Tag: ரஜினிகாந்த்
வைரலாகும் ரஜினி 169-வது படத்தின் பெயர்
வைரலாகும் ரஜினி 169-வது படத்தின் பெயர்
ரஜினியின் 169-வது படத்திற்கு 5 பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும், இந்த பட்டியலில் இருக்கும் பெயர் குறித்து இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.
வைரலாகும் ரஜினி 169-வது படத்தின் பெயர்
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகையில் வெளியானது. அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது அவருக்கு 169-வது படம். நெல்சன் ஏற்கனவே நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனின்
டாக்டர் படங்களை டைரக்டு செய்துள்ளார். விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தையும் இயக்கி முடித்துள்ளார். ரஜினி படத்தில் கதாநாயகியாக நடிக்க ஐஸ்வர்யாராயிடமும்,
நகைச்சுவை வேடத்துக்கு வடிவேலுவிடமும் பேசி வருவதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே ரஜினியுடன் எந்திரன் படத்தில் ஐஸ்வர்யாராயும், சந்திரமுகி படத்தில் வடிவேலுவும் நடித்து இருந்தனர்.
ரஜினியின் 169-வது படத்தை அனைத்து மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும், எனவே எல்லா மொழிக்கும் பொருந்தும் வகையில் ஆங்கிலத்தில்
பெயர் வைக்க முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது 5 பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும், இந்த பட்டியலில் பாஸ் என்ற பெயரும் இருக்கிறது
என்றும் இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனாலும் படக்குழுவினர்
இதனை உறுதிப்படுத்தவில்லை. படப்பிடிப்பை ஆகஸ்டு மாதம் தொடங்கி பொங்கல் பண்டிகையில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.
என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி – ரஜினிகாந்த்..
என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி – ரஜினிகாந்த்..
தாதாசாகேப் பால்கே விருதை பெற்ற நடிகர் ரஜினிகாந்த், என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி என்று பேசினார்.
என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி – ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று வழங்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற தேசிய விருதுகள் வழங்கும்
விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தாதாசாகேப் பால்கே விருதை
ரஜினிகாந்துக்கு வழங்கினார். திரையுலகில் ரஜினிகாந்த் நிகழ்த்தியுள்ள வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
ரஜினிகாந்த்
விருதை பெற்ற பிறகு ரஜினிகாந்த் பேசும்போது, ‘எனக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி, இந்த விருதை என்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர்
கே.பாலச்சந்தருக்கு சமர்ப்பிக்கிறேன். மேலும் என்னை அடையாளம் காட்டிய நண்பர் பகதூருக்கு நன்றி. ரசிகர்கள் மற்றும் என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி’ என்றார்.
ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்ற ஷங்கர் மகள்
ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்ற ஷங்கர் மகள்
விருமன்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமாகும் அதிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்ற ஷங்கர் மகள்
அதிதி ஷங்கர், ரஜினிகாந்த்
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி, தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இவர் தமிழில் நடிக்கும் முதல் படம் ‘விருமன்’. இப்படத்தை நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம்
மூலம் தயாரிக்கிறார். மருது, கொம்பன் போன்ற படங்களை இயக்கி பிரபலமான முத்தையா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நடிகை அதிதி, கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடந்தது. இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகும்
அதிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த், அதிதியை நேரில் அழைத்து வாழ்த்தி உள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற நடிகை அதிதி,
அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மருத்துவ பரிசோதனை நல்ல வண்ணம் நடந்தது என்றார் ரஜினி – வைரமுத்து
மருத்துவ பரிசோதனை நல்ல வண்ணம் நடந்தது என்றார் ரஜினி – வைரமுத்து
ரஜினியின் நெருங்கிய நண்பரும், கவிஞருமான வைரமுத்துவிடம், மருத்துவச் சோதனைக்கு பின் நலமுடன் இருப்பதாக ரஜினி தெரிவித்துள்ளார்.
மருத்துவ பரிசோதனை நல்ல வண்ணம் நடந்தது என்றார் ரஜினி – வைரமுத்து டுவிட்
வைரமுத்து, ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த வாரம் அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டன. ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள்
ஐஸ்வர்யா ஆகியோர் அமெரிக்காவின் மாயோ மருத்துவமனையில் பரிசோதனை முடிந்து
வெளியேறுவதைக் கண்ட ரசிகர் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன் புகைப்படம் எடுத்து வெளியிட்டார். அந்த புகைப்படம் வைரலானது.
இந்நிலையில், ரஜினியின் நெருங்கிய நண்பரும், கவிஞருமான வைரமுத்துவிடம், மருத்துவச் சோதனைக்கு பின் நலமுடன் இருப்பதாக ரஜினி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “அமெரிக்காவிலிருந்து ரஜினி அழைத்தார். மருத்துவச் சோதனை நல்ல வண்ணம் நடந்தது என்றார்; மகிழ்ந்தேன்.
அவர் குரலில் ஆரோக்கியம் – நம்பிக்கை இரண்டும் இழையோடக் கண்டேன். அவரன்பர்களின் மகிழ்ச்சிக்காகவே இதைப் பதிவிட்டுப் பகிர்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ‘அண்ணாத்த’ திரைப்படம் உருவாகி உள்ளது, இப்படத்தை சிவா இயக்கி உள்ளார்.
சிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி
ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின், சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.
கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல உள்ளாராம்
ரஜினி. அவரது குடும்பத்தினரும் உடன் செல்ல உள்ளார்களாம். இதற்காக மத்திய அரசுடன் பேசி நடிகர் ரஜினி, சிறப்பு அனுமதியும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்த
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ‘அண்ணாத்த’ திரைப்படம் உருவாகி உள்ளது. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள்
எடுத்து முடிக்கப்பட்டுவிட்டன. விரைவில் ரஜினி டப்பிங் பணிகளையும் முடித்துவிடுவார் என கூறப்படுகிறது. ‘அண்ணாத்த’ படம் வருகிற தீபாவளி பண்டிகையன்று வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
அது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்
அது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட இருந்ததாக ஒரு அறிக்கை நேற்று சமூகவலைதளங்களில் வைரலானது. அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட இருந்ததாக ஒரு அறிக்கை நேற்று சமூகவலைதளங்களில் வைரலானது. அந்த அறிக்கையில்
கொரோனா நோய் தொற்று காரணமாக தன்னுடைய அரசியல் திட்டங்களை திட்டமிட்டபடி செயல்படுத்த முடியவில்லை
என்பதையும் மருத்துவர்கள் மற்றும் நண்பர்கள் ஆலோசனைப்படி இப்போதைக்கு அரசியல் கட்சி தொடங்குவது இயலாத செயல்
என்பதையும் ரஜினி விளக்கி இருந்தார். ரஜினி தரப்பில் இருந்து இதை உறுதிபடுத்தாத நிலையில் அந்த அறிக்கை பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாக பரவிக்கொண்டு வருகிறது. அது
என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு
மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி
மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கர் நாடகாவில் ரஜினி படத்திற்கு எதிர்ப்பு
இந்திய -கர்நாடகாவில் ரஜினி படத்தை திரையிட எதிர்ப்பு
தமிழகத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தர்பார்’ படத்தை கர் நாடகாவில் திரையிட எதிர்ப்பு தெரிவிக்க பட்டுள்ளது .
கர்நாடகாவில் ரஜினி படத்தை திரையிட எதிர்ப்பு
ரஜினிகாந்த்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படம் வருகிற 9-ந்தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. தமிழ் நாட்டில் அனைத்து தியேட்டர்களிலும்
தர்பார் படத்தை மட்டுமே திரையிட திட்டமிட்டுள்ளதால் வேறு புதிய படங்களின் ரிலீசை தள்ளி வைத்துள்ளனர்.
ஆனால் கர்நாடகாவில் தர்பார் படத்தை திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கன்னட படங்களை தவிர மற்ற மொழிகளில் தயாராகும் புதிய படங்களை கர்நாடகாவில்
கர் நாடகாவில் ரஜினி படத்திற்கு எதிர்ப்பு
வெளியிட ஏற்கனவே கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் ரஜினிகாந்தின்
தர்பார் படத்தையும் கர்நாடகாவில் திரையிட கூடாது என்று கன்னட அமைப்பு போராட்டம் நடத்தி உள்ளது.
தர்பார் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகிறது. கர்நாடகாவில் நேரடி தமிழ் படமாக வெளியிட உள்ளனர்.
இந்த நிலையில் தர்பார் படத்தை கன்னட மொழியில் மாற்றினால் மட்டுமே கர்நாடகாவில் வெளியிட வேண்டும். இல்லையேல் படத்தை
திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட அமைப்பு கூறியுள்ளது.
எதிர்ப்பு தெரிவித்த கன்னட
அமைப்பினர் கர்நாடகாவில் தர்பார் படத்தை திரையிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. இந்த படத்துக்கு அதிக தியேட்டர்களையும் ஒதுக்கி உள்ளனர்.
இந்த நிலையில் படத்துக்கு எதிராக போராட்டம் நடப்பதால் வினியோகஸ்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.கர் நாடகாவில் ரஜினி
ஏற்கனவே ரஜினியின் காலா படத்துக்கும் எதிர்ப்பு கிளம்பியது. அதையும் மீறி தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்புடன் படம் திரையிடப்பட்டது
கர் நாடகாவில் ரஜினி படத்திற்கு எதிர்ப்பு
குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் ரஜினி வீடியோ
அரசியலுக்கு ரஜனி வரவுள்ள நிலையில் இவ்வாறு ஒரு புதிய நாடகத்தை திட்டமிட்டு அரங்கேற்றி வருகிறார்
தமிழக மக்கள் மத்தியில் கர்நாடகாவில் தனக்கு எதிர்ப்பு உள்ளது என்பதை காண்பிக்கவே ரஜனியின் இந்த வங்குரோத்து அரசியல் நகர்வுகள் இடம்பெறுகிறது






