Author: நலன் விரும்பி
குண்டு வெடித்து இருவர் மரணம் – கிளிநொச்சியில் துயரம்
குண்டு வெடித்து இருவர் மரணம் – கிளிநொச்சியில் துயரம்
கிளிநொச்சியில் வீடொன்றில் காணப்பட்ட எறிகணை ஒன்றை இரு சகோதரர்கள் இணைந்து
வெட்டியுள்ளனர் ,அப்பொழுது அந்த குண்டு வெடித்து சிதறியதில்
சம்பவ இடத்தில ஒருவர் பலியானார் ,மேலும் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் கிளிநொச்சி
மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார்
3வவுனியா வாலிபர்கள் முல்லைத்தீவு கடலில் சடலமாக மீட்பு
3 வவுனியா வாலிபர்கள் முல்லைத்தீவு கடலில் சடலமாக மீட்பு
வவுனியாவில் இருந்து முல்லைதீவிவு கடலில் குளிக்க சென்ற மூன்று வாலிபர்கள் நீரில் அடித்து
செல்ல பட்ட நிலையில் தற்போது சடலமாக மீட்க பட்டுள்ளனர்
காணமல் போயிருந்த இவர்களை தேடும் பணியில் சுழியோடிகள் ஈடுபட்டனர் ,தற்போது சடலமாக
மீட்க பட்டுள்ள நிலையில் உறவுகள் கண்ணீரில் உறைந்துள்ளனர்
விழிப்புணர்வு அற்று நமது மக்கள் இவ்விதம் செல்வதும் ,இறந்த நிலையில் கடலில் மிதப்பதும்
தொடர் துயர நிகழ்வாக அமைந்துள்ளது குறிப்பிட தக்கது
கொரனோ தொற்று 5 லட்சத்து 67 ஆயிரத்து 682 ஆக அதிகரிப்பு
கொரனோ தொற்று 5 லட்சத்து 67 ஆயிரத்து 682 ஆக அதிகரிப்பு
இலங்கையில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 67 ஆயிரத்து 682 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 746 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று பதிவான இந்தத்
தொற்றாளர்களுடன் இலங்கையில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த கொவிட் தொற்றாளர்களின்
எண்ணிக்கை ஐந்து லட்சத்து 67 ஆயிரத்து 682 ஆக அதிகரித்துள்ளது.Covid TOTALஇதேவேளை,
கொவிட் வைரஸ் தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவந்த மேலும் 316 பேர் முழுமையாகக்
குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர். இதன்படி, முழுமையாகக் குணமடைந்தவர்களின்
எண்ணிக்கை ஐந்து லட்சத்து 42 ஆயிரத்து 326 ஆகும். மேலும் 21 கொவிட் மரணங்களை சுகாதார
சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று உறுதிப்படுத்தினார். இதன்படி, நாட்டில் இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 461 ஆகும்.
இதுவரை உலகம் முழுவதிலும் பதிவாகியுள்ள கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 26 கோடி
61 லட்சத்தைத் தாண்டியுள்ளது. உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 52 லட்சத்து 70 ஆயிரத்திற்கும்
அதிகமாகும். நேற்றைய தினம் பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து
பத்தாயிரத்திற்கும் அதிகமாகும். இவர்களில் இரண்டு லட்சத்து 74 ஆயிரம் பேர் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
இதேவேளை, 13 லட்சத்து 43 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்கு எடுத்து வரப்பட்டுள்ளன.
அந்த கதையில் சரத்குமார்- சுஹாசினி
அந்த கதையில் சரத்குமார்- சுஹாசினி
குடும்பங்கள் கொண்டாடும் கதையம்சம் உள்ள ஒரு படத்தில் சரத்குமார்- சுஹாசினி இருவரும் மண் சார்ந்த முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
குடும்பங்கள் கொண்டாடும் கதையில் சரத்குமார்- சுஹாசினி
சரத்குமார், சுஹாசினி
ரோஷ்குமார் தயாரிக்க, பாலுச்சாமி டைரக்டு செய்கிறார். இப்படத்தை பற்றி அவர் கூறும்போது,
“இந்த காலத்துக்கு தேவையான கதையம்சம் கொண்ட படம் இது. இந்த கதையை சரத்குமார் கேட்டதும் உடனடியாக நடிக்க சம்மதித்தார். இது எனக்கான கதை என்றார்.
