Posted in Uncategorized

பிக்கு அடித்துக் கொலை – விசாரணைகள் ஆரம்பம்


பிக்கு அடித்துக் கொலை – விசாரணைகள் ஆரம்பம்

பமுனுகம, உஸ்வெட்டகொய்யவா பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் தங்கியிருந்த தேரர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த முதியோர் இல்லம் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒன்று என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்டு அங்கு தங்கிருந்த 73 வயதுடைய ஜாஎல பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (19) காலை இவ்வாறு சந்தேக நபரினால் தேரர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    Posted in Uncategorized

    24 இலங்கையரை தேடும் இண்டர்போல்

    24 இலங்கையரை தேடும் இண்டர்போல்

    இலங்கையில் போதைப் பொருள் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட நிலையில், வெளிநாடுகளுக்குத் தப்பிச்

    சென்று தலைமறைவாகியுள்ள 24 பேரைக் கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் ஊடாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இவர்களுள் 13 பேர் போதைப் பொருள் மற்றும் பாதாளக்குழு உறுப்பினர்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

    அத்துடன், குறித்த 24 பேரில் இருவர் தற்சமயம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

      Posted in Uncategorized

      வீதியில் உலாவியவர்களை முழங்காலில் நிக்க வைத்த இராணுவம்

      வீதியில் உலாவியவர்களை முழங்காலில் நிக்க வைத்த இராணுவம்

      பயணக்கட்டுப்பாடுகளை மீறி வீதிகளில் நடமாடியவர்களை, தலைக்கு மேலே கைகளை உயர்த்தியவாறு வீதியில்

      முழங்காலில் இருக்க வைத்து இராணுவத்தினரால் தண்டனை வழங்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

      கிழக்கு மாகாணத்தில் ஏறாவூர் பகுதியிலேயே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாட்டுக்கு கடுமையான கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

      கொழும்புக்கு ஒரு சட்டம், கிழக்குக்கு ஒரு சட்டமா? என்றும் வினவியுள்ளனர்.

        Posted in Uncategorized

        காவல்துறை குற்றங்களை முறையிட புதிய தொலைபேசி இலக்கம்

        காவல்துறை குற்றங்களை முறையிட புதிய தொலைபேசி இலக்கம்

        பொலிசாரினால் ஏதேனும் அநீதி செயற்பாடுகள் இடம்பெறுமாயின் அதுதொடர்பாக பிரதேச உய

        ர் பொவிஸ் அதிகாரிக்கு முறையிட முடியும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

        விசேட நிலைமைகளின் கீழ் இவ்வாறானவை இடம்பெற்றால் பொலிஸ் கட்டளைப் பிரிவின் 0112 85 48 80 என்ற தொலைப்பேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

        உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின்போது தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டதாக தெரிவித்த பொலிஸ் ஊடக

        பேச்சாளர், வனாத்தவில்லு பிரதேசத்தில் 18 ஏக்கர் காணி காத்தான்குடி ஒல்லிபுரம் பிரதேசத்தில் 25 ஏக்கர் காணி தெமட்டகொட பிரதேசத்தில் எட்டு பேர்ச் காணி என்பனவும் முடக்கப்பட்டுள்ளன. 28

        மில்லியன் ரூபா பெறுமதியான நிதி, 8 இலட்சம் டொலர்களுக்கும் அதிகமான நிதி, 14 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று மாணிக்கக் கற்கள் உட்பட வாகனங்களையும் போலிசார் கைப்பற்றி

        உள்ளார்கள் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்

          Posted in Uncategorized

          சிக்கிய பெரிய ஆமை – கடலில் விட்ட மக்கள்

          சிக்கிய பெரிய ஆமை – கடலில் விட்ட மக்கள்

          இந்தோனேசியாவில் வரலாற்று பெருமை மிக்க ,பெரிய ஆமை ஒன்று மக்களினால் கண்டு பிடிக்க

          பட்டது ,மேற்படி ஆமையினை பிடித்து கடலில் விட்டு அழகு பார்த்துள்ளனர் அந்த மக்கள், இதனது எடை சுமார் 480 இறாத்தல் என தெரிவிக்க பட்டுள்ளது

          மேற்படி ஆமையின் காணொளி சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

          பெரிய ஆமை
            Posted in Uncategorized

            புதிய Boeing 737 MAX விமானம் சோதனை – வீழ்ந்து நொறுங்குமா ..?

