விமான தாங்கி கப்பலை விற்கும் பிரிட்டன் கடற்படை|HMS Prince of Wales aircraft carrier
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

செங்கடல் தாக்குதல் பணம் இல்லை விமான தாங்கி கப்பலை விற்கும் பிரிட்டன் கடற்படை|HMS Prince of Wales aircraft carrier


செங்கடல் தாக்குதல் பணம் இல்லை விமான தாங்கி கப்பலை விற்கும் பிரிட்டன் கடற்படை|HMS Prince of Wales aircraft carrier

பணம் இல்லா காரணத்தால் விமான தாங்கி கப்பலை விற்கும் பிரிட்டன் கடற்படை.


பிரிட்டன் ராயல் கடற்படையின் HMS Prince of Wales aircraft carrier ரை விற்பனை செய்யும் நடவடிக்கைக்கு பிரிட்டன் கடற்படை தள்ள பட்டுள்ளது .

செங்கடல் தாக்குதல் எதிரொலியாக இது பார்க்க படுகிறது .

வீடியோ

இந்தியாவின் இரண்டு கரையோர பாதுகாப்பு கப்பல்கள் கொழும்பு வருகை
Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவின் இரண்டு கரையோர பாதுகாப்பு கப்பல்கள் கொழும்பு வருகை

இந்தியாவின் இரண்டு கரையோர பாதுகாப்பு கப்பல்கள் கொழும்பு வருகை

இந்தியாவின் இரண்டு கரையோர பாதுகாப்பு கப்பல்கள் காலி மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கு சுற்றுலா மேற்கொள்வதற்காக வந்துள்ளன.

இந்தியாவின் கரையோர பாதுகாப்பு படைப்பிரிவிற்கு சொந்தமான சமர்த் எனும் கடல்சார் கண்காணிப்பு கப்பலும், அபினவ் எனப்படும் அதிவேக கண்காணிப்பு கப்பலும் வந்துள்ளன.

இந்தியாவின் இரண்டு கரையோர பாதுகாப்பு கப்பல்கள் கொழும்பு வருகை

இந்த கப்பல்கள் நேற்று முன்தினம் காலி துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இவை மார்ச் முதலாம் திகதி வரை காலியில் தரித்திருக்கவுள்ளன என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக, மார்ச் 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளன.

இந்திய கரையோர பாதுகாப்பு கப்பல்கள் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் தீயணைப்பு, சேதங்களைக் கட்டுப்படுத்துதல், சமுத்திர பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான பயிற்சிகளை வழங்குதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளன

யாழில் தனியார் பேரூந்து சேவைகள் முற்றாக இடைநிறுத்தம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் தனியார் பேரூந்து சேவைகள் முற்றாக இடைநிறுத்தம்

யாழில் தனியார் பேரூந்து சேவைகள் முற்றாக இடைநிறுத்தம்

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் உள்ளூர் மற்றும் நெடுந்தூர தனியார் பேரூந்து சேவைகள் அனைத்தும் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்தோடு யாழ்ப்பாணத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு சேவையில் ஈடுபடும் பேரூந்துகள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ளூர் தனியார் பேரூந்து சேவைகள் சேவையை முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் நொடுந்தூர பேரூந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டிருந்தன.

யாழில் தனியார் பேரூந்து சேவைகள் முற்றாக இடைநிறுத்தம்

ஆனால் இன்றைய தினம் உள்ளூர் மற்றும் நெடுந்தூர பேரூந்து சேவைகள் அனைத்தும் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் நேற்று (28) முதல் தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தலைவர் சி.சிவபரன் நேற்று முன்தினம்(27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில் இரண்டாவது நாளாகவும் தனியார் போக்குவரத்து சேவைகள் முற்றாக இடைநிறுத்தப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.​ை

கத்தியால் குத்தி ஒருவர் வெட்டிக் கொலை
Posted in இலங்கை செய்திகள்

கத்தியால் குத்தி ஒருவர் வெட்டிக் கொலை

கத்தியால் குத்தி ஒருவர் வெட்டிக் கொலை

வெலிபென்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெலகடியாகொட ஹொரவல, பிரதேசத்தில் கத்தியால் குத்தி ஒருவர் வெட்டிக் கொலைசெய்ய பட்டுள்ளார்.

பலகட்டியகொட பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.

உயிரிழந்த நபர் பெலகடியாகொட பிரதேசத்தில் பிரதான வீதிக்கு அருகில் நின்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது இருவரில் ஒருவர் குறித்த நபர் மீது திடீரென கத்தியால் குத்தியுள்ளார்.

பின்னர் கத்தி குத்துக்கு இலக்கான நபர் படுகாயத்துடன் அருகில் உள்ள வீட்டுக்கு ஓடியுள்ளார்.

கத்தியால் குத்தி ஒருவர் வெட்டிக் கொலை

அதன்பின், வீட்டின் முற்றத்தில் விழுந்தவுடன், இருவரும் இறந்தவரின் வயிறு மற்றும் மார்புப் பகுதியில் பலமுறை கத்தியால் குத்தியுள்ளனர்.

இந்த கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்தவர் மத்துகம வெத்தவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலுக்கு வந்த இருவர் மோட்டார் சைக்கிளை அப்பகுதியின் பிரதான வீதிக்கு அருகில் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தின் பின்னர் கோபமடைந்த பிரதேசவாசிகள் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை வெலிபென்ன பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே விபத்திற்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பாடசாலை மாணவர்கள் 24 பேர் உள்ளிட்ட 36 பேர் காயமடைந்துள்ளனர்.

இரட்டையர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த பிக்கு
Posted in இலங்கை செய்திகள்

இரட்டையர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த பிக்கு

இரட்டையர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த பிக்கு

இரண்டு ஆண் இரட்டையர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிக்கு ஒருவரை ஹோமாகம தலைமையக பொலிஸார் கைது செய்தனர்

பின்னர் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் நேற்று (28) ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபரான பிக்கு 05 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

13 வயதுடைய இரண்டு ஆண் இரட்டையர்களை குறித்த பிக்கு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட பிக்கு யந்திரம் மந்திரம் மூலம் நோய்களைக் குணப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இரட்டையர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த பிக்கு

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரண்டு சிறுவர்களில் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுகவீனமடைந்ததையடுத்து பெற்றோர்கள் அவரை பிக்குவிடம் அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் பிக்கு, சிறுவனை சில நாட்கள் அங்கேயே வைத்து பூஜை நடத்த வேண்டும் என பெற்றோரிடம் கூறியதாகவும், அதன்படி சிறுவனை அங்கேயே தங்க வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், இரட்டைர்களில் மற்றையவர் தனது சகோதரர் இல்லாமலேயே நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், சந்தேக நபர் காரில் வீட்டுக்கு சென்று அந்த சிறுவனையும் அழைத்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேகநபரான பிக்கு சிறுவர்கள் இருவரையும் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபரான பிக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவர்கள் தற்போது சிகிச்சைக்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

கணவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை வழங்கிய மனைவி கைது

கணவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை வழங்கிய மனைவி கைது

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை இரகசியமாக கொண்டு வந்த மனைவி ஒருவர் நேற்றைய தினம் (28) கைது செய்யப்பட்டுள்ளார்.

கணவனுக்கு கொடுப்பதற்காக கோழி இறைச்சி பொதி ஒன்று கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் அதனை சோதனை செய்த போது அதனுள் ஹெரோயின் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

கணவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை வழங்கிய மனைவி கைது

அதனை அவதானித்த சிறைச்சாலை அதிகாரிகளினால் குறித்த பெண், களுத்துறை வடக்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பயாகல முலட்டியன பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்கிடமான பெண் தனது 6 வயது மகளுடன் அங்கு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 550 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹமாஸ் தாக்குதலினால் இஸ்ரேல் வடக்கை விட்டு மக்கள் ஓட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் மக்கள் மீது தாக்குதல் நடத்திய அதே இராணுவம்

இஸ்ரேல் மக்கள் மீது தாக்குதல் நடத்திய அதே இராணுவம்

இஸ்ரேல் மக்கள் மீது அதே இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்திய சம்பவம் பதிவாகியுள்ளது .


இஸ்ரேல் பாலஸ்தீன போர் ஆரம்பிக்க பட்ட காலத்தின் முதல் இதுவரை இஸ்ரேலிய மக்கள் மீது அதே இஸ்ரேல் இராணுவம் ஐந்து முறை தாக்குதல் நடத்தியுள்ளதாக நேரடி சாட்சிகள் தெரிவித்துள்ளன .

இந்த தாக்குதலை இஸ்ரேலியா இராணுவம் ஏற்று கொண்டு
அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருவதாக அறிவித்துள்ளது .

சொந்த மக்களையே தாக்கும் கொடிய இராணுவமாக
இஸ்ரேலிய இராணுவம் வரலாற்றில் பதிவாகியுள்ளது குறிப்பிட தக்கது .

ஹவுதி அடியில் மத்திய கிழக்கில் இருந்து தப்பி ஓடும் அமெரிக்காவின் 4000 ஆமி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹவுதி அடியில் மத்திய கிழக்கில் இருந்து தப்பி ஓடும் அமெரிக்காவின் 4000 ஆமி


ஹவுதி அடியில் மத்திய கிழக்கில் இருந்து தப்பி ஓடும் அமெரிக்காவின் 4000 ஆமி

ஹவுதி போர் படைகள் அடியில் மத்திய கிழக்கில் இருந்து தப்பி ஓடும் அமெரிக்காவின் 4000 இராணுவத்தினர் .


செங்கடலில் கப்பல்கள் மீது ஏமன் ஹவுதி படைகள் தாக்குதல் அச்சம் காரணமாக தப்பி ஓட தயாராகி வருகிறது அமெரிக்கா ஆமி ,

வீடியோ

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் ரஷ்யா உளவாளிகள் ஆறு பேர் கைது

லண்டனில் ரஷ்யா உளவாளிகள் ஆறு பேர் கைது

லண்டனில் ரஷ்யா உளவாளிகள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன் உளவுத்துறை தெரிவித்துள்ளது .

பால்கெரியா நாட்டை சேர்ந்த ஆறு பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

கைதானவர்கள் சிலர் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆயர் படுத்த பட்டுள்ளனர் .

பிரிட்டன் உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த கைது வேட்டை இடம்பெற்றுள்ளது .

வீடியோ

பிரெஞ்சு நடிகர் அலைன் டெலோனின் வீட்டில் 72 துப்பாக்கி மீட்பு
Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

பிரெஞ்சு நடிகர் அலைன் டெலோனின் வீட்டில் 72 துப்பாக்கி மீட்பு

பிரெஞ்சு நடிகர் அலைன் டெலோனின் வீட்டில் 72 துப்பாக்கி மீட்பு

பிரெஞ்சு திரைப்பட நட்சத்திரம் அலைன் டெலோனின் French film star Alain Delon வீட்டில் 72 துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றினர்

பிரெஞ்சு நடிகர் அலைன் டெலோனின் வீட்டில் இருந்து டஜன் கணக்கான துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக மொன்டார்கிஸ் அரசு வழக்கறிஞர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மொத்தத்தில், “72 துப்பாக்கிகள் மற்றும் 3,000 க்கும் மேற்பட்ட வெடிமருந்துகள்” பாரிஸின் தெற்கே உள்ள லோரெட்டில் உள்ள டெலோனின் தோட்டத்திலிருந்து கைப்பற்றப்பட்டன

வீடியோ

சிரியாவில் ஈரான் ஆயுத கூடங்கள் அழிப்பு இஸ்ரேல் முழக்கம் ரஷ்யா எல்லையில் அமெரிக்கா இரகசிய முகாம்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

சிரியாவில் ஈரான் ஆயுத கூடங்கள் அழிப்பு இஸ்ரேல் முழக்கம் ரஷ்யா எல்லையில் அமெரிக்கா இரகசிய முகாம்கள்


சிரியாவில் ஈரான் ஆயுத கூடங்கள் அழிப்பு இஸ்ரேல் முழக்கம் ரஷ்யா எல்லையில் அமெரிக்கா இரகசிய முகாம்கள்

சிரியாவில் ஈரான் ஆயுத கூடங்கள் அழிப்பு என இஸ்ரேல் முழக்கம்,
பாரிய வெடிப்பு சத்தங்கள் என சிரியா மக்கள் தெரிவிப்பு .


ரஷ்யா எல்லையில் அமெரிக்கா உளவுத்துறையின் இரகசிய முகாம்கள் ,
அமெரிக்கா இரகசிய நடவடிக்கையை உடைத்த ஊடகம்

வீடியோ

ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் இராணுவ தளபதிகள் அவுட்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் இராணுவ தளபதிகள் அவுட்


ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் இராணுவ தளபதிகள் அவுட்

ஹமாஸ் படைகளின் தாக்குதலில் இஸ்ரேல் இராணுவ தளபதிகள் அவுட்
என ஹமாஸ் போர் படைகள் அறிவித்துள்ளன .

இஸ்ரேல் பாலஸ்தீன போர் அரங்கில் உச்சம் பெற்றுள்ள தாக்குதல்கள்

வீடியோ

கண்டி குடிவரவு குடியகழ்வு அலுவலகத்திற்கு அருகில் பதற்றம்
Posted in இலங்கை செய்திகள்

கண்டி குடிவரவு குடியகழ்வு அலுவலகத்திற்கு அருகில் பதற்றம்

கண்டி குடிவரவு குடியகழ்வு அலுவலகத்திற்கு அருகில் பதற்றம்

கண்டி குடிவரவு குடியகழ்வு திணைக்கள அலுவலகத்திற்கு முன்பாக கடவுச்சீட்டு பெற வந்தவர்களுக்கு மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளின் முறையற்ற செயற்பாடுகள் காரணமாக தாம் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

தூர இடங்களில் இருந்து வந்து கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக பல நாட்களாக காத்திருந்த ஒரு குழுவிற்கும் இன்று காலை அந்த இடத்திற்கு வந்த மற்றுமொரு குழுவினருக்கும் இடையில் தீவிர நிலைமை ஏற்பட்டுள்ளது.

கண்டி குடிவரவு குடியகழ்வு அலுவலகத்திற்கு அருகில் பதற்றம்

இதற்கிடையில், வரிசையில் நின்று கடவுச்சீட்டு பெற வரும் நபர்களிடம், திட்டமிட்ட கும்பல் ஒன்று சட்டவிரோதமாக பணம் பறிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதற்கு கண்டியில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் இருந்தும் ஆதரவு கிடைத்து வருவதாக அங்கு வந்திருந்த மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

ஆயிரத்தெட்டு இன்னல்களுக்கு மத்தியில் தொலைதூரப் பகுதிகளில் இருந்து வந்து நாட்டிற்கு அன்னியச் செலாவணியைக் கொண்டு வரும் இந்த மக்களுக்கு குறைந்தபட்ச சேவையையேனும் வழங்க குடிவரவு அதிகாரிகள் கண் திறப்பார்களா?

யாழில் வெள்ளை வானில் இளம் பெண் கடத்தல்| இலங்கை செய்திகள்
Posted in உலக செய்திகள்

இந்தியாவில் ஆயுதமேந்திய குழுவால் பொலிஸ் அதிகாரி கடத்தல்

இந்தியாவில் ஆயுதமேந்திய குழுவால் பொலிஸ் அதிகாரி கடத்தல்

சுமார் 200 பேர் கொண்ட ஆயுதமேந்திய கும்பல் ஒன்று இந்தியாவில் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரை கடத்திச் சென்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாகனத் திருட்டு தொடர்பில் குறித்த பொலிஸ் அதிகாரி, 6 சந்தேக நபர்களை கைது செய்ததை அடுத்து இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த சம்பவம் நேற்று (27) , மணிப்பூர் மாநிலத்தில் பதிவாகியுள்ளது.

நேற்றிரவு 7.00 மணியளவில் சுமார் 200 ஆயுததாரிகள், பொலிஸ் அதிகாரியின் வீட்டைச் சுற்றி வளைத்து, பொலிஸ் அதிகாரியையும் அவரது மெய்ப்பாதுகாவலரையும் கடத்திச் சென்றுள்ளனர்.

இந்தியாவில் ஆயுதமேந்திய குழுவால் பொலிஸ் அதிகாரி கடத்தல்

அதன் பின்னர், உடனடியாக செயற்பட்ட அந்நாட்டு இராணுவத்தினர் ,அந்த கும்பலை துரத்திச் சென்று கடத்தப்பட்டவர்களை மீட்டுள்ளனர்.

கடத்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தால் மணிப்பூர் மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நிலைமையை கட்டுக்குள் வைக்க இராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜேர்மன் போர் கப்பல் தாக்கிய ஹவுதி விமானங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஜேர்மன் போர் கப்பல் தாக்கிய ஹவுதி விமானங்கள்


ஜேர்மன் போர் கப்பல் தாக்கிய ஹவுதி விமானங்கள்

செங்கடல் பாதுகாப்பில் ஈடுபட்ட ஜெர்மன் போர் கப்பலை
தாக்கிய ஹவுதி விமானங்கள் .

ஜெர்மன் கப்பல்கள் தாக்க படலாம் என்பதால்
பரபரப்பு.

வீடியோ

STF உடன் இடம்பெற்ற மோதலில் இராணுவ வீரர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

STF உடன் இடம்பெற்ற மோதலில் இராணுவ வீரர் உயிரிழப்பு

STF உடன் இடம்பெற்ற மோதலில் இராணுவ வீரர் உயிரிழப்பு

மஹாபாகே பகுதியில் இறைச்சிக் கடை உரிமையாளரின் கொலை மற்றும் பல குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த முன்னாள் இராணுவ வீரர் சூரியவெவ பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி காலை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ஜா-எல வடக்கு படகம பகுதியைச் சேர்ந்த இறைச்சிக் கடை உரிமையாளரான 42 வயதான டொன் சுஜித் என்ற உக்குவா என்பவர் உயிரிழந்தார்.

STF உடன் இடம்பெற்ற மோதலில் இராணுவ வீரர் உயிரிழப்பு

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த நபர், இது தொடர்பான கொலைக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுநராக செயற்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட உக்குவா வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ‘வெல்லே சாரங்கா’ என்ற குற்றவாளியின் சகோதரியின் கணவர் என்பது பின்னர் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் பேரணியில்நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம்
Posted in இலங்கை செய்திகள்

மாணவர்களின் பேரணியில்நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம்

மாணவர்களின் பேரணியில்நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று பிற்பகல் முன்னெடுத்த ஆர்ப்பாட்ட பேரணியின் மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

உணவக வசதி, விடுதிகள், மஹபொல மற்றும் அடக்குமுறை சட்டங்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை சுட்டிக்காட்டி இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது

பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்
Posted in இலங்கை செய்திகள்

பேக்கரி அதிக உற்பத்திச் செலவு தொழிலுக்கு கடுமையான அடி

பேக்கரி அதிக உற்பத்திச் செலவு தொழிலுக்கு கடுமையான அடி

அதிக உற்பத்திச் செலவுகள் காரணமாக உள்ளூர் சந்தையில் கேக் பாண் மற்றும் பன்களின் விற்பனை சுமார் 50% ஆல் குறைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் (ACBOA) தெரிவித்துள்ளது.

மாஜரின் மற்றும் வெண்ணெய் விலை ரூ.1000 ஆக அதிகரித்துள்ளதுடன் ஒரு கிலோகிராமின் விலை முறையே 3,000 ஆகவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

பேக்கரி அதிக உற்பத்திச் செலவு தொழிலுக்கு கடுமையான அடி

“இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இன்னும் எங்களுக்கு வரவில்லை, மேலும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளை தலா 60 ரூபாய்க்கு வாங்க வேண்டும். இது பேக்கரி தொழிலுக்கு கடுமையான அடியாகும்” என்று சங்கத் தலைவர் கூறினார்.

எனவே எதிர்வரும் சிங்கள, இந்து புத்தாண்டுக்கு முன்னர் பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு தேவையான பொருட்களின் விலைகளை குறைத்து சலுகைகளை வழங்குமாறு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றது.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன் திடீர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன் திடீர் மரணம்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன் திடீர் மரணம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சாந்தன் மரணமடைந்துவிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வந்த போதும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

கோமா நிலைக்கு சென்ற சாந்தனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சாந்தன் மரணம் அடைந்தார்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு,

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன் திடீர் மரணம்

சாந்தன் இலங்கை தமிழர் என்பதால், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் தங்க வைக்கப்பட்டார்.

தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் எனக் கோரி வந்தார் சாந்தன். சாந்தனை இலங்கை அனுப்பி வைக்க மத்திய அரசும் அனுமதி வழங்கியது.

எனினும், சாந்தனுக்கு கடந்த ஜனவரி மாதம் 24-ம் திகதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்