இலங்கையில் கொரோனா தொற்று ஒருவர் பலி
இலங்கையில் அதிகமாக கொரோனா தொற்று இருப்பதாக தெரிவித்த சுகாதார அமைச்சு இன்று கொரோனாவினால் ஒருவர் பலி என உறுதிசெய்துள்ளது.
மே மாதத்தில் அநுராதபுரத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாகவும்
தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் தேஜனா சோமதிலக இன்று தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் நோயாளிகள் தற்போது வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், அநுராதபுரம், சாலியவத்தையைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவர் ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக வைத்தியர் தேஜனா சோமதிலக தெரிவித்துள்ளார்.
ஆசியாவிலேயே தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்

- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு

- ரியாத்தை நோக்கி ஹவுதி ஏவுகணை தாக்குதல்

- ஏமனில் சண்டை மீண்டும் தொடங்கியதிலிருந்து 250,000-க்கும் மேற்பட்டோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா.

- அனுரா அரசின் நிலக்கரி மோசடியால் 18,368.89 மில்லியன் இழப்பு









