பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் மானிப்பாயில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்

யாழ்ப்பாணம் மானிப்பாயில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்

யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வயோதிப பெண்ணொருவர் ஆடைகளற்ற நிலையில் நிர்வாணமாக சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

63 வயதுடைய சாந்தினி எனும் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிள்ளைகள் மற்றும் கணவரை பிரிந்து தனியாக வீட்டில் வசித்து வந்ததாகவும், நேற்றைய தினம் வீட்டில் சடலமாக காணப்பட்டதை அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்துள்ளனர்

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்து

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்து

யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்துக்குள்ளானது.

குறித்த சம்பவம் இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்ள நிலையில் வீதிப் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் மோதுண்ட இரு வாகனங்களும் தடம்புரண்டு சரிந்து விழுந்துள்ளன.

விபத்து காரணமாக எரிபொருள் தாங்கியில் இருந்த எரிபொருள் வீதி முழுவதும் கசிந்து காணப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் போதைப்பொருள் கொடுத்து நண்பனின் உயிரை பறித்த நண்பன்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் போதைப்பொருள் கொடுத்து நண்பனின் உயிரை பறித்த நண்பன்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) இளைஞன் ஒருவரால் தனது நண்பருக்கு போதைப்பொருள் கொடுக்கப்பட்டதால் குறித்த நண்பர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

உயிரிழந்த இளைஞன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான நிலையில் கடந்த 06 மாத கால பகுதிக்கு முன்னர், அவற்றில் இருந்து மீண்டு, வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நண்பனின் அழைப்பின் பேரில் வீட்டுக்கு அருகில் உள்ள இடத்திற்கு சென்ற வேளை போதை பொருளை இளைஞனுக்கு கொடுத்துள்ளனர்.

நீண்ட காலமாக போதைப்பொருள் பாவனையில் இருந்து மீண்ட நிலையில் , மீண்டும் போதைப்பொருளை பாவித்தமையால் , அதீத போதை காரணமாக இளைஞனின் உடல் நிலை மோசமாகியுள்ளது.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் போதைப்பொருள் கொடுத்து நண்பனின் உயிரை பறித்த நண்பன்

அதனை அடுத்து, இளைஞனுடன் போதைப்பொருளை நுகர்ந்த மற்றைய இளைஞன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இளைஞன் தாயாருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து , தனது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் , நெஞ்சு வலிப்பதாகவும் கூறியுள்ளார்.

தயார் இளைஞன் கூறிய இடத்திற்கு சென்ற வேளை , மயங்கிய நிலையில் காணப்பட்ட தனது மகனை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை , இளைஞன் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காங்கேசன்துறை பொலிஸார் , இளைஞனை அழைத்து போதைப்பொருளை கொடுத்த , மற்றைய இளைஞனை கைது செய்து , மருத்துவ பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரி முன் முன்னிலைப்படுத்தியதை அடுத்து , வைத்திய அறிக்கையில் இளைஞன் போதைப்பொருள் பாவித்தமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு – வள்ளிபுனம், முத்தையன் பகுதிகளைச் சேர்ந்த இருவரும் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவருமே நேற்று (06) கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்பு பிரிவினரே மூவரையும் கிளிநொச்சியில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்தனர்.

தாக்குதலுக்குப் பயன்படுத்திய ஹயஸ் வாகனம் மற்றும் இரண்டு வாள்களும் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன என்றும் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் தேடப்பட்டு வருகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை (04) தெல்லிப்பழையில் ஹயஸ் வாகனம் ஒன்றில் வந்த கும்பல் வீதியில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இளைஞர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியது. அதில் ஒருவர் காயமடைந்தார்.

தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் சென்றவர்களைத் துரத்திச் சென்று பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியபோதும், அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரி.மேனனின் கீழ் உள்ள உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கிளிநொச்சிப் பகுதியில் வைத்து நேற்று கைது செய்தனர்.

6 மாதங்களுக்கு முன்னர் தெல்லிப்பழை பகுதியில் வைத்து ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பழிவாங்கும் நோக்குடன் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஹையஸ் வாகனத்தின் ரயர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில் அந்த ரயர் மாற்றப்பட்டதுடன் சூடு பட்ட அடையாளங்களை மறைக்க ஏனைய பாகங்களை மாற்றவும் முயன்றுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

தலைமறைவாகியுள்ள மூவரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும், கைது செய்யப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கைக்கான நாளை நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

வீடியோ

தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் அக்செயா அனந்தசயனன்
Posted in இலங்கை செய்திகள்

தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் அக்செயா அனந்தசயனன்

தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் அக்செயா அனந்தசயனன்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த அக்செயா அனந்தசயனன், மருத்துவராகுவதே தனது இலட்சியம் என்றார்.

சிறந்த பெறுபேற்றை பெற்றமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், க.பொ.த.சாதாரணதர பரீட்சையில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றதில் தமிழ் இனத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது பெருமையாக உள்ளது. பெறுபேற்றை கல்வி நடவடிக்கையில் ஒரு படிக்கல்லாகவே பார்க்கிறேன்.

உயிரியல் கற்கையை தெரிவு செய்து மருத்துவ பீடத்திற்கு செல்ல வேண்டும் என்பதே எனது இலட்சியம். பெற்றோருக்கும், பாடசாலை சமூகத்தினருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் அக்செயா அனந்தசயனன்

விஞ்ஞான பாடத்திற்கும் ஆங்கில இலக்கியம், சிங்களம் ஆகிய தொகுதி பாடங்களுக்குமே தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சென்றேன்.கணித பாடத்தை தரம் ஆறு முதல் தந்தையிடமே கற்றேன்.

சாதாரண தர மாணவர்கள் சாதாரண பரீட்சையை உயர்தரத்திற்கான சிறு வழிகாட்டாலாக கருதி எதிர்கொள்ள வேண்டும் – என்றார்.

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் தேசிய ரீதியில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த அக்செயா அனந்தசயனன் 9 ஏ பெறுபேறுகளை பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

குறித்த மாணவியின் தந்தை கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் கணித விரிவுரையாளராகவும் தாய் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட விரிவுரையாளராகவும் பணியாற்றுகின்றனர்.

யாழ்ப்பாணம் நல்லூர் மாவீரர் நாள் video
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் நல்லூர் மாவீரர் நாள் video

யாழ்ப்பாணம் நல்லூர் மாவீரர் நாள் video

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மாவீரர் நாள்

கார்த்திகை கண்ணீர் சொரியும் மாவீரர் நாள்

video

https://www.youtube.com/watch?v=emAzxxT0YRM
தீ விபத்தில் மூன்று மாத குழந்தை பலி
Posted in இலங்கை செய்திகள்

யாழில் மூன்று மாத குழந்தை பரிதாபமாக மரணம்

யாழில் மூன்று மாத குழந்தை பரிதாபமாக மரணம்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குழந்தையின் தாய் கடந்த 23ஆம் திகதி இரவு பாலூட்டும் போது புரைக்கேறிய நிலையில் குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் மூன்று மாத குழந்தை பரிதாபமாக மரணம்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் ஹரிஹரன் என்ற மூன்று மாதக் குழந்தையே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.

உயிரிழந்த குழந்தையின் சடலம் தொடர்பிலான பிரேத பரிசோதனை நேற்று (24) யாழ்ப்பாண வைத்தியசாலையின் பிரேத அறையில் மேற்கொள்ளப்பட்ட நிலையில், நுரையீரலில் தாய் பால் சிக்கியமையினால் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக வைத்தியசாலை தகல்கள் மேலும் தெரிவித்தன

வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் ஆழியவளை கடற்கரையோரத்தில் சடலம்

யாழ்ப்பாணம் ஆழியவளை கடற்கரையோரத்தில் சடலம்

யாழ்ப்பாணம், வடமராட்சி – ஆழியவளைப் பகுதியிலுள்ள கடற்கரையோரத்தில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று புதன்கிழமை (21) பகல் வேளை சடலம் கரையொதுங்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சடலம் மீனவர்களுடையதா அல்லது விபத்துக்களில் ஏற்பட்ட உயிரிழப்பா என்பது தொடர்பில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

No posts found.
பெண்கள் போதைக்கு அடிமை-தள்ளாடும் யாழ்ப்பாணம்
Posted in இலங்கை செய்திகள்

பெண்கள் போதைக்கு அடிமை-தள்ளாடும் யாழ்ப்பாணம்

பெண்கள் போதைக்கு அடிமை-தள்ளாடும் யாழ்ப்பாணம்

இலங்கை யாழ்ப்பாணத்தில் பெண்கள் போதைக்கு அடிமையாகி தள்ளாடும் அவலம் இடம்பெறுகிறது .