            புதிய Boeing 737 MAX விமானம் சோதனை – வீழ்ந்து நொறுங்குமா ..?

            உலக அளவில் அதிக பாவனையில் உள்ளதும் ,பெரும் விபத்துக்களில் சிக்கிய Boeing MAX விமானம் ஆகும் ,இதனை அடுத்து குறித்த விமானம் உலகம் எங்கும் பறக்க தடை விதிக்க பட்டது

            இதனை அடுத்து மேற்படி விமான நிறுவனம் பெரும் சர்ச்சையில் சிக்கியதுடன் பல மில்லியன் இழப்பை சந்தித்தது

            இதனை அடுத்து மேற்படி விமானத்தில் உள்ள குறைகள் கண்டறிய பட்டு புதிய விமானமாக புதிய

            தொழில் நுட்பத்துடன் வடிவமைக்க பட்டு அவை
            பறக்க விடப்பட்டுள்ளது

            இந்த சோதனை வெற்றி பெற்றுள்ள நிலையில் அதனை உலக நாடுகளுக்கு விற்கும் வியாபாரம் எதிர்வரும் ஆண்டு இடம்பெறும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது

              Posted in Uncategorized

              கவிழ்ந்த வண்டி – போதையில் சாரதி -அடி வாங்கிய பொலிசார்

              கவிழ்ந்த வண்டி – போதையில் சாரதி -அடி வாங்கிய பொலிசார்

              அவுஸ்ரேலியாவில் சாரதி ஒருவர் அதிக மதுபோதையில் வேகமாக வண்டியை செலுத்தி சென்றுள்ளார்

              இதன் பொழுது அந்த வண்டி கவிழ்ந்துள்ளது ,அவ்வேளை அவரை காப்பாற்ற விரைந்து வந்த

              காவல்துறையினரை அவர் தாக்கியுள்ளார்,இந்த தாக்குதலை நடத்திய குற்ற சாட்டில் ,விதிகளை மீறிய குற்ற சாட்டிலும் அவர் கைது செய்ய பட்டுள்ளார்

                Posted in Uncategorized

                ஜோ பைடன் நாய் மரணம் – கவலையில் ஐயா

                ஜோ பைடன் நாய் மரணம் – கவலையில் ஐயா

                அமெரிக்காவின் தற்போது ஆளும் அதிபராக விளங்கும் ஜோ பைடன் அவர்களது வளர்ப்பு நாய் இறந்துள்ளது

                13 வருடங்களாக தமது செல்ல நண்பனாக வசித்து வந்த மேற்படி நாய் இறந்த துயரத்தில் தம்பதிகள் தவித்து வருகின்றனர்

                மேற்படி நாயின் மறைவுக்கு அனுதாபிகள் கண்ணீர் அஞ்சலியை செலுத்திய வண்ணம் உள்ளனர்

                  Posted in Uncategorized

                  புயலில் உடைந்த வீடுகள் மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்

                  புயலில் உடைந்த வீடுகள் மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்

                  அவுஸ்ரேலியாவில் வீசிய கடும் புயல் காரணமாக நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன

                  இதுவரை பல்லாயிரம் மக்கள் மின்சாரம் இன்றி பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர்
                  இந்த அனர்த்த சேதங்கள் பல மில்லியன் என தெரிவிக்க படுகிறது

                  பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிர படுத்த பட்டுள்ளன

                    Posted in Uncategorized உலக செய்திகள்

                    தீவிரவாதிகளினால் 70 பாடசாலை மாணவர்கள் கடத்தல்

                    தீவிரவாதிகளினால் 70 பாடசாலை மாணவர்கள் கடத்தல்

                    வடக்கு நையீரியாவின் அரச பாடசாலைக்குள் புகுந்த தீவிரவாதிகள் ,அந்த பாடசாலைக்கு காவல் நின்ற காவல் துறை சிப்பாயை சுட்டு கொன்று விட்டு அங்கிருந்த எழுபது மாணவர்களை கடத்தி சென்றுள்ளனர்

