எட்டு திசையும் எழ வெடி
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

எட்டு திசையும் எழ வெடி

எட்டு திசையும் எழ வெடி

எதுகை மோனை புனையாதான்
எதற்கும் இங்கு உதவாதான்
அடியும் தொடையும் அறியாதான்
அவையில் உலவ இயலாதன்

செயலும் பொருளும் செப்பாதன்
செயல் பாட்டிற்கிங்கு செழியாதான்
இத்தனை நுணுக்கம் இதிலிருக்கு
இது புரிந்து இவை இயக்கு

அற்புதம் அடியில் அவை அழுத்து
அதனை அறிந்து கவி இயக்கு
அலைகள் அடிக்கும் அடி தாங்கி
அக்கரை அகலும் அவை கப்பல்

இக்கரை இயம்பும் இயல் இசையை
இப்படி இயற்று இயல் இடையை
இப்படி இயற்றின் இவை இனிக்கும்
இப்படி இயற்றின் இவை இருக்கும்

ஏது உரைத்தாய் என்றென்பின்
ஏடு புரட்டி எடுத்து படி
ஏற்றம் ஏற்பின் எடுத்து அடி
எட்டு திசையும் எழ வெடி ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 04-04-2024