இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் தாக்க பறந்த இஸ்ரேல் விமானம் எரிந்தது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் தாக்க பறந்த இஸ்ரேல் விமானம் எரிந்தது


இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் தாக்க பறந்த இஸ்ரேல் விமானம் எரிந்தது

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் தாக்க பறந்த இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்த பட்டதால்எரிந்தது ,இஸ்ரேல் பாலஸ்தீன போர் உக்கிரம்

video

பிரதமரின் விமானத்தால் மாத்தறையில் பலத்த சேதம்
Posted in இலங்கை செய்திகள்

பிரதமரின் விமானத்தால் மாத்தறையில் பலத்த சேதம்

பிரதமரின் விமானத்தால் மாத்தறையில் பலத்த சேதம்

முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெலின் இறுதிச் சடங்கிற்கு வந்த பிரதமரின் விமானம் மாத்தறை கோட்டை மைதானத்தில் தரையிறங்க முட்பட்ட போது ஏற்பட்ட பிழையினால் அப்பகுதியிலிருந்த விடுதியின் கூரை மற்றும் உணவு பானங்கள் அனைத்தும் பலத்த சேதமடைந்துள்ளன.

குறித்த விமானம் தரையிறங்கும் போது வீசிய பலத்த காற்றினால் இந்த நிலை ஏற்பட்டதாக மாத்தறை விடுதியின் முகாமையாளர் தெரிவித்தார்.

சம்பவம் நடந்தபோது, ​​உணவு மற்றும் பானங்கள் பெற்றுக் கொண்டிருந்த உயரடுக்கு பாதுகாப்புப் பணியாளர்கள், உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் மீது மணல், தூசி, குப்பைகள் விழுந்து பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.

மேலும், மாத்தறை விடுதியின் புஃபே சாப்பாட்டு மேசையில் இருந்த அனைத்து உணவுகளும் நாசமாகிவிட்டன

பிரதமரின் விமானத்தால் மாத்தறையில் பலத்த சேதம்

விமானம் சரியாக தரையிறங்காததற்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதையடுத்து, சிரமத்திற்கு உள்ளான வெளிநாட்டவர்கள் மற்றும் பிறருக்கு ஆர்டர் செய்த உணவுக்கு பதிலாக வேறு உணவை உடனடியாக தயாரிக்க மாத்தறை விடுதியின் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

இதேவேளை, குறித்த அனர்த்தத்தில் மரத்தின் கிளை ஒன்றும் சாய்ந்து விழுந்தது.

இறுதிச் சடங்குகள் முடிந்து, முக்கியஸ்தர்கள் வரவிருந்ததால், குறித்த இடத்தை மிக விரைவாக சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

எனினும், பிரதமர் தினேஷ் குணவர்தன விமானத்தில் இருந்து பத்திரமாக இறங்கி பின், இறுதிச் சடங்கிற்கு அழைத்து வரப்பட்டார்.

எவ்வாறாயினும், இந்த சம்பவத்தினால் மாத்தறை விடுதிக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஆராய்வதற்காக மாத்தறை தலைமையக பொலிஸ் பரிசோதகர் ரொஷான் ஹெட்டியாராச்சி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவும் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வந்தது ரஷ்ய போர்க்கப்பல்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வந்தது ரஷ்ய போர்க்கப்பல்

இலங்கை வந்தது ரஷ்ய போர்க்கப்பல்

ரஷ்ய கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பல் ஒன்று 529 பேருடன் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இரண்டு நாட்டு கடற்படைக்கும் இடையிலான அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் சில முக்கிய வேலைத்திட்டங்களில் அவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

குறித்த கப்பல் தமது உத்தியோகப்பூர்வ விஜயத்தை நிறைவுசெய்துவிட்டு நாளை வெளியேறவுள்ளது.

ஹவுதி அடியில் மத்திய கிழக்கில் இருந்து தப்பி ஓடும் அமெரிக்காவின் 4000 ஆமி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவு விழா இன்று

இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவு விழா இன்று

இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவு விழா இன்று (02) கொண்டாடப்படுகிறது.

ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் பாதுகாவலர்களாக நாட்டிற்கு ஆற்றிய சேவையை குறிக்கும் வகையில் இலங்கை விமானப்படை 73வது ஆண்டு நிறைவு விழாவை பெருமையுடன் கொண்டாடுகிறது.

சம்பள உயர்வு சிக்கிய வாங்கி அதிகாரிகள்
Posted in இலங்கை செய்திகள்

சம்பள உயர்வு சிக்கிய வாங்கி அதிகாரிகள்

சம்பள உயர்வு சிக்கிய வாங்கி அதிகாரிகள்

சம்பள உயர்வு சிக்கிய வாங்கி அதிகாரிகள் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தமை குறித்து விளக்கம் கோருவதற்காக மத்திய வங்கி அழைப்பு

சம்பளதின் உயர்வு சிக்கிய வங்கி அதிகாரிகள் அதிகாரிகளை எதிர்வரும் 5ஆம் திகதி மு.ப 10.30 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைக்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (01)

நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.

வங்கி அதிகாரிகளுக்கு விசாரணை

அத்துடன், எதிர்வரும் 5, 6, 7ஆம் திகதிகளில் பாராளுமன்றம் கூடவிருப்பதால், அத்தினங்களுக்கான அலுவல்கள் பற்றியும் இங்கு தீர்மானம் எடுக்கப்பட்டது. எதிர்வரும் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பொது விடுமுறை என்பதால் அன்றைய தினம் பாராளுமன்றம் கூடாது.

இதற்கு அமைய மார்ச் 5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணிக்குப் பாராளுமன்றம் கூடவிருப்பதுடன், மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரை கடந்த 20 ஆம் திகதி இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட

பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள் சட்டமூலம், நம்பிக்கைப்பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்தச்) சட்டமூலம், ஈட்டுச்சட்டம் (திருத்தச்) சட்டமூலம், நிதி குத்தகைக்குவிடுதல் (திருத்தச்) சட்டமூலம்,

உள்நாட்டு நம்பிக்கைப் பொறுப்புத் (திருத்தச்) சட்டமூலம், கம்பனிகள் (திருத்தச்) சட்டமூலம், ஆவணங்கள் பதிவுக் கட்டளைச் சட்டம் (திருத்தச்) சட்டமூலம் என்பன இரண்டாவது தினமாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அடுத்த நாளுக்கு ஒத்திவைக்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து பி.ப 4.30 மணி தொடக்கம் பி.ப 5.30 மணி வரை அரசாங்க தரப்பினால் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை மீதான விவாதத்துக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சம்பள அதிகரிப்பு மத்திய வங்கியின் அதிகாரிகள் அழைப்பு

மார்ச் 6 ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மு.ப 10 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைகளுக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மு.ப 10.30 மணிக்கு அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் 2024.02.03 ஆம் திகதிய 2369/58 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்

காலாவதியானதைத் தொடர்ந்து ஜனாதிபதியினால் வெளியிடப்படவுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தலின் கீழான கட்டளை அன்றையதினம் விவாதம் இன்றி அங்கீகரிக்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை முன்னையதினம் ஒத்திவைக்கப்பட்ட பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட

கொடுக்கல்வாங்கல்கள் சட்டமூலம், நம்பிக்கைப்பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்தச்) சட்டமூலம், ஈட்டுச்சட்டம் (திருத்தச்) சட்டமூலம், நிதி

குத்தகைக்குவிடுதல் (திருத்தச்) சட்டமூலம், உள்நாட்டு நம்பிக்கைப் பொறுப்புத் (திருத்தச்) சட்டமூலம், கம்பனிகள் (திருத்தச்) சட்டமூலம், ஆவணங்கள் பதிவுக் கட்டளைச் சட்டம் (திருத்தச்) சட்டமூலம் மற்றும்

சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம், சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை (திருத்த) சட்டமூலம் ஆகியன விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளன.

கடற்றொழில் அமைச்சின் கீழுள்ள வரையறுக்கப்பட்ட சீ நோர் நிறுவனம், இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை

தேசிய நீரியில் வாழ் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை ஆகிய நிறுவனங்களின் மூன்று வருடாந்த அறிக்கைகள் தொடர்பான முன்மொழிவுகள் விவாதம் இன்றி அங்கீகரிக்கப்படவுள்ளன.

இதன் பின்னர் பி.ப 5 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

மார்ச் 7 ஆம் திகதி வியாழக்கிழமை, மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை வன

விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதம் தொடர்பில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இணைந்து கொண்டுவரும் சபை ஒத்திவைப்பு விவாதத்துக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் புதிய கூட்டணி
Posted in இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் புதிய கூட்டணி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் புதிய கூட்டணி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான புதிய கூட்டணியை அடுத்த வாரம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று (01) இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன ஐக்கிய முன்னணியின் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் அதற்கான அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் துஷ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார்

நாற்று நடுதலுக்காக பரசூட் முறைமை அமைச்சர் கோரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

நாற்று நடுதலுக்காக பரசூட் முறைமை அமைச்சர் கோரிக்கை

நாற்று நடுதலுக்காக பரசூட் முறைமை அமைச்சர் கோரிக்கை

அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் உயர் தரத்திலான தேயிலை உரம் சந்தை விலையை விட குறைவாக தேயிலை தொழில்துறையினருக்கு வழங்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) 37ஆவது ஆசிய பசிபிக் மாநாட்டுக்கு இணையாக “Agri tech-24 Agricultural Technology Vision” கண்காட்சி நாளை (02) ஹம்பாந்தோட்டை விவசாய தொழில்நுட்ப பூங்காவில் நடைபெறும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இந்த நாட்களில் நாடு முழுவதும் வெப்பமான காலநிலை நிலவுகிறது. இதனால் நீர் ஊற்றுகள் இல்லாமல் போகிறது. இந்த நிலைமையை கருத்தில் கொண்டு ஒரே நாளில் முழு வயலிலும் நெற்பயிர்ச்செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய சமூகத்திடம் கேட்டுகொள்கிறோம்.

மேலும், விவசாயத்துறையில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறோம். நாற்று நடுதலுக்காக “பரசூட்” முறைமையை பயன்படுத்த வேண்டும். அது குறித்த பொறுப்பு விவசாய துறையினரை சார்ந்துள்ளது. வயல் உழுவதற்காக, “வட்டு கலப்பை” மற்றும் “மில் போட் கலப்பை” ஆகிவற்றை பயன்படுத்துமாறு கோருகிறோம். தற்போது வெற்றிகரமாக விவசாயம் செய்து வரும் விவசாயிகள் தங்கள் அறுவடை இலக்குகளை அடைந்துகொள்ள மேற்படி முறைமைகளை பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

நாற்று நடுதலுக்காக பரசூட் முறைமை அமைச்சர் கோரிக்கை

மேலும், கிடைக்கும் நீரின் அளவு குறைந்துள்ளதால், மேலதிக பயிர் உற்பத்தி குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சோளம், பயறு போன்ற தானிய விளைச்சலில் ஈடுபடுபவர்களுக்கு உதவ தயாராக உள்ளோம்.

தேயிலைக்கு பயன்படுத்தப்படும் T-200, T-750, U-709, U 834, T 65 உள்ளிட்ட உரங்களின் விலை கடந்த காலங்களில் பெருமளவில் அதிகரித்திருந்தது. ஆனால், அந்த விலையை எம்மால் ஓரளவு குறைக்க முடிந்தது. தற்போது மேலும் விலையை குறைக்க எதிர்பார்க்கிறோம். எனவே, அரசாங்கத்திற்கு சொந்தமான கொமர்ஷல் , சிலோன் உரத் தொழிற்சாலைகளில் மேற்படி உர வகைகளை உற்பத்திச் செய்ய எதிர்பார்த்திருக்கிறோம்.

அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உரத் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் உயர்தர தேயிலை உரத்தை தேயிலை தொழில்துறையினருக்கு சந்தை விலையை விடவும் குறைவாக வழங்குவதே எமது நோக்கமாகும். அதன்படி குறைந்தபட்சம் 2000 ரூபாய் என்ற குறைந்த விலையில் இந்த உரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும். அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கமைய மானிய விலையில் உரத்தை வழங்கும்போது தேயிலை உற்பத்தியை மேம்படுத்த முடியுமென கருதுகிறேன். மேலும்,தேயிலை தொழில்துறையிலும் புதிய தொழில்நுட்பத்தை புகுத்த எதிர்பார்க்கிறோம்.

