Author: நலன் விரும்பி
சிவப்பு பட்டியலில் இலங்கை-பிரித்தானியா அறிவிப்பு
சிவப்பு பட்டியலில் இலங்கை-பிரித்தானியா அறிவிப்பு
கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்து காணப்படும் நாடுகள் தொடர்பான சிவப்பு பட்டியலில் இலங்கையின் பெயரையும், பிரித்தானியா உள்ளடக்கியுள்ளது.
ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கொஸ்டாரிகா, எகிப்து, இலங்கை, சூடான் மற்றும் டிரினிடாட் – டொபாகோ ஆகிய 07 நாடுகளே இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 8ம் திகதி முதல் இலங்கையின் பெயர் இந்த பட்டியலில் உள்ளடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிவப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள எந்தவொரு நாட்டுக்கும் பிரித்தானிய பிரஜைகள் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் விஷேட கண்காணிப்பு நடவடிக்கை
கொழும்பில் விஷேட கண்காணிப்பு நடவடிக்கை
அத்தியசிய சேவைகளுக்காக இன்றைய தினம் வருகை தருபவர்கள் உண்மையாக சேவை நிலையங்களில் இருக்கின்றனரா என்பது தொடர்பில் கண்காணிக்க விஷேட வேலைத்திட்டம்
ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதற்காக 6 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பிற்குள் நுழையும் இடங்களில் பெற்றுக் கொள்ளும் தகவலின் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அத்தியவசிய தேவைகளுக்காக பயணிக்கும் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை இன்றைய தினமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மண்சரிவு – மூவரைக்காணவில்லை
மண்சரிவு – மூவரைக்காணவில்லை
மண்சரிவு மற்றும் மண்மேடு சரிந்து வீழ்ந்த்தினால் இரத்தினபுரி மாவட்டத்தில் மூவர் காணமற் போயிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 4.00 மணிக்கு இதுதொடர்பான தகவல் பதிவானதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி எல்லே விகாரைக்கு அருகாமையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. மழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்பதினால் இவ்வாறான அனர்த்தங்கள் தொடர்பில் பொது மக்கள்
அவதானத்துடன் செயல்பட வேணடும் என்று இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதிப் கொடிப்பிலி பொது மக்களுக்கு அறிவித்துள்ளார்.
வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள்
வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள்
மழையுடன் கூடிய காலநிலையினால் களுகங்கை மற்றும் ஜின் கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளன.
களுகங்கையின் இறங்கு துறை மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் 175 மில்லி மீட்டர் மழை விழ்ச்சி பதிவாகியிருப்பதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கங்கையை அண்மித்த ஹொரனை, அகலவத்த, இங்கிரிய, பாலிந்தநுவர, புளத்சிங்கள, தொடங்கொட, மில்தெனிய, களுத்துறை பிரதேச செயலக பிரிவுகளில் சிறியளவில்
வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. மழை தொடருமாயின் வெள்ளம் அதிகரிக்கும் என நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை அத்தனகலுஓயவை அண்மித்த அத்தனகல்ல, கம்பஹா, மினுவாங்கொட, ஜாஎல,பிரதேசங்களிலும் சிறயளவில் வெள்ளம் ஏற்பட்டிருககிறது.; மழை தொடர்ந்தும்
பெய்யுமிடத்து, வெள்ளம் அதிகரிக்கலாம் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்திருக்கிறது.
மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் தொடர்ந்தும் மழை பெய்து வருவதாக எமது ஊடக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தாழ்நில
பிரதேசங்கள் சில நீரில் மூழ்கியுள்ளன. மழை தொடர்வதனால்; தாழ்நில பிரதேசங்களில் வாழ்பவர்கள் எச்சரிக்கையாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
நேற்றிரவு 8.30இல் இருந்து இன்று அதிகாலை 1.30 வரையான காலப்பகுதியில் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொடவில் 247 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி கிடைத்திருக்கிறது.
களுத்துறை மாவட்டத்தின் இங்கிரியவில் 218 தசம் ஐந்து மில்லிமீற்றர் மழையும் கம்பஹா மாவட்டத்தின் கட்டுநாயக்கவில் 208 தசம் ஏழு மில்லிமீற்றர் மழையும் பதிவாகி இருக்கின்றன.
களுத்துறை மாவட்டத்தின் ஹொரண பிரதேசத்தில் 193 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் கிடைத்துள்ளன.
புலத்சிங்கள மோல்காவ பரகொட மற்றும் கெட்டகம்பிட்டிய பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளன. பாலிந்நுவர பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பல பிரதேசங்களும் நீரில் மூழ்கியிருக்கின்றன.
மீரிகம, ரந்தல்கொட, திருவானவத்த பிரதேசங்களிலுள்ள சில வீடுகள் நீரிவில் மூழ்கியிருக்கின்றன.
இதேவேளை கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொடயில் 173 தசம் ஐந்து மில்லிமீற்றர் மழையும் களுத்துறை
மாவட்டத்தின் பாண்டாரகமவில் 156 தசம் ஆறு மில்லிமீற்றர் மழையும் கம்பஹா மாவட்டத்தின் யக்கல பிரதேசத்தில் 155 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ள
யாழ் மாவட்டத்திற்கு 50,000 தடுப்பூசி வழங்கல்
யாழ் மாவட்டத்திற்கு 50,000 தடுப்பூசி வழங்கல்
யாழ் மாவட்டத்திற்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 50 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றன.
இவை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் வழிகாட்டலுக்கமைவாக கோவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்கள்களின் எண்ணிக்கையின் முன்னிலை அடிப்படையில் தெரிவு
செய்யப்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட அன்று மே 30ம் திகதி 2947 பேருக்கும், மே 31ம் திகதி 6123, பேருக்கும் ஜூன் 1ம் திகதி 13 ,822 பேருக்கும், ஜூன் 2ம் திகதி 23,454 பேருக்கும், ஜூன் 3ம் திகதி 1740 பேருக்கும் மொத்தமாக 48,086 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கும் பணியாளர்களுக்கும் 1194 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன என்றும் குறிப்பிட்டார்.
எனவே நேற்று மாலை வரை (03.06.2021) மொத்தமாக 49,280 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
சிலவகை மருந்துகள் ஊசிமருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்கள் மற்றும் வேறு ஆபத்துக்குரிய நோய் நிலைமை உடையவர்களுக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் உள்ள யாழ் போதனா
வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி தெல்லிப்பளை ஊர்காவற்துறை, பருத்தித்துறை போன்ற ஆதார வைத்தியசாலைகளில் 05.06.2021 சனிக்கிழமை தடுப்பூசிகள் பெற்றுக்கொள்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் அடுத்த கட்டமாக வழங்கப்படவிருக்கும் தடுப்பூசிகள் விரைவில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு தடுப்பூசிகள் கிடைக்கப்பெறுமிடத்து ஏனைய
கிராமசேவையாளர் பிரிவுகளிலும் தொடர்ந்து தடுப்பூசி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படும் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
886 பேர் கைது- பாயும் பறக்கும் சோதனை
886 பேர் கைது- பாயும் பறக்கும் சோதனை
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 886 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நடிகை பார்க்கிற வேலையா இது சொல்லுங்க …?
நடிகை பார்க்கிற வேலையா இது சொல்லுங்க …?
சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படத்தின் மூலம் பிரபலமான நடிகை, பட வாய்ப்பு இல்லாததால் மீண்டும் குத்துச் சண்டை பயிற்சிக்கு திரும்பியுள்ளார்.
படப்பிடிப்பு இல்லாததால் ரித்திகா சிங் எடுத்த அதிரடி முடிவு
ரித்திகா சிங்
சுதா கொங்கரா இயக்கத்தில் குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் இறுதிச்சுற்று. இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ரித்திகா சிங், தேசிய குத்துச்
சண்டை வீராங்கனை. இறுதிச்சுற்று பெரிய வெற்றி பெற்றதால் குத்துச் சண்டையை மூட்டை விட்டு முழு நேர நடிகை ஆனார்.
ஆனால் அவர் எதிர்பார்த்த மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இறுதிச்சுற்று படத்தின் தெலுங்கு பதிப்பான குரு படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழில் ஆண்டவன் கட்டளை,
சிவலிங்கா, ஓ மை கடவுளே படங்களில் நடித்தார். அவர் நடித்து முடித்துள்ள வணங்காமுடி படம் இன்னும் வெளிவரவில்லை.
ரித்திகா சிங்
தற்போது புதிய பட வாய்ப்புகளும், கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்புகளும் இல்லாததால் மீண்டும்
குத்துச் சண்டைக்கே திரும்ப ரித்திகா சிங் முடிவு செய்து இருக்கிறார். தனி பயிற்சியாளரை நியமித்து வீட்டிலேயே குத்துச் சண்டை பயிற்சி எடுத்து வருகிறார்.
மக்கள், கால்நடைகளுக்கு உதவும் சுபிக்ஷா
சினிமா
மக்கள், கால்நடைகளுக்கு உதவும் சுபிக்ஷா
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த நடிகை சுபிக்ஷா, கொரோனாவால் உணவின்றி கஷ்டப்படும் சாலையோர மக்களுக்கு உதவி வருகிறார்.
சாலையோர மக்கள், கால்நடைகளுக்கு உதவும் சுபிக்ஷா
சுபிக்ஷா
கொரோனா காலத்தில் நடிகைகள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். தமிழில் கடுகு, கோலிசோடா 2, வேட்டை நாய் போன்ற படங்களில் நடித்த நடிகை சுபிக்ஷா
கொரோனாவால், உணவின்றி கஷ்டப்படும் சாலையோர மக்கள், கால்நடைகள் ஆகியவற்றிற்கு உதவி வருகிறார்.
பொது மக்களுக்கு உணவுகள், கால்நடைகளுக்கு பழங்கள் ஆகியவற்றை அவர்களுக்கு நேரில் சென்று கொடுத்து வருகிறார். தற்போது சுபிக்ஷா நடிப்பில் கன்னித்தீவு திரைப்படம் உருவாகி உள்ளது.
அந்த நடிகரை தவிக்க விட்ட நடிகை
அந்த நடிகரை தவிக்க விட்ட நடிகை
சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்து சூப்பர் ஹிட்டான ஐயா படத்தில் கதாநாயகி வேடத்தை தவறவிட்டதாக பிரபல நடிகை ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.
ஐயா பட வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகை
ஐயா படத்தில் சரத்குமார் – நயன்தாரா
சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் ஐயா. இப்படம் 2005 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார். மேலும் நெப்போலியன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
இந்த படத்தில் முதலில் கதாநாயகி வேடத்திற்கு தேர்வானவர் நவ்யா நாயர். இதை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நவ்யா நாயர் கூறியிருக்கிறார். ஐயா படத்தை ஏன் நிராகரித்தார் என்று
கேட்டதற்கு, மலையாள சினிமாவில் கவனம் செலுத்தி வந்ததுதான் முக்கிய காரணம் என்று கூறி இருக்கிறார். இதேபோல் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் பி.வாசு இயக்கிய சந்திரமுகி படத்திலும் தனக்கு வந்த வாய்ப்பை நிராகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதியுதவி வழங்கியசூரி
கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதியுதவி வழங்கியசூரி
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை
வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
முன்னதாக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி, நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம், நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் அஜித், உதயநிதி ஸ்டாலின்,
சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய், இயக்குனர்கள் ஷங்கர், வெற்றிமாறன், மோகன்ராஜா, லிங்குசாமி ஆகியோர் தலா ரூ.10 லட்சம் வழங்கி இருந்தனர்.
உதயநிதி – சூரி
உதயநிதியிடம் காசோலை வழங்கும் சூரி
இந்நிலையில் நடிகர் சூரி ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும், மேலும் தன் மகள் வெண்ணிலா – மகன் சர்வான் சார்பில் ரூ.25 ஆயிரத்துக்கான ரொக்கத்தையும் கொரோனா தடுப்பு
பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கி இருக்கிறார்.
யாழில் பெண்களை தாக்கி திருடர்கள் கொள்ளை – பீதியில் மக்கள்
யாழில் பெண்களை தாக்கி திருடர்கள் கொள்ளை – பீதியில் மக்கள்
இன்று அதிகாலை யாழ்ப்பாணம் சுன்னாகம், கந்தரோடை பகுதியில் திருடர்கள் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்
இதில் மூன்று பெண்கள் உள்ளிட்ட நல்லவர் படுகாயமடைந்துள்ளனர்
மேற்படி சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்
திருட்டில் ஈடுபட்டவர்கள் கத்திகள் ,வாள்கள்,மற்றும் முகங்களை மூடியவாறு திருட்டில் ஈடுபட்டதாக பாதிக்க பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்
தர்மபுரத்தில் கிணற்றில் இருந்து பெண் சடலமாக மீட்பு
தர்மபுரத்தில் கிணற்றில் இருந்து பெண் சடலமாக மீட்பு
இலங்கை தர்மபுரம் ,குமாரசாமிபுரம் கிராமத்தில் 74 வயதுடைய மூதாட்டி ஒருவர் கிணற்றிக் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார்
இவர் தற்கொலை புரிந்தாரா ,அல்லது படு கொலை செய்ய பட்டாரா என்பது தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்
சமீப காலங்களாக நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
இலங்கையில் 947 பேர் கைது
இலங்கையில் 947 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் கடந்த தினம் மட்டும் சுமார் 947 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
முக கவசம் அணியாது சென்றமை ,மற்றும் மகாண எல்லைகள் தாண்டிய குற்ற சாட்டுக்களில்
இவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்
மண்சரிவு அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை
மண்சரிவு அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையின் ஏழு மாவட்டங்களில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மண் சரிவு
ஏற்படலாம் என்பதால் மக்களுக்களு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
நுவரெலியா இரத்தினரபுரி உள்ளிட்ட பகுதிகள் அதிகம் பாதிக்க படலாம் என தெரிவிக்க படுகிறது
கொரனோ தாக்குதல்-ஒரே நாளில் 39 பேர் மரணம்
கொரனோ தாக்குதல்-ஒரே நாளில் 39 பேர் மரணம்
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த
தினம் மட்டும் முப்பத்தி ஒன்பது பேர் பலியாகியுள்ளதாக சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்
நாள் தோறும் மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் ,அரசு அதனை மறைத்து வருவதாக குற்ற சுமத்த பட்டு வருகிறது குறிப்பிட தக்கது
கர்ப்பிணிகளுக்கு கொரனோ ஊசி செலுத்த அனுமதி
கர்ப்பிணிகளுக்கு கொரனோ ஊசி செலுத்த அனுமதி
இலங்கையில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரனோ தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்க பட்டுள்ளது
,இதன்படி சினோபார்ம்ஊசிகளை செலுத்திட அனுமதி வழங்க பட்டுள்ளது
பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும் பைசர் உள்ளிட்ட ஊசிகள் கர்ப்பிணிகளுக்கு செலுத்த பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
தடுப்பூசி போட்டுக்கொண்ட மாளவிகா மோகனன்
தடுப்பூசி போட்டுக்கொண்ட மாளவிகா மோகனன்
நடிகை மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
பின்னர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்தார். தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ படம் மூலம் அறிமுகமான அவர், இதையடுத்து லோகேஷ்
கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
இதையடுத்து ‘யுத்ரா’ எனும் பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் மாளவிகா மோகனன், இப்படத்தின் படப்பிடிப்பை ஜூலை மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.
அதற்குமுன் படக்குழுவினர் அனைவருக்கும் தடுப்பூசி போட திட்டமிட்ட படக்குழு, இன்று மும்பையில் படக்குழுவினருக்காக தடுப்பூசி முகாம் நடத்தியது.
இதில் மாளவிகா மோகனன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
100 குடும்பத்திற்கு உதவிய நடிகை
100 குடும்பத்திற்கு உதவிய நடிகை
கொரோனா காலத்தில் நடிகைகள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் முன்னணி நடிகையாக திகழும் பூஜா ஹெக்டேவும் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.
இதற்காக ஒரு மாதத்திற்கு தேவையான ரேசன் பொருட்களை கஷ்டப்படும் 100 குடும்பத்தினருக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளார். இதுதொடர்பான போட்டோக்கள் சமூவலைதளத்தில் வெளியாகி உள்ளது.
பூஜா ஹெக்டே – விஜய்
நடிகை பூஜா ஹெக்டே தற்போது விஜய்க்கு ஜோடியாக தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.
3 முறை கருக்கலைப்பு – நடிகை புகாரால் – அமைச்சர் கைதாகிறார்
3 முறை கருக்கலைப்பு – நடிகை புகாரால் – அமைச்சர் கைதாகிறார்
சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. நாடோடிகள் படத்தில் நடித்துள்ளார். மலேசிய நாட்டின் குடியுரிமை பெற்ற இவர் சென்னை போலீஸ் கமிஷனர்
அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த புகார் மனுவில், ‘மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக சொல்லி உறவு வைத்தார். 5 வருடங்கள் நானும், அவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்தோம். 3 முறை அவர் மூலம் கர்ப்பம்
அடைந்தேன். அவரது மிரட்டலின் பேரில் கருவை கலைத்தேன். இப்போது என்னை திருமணம் செய்ய மறுத்து அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்’ என்று தெரிவித்து இருந்தார்.
இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த புகாரை மணிகண்டன் மறுத்து பேட்டி கொடுத்தார். நடிகை சாந்தினி யார் என்றே எனக்கு
தெரியாது என்று கூறினார். பணம் பறிக்கும் கும்பல் பின்னணியில் இந்த பொய்யான புகார் கொடுக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் மணிகண்டன் மீது கொலை மிரட்டல், திருமணம் செய்வதாக ஏமாற்றுதல் போன்ற 6 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அடுத்தகட்டமாக மணிகண்டனிடம் விசாரணை நடத்தி அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
இந்த வழக்கு விசாரணை அடையாறு துணை கமிஷனர் விக்ரமனின் நேரடி மேற்பார்வையில் நடந்து வருகிறது.
இதையும் படியுங்கள்… நடிகை பாலியல் புகாரில் 6 பிரிவில் வழக்கு: முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய நடவடிக்கை
இந்த வழக்கு குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இந்த வழக்கில் சாந்தினி கொடுத்துள்ள ஆதாரங்களை ஆய்வு செய்து வருகிறோம். சைபர் கிரைம் போலீசாரும் அவர் கொடுத்த ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களை சரிபார்த்து வருகிறார்கள்.
அவர் 3 முறை கருக்கலைப்பு செய்ததாக சொல்கிறார். அவர் கருக்கலைப்பு செய்தது மணிகண்டனின் நண்பர் ஆஸ்பத்திரி என்று தெரிவித்துள்ளார்.
அந்த ஆஸ்பத்திரியின் டாக்டர் ஒருவருடன் சாந்தினி உரையாடிய ஆடியோ ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் உண்மைத்தன்மை குறித்தும் விசாரணை நடக்கிறது.
இது மோசடி மற்றும் பாலியல் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் ஆதாரங்கள்தான் வழக்கில் பேசும். சாந்தினி கருக்கலைப்பு செய்த ஆஸ்பத்திரி விசாரணை வளையத்தில் உள்ளது. மேலும் மணிகண்டனின் கார் டிரைவர், அவர் அமைச்சராக இருந்தபோது அவரிடம் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரி ஆகியோரிடம் விசாரணை நடக்கிறது.
இதுபோன்ற விசாரணை அதிரடியாக நடக்கிறது. இந்த விசாரணை முடிவடைந்ததும், கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
விலை கூட்டி பொருட்கள் விற்றால் -ஆப்பு வைக்க படும் – அரசு எச்சரிக்கை
விலை கூட்டி பொருட்கள் விற்றால் -ஆப்பு வைக்க படும் – அரசு எச்சரிக்கை
அத்தியாவசிய பொருட்களை நடமாடும் சேவை மூலம் வீடுகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம் நாடு பூராகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது.
சில வர்த்தகர்கள் மரக்கறி மற்றும் பழவகைகளை அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.
இவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
சதோச விற்பனை நிலையங்கள் ஊடாக ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரண பொதி பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டமும் தற்போது முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.







