Posted in இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமம் – மீட்கும் இராணுவம்

வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமம் – மீட்கும் இராணுவம்

இலங்கை வெள்ளத்தில் மிதந்து வருகிறது ,இவ்வேளை பாதிக்க பட்ட மக்களை மீட்கும் பணியில்

சிங்கள இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்

இவ்வேளை வீடுகளுக்குள், வெள்ள நீரில் தத்தளித்தவர்களை மீட்கும் பணி தொடர்கிறது

இராணுவம்
இராணுவம்
    Posted in இலங்கை செய்திகள்

    கொரனோ சட்டத்தை மீறிய 975 பேர் கைது

    கொரனோ சட்டத்தை மீறிய 975 பேர் கைது

    தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 975 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கமைவாக கடந்த அக்டோபர் மாதம் முதல் இதுவரை 22 ஆயிரத்து 950 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

    பயணக்கட்டுப்பாட்டை மீறி மேல் மாகாணத்திற்குள் நுழைய முயன்ற 198 பேருக்கு எதிராகவும்

    சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்தார்

      Posted in Uncategorized

      விபச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ் பட நடிகைகள் கைது

      விபச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ் பட நடிகைகள் கைது

      தமிழ் பட நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 14 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

      மும்பையில் தமிழ் பட நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது – வெளியான அதிர்ச்சி தகவல்


      விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட நடிகைகளை போலீசார் மீட்டு அழைத்து வந்த போது எடுத்த புகைப்படம்


      தானே மாவட்டம் நவ்பாடா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் போலி

      வாடிக்கையாளரை அனுப்பி சோதனை நடத்தினா். அப்போது அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.

      இதில் அங்கு இருந்து 2 பெண்கள் மீட்கப்பட்டனர். விசாரணையில் அவர்கள் தமிழ், தென்னிந்திய படங்களில் நடித்த நடிகைகள் என்பது தெரிவந்தது.

      முதலில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் மராட்டிய விபசார தடுப்பு சட்டத்தின் கீழ் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதால் அவர்கள் கைது

      செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். 2 நடிகைகளும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

      நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர்களை போலீசார் கைது செய்து அழைத்து வந்தபோது எடுத்த புகைப்படம்


      நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர்களை போலீசார் கைது செய்து அழைத்து வந்தபோது எடுத்த புகைப்படம்

      இந்த நடிகைகள் கொரோனாவால் தற்போது பட வாய்ப்பு எதுவும் இல்லாமல் இருந்து உள்ளனர். இதை சாதகமாக பயன்படுத்தி விபசார கும்பல் இவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

      அதே நேரத்தில் நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக ஹசினா மேமன், ஸ்வீட்டி என 2 பெண்கள் மற்றும் விபசார தரகரான விஷால் என்ற சுனில்குமார் உத்தம்சந்த் ஜெயின்

      ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

        Posted in சினிமா

        பைக் ஓட்டி அசத்தும் அஜித் பட நடிகை

        பைக் ஓட்டி அசத்தும் அஜித் பட நடிகை

        தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த ‘கற்க கசடற’ என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி.

        அதன் பின், தாம் தூம், அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தார். மேலும், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார்.


        ற்போது ராய் லட்சுமி நடிப்பில் சிண்ட்ரெல்லா திரைப்படம் உருவாகி உள்ளது. இந்நிலையில் தற்போது கருப்பு

        நிற உடையில் தூம் பாடலுக்கு பைக் ஓட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.

          Posted in இலங்கை செய்திகள்

          அடித்து பாயும் வெள்ளம் – 10 பேர் மரணம்

          அடித்து பாயும் வெள்ளம் – 10 பேர் மரணம்

          சீரற்ற காலநிலையின் காரணமாக , நாட்டின் எட்டு மாவட்டங்களில் 71 பிரதேச செயலக  பிரிவுகளில் 54 ஆயிரத்து 126 குடும்பங்களைச் சேர்ந்த ,இரண்டு இலட்சத்து 19ஆயிரத்து 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

          கேகாலை மாவட்டத்தில் ஜந்து பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் மூன்று பேரும் புத்தளம் மாவட்டத்தில் ஒருவரும் களுத்துறை மாவட்டத்தில் ஒருவரும் அடங்கலாக பத்துப் பேர்

          உயிரிழந்திருப்பதுடன் ஒருவர் காணாமற் போயிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை வெளியிட்டுள்ள  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

          மூவாயிரத்து 528 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 499 பேர் தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

          11 வீடுகள் முழுமையாகவும் 724 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

          நேற்று அரநாயக்க தெவனகல – அல்கம பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்திட்டு இடிந்து வீழ்ந்ததை அடுத்து காணாமல்; போன நால்வரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த

          இயற்கை அனர்த்தத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும், தந்தையும், இரு பிள்ளைகளும் உயிரிழந்திருக்கிறார்கள். தந்தைக்கு 57 வயது, தாய்க்கு 56 வயது. பிள்ளைகளில் ஒருவருக்கு 23 வயது.

          அதேவேளை, டயகம – நட்போன் தோட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இங்கு 100 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். டயகமவில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.;. இந்த

          வெள்ளப்பெருக்கிற்குக் காரணமான ஆற்றின் கரைகளை செப்பனிட்டு, அவற்றை அகலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது,

          நீரேந்துப் பிரதேசங்களில் அதிக மழை பெய்து வருவதால், மேல் கொத்மலை, விமலசுரேந்திர ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக இடர்காப்பு நிலையம்

          அறிவித்துள்ளது. மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தை அடுத்த பள்ளத்தாக்கில் வாழும் மக்கள் வெள்ள அபாயம் குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழகக்கோன் கேட்டுள்ளார்.

            Posted in சினிமா

            குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்த நடிகை ரிச்சா

            குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்த நடிகை ரிச்சா

            செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மயக்கம் என்ன’ படத்தில் கதாநாயகியாக

            அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய். இப்படத்தை தொடர்ந்து சிம்புவுடன் இவர் நடித்த ‘ஒஸ்தி’ படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

            சினிமாவில் பிரபலமாக இருக்கும் போதே ஜியோ என்பவரை திருமணம் செய்துகொண்டார் ரிச்சா. தற்போது வெளிநாட்டில்

            வாழ்ந்து வரும் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன், தான் கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.


            ரிச்சாவின் குழந்தை

            இந்த நிலையில் மே 27-ஆம் தேதி ரிச்சாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு ‘லூகா’ என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.

            தற்போது குழந்தை புகைப்படத்தை பதிவு செய்து உலகிற்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் ரிச்சா. இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்

              Posted in சினிமா

              வைரலாக பரவும் நடிகைஆபாச வீடியோ

              வைரலாக பரவும் நடிகை ஆபாச வீடியோ

              நயன்தாரா நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் நிழல். இப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ரம்யா சுரேஷ். சமீபத்தில் ஆபாச வீடியோ ஒன்று சமூக

              வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில் இருப்பது நடிகை ரம்யா சுரேஷ் என்றும் கூறப்பட்டது. இதுகுறித்து அறிந்த நடிகை ரம்யா சுரேஷ், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

              அந்த வீடியோவில் இருப்பது தானில்லை என்றும், அது மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

              இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


              ரம்யா சுரேஷ்

              அந்த வீடியோவை யாரும் பகிர வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த விவகாரம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

                Posted in சினிமா

                இயக்குனரை திடீர் திருமணம் செய்த நடிகை

                இயக்குனரை திடீர் திருமணம் செய்த நடிகை

                தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் நடித்து வருபவர் யாமி கவுதம். தமிழில் ‛கவுரவம், தமிழ்ச்செல்வனும்

                தனியார் அஞ்சலும் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், திடீரென இன்று திருமணம் செய்து கொண்டார்.

                இந்தியில் யூரி – சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ஆதித்யா தர்ரை தான் இவர் திருமணம்

                செய்துள்ளார். யூரி படத்தில் யாமியும் நடித்திருந்தார். அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. தற்போது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர்.

                இதுப்பற்றி யாமி கவுதம் தனது சமூக வலைத்தள பக்கத்தில், குடும்பத்தினரின் ஆசீர்வாதத்தோடு, நெருங்கிய நபர்கள் மட்டும் பங்குபெற எங்கள் திருமணம் நடந்தது.

                அன்பும், நட்பும் சேர இந்தப் பயணத்தை நாங்கள் தொடங்கும் வேளையில் அனைவரின் ஆசீர்வாதமும், வாழ்த்தும் தேவை என பதிவிட்டுள்ளார்.

                  Posted in Uncategorized

                  தீக்குளித்து இளம் பெண் தற்கொலை – கண்ணீரில் குடும்பம்

                  தீக்குளித்து இளம் பெண் தற்கொலை – கண்ணீரில் குடும்பம்

                  இலங்கை கல்கிஸ்ஸை பகுதியில் கடந்த தினம் இருபத்தி நான்கு வயதுடைய இளம் பெண் ஒருவர்

                  மண் எண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்துள்ளார்

                  இவரது இந்த தற்கொலைக்குரிய கரணம் உடனடியாக தெரியவில்லை போலீசார்

                  விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

                    Posted in Uncategorized

                    இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் – எச்சரிக்கை

                    இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் – எச்சரிக்கை

                    உணவு களங்சியப்படுத்தலைப் பாதுகாப்பதாக தெரிவித்து ஆட்சிபீடமேறிய அரசாங்கம், இரசாயன உர இறக்குமதியை முறையற்ற விதத்தில் நிறுத்தியுள்ளதென தெரிவித்த ஐக்கிய

                    மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹாசீம், இதனால் இன்னும் சில மாதங்களில் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படும் என்றார்.

                    கொழும்பில் நேற்று (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த

                    போதே, மேற்கண்டவாறு தெரிவித்த அவர், உரத்தை நிறுத்தி உணவு களஞ்சியப்படுத்தலை இந்த அரசாங்கம் காட்டிக்​கொடுத்துவிட்டது என்றார்.

                    “உணவு மாத்திரமல்ல இதுவரை எரிபொருள் களஞ்சியப்படுத்தலை எரிபொருள் கூட்டுதாபனமே முகாமைத்துவம் செய்து வந்தது. ஆனால், இப்போது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு

                    வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து எரிபொருள் களுங்சியப்படுத்தலிலும் நெருக்கடி, அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

                    சுகாதார பாதுகாப்பும் இல்லாமல் போயுள்ளது. மறுபுறம் நிதி முகாமைத்துவமும் சீரழிந்து இறுதியில் பங்களாதேஷிடம் கடன் வாங்கியுள்ளது எனத் தெரிவித்த அவர், இந்த அரசாங்கத்தின்

                    மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாத நிலையில், இந்த அரசாங்கம் பதவி விலகுவதே சிறந்தது என்றார்.

                      Posted in Uncategorized

                      பிணத்துடன் சென்ற வாகனம் கவிழந்தது – பொலிஸ் அதிகாரி மரணம்

                      பிணத்துடன் சென்ற வாகனம் கவிழந்தது – பொலிஸ் அதிகாரி மரணம்

                      ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (05)  காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில்

                      ஹட்டன் பொலிஸ் நிலைய சிறு மற்றும் பாரிய குற்றப் பிரிவுக்கு பொறுப்பான உப- பொலிஸ் பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார்.

                      ஹட்டனிலிருந்து கண்டி இராணுவ முகாமில் ஒப்படைப்பதற்காக, கொரோனா சடலம் கொண்டுச் சென்ற வாகனத்துக்கு

                      பாதுகாப்பு வழங்க சென்ற 57 வயதான எஸ்.பெனடிக் என்ற பொலிஸ் அதிகாரியே விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர், கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

                      இந்த கொரோனா சடலம் ஓட்டமாவடியில் அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்படவிருந்தது.

                      உப- பொலிஸ் பொறுப்பதிகாரி பயணம் செய்த வாகனம், வட்டவளை கரோலினா தோட்ட பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

                      விபத்தில், உப பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் 3 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வாகன சாரதி, சடலத்துடன் சென்ற உறவினர்கள் இருவர் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

                      வாகனம் வலுக்கி வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது எனத் தெரிவித்த ஹட்டன், வட்டவளை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்

                        Posted in Uncategorized

                        கொரானாவுக்கு முல்லைத்தீவில் ஒருவர் மரணம்

                        கொரானாவுக்கு முல்லைத்தீவில் ஒருவர் மரணம்

                        இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி முல்லைத்தீவில் ஒருவர்

                        பலியாகியுள்ளார் .பலியானவர் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்க பட்டுள்ளது


                        இதுவரை இந்த நோயின் தாக்குதலில் சிக்கி 1656 பேர் பலியாகியுள்ளனர்

                          Posted in இலங்கை செய்திகள்

                          மண் சரிவு 02 பேர் உயிரிழப்பு

                          மண் சரிவு 02 பேர் உயிரிழப்பு

                          கேகாலை மாவட்டத்தில் மாவனெல்லை தெவனகல கந்த மற்றும் வரக்காபொல அல்கம கந்த என்ற இடங்களில் இடம்பெற்ற மண் சரிவு காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் மேலும் 03 பேர் காணாமற் போயிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

                          மீட்பு பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்

                          கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளது


                          இரத்தினபுரி அயகம பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவில் ஒரு மாணவி உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார். புத்தளம் மாதம்பை பிரதேசத்திலும் ஹொரண

                          பிரதேசத்திலும் குளிக்கச் சென்ற 2 பேர் நேற்று மூழ்கி உயிரிழந்துள்ளனர். புத்தளம் மகாவௌ குளத்திற்கு நீராடச் சென்ற ஒருவர் காணாமல் போயுள்ளார். கம்பகா நகரம் உள்ளிட்ட

                          சுற்றுப்புறங்களில் பல வீடுகள் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மக்கள் அசௌகரியங்களை எதிர் கொண்டுள்ளனர்.

                          சில இடங்கள் 5 அடி உயரத்தில் நீரில் மூழ்கி உள்ளன. நீர் வழிந்தோடும் பகுதி அடைபட்டுள்ள மையே இதற்கான பிரதான காரணமாகும். அத்தனகல்ல ஓயாவும் ஊறுகல் ஓயாவினாலும் வெள்ள அனர்த்தநிலை ஏற்பட்டுள்ளது.

                          இரத்தினபுரி தமிழ் மகாவித்தியாலயத்தில் கட்டடம் ஒன்று ஒன்றின் மீது மண் திட்டு இடிந்து

                          விழுந்து இருப்பதால் பல வகுப்பறைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது புத்தளம் மாவட்டத்தில் அனைத்து நீர்நிலைகளும் வழிந்து ஓடுவதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது

                            Posted in இலங்கை செய்திகள்

                            வவுனியாவில் நடந்த திருமணம் – மண்டபத்திற்கு சீல் -அதிகாரிகள் அதிரடி

                            வவுனியாவில் நடந்த திருமணம் – மண்டபத்திற்கு சீல் -அதிகாரிகள் அதிரடி

                            வவுனியாவில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி திருமண நிகழ்வு ஒன்று இடம்பெற்றமையால்

                            திருமண மண்டபம் சுகாதாரப் பிரிவினரால் நேற்று மாலை (04) சீல் வைத்து மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது.

                            வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள ஞான வைரவர் ஆலய வீதியில் அமைந்துள்ள

                            திருமண மண்டபம் ஒன்றில் மன்னாரைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கும், வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

                            இதன்போது சுகாதார அறிவுறுத்தல்களை மீறி அதிகளவிலான உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டதுடன்,

                            சுகாதார அறிவுறுத்தல்களும் பின்பற்றப்படவில்லை. இந்நிலையில் அங்கு சென்ற சுகாதாரப் பிரிவினர் அங்கு

                            கூடியிருந்தவர்களை கடும் எச்சரிக்கை வழங்கி அங்கிருந்து வெளியேற்றியதுடன், திருமண வீட்டாருக்கும் கடும் எச்சரிக்கை வழங்கினர்.

                            சுகாதார அறிவுறத்தல்களை மீறி மண்டபத்தை வழங்கி மக்களை ஒன்று கூட்டியமை தொடர்பில்

                            திருமண மண்டபம் சுகாதாரப பிரிவினரால் சீல் வைக்கப்பட்டு மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது.

                              Posted in சினிமா

                              அந்த நடிகையை கஷ்டப்படுத்தி விட்டேன்… பிரபல இயக்குனர்

                              அந்த நடிகையை கஷ்டப்படுத்தி விட்டேன்… பிரபல இயக்குனர்

                              மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த பிசாசு படம் நல்ல வரவேற்பை பெற்றது. அவர் தற்போது பிசாசு

                              படத்தின் 2ம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஆண்ட்ரியா நாயகியாக நடிக்கிறார். பூர்ணா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

                              இதுகுறித்து மிஷ்கின் கூறியிருப்பதாவது: பிசாசு படத்தில் பிசாசு தான் முக்கிய கேரக்டர். அதுபோல

                              இந்த படத்திலும் பிசாசு தான் முக்கிய கேரக்டர். அதில் அன்பு, பாசம், கருணை, சின்னதாக ஒரு

                              மெசேஜ் இருப்பது போன்று இதிலும் இருக்கும், மற்றபடி இரண்டு படங்களுக்கும் வேறெந்த தொடர்பு இல்லை. அது வேறு கதை, இது வேறு கதை.


                              ஆண்ட்ரியா – மிஷ்கின்

                              ஆண்ட்ரியாவின் கேரியரில் இது முக்கியமான படமாக இருக்கும். அந்த அளவிற்கு மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார்.

                              நான் அவரை கஷ்டப்படுத்தியிருக்கேன் என்றும் சொல்லலாம். இது பெரியவர்களுக்கான திகில் படம்தான். படம் பயமுறுத்தத்தான் செய்யும் என்றார்..

                                Posted in சினிமா

                                நடிகைக்கு நீதிமன்றம் 20 லட்சம் அபராதம்

                                நடிகைக்கு நீதிமன்றம் 20 லட்சம் அபராதம்

                                இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கு எதிராக, நடிகையும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஜூஹி சாவ்லா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.ஜூஹி

                                சாவ்லாஇந்தியாவில் 4ஜி தொழில்நுட்பம் தற்போது பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக 5ஜி அறிமுகமாக உள்ளது.

                                ஏற்கனவே 5ஜி வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போன்கள் விற்பனை இந்திய சந்தையில் மிகுந்த வரவேற்புடன் தொடங்கிவிட்டது.


                                அதேநேரம், 5 தொழில்நுட்பத்தால் உருவாகும் கதிர்வீச்சால் பூமியிலுள்ள பல்வேறு உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஒரு சாரார் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

                                நடிகை ஜூஹி சாவ்லா


                                பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா நாட்டில் 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

                                இந்த வழக்கு நீதிபதி ஜேஆர்.மிதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்ட நீதிபதி வெற்று விளம்பரத்திற்காக இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளது

                                என்று கண்டனம் தெரிவித்தார். மேலும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கியதாக 20 லட்ச ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

                                  Posted in Uncategorized

                                  ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கொரனோ –

                                  ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கொரனோ –

                                  இலங்கை தலவாக்கலை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் கொரனோ நோயினால் பாதிக்க பட்ட நிலையில் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

                                  இலங்கையில் பரவி வரும் இரண்டாம் அலை கொரனோ தாக்குதலில் நாள் தோறும் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது

                                  நோயினை கட்டுப்படுத்த முடியாது அரசு திணறி வருவதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள் – -1 இலட்சத்து 33 ஆயிரத்து 280 பேர் பாதிப்பு

                                    இலங்கை

                                    வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள் – -1 இலட்சத்து 33 ஆயிரத்து 280 பேர் பாதிப்பு

                                    சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 31 ஆயிரத்து 990 குடும்பங்களைச்சேர்ந்த ஒரு இலட்சத்து 33 ஆயிரத்து 280 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

                                    சீரற்ற காலநிலையினால் மூவர் உயிரிழ்ந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். அத்தோடு இரண்டு பேர் காணாமற்போயுள்ளனர்.

                                    ஏழு வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 468 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள

                                    அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.33 பாதுகாப்பு நிலையங்ளில் 1145 குடும்பங்களைச் சேர்ந்த 5ஆயிரத்து182 தங்கியிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

                                    இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

                                    27 நலன்புரி மத்திய நிலையங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் குறிப்பிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

                                    கடும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது பிரதேசங்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக கடற்படை 13 நிவாரண குழுக்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

                                    இதேவேளை ,பயண கட்டுப்பாடு காரணமாகவும், மழையுடன் கூடிய காலநிலையாலும் பாதிக்கப்பட்டுள்ள

                                    மக்களுக்கு உணவை பகிர்ந்தளிக்கும் வேலை திட்டம் தற்போது முன்னெடுக்கப்படுவதாக காலி மாவட்ட செயலாளர் சாந்த வீரசிங்க தெரிவித்தார்.

                                    தவளம, நெலுவ ஆகிய பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டால் அதற்கு முகம் கொடுக்க தயார் நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

                                    நடமாடும் வாகனங்களை பயன்படுத்தி உணவு பொருட்களை வீடுகளுக்கு சென்று பகிர்ந்து அளிக்க மாத்தறை மாவட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

                                    பொலன்நறுவை மாவட்டத்தில் 9 கூட்டுறவு சங்கங்கள் மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை பகிர்ந்தளித்து வருகின்றன

                                      Posted in Uncategorized

                                      கோட்டாவுடன் பிரிட்டன் திடீர் பேச்சு – உள்ளே பேசியது என்ன ..?

                                      கோட்டாவுடன் பிரிட்டன் திடீர் பேச்சு – உள்ளே பேசியது என்ன ..?

                                      இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர், சாரா ஹல்டன் (Sarah Hulton) அவர்களுக்கும்

                                      ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று, இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

                                      கொரோனா தொற்றைத் தடுப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்களைப் பாராட்டிய உயர்ஸ்தானிகர், தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு

                                      வழங்கக்கூடிய ஒத்துழைப்பு பற்றி கருத்துத் தெரிவித்தார். வணிகப் பொருளாதாரம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி அவர்கள் எடுத்துவரும் முயற்சிக்கு, பிரித்தானிய அரசாங்கம் வழங்கக்கூடிய பங்களிப்பு தொடர்பாகவும் உயர்ஸ்தானிகர் அவதானம் செலுத்தினார்.

                                      2030ஆம் ஆண்டாகும்போது, இந்நாட்டு வலுசக்தி உற்பத்தியில் 80சத வீதத்தை மீள்பிறப்பாக்க வலுசக்தி மூலம் பெற்றுக்கொள்வதற்கு, அரசாங்கம் முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களுக்கு

                                      அவசியமான தொழிநுட்ப அறிவைப் பரிமாறிக்கொள்வதற்கும் சூரிய சக்தியை களஞ்சியப்படுத்தல் மற்றும் பரிமாற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவும், சாரா ஹல்டன் அவர்கள், இணக்கம் தெரிவித்தார்.

                                      சேதனப் பசளைப் பயன்பாட்டின் மூலம் சுற்றாடலைப் பாதுகாப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் எடுத்தத் தீர்மானத்தை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பாராட்டினார். 20.8சத வீதமான “வன

                                      ஒதுக்கீட்டை” 30சத வீதம் வரை உயர்த்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதற்கு அவசியமான அறிவு மற்றும் பொறிமுறைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு, உயர்ஸ்தானிகர் தனது அவதானத்தைச் செலுத்தினார்.

                                      “எக்ஸ் – பிரஸ் பர்ள்” கப்பல் மூலம் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்வதற்கு, பிரித்தானியாவின் தொழிநுட்ப ஒத்துழைப்பை வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள் கேட்டுக்கொண்டார்.

                                      ஜெனிவா முன்மொழிவு தொடர்பாகவும் தெளிவுபடுத்திய ஜனாதிபதி அவர்கள், காணிப்

                                      பிரச்சினைகளைத் தீர்ப்பது உள்ளிட்ட ஏனைய விடயங்கள் பற்றி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்களைத் தெளிவுபடுத்தினார்.

                                      பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முதலாவது செயலாளர் அன்ரூ பிரைஸ் (Andrew

                                      Price), ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

                                        Posted in Uncategorized

                                        எரிந்த கப்பல் -கடலில் மிதந்த கொண்டெனருக்குள் இருந்தது என்ன தெரியுமா ..?

                                        கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கொள்கலன்களிலிருந்து கரைக்கு அடித்து வரப்பட்ட 584 டொன் பிளாஸ்டிக் பொருட்கள் நேற்று

                                        கரையிலிருந்து அகற்றப்பட்டதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

                                        மேலும், பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சிறிய பிளாஸ்டிக் பந்துகள் போன்ற இந்த பொருட்கள் இப்போது பாதுகாப்பாக எடுத்து சேமித்து

                                        ilவைக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                                        இதேவேளை, கடற்படையினரால் தொடர்ந்தும் கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.