வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களினால் அபராதம்

Spread the love

வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களினால் அபராதம்

அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஜுலை மாதம் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களினால் 99 ஆயிரத்தி 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் கே.எம்.ஏ. றிஸ்லி இது தொடர்பாக தெரிவிக்கையில் ,

கட்டுப்பாட்டு விலையை மீறி கூடுதலான விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர்கள் செய்த முறைப்பாட்டையடுத்து சுற்றி வளைப்புகளை பாவனையாளர் அலுவலகல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் மேற்கொண்டதாக தெரிவித்தார்.

அம்பாறை,தெஹியத்தக்கண்டி,அக்கரைப்பற்று, பொத்துவில், கல்முனை, சம்மாந்துறை ஆகிய நீதிமன்றங்களின் நியாயாதிக்கத்திற்குட்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட 38 சுற்றிவளைப்புகளில், நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட 25 வழக்குகளில் 17 வர்த்தகர்களுக்கு 99 ஆயிரத்தி 500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களினால்
அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *