Posted in Uncategorized

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி எதிரணியில் போராட்டம்

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி எதிரணியில் போராட்டம்

இலங்கையில் ஆளும் ராஜபக்ஸ குடும்ப ஆட்சிக்கு எதிராக மக்கள் 22 நாளாக

போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் ,இவ்வேளை ஐக்கிய மக்கள் சக்தியினர் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி


பெரும் பேரணி ஒன்றை நடத்திய வண்ணம் உள்ளனர்

இந்த பேரணி இரண்டாவது நாளாக தொடர்ந்த வண்ணம் உள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் ஒரு டொலர் 350 ஐ எட்டியது

    இலங்கையில் ஒரு டொலர் 350 ஐ எட்டியது

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடி காரணமாக தற்போது ஒரு டாலரின்

    இலங்கை ரூபா 350 எட்டியுள்ளது


    மேலும் இது அதிகரிக்கும் என சுட்டி காட்ட பட்டுள்ளது

      Posted in Uncategorized

      அமெரிக்கா தூதர்-காணாமல் ஆக்கப்பட்டோர் சந்திப்பு

      அமெரிக்கா தூதர்-காணாமல் ஆக்கப்பட்டோர் சந்திப்பு

      வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க

      பிரதிநிதிகள் இன்றைய தினம் அமெரிக்கத் தூதுவர் ஜீலி சுங்கினை சந்தித்து கலந்துரையாடினர்.

      நேற்று மதியம் 12 மணியளவில் கொக்குவிலில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

      சந்திப்புக்கு பின்னர் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்

      உறவுகளின் சங்க செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா கருத்து தெரிவிக்கையில்,

      எமது உறவுகள் காணாமலாக்கப்பட்ட விதம், எமது போராட்டங்கள், எமக்குள்ள பிரச்சினைகள் தொடர்பாக அமெரிக்க


      தூதுவரிடம் நாம் விளக்கிக் கூறி இருந்தோம் என தெரிவித்தார்

        Posted in இலங்கை செய்திகள்

        வவுனியாவில் நகை திருட்டு அதிகரிப்பு

        வவுனியாவில் நகை திருட்டு அதிகரிப்பு

        இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடி காரணமாக திருட்டு சம்பவம் அதிகரித்துள்ளது ,


        வவுனியா – குருமண்காடு, யாழ் வீதி, இறம்பைக்குளம், கோவில்குளம் பகுதியில்

        நகைகள் திருடர்கள் கத்தி முனையில்


        நகைகளை திருடி செல்வதாக தெரிவிக்க படுகிறது

          Posted in Uncategorized

          வீழ்ந்து நொறுங்கிய விமானம் – விசாரணைகள் ஆரம்பம்

          வீழ்ந்து நொறுங்கிய விமானம் – விசாரணைகள் ஆரம்பம்

          துருக்கி ,வடமேற்கு Bursa மாகாணத்தின் மேலாக பறப்பில் ஈடுபட்ட பயிற்சி விமானம் ஒன்று திடிரென வீழ்ந்து நொறுங்கியது


          இவ்வேளை அதில் பயணித்த இருவர் பலியாகினர்

          இந்த விமான விபத்து குறித்து உடனடி விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,இந்த விமான


          விபத்து இயந்திர கோளாறு காரணமாக இடம்பெற்று இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

          Posted in Uncategorized

          குருதீஸ் போராளிகளை துரத்தி அழிக்கும் துருக்கிய இராணுவம்

          குருதீஸ் போராளிகளை துரத்தி அழிக்கும் துருக்கிய இராணுவம்

          வடக்கு ஈராக் பகுதிகளில் நிலை கொண்டுள்ள குருதீஸ் போராளிகளை துருக்கிய இராணுவம் தேடி அழிக்கும்


          புதிய தாக்குதலை ஆரம்பித்துள்ளது ,இந்த தாக்குதலானது சுமார் அறுபது கிலோ மீற்றர் வரை சென்றுள்ளது

          இவை ஈராக் எல்லையோரத்தில் நிறுத்த பட்டுள்ளதாக துருக்கிய இராணுவம் தெரிவித்து வருகிறது

          தமது மக்களை இன அழிப்பு செய்து வருவதாக குருதீஸ் மக்கள் தெரிவித்துள்ளனர் ,எனினும் அந்த மக்களை காப்பாற்றும் நோக்கில் ஐநா செயல் படவில்லை


          துருக்கி ,ஈரான் ,சிரியா ,ஈராக் என நான்கு நாடுகளினால்,
          குருதீஸ் போராளிகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

            Posted in Uncategorized

            டுவிட்டரை விலைக்கு வாங்கும் Tesla CEO Elon Musk

            டுவிட்டரை விலைக்கு வாங்கும் Tesla CEO Elon Musk

            உலகில் கார் உற்பத்தியில் முக்கிய செல்வந்தராக விளங்கி வரும் Tesla CEO Elon Musk
            டுவிட்டர் சமூக வலைதளத்தின் புதிய முதலாளியாக வருகிறார்

            இவர் டுவிட்டரை 42 பில்லியன் டொலர் கொடுத்து விலைக்கு வாங்குகிறார்

            இதனால் அதன் மதிப்பு உயரும் என எதிர் பார்க்க படுகிறது ,தடைகள் ,திறந்தவெளி விவாதங்கள்


            என ஐந்து முக்கிய நிகழ்வுகளை மாற்றிட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்

            இது பேஸ்புக்கிற்கு எதிராக டுவிட்டர் உருவெடுக்கும் நிலையை தோற்றுவித்துள்ளது என கூறலாம்

              Posted in சினிமா

              பண மோசடி வழக்கு.. விளக்கம் கொடுத்த நடிகை

              பண மோசடி வழக்கு.. விளக்கம் கொடுத்த நடிகை

              கருட வேகா சினிமாவை தயாரித்த ஜோஸ்டார் சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் காவல் நிலையத்தில் ஜீவிதா மீது பணமோசடி புகார் ஒன்றை அளித்தார். இதற்கு ஜீவிதா விளக்கம் அளித்துள்ளார்.

              பண மோசடி வழக்கு.. விளக்கம் கொடுத்த நடிகை
              ஜீவிதா


              தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த ஜீவிதா, தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.

              பின்னர், நடிகர் ராஜசேகரை திருமணம் செய்துகொண்டு ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.

              ராஜசேகர், பூஜா குமார் நடித்த கருட வேகா படம் 2017-ல் திரைக்கு வந்தது. இந்த படத்தை தயாரித்த கோட்டீஸ்வர ராஜூ தற்போது அளித்துள்ள பேட்டியில், “ஜீவிதாவும்

              ராஜசேகரும் என்னிடம் ரூ.26 கோடி கடன் பெற்றனர். அதற்காக பூந்தமல்லி அருகே உள்ள 3 ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து காசோலை கொடுத்தனர்.

              ஆனால், எனக்கு தெரியாமல் அந்த நிலத்தை வேறு ஒருவருக்கு ஜீவிதா விற்று விட்டார்.

              இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். நீதிமன்றம் ஜீவிதாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உள்ளது” என்றார்.

              இதற்கு ஜீவிதா விளக்கம் அளித்து அவர் கூறும்போது, “கோட்டீஸ்வர ராஜூ தெரிவித்துள்ள கருத்தில் உண்மை இல்லை. கருடவேகா படத்துக்கு அவர்தான்

              தயாரிப்பாளர். பிறகு எப்படி அவர் எங்களுக்கு கடன் கொடுத்திருக்க முடியும்? அவர் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்க நினைக்கிறார். அதில் நான் சிக்கமாட்டேன். நான் பலவீனமானவள் அல்ல.


              வழக்கை சட்டப்படி சந்திப்பேன். யார் குற்றவாளி என்பது நீதிமன்றம் மூலம் தெரியவரும்” என்றார்.

                Posted in சினிமா

                சீண்டும் நெட்டிசன்கள்.. கோபமடைந்த சமந்தா

                சீண்டும் நெட்டிசன்கள்.. கோபமடைந்த சமந்தா

                நடிகை சமந்தா தனது சமூக வலைத்தள்ப் பக்கத்தில் காட்டமாக பதிவை வெளியிட்டு உள்ளார்.

                சீண்டும் நெட்டிசன்கள்.. கோபமடைந்த சமந்தா
                சமந்தா


                நடிகை சமந்தா கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த பிறகு, சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

                விவாகரத்துக்கு சமந்தாவே காரணம் என்றும் குழந்தை பெற்றுக்கொள்ள சமந்தா மறுத்ததாலேயே

                கணவர் பிரிந்தார் என்றும், தெலுங்கு இணைய தளங்களில் அவதூறு பரப்புவதாக கோர்ட்டுக்கும் சென்றார். ஆனாலும் சமந்தாவுக்கு எதிரான பதிவுகள் மற்றும் மீம்ஸ்கள்

                தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சமீபத்தில், விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்கும் படத்தின் பூஜை நடந்தபோது, சமந்தா கலந்து கொள்ளாததை குறை கூறினர்.

                நடிகை காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்து இருப்பதை ஒப்பிட்டும் சமந்தாவை விமர்சித்தனர்.

                இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் சமந்தா காட்டமாக புதிய பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் “என்னுடைய மவுனத்தை அறியாமை என்றும், எனது

                அமைதியை ஏற்றுக்கொள்வது என்றும், எனது கருணையை பலவீனம் என்றும் நினைக்க வேண்டாம். கருணைக்கும் காலாவதி இருக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.


