Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
1.561 பேர் கைது – தொடரும் வேட்டை
1.561 பேர் கைது – தொடரும் வேட்டை
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,561 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழில் எறிகணை மீட்பு – தப்பிய மக்கள்
யாழில் எறிகணை மீட்பு – தப்பிய மக்கள்
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள கலவையே ஒன்றுக்குள் இருந்து எறிகணை ஒன்று மீட்க
பட்டுள்ளது ,துப்பரவு பணியாளர்கள் மேற்கொண்ட சுத்த நடவடிக்கையின் பொழுது அதற்குள் இருந்து இந்த குண்டு மீட்க பட்டுள்ளது
நாயாறு – நந்திக்கடல் – காக்கைதீவு என நாடெங்கும் அபிவிருத்தி: அமைச்சர் டக்ளஸ்
நாயாறு – நந்திக்கடல் – காக்கைதீவு என நாடெங்கும் அபிவிருத்தி: அமைச்சர் டக்ளஸ்
நந்திக்கடல், நாயாறு களப்புக்கின் புனரமைப்பு பணிகளை நடைமுறைப்படுத்துமாறு தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் வோனந்தா, யாழ். காக்கைதீவு கடல் நீரேரியை தூர்வாருவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.
நடளாவிய ரீதியில் காணப்படுகின்ற களப்புக்களை புனரமைக்கும் வேலைத் திட்டம் தொடர்பாக இடம்பெற்ற மீளாய்வுக் கலந்துரையாடலின் போதே, கடற்றொழில் அமைச்சரினால் மேற்குறித்த ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்ற சுமார் ஒன்பது பிரதான களப்புக்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நக்டா, நாரா மற்றும் கடற்றொழில் திணைக்களம் ஆகியவற்றிற்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவற்றின் தற்போதைய நிலை தொடர்பாக ஆராயும் நோக்கில் இன்றைய கூட்டம் நடைபெற்றிருந்தது.
இதன்போது, முல்லைத்தீவு, நந்திக்கடலை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டு விட்டதாக தெரிவித்த அதிகாரிகள், நந்திக்கடல் அபிவிருத்தி திட்டம் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அதேபோன்று, நாயாறு களப்பு அபிவிருத்திக்கான விலைமனுக் கோரல் நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில், விலைமனுக் கோரல் தொடர்பான விளம்பரங்களை அமைச்சின் இணையத் தளத்தில் தகுதியானவர்களை தெரிவு செய்து வேலைகளை ஆரம்பிக்குமாறு தெரிவித்தார்.
அதேபோன்று, ரெக்கவ களப்பு அபிவிருத்தி திட்டம் மதிப்பீட்டுக்காக பிரதேச சபைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அருகம்பே களப்பு தொடர்பான அபிவிருத்தி திட்டங்கள் கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தாகவும் கடற்றொழில் அமைச்சருக்கு தெரிவித்த அதிகாரிகள், அனுமதி கிடைத்தவுடன் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்க முடியுமெனவும் சுட்டிக்காட்டினர்.
இந்நிலையில், அம்பாறை மாவட்டத்திற்குரிய பாணம மற்றும் பாணகல களப்புக்களின் அபிவிருத்திக்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் எனவும் புத்தளம், சிலாபம், முந்தல் ஆகிய களப்புக்களும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமெனவும் அமைச்சர் அதிகாரிகளிடம் எடுத்துரைத்தார்.
மேலும், யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடலட்டை பண்ணைகளை அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பூநகரி களப்புக்களில் இறால் வளர்ப்பு தொடங்குவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நக்டா நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அத்துடன், யாழ். காக்கைதீவு களப்பு தூர் வாரப்பட வேண்டுமென தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் அதற்கான நிதியை திரட்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.
மேலும், நடெங்கிலுமுள்ள பிரதான 09 களப்புக்களின் அபிவிருத்திக்கான திட்டங்களையும் இவ்வருட இறுதிக்குள் வகுத்து அப்பணிகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இக்கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க, நக்டா நிறுவனத்தின் தலைவர் நிமல் சந்திரரத்ன, நாரா நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நவரத்னராஜா உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இலங்கை சீனா வர்த்தக ஒப்பந்தம் – கொதிக்கும் இந்தியா
இலங்கை சீனா வர்த்தக ஒப்பந்தம் – கொதிக்கும் இந்தியா
இலங்கை வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு அமைக்கபட்டுள்ளது.
சீனாவிலுள்ள இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கோஹோனவின் தலைமையில் இந்த அமைப்பு பேஜீங் நகரில் இலங்கை தூதரக அலவலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கிடையில் பொருளாதார வர்த்தக தொடர்புகளை விரிவு படுத்துவதே இதன் நோக்கமாகும்.
இந்த அமைப்பின் ஊடாக இலங்கை உற்த்தி பொருட்களை சீன வர்த்தக சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கு வாய்ப்பு கிட்டும் என்று சீனாவிலுள்ள இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கோஹோன தெரிவித்தார்.
நண்பருடன் பீச் குளியல்… வைரலாகும் நடிகையின் புகைப்படங்கள்
நண்பருடன் பீச் குளியல்… வைரலாகும் நடிகையின் புகைப்படங்கள்
பிரபல பாலிவுட் நடிகையும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளுமான ஜான்வி கபூரின் புகைப் படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஆண் நண்பருடன் பீச் குளியல்… வைரலாகும் நடிகையின் புகைப்படங்கள்
நண்பருடன் ஜான்வி கபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர் சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருவார்.
இன்று ஜான்வி, கடற்கரையில் தனது ஆண் நண்பருடன் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து, அந்த ஆண்
நண்பர் யார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தாயை கொன்று, உடலை சமைத்து சாப்பிட்ட வாலிபன்
தாயை கொன்று, உடலை சமைத்து சாப்பிட்ட வாலிபன்
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயை கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி சமைத்து சாப்பிட்ட வாலிபர் பற்றிய செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
ஸ்பெயினில் தாயை கொன்று, உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட வாலிபருக்கு 15 ஆண்டு சிறை
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் ஆல்பர்ட்டோ சான்ஸ் கோமஸ் ( வயது 28). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 60 வயதான தனது தாயுடன் ஏற்பட்ட தகராறின் போது, பெற்ற தாய் என்றும் பாராமல் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
பின்னர் அவர் தனது தாயின் உடலை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் டப்பாக்களில் போட்டு வைத்தார். 2 வாரங்களுக்குப் பிறகு அந்த உடல் பாகங்களில் சிலவற்றை அவர் சமைத்து சாப்பிட்டார். மேலும் தனது நாய்க்கும் அதனை உணவாக அளித்தார்.
இதனிடையே கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆல்பர்ட்டோவின் தாயின் நெருங்கிய தோழி ஒருவர் தனது தோழியை நீண்ட நாட்களாக காணவில்லை என போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் ஆல்பர்ட்டோவின் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பிளாஸ்டிக் டப்பாக்களில் பெண்ணின் உடல் பாகங்கள் இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ந்து போயினர். இதையடுத்து அவர்கள் ஆல்பர்ட்டோவை பிடித்து விசாரித்தபோது உண்மை தெரியவந்தது. அதனைதொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்தநிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று மாட்ரிட் கோர்ட்டில் நடந்தது. விசாரணையின்போது ஆல்பர்ட்டோ, கொலை நடந்த சமயத்தில் தான் மன நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறினார். அதனை ஏற்க மறுத்த நீதிபதி ஆல்பர்ட்டோவுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்திய பெண் அமெரிக்காவில் நீதிபதி ஆகிறார்
இந்திய பெண் அமெரிக்காவில் நீதிபதி ஆகிறார்
இந்தியப்பெண்ணை அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் மாவட்ட நீதிபதியாக நியமிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார்.
இந்திய பெண் அமெரிக்காவில் நீதிபதி ஆகிறார் – ஜோ பைடன் பரிந்துரை
அமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தில், ககெனக்டிகட் மாவட்ட நீதிபதி பதவியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண், சரளா வித்யா நாகலா என்பவரை நியமிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். இந்தப் பெண் சிவில் உரிமை வக்கீல் ஆவார்.
இந்த பரிந்துரையை செனட் சபை ஏற்று அங்கீகரித்தால், கனெக்டிகட் மாகாணத்தில், கனெக்டிகட் மாவட்ட நீதிபதி பதவியில் தெற்காசியாவை சேர்ந்த ஒருவர் அமர்வது இதுவே முதல் முறை ஆகும்.
செனட் சபையில் ஜனநாயக கட்சிக்கும், குடியரசு கட்சிக்கும் தலா 50 இடங்கள் இருக்கின்றன. ஆனால் பெரும்பான்மையை தீர்மானிக்க துணை ஜனாதிபதி, ஓட்டு போட முடியும். எனவே 51
வாக்குகளுடன் சரளா வித்யா நாகலாவின் நியமனம் செனட் சபையால் அங்கீகரிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோ பைடன்
சரளா வித்யா நாகலா, 2017 முதல் அதே கனெக்டிகட் மாகாணத்தில், கனெக்டிகட் மாவட்ட அட்டார்னியின் அலுவலகத்தில் குற்றப்பிரிவில் துணைத்தலைவராக பணியாற்றி வருகிறார். முதலில் இவர் 2012-ல் அமெரிக்க அட்டார்னி அலுவலகத்தில் சேர்ந்து, வெறுக்கத்தக்க குற்றங்கள் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
2010-12 காலகட்டத்தில் சான்பிரான்சிஸ்கோவில் முங்கர் டோல்ஸ் அண்ட் ஓல்சனில் பணியாற்றி உள்ளார்.
இவர் 2008-09 கால கட்டத்தில் 9-வது அப்பீல் கோர்ட்டு நீதிபதி சூசன் கிராபரின் சட்ட எழுத்தாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.
இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்க் கொல்லியான கொரோனா வைரஸ் ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
ஒரு சில நாடுகள் மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு வந்துள்ள நிலையில் பல நாடுகளில் கொரோனா வைரசின் புதிய, புதிய அலைகள் கடும் பாதிப்புகளை
ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், இங்கிலாந்தில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.
குறிப்பாக, இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா மாறுபாடு கொரோனா வைரஸ் அங்கு வேகமாகப் பரவிவருகிறது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை கடந்த சில நாட்களாக இருந்து வந்தது.
இந்த நிலையில், இன்றைய பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டி அதிரவைத்துள்ளது. அந்நாட்டில் கடந்த பிப்ரவரி 25- ஆம் தேதிக்குப் பிறகு ஒருநாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு இதுதான் ஆகும்.