மேலும், அதிக பிரதிபலன்களை பெறுவதற்கான 59 திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 55 திட்டங்கள் மிகவும் வெற்றிகரமாக செயற்படுத்தப்படுகிறது. ஒரு ஏக்கரில் மாதாந்தம் 1350 கிலோ தேயிலை கிடைக்கிறது.குறித்த திட்டத்திற்காக இவ்வருடத்திலும் 1000 மில்லியன் ரூபாவை செலவிட எதிர்பார்க்கிறோம்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தூரநோக்கிலேயே விவசாயத்தை மேம்படுத்துவதற்கான இவ்வாறான திட்டங்கள் சாத்தியமாக செயற்படுத்தப்படுகின்றன. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு விவசாய அமைச்சுடன் இணைக்கப்படாவிட்டால் இந்த வேலைத்திட்டங்களை செய்திருக்க முடியாது. எனவே சரியான தீர்மானங்களை மேற்கொண்டமைக்காக ஜனாதிபதிக்கு நாம் நன்றி கூற வேண்டும்.

உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) 37ஆவது ஆசிய பசிபிக் மாநாட்டுக்கு இணையாக “Agri tech-24 Agricultural Technology Vision” விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கண்காணிப்பின் கீழ் கண்காட்சி நாளை (02) ஹம்பாந்தோட்டை விவசாய தொழில்நுட்ப பூங்காவில் ஆரம்பமாகவுள்ளதோடு, மார்ச் 02, 03, 04, 05 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இஸ்ரேலுக்குள் தாக்குதலை நடத்திய விமானங்கள் அலறும் இஸ்ரேல்
Posted in உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் தாக்குதலை நடத்திய விமானங்கள் அலறும் இஸ்ரேல்


இஸ்ரேலுக்குள் தாக்குதலை நடத்திய விமானங்கள் அலறும் இஸ்ரேல்

இஸ்ரேலுக்குள் தாக்குதலை நடத்திய ஹிஸ்புல்லா
விமானங்கள் ,ஹிஸ்புல்லா தொடர் தாக்குதலினால் அலறும் இஸ்ரேல்

video

மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்
Posted in இலங்கை செய்திகள்

மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்

மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்

மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்குமாறு கோரி மகாநாயக்க தேரர்களால் தயாரிக்கப்பட்ட மகஜர் ஒன்று மியன்மார் மகாநாயக்க தேரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த மகஜருக்கு அமைய, மியன்மார் மகாநாயக்க தேரரின் ஊடாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண மியன்மார் அரசாங்கம் தலையிடும் என எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கைவிடப்பட்ட வீடு ஒன்றுக்கு அருகில் பெண் சடலமாக மீட்பு

கைவிடப்பட்ட வீடு ஒன்றுக்கு அருகில் பெண் சடலமாக மீட்பு

கைவிடப்பட்ட வீடு ஒன்றுக்கு அருகில் இருந்து பெண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.

கட்டுநாயக்க வல்பொல பிரதேசத்தில் கைவிடப்பட்ட பாழடைந்த வீடொன்றிற்கு அருகில் நேற்று (29) காலை குறித்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கடியல தெமங்ஹந்திய பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கணவரின் தாய், தந்தை மற்றும் மகளுடன் வசித்து வந்த இவர் கடந்த 25ஆம் திகதி வல்பொல பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் கோர விபத்து பேரூந்து மோட்டார் சைக்கிள் மோதல்
Posted in இலங்கை செய்திகள்

பேருந்து மோதி பாடசாலை மாணவன் பலி

பேருந்து மோதி பாடசாலை மாணவன் பலி

யாழ்.சாவகச்சோி – ஐயாகடை சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இ.போ.ச பேருந்து மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த மாணவன் சாவக்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளார்.

18 வயதுடைய பரணிதரன் என்ற உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவனே உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடா்பாக சாவகச்சோி பொலிஸாா் மேற்கொண்டுள்ளனா்

நிறப்பூச்சு தொழிற்சாலையில் தீ விபத்து
Posted in இலங்கை செய்திகள்

நிறப்பூச்சு தொழிற்சாலையில் தீ விபத்து

நிறப்பூச்சு தொழிற்சாலையில் தீ விபத்து

பாணந்துறை சமகி மாவத்தை பகுதியில் நிறப்பூச்சு தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

பாணந்துறை வடக்கு, சமகி மாவத்தை பகுதியில் அமைந்துள்ள நிறப்பூச்சு தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று (29) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மொரட்டுவை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் தீயை அணைத்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயினால் ஏற்பட்ட சேதம் இதுவரை மதிப்பிடப்படவில்லை என்பதுடன், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது

வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது

காத்தான்குடியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹசீமின் சகோதரியின் கணவர் உட்பட 30 பேரே சந்தேகத்தின் பேரில் இன்று (01) அதிகாலை கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றில் சம்பவ தினமான நேற்று (29) இரவு சட்டவிரோதமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி

வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது

எனப்படும் சஹ்ரான் ஹசீமின் சாகோதரியின் கணவர் மற்றும் காத்தான்குடியில் 2017-3-10 திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த சஹ்ரானின்

ழுவைச் சேர்ந்த 3 பேர் உட்பட 30 பேர் ஒன்று கூடிய நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் சஹ்ரானின் கொள்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஒன்று கூடினார்களா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேசிய புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிசார்

விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதுடன் விசாரணையின் பின்னர் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தகப் பைகளின் எடையை குறைக்க நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

புத்தகப் பைகளின் எடையை குறைக்க நடவடிக்கை

புத்தகப் பைகளின் எடையை குறைக்க நடவடிக்கை

மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட “பயிற்சி புத்தகம்” தவிர மற்ற பாடப்புத்தகங்களை பாடசாலைக்கு கொண்டு வருவதை குறைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி அதிபரின் நேரடிக் கண்காணிப்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கல்விச் செயலாளர் வசந்தா பெரேரா வழிகாட்டுதல்கள் சிலவற்றை வௌியிட்டுள்ளார்.

புத்தகப் பைகளின் எடையை குறைக்க நடவடிக்கை

பாடசாலை புத்தகப் பையின் எடை அதிகரிப்பினால் பாடசாலை மாணவர்களுக்கு முதுகுத்தண்டு பாதிப்புகள் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அதன் ஒரு நடவடிக்கையாக தெரிவு செய்யப்பட்ட பாடப்புத்தகங்களை தொகுதிகளாக அச்சிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியாவில் சாலை விபத்தில் 15 பேர் பலி
Posted in உலக செய்திகள்

இந்தியாவில் சாலை விபத்தில் 15 பேர் பலி

இந்தியாவில் சாலை விபத்தில் 15 பேர் பலி

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் வியாழன் அன்று அவர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் ஐந்து பெண்கள் உட்பட குறைந்தது 15 பேர் இறந்தனர் மற்றும் சுமார் 20 பேர் காயமடைந்தனர்.

மத்தியப் பிரதேச மாநிலம், மாண்ட்லா மாவட்டத்தில் அமைந்துள்ள பிச்சியா பகுதியில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது என போலீசார் தெரிவித்தனர்.

வீடியோ

பிரிட்டனில் Sainsbury s 74 1500 பேர் வேலை இழப்பு
Posted in உக்ரைன்

பிரிட்டனில் Sainsbury s 74 1500 பேர் வேலை இழப்பு

பிரிட்டனில் Sainsbury s 74 1500 பேர் வேலை இழப்பு

பிரிட்டனில் Sainsbury s பல்பொருள் அங்காடி கடையானது 74 அடித்து மூடப்படவுள்ளது ,இதனால் 1500 பேர் வேலை இழப்பு ஏற்படுகிறது .

Sainsbury s கடையானது பிரிட்டனில் நிறுவனமாக உள்ளது .

ஆண்டு ஒன்றுக்கு ஒரு பில்லியன் பவுண்டுகளை படுத்த செலவுகளை குறைக்க இந்த கடைகள் அடித்து மூடப்படவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது .

இந்த அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சியில் ஊழியர்கள்

வீடியோ

செங்கடலில் எதிரி கப்பல்களை தாக்கிய ஏமன் ஹவுதி போர் படைகள் |அலறும் செங்கடல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

செங்கடலில் எதிரி கப்பல்களை தாக்கிய ஏமன் ஹவுதி போர் படைகள் |அலறும் செங்கடல்


செங்கடலில் எதிரி கப்பல்களை தாக்கிய ஏமன் ஹவுதி போர் படைகள் |அலறும் செங்கடல்

செங்கடலில் எதிரி கப்பல்களை துரத்தி தாக்கிய ஏமன் ஹவுதி போர் படைகள் ,
ஹவுதிகள் இடைவிடாத தாக்குதலினால் அலறும் செங்கடல் .


முடங்கிய கப்பல் போக்குவரத்து .

வீடியோ

பாரதமே இவர்களையாவது பறக்கவிடு
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

பாரதமே இவர்களையாவது பறக்கவிடு

பாரதமே இவர்களையாவது பறக்கவிடு

பாரதமே!
இருப்பவர்களையாவது
இறக்கவிடாமல் பறக்கவிடு!
விழிமேல் விழிவைத்து
வேண்டாத நேர்த்தி வைத்து
வழியெங்கும் காத்திருந்த
வயதான தாய்மைக்கு
பழிதீர்த்த பாரதமே
பாரினில் உன்செயல் பாதகமே!

சத்துமா வாங்கிவைத்து
சாந்தன் மகனுக்கொரு
முத்தம் கொடுக்கும்வரை
முகம்காணும் மகிழ்வுவர
சுத்துமாத்து செய்து எப்படியே
செத்துப்போக விட்டுட்டியே!

இளமை கருக கருக
இளகாத உன்குணம்
வழமைக்கு மாறுமென்று
வாசல்வழி பார்த்திருக்க
தனிமைக்கும் முதுமைக்கும்
தண்டனையை கொடுத்திட்டியே!

தப்புச் செய்யாதவரையும்
தண்டனையால் வதைத்து
எப்படித்தான் மனம்வருகுது
எங்கள் வலியில் விளையாட
இப்படித்தான் இனியும் நடக்கும்
இருப்பவர்களையாவது பறக்கவிடு!

-பிறேமா(எழில்)-

பாலஸ்தீன ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் பரசூட் படை களத்தில் இருந்து தப்பி ஓட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

பாலஸ்தீன ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் பரசூட் படை களத்தில் இருந்து தப்பி ஓட்டம்


பாலஸ்தீன ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் பரசூட் படை களத்தில் இருந்து தப்பி ஓட்டம்

பாலஸ்தீனம் ஹமாஸ் போர் படைகள் தாக்குதல் உச்சம் ,
இஸ்ரேல் பரசூட் படை களத்தில் இருந்து தப்பி ஓட்டம் .


இஸ்ரேல் பாலஸ்தீன போர் ஆரம்பிக்க பட்ட மூன்று மாத்தில் இரண்டாவது படை விலகல்

வீடியோ

வடக்கின் காணிகள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க ரணில் இணக்கம் -சுமந்திரன்
Posted in இலங்கை செய்திகள்

சுமந்திரனினுக்கு நெத்தியடி வழங்கிய உயர் நீதிமன்றம்

சுமந்திரனினுக்கு நெத்தியடி வழங்கிய உயர் நீதிமன்றம்

நிகழ்நிலை காப்பு சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விதம் சட்டத்திற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி

சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவை விசாரணையின்றி நிராகரிக்க உயர் நீதிமன்றம் இன்று (29) தீர்மானித்துள்ளது.

பிரியந்த ஜயவர்தன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயத்தால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்கள் அதில் உள்ளடக்கப்படாமை காரணத்தினால் குறித்த சட்டமூலம், சட்டப்பூர்வமாக நிறைவேற்றப்படவில்லை என தீர்ப்பளிக்குமாறு கோரி எம்.ஏ.சுமந்திரன் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

வீடியோ