Posted in Uncategorized

சோமாலிய இராணுவத்தால் 50 அல்கொய்தா தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

சோமாலிய இராணுவத்தால் 50 அல்கொய்தா தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

சோமாலியா நாட்டில் அரச இராணுவத்திற்கு எதிராக போராடி வரும் அல்கொய்தா தீவிரவாத


அமைப்புடன் தொடர்புடைய ஐம்பது கிளர்ச்சி படைகளை தாம் சுட்டு கொன்றுள்ளதாக சோமாலிய இராணுவம் அறிவித்துள்ளது

தொடர்ந்து கிளர்ச்சி படைகளிற்கும் ,அரச இராணுவத்திற்கும் இடையில் மோதல்கள்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

    Posted in Uncategorized

    ரசிய திடீர் போர் ஒத்திகை – மிரளுமா அமெரிக்கா ..?

    ரசிய திடீர் போர் ஒத்திகை – மிரளுமா அமெரிக்கா ..?

    ரசிய அதிபரின் திடீர் உத்தரவில் இருபது நீர்மூழ்கி கப்பல்கள் மாற்றும் ,கப்பல்,மற்றும் விமானிகள்

    என்பன கலந்து கொண்ட பெரும் இராணுவ போர் ஒத்திகையை ரஷியா இராணுவம் நடாத்தியுள்ளது

    இந்த போர் ஒத்திகை மூலம் அமெரிக்காவுக்கு ரஷியா தாம் பலமானவர்கள் தான் என்பதை மீள நிரூபித்துள்ளது ,


    இந்த போர் ஒத்திகையில் பின்னர் ஆளும் ஜோ பைடன் சிந்தனையில் மாற்றம் ஏற்படுமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது

      Posted in Uncategorized

      தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி

      நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ‘அண்ணாத்த’ திரைப்படம் உருவாகி உள்ளது, இப்படத்தை சிவா இயக்கி உள்ளார்.

      சிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி
      ரஜினிகாந்த்
      நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின், சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.

      கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல உள்ளாராம்

      ரஜினி. அவரது குடும்பத்தினரும் உடன் செல்ல உள்ளார்களாம். இதற்காக மத்திய அரசுடன் பேசி நடிகர் ரஜினி, சிறப்பு அனுமதியும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.


      ரஜினிகாந்த

      நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ‘அண்ணாத்த’ திரைப்படம் உருவாகி உள்ளது. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள்

      எடுத்து முடிக்கப்பட்டுவிட்டன. விரைவில் ரஜினி டப்பிங் பணிகளையும் முடித்துவிடுவார் என கூறப்படுகிறது. ‘அண்ணாத்த’ படம் வருகிற தீபாவளி பண்டிகையன்று வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

      Posted in Uncategorized

      தொடரும் பயணத்தடை – மிரட்டும் கொரனோ

      தொடரும் பயணத்தடை – மிரட்டும் கொரனோ

      தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக்கட்டுப்பாடுகள் இன்னும் சில காலத்துக்கு

      நீடிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளனவென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

      பயணத் தடையை தொடர்வதா, இல்லையா என்பது தொடர்பில் விசேட வைத்திய நிபுணர்களின் தீர்மானங்களுக்கு அமையவே தீர்மானிக்கப்படும் என்றார்.

      “பயணத் தடையின் காரணமாக கொரோனா மரணங்களும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும்

      குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிந்தாலும், மரணங்கள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய மாற்றமொன்று ஏற்படவில்லை” என்றார்.

      ஆகவே, பயணத் தடையை மேலும் சில நாள்களுக்கு நீடிப்பது என்ற தீர்மானமே தற்போதைக்கு

      இருப்பதாகவும் தினமும் இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர்

      சன்ன ஜயசுமன விசேட வைத்திய நிபுணர்களின் தீர்மானங்களுக்கு அமையவே தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றார்.

        Posted in Uncategorized

        கர்ப்பிணி மனைவியை 22 கிலோ மீற்றர் தூக்கிச் சென்ற கணவன்

        கர்ப்பிணி மனைவியை 22 கிலோ மீற்றர் தூக்கிச் சென்ற கணவன்

        கர்ப்பிணியான தனது மனைவியை பல கிலோ மீற்றர் தூரம் தூக்கிச் சென்று வைத்தியசாலையில் அனுமதித்த கணவன் தொடர்பில் கடந்த தினம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வௌியிடப்பட்டிருந்தன.

        காலி மாவட்டத்தின் ஹினிதும பகுதியிலுள்ள கொடிகந்த என்ற கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் 28 வயதுடைய சுரேஷ் குமார்.

        சம்பவ தினமான கடந்த 04 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக ஆற்று பெருக்கத்தினால் வீதிகள் வௌ்ளத்தில் மூழ்கி காணப்பட்டன.

        இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியான தனது மனைவியின் வயிற்றிலுள்ள சிசு இரண்டு நாட்களாக துடிக்காத காரணத்தால் குடும்ப நல அதிகாரிக்கு தொடர்பு கொண்ட போது உடனடியாக கர்ப்பிணித் தாயை ஹினிதும வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

        வௌ்ளப்பெருக்கு காரணமாக வாகனங்கள் செல்ல முடியாததால் மனைவியை அழைத்துக் கொண்டு நடை பயணமாக 4 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ஹினிதும வைத்தியசாலைக்கு செல்ல ஆரம்பித்தார் குமார்.

        வௌ்ளப் பெருக்கு காரணமாக மனைவியை தூக்கிக் கொண்டு அவர் வைத்தியசாலை நோக்கி நடக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

        எனினும், ஹினிதும வைத்தியசாலையில் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் 18 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள உடுகம வைத்தியசாலையை நோக்கி குமார் தனது பயணத்தை தொடர்ந்தார்.

        பின்னர் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் உடுகம வைத்தியசாலையை தம்பதியினர் அடைந்தனர்.

        அங்கிருந்து நோயாளர் காவு வண்டி மூலம் அவர்கள் காலி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

        வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் குழந்தைக்கு மற்றும் மனைவிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

        சாப்டான இட்லி 10 நிமிடத்தில் சட்டுனு இப்படி செய்து அசத்துங்க - சூப்பரான இட்லிரெடி
        Posted in Uncategorized

        யாழில் புயல் மழை – 55 பேர் பாதிப்பு

        யாழில் புயல் மழை – 55 பேர் பாதிப்பு

        யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென நிலவிய காற்றுடன் கூடிய மழையின் காரணமாக 17 குடும்பங்களைச் சேர்ந்த 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

        இதுதொடர்பாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று இரவு 8 மணிமுதல் 10 மணி வரை கடும்

        காற்றுடன் கூடிய காலநிலை நிலவியது. இதன் தாக்கத்தினால் 17 வீடுகள் பகுதியளவில்

        சேதமடைந்துள்ளதோடு மூன்று சிறு தொழில் முயற்சியாளர்கள் குறித்த கடும் காற்று மழை தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

        குறித்த பாதிப்புகள் தொடர்பான விவரங்கள் சகல பிரதேச செயலகங்கள் ஊடாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ

        பிரிவினரால் சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

          Posted in Uncategorized

          கவிழ்க்க பட்ட நெதன்யாகு ஆட்சி – கமாஸ் ரொக்கட் செய்த சாதனை

          கவிழ்க்க பட்ட நெதன்யாகு ஆட்சி – கமாஸ் ரொக்கட் செய்த சாதனை

          இஸ்ரேல் புதிய பிரதமராக நாஃப்டாலி பென்னட் (49) ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா். இதன்மூலம் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.

          இஸ்ரேலில் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்தன. அந்தக் கூட்டணி அமைத்துள்ள புதிய அரசுக்கு பாராளுமன்ற அங்கீகாரம் அளிப்பதற்கான வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

          இதில் வலதுசாரி யாமினா கட்சியின் தலைவரான நாஃப்டாலி பென்னட் தலைமையிலான புதிய அரசு வெற்றி பெற்றது. 120 உறுப்பினா்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் புதிய அரசுக்கு ஆதரவாக 60 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் கிடைத்தன. ஒரு உறுப்பினா் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

          இதையடுத்து, இஸ்ரேலின் 13-ஆவது பிரதமராக நாஃப்டாலி பென்னட் பதவியேற்றாா். புதிய அரசில் 27 அமைச்சா்கள் இடம்பெற்றுள்ளனா். இவா்களில் 9 பேர் பெண்கள்.

          நாஃப்டாலி பென்னட் தலைமையிலான கூட்டணியில் பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட 8 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. முதல்முறையாக ஓா் அரபுக் கட்சியும் இடம்பெற்றுள்ளது.

          யெஷ் அடிட் கட்சித் தலைவரான யாயிா் லபீட்டுடன் பென்னட் அதிகார பகிா்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளாா். அதன்படி, முதல் இரு ஆண்டுகள் பென்னட்டும், அடுத்த இரு ஆண்டுகள் லபீட்டும் பிரதமராகப் பதவி வகிப்பாா்கள்.

          புதிய அரசுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து, நெதன்யாகு தலைமையிலான 12 ஆண்டுகால தொடா் ஆட்சி முடிவுக்கு வந்தது.

          1996 முதல் 1999 வரை பிரதமராகப் பதவி வகித்த நெதன்யாகு, 2009-ஆம் ஆண்டுமுதல் தொடா்ந்து 12 ஆண்டுகளாக அப்பதவியில் இருந்து வந்தாா்.

            Posted in Uncategorized

            இலங்கையில் 60 வயதானவர்கள் அதிக மரணம்

            இலங்கையில் 60 வயதானவர்கள் அதிக மரணம்

            கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரில் நூற்றுக்கு 70 சதவீதமானவர்கள் 60 வயதைக் கடந்தவர்கள்

            எனவும், உயிரிழப்போரில் எஞ்சிய 25 சதவீதமானோர், ஏனைய நோய்களைக்கொண்டவர்களெனவும் தெரியவந்துள்ளது.

            கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் 60 வயதைக் கடந்தவர்கள், பல்வேறு நோய்களைக் கொண்டவர்களும்

            அதிகளவில் உயிரிழந்தள்ளமை தொடர்பில் விசேட கவனஞ் செலுத்த வேண்டுமென வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

              Posted in Uncategorized

              பல, காவல்துறை அதிகாரிகளுக்கு கொரனோ

              பல, காவல்துறை அதிகாரிகளுக்கு கொரனோ

              இலங்கை காத்தான்குடி பகுதியில் மக்கள் பாதுகாப்பபு பணியில் ஈடுபட்டு வந்த சுமார் ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு கொரனோ தொற்று ஏற்பட்டுள்ளது

              இவ்வாறு பாதிக்க பட்டவர்கள் தனிமை படுத்த பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

                Posted in Uncategorized

                வெள்ளவத்தை முடக்கம் – மக்கள் அவதி

                வெள்ளவத்தை முடக்கம் – மக்கள் அவதி

                கொழும்பு-காலி பிரதான வீதியில் வெள்ளவத்தை பகுதியானது, நாளை (14) காலை முதல் மறு அறிவித்தல் வரையிலும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

                ஆகையால், வாகன சாரதிகள், மெரின் ட்ரைவ் வீதியை மாற்று வழியாக பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

                வௌ்ளவத்தையில் கழிவுநீர் குழாய்கள் பழுதுபார்க்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                  Posted in Uncategorized இலங்கை செய்திகள்

                  இலங்கையில் சமஸ்டி தீர்வு வருகிறது – கஜேந்திரன் முழக்கம்

                  இலங்கையில் சமஸ்டி தீர்வு வருகிறது – கஜேந்திரன் முழக்கம்

                  ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும். அதற்காகவே நாம் போராடி வருகின்றோம். சமஷ்டி முறை வருகின்ற போது மலையக மக்களின் இருப்பும் பாதுகாக்கப்படும்.” என தமிழ் தேசியக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

                  பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மஸ்கெலியா பகுதிகளில் உள்ள சுமார் 600 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று (13) முன்னெடுத்திருந்தது.

                  இவ் நிவாரண பொருட்களை வழங்கி வைத்ததன் பின் சமகால அரசியல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

                  இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

                  ” பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்தோம். அதேபோல மலையக மக்களுக்கான காணி மற்றும் அரசியல் உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்போம்.

