Posted in சினிமா

பணம் என்றதும் ஓகே சொன்ன நடிகை

பணம் என்றதும் ஓகே சொன்ன நடிகை

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவர், பணம் என்றதும் ஓகே சொல்லியிருக்கிறாராம்.பணம் என்றதும் ஓகே சொன்ன நடிகை

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் சின்ன நம்பர் நடிகை, தற்போது

குறிப்பிட்ட கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறாராம். தற்போது

      படப்பிடிப்பு இல்லாததால் நடிகை மிகவும் வருத்தத்துடன் இருந்தாராம்.

      இதை அறிந்த ஆப் நிறுவனம் ஒன்று நடிகையை அணுகி எங்களுடைய

      ஆப்- பில் நீங்கள் வந்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறினார்களாம்.

      முதலில் மறுத்த நடிகை பின்னர் நிறைய பணம் தருகிறோம் என்று சொன்னதும் உடனே அதில் கலந்து கொண்டாராம்

      பணம் என்றதும் ஓகே
      பணம் என்றதும் ஓகே
          Posted in சினிமா

          சமந்தாவுடன் நடிக்க மறுக்கும் நடிகர் – அடம் பிடிக்கும் நடிகை

          சமந்தாவுடன் நடிக்க மறுக்கும் நடிகர் – அடம் பிடிக்கும் நடிகை

          தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், சமந்தாவுடன் இணைந்து நடிக்காதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

          சமந்தாவுடன் நடிக்க மறுப்பது ஏன்? – பிரபாஸ் விளக்கம்
          சமந்தா, பிரபாஸ்


            தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, நயன்தாரா, திரிஷா என பல முன்னணி

            ஹீரோயின்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ஆனால் அவர் இதுவரை சமந்தாவுடன் ஒரு படத்தில் கூட நடித்ததில்லை.

            இதுகுறித்து பிரபாஸிடம் சமீபத்திய பேட்டியில் கேட்கப்பட்டது. இதற்கு அவர் அளித்த விளக்கம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

            அவர் கூறியதாவது: எனக்கும் சமந்தாவிற்கும் இடையே உயரம் பிரச்சனையாக உள்ளது. அதுதான் நாங்கள் இருவரும் இணைந்து

            பணியாற்றாததற்கு முக்கிய கரணம் என கூறியுள்ளார். கடந்தாண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ

            திரைப்படத்தில் சமந்தா நடிப்பதாக இருந்தது. பின்னர் அவருக்கு பதில் இந்தி நடிகை ஷ்ரத்தா கபூரை ஒப்பந்தம் செய்தனர்.

            சமந்தாவுடன் நடிக்க மறுக்கும்
            சமந்தாவுடன் நடிக்க மறுக்கும்
                Posted in உலக செய்திகள்

                இந்தியாவில் மின்னல் தககி 10 பேர் பலி – 9 பேர் காயம்

                இந்தியாவில் மின்னல் தககி 10 பேர் பலி – 9 பேர் காயம்

                இன்று கிழக்கு இந்தியாவில் இடம்பெற்ற மின்னல் தாக்குதலில் சிக்கி

                பத்து பேர் பலியாகினர் ,மேலும் ஒன்பது பேர் பலத்த எரி காயங்களுக்கு

                உள்ளான நிலையில்,தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                கிழக்கு இந்தியாவின் Pratay Amrit, பகுதி கிராமத்தில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது


                ,சீரற்ற கால நிலை தொடரும் எனவும் இவ்வேளை மக்களை விழிப்பாக

                இருக்கும் படி எச்சரிக்கை விடுக்க பட்ட பொழுதும் ,இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது

                மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                இந்தியாவில் மின்னல்
                இந்தியாவில் மின்னல்
                Posted in சினிமா

                சூர்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல தயாரிப்பாளர்.

                சூர்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல தயாரிப்பாளர்.