மண்ணின் மகளாக மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் சுஹாசினி மணிரத்னம் நடிக்கிறார்.
இன்னொரு முக்கிய வேடத்தில் அஷ்வதி நடிக்கிறார். இவர்களுடன் நந்தா, சிங்கம் புலி, சித்திக்,
கஞ்சா கருப்பு ஆகியோரும் நடிக்கிறார்கள். இது அனைத்து தரப்பினரையும் கவரும் சிறந்த திரைப்படமாக இருக்கும்” என்றார்.
விமான நிலையத்தில் நடிகைதடுத்து நிறுத்தம்
விமான நிலையத்தில் நடிகைதடுத்து நிறுத்தம்
குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெயர் சேர்க்கப்பட்டதையடுத்து அவர், நாட்டை விட்டு வெளியேறாமல் தடுக்கும் வகையில், அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது.
நாட்டை விட்டு வெளியேற தடை… மும்பை விமான நிலையத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தடுத்து நிறுத்தம்
ஜாக்குலின் பெர்னாண்டஸ்
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர், சிறையில் இருந்தவாறே தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி, 200 கோடி ரூபாய்
மோசடி செய்ததாக, டெல்லி பொருளாதார குற்றவியல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் இந்த மோசடியில் தொடர்புடைய அவரது காதலிகள் மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
இந்த வழக்கில் சுகேஷ் மற்றும் அவரது காதலியும் நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் 7000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை
தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சுகேஷ் தனது காதலி ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு கொடுத்த ரூ.10 கோடி மதிப்புள்ள பரிசுகளில் ரூ.52 லட்சம் மதிப்புள்ள குதிரையும் ரூ.9 லட்சம் மதிப்புள்ள பாரசீக பூனையும் அடங்கும் என்று அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.
குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்பட்டதையடுத்து ஜாக்குலின் நாட்டை விட்டு வெளியேறாமல் தடுக்கும் வகையில், அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டது.
இந்நிலையில், நடிகை ஜாக்குலின் துபாய் செல்வதற்காக இன்று மும்பை விமான நிலையத்திற்கு வந்தார். துபாயில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புறப்பட்டார்.
ஆனால், லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருப்பதால், அவரை மும்பை விமான நிலையத்தில் உள்ள குடியேற்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
சிறிது நேர விசாரணைக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். மேலும் அவர் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை டெல்லி அலுவலகத்தில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பவுள்ளது.
விலங்குகள் ஊடாக புதிய கொரனோ பரவல்
விலங்குகள் ஊடாக புதிய கொரனோ பரவல்
உலகில் மனிதர்கள் ஊடக விலங்குகளுக்கு கொரனோ நோயானது பரவி வருகிறது ,மேற்படி
நோயினால் பாதிக்க பட்ட விலங்குகளிடம் இருந்து புதியவகை கொரனோ நோயானது பரவி வரும்
அபாயம் எழுந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
இலங்கையில் சிங்கம் ,பூனை ,நாய்களுக்கு இந்த நோயானது பரவி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
சிலிண்டர் வெடித்து எரிந்த உணவகம் – ஓடிய மக்கள்
சிலிண்டர் வெடித்து எரிந்த உணவகம் – ஓடிய மக்கள்
இலங்கை அனுராதபுரம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பயன்படுத்த பட்டு வந்த
காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் அந்த உணவகம் முற்றாக எரிந்து அளித்துள்ளது
இலங்கையில் தொடராக சிலிண்டர்கள் வெடித்து வருவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்
காட்டுக்குள் இருந்து ஆண் பெண் சடலம் மீட்பு – நடந்தது என்ன
காட்டுக்குள் இருந்து ஆண் பெண் சடலம் மீட்பு – நடந்தது என்ன
இலங்கை மாத்தளை பகுதி காடு ஒன்றுக்குள் இருந்து ஆண் பெண் சடலம் மீட்க பட்டுள்ளது ,மேற்படி
சடலங்களை காட்டுக்கு விறகு வெட்ட சென்றவர்கள் கண்ணுற்று பொலிஸாருக்கு தெரிவித்த
நிலையில் இரு சடலங்களும் மீட்க பட்டுள்ளன
மேற்படி இருவர் மரணத்திற்குரிய காரணம் தெரியவில்லை விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
நால்வர் நீரில் மூழ்கி மரணம் விசாரணைகள் ஆரம்பம்
நால்வர் நீரில் மூழ்கி மரணம் விசாரணைகள் ஆரம்பம்
இலங்கை குச்சாவெளி மற்றும் ,ஈச்சிலம்பற்று பகுதிகளில் நால்வர் நீரில் மூழ்கி மரணமாகினர்
,மேற்படி மரண சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
மேற்படி மரணங்கள் படுகொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பில் விசாரணைகள்
ஆரம்பிக்க பட்டுள்ளன
1,4 பில்லியன் கடனாக பெறும் இலங்கை
1,4 பில்லியன் கடனாக பெறும் இலங்கை
இந்தியாவிடம் இருந்து இலங்கை 1,4 மில்லியன் டொலர்களை கடனாக பெறுகிறது
இந்தியா சென்றிருந்த நீதியமைச்சர் இந்த கடன் உதவி தொகை தொடர்பில் பேசி இருந்த
நிலையில் இந்த உதவி தொகை வழங்க படுகிறது
ஆளும் கொள்ளையர்கள் ஆட்சியில் நாடு பெரும் கடன் சுமையை சுமந்து வருகிறது குறிப்பிட தக்கது
சாதனாவின் நடனத்திற்கு குவியும் பாராட்டுகள்
சாதனாவின் நடனத்திற்கு குவியும் பாராட்டுகள்
தங்க மீன்கள் படத்தில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்த நடிகை சாதனாவின் நடனத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தங்க மீன்கள் சாதனாவின் நடனத்திற்கு குவியும் பாராட்டுகள்
சாதனா
‘தங்க மீன்கள்’ படத்தில் தனது அற்புதமான நடிப்பிற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை வென்ற சாதனா, பின்னர் ராம் இயக்கிய விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட
‘பேரன்பு’ படத்தில் மெகாஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து நடித்தார். முறையாக பயிற்சி பெற்ற நடனக் கலைஞரான இவர், தற்போது சரிகம தமிழ் யூடியூப் சேனலுக்காக ‘வஞ்சிக்கோட்டை
வாலிபன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணும் கண்ணும்’ பாடலை மீண்டும் உருவாக்கியுள்ளார்.
‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் வரும் ‘கண்ணும் கண்ணும் கலந்து’ பாடலும், அதற்கு இடையே வரும் ‘சபாஷ் சரியானப் போட்டி’ என்ற வசனமும் யாராலும் மறக்க முடியாது.
இப்பாடலின் மறு உருவாக்க வீடியோவில், பத்மினி மற்றும் வைஜெயந்திமாலா பாலி ஆகிய இரு
வேடங்களிலும் சாதனா நடனமாடியுள்ளார், இதுவரை யாரும் செய்யாத சாதனாவின் முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சாதனா
பிரபல வீணை மேஸ்ட்ரோ ராஜேஷ் வைத்யா ரீமாஸ்டர் செய்துள்ள இப்பாடலை சரிகமா வெளியிட்டுள்ளது. ஒளிப்பதிவை விஜய் தீபக் கையாண்டுள்ளார், சிஜி விஎஃப்எக்ஸ் காட்சிகளை
நாகராஜன் சக்திவேல் வடிவமைத்துள்ளார். இந்த வீடியோவை சாதனாவே இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நான்கு கதாநாயகிகள் நடிக்கும் புது திரைப்படம்
நான்கு கதாநாயகிகள் நடிக்கும் புது திரைப்படம்
பிரபல நடிகைகள் சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா ஆகிய நான்கு பேர் புதிய திரில்லர் படத்தில் நடிக்கிறார்கள்.
திரில்லர் படத்தில் நடிக்கும் நான்கு கதாநாயகிகள்
சந்திரலேகா – மனிஷா – சாய் தன்ஷிகா – சிருஷ்டி டாங்கே
எஸ்.எஸ்.பிரபு மற்றும் சங்கர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை இன்று
போடப்பட்டது. இப்படத்தில்க் சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா
ஆகிய நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். வித்தியாசமான தோற்றத்தில் சார்பட்டா புகழ் டாடி ஜான் விஜய் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் கிரிதரன் இயக்குனராக அறிமுகமாகிறார்.
பட பூஜை
கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு அசோக் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.ராமர் படத்தொகுப்பையும், எஸ்.ஜே.ராம் கலை இயக்குனராகவும் பணியாற்றுகிறார்கள்.
இன்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையில், மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிறப்பு
விருந்தினராக கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
கடலில் மூழ்கி இரு மாணவர்கள் மரணம்
கடலில் மூழ்கி இரு மாணவர்கள் மரணம்
திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள வாழைத்தோட்டம் கடலில் நீராடிக்
கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதோடு இரண்டு சிறுவர்களினதும்
சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு நேற்று (03) இரவு 10.40
மணியளவில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலை விட்டுச் சென்ற நான்கு சிறுவர்கள் வாழைத்தோட்டம் கடலில் நீராடியுள்ளனர். இதில்
இரண்டு சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளனர். இதன்போது உயிர் தப்பிய
மற்றைய இரண்டு சிறுவர்கள் பிரதேச மக்களிடம் சம்பவம் குறித்து தெரிவித்ததையடுத்து கடலில்
தேடியபோது இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
முல்லைதீவில் வெடித்து சிதறிய காஸ் சிலிண்டர்
முல்லைதீவில் வெடித்து சிதறிய காஸ் சிலிண்டர்
இலங்கையில் கடந்த நான்கு நாட்களாக காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறிய வண்ணம் உள்ளன
மேற்படி சம்வத்தில்க் பல வீடுகள் சேதமாகின
இவ்விதம் முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் வீடொன்றில் சிலிண்டர் வெடித்து சிதறியது
எனினும் சேதங்கள் இன்றி குடும்பத்தினர் தப்பித்துள்ளனர்
போதையில் தாக்குதல் – நால்வர் கைது
போதையில் தாக்குதல் – நால்வர் கைது
மல்லாவி பகுதியில் போதை அருந்திவிட்டு வீட்டின் முன்பாக நின்ற குடும்பஸ்தர் மீது நால்வர்
அடங்கியா குழு தாக்குதல் நடத்தியுள்ளது
மேற்படி தாக்குதலை நடத்திய குழுவினர் கைது செய்ய பட்டுள்ளனர் .
போதைக்கு அடிமையாகி எமது சமுதாயம் சீரழிந்து செல்வதனை மேற்படி சம்பவங்கள் காண்பிக்கின்றன
மாணவர்களை கடத்திய இராணுவ தளபதி – வருகிறது விசாரணை
மாணவர்களை கடத்திய இராணுவ தளபதி – வருகிறது விசாரணை
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை
காணாமலாக்கிய சம்பவத்தில், முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14
கடற்படையினருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்மானித்தது.
இந்த வழக்கு நேற்று சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ரில் விசாரணைக்கு வந்த போது, முன்னாள்
கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள ரிட் மனு தொடர்பில் விடயங்கள் முன் வைக்கப்பட்டன.
இவ்வழக்கில் வசந்த கரண்ணாகொட பிரதிவாதியாக பெயரிடப்பட்டமைக்கு எதிராக அவர்
தாக்கல் செய்துள்ள ரிட் மனு மேன் முறையீட்டு நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. அம்மனு எதிர்வரும் 8 ஆம் திகதி ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.
அந்த ரிட் மனுவின் தீர்பு வரும் வரை, இந்த விவகாரத்தில் கரன்னாகொடவுக்கு எதிரான
விசாரணைகளை முன்னெடுப்பது சாத்தியமற்றது என்பதால் வழக்கானது ஜனவரி 7ஆம் திகதிவரை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டது
வலை வீசும் நடிகை,… கண்டுக்கொள்ளாத நடிகர்
வலை வீசும் நடிகை,… கண்டுக்கொள்ளாத நடிகர்
பிரபல நடிகை ஒருவர் பட வாய்ப்பை பிடிப்பதற்காக முன்னணி நடிகர் ஒருவருக்கு தொடர்ந்து வலை வீசி வருகிறாராம்.
வலை வீசும் நடிகை,… கண்டுக்கொள்ளாத நடிகர்
தமிழில் உச்ச நடிகர் படத்தில் அறிமுகமான நடிகை, அடுத்ததாக முன்னணி நடிகருடன் நடிக்க
ஆசைப்பட்டு ஒரு வழியாக பட வாய்ப்பை பிடித்தாராம். அடுத்ததாக உச்ச நடிகரின் உறவினருக்கு
கொக்கி போட்டு தூது அனுப்பி பட வாய்ப்பை பிடித்திருக்கிறாராம்.
இந்நிலையில், நடிகை அடுத்ததாக தமிழில் முன்னணி நடிகராக இருப்பவருடன் நடிக்க
ஆசைப்பட்டு இருக்கிறாராம். இதற்காக தூது அனுப்பி வருகிறாராம். மேலும் அவரின் கவனத்தை
ஈர்க்க பல முயற்சிகளிலும் இறங்கி இருக்கிறாராம். ஆனால், முன்னணி நடிகர், நடிகையை கண்டுக்கொள்ளாமல் இருக்கிறாராம்
இலங்கை பாராளுமன்ற லிப்டுக்குள் சிக்கிய எம்பிக்கள்
இலங்கை பாராளுமன்ற லிப்டுக்குள் சிக்கிய எம்பிக்கள்
இலங்கையின் பாரளுமனறதுக்குள் பயணித்த எம்பிக்கள் லிப்ட் வழியாக செல்ல முற்பட்டுள்ளனர்
அப்போது அது மின்சாரம் தடை பட்டதால் இசெயல் இழந்துள்ளது ; அதற்குள் இரண்டு எம்பிக்கள் சிக்கினார்
இப்போதாவது மக்கள் படும் அவலத்தை இந்த எம்பிக்கள் உணர்ந்திருப்பார்கள் என நம்பலாம்
இலங்கையில் புதிய கொரனோ நோய் ஒருவர் பாதிப்பு
இலங்கையில் புதிய கொரனோ நோய் ஒருவர் பாதிப்பு
இலங்கையில் புதிதாக பரவி வரும் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி
ஒருவர் பாதிக்க பட்டுள்ள்ளார் , மேலும் இந்த நோயானது பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகள்
மேற்கொள்ள பட்டு வருவதாக தெரிவிக்க படுகிறது
உலக நாடுகளில் இந்த நோயானது வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிட தக்கது
புலிகளின் தங்கம் தோண்டியவர் கைது
புலிகளின் தங்கம் தோண்டியவர் கைது
இலங்கை முல்லைத்தீவு பகுதியில் புலிகள் புதைத்து வைக்க பட்ட தங்கத்தை தோண்டியவர்கள்
கைது செய்ய பட்டுள்ளனர்
பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கைது
இடம் பெற்றுள்ளது