                  இந்நாட்டில் ஒற்றை ஆட்சி முறையை ஒழிக்கப்பட்டு சமஷ்டி முறையை உருவாக்கும் அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும். அதற்காகவே போராடி வருகின்றோம். அவ்வாறு சமஷ்டி முறை வருகின்ற போது மலையக மக்களின் இருப்பும் பாதுகாக்கப்படும். மலையக மக்களுடன் இணைந்து பயணிக்க நாம் தயார்.

                  கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு, சீனாவின் முகவர்களாக செயற்பட்டு நாட்டின் வளங்களை விற்கின்றது. பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு உயரும் வகையில் செயற்பட்டு வருகின்றது. மக்கள் நலன் பற்றி சிந்திப்பதில்லை. அவ்வாறு சிந்தித்திருந்தால் இவ்வாறு எரிபொருட்களின் விலை உயர்வடைந்திருக்காது.

                  செலன இணைந்த நிறுவன திட்டத்தின் ஊடாக கொழும்பிலுள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை சீனாவுக்கு வழங்க ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. தென்பகுதியை தாரை வார்ப்பது மட்டுமல்லாமல் வடக்கில் 7 ஏக்கர் காணியிலுள்ள ஜனாதிபதி மாளிகையும் குத்தகைக்கு வழங்க முயற்படுகின்றனர்.” – என்றார்.

                    Posted in Uncategorized

                    சிறுமியின் காலை கடித்து குதறிய சுறா – அதிர்ச்சி படங்கள்

                    சிறுமியின் காலை கடித்து குதறிய சுறா – அதிர்ச்சி படங்கள்

                    அவுஸ்ரேலியா நாட்டின் கடற்கரை பகுதியில் குளித்து கொண்டிருந்த சிறுமி ஒருவரை நீராடியால் பதுங்கி வந்த சுறா ஒன்று திடிரென கடித்து குதறியது

                    சுறாவின் தாக்குதலில் காலில் பலத்த காயமடைந்த சிறுமி ,அங்குநின்ற மக்களினால் காப்பாற்ற பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டார்

                    பல நாட்கள் சிகிச்சையின் பின் தற்போது சிறுமி குணமடைந்துள்ளார் ,அவுஸ்ரேலியாவில் கடலில்

                    குளிக்கும் மக்களே கணவாய் ,மற்றும் சுறா தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றமை குறிப்பிட தக்கது

                    சுறா
                      Posted in Uncategorized

                      கிளிநொச்சி ,பளை ,விஸ்மடு பகுதியில் சிறிதரன் எம்பி நிவாரண உதவி photo

                      கிளிநொச்சி ,பளை ,விஸ்மடு பகுதியில் சிறிதரன் எம்பி நிவாரண உதவி photo

                      கிளிநொச்சியில் 750 குடும்பங்களுக்கு கனடா செந்தில் குமரன் நிவாரண நிதியம் உதவி!
                      நாட்டில் தற்பொழுது அமுலில் இருக்கும் பயணத்தடை காரணமாக வறிய மக்கள் கடும் சிரமத்தை

                      எதிர்நோக்கி உள்ளனர்.
                      பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பட்டினியாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

                      மக்களின் வறுமையை போக்கும் விதமாக புலம்பெயர் உறவுகள் தனிப்பட்ட ரீதியாகவும், ஊர்சங்கங்களின் ஊடாகவும், நிறுவனங்களின் ஊடாகவும் பல விதமாக உதவி வருகின்றனர்.

                      அந்த ரீதியில், கனடாவில் பல காலமாக தமிழ் மக்களின் பெரும் ஆதரவுடன் இயங்கி வரும் மின்னல் செந்தில் குமரனின் நிவாரண அமைப்பு 11 லட்சம் பெறுமதியான உலர் உணவு பொருட்களை நிவாரணமாக கிளிநொச்சி மக்களுக்கு வழங்கி உள்ளது.

                      இதனை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முன்னிலையில் DS அலுவலகத்தால் பரிந்துரைக்கப்பட்ட 750 குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்படுகிறது.

                      மேலும் பல மாவட்டங்களில் செந்தில் குமரனின் நிவாரன உதவி தொடர இருப்பதாக அறியப்படுகிறது…

                        Posted in Uncategorized

                        மழை நீர் தேங்கிய சாலையில் காண்ட்ராக்டரை உட்கார வைத்து தண்டனை கொடுத்த எம்எல்ஏ video

                        மழை நீர் தேங்கிய சாலையில் காண்ட்ராக்டரை உட்கார வைத்து தண்டனை கொடுத்த எம்எல்ஏ video

                        மும்பையின் பல்வேறு இடங்களில் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

                        மழை நீர் தேங்கிய சாலையில் காண்ட்ராக்டரை உட்கார வைத்து தண்டனை கொடுத்த எம்எல்ஏ
                        காண்ட்ராக்டர் மீது குப்பையை கொட்டும் காட்சி
                        மும்பை:

                        மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி,

                        பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையின் பல்வேறு இடங்களில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. பல்வேறு இடங்களில் மழை நீர் வடியாமல் தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

                        இந்நிலையில், சண்டிவாலி தொகுதியின் சிவ சேனா எம்எல்ஏ திலிப் லண்டே, மழை பாதிப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது ஒரு சாலையில் குப்பைகள் அகற்றப்படாமலும், மழை நீர் வடியாமல் தேங்கி நின்றதையும் கவனித்தார். மழைநீர் வடிகால்களை முறையாக சுத்தம் செய்யாமல் இருந்ததால் அடைப்பு ஏற்பட்டிருந்தது.

                        இதையடுத்து, அப்பகுதியின் துப்புரவு பணிகளுக்கான காண்ட்ராக்டரை வரவழைத்தார் எம்எல்ஏ. முறையாக குப்பைகளை அகற்றாததால் சாலையில் தண்ணீர் தேங்கியிருப்பதை சுட்டிக் காட்டிய அவர், காண்ட்ராக்டரை கண்டித்ததுடன், தண்ணீர் தேங்கியிருந்த சாலையில் அவரை அமர

                        வைத்தார். அத்துடன், பணியாளர்களிடம் உடனடியாக குப்பைகளை அள்ளி, காண்ட்ராக்டர் மீது போடும்படி கூறினார். அதன்படி துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அள்ளி, காண்ட்ராக்டர் மீது கொட்டினர்.

                        காண்ட்ராக்டரை சாலையில் அமர வைத்து தண்டனை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. காண்ட்ராக்டர் தனது வேலையை ஒழுங்காக செய்யாததால் நான் இவ்வாறு செய்தேன் என எம்எல்ஏ திலிப் லண்டே கூறினார்.

                          Posted in Uncategorized

                          39 மனைவிகள், 94 குழந்தைகள் – கணவர் மரணம் – கதறும் மனைவிகள்

                          39 மனைவிகள், 94 குழந்தைகள் – கணவர் மரணம் – கதறும் மனைவிகள்

                          ஜியோனா சனா என்பவரின் குடும்பத்தால் மிசோரமின் ஒரு கிராமம் குறிப்பிடத்தகுந்த சுற்றுலா இடமாக மாறியது குறிப்பிடத்தக்கது.

                          39 மனைவிகள், 94 குழந்தைகள் கொண்ட உலகின் மிகப்பெரிய குடும்பத்தை உடைய மிசோரம் நபர் காலமானார்
                          ஜியோனா சனா குடும்பம்


                          மிசோரம் மாநிலத்தின் பங்தங் டிலாங்நுயம் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ஜியோனா சனா. 76 வயதான இவருக்கு 39 மனைவிகள், 94 குழந்தைகள். உலகின் மிகப்பெரிய குடும்பத்தை

                          உடையவர் என்ற பெருமைக்குரியவர். இவர் காலமாகிவிட்டதாக அம்மாநில முதல்வர் ஜோரம்தங்கா தெரிவித்துள்ளார்.