                கேலி, மீம்ஸ்களால் கோபப்பட்டே இந்த பதிவை சமந்தா வெளியிட்டு இருப்பதாக ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

                  Posted in Uncategorized

                  அமைச்சர் வீடு முற்றுகை – போலீசார் மக்கள் மோதல் – video

                  அமைச்சர் வீடு முற்றுகை – போலீசார் மக்கள் மோதல் – video

                  அமைச்சர் கேரத் வீட்டை மக்கள் சுற்றி வளைத்தனர்

                  இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது

                  இவர் மகிந்தவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்

                  இதனால் சீற்றம் உற்ற மக்கள் அவர் வீட்டை சுற்றிவளைத்தனர் ,இதனால் அங்கு பெரும் பதட்டம் நிலவியது

                  மக்கள் பொலிசாருக்கு இடையில் முறுகல் இடம்பெற்றுள்ளது

                  இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்

                  https://www.youtube.com/watch?v=6eI29vu1Dlk
                    Posted in Uncategorized

                    கோட்டா கபடி ஆட்டம் – நிதி அமைச்சர் – சட்ட அமைச்சர் ஆனார்

                    கோட்டா கபடி ஆட்டம் – நிதி அமைச்சர் – சட்ட அமைச்சர் ஆனார்

                    இலங்கையில் மூன்று வாரத்திற்குள் நிதி அமைச்சராக விளங்கிய அலிசப்ரி மீண்டும்

                    நீதி அமைச்சராக மாற்றம் பெற்றுள்ளார்

                    இவர்களின் இந்த அமைச்சு பதவி கபடி ஆட்டம் ,உலகில் சல சலபப்பை ஏற்படுத்தியுள்ளது

                      Posted in இலங்கை செய்திகள்

                      மெல்பேர்ணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் – 2022. photo

                      மெல்பேர்ணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் – 2022.

                      பாரததேசத்திடம் இரண்டு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகர் மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் ஒருமாதகாலமாக சாகும்வரை

                      உண்ணாநோன்பிருந்து ஈகைச்சாவைத்தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களின் 34-வது ஆண்டுநினைவுநாளும் நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள்

                      நினைவுநாளும் கடந்த 24-04-2022 ஞாயிற்றுக்கிழமையன்று மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றிருந்தது.


                      அன்றையதினம் மாலை 6.00மணியளவில் வானமுதம் வானொலி அறிவிப்பாளர் சிறீறஞ்சன் தலைமையில் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் அவுஸ்திரேலியத்தேசியக் கொடியை தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் திரு. ரவிகிருஸ்ணா அவர்கள்

                      ஏற்றிவைக்க தமிழீழ தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு தயாநிதி அவர்கள் ஏற்றிவைத்தார்.


                      தியாகத்தாய் அன்னைபூபதி அவர்களது திருவுருவப்படத்திற்கு செல்வி தமிழினி தவச்செல்வம் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தியதையடுத்து மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த நாட்டுப்பற்றாளர்கள் மாமனிதர்களது திருவுருவப்படங்களுக்கு அவர்களது உரித்துடையவர்கள், நண்பர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஈகைச்சுடர்களேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்கள். அதனைத்தொடர்ந்து பொதுமக்களின் மலர்வணக்கமும், அகவணக்கமும் இடம்பெற்றது.
                      நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்களின் கடந்தகால செயற்பாடுகளை நினைவுமீட்டி நினைவுரையினை மருத்துவர் சதீஸ் நாகராஜா அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து அண்மையில் தாயகத்தில் அமரத்துவமடைந்த தமிழ்த்தேசியப்பற்றாளர் ஜோர்ஜ்

                      அவர்களின் நினைவுகளைச்சுமந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரால் வெளியிடப்பட்ட இரங்கல் அறிக்கையினை செயற்பாட்டாளர் திரு. ரகு அவர்கள் வாசித்தார்.


                      தொடர்ந்து ஓவியர் புகழேந்தி அவர்கள் எழுதிய “நான் கண்ட தமிழீழம் முள்ளிவாய்க்காலுக்கு முன்பும் பின்பும்” என்ற நூலின் அறிமுகஉரையை

                      செயற்பாட்டாளர் திரு.வசந்தன் அவர்கள் நிகழ்த்தினார். நூலின் முதற்பிரதியை மருத்துவர் சதீஸ் நாகராஜா அவர்கள் பெற்றுக்கொண்டார்.


                      தொடர்ந்து அன்னை பூபதி ஞாபகர்த்தமாக ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கிடையில் நடைபெறும் பொதுஅறிவுப்போட்டி நடைபெற்றது. பொது அறிவுப்போட்டியை பாரதிதமிழ்ப்பள்ளி வளாக முதல்வர்களில் ஒருவரான திரு

                      சத்தியன் அவர்கள் நெறிப்படுத்தினார். பொதுஅறிவுப்போட்டியில் பங்குபற்றிய மாணவர்கள் சேரன், சோழன், பாண்டியன் அணிகளாக பிரிந்து பங்காற்றியதில், பாண்டியன் அணியினர் வெற்றிபெற்றனர். போட்டியில் பங்கெடுத்த 3 அணிகளைச்

                      சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும், மாமனிதர்களின் குடும்ப உறுப்பினர்களினால் பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வில் பங்கெடுத்த பார்வையாளர்களுக்கிடையே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கிய 3

                      உறவுகளுக்கு, அண்மையில் வெளியிடப்பட்ட தமிழ்தேசியசெயற்பாட்டாளர் சண்முகம் சபேசனின் ”காற்றில் தவழ்ந்த சிந்தனைகள்” புத்தகங்கள் பரிசல்களாக

                      வழங்கப்பட்டதுடன், மெல்பேர்ன் இளையோர் ஒருவர் வரைந்த பூபதி அம்மாவின் வரைபடமும், மண்டப நுழைவாயிலில் காட்சிப்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

                      இறுதியாக, வரயிருக்கும் சமூகநிகழ்வுகளின் அறிவிப்புகளின் பின், தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு, உறுதிமொழியுடன் இரவு 8.05மணியளவில் 2022-ம் ஆண்டிற்கான தமிழீழ நாட்டுப்பற்றாளர்நாள் நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தது.

                      நாட்டுப்பற்றாளர் நினைவுநாள்
                        Posted in இலங்கை செய்திகள்

                        28ம் திகதி அரச எதிர்ப்பு வேலை நிறுத்தத்தில் தோட்டத்தொழிலாளர்கள் கலந்துக்கொள்ள வேண்டும்!-மனோ கணேசன்

                        28ம் திகதி அரச எதிர்ப்பு வேலை நிறுத்தத்தில் தோட்டத்தொழிலாளர்கள் கலந்துக்கொள்ள வேண்டும்!

                        • தமிழ் முற்போக்கு கூட்டணி அழைப்பு
                          28ம் திகதி நாடு தழுவிய நடைபெறவுள்ள ராஜபக்ச அரச எதிர்ப்பு கூட்டு தொழிற்சங்க வேலை நிறுத்தத்தில் மலையக தோட்டத்தொழிலாள உடன்பிறப்புகள் முழுமையாக கலந்துக்கொள்ள வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது.
                          தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதிதலைவர் பழனி திகாம்பரம் ஆகியோர் கொழும்பிலும், பிரதி தலைவர் வே. இராதாகிருஷ்ணன் மலையகத்திலும் நடத்திய விசேட ஊடக சந்திப்புகளில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

                        இதுபற்றி மனோ கணேசன் எம்பி கூறியுள்ளதாவது,

                        ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அனைத்து ராஜபக்ச அரசியல்வாதிகளும் தத்தம் பதவிகளை இராஜினாமா செய்து வீட்டுக்கு போக

                        வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாடு தழுவிய உழைக்கும் மக்கள் நடத்தும் போராட்டத்தில், மலைநாட்டு தேயிலை, இறப்பர் பெருந்தோட்ட உழைக்கும் மக்களும் கலந்துக்கொள்ள வேண்டும்.

                        வேறு எவரையும் விட எமக்கே இதற்கான முழு உரிமை இருக்கிறது. “கோதா-கோ-ஹோம்” என்று இன்று சொல்லப்பட்டாலும் நாம் அன்றே “கோதா-டோன்ட்-கம்” என்று சொன்னவர்கள். அதாவது, “கோதா-வீட்டுக்கு-போங்கள்” என்று இன்று

                        சொல்லப்பட்டாலும், நாம் அன்றே “கோதா-வர-வேண்டாம்” என்று சொன்னவர்கள். ஆகவே இன்று முழு நாடும் எமது கோசத்தையே எதிரொலிக்கின்றது.

                        எனவே 28ம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ள இந்த நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் முழு அளவில் கலந்துக்கொண்டு அமைதியாக எமது எதிர்ப்பை

                        எடுத்துக்காட்டுமாறு தோட்டத்தொழிலாள உடன்பிறப்புகளை தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் அழைக்கின்றோம்.

                          Posted in Uncategorized

                          நான் பதவி விலக மாட்டேன் மகிந்தா -தயாராகும் ஆப்பு

                          நான் பதவி விலக மாட்டேன் மகிந்தா -தயாராகும் ஆப்பு

                          இலங்கையில் பிரதமர் நானே தான் ஒருபோதும் பதவி விலக போவதில்லை என
                          மகிந்தா தெரிவித்துள்ளார்

                          மக்களோ இவர்கள் பதவி விலக வேண்டும் என கோரி 19 தவாது நாளாக போராட்டம் நடத்தியவண்ணம் உள்ளனர்

                          ஆனால் அதனை செவி சாய்ப்பதாக இவர்கள் இல்லை

                          தமது சொத்துக்களை காப்பாற்றிட இவர்கள் பதவி விலக மறுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                          இதனை அடுத்து இவர்கள் ஆட்சியை கவிழ்க்க அணைத்து காட்சிகள் இரகசிய பேச்சில் ஈடுபட்டுள்ளனர்

                            Posted in இலங்கை செய்திகள்

                            இலங்கையில் காஸ் சிலிண்டர் விலை4,860

                            இலங்கையில் காஸ் சிலிண்டர் விலை4,860

                            இலங்கையில் Litro gas ஒன்றின் விலை 4,860 ரூபாவாக விலை அதிகரிக்க பட்டுள்ளது


                            நாள் தோறும் அதிகாரித்து செல்ல படும் பொருட்களின் விலையினை அடுத்து மக்கள்
                            கொதித்து போயுள்ளனர்

                            தொடர்ந்து நாடெங்கும் போராட்டங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,

                            ஆனால் அதனை செவி மடுக்காது மகிந்தா குடும்பம் ஆட்சியில் உள்ளமை குறிப்பிட தக்கது

                              Posted in உலக செய்திகள்

                              119 வயது பாட்டியம்மா மரணம் – சோகத்தில் மக்கள்

                              119 வயது பாட்டியம்மா மரணம் – சோகத்தில் மக்கள்

                              உலகில் அதிக வயதான பெண்மணியாக இடம்பிடித்த டனக்கா என்ற மூதாட்டி தனது

                              119 தாவது வயதில் பலியாகியுள்ளார்

                              ஜப்பானில் அதிக வயது கொண்ட பெண்மணியாக இவர் இடம்பிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார்

                              இவரது மரணம் உலக மக்களை துயரில் ஆழ்த்தியுள்ளது

                                Posted in Uncategorized

                                அமெரிக்க பொருளாதாரம் தன் கைக்குள் இருக்க திட்டமிட்ட பின்லேடன்

                                அமெரிக்க பொருளாதாரம் தன் கைக்குள் இருக்க திட்டமிட்ட பின்லேடன்

                                அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர் 2-வது தாக்குதல் ஒன்றையும் நடத்த ஒசாமா பின்லேடன் திட்டமிட்ட ரகசிய தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.

                                அமெரிக்க பொருளாதாரம் தன் கைக்குள் இருக்க திட்டமிட்ட பின்லேடன்: ரகசிய தகவல் வெளியீடு
                                ஒசாமா பின்லேடன்

                                அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ந்தேதி பயணிகள் விமானங்களை கடத்திய அல்-கொய்தா பயங்கரவாதிகள் அவற்றை நியூயார்க்கில்

                                உள்ள உலக வர்த்தக மையமான இரட்டை கோபுரத்தின் மீதும், வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் மோதி தாக்குதல் நடத்தினர்.

                                இந்த தாக்குதலில் 3 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டனர். இதற்கு பின்னணியில் இருந்து செயல்பட்ட அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா

                                பின்லேடனை 10 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்க படைகள் பாகிஸ்தானில் வைத்து சுட்டு கொன்றன. பின்லேடனை பிடிக்கும் பணியில் அமெரிக்காவின் நேவி சீல் படைகள் ஈடுபட்டன.

                                அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர் 2-வது தாக்குதல் ஒன்றையும் நடத்த ஒசாமா பின்லேடன் திட்டமிட்ட ரகசிய தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. பின்லேடனை உயிருடனோ அல்லது சுட்டு பிடிப்பதற்கான பணிக்காக அமெரிக்காவின்

                                நேவி சீல் படையை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் கொண்ட குழுவானது, பின்லேடனை கொன்ற பின்பு ஆயிரக்கணக்கான பக்கங்களை கொண்ட தனிப்பட்ட கடிதங்கள் மற்றும் குறிப்புகளை கைப்பற்றி வகைப்படுத்தியுள்ளன.

                                இவற்றை ஆய்வு செய்த இஸ்லாமிய பெண் பண்டிதரான நெல்லி லகோத் பேட்டி ஒன்றில் கூறும்போது, செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின் அமெரிக்கர்கள் எப்படி எதிர்வினையாற்றினர் என்று பின்லேடன் ஆச்சரியப்பட்டு உள்ளார்.

                                அமெரிக்கர்கள் தெருக்களில் இறங்கி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி, முஸ்லிம் அதிகம் வசிக்கும் பகுதியில் இருந்து வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தவார்கள் என பின்லேடன் நினைத்து உள்ளார். ஆனால், அவரது கணக்கு தவறாகி விட்டது.

                                அமெரிக்கா அவரை தேடுகிறது என அறிந்ததும், அல்-கொய்தா அமைப்பினருடன் பின்லேடன் 3 ஆண்டுகளாக தொடர்பில் இல்லாமல் இருந்துள்ளார். ஆனால், 2004ல்

                                மீண்டும் அந்த பயங்கரவாத குழுவில் இணைந்துள்ளார். அமெரிக்காவின் மீது தனது புதிய தாக்குதல் பற்றி குழு உறுப்பினர்களிடம் தெரிவித்து உள்ளார்.

                                9/11 தாக்குதலை மீண்டும் நடத்த பின்லேடன் ஆர்வம் காட்டினார். ஆனால், விமான நிலையங்களில் கடுமையான பாதுகாப்பு விசயங்கள் கடைப்பிடிக்கப்பட்டன. இதனை கவனத்தில் கொண்டு பயணிகள் விமானத்திற்கு பதிலாக சார்ட்டர் விமானம் ஒன்றை

                                கொண்டு அமெரிக்கா மீது அடுத்த தாக்குதலை நடத்தலாம் என்று அந்த அமைப்பின் சர்வதேச பயங்கரவாத குழுவுக்கு பின்லேடன் கடிதம் ஒன்றில் தெரிவித்து உள்ளார்.

                                விமானம் வழியே தாக்குதல் நடத்துவது மிக கடினம் என்றால், அமெரிக்க ரெயில்வே மீது குறிவைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். சிவில் என்ஜினீயரிங் படித்த

                                பின்லேடன், அமெரிக்கா மீது எப்படி சரியாக தாக்குதல் நடத்த வேண்டும் என திட்டம் தீட்டியுள்ளார். ரெயில் தண்டவாள பகுதியில் 12 மீட்டர் அளவுக்கு வெட்டி எடுக்கும்படி கூறியுள்ளார்.

                                இதனால் ரெயில் தடம் புரண்டு, நூற்றுக்கணக்கானோர் செத்து மடிவார்கள் என்பது பின்லேடனின் திட்டம். இதற்காக கம்பிரசர்களை பயன்படுத்துங்கள். இரும்பு

                                கருவிகளையும் பயன்படுத்துங்கள் என்று பின்லேடன் தனது சகாக்களிடம் கூறியுள்ளார்.

                                எனினும், அதிர்ஷ்டவசத்தில், பின்லேடனால் இந்த திட்டங்களை ஒருபோதும் நிறைவேற்ற முடியாமல் போனது என்று லகோத் கூறியுள்ளார்.

                                இதுதவிர, கடந்த 2010ம் ஆண்டு மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க பகுதிகளில், கச்சா எண்ணெய் டேங்கர்கள் மற்றும் பெரிய கடல்வழி பகுதிகளிலும் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டு உள்ளது.

                                இதற்காக மீனவர்களை போன்று காட்டி கொண்டு துறைமுக பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.ரேடாரில் இருந்து தப்புவதற்காக குறிப்பிட்ட படகுகளை எங்கு வாங்க

                                வேண்டும். வெடிபொருட்களை கடத்தி செல்ல அந்த படகுகளை எப்படி பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட விவரங்களை தனது குழுவுக்கு பின்லேடன் விவரமுடன் தெரிவித்து உள்ளார். உண்மையில்,


                                அமெரிக்க பொருளாதாரம் தனது கைக்குள் இருக்க வேண்டும் என்று பின்லேடன் விரும்பினார் என்று லகோத் கூறியுள்ளார்.

                                  Posted in Uncategorized

                                  பீஸ்ட்’ பட வெற்றி.. விஜய் கொடுத்த விருந்து

                                  பீஸ்ட்’ பட வெற்றி.. விஜய் கொடுத்த விருந்து

                                  சமீபத்தில் வெளியான ‘பீஸ்ட்’ படத்தின் வெற்றிக்கு அப்படக்குழுவினருக்கு நடிகர் விஜய் விருந்து கொடுத்துள்ளார்.

                                  ‘பீஸ்ட்’ பட வெற்றி.. விஜய் கொடுத்த விருந்து
                                  பீஸ்ட்


                                  இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 13-ந்தேதி வெளியான திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன்,

                                  விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

                                  பீஸ்ட் திரைப்படம் நல்ல வசூலை குவித்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினர் கவலையில் இருந்தனர். இந்த நிலையில் நடிகர் விஜய், பீஸ்ட் படக்குழுவினருக்கு விருந்து கொடுத்துள்ளார்.

                                  அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் நெல்சன், நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி

                                  தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் குறிப்பிட்டிருப்பது, ‘எங்களுக்கு இந்த விருந்து வழங்கியதற்கு நன்றி விஜய் சார். இது படக்குழுவுடன் வேடிக்கை நிறைந்த மற்றும் மறக்கமுடியாத மாலை நேரம்.

                                  விஜய் கொடுத்த விருந்து
                                  விஜய் கொடுத்த விருந்து

                                  விஜய் சாரின் அன்புக்கும் ஆதரவுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவருடன் பணியாற்றியது சிறப்பான தருணம். நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். இந்த அனுபவத்தை என்னுடைய வாழ்நாள் முழுவதும் நான்

                                  உண்மையாக மதித்திக்கிறேன். உங்களின் அழகும் கவர்ச்சியும், சூப்பர் ஸ்டார்டமும் இந்தப் படத்தை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளது. சன் பிக்சர்ஸ், கலாநிதி மாறன்

                                  மற்றும் காவ்யா மாறன் ஆகியோருக்கு இந்த மிகப் பெரிய வாய்ப்பைக் கொடுத்ததற்கும் இந்தப் படத்தை ஒன்றிணைத்ததற்கும் நன்றி.

                                  எங்களின் அற்புதமான நடிகர்கள் மற்றும் குழுவினர் இல்லாமல் இது சாத்தியமில்லை. தடைகளை தகர்த்தெறிந்து, அன்பையும் ஆதரவையும் பொழிந்த பார்வையாளர்கள்

                                  அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல நீங்கள் அனைவரும் விஜய் மற்றும் படக்குழுவினருடன்


                                  நின்று இந்தப் படத்தை மாபெரும் வெற்றியடையச் செய்திருக்கிறீர்கள். சியர்ஸ்’ என்று கூறியுள்ளார்.

                                  Posted in சினிமா

                                  தயாரிப்பாளர் மகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் விமல் மீது புகார்.

                                  மன்னர் வகையறா’ படத்தின் தயாரிப்பாளர் மகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் விமல் மீது புகார்.

                                  நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் மகள் புகார்
                                  விமல் – தயாரிப்பாளர்கள் மகள் ஹேமா
                                  நடிகர் விமல் மீது ஏற்கெனவே தயாரிப்பாளர்கள் கோபி, சிங்காரவேலன் மற்றும்

                                  திரைப்பட விநியோகிஸ்தர் கங்காதரன் ஆகியோர் பணமோசடி புகார் தெரிவித்திருந்த நிலையில், தற்போது விமல் நடிப்பில் ’மன்னர் வகையறா’ என்ற படத்தின் ஆரம்ப

                                  தயாரிப்பாளர் மறைந்த திருப்பூர் கணேசன் அவர்களின் மகள் ஹேமா இன்று (25-04-2022) காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விமல் மீது மோசடி புகார் கொடுத்துள்ளார்.

                                  அந்த புகார் மனுவில் கூறியதாவது,

                                  பொருள் : ரூபாய் 1,73,78,000/- திருப்பி தராமல் ஏமாற்றி வரும் நடிகர் விமல் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு, திருப்பூரில் எளிய குடும்பத்தில் பிறந்து, இறைச்சி கடைகள் நடத்தி, அதன் பின்னர் சிறிய சிறிய

                                  தொழில்கள் செய்து தன்னை ஒரு தொழில் அதிபராக நிலை நிறுத்தி கொண்டவர் மறைந்த என் தந்தை கணேசன். சினிமா மீது தீராத ஆவல் கொண்டிருந்த அவரை

                                  மூளைச்சலவை செய்து ” மன்னர் வகையறா ” என்ற திரைப்படத்தை துவக்க வைத்தவர் நடிகர் விமல்.

                                  படத்தின் பட்ஜெட்டை ரூ. 5 கோடி என்றும், ரூ. 1.5 கோடி மட்டும் முதலீடு செய்தால் மீதி தொகையை சினிமா உலகத்திற்குள் கடனாக பெற்று கொள்ளலாம் என்றும் நடிகர் விமல் அளித்த உத்தரவாதத்தை நம்பிய எனது தந்தை சென்னைக்கு வந்து ஒரு

                                  அலுவலகத்தை வாடகைக்கு எடுத்து வைத்து கொண்டு பட தயாரிப்பு பணிகளை ஆரம்பித்தார். அப்போதே எங்கள் குடும்பத்திற்குள் கலகம் ஆரம்பமாகிவிட்டது. நானும்

                                  எனது தாயாரும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் எங்கள் பேச்சை கேட்காமல் விமல் போன்ற மண் குதிரைகளை நம்பி முதலீடு செய்ய ஆரம்பித்துவிட்டார்.

                                  விமல்
                                  விமல்

                                  2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பட்டுக்கோட்டையில் படப்பிடிப்பு துவங்கியது. 60 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு, ஆறு மாத காலத்திற்குள் படத்தை வெளியிட்டு விட்டு, பின்னர் சினிமாவிற்குள் கால் வைக்க மாட்டேன் என எனது

                                  தந்தையும் எங்களுக்கு உறுதி அளித்ததால் அவர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அங்கேயே தங்கியிருந்து பணிகளை பார்வையிட எனது அம்மாவும் சம்மதித்தார்.

                                  17 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்திருந்த வேளையில், விமலுக்கும் கதாநாயகிக்கும் தனிப்பட்ட காரணங்களுக்காக சண்டை வர, இரண்டு நாட்கள் படப்பிடிப்பு

                                  நடைபெறாமல் இருந்ததால் மனம் வெறுத்து போன என் தந்தை அதற்கு மேல் படப்பிடிப்பை தொடர மனமில்லாமல் படப்பிடிப்பை ரத்து செய்ய சொல்லிவிட்டு திருப்பூருக்கு வந்துவிட்டார்.

                                  அதன் பிறகு சில நாட்கள் கழித்து என் தந்தையை சந்தித்த விமலிடம் ” உன்னை நம்பி தான் இந்த துறைக்கு வந்து முதலீடு செய்தேன். தனி மனித ஒழுக்கம் இல்லாத உன்ன நம்பி மேற்கொண்டு ரிஸ்க் எடுக்க நான் விரும்பவில்லை. இந்த படம் அப்படியே

                                  கிடக்கட்டும். என் நஷ்டத்தை ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுகட்டி விடுவேன் ” என்று கூறி மேற்கொண்டு படத்தை தயாரிக்க விருப்பமில்லை என்று ஆணித்தரமாக

                                  சொல்லிவிட்டார். சில நாட்கள் கழித்து அப்பாவை சென்னைக்கு அழைத்த விமல், இந்த படத்தை நம்பி தான் எனது எதிர்காலம் உள்ளது. எனவே படத்தை நானே மேற்கொண்டு தயாரித்து, படத்தை வெளியிட்டு விட்டு, நான் செலவு செய்த தொகை போக

                                  மீதமிருக்கும் தொகையில் தங்கள் தொகையை தங்களிடம் கொடுத்து விடுகிறேன் என கூறியதாலும், விமலின் எதிர்காலம் இந்த படத்தில் இருக்கிறது என்பதாலும் விமலின்

                                  யோசனைக்கு என் தந்தை ஒப்புகொண்டு 10.03.2016 அன்று ஒப்பந்தம் செய்து கொடுத்தார்.

                                  தயாரிப்பாளர்கள் மகள் ஹேமா
                                  தயாரிப்பாளர்கள் மகள் ஹேமா

                                  மார்ச் மாதம் 10 ஆம் தேதி ஒப்பந்தத்தை பெற்று கொண்ட பின்பு ஜூன் மாதம் 10 ஆம் தேதி வரை விமல் படத்தை ஆரம்பிக்காமல், படத்தின் மீது கடன் வாங்கி

                                  ஊதாரித்தனமாக செலவு செய்து வந்ததால், ஜூன் மாதம் 15 ஆம் தேதி விமலை சந்தித்து ஒப்பந்தத்தை ரத்து செய்து தரும்படி கேட்டார் அப்பா. அதற்கு மறுத்து விட்டார் நடிகர் விமல்.

                                  இதனால் ஜூன் மாதம் 17 ஆம் தேதி முறைப்படி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தார் எனது தந்தை. திரையுலகுக்கு எனது தந்தை புதியவர்

                                  என்பதாலும், விமல் ஒரு முக்கிய பிரமுகர் என்பதாலும் எனது தந்தைக்கு சாதகமான பதில் சங்கத்திலிருந்து வரவில்லை. இதனால் மனம் உடைந்து போன என் தந்தை அமைதியாகிவிட்டார்.

                                  அதன் பிறகு படத்தை தயாரித்து, வெளியீட்டிற்கு விமல் தயாரான போது, விமலை சந்தித்து தான் முதலீடு செய்த தொகையை திருப்பி கேட்டார் அப்பா. விமலிடமிருந்து

                                  சாதகமான பதில் வராததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் எனது தந்தை (வழக்கு எண் : C.S.No.58/2018)

                                  இந்த வழக்கின் காரணமாக படத்தின் தொலைக்காட்சி உரிமைக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் 10.04.2018 ஆம் ஆண்டு எனது தந்தையுடன் சமரசம் செய்து கொண்ட நடிகர் விமல் பணத்தை திருப்பி தந்துவிடுவதாக சென்னை

                                  உயர்நீதிமன்றத்தில் Memorandum of Settlement (ஆவண எண் : 7782/2018) தாக்கல் செய்தார். ஆனால் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி எந்த தொகையையும் இதுவரை

                                  விமல் திருப்பித்தரவில்லை. பணத்திற்கு ஈடாக தருவதாக சொன்ன கால்ஷீட்டையும் தரவில்லை.

                                  இந்நிலையில் 10.04.2018 ஆம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தப்படி படத்தின் மற்ற மொழி டப்பிங் உரிமைகள் என் தந்தை வசம் வந்துவிட்டது. ஆனால் என் தந்தைக்கு

                                  தெரியாமல் 21.06.2019 அன்று படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை வேறொருவருக்கு விற்று எங்களை மோசடி செய்துவிட்டார் நடிகர் விமல்.

                                  எனவே ஐயா அவர்கள் மோசடி செய்த நடிகர் விமல் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு எங்களுக்கு சேர வேண்டிய ரூபாய்.1,73,78,000/-


                                  தொகையை பெற்றுத் தரும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

                                    Posted in Uncategorized

                                    மகிந்தா கொள்ளையர்கள் ஒன்றா கூடி இரகசிய பேச்சு

                                    மகிந்தா கொள்ளையர்கள் ஒன்றா கூடி இரகசிய பேச்சு

                                    இலங்கையில் ஆளும் மகிந்த குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாகா கூடி முக்கிய

                                    பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர்

                                    அலரி மாளிகையில் இந்த பேச்சு இடம்பெற்றுள்ளது

                                    இதன் பொழுது பிரதமர் மகிந்தா,பசில்,நாமல் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்