இங்கிலாந்தில் 9,055- பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், 9 பேர் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்
தாய்வான் எல்லையில் சீனா போர் விமானங்கள் – பதட்டம் அதிகரிப்பு
தாய்வான் எல்லையில் சீனா போர் விமானங்கள் – பதட்டம் அதிகரிப்பு
தாய்வான் நாட்டின் எல்லை மிக அருகில் சீனாவின் போர் விமானங்கள் பறப்பில் ஈடுபட்டுள்ளன ,இதனால் எல்லையோர தாய்வான் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்
தாய்வான் தமது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடராக கூறி வருகின்ற நிலையில் இந்த விமானங்கள் பறப்பில் ஈடுபட்டுள்ளது ,நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள்து
- ஏடனில் உள்ள மாஷிக் அரண்மனை மீதான ஹூதி தாக்குதல்
- ஹூதிகளின் பீரங்கித் தாக்குதல் ஐந்து பொதுமக்கள் காயமடைந்தனர்
- எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்
- ஏடன் விமான நிலையம் மீது ஏவுகணைகள் தாக்குதல்
- சவூதி அரேபியா மீதான ‘பதற்றத்தை அதிகரிக்கும்’ ஹூதி தாக்குதல்களை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்
- ஹோர்முஸ் இராணுவம் மற்றும் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ‘முழுமையான கண்காணிப்பில்’ உள்ளது IRAN
- புதிய அமைச்சரவையில் ஈரான் ஆதரவு குழுக்களை இணைப்பதற்கு ஈராக் அரசாங்கத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது
முறிந்த சமரச பேச்சு – பலஸ்தீனம் மீது இஸ்ரேல் விமான தாக்குதல்
முறிந்த சமரச பேச்சு – பலஸ்தீனம் மீது இஸ்ரேல் விமான தாக்குதல்
பலஸ்தீனத்தின் புதிய அதிபர் நியமிக்க பட்ட முதல் நாளில் பலஸ்தீனம் காசா பகுதியில் இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதலை நடத்தியுள்ளன
இதனால் பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது ,எகிப்த் மற்றும் அமெரிக்காவின் முயற்சியில் நிலவி வந்த அமைதி நிலை சீர்குலைந்துள்ளது
இம்முறையும் இஸ்ரேல் வலிந்த்து தாக்குதலை நடத்தியுள்ளது
இதனை அடுத்து கமாஸ் மீளவும் தாக்குதலை தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது
பயண கட்டுப்பாடு எப்பொழுது நீக்க படும் – அரசு இப்படி சொல்கிறது
பயண கட்டுப்பாடு எப்பொழுது நீக்க படும் – அரசு இப்படி சொல்கிறது
தற்போது நடைமுறையிலுள்ள பயணக்கட்டுப்பாட்டை நீக்கி நாட்டை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்காக நாடு திறக்கப்படுமா?
என்பது தற்போதைய நிலைகளை ஆய்வுசெய்து ஜூன் மாதம் 19 அல்லது 20 ஆம்திகதியளவிலேயே
தீர்மானிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை
அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பில் ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
முல்லைத்தீவில் ஏழை குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுக்கும் இராணுவம்
முல்லைத்தீவில் ஏழை குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுக்கும் இராணுவம்
வணக்கத்துக்குறிய கல்கமுவ சாந்தபோதி தேரர் மற்றும் பிலியந்தல அமிதகொஸா தேரர் ஆகியோரின் நிதியுதவியின் மூலம், முல்லைத்தீவு மன்னங்கடல் பிரதேசத்தில் வசிக்கும் ஒரு வறிய
குடும்பத்திற்காக நிர்மாணிக்கப்பவுள்ள புதிய வீட்டிற்கான தொழில்நுட்ப நிபுணத்துவ மற்றும் மனித வள வசதிகள், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 64 வது
படைப் பிரிவின் 641 வது பிரிகேடின் கீழ் உள்ள 14 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினரால் வழங்கப்பட்டுள்ளன.
இந்த திட்டமானது பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவ தளபதியின் எண்ணகருவிற்கமைய அந்தந்த பகுதிகளில் உள்ள ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை
உயர்த்துவதற்கும், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொது மக்களிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காகவும் முன்னெடுக்கப்பட்டது.
இந்த வீட்டை நிர்மாணிப்பதற்காக பிக்குகள் மற்றும் 64 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுள கருணாரத்ன ஆகியோரால் சனிக்கிழமை (12) ஆம் திகதி அடிகல் நாட்டப்பட்டது.
இந்த திட்டமானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஜ அவர்களின் வழிக்காட்டலுக்கமைய 14 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை
அதிகாரி லெப்டினன் கேணல் சி.டி.அதுல்தொல்ஆராச்சி அவர்களின் ஒருங்கிணைப்பில் மேற் கொள்ளப்பட்டது.
சீனாவின் ஆதரவுடன் நாம் முன்னேற முடிந்தது – மகிந்த திமிர் பேச்சு – இந்தியா கொதிப்பு
சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி இயக்கத்தின் ஆதரவு காரணமாக ஒரு அணிசேரா
நாடாக சுதந்திர உலகில் முன்னேற முடிந்தது என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (15) பிற்பகல் அலரி மாளிகையில் தெரிவித்தார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு விழாவில், காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு விழா கொண்டாடப்படும் இச்சந்தர்ப்பத்தில் எமது அன்பான வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறோம். அக்கட்சியின் நூறாவது ஆண்டு விழா
கொண்டாடப்படும் இவ்வருடம் ஆசியாவிலுள்ள நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமானதாகும் என்பது எனது நம்பிக்கையாகும்.
சீனாவின் எழுச்சியை அடிப்படையாகக் கொண்டே இந்நூற்றாண்டில் ஆசியாவின் எழுச்சி இடம்பெறும் என்பது எம் அனைவரதும் நம்பிக்கையாகும். அந்த வரலாற்று வெற்றியை சீனாவிற்கு
பெற்றுக் கொடுத்தது இத்தால் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் 1921ஆம் ஆண்டு பன்னிரெண்டு பேர் ஒன்றிணைந்து உருவாக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூலமாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
அதனாலேயே சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆசியாவிற்கே மிகப்பெரியதும், முக்கியமானதுமான கட்சி என்று நான் கூறினேன்.
சீனா என்பது நாடு மட்டுமல்ல. சீனா என்பது மாபெரும் நாகரிகம். சீனா பல்வேறு நாடுகளால் படையெடுப்பிற்கு உட்படுத்தப்பட்ட தவிர சீனா ஒருபோதும் பிற நாடுகள் மீது
படையெடுக்கவில்லை. அத்துடன் உலகின் பெரும் தொகையான மக்கள் ஒரு தன்னிறைவு பொருளாதாரத்தை நம்பியுள்ள நாடு இதுவாகும்.
அது மட்டுமல்லாமல், விவசாயத்தின் மீது நம்பிக்கை கொண்டு அதன் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட நாடாக சீனா பார்க்கப்படுகிறது. அதனால் தான் சீனாவை ஒரு சிறந்த நாகரிகம் என்று நான் கூறினேன்.
சீன கம்யூனிஸ்ட் கட்சி அந்த நாகரிகத்தின் அடையாளத்தை இனங்கண்டு பணியாற்றியமையாலேயே இன்று சீனாவை உலகின் சக்தியாக வளர்ச்சி பெறச்செய்ய முடிந்துள்ளது.
சீனாவிற்கும் எங்களுக்கும் இடையே வரலாற்று ஒற்றுமைகள் உள்ளன. சீனாவின் பெரிய சுவரை சீனா கட்டும் போது, நமது மன்னர் தேவநம்பியதிஸ்ஸ மன்னன் அனுராதபுர மஹமேவனா உயனவினை நிறுவுகிறார். எங்கள் வரலாற்று ஒற்றுமைகள் மற்றும் நட்பு மிகவும் சக்திவாய்ந்தவை.
ஒரு சக்திவாய்ந்த நாடாக சீனா நமது சுயாதீனத்தை பாதுகாக்க பெரிதும் உதவியது. இது பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைய எங்களுக்கு உதவியது.
சீன அரிசி இரப்பர் ஒப்பந்தம் இலங்கையர்களுக்கு இன்னும் நினைவிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில் இலங்கையின் சுதந்திரத்திற்காக சீனா செய்த சேவையை நாம் ஒருபோதும் மறக்க முடியாது.
எமது வரலாற்று ரீதியான நண்பர் என்றே நான் எப்போதும் சீனாவிற்கு கூறினேன். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிதான் சீன கம்யூனிஸ்ட் கட்சியை எங்களுக்கு மிக நெருக்கமாக்கியது.