                    இரண்டாவது வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது கடத்தல் இதுவாக பதிய பெற்றுள்ளது

                    பொக்கோ காராம் அமைப்பினர் மேற்கொண்டு வரும் இந்த கடத்தல் நடவடிக்கையால் மக்கள் பெரிதும் பீதியில் உறைந்துள்ளனர்

                      Posted in Uncategorized

                      பிரிட்டனில் உடைந்த பயணிகள் விமானம்

                      பிரிட்டனில் உடைந்த பயணிகள் விமானம்

                      பிரிட்டன் கீத்திரோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய போயிங் விமானம் ஒன்று
                      முன் பகுதி உடைந்துள்ளது

                      இதனால் ஏற்பட்ட சேத நிலையையே அடுத்து குறித்த விமானம் பழுது பார்த்தால் மற்றும் விபத்து விசாரணைகள் முடுக்கிவீட்டா பட்டுள்ளன

                      எனினும் பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிறது

                        Posted in Uncategorized

                        200 வருட கட்டிடம் இடிந்து வீழ்ந்தது

                        200 வருட கட்டிடம் இடிந்து வீழ்ந்தது

                        இலங்கையில் இருநூறு வருடம் பழமை வாய்ந்த புகழ்பூத்த கட்டடம் ஒன்று கடந்த இரவு இடிந்து வீழ்ந்துள்ளது

                        Soyza building, located on Malay Street in Slave Island மேற்படி கட்டட இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்பு பணியினர் ஈடுபட்டுள்ளனர்

                          Posted in Uncategorized

                          பொக்கோ காராம் தலைவர் படுகொலை – அறிவித்த தீவிரவாதிகள்

                          பொக்கோ காராம் தலைவர் படுகொலை – அறிவித்த தீவிரவாதிகள்

                          நையீரியாவை தளமாக கொண்டு போராடி வரு பொக்கோ காராம் அமைப்பு தமது தலைவர் பலியாகியுள்ளதாக காணொளி காட்சி மூலம் வெளியிட்டுள்ளனர்

                          இவர்களுக்குள் நடந்த தாக்குதலில் இவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
                          அபாபாவி மக்களை கடத்தி சென்று கொலை செய்தும் ,கற்பழித்தும் வருகின்றமை குறிப்பிட தக்கது

                            Posted in Uncategorized

                            யேர்மனியில் துப்பாக்கி சூடு – இருவர் படுகொலை

                            யேர்மனியில் துப்பாக்கி சூடு – இருவர் படுகொலை


                            யேர்மன் நாட்டில் மர்ம ஆயுத தாரி நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர்
                            மேற்படி தாக்குதலுக்கு உரிய காரணம் தெரியவரவில்லை

                            போலீசாரை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

                              Posted in Uncategorized

                              யூ டியூப்’ சேனல் மூலமாக மாதம் ரூ.12 லட்சம் குவித்த ‘பப்ஜி’ மதன்

                              பப்ஜி மதனை பிடிப்பதற்காக பெங்களூரில் முகாமிட்டுள்ள தனிப்படை போலீசார் சென்னையில் உள்ள அவரது நண்பர்கள் யார் என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

                              ‘யூ டியூப்’ சேனல் மூலமாக மாதம் ரூ.12 லட்சம் குவித்த ‘பப்ஜி’ மதன்
                              மனைவியுடன் பப்ஜி மதன்
                              சென்னை:

                              யூடியூப் சேனல்களை தொடங்கி அதன் மூலம் பிரபலமானவர் மதன். இவர் மதன், மதன் 18+, பப்ஜி மதன் உள்பட பல்வேறு சேனல்களை நடத்தி வந்தார்.

