு வருடமும் நினைவேந்திக்கொண்டே இருக்கின்றோம். இம்முறை கனடாவில் இனப்படுகொலை தூபி திறந்து வைக்கப்பட்டமை இலங்கை அரசுக்கு பெரும் தலையிடியாக மாறி உள்ளது.
இனப்படுகொலை நினைவையொட்டி இவ் வாரம் முழுவதும் ஆங்காங்கே முள்ளிவாய்க்கால் கஞ்சி கொடுக்கப்படும் காட்சிகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது.


- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்









