Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவில் உணவுக்கு வழியின்றி தவிக்கும் ஈழ தமிழ் குடும்பம் photo

இந்தியாவில் உணவுக்கு வழியின்றி தவிக்கும் ஈழ தமிழ் குடும்பம் photo

மதிப்பிற்குரிய சகோதரர் திரு. ராகவேந்திரா, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம்,

இரும்பூதிபட்டி என்கிற கிராமத்தில் இலங்கை தமிழர் குடியிருப்புகள் பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இதில் 10 குடும்பங்கள் அன்றாட சாப்பாட்டுக்கு கூட வழி இல்லை. வேலை இல்லாமல் அரிசி வாங்க கூட காசு இல்லாத நிலையில் இருக்கிறார்கள்.

ஒரு அக்கா எனக்கு போன் பண்ணி சாப்பிட கூட வழிஇல்லை என அழுதனர். இதனை கேட்டபின்பு எனக்கு மனம் வலித்தது. உடனே என் வீட்டிக்கு வாங்கி வைத்த ஒரு மூட்டை அரிசியை

கொடுக்கிறேன் என உறுதியளித்தேன். ஆகவே இவர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உதவி செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

உதவுவோர்கள் பாதிக்க பட்ட குடும்பத்துடன் நேரடியாக உரையாடி உதவிங்களை வழங்குங்கள் ,அல்லது இந்த பதிவை share பண்ணுங்கள் ,இதை பார்ப்பவர்கள் யாரவது இவரக்ளுக்கு உதவுவார்கள் .

மான தமிழா ,மன்றாடி கேட்கிறோம் , இவர்களுக்கு ஒருவேளை உணவு கொடு ,

🙏🙏🙏இப்படிக்கு S. சந்துரு, விதைகள் அறக்கட்டளை, கரூர் மாவட்டம். 0091-96988 77665, 0091-6380 348455.

மேலதிக தொடர்புகளுக்கு லண்டன் -0044 7536 707793

இந்தியாவில் உணவுக்கு
இந்தியாவில் உணவுக்கு
Posted in சினிமா

பலகோடி தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்தார் – 2 நடிகைகள் புகார்

பலகோடி தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்தார் – 2 நடிகைகள் புகார்

3 மடங்கு சம்பளம் தருவதாக கூறி இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பிரபல நடிகை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

3 மடங்கு சம்பளம் தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்தார்- இயக்குனர் மீது நடிகை புகார்

நடிகைகள் பலர் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவதாக மீ-டூவில் புகார் சொல்லி பரபரப்பை

ஏற்படுத்தினர். தமிழ், தெலுங்கு, இந்தி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இந்த குற்றச்சாட்டில் சிக்கினர். தற்போது

இன்னொரு நடிகையும் பாலியல் புகார் கூறியுள்ளார். அவரது பெயர் மான்வி கக்ரூ. இவர் நோ ஒன் கில்டு ஜெஸிகா, பீகே உள்ளிட்ட சில

படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்கள், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். டிவிஎப் டிப்ளிங், போர் மோர்

ஷாட்ஸ், மேட் இன் ஹெவன் போன்ற வெப் தொடர்கள் இவரது நடிப்பில் வந்தன.

மான்வி கக்ரூ அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: என்னை போனில் ஒருவர் அழைத்து, தன்னை இயக்குனர் என்று

அறிமுகப்படுத்தினார். ஒரு வெப் தொடர் எடுக்கிறோம், அதில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறினார். முதலில் கதையை

சொல்லுங்கள், எனக்கு பிடித்து இருந்தால் சம்பளம் உள்ளிட்ட மற்ற விஷயங்கள் குறித்து பேசலாம் என்றேன். அவர் எனது சம்பளத்தை

கூறினார். அது குறைவாக இருக்கிறது என்றேன். உடனே சம்பளத்தை மூன்று மடங்கு உயர்த்தி இந்த தொகைக்கு சம்மதமா? என்றார்.

ஒரேயடியாக இவ்வளவு சம்பளத்தை உயர்த்தி இருக்கிறாரே! என்று வியந்தேன். அதன்பிறகு இவ்வளவு சம்பளம் என்னால் கொடுக்க

முடியும், அதற்கு பதிலாக நீங்கள் அதற்கு உடன்பட வேண்டும் என்றார். இதனால் கோபமாகி அவரை திட்டினேன். இப்படி பேச

உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்? போலீசில் புகார் செய்வேன் என்று கோபமாக பேசிவிட்டு போனை வைத்து விட்டேன்.” இவ்வாறு

அவர் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பலகோடி தருவதாக
பலகோடி தருவதாக
Posted in உலக செய்திகள்

வெள்ளைக்கார பெண்களுக்கு கொரனோ பரப்பிய பொலிஸ்

வெள்ளைக்கார பெண்களுக்கு கொரனோ பரப்பிய பொலிஸ்

உத்திரகாண்டில் ஊரடங்கை மீறி சுற்றித்திருந்த வெளிநாட்டினரை பிடித்த போலீஸ் அவர்களை ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுத வைத்து நூதன தண்டனை வழங்கினர்.

ஊரடங்கை மீறிய வெளிநாட்டினர் – ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுத வைத்த போலீஸ்
தண்டனை பெற்ற வெளிநாட்டினர்

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 8 ஆயிரத்து 447 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி

செய்யபட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 273 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மாதம் 25-ம் தேதி முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய காரணங்களுக்கு அல்லாமல் மக்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஆனால், பொதுமக்களில் சிலர் ஊரடங்கை மீறி அத்தியாவசிய

காரணங்கள் அல்லாமல் சாலைகளிலும், பொது இடங்களிலும் சென்ற வண்ணம் உள்ளனர்.

அவ்வாறு ஊரடங்கை மீறுபவர்களை பிடிக்கும் போலீசார் அவர்கள் மீது குற்றங்களுக்கு ஏற்றார்போல் வழக்குகளும் பதிவு செய்து சிறையிலும் அடைக்கின்றனர்.

அதேபோல் சில சமயங்களில் ஊடரங்கை மீறுபவர்களுக்கு போலீசார் நூதனை தண்டனைகளும் வழங்குகின்றனர்.

அவ்வாறான ஒரு சம்பவம் உத்திரகாண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஆனால், அங்கு ஊரடங்கை மீறியவர்கள் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆவர்.

தண்டனை பெற்ற வெளிநாட்டினர்

உத்திரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் நகரில் பாயும் கங்கை நதிக்கரையோரம் நேற்று போலீசார் ரோந்து பணியில்

ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 10 பேர் ஊரடங்கு உத்தரவை மீறி

கங்கை நதிக்கரையோரம் சுற்றித்திரிந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

அவர்களை பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வெளிநாட்டினர் 10 பேரும் ஊரடங்கை மீறி கங்கையை சுற்றிப்பார்க்க வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, ஊரடங்கை மீறிய வெளிநாட்டினர் 10 பேரிடமும் ‘ நான் ஊரடங்கு விதிகளை பின்பற்றவில்லை, என்னை மன்னித்து

விடுங்கள்’ என 500 முறை எழுதச்சொல்லி நூதன தண்டனை வழங்கினர்.

தாங்கள் செய்த தவறை உணர்ந்த வெளிநாட்டினர் அனைவரும் தனித்தனியாக போலீசார் வழங்கிய இந்த தண்டனையை ஏற்ற 500

முறை ‘ நான் ஊரடங்கு விதிகளை பின்பற்றவில்லை, என்னை மன்னித்து

விடுங்கள்’ என எழுதி கொடுத்தனர். இதையடுத்து அந்த வெளிநாட்டினரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

வெள்ளைக்கார பெண்களுக்கு
வெள்ளைக்கார பெண்களுக்கு
Posted in உலக செய்திகள்

கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதையடுத்து குழந்தை நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

கேரளாவில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது


கேரளாவில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பு கேரளா மாநிலத்தில் தான் கண்டறியப்பட்டது.

காசர்கோடு அருகே கும்பலா பகுதியில் இருந்து வளைகுடா நாட்டில் பணிபுரிந்த நபர் கடந்த மாதம் முதல் வாரம் கேரளா திரும்பினார்.

அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி ஆனது.

அவர் மூலம் அந்த நபரின் மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கணவன் -மனைவி இருவரையும் பரியராம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அந்த பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன் -மனைவி இருவரும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டனர்.

கொரோனா தொற்றில் இருந்து மீண்ட கணவரை வீட்டுக்கு அனுப்பிய டாக்டர்கள், அவரது மனைவிக்கு பிரசவ நேரம் நெருங்கியதால் அவரை மட்டும் ஆஸ்பத்திரியில் தங்க வைத்தனர்.

நேற்று முன்தினம் அந்த பெண்ணுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை நல்ல உடல் நலத்துடன் 3 கிலோ எடையுடன்

காணப்பட்டது. தற்போது காயும், சேயும் ஆஸ்பத்திரியில் நலமுடன் இருப்பதாக அவருக்கு பிரசவம் பார்த்த அரசு டாக்டர்கள்

தெரிவித்தனர். கொரோனா பாதித்த பெண்ணுக்கு குழந்தை பிறந்து இருப்பது கேரளாவில் இதுவே முதல் முறை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த 29 வயது கர்ப்பிணி பெண் கடந்த 10-ந் தேதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்தநிலையில் அவருக்கு காய்ச்சல், சளி, இருமல் ஏற்பட்டதால் அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் அந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவருக்கு கரூரைச் சேர்ந்த அவரது குடும்பத்தினர்

அல்லது உறவினர்களிடம் இருந்து நோய் தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உள்ளது.

Posted in சினிமா

நடிகையின் குடியிருப்புக்கு சீல் வைத்த அதிகாரிகள்

நடிகையின் குடியிருப்புக்கு சீல் வைத்த அதிகாரிகள்

பிரபல இந்தி நடிகை வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கு அதிகாரிகள் சீல் வைத்திருக்கிறார்கள்.

இந்தி நடிகையின் குடியிருப்புக்கு சீல் வைத்த அதிகாரிகள்
அங்கிதா லோகந்தே


பிரபல இந்தி நடிகை வசிகங்கனா ரனாவத் நடித்த ஜான்சி ராணி லட்சுமி பாய் வாழ்க்கை வரலாற்று படமான மணிகர்னிகாவில்,

ஜால்காரிபாய் எனும் போராளி வேடத்தில் நடித்தவர் நடிகை அங்கிதா லோகந்தே. டைகர் ஷெரப்பின் பாகி 3 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அங்கிதா வசித்து வருகிறார். அந்த குடியிருப்பில் உள்ள ஒருவருக்கு கொரோனா

நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டிற்கு சென்று திரும்பியதால் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவருக்கு தனிமை வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வரும் அதிகாரிகள், அங்கிதா வசித்து வரும் அடுக்குமாடி

குடியிருப்பை தனிமைப்படுத்தி சீல் வைத்துள்ளனர். மேலும், அந்த அப்பார்ட்மெண்ட்டில் வசித்து வரும் மற்றவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

நடிகையின் குடியிருப்புக்கு
நடிகையின் குடியிருப்புக்கு
Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

இந்தியாவில் கொரனோ தாக்குதல் 29 பேர் பலி – 1071 பாதிப்பு

இந்தியாவில் கொரனோ தாக்குதல் 29 பேர் பலி – 1071 பாதிப்பு

இந்தியாவில் பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி இதுவரை இருபத்தி ஒன்பது பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 1071 பேர் பாதிக்க

பட்டுளளதாக இந்தியா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

எனினும் இழப்பு இதைவிட அதிகமாக இருக்கலாம் என நம்ப படுகிறது ,அரசுகள் கவிழ்ந்து விடும் என்பதால் இழப்புக்களை

மூடிமறைத்து குறைத்து வெளியிட்டு வருவதாக குற்ற சாட்டுக்கள் தொடர்ந்து முன் வைக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

இந்தியாவில் கொரனோ
இந்தியாவில் கொரனோ
Posted in சினிமா

தமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை – ராஷ்மிகா

தமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை – ராஷ்மிகா

தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை என்று கூறியுள்ளார்.

தமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை – ராஷ்மிகா
ராஷ்மிகா


நடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த ஒரு வருட காலத்தில் கிடுகிடுவென முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டார். தெலுங்கு மற்றும் தமிழில் பிசியாக வலம் வரும் இவர்,

தற்போது தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் நடிக்கிறார். விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் கூட இவர் தான் கதாநாயகியாக நடிக்கிறார் என்று சொல்லப்பட்ட

நிலையில் அந்த வாய்ப்பு திடீரென பேட்ட படத்தில் நடித்த மாளவிகா மோகனனுக்கு சென்று விட்டது.

தற்போது தெலுங்கில் பீஷ்மா என்கிற படத்தில் நடித்துள்ள ராஷ்மிகா, அந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில்

கலந்து கொண்டு வருகிறார். அப்போது அவரிடம் உங்களது நண்பர், பாய்பிரண்ட் மற்றும் உங்களுக்கு கணவராக

வரப்போகிறவர் என எந்தெந்த நடிகர்களை கூறுவீர்கள் என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது..

ராஷ்மிகா

அதில் தெலுங்கு நடிகர் நிதின் எனக்கு நண்பராக இருக்க வேண்டும் எனக் கூறியவர், எனக்கு பாய் பிரண்டாக இருக்க

வேண்டும் என நான் விரும்புவது நடிகர் விஜய்யை தான் என கூறியுள்ளார் ராஷ்மிகா. ஆனால் தனக்கு கணவனாக

வரப்போகும் நபர் என எந்த நடிகரையும் குறிப்பிட்டுச் சொல்லாதவர், தமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை என கூறியுள்ளார்.

தமிழ் நடிகரை திருமணம்
தமிழ் நடிகரை திருமணம்
https://www.youtube.com/watch?v=Y6Uc68tIwx4
Posted in சினிமா

ரசிகர்களை பதற வைத்த அந்த நடிகை

ரசிகர்களை பதற வைத்த அந்த நடிகை

நடிகை சிம்ரன், தான் ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களை பதற வைத்த சிம்ரன்
சிம்ரன்
நேருக்கு நேர், அவள் வருவாளா, நட்புக்காக, துள்ளாத

மனமும் துள்ளும், பம்மல் கே.சம்பந்தம் என்று பல வெற்றி படங்களில் நடித்துள்ள நடிகை சிம்ரன், புகழின் உச்சியில்

இருந்த போதே 2003ம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு திரையுலகை விட்டு விலகியே இருந்தார்.

அதன் பின்னர், நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் தீவிரமாக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்படத்தில் வில்லியாக மிரட்டிய சிம்ரனுக்கு ரஜினியுடன் ஜோடியாக நடித்த பேட்ட

படம் வரவேற்பை கொடுத்தது. மீண்டும் பழைய சிம்ரனைப் பார்த்த மகிழ்ச்சியில் அவரது ரசிகர்களும் கொண்டாடினார்கள்.

சிம்ரன்

இந்நிலையில், அவரது ட்விட்டர் பக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் படத்தின் படப்பிடிப்பின் போது

எடுக்கப்பட்டது என்று கூறி நெத்தி, கை, கால்களில் எல்லாம் ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை

வெளியிட்டு ரசிகர்களை பதற வைத்து விட்டார். இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், உண்மையிலேயே

நடிகை சிம்ரனுக்கு அடிப்பட்டுவிட்டதோ என்று கலங்கி, ஆறுதல் சொல்லி வருகிறார்கள். பின்னர், இது படப்பிடிப்பு

தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரிந்த பிறகு தான் நிம்மதி அடைந்தனர்.

ரசிகர்களை பதற வைத்த
ரசிகர்களை பதற வைத்த
https://www.youtube.com/watch?v=Y6Uc68tIwx4
Posted in இலங்கை செய்திகள்

மகிந்த ராஜபக்சேவுடன் ராகுல் காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு

மகிந்த ராஜபக்சேவுடன் ராகுல் காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு

இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சந்தித்தனர்.

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் ராகுல் காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு


இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்த ராகுல் காந்தி, மன்மோகன் சிங்
புதுடெல்லி:

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே 4 நாள் பயணமாக இன்று மாலை இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையம் வந்த இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை

மத்திய மந்திரி சஞ்சய் டோத்ரே கைகுலுக்கி வரவேற்றார். அவருடன் தூதரக அதிகாரிகளும் வந்திருந்தனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை சந்தித்துப் பேசும் ராஜபக்சே, இருநாட்டு

உறவுகளை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இந்நிலையில், இந்தியா வந்தடைந்த இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று சந்தித்தனர்.

Posted in சினிமா

மகனுடன் இணைந்து நடிக்கும் விக்ரம்

மகனுடன் இணைந்து நடிக்கும் விக்ரம்

ஆதித்ய வர்மா படத்தை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிக்க இருக்கும் படத்தில் விக்ரமும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகனுடன் இணைந்து நடிக்கும் விக்ரம்
விக்ரம் – துருவ் விக்ரம்
ஆதித்ய வர்மா மூலம் நல்ல நடிகர் என்ற பெயருடன்

அறிமுகமாகி இருக்கிறார் விக்ரமின் மகன் துருவ். நல்ல வரவேற்பு கிடைத்ததால் இரண்டாவது படத்தின் கதை

தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள் தந்தையும் மகனும். பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் விக்ரமும், துருவ்வும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல

இயக்குனர் ஒருவர் சொன்ன கதை அப்பாவையும், மகனையும் கவர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில்

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் – துருவ் விக்ரம்

விக்ரம், தற்போது அஜய் ஞானமுத்து இயக்கி வரும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மகனுடன் நடிக்கும் விக்ரம்
Posted in இலங்கை செய்திகள்

கன்னட இனவெறி அமைப்புகளின் அத்துமீறல் முறியடிப்பு photo

தமிழகத்தில் -கன்னட இனவெறி அமைப்புகளின் அத்துமீறல் முறியடிப்பு*
……………………………………………..

கன்னட கொடி தமிழ்நாட்டில் அவமதிக்கப்பட்டதாக
கன்னட இனவெறி அமைப்புகள் கருநாடகாவில் சமூக ஊடகங்களிலும்


தொலைக்காட்சிகளிலும் செய்தியை பரப்பி
கர்நாடகாவில் இருக்கும் தமிழ்நாடு சுமையுந்து ஓட்டுனர்களை அவமதித்து அதை காணொலியாகவும் பரப்பினர்.

அதை தொடர்ந்து இன்று பேரணியாக தமிழ்நாடு எல்லை ஒசூரில் நுழைய திட்டமிட்டு வந்தனர்.


வருபவர்களை எதிர்கொள்ள நாம் தமிழர் கட்சி,
தமிழ்த் தேசியப் பேரியக்க தோழர்கள் திரளாக எல்லைக்கு சென்றனர்.


தமிழ்நாடு எல்லையில் தமிழக காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு திரும்பி செல்ல வலியுறுத்தப்பட்டனர்.

கருநாடகாவில் பேரணியாக வந்த கன்னட இனவெறியினர்
கன்னட காவல்துறையால் கைது செய்யப்படாமல் ,
கருநாடக எல்லையில் சாலையில் சாமியானா

அமைக்கப்பட்டு விருந்தினரை போல் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


அவர்களை கைது செய்யாமல் நாங்கள் திரும்பி செல்ல மாட்டோம் என தோழர்கள் முழக்கமிட்டனர்.

சிறிது நேரத்தில் கன்னட காவல்துறை கன்னட வெறி அமைப்பினரை கைது செய்து எல்லையில் இருந்து அப்புறப்படுத்தியது.

எல்லை போராட்டத்தில்
நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் ரீகன் தமிழ்மாறன்,


துணைத் தலைவர் தோழர் உதிரமாடன்,
தமிழ்த் தேசியப் பேரியக்க பொதுக்குழு உறுப்பினர்
தோழர் செம்பரிதி,


தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தோழர் நடவரசன் உள்ளிட்ட திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.

தமிழர்களின் அமைதியை குலைக்கும் வண்ணம் இது போன்ற செயல்கள், கன்னட வெறிஅமைப்புகளால்
கன்னட காவல்துறை ஒத்துழைப்போடு நடந்து வருகிறது.

நாம்தமிழர் போராளி பிழைகள் தமிழர் தேசிய புலிக்கொடியை தானாகி பிடித்தவாறும் ,தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் படத்தை தொழில் பதிந்தவரும் ,அவரது

படம் பொறித்த சால்வையை தோளில் போட்டவாறு நாடந்து செல்லும் வீர காட்சியை பார்வையிட்ட கன்னட வெறியர்கள் அதிர்ந்து போயினர் .

ராஜனினை சீமான் கடுமையாக சாடி வரும் நிலையில் ரஜனியின் தூண்டுதலில் இந்த கும்பல் வன்முறையில் ஈடுபட்டு இருக்க கூடும் என அஞ்ச படுகிறது

தமிழர்களாய் நாம் ஒன்றெழுந்து
இனக்காப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்துவோம்

கன்னட இனவெறி
கன்னட இனவெறி
கன்னட இனவெறி
கன்னட இனவெறி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை தேர்தலை உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா

இலங்கை தேர்தலை உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா

இலங்கையில் இடம்பெயரம் தேர்தலை இந்திய மிக அவதானமாக பார்த்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது,ஆனால் இந்தியாவின் உளவுத்துறையான ரோ உள்ளே நுழைந்து மகிந்தா அணிக்கு எதிராக செயல் பட்டு வருவதாக இரகசிய தகவல்கள் கசிய பெற்றுள்ளன ,அதனாலேயே இந்தியா மீது மகிந்தா அணியினர் கடுப்பில் உறைந்துள்ளனர்