                          மேலும், ஜியோனா தானாவின் குடும்பத்தால் அவர் வசித்த பக்தங் கிராமம் மற்றும் மிசோரம்

                          குறிப்பிடத்தகுந்த வகையில் சுற்றுலா பயணிகள் கவனத்தை ஈர்க்கும் இடமாகியது என முதலமைச்சர் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

                            Posted in Uncategorized

                            நிர்வாணமாக நடித்து ஆச்சர்யப்பட வைத்த ஆண்ட்ரியா

                            நிர்வாணமாக நடித்து ஆச்சர்யப்பட வைத்த ஆண்ட்ரியா

                            தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இதுவரை ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். பன்முக திறமைக்கொண்ட இவர் நடிப்பிலும் கலக்கி வருகிறார்

                            . மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, வடசென்னை, தரமணி, மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

                            ஆண்ட்ரியா நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் பிசாசு 2. மிஷ்கின் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளியான பிசாசு படம் பெரிய வெற்றி பெற்றதையடுத்து அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

                            இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கதைக்கு இந்த காட்சி மிகவும் அவசியம் என்பதால் ஆண்ட்ரியா இந்த காட்சியை சிறப்பாக நடித்து

                            முடித்துகொடுத்தாராம். படத்திற்காக ஆண்ட்ரியாவின் இந்த ரிஸ்க் ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. அந்த குறிப்பிட்ட காட்சி எடுக்கப்படும்போது படப்பிடிப்பு தளத்தில் மிக குறைவான நபர்களே இருந்துள்ளனர்.

                            ஆண்ட்ரியா

                            தமிழில் 2019 ஆம் ஆண்டு ஆடை படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவரை தொடர்ந்து தற்போது ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளார்.

                            Posted in Uncategorized

                            இலங்கை வான் படையில் மூன்று விமானங்கள் இணைப்பு

                            இலங்கை வான் படையில் மூன்று விமானங்கள் இணைப்பு

                            இலங்கை அரச இராணுவத்தின் பலத்தை அதிகரிக்கும் முகமாக தற்போது மூன்று அண்டனோவ் விமானங்கள் இணைக்க பட்டுள்ளன


                            இந்த விமானங்கள் இணைப்பின் ஊடக இலங்கை இராணுவம் புதிய பலத்தை பெற்றுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது

                              Posted in Uncategorized

                              பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை

                              பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை

                              கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்துக்குள்ளானதால் பாதிக்கப்பட்டுள்ள

                              மீனவருக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை நாளை முதல் இடம் பெறும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

                              விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதுள்ள பாணதுறை முதல் நீர்கொழும்பு வரையான

                              கடற்பகுதியில் முறையான ஆய்விற்கு பின்னர் விரைவாக மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு

                              சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் (11) பிரதமர் ஆலோசனை வழங்கினார்.இதன்போதே இந்த கொடுப்பனவு தொடர்பாக பிரதமர் அறிவித்தார்.

                              கப்பல் விபத்துக்குள்ளானதால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றது.

                              இழப்பீட்டை பெறுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளுமாறு

                              பிரதமர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பணிப்புரை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

                                Posted in Uncategorized

                                அமெரிக்காவில் துப்பாக்கி சூடு -14 பேர் காயம்

                                அமெரிக்காவில் துப்பாக்கி சூடு -14 பேர் காயம்

                                இன்று அமெரிக்காவில் Austin’s downtown entertainment district பகுதியில் இரு நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி 14 பேர் படு காயமடைந்துள்ளனர்

                                காயமடைந்த அனைவரும் மருத்துவ மனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                                துப்பாக்கி சூடு நடத்திய இருவரும் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளனர் ,இது குறித்த விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                Posted in Uncategorized

                                கிராமத்திற்குள் புகுந்து 53 பேரை கொன்று குவித்த தீவிரவாதிகள்

                                கிராமத்திற்குள் புகுந்து 53 பேரை கொன்று குவித்த தீவிரவாதிகள்

                                வடக்கு நையீரியாவில் உள்ள கிராமம் ஒன்றுக்குள் புகுந்த தீவிரவாதிகள் மக்கள் மீது திடீர்

                                துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினர் ,இதில் ஐம்பத்தி மூன்று மக்கள் படுகொலை செய்ய பட்டுள்ளனர்

                                இதே போன்ற தாக்குதல்கள் கடந்த மூன்று வாரத்தில் அதிகமாக இடம்பெற்றுள்ளது ,அப்பாவி

                                மக்களை இலக்கு வைத்து தீவிரவாதிகள் நடத்தி வரும் தொடர் தாக்குதலினால் மக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்