                              இந்த யூடியூப் சேனல்கள் மூலமாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் மனதளவில் பாதிக்கப்படுவதாக சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. வடபழனியைச் சேர்ந்த அபிஷேக் ரபி இந்த புகாரை அளித்து இருந்தார்.

                              இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசுக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் பப்ஜி மதன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

                              அவரது யூடியூப் சேனலையும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அவர் பெண்களுடன் ஆபாசமாக அருவருக்கத்தக்க வகையில் பேசியது தெரிய வந்தது.

                              பெண்களிடம் அந்தரங்க வி‌ஷயங்களையும் அது தொடர்பான தகவல்கள் அடங்கிய வீடியோக்களையும் யூடியூப் சேனலில் மதன் தொடர்ந்து பதிவேற்றம் செய்தது தெரிய வந்தது.

                              அதே போன்று தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டையும் அவர் வீடியோவாக வெளியிட்டு இருந்தார். சிறுவர்கள் பலர் இந்த வீடியோக்களுக்கு அடிமையாகி இருந்தனர்.

                              இதையடுத்து பப்ஜி மதனை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். சேலத்தை சேர்ந்த பப்ஜி மதன் சென்னை வேங்கைவாசலில் வசித்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

                              என்ஜினீயரிங் பட்டதாரியான பப்ஜி மதனின் முழு பெயர் மதன்குமார் என்பதும் தெரிய வந்தது. இவர் தனது மனைவி கிருத்திகாவுடன் சேர்ந்து யூடியூப் சேனல்களை தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

                              இந்த யூடியூப் சேனல்களுக்கு கிருத்திகா முக்கிய மூளையாக செயல்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

                              பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட கிருத்திகா சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள பப்ஜி மதனை போலீசார் தேடி வருகிறார்கள்.

                              பப்ஜி மதனை பிடிப்பதற்காக பெங்களூரில் முகாமிட்டுள்ள தனிப்படை போலீசார் சென்னையில் உள்ள அவரது நண்பர்கள் யார் என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

                              இதற்கிடையே பப்ஜி மதன் பெண்களுடன் பேசிய புதிய ஆடியோ ஒன்றும் வெளியாகி இருந்தது. அதில் என்னை பிடிக்க முடியுமா? என்று போலீசுக்கு அவர் சவால்விட்டு இருந்தார். அந்த ஆடியோவில் பேசிய பெண் யார் என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.

                              யூடியூப் சேனல்கள் மூலம் பப்ஜி மதன் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதனின் யூடியூப் சேனலுக்கு 8 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். பப்ஜி மதன் கேர்ள் பேன், ரிச்சி கேமிங் ஆகிய யூடியூப் சேனல்களில் பெண்களுடன் மதன் நீண்ட நேரம் ஆபாசமாக உரையாடி இருக்கிறார். இதற்கான ஆதாரங்களையும் போலீசார் திரட்டி உள்ளனர்.

                              பெண்களை கவரும் வகையிலான இந்த யூடியூப் சேனல்களுக்கு சப்ஸ்கிரைபர்கள் அதிகமாவதற்கு மதனின் மனைவி கிருத்திகா முக்கிய பங்காற்றி உள்ளார்.

                              சில நேரங்களில் அவரே கிளுகிளுப்பாக பெண்களிடம் பேசி அந்த ஆடியோக்களை வெளியிட்டுள்ளார். யூடியூப் சேனலுக்கான அனைத்து பணிகளையும் கிருத்திகாவே முன் நின்று செய்துள்ளார். யூடியூப் சேனல்களின் அட்மினாகவும் அவர் இருந்துள்ளார்.

                              கிருத்திகா மூலமாக மேலும் பல பெண்களும் மதனுடன் ஆபாசமாக உரையாடி இருக்கிறார்கள். அந்த பெண்கள் யார், யார் என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

                              போலீசார் விசாரணை

                              இதுபோன்ற ஆடியோ உரையாடல்களால் சப்ஸ்கிரைபர்கள் தொடர்ந்து அதிகரித்து வந்ததை அடுத்து மதன் அடுத்தடுத்து பெண்களை கவரும் வகையிலான ஆடியோக்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு இருக்கிறார்.

                              இதன் மூலம் கோடிக்கணக்கில் மதன் சம்பாதித்துள்ளார். மாதம் ரூ.12 லட்சம் வரையில் மதனுக்கு வருவாய் வந்துள்ளது. இப்படி லட்சம் லட்சமாக சம்பாதித்த பணத்தை பெறுவதற்காக பல்வேறு வங்கிக்கணக்குகளையும் மதன் தொடங்கி உள்ளார். சப்ஸ்கிரைபர்கள் அதிகரிக்க அதிகரிக்க மதனின் வாழ்க்கையில் பண மழை பெய்துள்ளது. இதை வைத்து ஆடம்பரமாக அவர் வாழ்ந்துள்ளார். 2 சொகுசு கார்களில் அவர் வலம் வந்து இருக்கிறார்.

                              கோடீஸ்வரர்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் பயன்படுத்தக்கூடிய ஆடி மற்றும் பி.எம்.டபிள்யூ. கார்களை மதன் பயன்படுத்தி இருக்கிறார். இதற்கிடையே வேங்கை வாசலில் உள்ள மதனின் வீட்டில் இருந்து செல்போன், டேப்லெட், கம்ப்யூட்டர் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.

                              அதில் உள்ள பல தகவல்களை ஆதாரங்களாக போலீசார் திரட்ட திட்டமிட்டுள்ளனர்.

                              மதனின் மனைவி கிருத்திகா கைக்குழந்தையோடு கைதாகி இருக்கிறார். மனைவி போலீசில் சிக்கிய பிறகும் மதன் சரண் அடையவில்லை. அவர் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளார்.

                              மதனின் யூடியூப் சேனலில் இருக்கும் புகைப்படங்கள் அவர் கல்லூரி காலத்தில் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் மதன் தனது மனைவியுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது..

                              Posted in Uncategorized

                              அதிக தொகைக்கு விற்கப்பட்ட நயன்தாரா படம்

                              அதிக தொகைக்கு விற்கப்பட்ட நயன்தாரா படம்

                              கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், நயன்தாரா நடித்துள்ள படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

                              ஓடிடி-யில் அதிக தொகைக்கு விற்கப்பட்ட நயன்தாரா படம்
                              நயன்தாரா


                              நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘நெற்றிக்கண்’. இப்படத்தை ‘அவள்’ பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கி உள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தை ரவுடி

                              பிக்சர்ஸ் சார்பில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து தயாரித்துள்ளார்கள். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

                              கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளனர். அதன்படி இப்படத்தை வருகிற ஜூலை 9-ந் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

                              நெற்றிக்கண் படத்தின் போஸ்டர்
                              நெற்றிக்கண் படத்தின் போஸ்டர்

                              நடிகை நயன்தாராவின் சம்பளம் தவிர்த்து இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.5 கோடியாம். ஆனால் தற்போது இப்படத்தின் ஓடிடி உரிமை ரூ.25 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி

                              உள்ளது. இதன்மூலம் ரிலீசுக்கு முன்பாகவே ரூ.20 கோடி வரை லாபம் சம்பாதித்துள்ளனர். நயன்தாரா நடித்த படங்களில் அதிக தொகைக்கு விற்கபட்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

                              Posted in Uncategorized

                              கொரோனாவுக்கு மகனை பறிகொடுத்த நடிகை

                              கொரோனாவுக்கு மகனை பறிகொடுத்த நடிகை

                              தமிழ் நடிகை ஒருவரின் மகன் கொரோனாவுக்கு பலியானதை அடுத்து அவரது கணவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

                              கொரோனாவுக்கு மகனை பறிகொடுத்த நடிகை… தீவிர சிகிச்சை பிரிவில் கணவர்
                              நடிகை கவிதா


                              கடந்த சில மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தமிழ் திரையுலக பிரபலங்கள் சிலர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வகையில் தமிழ் திரையுலகின்

                              நடிகைகளில் ஒருவரான கவிதா என்பவரின் மகன் சாய் ரூப் என்பவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது.