இவ்விதம் நகரப் போவது ஓர் பிளைக்மெயில் கலாசாரமா..?
மருத்துவர்கள் வலிந்தே சிக்க வைக்கப்படுகின்றனரா ….
பொருளாதார செறிவுடைய யாவரும் இலக்கு வைக்கப்படுகின்ற …… பொறி

பெண்கள் திட்டமிட்டே போதை வலையில் சிக்க வைக்கப்படுகின்றனர்
நானாந்தம் பத்திரிகை செய்திகளும் மருத்துவதுறையினரை போதை வலையமைப்பின் பிணாமிகளாக சித்தரிக்கினறன
பிரேசில் வெனிசுலா போன்று நகர்கின்றது ..


ஆட்சி போதைப்பொருள் மாபியா கைகளில்.

No posts found.
ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் இலங்கையில் எகிறும் கொலைகள்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் கிணற்றில் வாலிபர் சடலமாக மீட்பு

யாழில் கிணற்றில் வாலிபர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் மானிப்பாய் நவாலி பகுதியில் கிணற்றில் வீழ்ந்த வாலிபர் ஒருவர் வைத்திசாயலையில் அனுமதிக்க பட்ட பொழுது சிகிச்சை பலனின்றி பலியாகியுளளார் .

போதையில் கிணற்றில் தவறி வீழ்ந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இறந்தவர் 32 வயதுடைய ஆனைக்கோட்டையை சேர்ந்தவர் என கண்டறிய பட்டுள்ளது .

இலங்கையில் நாள் தோறும் நீர் நிலைகள் மற்றும் வீதிகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .

Posted in இலங்கை செய்திகள்

புதுக்குடியிருப்பு பெண்கள் இருவரை கடத்தி கற்பழித்த ஐவர் கைது

புதுக்குடியிருப்பு பெண்கள் இருவரை கடத்தி கற்பழித்த ஐவர் கைது

யாழ்ப்பாணத்தில் சிறுமிகள் இருவரை கடத்தி சென்று தகாத உறவு கொண்ட குற்றச்சாட்டில் ஐவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன், வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமிகள் இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் நேற்று கட்டளையிட்டது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இரண்டு வாரங்களுக்கு முன்னர் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமிகள் இருவர் வீட்டிலிருந்து வெளியேறி யாழ்ப்பாணம் வந்து பேருந்து நிலையத்தில் இருந்துள்ளனர்.

அவர்கள் தொடர்பில் அறிந்த ஆண் ஒருவர், சிறுமிகள் இருவரையும் அழைத்துச் சென்று சாவகச்சேரியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பெண்கள் இருவரை கடத்தி கற்பழித்த ஐவர் கைது

நேற்று முன்தினம் அந்த விடுதியிலிருந்து வெளியேறிய மூவரும் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளனர்.

அன்றைய தினம் இரவு வாகனம் ஒன்றில் பேருந்து சாரதிகள் இருவர், நடத்துநர்கள் இருவர் என மேலும் நால்வர் இணைந்து வாகனம் ஒன்றில் எழுதுமட்டுவாழ் பற்றைக் காட்டுக்குள் சிறுமிகளை அழைத்துச் சென்றுள்ளனர்.

அதன்போது சிறுமி ஒருவர் சாதுரியமாகப் பேசி வாகனத்திலிருந்து இறங்கி எழுதுமட்டுவாழில் மக்கள் வாழும் பகுதிக்கு வந்துள்ளார்.

வீதியில் சென்றவர்களிடம் நடந்தவற்றை தப்பிவந்த சிறுமி தெரிவித்த நிலையில் பொலிஸ் அவசர பிரிவுக்கு அறிவிக்கபட்டது.

மற்றைய சிறுமியுடன் சென்ற ஐவரும் மறுநாள் யாழ்ப்பாணம் நகருக்கு அழைத்து வந்து சிறுமியை இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

சிறுமிகளிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்களை கடத்திச் சென்றமை மற்றும் தகாத உறவு கொண்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் ஐவர் கைது செய்யப்பட்டனர்.

வீட்டைவிட்டு வெளியேறி வந்து துர்நடத்தையில் ஈடுபட்டமையினால் சிறுமிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

    Posted in இலங்கை செய்திகள்

    நல்லூர் ஆலயத்தில் சங்கிலி கொள்ளையடித்த பெண் கைது

    நல்லூர் ஆலயத்தில் சங்கிலி கொள்ளையடித்த பெண் கைது

    இலங்கை யாழ்ப்பாணம்நல்லூர் ஆலயத்தில் வழிபாட்டில் ,ஈடுபட்ட பெண் ஒருவர் ,அணிந்திருந்த தங்க சங்கிலியை , திருடி சென்ற பெண் ஒருவர், கைது செய்யப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்க பட்டுள்ளார் .

    தங்க சங்கிலியை பறிகொடுத்த பெண் ,வழங்கிய புகாரின் அடிப்படையில் ,இந்த கைது இடம்பெற்றுள்ளது.

    யாழ்ப்பாணத்தில் கொள்ளையில் ஈடுபடும் ,பெண்கள் சிலர் சமீப காலங்களாக கைது செய்ய பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது.

      Posted in இலங்கை செய்திகள்

      யாழில் நாயை அடித்து கொன்ற இருவர் கைது

      யாழில் நாயை அடித்து கொன்ற இருவர் கைது

      யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்றினை மிக கொடூரமான முறையில் படுகொலை செய்து அதனை காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட

      குற்றத்தில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர்களில் இருவர் கைது நேற்று (04) ஊர்காவற்துறை பொலிஸாரினால் செய்யப்பட்டுள்ளனர்.

      புங்குடுதீவு 09 ஆம் வட்டாரத்தை சேர்ந்த நான்கு இளைஞர்கள், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நாய் ஒன்றின் நாலு கால்களையும் கைக்கோடாரி

      ஒன்றினால் துண்டித்து, நாயின் முகத்தினை மரக்கட்டை ஒன்றின் மீது வைத்து கைக்கோடாரியால் கொத்தி முகத்தை சிதைத்து படுகொலை செய்துள்ளனர்.

      தமது கொடூரமான செயலினை காணொளியாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் உள்ளனர்.

      யாழில் நாயை அடித்து கொன்ற இருவர் கைது

      இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

      அதன் அடிப்படையில் சம்பவத்தை காணொளி எடுத்தவர் அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் எனும் குற்றத்தில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

      அதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாகவும் ,


      அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

        Posted in இலங்கை செய்திகள்

        யாழ்ப்பாணத்தில் பேரூந்து சேவைகள் வழமைக்கு திரும்பின

        யாழ்ப்பாணத்தில் பேரூந்து சேவைகள் வழமைக்கு திரும்பின

        இலங்கை ,யாழ்ப்பாணம் ; இலங்கை யாழ்ப்பாணத்தில் தனியார் பேரூந்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன .


        எரிபொருள் இல்லாமை போராட்டத்தில் ஈடுபட்ட தனியார் பேரூந்து உரிமையாளர்கள் தற்போது ஐம்பது வீதமான பேருந்துகளை செலுத்தி செல்கின்றனர் .

        இதனால் தடைப்பட்டிருந்த மக்கள் போக்குவரத்து மீள இயங்கு நிலைக்கு திரும்பியுள்ளது.

        எனினும் பேருந்துகளில் வழமைக்கு மாறாக மக்கள் அதிகமாக ஏற்றி செல்ல படுவதால் பலத்த நெருக்கடிகளை பயணிகள் சந்தித்து வருகின்றனர்.