                படங்களை வெளியிடுவது தொழில் சுதந்திரம், இணையதளத்தில் படத்தை வெளியிடக் கூடாது என்று மிரட்டுவது நியாயம் அல்ல என பிரபல தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

                சூர்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல தயாரிப்பாளர்
                சூர்யா


                ஜோதிகா கதாநாயகியாக நடித்து, ஜே.ஜே.பிரடரிக் என்ற புது டைரக்டர் இயக்கியுள்ள படம், ‘பொன்மகள் வந்தாள்’. சூர்யாவின் 2டி

                  நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம், இம்மாதம் இறுதியில் திரைக்கு வர இருந்தது. கொரோனா வைரஸ் பரவல் பிரச்சினை

                  காரணமாக படம் திரைக்கு வருவது தள்ளிப்போய் இருக்கிறது. ‘பொன்மகள் வந்தாள்’ படம், ரூ.4 கோடியே 50 லட்சம் செலவில்

                  தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தை ஒரு இணையதள நிறுவனம் ரூ.9 கோடி கொடுத்து வாங்கி, இணையதளத்தில் வெளியிடுவதற்கான

                  ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்கு திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளன.

                  ஜே.எஸ்.கே.சதீஷ்குமார்

                  தேசிய விருது பெற்ற ‘தங்க மீன்கள்’ உள்பட பல படங்களை தயாரித்த பட அதிபர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் கூறுகையில்,

                  “படங்களை வெளியிடுவது தொழில் சுதந்திரம். முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியுமா? என்று ஒவ்வொரு தயாரிப்பாளரும்

                  கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், இணையதளத்தில் படத்தை வெளியிடக் கூடாது என்று மிரட்டுவது

                  நியாயம் அல்ல. தயாரிப்பாளரை மிரட்டுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது” என்றார்

                  சூர்யாவுக்கு ஆதரவாக
                  சூர்யாவுக்கு ஆதரவாக

                  .

                    Posted in சினிமா

                    தமன்னாவின் தலையணை சேலஞ்சிற்கு குவியும் லைக்ஸ்

                    தமன்னாவின் தலையணை சேலஞ்சிற்கு குவியும் லைக்ஸ்

                    சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் தலையணை சேலஞ்சை செய்து நடிகை தமன்னா புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

                    தமன்னாவின் தலையணை சேலஞ்சிற்கு குவியும் லைக்ஸ்
                    தமன்னா


                    தமன்னா 2005-ல் ‘கேடி’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து கதாநாயகியாக

                      நீடிக்கிறார். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக

                      நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் வெளியான பாகுபலி திருப்பு முனையாக அமைந்தது. அடுத்ததாக தமிழில் வெப் சீரிஸ் ஒன்றில்

                      நடித்து முடித்துள்ள தமன்னா, தெலுங்கில் சீட்டிமார் படத்தில் கபடி பயிற்சியாளராக நடிக்கிறார்.

                      தற்போது கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் தமன்னா, சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது

                      விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நடிகை தமன்னா, சமூக வலைத்தளங்களில்

                      வைரலாகி வரும் தலையணை சேலஞ்சை செய்துள்ளார். தலையணையை மட்டும் அணிந்துகொண்டு, தரையில் படுத்தபடி

                      புகைப்படம் ஒன்றை தமன்னா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகின்றன.

                      தமன்னாவின் தலையணை
                      தமன்னாவின் தலையணை
                        Posted in சினிமா

                        மலை ஏற முடியாமல் வருத்தத்தில் இருக்கும் ராய் லட்சுமி

                        மலை ஏற முடியாமல் வருத்தத்தில் இருக்கும் ராய் லட்சுமி

                        தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை ராய் லட்சுமி மலையேற முடியாமல் வருத்தத்தில் இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

                        மலை ஏற முடியாமல் வருத்தத்தில் இருக்கும் ராய் லட்சுமி
                        நடிகை ராய் லட்சுமி


                        மலை ஏறும் டிராக் முறை நடிகைகள் பலருக்கு சிறந்த பொழுதுபோக்கு. ராய் லட்சுமியும் அதில் ஒருவர். ஷூட்டிங் இல்லாத சமயத்தில் அடிக்கடி மலை ஏற சென்றுவிடுவார்.

                          கடந்த மார்ச் மாதத்தில் இது போல் கேரள மலைகளுக்கு செல்ல ராய் லட்சுமி முடிவு செய்திருந்தார்.

                          அதற்குள் கொரோனா பீதி அதிகரிக்க தொடங்கிவிட்டது. பிறகு ஊரடங்கும் தொடங்கிவிட்டதால் டிராக் செல்ல முடியவில்லை என்று ராய் லட்சுமி வருத்தத்தில் இருக்கிறார்.

                          ‘மலை ஏறுவது எனது சிறந்த பொழுதுபோக்குகளில் ஒன்று. இது எனக்கு திரில் அனுபவத்தை தரும்.

                          6 மாதங்களுக்கு ஒரு முறை டிராக் சென்றுவிடுவேன். இந்த தடவை ஊரடங்கு

                          காரணமாக நான் எங்கும் செல்ல முடியவில்லை. இது எனக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது என்கிறார் ராய் லட்சுமி

                            Posted in உலக செய்திகள்

                            இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 50 கிளர்ச்சி படைகள் சுட்டு கொலை- தாக்குதல் முறியடிப்பு

                            இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 50 கிளர்ச்சி படைகள் சுட்டு கொலை- தாக்குதல் முறியடிப்பு

                            கொரனோ நோயானது நாடுகள் தழுவிய ரீதியில் பரவி வரும் வேளையில் ,

                            பாகிஸ்தான் இராணுவம் மற்றும் அதன் ஆதரவு குழுக்கள் இந்தியா மீது

                              தாக்குதலை நடத்தும் முகமாக ,இந்தியாவுக்குள் நுழைந்த வண்ணம் உள்ளனர் .

                              இவ்வாறு இந்தியாவின் மேற்கு கடலோரமாக ,நுழையும் முயற்சியில்

                              ஈடுபாடிருந்த தீவிரவாதிகளை தாம் கொன்று குவித்துள்ளோம் என இந்தியா அரச இராணுவம் அறிவித்துள்ளது

                              அது தவிர மிக பெரும் தாக்குத்தல் ஒன்றை நடத்தும் முகாமாக இந்தியாவுக்குள் ,

                              பாகிஸ்தான் உளவு அமைப்பு தீவிரவாதிகளை குண்டுகளுடன் அனுப்பிட

                              முயன்று வருவதும் ,அவ்வாறு நுழைந்தவர்களை தாம் கைது செய்துள்ளதாகவும் இந்தியா அறிவித்துள்ளது

                              மோடியின் ஆட்சியை சீர்குலைக்கும் முயற்சியில் இந்த நபர்கள் ஈடுபட்டுள்ளனர்

                              என இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது ,காஸ்மீர்,மற்றும் ஆபத்தான மேற்கு

                              கடல் பகுதியில் இந்தியா இராணுவம் குவிக்க பட்டு கண்காணிப்பு பல படுத்த பட்டுள்ளது,

                                எவ்வேளையும் பெரும் நாசகார தாக்குதல் ஒன்றை இந்தியாவில் நடத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

                                இந்தியாவுக்குள் நுழைய முயன்ற
                                இந்தியாவுக்குள் நுழைய முயன்ற
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  இந்தியாவில் இருந்து இலங்கை வந்தடைந்த 101 மாணவர்கள் தனிமை படுத்தல்

                                  இந்தியாவில் இருந்து இலங்கை வந்தடைந்த 101 மாணவர்கள் தனிமை படுத்தல்

                                  இந்தியாவில் தவித்து கொண்டிருந்த 101 இலங்கை மாணவர்களை ,சிறப்பு

                                  விமான மூலம் இலங்கை அரசு அழைத்து வந்தது .அவ்வாறு வந்தடைந்தவர்கள்

                                  21 நாட்களுக்கு தனிமை படுத்த பட்டுள்ளனர் .சிறப்பு தனிமை படுத்தல்

                                    முகாமில் இவர்கள் தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
                                    என இராணுவம் அறிவித்துள்ளது

                                    இந்தியாவில் இருந்து
                                    இந்தியாவில் இருந்து

                                      Posted in சினிமா

                                      தீப்பெட்டி கணேசனை நேரில் சந்தித்து உதவிய சினேகன்

                                      தீப்பெட்டி கணேசனை நேரில் சந்தித்து உதவிய சினேகன்

                                      பிரபல பாடலாசிரியர் மற்றும் பிக்பாஸ் சினேகன், ரெனிகுண்டா புகழ் தீப்பெட்டி கணேசனை சந்தித்து உதவி செய்துள்ளார்.

                                      தீப்பெட்டி கணேசனை நேரில் சந்தித்து உதவிய சினேகன்
                                      தீப்பெட்டி கணேசனை நேரில் சென்று சந்தித்து பேசிய சினேகன்.


                                      ரெனிகுண்டா படத்தில் நடித்து பிரபலமானவர் தீப்பெட்டி கணேசன். இவர் சமீபத்தில் ஒரு உருக்கமான வீடியோவை வெளியிட்டார்.

