மாணவர்களை கடத்திய இராணுவ தளபதி – வருகிறது விசாரணை

Spread the love

மாணவர்களை கடத்திய இராணுவ தளபதி – வருகிறது விசாரணை

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை 

காணாமலாக்கிய  சம்பவத்தில், முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14

கடற்படையினருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க  சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ற நீதிபதிகள் குழாம்  தீர்மானித்தது. 

இந்த வழக்கு நேற்று சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ரில் விசாரணைக்கு வந்த போது,  முன்னாள்

கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள ரிட் மனு தொடர்பில் விடயங்கள் முன் வைக்கப்பட்டன. 

இவ்வழக்கில் வசந்த கரண்ணாகொட பிரதிவாதியாக பெயரிடப்பட்டமைக்கு எதிராக அவர்

தாக்கல் செய்துள்ள ரிட் மனு மேன் முறையீட்டு நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. அம்மனு எதிர்வரும் 8 ஆம் திகதி  ஆம் திகதி  விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.  

அந்த ரிட் மனுவின் தீர்பு வரும் வரை, இந்த விவகாரத்தில் கரன்னாகொடவுக்கு எதிரான

விசாரணைகளை முன்னெடுப்பது சாத்தியமற்றது என்பதால் வழக்கானது  ஜனவரி 7ஆம் திகதிவரை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டது

    Leave a Reply