கடந்த காலத்தில், பௌத்தமே சீனா மற்றும் இலங்கையை இணைத்தது. சுதந்திரத்திற்குப் பின்னர், எங்களிடையே உறவை முதலில் கட்டியெழுப்பியது கம்யூனிஸ்ட் கட்சிதான். சீன கம்யூனிஸ்ட் கட்சியைப் போலவே, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் இலங்கை நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்ட பல விடயங்களை மதிக்கிறது.
தேசிய பொருளாதாரம், சுயாதீன நாடு, விவசாயம் உள்ளிட்ட உள்ளூர் தொழில்துறை முறையை நம்பியுள்ள ஒரு சுதந்திர நாடு.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் மறைந்த எஸ்.ஏ.விக்ரமசிங்க விவசாயத்தின் வளர்ச்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவர் முன்வைத்த நில்வலா கங்கை திட்டம், இடதுசாரி தலைவர் ஒருவர் விவசாயம் குறித்து முன்வைத்த மிக முக்கியமான திட்டமாகும். இத்தகைய கருத்துக்களைக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சி காரணமாக, சீனாவுடனான நமது கடந்தகால உறவை மேலும் வலுப்படுத்த முடிந்தது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் ஒன்றிணைந்து பணியாற்றிய திருமதி சிரிமாவோ பண்டாரநாயக்க அவர்களின் காலத்தில், சீனாவுடனான எங்கள் உறவுகள் மிகச் சிறந்தவை. சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் எங்கள் இடதுசாரி இயக்கத்தின் ஆதரவே ஒரு அணிசேரா நாடாக உலகில் சுதந்திரமாக முன்னேற எங்களுக்கு உதவியது என்று நான் கூற வேண்டும்.
கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து பணியாற்றிய அரசாங்கத்தின் கீழ் பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நாங்கள் முடிவுக்கு கொண்டுவந்தோம். யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் நமது சுதந்திரத்திற்காக சீன அரசாங்கம் செய்த தியாகங்களை நாங்கள் எப்போதும் பாராட்டுகிறோம். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் ஆசிய நாடொன்றின் சுதந்திரத்திற்கு இது மாபெரும் பங்களிப்பாகும்.
இந்நேரத்தில், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எங்களுக்கும் இடையிலான பிணைப்பை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கு இப்போது 78 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது.
கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடித் தலைவர் டாக்டர் திரு. எஸ்.ஏ.விக்ரமசிங்க தெற்கிலிருந்து வந்தவர். டாக்டர் எஸ்.ஏ. விக்ரமசிங்கவுடன் எனது பெரிய தந்தை டி.எம்.ராஜபக்ஷ மற்றும் எனது தந்தை டி.ஏ.ராஜபக்ஷ ஆகியோர் மிக நெருக்கமான அரசியல் உறவை கொண்டிருந்தவர்களாவர். அதேபோன்று நானும் எனது பெரிய தந்தை, தந்தை போன்றே திரு.எஸ்.ஏ.விக்ரமசிங்கவின் அரசியல் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்ட ஒருவர் என்பதை இந்நேரத்தில் நான் கூற வேண்டும்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் திரு. விக்ரமசிங்க என் வாழ்க்கையில் ஒரு முன்மாதிரி என்றும் சொல்ல வேண்டும். பீட்டர் கேதமன், ராஜா கொள்ளுரே சரத் முத்தெட்டுவேகம, இன்று தலைமை வகிக்கும் வீரசிங்க அவர்கள் எமக்கு நெருக்கமான அரசியல் களத்தில் இருந்தவர்கள்.
உலகம் மாறியுள்ளது. எமது நாடும் மாறியுள்ளது. தொழில்துறை புரட்சி மற்றும் தொழில்நுட்ப புரட்சிக்குப் பின்னர், இன்று இணைய யுகத்தில் இளம் தலைமுறையினர் உள்ளனர்.
இன்று நம்மிடம் இருப்பது அப்போது இருந்த அரசியல் கருத்துக்கள் அல்ல. ஆனால் இன்று நாம் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளையும் வென்றெடுக்க, கடந்த கால முற்போக்கான அரசியல் சக்திகளின் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற இடதுசாரி இயக்கங்கள் கடுமையாக போராடின என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உலகம் எவ்வளவு மாறினாலும் நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் சமத்துவத்திற்காக முன்னின்றது.
சமத்துவம் என்ற கருத்து இன்றும் உலகில் செல்லுபடியாகும்.அதற்காக மிகப்பெரிய தியாகம் செய்த சீன கம்யூனிஸ்ட் கட்சி உலக சமத்துவத்திற்காக எதிர்காலத்திலும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என நம்புகின்றேன் என கௌரவ பிரதமர் குறிப்பிட்டார்.
பிரதமர் ஊடக பிரிவு
சீனா கடலுக்குள் நுழைந்த அமெரிக்கா – விமான தாங்கி கப்பல்
சீனா கடலுக்குள் நுழைந்த அமெரிக்கா – விமான தாங்கி கப்பல்
தென் சீன கடலுக்குள் அமெரிக்காவின் US Navy aircraft carrier USS Reagan விமான தாங்கி கப்பல் நுழைந்துள்ளது
இந்த கப்பலின் அத்துமீறல் நுழைவு சீனாவை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது
சர்ச்சைக்குரிய கடல் பகுதிக்குள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவே தாம் நுழைந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது
பைடன் ஆட்சியில் இரண்டாவது தடவையாக இந்த கப்பல்கள் நுழைந்துள்ளது சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது
- ஏடனில் உள்ள மாஷிக் அரண்மனை மீதான ஹூதி தாக்குதல்

- ஹூதிகளின் பீரங்கித் தாக்குதல் ஐந்து பொதுமக்கள் காயமடைந்தனர்

- எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

- புத்தளத்தில் பேருந்து சாலையை விட்டு விலகி கவிழ்ந்ததில் 12 பேர் காயம்

- ஏடன் விமான நிலையம் மீது ஏவுகணைகள் தாக்குதல்

- இலங்கைக்குக் கடத்தப்பட்ட 100 கிலோ மெத் போதைப்பொருள் தொடர்பாக விஜய்யின் டிவிகே நிர்வாகி இந்தியாவில் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

மனித வெடிகுண்டு தாக்குதல் -வெடித்து சிதறிய இராணுவ முகாம்
மனித வெடிகுண்டு தாக்குதல் -வெடித்து சிதறிய இராணுவ முகாம்
சோமாலியா General Dhagabadan இராணுவ பயிற்சி தளத்தின் மீது மனித வெடி குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இதில்; அந்த முகாம் பலத்த சேதமடைந்துள்ளதுடன் பலர் காயமடைந்து உள்ளனர்
வெடி குண்டு நிரப்ப பட்ட கார் ஒன்றை ஒட்டி சென்று நடத்த பட்ட தாக்குதலில் ,இராணுவ
தரப்பிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது ,எனினும் இதுவரை அங்கு இடம்பெற்ற சேத விபரங்கள் தெரியவரவில்லை
சவேந்திர சில்வா வர தடை போடு- பிரிட்டன் பிரதமர் இல்லம் முன்பாக போராட்டம் photo video
சவேந்திர சில்வா வர தடை போடு- பிரிட்டன் பிரதமர் இல்லம் முன்பாக போராட்டம் photo video photo video
பிரிட்டன் பிரதமர் இல்லம் முன்பாக தமிழர்கள் இன்று மதியம் ஒரு மணியளவில் ஒன்று கூடி பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
,இதில் தமிழர்களை இறுதி போரின் பொழுது கொன்று குவித்த சவேந்திர சில்வாவை பிரிட்டனுக்கள் நுழைய தடை விதிக்க கோரி இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது ,மேலும் மகயரும் கையளிக்க பட்டுள்ளது
அன்றைய படையணி தளபதியாக இருந்தவர் ,இன்று முப்படை தளபதியாக தெரிவு செய்ய பட்டுள்ளார்