          Posted in இலங்கை செய்திகள்

          யாழில் பெற்றோல், டீசல் விநியோகத்தை சீராக முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கை

          யாழில் பெற்றோல், டீசல் விநியோகத்தை சீராக முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கை

          தேசிய எரிபொருள் விநியோக திட்டத்திற்கு அமைவாக யாழ் மாவட்டத்தில் நேற்றைய தினம் (21) தொடக்கம் பெற்றோல் மற்றும் டீசல் விநியோகத்தை

          சீராக முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

          எரிபொருள் விநியோக நடைமுறைகள் தொடர்பில் நேற்றைய தினம் (21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

          யாழ் மாவட்டத்தில் 8 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் விநியோகமும், 15 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் விநியோகமும் இடம்பெறுகின்றன..

          நேற்று (21 ஆம் திகதி) தொடக்கம் 29 ஆம் திகதி வரை பெற்றோல் 15 எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் தொடர்ச்சியாக வழங்கப்படவுள்ளது.

          மக்கள் எந்த விதமான நெருக்கடி மற்றும் குழப்பங்களை
          ஏற்படுத்தாது அமைதியான முறையில் எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

          இதேவேளை சராசரியாக 7 – 10 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 25 ஆம் திகதி வரையில் டீசல் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கான

          அட்டவணை இலங்கை பெற்றோலிய கூட்டத்தாபனத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

          எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டு குழப்ப நிலையை தோற்றுவிப்பதற்கான சூழலை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

          இதற்கமைவாக அரசாங்கத்தினால் தேசிய எரிபொருள் விநியோக அனுமதிப் பத்திரம் ( National fuel Pass வெளியிடப்பட்டுள்ளது.
          QR code முறை மூலமாக இதனை பெற வேண்டும்.

          இதனைப் பெறுவதில் சில நடைமுறை பிரச்சினைகள் காணப்படுவதனால் அது முதல்கட்டமாக மேல் மாகாலத்திலும் அடுத்த கட்டமாக நாடு பூராகவும்

          அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டம் 25ஆம் திகதிக்கு பின்னர் அமுலில் இருக்கும்.

          இந்த திட்டம் யாழ் மாவட்டத்தில் அமுல்படுத்தப்படும் வரையில் பிரதேச செயலகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் விநியோக

          பங்கீட்டு அட்டைகளை பயன்படுத்துமாறும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

          வாகனங்களின் இறுதி இலக்க அடிப்படையில் இந்த விநியோகம் இடம்பெறும்.

          பொதுமக்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் நெருக்கடி நிலையை ஏற்படுத்தாமல் அமைதியாக அந்தந்த பிரதேசங்களில் உள்ள எரிபொருள்

          நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருளை பெற்றுக் கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

          எரிபொருள் பங்கீட்டு அட்டை இதுவரை கிடைக்கப் பெறாதவர்கள் கிராம அலுவலர் ஊடாக பிரதேச செயலகங்களில் அவற்றைப் பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

          இதேவேளை பிற மாவட்டங்களில் பணிபுரியும் அரச உத்தியோகத்தர்கள் தங்களின் உரிய ஆவணங்களை அந்தந்த பிரதேச செயலகங்களில் சமர்ப்பிப்பதன் மூலம் அவர்களுக்குரிய எரிபொருள் பங்கீட்டு அட்டையை

          பெற்றுக் கொள்ள முடியும். யாழ் மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைகளை முன்னெடுப்பதற்காக யாழ் பல நோக்கு கூட்டுறவு சங்கம் மட்டுப்படுத்திய எரிபொருள் விநியோகத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

          இங்கு எரிபொருளை பெறுபவர்கள் கட்டாயமாக மாவட்ட செயலகங்களில் முன் அனுமதியை பெற்றிருத்தல் வேண்டும்.

          யாழ் மாவட்டத்தில் கருப்பு சந்தை எரிபொருள் விற்பனையை தடுக்கும் முகமாக
          இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இது பொது மக்களை அசௌகரியத்திற்கு


          உட்படுத்தப்படும் செயல் அல்ல. எனவே அனைவரும் ஒத்துழைத்து எரிபொருள் விநியோகத்தை
          முன்னெடுப்பதற்கு உதவுமாறும் அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

            Posted in இலங்கை செய்திகள்

            மழையில் குளிக்கும் யாழ்ப்பாணம்

            மழையில் குளிக்கும் யாழ்ப்பாணம்

            இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.மழையில் குளிக்கும் யாழ்ப்பாணம் .

            2022 ஜூன்22ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு.

            2022 ஜூன் 22ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

            நாட்டின் இரத்தினபுரி, களுத்துறை,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

            வடமேல் மாகாணத்திலும் கம்பஹா, கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

            யாழ்ப்பாணம் மாவட்டத்தில்சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

            ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

            இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

            மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
            எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

              கைபேசி பேசியவாறு வண்டி ஓட்டினால்
              Posted in இலங்கை செய்திகள்

              ஆண்களிடம் பெண்குரலில் பேசி பணம் கொள்ளையடித்த நபர் – மாப்புள்ளை சிக்கினார்

              கைபேசியில் பெண் குரலில் பேசி ஆண்களை ஏமாற்றி, அவர்களிடம் பணம் பறித்த

              குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

              சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

              சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வந்த அழைப்பில் பெண் ஒருவர் உரையாடியுள்ளார். அதன் பின்னர் அவர்கள் தொடர்ச்சியாக உரையாடியுள்ளனர். பின்னர் அந்தரங்கப் படங்களையும் பரிமாறிக் கொண்டுள்ளனர்.

              பின்னர் கைபேசியில் பேசிய குறித்த பெண், அந்த நபரை மிரட்டி ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் பறித்துள்ளார்.

              தொடர்ந்து மிரட்டி ஒரு லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். அதில் சந்தேகமடைந்த அந்த நபர், இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

              கைபேசியில் பேசிய பெண்ணிடம், வங்கியில் பணம் வைப்புச் செய்ய முடியாது என்றும், நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது.

              யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பணத்தைப் பெற்றுக்கொள்ள வந்த 26 வயது இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

              விசாரணையில் அந்த இளைஞரே பெண் குரலில் பேசி ஏமாற்றியமை தெரியவந்துள்ளது. இந்த இளைஞர் ஏற்கனவே நால்வரிடம் இவ்வாறு பேசி நான்கு

              லட்சம் ரூபாவுக்கும் மேல் பறித்துள்ளமை தெரியவந்துள்ளது என்று பொலிஸார் கூறுகின்றனர்.

              கைது செய்யப்பட்ட இளைஞரிடம் இருந்து நான்கு கைபேசிகளும், ஒரு லட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.


              விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்

                செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                Posted in இலங்கை செய்திகள்

                யாழில் சிறுவன் மயங்கி விழுந்து மரணம்

                யாழில் சிறுவன் மயங்கி விழுந்து மரணம்

                யாழ்ப்பாணம் துண்ணாலை ,கிழக்கு கரவெட்டி பகுதியில் எட்டு வயது சிறுவன் ஒருவன் விளையாடி


                கொண்டிருந்த பொழுது மயங்கி விழுந்து மரணமாகியுள்ளார்

                இவரது மரணத்திற்கான காரணம் தெரியவில்லை ,போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

                  Posted in Uncategorized

                  நானும் ஆதரவு விக்கி அறிவிப்பு – அதிகரிக்கும் கோட்டாவுக்கு எதிரான பலம்

                  நானும் ஆதரவு விக்கி அறிவிப்பு – அதிகரிக்கும் கோட்டாவுக்கு எதிரான பலம்

                  இலங்கையில் ஆளும் சகோதர்கள் ஆட்சியில் இருந்து விலக வேண்டும் என கோரி


                  மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன ,

                  இவ்வேளை அனைத்து காட்சிகள் இணைந்து நம்பிக்கை இல்லா தீர்மானமா ஒன்றை

                  கொண்டுவர உள்ள நிலையில் அதற்கு தானும் , தனது ஆதரவை தெரிவிப்பதாக
                  விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்

                    Posted in Uncategorized

                    யாழில் கோடாரி வெட்டு – ரவுடிகள் அட்டூழியம்

                    யாழில் கோடாரி வெட்டு – ரவுடிகள் அட்டூழியம்

                    யாழ்ப்பாணம் பருத்துறை திக்கம் பகுதியில் 44 வயதான நபர் மீது கோடரி வெட்டு

                    தாக்குதல் இடம்பெற்றுள்ளது

                    மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே இந்த தாக்குதலை நடத்தி விட்டு தப்பி

                    சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது


                    பாதிக்க பட்டவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுளளார்