மின்தடை இருளில் மூழ்கிய வீடுகள்
Posted in இலங்கை செய்திகள்

மின்தடை இருளில் மூழ்கிய வீடுகள்

மின்தடை இருளில் வீடுகள்

மின்தடை இருளில் மூழ்கிய வீடுகள்,மின்தடை இருளில் மூழ்கிய வீடுகள் கொழும்பு களுத்துறை உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் திடீரென தடைப்பட்ட தினால் ,அங்குள்ள வீடுகள் வர்த்தக நிலையங்கள் என்பன முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாரியம் நடவடிக்கை

தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்த மின்தடை ஏற்பட்டுள்ளதாகவும் ,தற்பொழுது அதனை சீர் செய்யும் நடவடிக்கை மின்சார வாரியம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, களுத்துறை ,பகுதிகளில் இந்த மின்சார கட்டமைப்பு வேலைகள் தற்போது துரித முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ,அதனால் அதை முதலில் கட்டமைக்கும் வரைக்கும் இந்த சிக்கல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக பெருமளவு அளவிலான பகுதிகள் தற்போது இருளில் மூழ்கியிருந்தால், மக்கள் பெரும் துயரை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு

தொழில்நுட்பக் கோளாறு என அரசு திட்டமிட்டு செயல்பட்டு செல்கிறதா ..?அல்லது உண்மையில் அங்கு கோளாறு ஏற்பட்டதா என்பது தொடர்பாகவே தெரியவில்லை.

அனுரா அரசு பொருளாதாரத்தில் மிகப்பெரும் சரிவையும் சிக்கலையும் சந்தித்து வருகின்ற நிலையில் ,இவற்றை மீதப்படுத்தி மக்களை அடக்கி ஆள்வதற்காக இவ்வாறான விடயங்களை தெரிவித்து வருகிறது எனவே செய்திகளை பார்க்க முடிகிறது.

800மில்லியன் மோசடி சிக்கிய மேர்வின்சில்வா
Posted in இலங்கை செய்திகள்

800மில்லியன் மோசடி சிக்கிய மேர்வின்சில்வா

800மில்லியன் மோசடி சிக்கிய மேர்வின்சில்வா

800மில்லியன் மோசடி சிக்கிய மேர்வின்சில்வா ,800 மில்லியன் மோசடி மெர்வின் சில்வா க்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேர்வின்சில்வா பெற்றுக்கொண்ட வருமானத்தின் அடிப்படையில், 800 மில்லியன் ரூபாய் பெருமதியான சொத்துக்கு கணக்கு காட்டாமல் ,அதை மறைத்து வைத்தார் என்ற குற்ற சாட்டின் அடிப்படையில், அவருக்கு

தற்பொழுது லஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீது லஞ்ச ஆணைக்குழு குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவர் மஹிந்த அரசின் முக்கியமான அமைச்சு பதவியை பெற்றிருந்தார். அதனை அடுத்தே தற்போது இவருக்கு இந்த பிடிபறந்து கொடுக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஊழல்வாதிகளை அழிப்பேன் என ,அனுரா ஆட்சி மக்களுக்கு சூளுரைத்தது . இவர்கள் வைத்திருக்கும் லஞ்ச பணத்தை மீட்டாலே நாட்டை காப்பாற்ற முடியும் என்கிறது ஆளும் அரசு .

அதனை அடுத்து தற்பொழுது லஞ்சு ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் மேர்வின் சில்வா சொத்து தொடர்பான கணக்கறிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்களில் அவர் உரிய முறையில் கணக்கு காட்டு தவற என்ற குற்றச்சாட்டு அறிவிக்கப்பட்டால் அத்தனை சொத்துக்களும் அரச உடமையாக்க க்கப்படும் என வெளியிடப்பட்டுள்ளது.

அனுரா அரசு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை

அனுரா அரசு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை கண்டு மக்களை குஷிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்பதா என மக்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

லஞ்ச ஊழல் செய்கின்றவர்கள் கடந்த கால ஆட்சியாளர்கள் சொன்னால், தற்கால ஆட்சியாளர்கள் யாருமே அதனை செய்யவில்லை என்ற கேள்வியும் தற்போது எழுப்பப்பட்டு வருகின்றபோது குறிப்பிடத்தக்கது.

விரோத கட்சியுடன் கூட்டணியா சிறிதரனின் கருத்து
Posted in இலங்கை செய்திகள்

விரோத கட்சியுடன் கூட்டணியா சிறிதரனின் கருத்து

விரோத கட்சியுடன் கூட்டணியா சிறிதரனின் கருத்து

விரோதக் கட்சி உறுப்பினர்களுடன் கூட்டணி சேர பேசியதாக வரும் செய்திகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என சிறிதரன் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்களில் கூட்டணி அமைப்பது குறித்து தமிழ்த்தேசியக்கட்சிகளுடன் பேசுவதற்கே கட்சி தீர்மானித்திருந்ததாக

சுட்டிக்காட்டிய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன்,

அவ்வாறிருக்கையில் தமிழ்த்தேசியத்துக்கு விரோதமான கட்சியின் தலைவரான டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனத் தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியும், டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும்

வியாழக்கிழமை (5) சந்தித்துப் பேசவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இதுவரை காலமும் அரசாங்கத்தை ஆதரித்துவந்த ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் இடையில் அடிப்படை கொள்கையிலேயே வேற்றுமை நிலவும் பின்னணியில்,

இச்சந்திப்புக் குறித்து வினவியபோது வியாழக்கிழமை (5) சந்திப்பு நடைபெறவிருப்பதை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் உறுதிப்படுத்தினார்.

இவ்விருதரப்பு சந்திப்பில் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானமும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துகொள்வர் எனவும் அவர் தெரிவித்தார்.

இதுபற்றி கேசரியிடம் கருத்து வெளியிட்ட தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன், உள்ளுராட்சி மன்றங்களில் கூட்டணி அமைப்பது குறித்து டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடுவது பற்றி

கட்சியின் உயர்மட்டக்குழுவில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும், ஆகவே இச்சந்திப்பு தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனவும் குறிப்பிட்டார்.

அதுமாத்திரமன்றி கூட்டணி அமைப்பது குறித்து தமிழ்த்தேசியக்கட்சிகளுடன் பேசுவதற்கே கட்சி தீர்மானித்திருந்ததாகவும், அவ்வாறிருக்கையில் தமிழ்த்தேசியத்துக்கு விரோதமான கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதெனில்,

அதுபற்றி கட்சியின் உயர்மட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வவுனியா வீட்டில் 9 அடி முதலை
Posted in இலங்கை செய்திகள்

வவுனியா வீட்டில் 9 அடி முதலை

வவுனியா வீட்டில் 9 அடி முதலை

வவுனியா கொக்குவெளி பகுதியில் உள்ள வீடொன்றின் வளவிலிருந்து 9 அடி நீளமான முதலையொன்று வனஜீவராசிகள் திணைக்களத்தால் மீட்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் புதன்கிழமை (4) அவ்வீட்டுக்கு பின்புறமுள்ள தோட்டப்பகுதியில் முதலை ஒன்று இருந்ததை வீட்டின் உரிமையாளர் அவதானித்துள்ளார்.

அவர் அதனை துரத்த முற்பட்டபோது, அக்காணியில் உள்ள கைவிடப்பட்ட கிணற்றில் முதலை வீழ்ந்துள்ளது.

இதனையடுத்து அவர் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதன் பின்னர், இன்றைய தினம் (5) அப்பகுதிக்குச் சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தினர் காணியில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து முதலையினை பிடித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் பஸ் க்கு AI தொழினுட்பம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் பஸ் க்கு AI தொழினுட்பம்

இலங்கையில் பஸ் க்கு AI தொழினுட்பம்

பஸ் விபத்துக்களை தடுக்கும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

பஸ்களை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்ப (AI) சாதனங்களை பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“இந்த சாதனங்கள் எதிர்வரும் இரண்டு மாதங்களில் சுமார் 40 பேரூந்துகளில் இந்த செயற்கை நுண்ணறிவு கருவிகள் பொருத்தப்பட உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தக் கருவிகள் மூலம் சாரதிகளுக்கு ஏற்படக்கூடிய நித்திரைக் கலக்கம் கண்காணிக்கப்பட்டு அதற்கான தீர்வுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பரவிவரும் கொரோனா வைரஸ் முகக்கவசம்
Posted in இலங்கை செய்திகள்

பரவிவரும் கொரோனா வைரஸ் முகக்கவசம்

பரவிவரும் கொரோனா வைரஸ் முகக்கவசம்

பரவிவரும் கொரோனா வைரஸ் முகக்கவசம் ,நாட்டில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் உள்ளிட்ட நோய்கள் குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நாட்களில் டெங்கு, சிக்குன்குனியா, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.

இருப்பினும், இது ஒரு தொற்றுநோய் நிலைமை அல்ல என்று அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று (04) இரவு “டிவி தெரண”வில் ஒளிபரப்பான புதிய பாராளுமன்றம் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றும் போதே விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை தலைவர்

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை தலைவர் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம கருத்து வௌியிடுகையில், இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்தார்.

சமீப காலமாக ​​ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது.

இவ்வகை நுளம்புகளே சிக்குன்குனியாவுக்கும் காரணமாகின்றன. இந்த இரண்டு நோய்களிலும் அதிக ஆபத்து உள்ளது. தற்போது இன்ஃப்ளூயன்ஸா நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இது வயதான சிலருக்கு கடுமையான நிலைமைகளுக்கும் மரணத்திற்கும் கூட வழிவகுக்கும்.

இதேவேளை, புதிய நாடாளுமன்றம் நிகழ்ச்சியில் முகக்கவசம் அணிவது தொடர்பான தற்போதைய பிரசாரம் குறித்தும் சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க விளக்கினார்.

வைரஸ் சுவாச நோய்

உங்களுக்கு வைரஸ் சுவாச நோய் இருந்தால், அது மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க முகக்கவசம் அணிவது நல்லது. முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அறிவித்தலால் சிக்கல் நிலைமை உருவாகலாம்.

நாம் ஏதாவது ஒன்றைப் பற்றி பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டுமெனில், நாங்கள் தயங்க மாட்டோம். முகக்கவசங்களை அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதனை அணியவேண்டும் என்று நாங்கள் குறிப்பிடுவோம்.

ஆனால், இந்த நேரத்தில் அது அவசியமில்லை என்பது தெளிவாகிறது. இது சாதாரணமாகிவிட்டது. எனவே, பெரிய அளவிலான சிக்கல்கள் மற்றும் இறப்புகள் ஏற்படும் சூழ்நிலை இனி இல்லை.

ஒருவர் கைது உள்நாட்டு துப்பாக்கியுடன்
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் கைது உள்நாட்டு துப்பாக்கியுடன்

ஒருவர் கைது உள்நாட்டு துப்பாக்கியுடன்

ஒருவர் கைது உள்நாட்டு துப்பாக்கியுடன் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.துப்பாக்கி கலாச்சாரம் இலங்கையில் அதிகரித்து வருவதை இந்த விடயம் அம்பல படுத்தி நிற்கிறது .

வகாரகளே பிரதேசத்தில் உள்ளூர் முறையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது நடவடிக்கை

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து ,இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அவரது வீட்டை போலீசார் திடீரென சுற்றி வளர்த்தனர். அதன் பொழுதே இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.

49 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீப காலங்களாக இலங்கையில் துப்பாக்கி உடன் அலைகின்ற .பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள் .இந்த கைதுக்கான நடவடிக்கை தொடர்பாக தெரிய வரவில்லை.

நாடளாவிய ரீதியில் இடம் பெற்று வருகின்ற பல துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் இதுவரை 28க்கு மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளமை அனுரா அரசினுடைய சட்ட சீர் இன்மையை காண்பிக்கிறது.

பேருந்து விபத்துக்கள்

பேருந்து விபத்துக்கள் ,வாகன விபத்துக்கள் ,தொடர்பாக நாள்தோறும்ஏழு பேர் பலியாகி வருகின்றனர் .

அவ்வாறான நிலையில் தற்போது இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், சட்டவிரோதமான துப்பாக்கி பாவனை என்பன இலங்கையில் அதிகரித்து காணப்படுகின்றமை, இந்த விடயத்துடாக மேலும் ஒருமுறை அம்பலமாகி உள்ளது.

முன்னாள் அமைச்சர் லஞ்சஊழல் பிரிவில்
Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் அமைச்சர் லஞ்சஊழல் பிரிவில்

முன்னாள் அமைச்சர் லஞ்சஊழல் பிரிவில்

முன்னாள் அமைச்சர் லஞ்சஊழல் பிரிவில் ,முன்னாள் அமைச்சர் லஞ்ச ஊழல் பிரிவில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் முன்னாள் ராஜங்க அமைச்சர் ரவீந்திர ராஜபக்ஷ பாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்காக லஞ்ச ஊழல் விசாரணை குழுவுக்கு சமூகமளித்துள்ளதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

லஞ்ச ஆணை குழுவிற்கு முன்னிலை

இன்று காலை 9 மணியளவில் அவர் லஞ்ச ஆணை குழுவிற்கு முன்னிலையாகி தமது கருத்தைத் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன நிறுவனத்தில் இருந்து தரமற்ற கரிமொரு கப்பலை இறக்குமதி செய்ததன் மூலம் .அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்தி இருந்த சம்பவம் தொடர்பாக, லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலும் இந்த விசாரணை இடம்பெற்று வருகிறது.

ராஜபக்ஷாக்கள் ஆட்சி இலங்கையில் இடம்பெறுகின்ற பொழுது அதை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல மில்லியன் மோசடியில் ஈடுபட்டார்கள்.

அதிகமான மோசடியில் ஒன்றாக இது காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது .

இலங்கை லஞ்ச ஊழல் விசாரணை ஆணை குழு

அதனை அடுத்தே தற்பொழுது இலங்கை லஞ்ச ஊழல் விசாரணை ஆணை குழு முன்னிலையில் ஆஜராகி அங்கு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

கடந்த அடச்சியில் ஊழல் செய்தவர்களை விசாரணை என்ற பெயரில் விசாரணை செய்கிறதா, அல்லது அவர்களை திட்டமிட்டு நாடக அரங்கேற்றமாக இதை காண்பிகிறதா .

தமது அரசாட்சி இவர்களுக்கு எதிராக குற்றங்களை சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதாக காண்பிப்பதா என்கின்ற விடயம் தான் கேள்வியாக இருக்கிறது.

ஆகமொத்தம் நாங்கள் தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குகளுக்கு இணைய. ஊழல் செய்தவர்களை விசாரித்து வருகிறோம் என்ற தோற்ற பாடே காண்பிப்பதற்காக ,இந்த விதமான ஒரு நாடகத்தை அனுரா ஆடி வருவதாகவே பார்க்கப்படுகிறது.

பண மோசடியில்ஈடுபட்ட சீனப்பெண் கைது
Posted in இலங்கை செய்திகள்

பண மோசடியில்ஈடுபட்ட சீனப்பெண் கைது

பண மோசடியில்ஈடுபட்ட சீனப்பெண் கைது

பண மோசடியில்ஈடுபட்ட சீனப்பெண் கைது ,பண மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் சீனா பொண் ஒருவர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா விசா பெற்றுக் கொடுப்பதாக கூறி ,15 லட்சம் ரூபாய் மோசடி செய்த சீன பெண்ணே ,தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.

அதற்காக இவர் அமெரிக்கா டொலர் வழங்க வேண்டும் என தெரிவித்து ஒரு லட்சத்து 99600 பணம் மோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மோசடி பிரிவு

அதன்படி விசாரணை நடத்திய கொழும்பு மோசடி பிரிவு குறித்த சீன பெண்ணை கைது செய்தனர்.

54 வயது சீனாப் பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பலரை ஏமாற்றி பண மோசடி

இலங்கைக்கு உல்லாச பயணிகளாக வருகை தந்திருக்கின்ற ,இவ்வாறான வெளிநாட்டவர்கள், மக்கள் பலரை ஏமாற்றி பல மோசடிகள் ஈடுபட்டு வருவதான செய்திகள் வெளியாகி இருந்தன.

அதன் அடிப்படையில் தற்பொழுது இந்த பொன்மணி செய்த இந்த விடயம் ,பெரும் சர்ச்சையும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பாராளுமன்ற அமர்வு 05.06.2025 நேரலை
Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்ற அமர்வு 05.06.2025 நேரலை

பாராளுமன்ற அமர்வு 05.06.2025 நேரலை

பாராளுமன்ற அமர்வு 05.06.2025 நேரலையில் பல காரசாரமான விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

https://www.youtube.com/watch?v=jy62VbP2amM
மக்களை விற்கவேண்டாமென சங்கரி வேண்டுகோள்
Posted in இலங்கை செய்திகள்

மக்களை விற்கவேண்டாமென சங்கரி வேண்டுகோள்

மக்களை விற்கவேண்டாமென சங்கரி வேண்டுகோள்

உங்களது பதவிகளுக்காக தமிழ் மக்களை விற்காதீர்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

யாழ் . ஊடக அமையத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம், தொண்டமான் உள்ளிட்டவர்கள் உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி இன்றும் இருக்கிறது.

தமிழர் விடுதலைக் கூட்டணியும் நானும் உயிரோடு இருக்கிறோம்.

தந்தை செல்வா காட்டிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் வழியில் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வரவேண்டும். நான் அரசியலில் இருந்து ஒதுங்க தயார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியினர் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து வெற்றிகரமாக செயற்பட ஒத்துழைப்பதே தந்தை செல்வாக்கு நீங்கள் செய்யக்கூடிய மரியாதை ஆகும்.

இறந்து போன பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஆத்மா சாந்தியடையும் என மேலும் தெரிவித்தார்.

அனைவரும் ஒன்றிணையுங்கள் ஜனாதிபதி அழைப்பு
Posted in இலங்கை செய்திகள்

அனைவரும் ஒன்றிணையுங்கள் ஜனாதிபதி அழைப்பு

அனைவரும் ஒன்றிணையுங்கள் ஜனாதிபதி அழைப்பு

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அனுர அழைப்பு விடுத்துள்ளார்.

பொருளாதார வெற்றிகளை அடைவதன் மூலம் மாத்திரம் ஒரு நாடு அபிவிருத்தி அடைய முடியாது என்றும்,

அத்துடன், சமூக அபிவிருத்தி மற்றும் அரசியல் கலாசாரம் ஆகிய மூன்று தூண்களும் ஒரே நேரத்தில் கட்டியெழுப்பப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

நிதி அமைச்சில் நேற்று (04) திறைசேரி அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

சீனா, கொரியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் பல காலகட்டங்களில் பொது மக்களுடன் இணைந்து மேற்கொண்ட

கூட்டு முயற்சியின் பலனாகவே பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

ஒரு நாட்டை அபிவிருத்தியை நோக்கி அழைத்துச் செல்வதில் தனிநபர்கள் என்ற ரீதியில் சில பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும்,

அதே நேரம் இலக்குகளை அடைய அனைவரும் ஒன்றிணைந்து முயற்சி செய்ய வேண்டுமெனவும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

அரசியல் அதிகாரம் என்ற வகையில் அதிகாரிகள் மீது தனது கருத்தை மாத்திரம் திணிக்க மாட்டேன் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,

நிபுணத்துவ அறிவு கொண்ட அதிகாரிகள் மற்றும் அரசியல் அதிகாரம் கொண்டவர்களுக்கு இடையே இடம்பெறும் முறையான கலந்துரையாடல்கள் மூலம் தேவையான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சில தன்னிச்சையான அரசியல் தலையீடுகளால் கடந்த காலங்களில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் தோல்வியடைந்த விதம் குறித்தும் இதன்போது ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை அரசாங்கத்தின் கீழ் பேணுவதுடன், அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கைகளின் அடிப்படையில் குறித்த நிறுவனங்களில்

கட்டமைப்பு ரீதியான மாற்றங்களைச் செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி இங்கு திறைசேரி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டம்,

அத்துடன் அமெரிக்கா விதித்துள்ள புதிய வரிகள், 2027 ஆம் ஆண்டுக்கான GSP+ சலுகை குறித்தும் ஜனாதிபதி நிதி அமைச்சின் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

பகிடிவதைக்கு அதிரடி நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

பகிடிவதைக்கு அதிரடி நடவடிக்கை

பகிடிவதைக்கு அதிரடி நடவடிக்கை

பகிடிவதைக்கு எதிராக அதிரடி நடவடிக்கை ஒன்றை பிரதமர் அறிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பதிவாகும் பகிடிவதைகளுக்கு எதிராக செயலணி ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என

கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

1978/16ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் நாட்டில் அமைந்துள்ள 17 பல்கலைக்கழகங்களில் எந்த பல்கலைக்கழத்திலும் பகிடிவதைகள் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 5 வருடங்களில் எவ்வித வழக்கும் தொடரப்படவில்லை.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ள பகிடிவதைகள் மற்றும் ஆண், பெண் சமத்துவம் தொடர்பான துன்புறுத்தல்கள் சம்பந்தமாக சுற்றுநி ரூபத்தை முழுமையாக மறுசீரமைப்புக்கு உள்ளாக்கி

அதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் முறைப்பாட்டு செயற்பாட்டு பொறிமுறையை மிகவும் பலப்படுத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளன.

இப்போதுள்ள துரித தொலைபேசி இலக்கத்தை 24 மணிநேரமும் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அத்துடன் சகல பல்கலைக்கழகங்களிலும் இடம்பெறும் பகிடிவதைகளுக்கு எதிரான செயலணியை அமைத்து ஆண், பெண் சமூக சமத்துவ குழுவின் கீழான இணைக்குழுக்களின் ஊடாக வலையமைப்புகளை உருவாக்கி

எந்தவொரு பகிடிவதை தொடர்பான தகவல்கள் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கும் பொறிமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இவற்றை செயற்படுத்துவதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் விசேட குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

டக்ளஸ் க்கு ஆதரவு கொடுக்கும் கட்சிகள்
Posted in இலங்கை செய்திகள்

டக்ளஸ் க்கு ஆதரவு கொடுக்கும் கட்சிகள்

டக்ளஸ் க்கு ஆதரவு கொடுக்கும் கட்சிகள்

யாழ் மாவட்டத்தில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஏனைய கட்சிகள் ஆதரவு கொடுக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சங்கு, சைக்கிள் கூட்டணி மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆகிய தரப்புக்கள் தம்மை தொடர்பு கொண்டு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில்

ஆதரவு கோரியதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நண்பர் தர்மலிங்கம் சித்தார்த்தன் என்னை தொடர்பு கொண்டு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தொடர்பாக கலந்துரையாடினார்.

அரசியல்வாதியாக இல்லாமல் நட்பு ரீதியாக அந்த சந்திப்பு நடைபெறும்.

உள்ளூராட்சி சபைகளை ஆளுவது தொடர்பாக அண்ணன் சி.வீ.கே.சிவஞானமும். குறுஞ்செய்தியை அனுப்பி சந்திப்பதற்கு கோரியிருந்தார். இருவரையும் சந்திக்க தீர்மானித்துள்ளேன்.

எங்களுடைய கட்சியினுடைய நிலைப்பாடு பக்கம் சாராது மக்கள் நலன் சார்ந்து இருக்கும். எந்த இடத்திலும் ஆட்சியை பொறுப்பெடுப்பதற்கோ ஆட்சியில் பங்கெடுப்பதற்கோ நாங்கள் தயாராக இல்லை.

எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு எங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு உள்ளோம்.

உத்தியோகபூர்வமாக எந்த கட்சிகளும் இதுவரை என்னோடு கதைக்கவில்லை. தனிப்பட்ட முறையில் எங்களுடைய கட்சி முக்கியஸ்தர்களிடம் தங்கள் ஆதரவை கோரியுள்ளனர்.

கடந்த கால கசப்புகளை கருத்திற்கொண்டு எதுவுமே உத்தியோகபூர்வமாக இருந்தாலே அது நல்லது என்பது என்னுடைய அனுபவம் – என்றார்.

இலங்கையில் கொரோனா தொற்று ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரோனா தொற்று ஒருவர் பலி

இலங்கையில் கொரோனா தொற்று ஒருவர் பலி

இலங்கையில் அதிகமாக கொரோனா தொற்று இருப்பதாக தெரிவித்த சுகாதார அமைச்சு இன்று கொரோனாவினால் ஒருவர் பலி என உறுதிசெய்துள்ளது.

மே மாதத்தில் அநுராதபுரத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாகவும்

தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் தேஜனா சோமதிலக இன்று தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் நோயாளிகள் தற்போது வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், அநுராதபுரம், சாலியவத்தையைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவர் ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக வைத்தியர் தேஜனா சோமதிலக தெரிவித்துள்ளார்.

ஆசியாவிலேயே தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அரசுக்குள் குழப்பம் ஏற்படுத்தும் எதிராளிகள்
Posted in இலங்கை செய்திகள்

அரசுக்குள் குழப்பம் ஏற்படுத்தும் எதிராளிகள்

அரசுக்குள் குழப்பம் ஏற்படுத்தும் எதிராளிகள்

அரசுக்குள் குழப்பம் ஏற்படுத்தும் எதிராளிகள் ,அரசுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி இவ் அரசு மீது களங்கத்தை ஏற்படுத்த முயற்சிகள் நடப்பதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்.

“மக்களின் அமோக ஆணையால் உருவாக்கப்பட்ட இந்த அரசுக்குள் குழப்பத்தை ஏற்பட்டுத்துவதற்காக எதிராளிகளால் திட்டமிட்டுப் போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன.

ஆனால், அந்தச் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. அதேவேளை, பிரதமர் ஹரிணியை மாற்றும் எண்ணமும் இல்லை.” –

அமைச்சரவைப் பேச்சாளர்

என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்படவிருப்பதாகவும் அமைச்சரவையில் மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவையாகும்.

அமைச்சரவை மறுசீரமைப்பு

அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பிலோ – அமைச்சர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பிலோ இதுவரை எந்தவொரு கலந்துரையாடலும் முன்னெடுக்கப்படவில்லை.

அரசுக்கு எதிரானவர்களால் திட்டமிட்டு இந்தச் செய்தி பரப்பப்பட்டுள்ளது. அவதானத்தைத் திசை திருப்புவதற்காகவும், அரசுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலும் இவ்வாறான செய்திகள் திட்டமிட்டு வெளியிடப்படுகின்றன.

எந்தவகையிலும் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது. பிரதமர் ஹரிணியை மாற்றும் எண்ணமும் இல்லை.” – என்றார்.

திருகோணமலையில் கடற்படையினர் துப்பாக்கி சூடு
Posted in இலங்கை செய்திகள்

திருகோணமலையில் கடற்படையினர் துப்பாக்கி சூடு

திருகோணமலையில் கடற்படையினர் துப்பாக்கி சூடு

திருகோணமலையில் கடற்படையினர் துப்பாக்கி சூடு ,திருகோணமலையில் கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

கடற்படையினரின் துப்பாக்கிச்சூடு

திருகோணமலை குச்சவெளி கடற்பகுதியில் கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி மீனவர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் செவ்வாய்கிழமை (03) மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் குச்சவெளி ஜாயாநகர் கிராமத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே படுகாயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

குச்சவெளி கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவேளை சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கடற்படையினரால் சிலர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன்

படகு மற்றும் சுருக்கு வலைகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

மீன்பிடிக்கக்கூடிய சட்டம்

சுருக்கு வலையை பயன்படுத்தி சுமார் 7 கிலோ மீற்றருக்கு அப்பால் மீன்பிடிக்கக்கூடிய சட்டம் இருப்பதாகவும் அதை மீறி மீன்பிடித்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

வட மாகாணத்திற்கு ஜனாதிபதி நிதியம்
Posted in இலங்கை செய்திகள்

வட மாகாணத்திற்கு ஜனாதிபதி நிதியம்

வட மாகாணத்திற்கு ஜனாதிபதி நிதியம்

ஜனாதிபதி நிதியம் வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலகங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகள் விரிவாக்கப்பட்டதன் மூலம்,

அதில் கோரப்படும் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.

அதே நேரத்தில், புதிய கணினி அடிப்படையிலான(Online System) குறித்து பிரதேச செயலகங்களின் உரிய விடயத்துடன் தொடர்புடைய ஊழியர்களுக்கு

தெளிவூட்டுவதும் பயிற்சி அளிப்பதும் அவசியமாகியுள்ளது.

அதன் ஒரு அங்கமாக, வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியாமாவட்டங்களின் பிரதேச செயலாளர்கள் மற்றும்

ஜனாதிபதி நிதியம் தொடர்பாக செயலாற்றும் அதிகாரிகளுக்கு 2025.06.21 அன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பயிற்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் மூலம், வடக்கு மாகாணத்தில் ஜனாதிபதி நிதியின் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பயனாளிகளுக்கு உயர்தர சேவையை வழங்கவும்,

நவீன மயமாக்கப்பட்ட  ஆன்லைன் அமைப்புகளை அறிமுகப்படுத்தவும்,மேலும் சேவைகளை விரைவாக வழங்கவும்எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பை மையமாகக் கொண்ட ஒரு குறிப்பிட்ட அளவிலானவர்களுக்கு மட்டும் நன்மைகளை வழங்கிய ஜனாதிபதி நிதியத்தை,

நாடு முழுவதும் வாழும் மக்களுக்கு நன்மைகளை வழங்கும் மக்கள் நிதியமாக செயல்படுத்துவதே தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான பணிக்குழுவின் முதன்மையான நோக்கமாகும்.

அந்த நோக்கத்தை அடைய,எதிர்காலத்தில் இது போன்ற பயிற்சித் திட்டங்கள் ஏனைய மாகாணங்களிலும் செயல்படுத்தப்படும்.

சுன்னாகத்திலும் கிளிநொச்சியிலும் போதை
Posted in இலங்கை செய்திகள்

சுன்னாகத்திலும் கிளிநொச்சியிலும் போதை

சுன்னாகத்திலும் கிளிநொச்சியிலும் போதை

வடக்கு மாகாணத்தில் நாளுக்குநாள் அதிகரித்துவரும் போதை சுன்னாகத்திலும் கிளிநொச்சியிலும் அகப்பட்ட போதை.

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இளைஞர்கள் இருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது இளைஞனின் உடைமையில் இருந்து 2 போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.

அதேவேளை, வீதியில் பயணித்த இளைஞன் ஒருவரை சுன்னாகம் பொலிஸார் வழிமறித்து சோதனையிட்ட போது இளைஞனின் உடைமையில் இருந்து 20 போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.

அதனையடுத்து போதை மாத்திரைகளுடன் கைதான இரு இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கிளிநொச்சி போதை

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதநகர் பகுதியில் பாழடைந்த வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட மூன்று பார்சல் கஞ்சா போதைப்பொருள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை அடுத்து இராணுவ புலனாவுத் துறையினரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கஅமைய கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு பொலிஸ்மா அதிபரின் கீழ் உள்ள சிறப்பு பிரிவினர் சம்பவ இடத்துக்கு விரைந்ததுடன் மூன்று பார்சல் கஞ்சாவை மீட்டுள்ளனர்.

இருப்பினும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் யாரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பல இலட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்
Posted in இலங்கை செய்திகள்

பல இலட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்

பல இலட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்

யாழில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமொன்றில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவின் மாம்பழம் பல இலட்சங்களில் ஏலம் போயுள்ளது.

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி ஸ்ரீசிவசுப்பிரமணியர் ஆலயத்திலே இந்த ஏலம் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆலயத்தில் 15 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிற நிலையில் எட்டாம் நாளான நேற்று மாம்பழத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த மாம்பழத்திருவிழா நிறைவடைந்த பின்னராக முருகனின் மாம்பழம் ஆலய நிர்வாக சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது.

இதன் போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்தும் ஆலயத்திற்கு வந்திருந்த அடியவர்கள்குறித்த மாம்பழத்தை வாங்கும் நோக்கில் ஏலத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மாம்பழத்தின் விலையும் உயர்ந்து கொண்டு சென்றது. இவ்வாறு பல இலட்சங்களையும் தாண்டி மாம்பழம் ஏலம் எடுக்கப்பட்டது.

இதன்போது பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்த அ.அகிலன் எனும் அடியவர் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் ரூபாவிற்கு இந்த மாம்பழத்தை ஏலத்தில் எடுத்திருந்தார்.

இதன் போது ஆலய நிர்வாக சபையினரால் ஏனைய சில பொருட்களும் ஏலத்தில் விடப்பட்டிருந்த நிலையில் அதனையும் அடியவர்கள் ஏலத்தில் வாங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், குறித்த ஆலயத்தின் 15 நாள் திருவிழாவின் தொடராக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழாவும் திங்கட்கிழமை தீர்த்த திருவிழாவும்

மறுநாள் செவ்வாய்க்கிழமை பூங்காவனத் திருவிழாவும் புதன்கிழமை வைரவர் உற்சவமும் இடம்பெற்று திருவிழா நிறைவடையவுள்ளது.