                              மேலும் கவிதாவின் கணவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். கொரோனாவால் மகனை பறிகொடுத்த நடிகை

                              கவிதாவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினர் மற்றும் சின்னத்திரை உலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.

                              கவிதா
                              நடிகை கவிதா

                              நடிகை கவிதா, ஆட்டுக்கார அலமேலு, காற்றினிலே வரும் கீதம், பாண்டவர் பூமி, அவள் வருவாளா

                              உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் கங்கா, நந்தினி உள்பட ஒருசில சின்னத்திரை சீரியல்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

                              Posted in Uncategorized

                              பேஸ்புக்கில் விட்ட பெரும் தவறு -கண்டு பிடித்த இந்திய மாணவன்

                              பேஸ்புக்கில் விட்ட பெரும் தவறு -கண்டு பிடித்த இந்திய மாணவன்

                              முகநூல் நிறுவனம் தங்கள் தளங்களில் இருக்கும் பிழைகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுத்தொகை அறிவித்திருந்தது.

                              முகநூலில் தொழில்நுட்ப குறைபாட்டை கண்டுபிடித்து ரூ.22 லட்சம் பரிசு பெற்ற இந்திய மாணவன்

                              மராட்டிய மாநிலம் சோலாப்பூரை சேர்ந்தவர் கணிப்பொறியியல் மாணவர் மயூர். முகநூல் நிறுவனம் தங்கள் தளங்களில் இருக்கும் பிழைகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுத்தொகை

                              அறிவித்திருந்தது. அதில் பங்கேற்ற மயூர், இன்ஸ்டாகிராமில் தனியாக கணக்கு வைத்திருந்தாலும் கூட, அதிலுள்ள ஒரு பிழை, எவரை வேண்டுமானாலும் தவறாக நுழைய அனுமதித்து பயனர்களின்

                              புகைப்படங்கள், கதைகள், ரீல்ஸ் ஆகியவற்றை பார்க்க வைக்கிறது என்ற தொழில்நுட்ப குறைபாட்டை கண்டுபிடித்தார்.

                              இதனை கடந்த மாதம் முகநூலில் அறிவித்த போட்டியில் பங்கேற்று தெரிவித்தார்.

                              அந்த பிழையை கடந்த 15-ந் தேதி முகநூல் நிர்வாகம் சரிசெய்தது. அதனை கண்டுபிடித்த இந்திய மாணவர் மயூருக்கு ரூ.22 லட்சம்

                              பரிசு வழங்குவதாக அறிவித்தது. எதிர்காலத்திலும் இது போன்ற தகவல்களை தங்களிடம் எதிர்பார்க்கிறோம் என மயூரிடம் முகநூல் நிறுவனம் கூறியுள்ளது.

                              Posted in Uncategorized

                              சிறுமியை விபச்சாரத்திற்கு விற்ற நபர் கைது

                              சிறுமியை விபச்சாரத்திற்கு விற்ற நபர் கைது

                              கல்கிஸை பகுதியில், இணையத்தை பயன்படுத்தி 15 வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்கு பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்ய சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

                              சம்பம் தொடர்பில் முன்னதாக சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 26 வயது பெண் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

                              குறித்த சிறுமி சுமார் 04 மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டு பல்வேறு நபர்களுக்கு பாலியல் நடவடிக்கைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.

                              அவ்வாறு சிறுமியை குறித்த நபர்களின் இடங்களுக்கு அழைத்துச்சென்றமை தொடர்பில் ஜம்புரலிய மடபாத பகுதியை சேர்ந்த பெண் நேற்று (16) கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

                              அத்துடன், குறித்த பெண் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

                                Posted in Uncategorized

                                இலங்கையில் நில நடுக்கம் – பீதியில் மக்கள்

                                இலங்கையில் நில நடுக்கம் – பீதியில் மக்கள்

                                விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                                நேற்று (16) மாலை விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் 1.94 அளவில் சிறய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

                                எவ்வாறாயினும் இது தொடர்பில் எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை என புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது