Tag: சவேந்திர சில்வா
சவேந்திர சில்வா உட்பட்ட யுத்தகுற்றவாளிகள் மீது பிரித்தானியா தடை விதிப்பு
சவேந்திர சில்வா உட்பட்ட யுத்தகுற்றவாளிகள் மீது பிரித்தானியா தடை விதிப்பு
சவேந்திர சில்வா உட்பட்ட யுத்தகுற்றவாளிகள் மீது பிரித்தானியா தடை விதிப்பு ,-பிரித்தானியா் வாழ் தமிழ் இளையோரின் 3 வருட தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி-
இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் யுத்த குற்றவாளியுமாகிய ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை தளபதி வசந்த கர்ணங்கொட, இரணுவ தளபதி ஜெகத்
ஜயசூரிய மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோர் மீது பிரித்தானியா இன்று (24 மார்ச் 2025) தடை விதித்துத்துள்ளது.
2020 இல் நடைமுறைக்கு வந்த உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் (Global Human Rights Sanction Regime) கீழ், இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்ட இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்த
குற்றவாளிகளை பிரித்தானிய அரசு, தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி பிரித்தானியாவிலுள்ள இனப்படுகொலையை தடுப்பதற்கும்
தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் (ICPPG) பல வழிகளில் தொடர் போராட்டங்களை மேற்கொண்டுவந்தது யாவரும் அறிந்ததே.
ஏப்பிரல் 2021 இல் ITJP என்ற மனித உரிமைகள் அமைப்பு சவேந்திர சிலவாவுக்கு எதிராக 50 பக்க ஆவணந்தை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்கு (FCDO)
சமர்ப்பித்திருந்தது. அதுபோலவே ICPPGயும் தொடரும் சித்திரவதை பற்றிய ஆதாரங்கள் அடங்கிய அறிக்கைகளை சமர்ப்பித்து, இலங்கை அதிகாரிகளை தடைசெய்யும் படி கோரிக்கை விடுத்தது.
அதனை தொடர்ந்து, ICPPG அனைத்து தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள், அனைத்து மனித உரிமை அமைப்புக்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சித்திரவரையால்
பாதிக்கப்பட்டவரகள் மற்றும் இரண்டாம் தலைமுறை இளையோரை ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை பலவழிகளில் முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில் பிரித்தானியா வாழ் இளையோர் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளதுடன், இணைய வழி கையெழுத்து போராட்டம் ஒன்றையும் ஆரம்பித்தனர். அவர்களின் முயற்சியில் 18 மே 2021 அன்று பிரித்தானிய
பாராளுமன்றில் ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான மக்லோக்லின் ஆன் அவர்களின் மூலம் முன்பிரேரணை (EDM 64) ஒன்று கொண்டுவரப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து பிரித்தானிய பாராளுமன்ற
உறுப்பினர்களையும் தொடர்பு கொண்டு, தொடர் சந்திப்புக்களை நடாத்தி இப்பிரேரணைக்கு 33 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கையெழுத்தும் பெறப்பட்டது.
கறுப்பு யூலை தினத்தை முன்னிட்டு 23 யூலை 2021 அன்று பிரித்தானிய பிரதமருக்கு ICPPG யால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவிற்கு பிரித்தானிய அரசின் வெளிவிவகார அமைச்சின் பதில் திருப்திகரமாக அமையவில்லை. இதனை தொடர்ந்து,
பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆயிரக்கணக்கான கடிதங்களை அனுப்பிவைத்துள்ளதுடன், இதுவரை 100க்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து, சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியா தடை
செய்ய FCDO இற்கு அழுத்தம் கொடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். பல பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை வீடியோவில் தெரிவித்து ஒரு வீடியோ
ஆவணத்தையும் வெளியிட்டிருந்தனர். பிரித்தானிய பாராளுமன்றில் விவாதங்களையும் ஏற்பாடு செய்திருந்தனர்.
தற்போது ஆட்சியமைந்துள்ள பிரித்தானியாவின் தொழிலாளர் கட்சி கடந்த தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தடையை அறிவிப்பதாக வாக்குறுதி வழங்கியிருந்தது. ஆயினும் இதனை நடைமுறைப்படுத்த தாமதித்ததால், ICPPG இந்த
போராட்டத்தை தொடர்ந்து வந்ததுடன், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும்படியும் பிரித்தானிய அரசுக்கு கோரிக்கை விட்டிருந்தது. அத்துடன் ITJP, Redress, Sri Lanka Campaign,
Tamils For Labour மற்றும் British Tamil Conservatives ஆகிய அமைப்புக்களின் கடும் உழைப்பின் விளைவாக, இன்று பிரித்தானிய அரசு இலங்கை யுத்தகுற்றவாளிகளை தடைசெய்து, அதற்கான பட்டியலை அறிவித்துள்ளது.
இலங்கையில் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டு தப்பிவந்தவர்கள், சித்திரவதை அனுபவித்தவர்கள் மற்றும் பிரித்தானாய வாழ் இளையோரின் இடைவிடாத
போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியே இதுவாகும். இனப்படுகொலைக்கான நீதிப்போராட்டந்தில் இது ஒரு ஆரம்பபடியாக அமையும் என்று நம்பப்படுகிறது.
சவேந்திர சில்வா ஓய்வு
சவேந்திர சில்வா விலகல்
சவேந்திர சில்வா ஓய்வு, ஜெனரல் சவேந்திர செல்வா தற்பொழுது ஓய்வு பெற்றுள்ளதாக இலங்கை பிரதான ராணுவ தெரிவித்துள்ளது .
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு மிக முக்கியமான படையணி தளபதியாக விளங்கிய சகோதர சிவா தகவல்களையும் விடுதலைப் புலிகளையும் கொன்று அழித்தார் .
அவ்வாறு படுகொலையை புரிந்த இன அழிப்பு நாயகனாக இருக்கக்கூடிய சவேந்திர சில்வா தற்பொழுது இலங்கை ராணுவ தரப்பிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோத்தபாயாவின் வலது கையாகவும் செல்ல பிள்ளையாகவும் விளங்கி வந்த சவேந்திர சில்வா இராணுவத்துக்குள் பல
மாற்றங்களையும் பதவி உயர்வுகளையும் தனக்கு சார்பானவர்களை உருவாக்கி வைத்திருக்கிறார் .
இவரது காலப்பகுதியில் இலங்கை ராணுவத்தில் இலங்கை ராணுவத்திலிருந்து புரட்சிகள் வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த நிலையில் தற்போது இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதாக சொல்லப்படுகிறது.
இவர் ராணுவத்தில் இருந்து விலகினாலும் இவரது இரும்புக்கரம் ராணுவத்தை சுற்றி வேரோடு வேராக பின்னப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- நாவலபிட்டியாவில் விருந்தில் போலீசார் நடத்திய சோதனையில் போதைப்பொருட்களுடன் 12 இளைஞர்கள் கைது

- இலங்கை முழுவதும் நிலவும் மோசமான வானிலையால் 5,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் புதிய எரிபொருள் நிலையங்கள் அமைக்கப்படும் என எரிசக்தி அமைச்சர்

- இலங்கை காவல்துறை அதிகாரிகள் பணியின்போது உயிரிழக்கும் அதிகபட்ச அபாயத்தை எதிர்கொள்கின்றனர்

- நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் திடீர் வெள்ளத்தால் இலங்கையர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை

விமலிடம் இழப்பீடு கோரிய சவேந்திர சில்வா
விமலிடம் இழப்பீடு கோரிய சவேந்திர சில்வா
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவிடம் இருந்து பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இழப்பீடு கோரி கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அண்மையில் வெளியான புத்தகத்தின் மூலம் தனக்கும் இராணுவத்தினருக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்து இவ்வாறு செயற்பட நடவடிக்கை எடுத்துள்ளார்
Featured
தையிட்டி விகாரையை அகற்ற முடியாது
தையிட்டி விகாரையை அகற்ற முடியாது
யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை ஒருபோதும் அகற்றமுடியாது என்று பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி அப்போது இராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா அடிக்கல் நட்டிருந்தார்.
தையிட்டி விகாரையை அகற்ற முடியாது
தனியார் காணிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மேற்படி விகாரையை அகற்றி அந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்களால் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சவேந்திர சில்வா, குறித்த திஸ்ஸ விகாரை அரசின் முழுமையான அனுமதியுடன் இராணுவத்தினரின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டது என்றார்.
மேலும் இனவாத, மதவாதக் கண்ணோட்டத்துடன் இதனை நோக்குவதை தமிழ்க் கட்சிகளும் அவர்களது ஆதரவாளர்களும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Featured
சவேந்திர சில்வா அதி உயர் விருதை பெற்றார்
சவேந்திர சில்வா அதி உயர் விருதை பெற்றார்
இலங்கையின் 75 வது சுதந்திர தின நிகழ்வில் ,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முப்படைகளின் தலைமை தளபதி என்ற வகையில்,முப்படைகளின் 77 சிரேஷ்ட அதிகாரிகளுக்கு களங்கமற்ற
சேவையை அங்கீகரிக்கும் மதிப்புமிக்க விஷிஷ்ட சேவா விபூஷணயா (VSV) விருதை வழங்கினார்.
கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கௌரவமான நிகழ்வின் போது படைகள்.
இந்த நிகழ்வின் போது, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சுதந்திர தினப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டார், இது இலங்கையின் ஆயுதப்படை வரலாற்றில் அதிக மதிப்புமிக்க பதக்கங்களைப் பெற்ற இராணுவ அதிகாரி என்ற பெருமையைப் பெற்றது.
சவேந்திர சில்வா அதி உயர் விருதை பெற்றார்
விஷிஷ்ட சேவா விபூஷணயா பதக்கம் என்பது ஒரு சிறப்பு விருது மற்றும் ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் மற்றும் அதற்கு மேல் பதவியில் உள்ள
அதிகாரிகளுக்கும், கடற்படை மற்றும் விமானப்படையில்
குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் தொடர்ந்து சேவையில் இருக்கும்
அதிகாரிகளுக்கும் மட்டுமே வழங்கப்படுகிறது.
அவ்வாறான விருதை தமிழ் இன கொலையாளி சவேந்திர சில்வா பெற்று கொண்டுள்ளார் .
10,935 படையினருக்கு பதவியுயர்
10,935 படையினருக்கு பதவியுயர்
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா 567 அதிகாரிகளையும், 10,368 பிற பதவிகளையும் உயர்த்தியுள்ளார்.
ஆயுதப்படைகளின் தளபதியான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஒப்புதலுடன் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, மூத்த பிரிகேடியர்கள் எண்மர் மேஜர் ஜெனரல்களாகவும், 17 கேர்ணல்கள் பிரிகேடியர் பதவிக்கும், 42 லெப்டினன்ட் கேர்ணல்கள் கேர்ணல் பதவிக்கும், 60 மேஜர்கள், லெப்டினன்ட்
கேர்ணல்களாகவும், 256 கேப்டன்கள் மேஜர்களாகவும், 10 லெப்டினன்ட்கள் கெப்டன் பதவிக்கு, லெப்டினன்ட்
பதவிக்கு 152 இரண்டாவது லெப்டினன்ட்கள் லெப்டினன்ட்களாகவும் மற்றும் லெப்டினன்ட் (கியூஎம்) பதவிக்கு 22 நன்னடத்தை அதிகாரிகள் பதவியுயர்த்தப்பட்டுள்ளனர்.
ஜெனரல் ஷவேந்திர சில்வா பதவியேற்ற இரண்டு வருட காலத்திற்குள், இலங்கை இராணுவத்தில் அதிகாரிகள் மற்றும் இதர பதவிகளுக்கு மிக அதிகமான பதவி உயர்வுகளை வழங்கியுள்ளது.
இலங்கை இராணுவத்தின் 72ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டே இந்தப் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதியின் அறிவிப்பு
இராணுவத் தளபதியின் அறிவிப்பு
கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளவுள்ள பொதுமக்கள் தங்களுடைய கிராம உத்தியோகத்தர் பிரிவில் அல்லது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் மாத்திரம்
அதனை பெற்றுக் கொள்ளுமாறு கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒவ்வொரு பிரதேசத்திற்கும், பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளே வழங்கப்பட்டுள்ளதால், மக்கள் தமது சொந்தப் பிரதேசங்களில் மாத்திரம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.
அண்மையில் பல தடுப்பூசி நிலையங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் இராணுவ தளபதி தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்தில் உள்ள 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் மாத்திரம் கொழும்பு விஹாரமஹாதேவி பூங்கா மற்றும் தியத உயனவில் நிறுவப்பட்டுள்ள தடுப்பூசி நிலையங்களில்
தங்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார்.
சவேந்திர சில்வா வர தடை போடு- பிரிட்டன் பிரதமர் இல்லம் முன்பாக போராட்டம் photo video
சவேந்திர சில்வா வர தடை போடு- பிரிட்டன் பிரதமர் இல்லம் முன்பாக போராட்டம் photo video photo video
பிரிட்டன் பிரதமர் இல்லம் முன்பாக தமிழர்கள் இன்று மதியம் ஒரு மணியளவில் ஒன்று கூடி பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
,இதில் தமிழர்களை இறுதி போரின் பொழுது கொன்று குவித்த சவேந்திர சில்வாவை பிரிட்டனுக்கள் நுழைய தடை விதிக்க கோரி இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது ,மேலும் மகயரும் கையளிக்க பட்டுள்ளது
அன்றைய படையணி தளபதியாக இருந்தவர் ,இன்று முப்படை தளபதியாக தெரிவு செய்ய பட்டுள்ளார்
இன்றைய இராணுவ தளபதியாக விளங்கி வரும் இவரால் ,பல்வேறு பட தமிழர்கள் கைது செய்ய பட்டு காணாமல் போகின்றமை தொடர்கிறது ,புலிகள் என்ற போர்வையில் கைதுகள் ,வதைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
தொடர்ந்து இலங்கை மீது அழுத்தம் கொடுக்க கோரி இடம்பெற்றுள்ள இந்த போராட்டம் பெரும் வெற்றி என தமிழருக்கான சுதந்திர வேட்டை காரர்கள் என்ற அமைப்பினர் தெரிவித்துள்ளனர்
தொடர்ந்து இந்த அமைப்பினால் பல் வேறு போராட்டங்கள் முன்னெடுக்க பட்டு வருகின்றமை ,சிங்கள அரசுக்கு பெரும் நெருக்கடியை வழங்கியுள்ளது குறிப்பிட தக்கது








- முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த விமானிகளைப் பாதிக்கும் இஸ்ரேலியத் தடையை ஏர் பிரான்ஸ் அமல்படுத்துகிறது

- ரியாத் விமான நிலையத் தாக்குதலில் 12 பேர் பலி, 300க்கும் மேற்பட்டோர் காயம்

- நாவலபிட்டியாவில் விருந்தில் போலீசார் நடத்திய சோதனையில் போதைப்பொருட்களுடன் 12 இளைஞர்கள் கைது

- இலங்கை முழுவதும் நிலவும் மோசமான வானிலையால் 5,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- சவூதி விமான நிலைய விமானங்களுக்கு ஹவுதி எச்சரிக்கை

சவேந்திர சில்வாவை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்க கோரிக்கை
சவேந்திர சில்வாவை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்க கோரிக்கை
இலங்கையின் இன்றைய இராணுவ தளபதி சவேந்திர சில்வாவை சர்வதேச நீதிமன்றில் ஏற்றி விசாரிக்க
கோரி ஐம்பது பக்க அறிக்கை ஜாஸ்மின் சுகாகாவினால் வழங்க பட்டுள்ளது ,மேலும் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் 11 பேரும் இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த கோரி பிரிட்டனிடம் வேண்டுகோள் விடுக்க பட்டுள்ளது
இறுதிப்போரில் பொழுது ,காணாமல் போதல்,படுகொலைகள் என்பனவற்றை முன் நின்று நடத்திய கொலை
வெறியர் சவேந்திர சில்வா என மேற்படி ஐம்பது பக்க பக்கத்தினுள் ஐந்துக்கு மேற்பட்ட இடங்களில் சுட்டி காட்ட பட்டுள்ளது
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையின் கோரிக்கைகளை தட்டி கழித்து ,மனித
உரிமைகளிற்கு மதிப்பு அளிக்காது சிங்கள தேசம் செயல் பட்டு வருகின்ற நிலையில் இந்த விடயம் முன் வைக்க பட்டு வருகிறது
இலங்கை இராணுவவத்திற்கு எதிராக பாரிய நிதி வழங்க பட்டு அதில் இவர்கள் பேசி வருவதாக இலங்கை இராணுவம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம்
சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம்
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கான திடீர் விஜயமொன்றை
மேற்கொண்டுள்ளார்.
யாழின் பாதுகாப்பு மற்றும் கொவிட் நிலவரம் குறித்து ஆராய அவர் இந்த விஜயத்தை
மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

- முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த விமானிகளைப் பாதிக்கும் இஸ்ரேலியத் தடையை ஏர் பிரான்ஸ் அமல்படுத்துகிறது

- ரியாத் விமான நிலையத் தாக்குதலில் 12 பேர் பலி, 300க்கும் மேற்பட்டோர் காயம்

- நாவலபிட்டியாவில் விருந்தில் போலீசார் நடத்திய சோதனையில் போதைப்பொருட்களுடன் 12 இளைஞர்கள் கைது

- இலங்கை முழுவதும் நிலவும் மோசமான வானிலையால் 5,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- சவூதி விமான நிலைய விமானங்களுக்கு ஹவுதி எச்சரிக்கை

பாண்டிகை காலத்தில் இவை இல்லை – இராணுவம் அறிவிப்பு
பாண்டிகை காலத்தில் இவை இல்லை – இராணுவம் அறிவிப்பு
இலங்கையில் இடம்பெற்றவுள்ள பண்டிகளி காலப்பகுதியில் பயன் கட்டுப்பாடுகள் விதிக்க பட
மாட்டாது என இராணுவ தளபதி தெரிவித்துளளார்
இந்த பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு பணியில் பல்லாயிரம் இராணுவம் போலீசாரை
கடமையில் ஈடுபடுத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
நாளை தனிமை படுத்தலில் இருந்து பல பகுதிகள் விடுதலை – இராணுவ தளபதி அறிவிப்பு
நாளை தனிமை படுத்தலில் இருந்து பல பகுதிகள் விடுதலை –
இராணுவ தளபதி அறிவிப்பு
இலங்கையில் பரவி வரும் நோயின் காரணமாக மக்கள் நடமாட
தடை செய்ய பட்டுள்ள பகுதிகள் சில நாளை காலை முதல் மக்கள்
பாவனைக்கு விடுவிக்க படவுள்ளதாக இலங்கை இராணுவ தளபதி
சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
புலிகளினால் ஏராளமான சொத்துக்களும் உயிர் இழப்புக்களும் ஏற்பட்டன
புலிகளினால் ஏராளமான சொத்துக்களும் உயிர் இழப்புக்களும் ஏற்பட்டன
பயங்கரவாதிகளான விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்ட வடக்கினை முப்படையினரின் அர்ப்பணிப்புடன் மீளக்கட்டி எழுப்பி
வருவதாக தெரிவித்துள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, விடுதலைப்புலிப் பயங்கரவாதிகளால்
ஏராளமான சொத்து இழப்புக்களும் உயிர் இழப்புக்களும் ஏற்பட்டன என்றும் தெரிவித்தார்.
இன்றையதினம் புங்குடுதீவில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீட்டு திட்டத்தினை திறந்து வைத்தபின் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது இலங்கையில் கொரோனா நோய் முற்றாக நீங்கி விடவில்லை நான் வடக்கு
மக்களுக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன். நீங்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும் சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.
அதிலும் குறிப்பாக நீங்கள் மாஸ்க் அணிந்து கட்டாயம் வீதிகளில் பயணிக்க வேண்டும். அதேபோல் நீங்கள் கைகளை நன்றாக கழுவி
உங்களுடைய சுகாதார நடைமுறைகளை பேணுவது அவசியமாகும் ஏனெனில் இலங்கையில் இருந்து இன்னும் கொரோனா முற்றாக நீங்கவில்லை என்றார்.
30 வருடகாலமாக பயங்கரவாதிகளான விடுதலைப் புலிகள் மேற்கொண்ட யுத்தத்தின் காரணமாக அழிவடைந்த வடக்கினை முப்படையினரின் அர்ப்பணிப்புடன் மீள கட்டி எழுப்பி
வருவதாகவும் யுத்தம் முடிந்த பின்னர் வடக்கில் ராணுவத்தினரால் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக கல்வி சுகாதாரம் நீர்ப்பாசனம் போன்ற வேலைத்திட்டங்கள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன. அதேபோல் இராணுவம் மட்டுமல்ல முப்படையினரும் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான வேலைத் திட்டங்களை
மேற்கொண்டு வருகின்றோம். வடக்கில் உள்ள அப்பாவி தமிழ் மக்களுக்காக இராணுவத்தினர் தற்போது வீதிகளில் இறங்கி வேலைகள் செய்வதை நீங்கள் பார்க்க கூடியதாக இருக்கும்.
அதே போல் தான் ஒரு பெரிய சவாலாக அமைந்தது. இந்த கொரோனா வைரஸ் அதைக் கூட நாம் முற்றுமுழுதாக
இல்லாதொழிக்விட்டாலும் பூரண கட்டுப்பாட்டுக்குள் முப்படையினர் இணைந்து வைத்திருக்கின்றோ
வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம் – இராணுவத் தளபதி
வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம் – இராணுவத் தளபதி
கொவிட் – 19 வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம் என்று
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நோய் சமூகமயப்படுதலைத் தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்கு தொடர்பாக
அரசாங்கத் தகவல் திணைக்களம் வழங்கும் செய்திகளை மாத்திரம் நம்புமாறும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மக்களைக் கேட்டுள்ளார்



