இன்றைய இராணுவ தளபதியாக விளங்கி வரும் இவரால் ,பல்வேறு பட தமிழர்கள் கைது செய்ய பட்டு காணாமல் போகின்றமை தொடர்கிறது ,புலிகள் என்ற போர்வையில் கைதுகள் ,வதைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
தொடர்ந்து இலங்கை மீது அழுத்தம் கொடுக்க கோரி இடம்பெற்றுள்ள இந்த போராட்டம் பெரும் வெற்றி என தமிழருக்கான சுதந்திர வேட்டை காரர்கள் என்ற அமைப்பினர் தெரிவித்துள்ளனர்
தொடர்ந்து இந்த அமைப்பினால் பல் வேறு போராட்டங்கள் முன்னெடுக்க பட்டு வருகின்றமை ,சிங்கள அரசுக்கு பெரும் நெருக்கடியை வழங்கியுள்ளது குறிப்பிட தக்கது








முல்லையில் வலையில் சிக்கிய புலிகளின் குண்டு
முல்லையில் வலையில் சிக்கிய புலிகளின் குண்டு
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிவாய்க்கால்
கடற்கரை பகுதியில் விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்ட பாரிய வெடிபொருள் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதி மீனவர்கள் கரைவலைத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிலையில் மீனவர்களின் வலையில் சிக்குண்டு குறித்த வெடிபொருள் கரைக்கு வந்துள்ளது.
இவ்வாறு கரைக்கு வந்த பொருள் வெடிபொருள் என மீனவர்களினால் அடையாளம் காணப்பட்டு சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வெடிப்பொருளை அகற்றுவது தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவில் மக்கள் விபரங்களை சேகரிக்கும் இராணுவம் – அச்சத்தில் மக்கள்
முல்லைத்தீவில் மக்கள் விபரங்களை சேகரிக்கும் இராணுவம் – அச்சத்தில் மக்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில், குடியிருப்பாளர்களின் விவரங்களைப் பதிவு செய்யும்
நடவடிக்கையில், பொலிஸார், நேற்று (14) ஈடுபட்டுள்ளனரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமசேவகர், பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட
குடியிருப்பாளர்கள், தங்கியிருப்பவர்களின் விவரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான படிவம்
வழங்கப்பட்டுள்ளது.
இவற்றைப் பூரணப்படுத்தி, ஒரு மணிநேரத்தில் வழங்குமாறும், பொலிஸாரால்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.1865ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பொலிஸ் கட்டளைச் சட்டத்தின்
76ஆவது பிரிவுக்கு அமைவாகச் செய்யப்படும் ஆணைஎன, அந்த படிவத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் ஒரே நாளில் 57 பேர் மரணம்
இலங்கையில் ஒரே நாளில் 57 பேர் மரணம்
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரு கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் மட்டும் 57 பேர் பலியாகியுள்ளனர்
நோயின் தாக்குதல் அதிகரித்து வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது
வீழ்ந்து நொருங்கய விமானம் – ஆறு பேர் மரணம்
வீழ்ந்து நொருங்கய விமானம் – ஆறு பேர் மரணம்
அமெரிக்கா டெஸ்சஸ் பகுதியில் காலை ஒரு மணியளவில் இலகு ரக விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது
Madisonville விமான நிலையத்தில் தரை இறங்க முற்பட்ட பொழுது விமானம் விபத்தில் சிக்கி
வீழ்ந்து நொறுங்கியது ,ஒரு இயந்திரத்தில் மட்டும் இயங்க வல்ல மேற்படி விமானம் விபத்தில் சிக்கியதால் அதில் பயணித்த ஆறுபேரும் மரணமாகியுள்ளனர்
மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன











