நெஞ்சை பிளந்து உன்னை தேடி
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

நெஞ்சை பிளந்து உன்னை தேடி

நெஞ்சை பிளந்து உன்னை தேடி

நெஞ்சை பிளந்து உன்னை தேடி
நெடும் தூரம் நடந்தேன்
கொடும் போரில் கூட உனைத்தாங்கி
கோர வலியுடன் கடந்தேன்

இன்றெங்கே நீ இன்றெங்கே
இதயம் இன்றும் தேடுதே
உள்ளாயா இல்லை உயிர் நீத்தாயா
உள்ளமே பதில் கூறாயா

தாளம் இடும் இசையே
தரை தட்டும் கடலே
எங்கே இன்றெங்கே
என் சொந்தம் இன்றெங்கே

வான் முட்டும் மரமே
வளைந் தாடும் காற்றே
நீதி சொல்லாயா
நீர் விழி துடைக்காயா

நெஞ்சை பிளந்து இறக்க வா
நெஞ்சே உன்னை சுமந்து வாழ வா
தாய் மண்ணே பதில் கூறு
தாய் எங்கே என் தாய் எங்கே …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 25-05-2024

அண்ணா
Posted in கவிதைகள் நிலா தமிழ்

அண்ணா

அண்ணா

நஞ்சினை மாலையாய் அணிந்தவர்
பிஞ்சிலே வேங்கையாய் நிமிர்ந்தவர்
துஞ்சிடா வீரத்தைக் கொண்டவர்-நம்
நெஞ்சிலே ஈரத்தை விதைத்தவர்!

கஞ்சியை நாளுமே உண்டேனும்
பஞ்சியை துளியேனும் கொள்ளாமல்
கொஞ்சியே பேசிடும் தமிழுக்காய்- தன்
எஞ்சிய வாழ்வினை அர்ப்பணித்தவர்!

மிஞ்சியே பகை படை கொண்டு வந்தாலும்
அஞ்சியே எங்கேனும் ஓடிடாமல்
விஞ்சியே நின்று பகை எதிர்த்து– எம்
மஞ்சிய தாய் நாட்டைக் காத்தவர்!

கெஞ்சிடும் குடும்பத்தைத் துறந்தவர்
பஞ்சிடும் பஞ்சணையை வெறுத்தவர்
தஞ்சிடும் மக்களைக் காத்தவர் – கடும்
வஞ்சிடும் துரோகிகளை துவைத்தவர்!

வஞ்சியருக்கு சமவுரிமையை கொடுத்தவர்
அஞ்சியவருக்கும் வீரத்தை ஊட்டியவர்
துஞ்சியவரையும் தன்னாற்றலால்
எழ வைத்தவர் – எதிரியாயினும்
கெஞ்சியவருக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தவர்!

கெஞ்சியே இறைஞ்சுகின்றோம்
எஞ்சிய எம் வாழ்வைக் கழித்திட
விஞ்சிய மனவுரத்தை தந்திட – நம்
நெஞ்சிலே என்றும் இறையாய்
வாழுங்கள் அண்ணா!

-நிலாதமிழ்.
25.05.2024.

உன்னை பார்க்கையில
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னை பார்க்கையில

உன்னை பார்க்கையில

உன்னை நானும் பார்க்கையில
உள்ளம் மெல்ல துள்ளுதடி
கள்ளம் இல்லா பேரழகை
கட்டி அணைக்க துடிக்குதடி

கொஞ்சி பேசும் மொழியழகில்
கொள்ளை பிரியம் வைக்குதடி
அச்சம் இல்லா பேசிடவே
அல்லும் பகலும் துடிக்குதடி

இடையின் அளவை அளக்கையில
இதயம் மெல்ல வெட்குதடி
தாளம் போடும் தாமரையை
தழுவ மோகம் துடிக்குதடி

துடையின் மேலே புருவமது
துரத்தி மெல்ல முறைக்கையில
மெல்ல வாலிபம் துடிக்கிறதே
மெழுகாய் உருகி அழுகிறதே

சொல்ல முடியா சுகமதனை
சொர்க்கமே நீ தருவாயா
அள்ளி பருகிட நாளுமே
அன்பே என்னை விடுவாயா …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 24-05-2024

பாதுகாப்பு வலயமென்று
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

பாதுகாப்பு வலயமென்று

பாதுகாப்பு வலயமென்று

பாதுகாப்பு வலயமென்று
பாதை தேடி நகர்ந்தோமே!
பாதகரின் ஆப்பு என்று
பாதம் வைக்க உணர்ந்தோமே!

பாதி வாழ்வை தக்கவைக்க
பாரங்களைச் சுமந்தோமே!
பாரத்தோடு பகலிரவாய்
பாவிகளாய் அலைந்தோமே!

சோறு சுகம் குறைந்தபோதும்
சோர்வு இனறி நடந்தோமே!
சேறுதண்ணியில் புதைந்தபோதும்
தேசம் என்றே கடந்தோமே!

வேறுபடை வந்தபோதும்
வேங்கையாக நிமிர்ந்தோமே!
ஆறமனம் அமைதியின்றி
அடிக்கடி இடம்பெயர்ந்தோமே!

காலம் பதில் சொல்லுமென்று
கனவோடு வாழ்கிறோமே!
காயங்களைச் சுமந்துகொண்டே
காலங்களைக் கடக்கிறோமே!

-பிறேமா(எழில்)-

செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்

செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்

பதினெட்டாம் நாளில்
படாத பெரும்பாடுபட்டு
பிணம் தொட்டு அளைஞ்ச
பெரும்துயரைச் சுமந்துசென்று

பனங்கொட்டு நிறமுடைய
படையினர் ஆட்சிக்குள்ள
உயிர்விட்ட உடல்பிணமாய்
உள்ளுக்குள்ள கால்வைத்தோம்.

கொட்டி கொட்டியாவென ஆமி
கிட்டவரப் பயந்து, பேரூந்தில்
முட்டமுட்ட அடைஞ்சு
மூச்சுவிடேலாம அவிஞ்சு

செட்டையுரிச்ச கோழிபோல
செட்டிகுளம் போனகதை
ஐயோ!

செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்

செத்திருந்தாலும் பரவாயில்ல.
ஏனம் அரக்கி அரக்கி
எலும்பு நாரிமுறிய
சாமம்வரை காத்திருந்து

சருவத்தில தண்ணியெடுத்து
ஓமம் வளர்ப்பதுபோல் உடம்பை
ஒவ்வொருக்கா ஒத்தியெடுத்த
பாவப்பட்ட எம் நிலையை
பாவில் வடிக்கேலுமோ?

காலைக் கடன்முடிக்க
காப்போத்தில் தண்ணியோட
மாலைவரை அடக்கி அடுத்த
மத்தியானம் போய்க்குந்த

ஆளைக் கண்டவுடன்
அரைகுறையா எழும்பி நாம்
அவஸ்தைப்பட்ட நிலையை
ஆரிடம் போய்ச்சொல்ல..

கியூவில உறவுகள் வந்து
கிட்டவரேலாமல் எட்டிநின்று
சூவிலுள்ள புலிபோல
சூம்பண்ணி எமைப் பாத்து

மாவில்செய்த பலகாரத்தை
மாத்தையாவிடம் அனுப்பியதை
சாவிலும் மறக்கேலுமோ?
சரித்திரம் நிறைய உண்டு.

வனாந்தர காட்டுக்குள்ள
வளைக்கப்பட்ட ரென்ருக்குள்ள
பனங்கிழங்கு அடுக்கியதுபோல்
பதினைந்து பேர் கிடந்து

சினந்து, சிரங்குவந்து
சீழ்வடிந்து சீரழிஞ்சு
இணைந்து வாழ்ந்ததை
இன்றைய சந்ததி அறியுமோ?

கொன்னைத் தமிழ் கதைப்போர்
கூர்ந்து எமைப்பார்க்க
இன்னஇவர் இயக்கமெண்டு
எங்கடையள் காட்டிக்கொடுக்க

உண்ணஏதும் தருவினமோவென்று
ஒவ்வொருநாளும் ஓடிப்பாத்து
என்னயிது வாழ்க்கையென்று
ஏதிலியாய் எத்தனை நாட்கள்.

வெய்யிலில் வாடிவதங்க
விழுப்புண் புழுப்பிடிக்க
கையினில் எதுவுமின்றி
காண்பவரைக் கடன்கேட்க

செய்ய ஏதும் வழியின்றி
செத்தபாம்பாய் சூழ்ந்திருந்ததை
சீ..சீ ..செட்டிகுளமும் மறக்காது
சீவியத்திலும் இது மறையாது❗

-பிறேமா(எழில்)-19-05-2024

எமக்கும் ஒரு காலம் வாரும்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

எமக்கும் ஒரு காலம் வாரும்

எமக்கும் ஒரு காலம் வாரும்

தேசம் விடியும் என்றே
தெரு விளக்கு எரிகிறது
காத்திருப்பு தேவை என்பதால்
கண்ணீர் சொரிகிறது

அடங்கி போவதற்கா – தமிழ்
அக்கினியாய் கொதித்தது
ஏறி மிதிப்பதற்கா
செருப்பிங்கு பிறந்தது

வாடி போவதற்கா
வயலில் நெல் விளைந்தது
கழுத்தறுத்து வீழ்வதற்கா
கதிர் மணி தொங்கியது

ஏர் பிடித்து நடந்தவர்
எல்லை இழந்ததால்
கூழ் குடித்து பதுங்கியவர்
குதுகளித்து மகிழ்கிறார்

நாவடக்கி திரிந்தவர்
நக்கல் கதை உரைக்கின்றார்
நாளை ஒரு காலம்
நமக்கும் பிறக்கும் ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 16-05-2024

பெண்ணால் உறவில் யுத்தமா
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

பெண்ணால் உறவில் யுத்தமா

பெண்ணால் உறவில் யுத்தமா

பெண்ணால் உறவில் யுத்தமா
பேரழிவில் வாழ்வு நித்தமா
மண்டை உடைந்து இரத்தமா
மனதில் என்ன பித்தமா

கட்டிய தாலி துச்சமா
கண்டவள் உனக்கு சித்தமா
எல்லாம் ஒருநாள் முற்று பெறும்
என்னவாழ்வென விரக்தி வரும்

வந்தவள் இடையில் சென்றிடுவாள்
வாழ்வில் உள்ளாள் துணையிருப்பாள்
முந்தைய நிலைகள் பிழையாகும்
முதிர்வில் விழியில் நீராகும்

இடையில் நாட்கள் இடராகும்
இதயம் கூட வேறாகும்
அடி வாங்கி வாழ்வு அழுகையில்
அந்தோ செயல்கள் தவறாகும்

அழகில் மயங்கி அலையாதே
அக்கினியில் நீயோ ஏரியாதே
வலிகள் தாங்கிய மனைவியவள்
வாழ்வில் உனக்கு பேறாகும் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 07-05-2024

எட்ட முடியா சிகரம் எட்டு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

எட்ட முடியா சிகரம் எட்டு

எட்ட முடியா சிகரம் எட்டு

எட்ட முடியா சிகரம் எட்டு
ஏறி உச்சம் உலகை தட்டு
நீ தமிழன் என்பதால் மகிழ்ச்சி
நினைத்தால் பெருமை மனதில் குளிர்ச்சி

மரங்களின் உயர்வை வேர்கள் அறியும்
மனங்களின் நிலையை வலிகள் புரியும்
அறத்தின் நிறம் அகத்தில் தெரிந்தது
ஆதலால் உன்னை வாழ்த்திட முனைந்தது .

சரித்திட பகைவர் பலர் முனைவார்
சாதனை வீழ்த்த சிலர் எழுவார்
எதுவும் நடக்கலாம் எண்ணி விழிப்பாய்
எச்சரிக்கை கொள் துணிந்தாய் வெல்வாய்

நாளை உந்தன் புகழை விரிப்பாய்
நம் நாட்டு நெறிகள் (NL ) விதைப்பாய்
புத்தம் புதிதாய் தாயில் இருக்கும்
புரிந்தால் நாடே செழிப்பாய் மிதக்கும் ….!

ஆக்கம் -02-05-2024
நட்புடன் – வன்னி மைந்தன் _

இறங்கி ,செயல் முறை விளக்கத்துடன் சமையலை காட்டியமை காரணமாகவும் ,அந்த உணவை தன் கரத்தால் அனைவருக்கும் வழங்கிய நிலை என்னை கவர்ந்தது . அதலால் கந்தையா பாஸ்கரன் (கரன் ) அறத்தை எண்ணி வடித்தேன்.

இசைக்கு இன்று பிறந்த நாள்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

இசைக்கு இன்று பிறந்த நாள்

இசைக்கு இன்று பிறந்த நாள்

இசைபாடி நெஞ்சொடு உறவானவன்
இயலாத வேளையும் மெழுகானவன்
உருவாகும் தமிழீழ கனவானவன்
உள்ளத்தில் என்றும் நிலையானவன்

அசையாத அலைக்குள்ளும் அயலானவன்
ஆறுதல் கூறிடும் குரலானவன்
விடுதலை ஒளிக்கு விதையானவன்
விளக்கேற்றும் வீரர் நீர் விழியானவன்

அசையாத கொள்கை துடிப்பானவன்
அண்ணன் இவனுக்கு உயிரானவன்
கோடி தமிழ் நெஞ்ச உறவானவன்-செல்லப்பா
கோடிக்கு விலைபோக நிலையானவன்

இன்றுந்தன் அகவையில் வாழ்த்துகின்றேன்
இன்றிந்த அகவையில் வியக்கின்றவன்
இன்று போல் என்றும் நீ வாழ்ந்திடனும்
இசையே மகிழ்வோடு வாழ்த்துகின்றேன் ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 21-04-2024

பாசறை பானர் தேனிசை செல்லப்பா 83 அகவை நாளில் அவருக்கு என் வாழ்த்துப்பா ..

வெல்ல போறேன் காத்திரு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

வெல்ல போறேன் காத்திரு

வெல்ல போறேன் காத்திரு

வெல்லாய் என்ற வெற்றிடம் நிரப்பிட
வென்றிட வெற்றி தேடுகிறேன்
நாளை எந்தன் நாளென எண்ணியே
நாளுமே நாளும் ஓடுகிறேன்

பொல்லா வார்த்தைகள் எறிந்தார் வாய்களை
பொடியாக்க முனைகின்றேன்
எல்லாம் தெரிந்தார் என்றே முழங்கிய
ஏற்றத்தாரே வருகிறேன்

தடுத்தார் வழிகளை உடைத்தே
தரணியில் தலை நிமிர்ந்தேன்
இல்லா அறிவு என்றார் முன்னிலை
இயக்கம் இயம்பி நின்றேன்

வாசலில் வந்து வெற்றியில் உள்ளேன்
வரியில் எழுதி வைத்தேன்
சொன்னால் செய்திடும் வல்லமை யானாம்
சொல்லி விட்டே வெல்கின்றேன்

இதுவரை தமிழர் புரியா சாதனை
இமயமாய் நானே புரிவேன்
இழிந்த நாவும் இடித்த உரலும்
இமயம் பார்க்க வைப்பேன்

கடுகதி வேகம் காண்பீர் நீரும்
கண்ணீர் மழையில் தவள்வீர்
எப்படி வென்றான் இப்படி என்றே
எண்ணி எண்ணி துவள்வீர் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 11-04-2024

வெற்ற பெற தனித்திரு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

வெற்ற பெற தனித்திரு

வெற்ற பெற தனித்திரு

நேற்று என்னுடன் நேர்மையாய் இருந்தவர்
நெஞ்சில் ஏறி நேர் மிதித்தார்
பண்புடன் நாளுமே பழகி திரிந்தவர்
பாதியில் பகையாய் ஏனோ முளைத்தார் ..?

அன்பு காட்டியே அறநிலை சொன்னவர்
அந்தோ அவர் எதிரியாய் நின்றார்
இந்த நிலையில் இதயங்கள் மாறிட
இன்று இவ் நிலை ஏனென்று கூறார்

ஏதோ ஒன்றை ஏற்க மறுத்ததால்
எதையோ ஒன்றை எடுக்க முனைந்ததால்
ஆத்திர நிலையால் அலை கடலானர்
அக்கினி குழம்பாய் அப்படி கொதித்தார்

எத்திசை திரும்பினும் எழுந்தே வெடித்தார்
ஏனென்றெ கேள்விக்கு ஏதோ சொன்னார்
புத்தியை கிழித்தெரு புலனை மேய்ந்தால்
புன்னகை சொன்னது தப்பினாய் என்று

அப்படி சிந்தை அகலம் தந்தது
அப்படி நீயே தனித்திரு என்றது
வென்றிட தனிமையே தீரம் என்றது
வேகமாய் சிந்திக்க இதுவே உகந்தது

முடிவில் சோதனை முற்று பெற்றது
மூலமே வென்றிட தனிமையே என்றது
இறுதியில் தனிமையே எம்முடன் என்றது
இதனை உணர்ந்தே பயணி என்றது ….!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 09-04-2024

உடைந்த காதல்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உடைந்த காதல்

உடைந்த காதல்

இதயம் கனக்கும் இரவுக்குள்ளே
இதயமே உன்னை தேடுகிறேன்
வடியும் கண்ணீர் துளிகளுக்கு
வார்த்தைகள் தேடி அலைகின்றேன்

உடைந்த உள்ள நின்மதிக்கு
உயிரே காரணம் தேடுகிறேன்
அடர்ந்த காட்டின் நடுவினிலே
அலைவதாய் எனக்குள் உணர்கின்றேன்

வழியில் வந்து சதி செய்தார்
வகையை இங்கே தேடுகிறேன்
வலியில் நெஞ்சு துடிக்கையிலே – உன்
வார்த்தைகள் வருடி துடிக்கின்றேன்

இல்லா இந்த இடைவெளியில்
இதயமே உன்னை புரிகின்றேன்
அதிகம் அன்பை பொழிந்ததுவே
அன்பே அது நீ என்கின்றேன்

இடையில் நுழைந்த இடையூறால்
இதயம் இரண்டு பிரிந்ததுவே
புரிதல் ஒன்றில் கிழிந்ததினால்
புண்ணாய் இதயம் மாறியதே ….!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 08-04-2024

மறக்க முடியா நட்பு காலம்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

மறக்க முடியா நட்பு காலம்

மறக்க முடியா நட்பு காலம்

திருவுடன் காந்தன் ரமேசுடன்
திருப்பங்கள் தந்திட்ட முரளியுடன்
அன்று பழகிய அக்காலம்
அடடா நினைவில் இனிக்கிறது

அன்பு செல்லா கண்ணனுடன்
அன்று அடித்த அரட்டையது
இன்றும் நினைவில் சிரிக்கிறது
இளமை காலம் இனிக்கிறது

பிரிக்கண்டல் பிரித் உண்பதற்கு
பிள்ளைகள் எங்கள் சண்டைக்கு
பஞ்சம் என்றும் இருந்ததில்லை
பழகிய நட்பில் பேதமில்லை

காதலில் திகழ்ந்த அக்காலம்
கனியா வயது முக்காலம்
எங்கள் நட்பில் உறவிருக்கும்
என்றும் வாயில் சிரிப்பிருக்கும்

முதலாளி சொன் கல கலப்பும்
முத்துலிங்கண்ணை பர பரப்பும்
கனகண்ணை தெளிக்கும் கடிகளுக்கும்
காதுக்கு என்றும் பஞ்சம் இல்லை

அன்றந்த தோட்டத்து வாழ்விருக்கே
அதுபோல் சுகம் எங்கிருக்கோ
விரைவில் யாவரும் ஒன்றிணைவோம்
விடுகதை பேசி மகிழ்ந்திடுவோம் ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 07-04-2024

ஹொலண்ட்ல தோட்டத்தில் வேலை புரிந்த நம் தோழர் நினைவுகளை எண்ணிய பொழுது

ஹொலண்ட் மொழியில்
பிரிக்கண்டல் – சோசஸ்
பிரித்- சிப்ஸ் ,உருளை கிழங்கு பொரியல்

மனைவி
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

மனைவி

மனைவி

காகம் போல தினம் கரைவாள்
கடமை சோரா தினம் காய்வாள்
இல்லா நிலையில் இல்லம் வாடாள்
இருப்பதை வைத்தே இயக்கி போவாள்

அன்பு அதிகம் கொள்வாள்
அதனால் அதிகம் எரிவாள்
பண்பு தினம் பொலிவால்
பாயிலே தினம் ஓய்வாள்

பத்து மாதம் சுமப்பதுவும்
பணிவிடைகள் தினம் செய்வதும்
சத்தி வாய் வயிறோடும்
சளைக்கா வீடு உழைப்பதுவும்

எண்ணையில் மனம் வியக்கிறது
எப்படி இவளால் முடிகிறது
பாவம் செய்த ஓர் பிறப்பு
பாவை இவளின் பொறுப்பு

உணவு கொஞ்சம் இருந்தாலும்
ஊட்டி பிள்ளை வளர்ப்பதுவும்
பட்டினி கிடப்பதை மறைப்பதுவும்
பழகி போன வாழ்வாகும்

போதையில் கணவன் அடிப்பதுவும்
பொல்லாமை நெஞ்சு வீசுவதும்
எல்லாம் சகித்து வாழ்வதும்
எப்படி இவளால் முடிகிறது

பெண்ணாய் பிறந்தவர் பாவமடா
பெரும் துயர் கடக்கிறார் நாளுமடா
அன்பை கொஞ்சம் காட்டுங்கடா
அறத்தை நாட்டி வாழுங்கடா ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 06-04-2024

தாயால் கொலையாளியான மகள்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

தாயால் கொலையாளியான மகள்

தாயால் கொலையாளியான மகள்

கர்ப்பத்தில் அன்னை போதை உண்டாள்
கருவிலே பிள்ளை சிதையானாள்
குன்றிய மூளை வளர்வினால்
குற்றியே நண்பியை கொன்று நின்றாள்

இத்தகை இடர் இவள் புரிந்தால்
இதற்கு தாயே துணை நின்றாள்
பார்க்கையில் கண்ணீர் ஓடிகிறது
பாவை நிலை எண்ணி கலங்கிறது

அன்பிலா அன்னை வளர்த்து விட்டால்
அகிலத்தில் அந்தோ துடித்து விட்டாள்
விட்டு விலகிட பின்னடித்தாள்
விதியென்ற சதியிலே சிக்கி விட்டாள்

கொடும் துயர் சிறை சென்று விட்டாள்
கொடுமையாய் இறந்திட காத்திருக்காள்
வன்மத்தை நெஞ்சிலே தாங்கி விட்டால்
வலிகளை வாழ்வில் யார் தடுப்பார்

இத்தகை நிலை இனி வேண்டாம்
இவ் நிலை இன்றே தடுக்க வேண்டும்
இவ் வையம் ஆளும் மாந்தர்களே
இரங்கி இறவா அன்பாக வேண்டும் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 05-04-2024

யுடுப்பர் தோழர் சரவணன் டீகோட் ,பதிந்த குற்ற காட்சி ஒன்றை பார்த்து கலங்கிய பொழுது

வீடியோ
https://www.youtube.com/watch?v=x1_dT-k7qn8

செந்தமிழ் வாழ வழி காட்டு
Posted in கவிதைகள் வினோத வீடுப்பு

செந்தமிழ் வாழ வழி காட்டு

செந்தமிழ் வாழ வழி காட்டு

பட்டம் பெற்றால் பாராட்டு
படைத்தாய் சாதனை தேரோட்டு
பெற்ற பொருளை முதல் காட்டு
பெருமை உள்ளதா அதில் சுட்டு

திறனை அறிந்து வாலாட்டு
திரிபுகள் திணித்தால் அது தீட்டு
பறந்தால் பட்டம் உன் திறனா
பறப்பின் வாயு உன் அரணா ..?

அவையில் அணியும் அசை காட்டு
அவையின் அழகை அதில் தீட்டு
அகத்தின் அழகை அதில் காட்டு
அகிலம் அழைக்க அதில் சூட்டு

மொழியின் புலமை அதில் காட்டு
மொழியும் மொழியில் உயிர் கூட்டு
மெய்யாய் மேனி அதில் காட்டு
மேன்மை கொள் நீதி நிலைநாட்டு

சொல்லும் செயலும் ஓர் நாற்று
சொன்னதை செய்தால் நீ போற்று
செத்தும் வாழும் நிலை நாட்டு
செந்தமிழ் வாழ வழி காட்டு …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 05-04-2024

எட்டு திசையும் எழ வெடி
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

எட்டு திசையும் எழ வெடி

எட்டு திசையும் எழ வெடி

எதுகை மோனை புனையாதான்
எதற்கும் இங்கு உதவாதான்
அடியும் தொடையும் அறியாதான்
அவையில் உலவ இயலாதன்

செயலும் பொருளும் செப்பாதன்
செயல் பாட்டிற்கிங்கு செழியாதான்
இத்தனை நுணுக்கம் இதிலிருக்கு
இது புரிந்து இவை இயக்கு

அற்புதம் அடியில் அவை அழுத்து
அதனை அறிந்து கவி இயக்கு
அலைகள் அடிக்கும் அடி தாங்கி
அக்கரை அகலும் அவை கப்பல்

இக்கரை இயம்பும் இயல் இசையை
இப்படி இயற்று இயல் இடையை
இப்படி இயற்றின் இவை இனிக்கும்
இப்படி இயற்றின் இவை இருக்கும்

ஏது உரைத்தாய் என்றென்பின்
ஏடு புரட்டி எடுத்து படி
ஏற்றம் ஏற்பின் எடுத்து அடி
எட்டு திசையும் எழ வெடி ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 04-04-2024

இவரே சாதனையாளர்கள்
Posted in கவிதைகள்

இவரே சாதனையாளர்கள்

இவரே சாதனையாளர்கள்

கடலேறி படகோட்டி செல்வார்
கரை வந்தால் உயிருளார் நினைப்பார்
புயலோடும் மழையோடும் தவிப்பார் – இவர்
புண்பட்ட வலிகளை யார் அறிவார் ..?

வாய்க்கு சுவை மீன் தந்தார்
வாழ்வதை யாரடா தரிசித்தார்
போராடும் இவர் வாழ்வு கேளடா – இவர்
போர் குணம் உனக்குள்ளதா எண்ணடா

சாதியில் இவன் உனக்கு கீழடா – இவர்
சாதனை உனக்குள்ளதா கூறடா
நாம் எல்லாம் மனிதரே எண்ணடா
நற் பன்பை மாற்றாரில் காட்டடா

இவர் தொழில் எவர் செய்வார் சொல்லடா
இந்த வேதனை எவர் சுமப்பர் சொல்லடா
பேச்சிலும் இவரை நீ இழியாதே – இவரில்
பேர் அன்பு கொள்ள மறக்காதே ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 04-04-2024

எப்படி ஆறும் இத்துயர்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

எப்படி ஆறும் இத்துயர்

எப்படி ஆறும் இத்துயர்

வீரம் விளைந்த மண் எங்கே
விதையான வேர் எங்கே
ஆழ கடலோடிய கலமெங்கே
ஆகாய வான் எங்கே

ஓயாது ஒலித்த குரல் எங்கே
ஓயாத அலை களமெங்கே
இரவெல்லாம் விழித்த
இன காவல் எங்கே

எல்லாம் இழந்து எங்கள் தேசம்
ஏனோ இப்படி கிடக்கிறது
எவர் என்ன கேட்பார்
எவர் என்ன சொல்வார்

சொல்ல மறந்த கதைகள்
சொல்லாமல் உறங்க
சொல்லி அழ முடியா
சொந்தங்கள் தவிக்க

நடை பிணமாய் உடல்
நாதியற்று நடக்கிறது
அழுவதால் பயனில்லை
ஆனாலும் வலிக்கிறது

எழுத முடியா பேனைகளும்
எடுத்துரைக்க முடியா வாய்களும்
மவுனம் ஆனதால்
மாயங்கள் நடக்கிறது …..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 03-04-2024

இது தான் காதல்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

இது தான் காதல்

இது தான் காதல்

எங்க ஊரு வீதியில
ஏ மனமே நடந்தேண்டி
உன் நினைவு எனை துரத்த
உட்க்கார்ந்து அழுதேண்டி

நீ தந்த உணவுகளும்
நீ யிட்ட முத்தங்களும்
நெஞ்சில் நீச்சலிட
நித்தம் உனை நினைக்கிறேன்

மடி சாய்ந்து நீ அழுதிட
மணி விரல்கள் தலை கோத
கண் துடைத்து நீயணைத்த
கால நினைவு துடிக்குதடி

போர் வந்து சதி செய்ய
போராலே பிரிந்தோமே
ஏன் நினைத்தேன் நான் அன்று
எனை பிரிவாய் நீ என்று

இன்றுவரை உறவில்லை
எங்கிருக்காய் தெரியவில்லை
ஆனாலும் ஆள் மனதில்
அன்பே உனை நினைக்கிறேன்

எனக்குள்ளே அழுது எனக்குள்ளே புலம்பி
என்னை நானே சமரசமாக்கி
உன் நினைவோடே வாழ்கிறேன்
உண்மை காதல் இது தானே …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 03-04-2024