                                      அதில் தனது குடும்பத்துக்கு உதவி தேவைப்படுவதாகவும், இது அஜித்துக்கு தெரிந்தால் கண்டிப்பாக உதவுவார் என்றும்

                                      வீடியோவில் பேசினார். இதையடுத்து நடிகர் லாரன்ஸ், அஜித்திடம் இதை கொண்டு சேர்க்க முயற்சி செய்வதாகவும், அவரின் பிள்ளைகளின் படிப்புக்கு உதவுவதாகவும் தெரிவித்தார்.

                                      இந்நிலையில் பிரபல பாடலாசிரியருமான சினேகன் தீப்பெட்டி கணேசனை நேரில் சென்று சந்தித்துள்ளார். மேலும் அவரின்

                                      சினேகம் செயலகம் அறக்கட்டளை சார்பில், தீப்பெட்டி கணேசனின் குடும்பத்திற்கு 2 வாரத்துக்கு தேவையான உணவு பொருட்களை

                                      வழங்கியதோடு, அவரின் இரண்டு குழந்தைகளின் இந்த வருட கல்விச் செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதுபோல்

                                      கஷ்டப்படும் கலைஞர்களுக்கு உதவ பலர் முன் வர வேண்டும் என மேலும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

                                      தீப்பெட்டி கணேசனை
                                      தீப்பெட்டி கணேசனை
                                          Posted in சினிமா

                                          ஊரடங்கு நேரத்தில் மதுபானம் விற்ற நடிகர் கைது.

                                          ஊரடங்கு நேரத்தில் மதுபானம் விற்ற நடிகர் கைது.

                                          ஊரடங்கை மீறி காரில் மதுபானம் விற்ற சினிமா துணை நடிகர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த மதுபானங்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

                                          ஊரடங்கு நேரத்தில் மதுபானம் விற்ற துணை நடிகர் கைது
                                          கைது செய்யப்பட ரிஸ்வான்


                                          ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதை பயன்படுத்தி யாராவது சட்டவிரோதமாக மதுபானம் விற்கிறார்களா? என போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு

                                          வருகின்றனர். இந்தநிலையில் சென்னை எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கே.கே.நகர், பிருந்தாவன் நகர்

                                          பகுதியில் ரிஸ்வான் (வயது 30), என்பவர் சட்டவிரோதமாக மதுபானம் விற்றபோது எம்.ஜி.ஆர். நகர் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

                                          விசாரணையில் அவர், சினிமாவில் துணை நடிகராக நடித்து வருவது தெரிந்தது. அவரிடமிருந்து 69 மதுபாட்டில்கள் மற்றும்

                                          ரூ.2,500 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். ரிஸ்வான் துணை நடிகர் என்பதால் சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்ததும் விசாரணையில் தெரிந்தது.

                                          அதேபோல் விருகம்பாக்கம் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தசரதபுரம், மீன்

                                          மார்க்கெட் அருகில் காரில் வந்து மதுபானம் விற்பனை செய்த 2 பேரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள்,

                                          சூளைமேட்டை சேர்ந்த தேவராஜ்(40), சாலிகிராமத்தை சேர்ந்த பிரதீப்(31) என்பது தெரிந்தது.

                                          2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 189 மது பாட்டில்கள், ரூ.20 ஆயிரம் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல்

                                          செய்தனர். பின்னர் கைதான துணை நடிகர் உள்பட 3 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

                                          ஊரடங்கு நேரத்தில் மதுபானம்
                                          ஊரடங்கு நேரத்தில் மதுபானம்
                                          Posted in சினிமா

                                          கொரோனா நமக்கு உணர்த்திய பாடம் – காஜல்

                                          கொரோனா நமக்கு உணர்த்திய பாடம் – காஜல்

                                          கொரோனா நமக்கு பாடத்தை உணர்த்தி இருக்கிறது என்று தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் கூறியிருக்கிறார்.

                                          கொரோனா நமக்கு உணர்த்திய பாடம் – காஜல் அகர்வால்
                                          நடிகை காஜல் அகர்வால்


                                          தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

                                          நாம் சந்தோஷமாக வாழ்வதற்கு ஏதேதோ வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால் கடைசியாக மகிழ்ச்சியான

                                          வாழ்க்கைக்கு தேவையானது மன அமைதி மட்டும்தான். அது இருந்தால் வேறு எதுவும் இல்லாமல் போனாலும் பரவாயில்லை

                                          என்று இந்த கொரோனா காலத்தில் எல்லோருக்கும் புரிந்து இருக்கும்.

                                          எனது சின்ன வயதில் நான் கூட எல்லா வசதிகளுடன் ஆடம்பரமாக வாழ்கிறவர்களை பார்க்கும்போது நாமும் இப்படி வாழ வேண்டும்

                                          என்று நினைத்தேன். ஆனால் இப்போது வாழ்க்கையை பற்றி புரிந்து கொள்ள ஆரம்பித்த பிறகு மன அமைதியை தவிர முக்கியமானது

                                          வேறு எதுவும் இல்லை என்பது எனக்கு நன்றாக புரிந்துள்ளது. எந்த மாதிரியான நெருக்கடியும் இல்லாமல் அமைதியாக இருக்கத்தான்

                                          நான் விரும்புகிறேன். எவ்வளவு பணம் இருந்தாலும் அமைதி இல்லாமல் போனால் என்ன பயன். இப்போது கொரோனாவால்

                                          மக்கள் கஷ்டப்படும் இந்த நேரத்தில் பணத்தை விட மன அமைதி முக்கியம் என்பது எல்லோருக்குமே புரிந்து இருக்கும்.

                                          இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

                                          கொரோனா நமக்கு
                                          கொரோனா நமக்கு
                                          Posted in சினிமா

                                          அஜித் – விஜய் ரசிகர்கள் சண்டை

                                          அஜித் – விஜய் ரசிகர்கள் சண்டை

                                          சமூக வலைத்தளத்தில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சண்டை போடுவதை பார்த்த நடிகை கோபப்பட்டு இருக்கிறார்.

                                          அஜித் – விஜய் ரசிகர்கள் சண்டை – கோபப்பட்ட நடிகை
                                          நடிகர்கள் விஜய், அஜித்


                                          தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்களுக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இடையே அடிக்கடி சமூக வலைத்தளங்களில் மோதல் நடந்து கொண்டிருக்கிறது.

                                          தற்போது மாற்றி மாற்றி மோசமான டேக்குகளை தேசிய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். #மே1அஜித்குபாடைகட்டு,

                                          June22BlackdayForVijay, June22VijayDeathDay போன்ற டேக்குகளை அவர்கள் ட்ரெண்ட் செய்துள்ளனர்.

                                          நடிகை கஸ்தூரியின் ட்விட்

                                          இது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. மே 1 அஜித் பிறந்தநாள், ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாள் வருவதால் அதை

                                          கொண்டாட அவர்களின் ரசிகர்கள் தயாராகி வரும் இந்த சூழலில் தான் இப்படி ஒரு மோதல் நடந்துள்ளது.

                                          இந்த மோதல் பற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி, “அஜித்தும் விஜய்யும் எந்த குறையும் இல்லாம நல்லா இருக்கணும்.

                                          இருப்பாங்க. வெட்டி பயலுங்க சாபத்துனால அவங்களுக்கு ஆபத்து இல்லை; ஆனா அவமானம். ஊரே பத்தி எரியும் போது கூட

                                          இவிங்களுக்கு இதான் முக்கியமா? திருந்துங்க பிரதர்ஸ். Ignore negativity. வாழு வாழ விடு” என ட்விட் செய்துள்ளார்

                                          அஜித் - விஜய் ரசிகர்கள் சண்டை
                                          அஜித் – விஜய் ரசிகர்கள் சண்டை
                                          Posted in உலக செய்திகள்

                                          இந்தியா கடற்படையினர் 21 பேருக்கு கொரனோ -சோதனைகள் தீவிரம்

                                          இந்தியா கடற்படையினர் 21 பேருக்கு கொரனோ -சோதனைகள் தீவிரம்

                                          இந்தியாவின் கடல் படையினர் இருபத்தி ஒரு பேருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,மும்பையில்

                                          உள்ள கடல் படை தளத்தில் உள்ள படையினருக்கு மேற்கொள்ள பட்ட

                                          கொரனோ சோதனைகளின் பொழுதே மேற்படி விடயம் கண்டு பிடிக்க பட்டுள்ளது

                                          இவ்வாறு அடையாள படுத்த பட்ட சிப்பாய்கள் தனிமை படுத்த பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்

                                          மேலும் இவர்களுடன் பழகிய அனைவரும் தற்பொழுது தீவிர சோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .


                                          இராணுவம் வெளியிட்ட தகவலின் எண்ணிக்கை இதுவாக உள்ளது ,இழப்புக்கள் மேலும் அதிகம் என உள்ளக தவகல்கள் சில கசிகின்றன

                                          இந்தியா கடற்படையினர்
                                          இந்தியா கடற்படையினர்
                                          Posted in சினிமா

                                          சஞ்சய் எப்படி இருக்கான்? – விஜய்யிடம் நலம் விசாரித்த அஜித்

                                          சஞ்சய் எப்படி இருக்கான்? – விஜய்யிடம் நலம் விசாரித்த அஜித்

                                          கனடாவில் சிக்கி தவிக்கும் விஜய்யின் மகன் சஞ்சய் குறித்து நடிகர் அஜித் போனில் நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

                                          சஞ்சய் எப்படி இருக்கான்? – விஜய்யிடம் நலம் விசாரித்த அஜித்
                                          அஜித், விஜய்


                                          நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய், படிப்பை முடித்துவிட்டு, குறும்படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார்.

                                          இந்நிலையில், பிலிம் மேக்கிங் படிக்க அவர் கனடாவுக்கு சென்றார். இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

                                          இதனால் கனடாவில் இருந்து சஞ்சய் நாடு திரும்ப முடியவில்லை. இதை நினைத்து விஜய் கவலை அடைந்ததாகவும். மகனிடம்

                                          தினமும் போனில் பேசி அவரை வெளியே செல்லாமல் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தியதாகவும் செய்திகள் பரவின.

                                          இதுபற்றி அறிந்த நடிகர் அஜித், உடனே விஜய்யிடம் செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

                                          சஞ்சய், விஜய்

                                          ‘சஞ்சய் எப்படி இருக்கான்? கனடாவில் நிலைமை எப்படி இருக்கிறது’ என கேட்டுள்ளார். ‘பயப்படும்படியாக எதுவும் இல்லை.

                                          சஞ்சய் பாதுகாப்பாக இருக்கிறான் ’ என்று விஜய் கூறியுள்ளார். விஜய்யும், அஜித்தும் இதுபோல் அவ்வப்போது போனில் பேசுவது

                                          வழக்கமான ஒன்றுதான் என அவர்களுக்கு நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளன

                                          சஞ்சய் எப்படி இருக்கான்
                                          சஞ்சய் எப்படி இருக்கான்
                                          Posted in சினிமா

                                          காதல் தோல்வி குறித்து மனம் திறந்த நயன்தாரா

                                          காதல் தோல்வி குறித்து மனம் திறந்த நயன்தாரா

                                          தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, காதல் தோல்விகள் குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

                                          காதல் தோல்வி குறித்து மனம் திறந்த நயன்தாரா
                                          நயன்தாரா


                                          நயன்தாரா கேரளாவில் இருந்து சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு பட உலகில் நம்பர்-1 கதாநாயகியாக இருந்து வருகிறார்.

                                          10 வருடங்களாக அவரது மார்க்கெட்டை சக நடிகைகளால் சரிக்க முடியவில்லை. அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

                                          ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், விஷால், தனுஷ், சிம்பு என்று முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த

                                          பெருமையும் நயன்தாராவுக்கு உண்டு. இப்படி உச்ச நடிகையாக இருக்கும் அவரது சொந்த வாழ்க்கை சோகம் நிறைந்தது.

                                          லைட்பாய் முதல் எல்லா தொழிலாளர்களுடனும் அன்பாக பழகுவார். படப்பிடிப்பு இறுதி நாளில் எல்லோருக்கும் பரிசு

                                          பொருட்களை வாரி வழங்குவார், சக நடிகர்களுக்கு நட்சத்திர ஓட்டல்களில் பல லட்சம் செலவு செய்து விருந்து கொடுப்பார்

                                          என்றெல்லாம் நயன்தாராவின் நல்ல குணங்களை பட உலகினர் பட்டியலிடுகின்றனர்.

                                          ஆனால் இன்னொரு புறம் காதலில் அவர் தொடர்ந்து காயப்பட்டு வருகிறார். 2006-ல் வல்லவன் படத்தில் நடித்த போது சிம்புவுடன்

                                          அவரது முதல் காதல் துளிர்த்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் தயாரானார்கள். ஆனால் சில மாதங்களிலேயே அந்த காதல் முறிந்து போனது.

                                          நயன்தாரா

                                          அதன்பிறகு 2009-ல் பிரபுதேவாவுடன் நயன்தாராவின் இரண்டாவது காதல் மலர்ந்தது. வில்லு படத்தை பிரபுதேவா இயக்கியபோது

                                          அதில் கதாநாயகியாக நயன்தாரா நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு ஜோடியாக சுற்றினார்கள்.

                                          நயன்தாரா மதம் மாறி பிரபுதேவாவை மணந்து சினிமாவுக்கு முழுக்கு போடவும் தயாரானார். ஆனால் கடைசி நேரத்தில் அந்த காதலும் முறிந்து போனது.

                                          தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். நானும் ரவுடி தான் படத்தில் இருவரும் இணைந்து

                                          பணியாற்றினார். அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது.

                                          இந்நிலையில், நடிகை நயன்தாரா தனது காதல் முறிவு குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது:

                                          ”நம்பிக்கை இல்லாத காதல் நிலைக்காது. அதேபோல் நம்பிக்கை இல்லாத இடத்தில் சேர்ந்து வாழ்வதை விட தனியாக வாழ்வதே மேல்

                                          என உணர்ந்து, பழைய காதல்களை கடந்துவிட்டேன்” என கூறியுள்ளார்.

                                          காதல் தோல்வி குறித்து மனம் திறந்த
                                          காதல் தோல்வி குறித்து மனம் திறந்த
                                          Posted in சினிமா

                                          கணவரை விவாகரத்து செய்தார் பிரபல டி.வி. நடிகை

                                          கணவரை விவாகரத்து செய்தார் பிரபல டி.வி. நடிகை

                                          இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை சிம்ரன் கன்னா, கணவரை விவாகரத்து செய்துள்ளார்.

                                          கணவரை விவாகரத்து செய்தார் பிரபல டி.வி. நடிகை
                                          நடிகை சிம்ரன் கன்னா


                                          இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பிரபல நடிகையாக இருப்பவர் சிம்ரன் கன்னா.

                                          தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘யா ரிஷ்தா கியா கேஹ்லத ஹை’ என்ற தொடர் சிம்ரன் கன்னாவுக்கு புகழை பெற்றுக்கொடுத்தது.

                                          இவருக்கும், பரத் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு வினித் என்ற ஆண் குழந்தை

                                          உள்ளது. மகிழ்ச்சியாக சென்ற இவர்கள் குடும்ப வாழ்க்கையில் திடீர் புயல் வீசியது. இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப

                                          தகராறு ஏற்பட்டது. இதனால் சில மாதங்களுக்கு முன்பு பிரிந்தனர். கோர்ட்டிலும் விவாகரத்து வழக்கு தொடர்ந்தனர்.

                                          தற்போது இருவருக்கும் கோர்ட்டு விவாகரத்து வழங்கி உள்ளது. குழந்தை, தந்தையுடன் வசிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

                                          சிம்ரன் கன்னா
                                          சிம்ரன் கன்னா
                                          Posted in சினிமா

                                          அவர் மீது எனக்கு காதல் – வெட்கப் பட்டு சொன்ன நடிகை

                                          அவர் மீது எனக்கு காதல் – வெட்கப் பட்டு சொன்ன நடிகை

                                          96, பிகில் படத்தில் நடித்து பிரபலமான வர்ஷா பொல்லம்மா, பள்ளி பருவத்தில் அவர் மீது கிரஸ் என்று கூறியிருக்கிறார்.

                                          பள்ளி பருவத்தில் அவர் மீது கிரஸ் – வர்ஷா பொல்லம்மா
                                          வர்ஷா பொல்லம்மா


                                          விஜய் சேதுபதியின் 96 படத்தில் மற்றும் விஜயின் பிகில் படத்தில் நடித்தவர் நடிகை வர்ஷா பொல்லம்மா.

                                          வர்ஷா பொல்லம்மா பென்சிலில் வரைந்த ஜெர்சி மாடல்

                                          இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனக்கு விராட் கோலியின் மீது கிரஸ் இருப்பதாக கூறி சில புகைப்படங்களை

                                          வெளியிட்டுள்ளார். பள்ளி பருவத்தில் அவர் மீது கிரஸ் இருந்ததாகவும், அவருக்காக பென்சிலில் ஜெர்சி மாடல் வரைந்து வைத்ததாகவும் பதிவு செய்து இருக்கிறார்.

                                          இதை பார்த்த ரசிகர்கள் திருமணமானவர் மீது ஈர்ப்பா என அவரை கலாய்த்து வருகின்றனர்.

                                          வர்ஷா பொல்லம்மா
                                          வர்ஷா பொல்லம்மா
                                          Posted in இலங்கை செய்திகள்

                                          இந்தியாவில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு கொரனோ

                                          இந்தியாவில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு கொரனோ

                                          இந்தியாவுக்கு உல்லாச பயணம் மேற்கொண்டு விட்டு மீள் இலங்கை

                                          திரும்பிய பெண் ஒருவருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

                                          மருத்துவ சோதனைக்கு உட்படுத்திய போதே இந்த விடயம் தெரிய வந்துள்ளது

                                          கொழும்பு கொட்டென பகுதியில் வசிக்கும் இந்த பெண்ணோடு பழகியவர்கள் இந்த சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்

                                          Posted in சினிமா

                                          கொரனோவால் வீட்டை ஜிம்மாக மாற்றிய நடிகை

                                          கொரனோவால் வீட்டை ஜிம்மாக மாற்றிய நடிகை

                                          தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், ஊரடங்கால் தன்னுடைய வீட்டை ஜிம்மாக மாற்றி இருக்கிறார்.

                                          வீட்டை ஜிம்மாக மாற்றிய ரகுல் பிரீத் சிங்
                                          நடிகை ரகுல்பிரீத் சிங்


                                          கொரோனா ஊரடங்கில் நடிகர்-நடிகைகள் பலரும் வீட்டிலேயே உடற்பயிற்சிகள், யோகா செய்து தேகத்தை கட்டுக்கோப்பாக

                                          வைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது சம்பந்தமான வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.

                                          நடிகை ரகுல்பிரீத் சிங் உடற்பயிற்சி செய்யும் காட்சி

                                          நடிகை ரகுல்பிரீத் சிங்கும் உடற்பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். விதம் விதமாக உடற்பயிற்சிகள் செய்யும்

                                          புகைப்படங்களையும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார்.

                                          இப்போது ஜிம்முக்கு செல்லும் நிலைமை இல்லாததால் வீட்டையே உடற்பயிற்சி கூடமாக மாற்றி இருக்கிறார்.

                                          வீட்டில் இருக்கும் மரச்சாமான்கள் உதவியோடு உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் செய்கிறார்.

                                          வீட்டுக்குள்ளேயே அந்தரத்தில் தொங்குவது, ஓடுவது, குதிப்பது என்றெல்லாம் உடற்பயிற்சிகள் செய்கிறார்.

                                          ஊரடங்கு நமது ஆரோக்கியத்துக்கு தடையாக இருக்க கூடாது. கலோரிகளை

                                          கரைக்க ஜிம்முக்குதான் போக வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டிலேயே எளிமையான உடற்பயிற்சிகளை செய்யலாம் என்றார்.

                                          ரகுல் பிரீத் சிங்,
                                          ரகுல் பிரீத் சிங்,
                                          Posted in சினிமா

                                          வடிவேலு பாடிய கொரோனா பாடல்

                                          வடிவேலு பாடிய கொரோனா பாடல்

                                          தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான வடிவேலு, கொரோனாவை பற்றி உருக்கமான பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

                                          கொரோனாவை வெல்வோம் – வடிவேலு பாடிய உருக்கமான பாடல்
                                          வடிவேலு


                                          தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கி வருபவர் வடிவேலு. ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன்

                                          காமெடியில் ஜோடி சேர்ந்து கலக்கிய இவர், சிறிய இடைவெளிக்குப் பிறகு கமல் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

                                          இந்நிலையில் வடிவேலு கொரோனாவை வெல்வோம் என்று பதிவு செய்து ஒரு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.

                                          மனிதர்களின் அலட்சியமும், அதை கொரோனா எப்படி உணர வைத்தது என்றும் அவர் தனது பாடலின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

                                          வடிவேலு பாடிய கொரோனா
                                          வடிவேலு பாடிய கொரோனா