வேலைவாய்ப்பு முகவர் நிலையம் முற்றுகை
Posted in இலங்கை செய்திகள்

வேலைவாய்ப்பு முகவர் நிலையம் முற்றுகை

வேலைவாய்ப்பு முகவர் நிலையம் முற்றுகை

வேலைவாய்ப்பு முகவர் நிலையம் முற்றுகை , குருநாகலில் சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றை நடாத்திச் சென்ற உரிமையாளர் ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் இன்று (31) கைது செய்துள்ளது.

சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்

குருநாகல் சூரதிஸ்ஸ மாவத்தையில் MMP என்ற பெயரில் இந்த சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் இயங்கி வந்துள்ளது.

இங்கு, சவுதி அரேபியா, ஓமன், குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆட்சேர்ப்பு நடப்பது தெரியவந்துள்ளது.

அந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 110 கடவுச்சீட்டுகள், வேலை வாய்ப்பு விண்ணப்பங்கள் மற்றும் பல ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இலங்கையில் இவ்வாறான சட்டவிரோத முகவர்களிடம் சிக்கி நூற்று கணக்கான மக்கள் வெளிநாடுகளில் சிக்கி தவித்து வருகின்றனர் .

அவ்வாறு சிலர் வீடு வேலை செய்தவர்களினால் படுகொலை செய்ய பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

முட்டை கண்ணு பார்வை
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

முட்டை கண்ணு பார்வை

முட்டை கண்ணு பார்வை

முட்டை கண்னு பார்வையாலே
முத்தம் தந்து போறவளே
மூக் குத்தி வெட்குதடி
முத்தம் இங்கே சொக்குதடி

கட்டியணைக்கும் போதிலே
கரும் கூந்தல் விலகுதடி
வெட்கம் இல்லா தழுவ
வென் இதழ் தீண்டுதடி

கன்னம் இரண்டை வருடவே – தங்க
கழுத்து தூண்டுதடி
வண்ண நிலா வாடவே
வாலிபம் அழைக்குதடி

சொல்லி சொல்லி ஆறவே
சொந்தம் உன்னை தேடுதே
பந்தம் உன்னில் படரவே
பாயும் இங்கே காயுதே

நிலவே என்ன தயக்கம்
நீயும் வந்திடு
நீளம் நாங்கள் கடக்கவே
நிகழ்வுகள் செய்திடு !

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 31-05-2024

படம் ஒன்றை பார்த்த பொழுது வடித்தது.

facebook கவிதை பக்கம் இதில் அழுத்துங்க

எரியும் எண்ணெய் வயல்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

எரியும் எண்ணெய் வயல்கள்

எரியும் எண்ணெய் வயல்கள்


எரியும் எண்ணெய் வயல்கள் ரஸ்யாவுக்கு பலம்மில்லியன் இளப்பபு என தெரிவிப்பு .

உக்ரைன் அரச இராணுவத்தினர் மற்றும் கூட்டு படைகள் இணைந்து ரஷ்யா எண்ணெய் வயல்களை தாக்கின .

இந்த தாக்குதலில் ரஷ்ய எண்ணெய் வயல்கள் பற்றி எரிவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

எதிரி நாடக விளங்கும் உக்ரைன்

எதிரி நாடக விளங்கும் உக்ரைன் நாட்டின் மிக முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா இராணுவம், ஏவுகணை மற்றும் வெடிகுண்டு விமானம் வழியாக தாக்குதல் நடத்தி வருகிறது .

அவ்விதமான தாக்குதலில் பாதிப்படைந்த, உக்ரைன் முக்கியாய் தளங்கள் செயல் இழந்து காணப்படுகின்றன .

அதற்கு பதிலடியாகவே தற்போது உக்ரைன் திருப்பி தாக்குதல் பதிலடி நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது .

சற்றும் எதிர்பாராத ஆழ ஊடுருவி நடத்த படும் தாக்குதலினால், ரஷ்ய உள்ளக கட்டமைப்பு பாதிக்க பாடலாம் என்கின்ற நிலை காணப்படுகிறது .

இவ்விதம் தொடர்ந்து உக்ரைன் தாக்குதல்கள் நீடித்து சென்றால், ரஷ்யா மிக கொடூர தக்குதல்களை ,உக்ரைன் முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து, நடத்த கூடும் என எதிர் பார்க்க படுவதால் பதட்டம் நிலவுகிறது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
அமெரிக்காவில் பறவை காய்ச்சல்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் பறவை காய்ச்சல்

அமெரிக்காவில் பறவை காய்ச்சல்

அமெரிக்காவில் பறவை காய்ச்சல் ,அமெரிக்கா நாட்டின் பாற் பண்ணையில் பணி புரிந்தவர் ஒருவர் பறவை காய்ச்சல் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

பரவி வரும் பறவை காய்ச்சல்

அமெரிக்கா நாட்டில் பரவி வரும் பறவை காய்ச்சல் தொற்று நோயினால் மூவர் பாதிக்க பட்டுள்ளதாக அமெரிக்க நாட்டு சுகாதார அமைச்சின் அதிகாரிகளினால் தெரிவிக்க பட்டுள்ளது .


இந்த ஆண்டில் நடாத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி இதுவரை மூவர் இவ்வாறான பறவை காய்ச்சல் தொற்று நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக அமெரிக்கா நாட்டு சுகாதார அதிகாரிகளினால் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்கா நாட்டின் மிச்சிகன் நகரில் இரண்டாவது மனிதனுக்கு பறவைக் காய்ச்சல் தொற்று நோய்க்கான தொற்று அறிகுறிகள் இருப்பது அந்த நாட்டு சுகாதார அதிகாரிகளினால் உறுதி செய்யப்பட்டுள்ளது,

பறவைக்காய்ச்சல் தொற்று


இந்த ஆண்டு பறவைக்காய்ச்சல் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்கா நாட்டில் மொத்த பறவைக்காய்ச்சல் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையை மூன்றாகக் கொண்டு வந்துள்ளது என்று அமெரிக்கா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வைரஸ் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த தடுப்பு மருந்துகள் பலனளித்த பட்சத்தில்

நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசத்தில் பறவைக் காய்ச்சல் தொற்று நோய்க்கான அறிகுறிகளில் இருந்து குணமடைந்து வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

  • நிலா தமிழ் –
Error: View 9293b2au4w may not exist
எரியும் இஸ்ரேல் இராணுவ முகாம்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

எரியும் இஸ்ரேல் இராணுவ முகாம்கள்


எரியும் இஸ்ரேல் இராணுவ முகாம்கள்.

எரியும் இஸ்ரேல் இராணுவ முகாம்கள் ஏவுகணைகள் அழிப்பு| டிரம்ப் குற்றவாளி என தீர்ப்பு|ரஸ்யாவை தாக்க ஏவுகனை வழங்கும் அமெரிக்கா.

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ட்ரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
Posted in உலக செய்திகள்

ட்ரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

ட்ரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

ட்ரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியூயார்க்கில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க குற்றவியல் விசாரணையில் வணிக பதிவுகளை பொய்யாக்கிய 34 குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

முன்னாள் அல்லது பதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் குற்றத்திற்காக தண்டிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
அவருக்கு ஜூலை 11 அன்று தண்டனை நிறைவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சட்ட வல்லுநர்கள் அபராதம் விதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு என்று கூறுகிறார்கள்.

இந்த தீர்ப்பை “அவமானம்” என்று கூறிய டிரம்ப், வழக்கை விசாரித்த நீதிபதி மெர்சனை தாக்கியதாகத்தெரிவிக்கப்படுகிறது.

ட்ரம்ப் எதிர்வரும் நவம்பர் தேர்தலில் ஜோ பிடனை தோற்கடித்து வெள்ளை மாளிகைக்கு திரும்ப வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வரும் நிலையில் இந்த தீர்ப்பு வந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

இந்த வழக்கின் மையத்தில்; இது தொடர்பாக ட்ரம்ப்புடனான பாலியல் ரீதியான என்கவுண்டர் என்று கூறப்படும் ஸ்டோர்மி டேனியல்ஸ் உட்பட 22 சாட்சிகளிடம் ஆறு வாரங்களாக நீதிமன்றம் விசாரணை நடத்தியது. 2016 தேர்தலுக்கு சற்று முன்னர் அவருடன் சர்ச்சையில் ஈடுபட்ட முன்னாள்

திரைப்பட நட்சத்திரத்திரமான டானியலை அமைதிப்படுத்துவதற்காக தனது முன்னாள் வழக்கறிஞர் மிஷல் ஹோஹனுக்கு கொடுத்த 130000 டொலர்

அமைதிப் பணத்தை மறைத்ததாக ட்ரம்ப் குற்றம் சாட்டப்பட்டார். 12 நீதிபதிகள் இரண்டு நாட்களாக விவாதித்து ஒருமனதாக தீர்ப்பு வழங்கினர் என்று கூறப்படுகின்றது.

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று(30) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகத்திற்கு முன்பாக A9 வீதியில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் படங்களையும் பதாகையும் தாங்கியவாறு சர்வதேச விசாரணை வேண்டும் என கோசங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சர்வதேச விசாரணை ஒன்றே தேவை
Posted in இலங்கை செய்திகள்

சர்வதேச விசாரணை ஒன்றே தேவை

சர்வதேச விசாரணை ஒன்றே தேவை

சர்வதேச விசாரணை ஒன்றே தேவை யுத்தம் முடிந்து சுமார் 15 வருடங்கள் கடக்கின்ற போதும் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற்றுத் தராத சிங்கள அரசு தமிழர்களுக்கு ஒரு சரியான நிரந்தர தீர்வை தருவார்கள் என்பதில் எவ்வித நம்பிக்கையும் இல்லை. எனவே

காணாமல் ஆக்கப்பட்டோர்

காணாமல் ஆக்கப்பட்டோர் விடையத்தில் எமக்கு சர்வதேச விசாரணை ஒன்றே தேவை.என போராட்டத்தில் ஈடுபட்ட மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில் நேற்று (30) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளை தேடி நாங்கள் 15 வருடங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அரசாங்கம் இதுவரை எமக்கு உரிய தீர்வை வழங்கவில்லை.

கோபத்தை ஏற்படுத்தும் வகையில்

தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் கோபத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. மேலும் களப்பு நீதிமன்றத்தின் ஊடாக தீர்வு வழங்கப்படும் என அரசு கூறுகிறது.

எமக்கு களப்பு நீதிமன்றத்தில் நம்பிக்கையே இல்லை. எமது ஒரே முடிவு சர்வதேச விசாரணையே எமக்கு தேவை.

வேறு எந்த தீர்விலும் எமக்கு நம்பிக்கை இல்லை. எனவே எமக்கு சர்வதேச விசாரணையே வேண்டும்.இந்த நாட்டின் ஜனாதிபதியே இப்பிரச்சினைக்கு காரணமாக இருந்தவர்.

தமிழர்களின் பிரச்சினை

தமிழர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி இன்று பல வருடங்கள் கடந்து விட்டது.

ஆனால் இதுவரை ஒரு வித அனுசரணையும் அவர் செய்யவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக அவர் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

மீண்டும் அவர் ஜனாதிபதியாக வந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பார் என்பதில் எமக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ரணில் விக்ரமசிங்க,சஜித் பிரேமதாச,அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் மீதும் எமக்கு நம்பிக்கை இல்லை.

இவர்கள் மூவரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் தொடர்பில் எதையும் செய்ய மாட்டார்கள். யுத்தம் முடிந்து சுமார் 15 வருடங்கள் கடக்கின்ற போதும்

தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை வழங்காத சிங்கள அரசு எங்களுக்கு ஒரு சரியான நிரந்தர தீர்வை தருவார்கள் என்பதில் எவ்வித நம்பிக்கையும் இல்லை என தெரிவித்தனர்.

மதுக்கடையில் இடம்பெற்ற கொலை
Posted in இலங்கை செய்திகள்

மதுக்கடையில் இடம்பெற்ற கொலை

மதுக்கடையில் இடம்பெற்ற கொலை

மதுக்கடையில் இடம்பெற்ற கொலை மதுக்கடையில் ஒருவர் இறந்து கிடந்த நிலையில் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

பிபில பொலிஸாருக்கு நேற்று (30) காலை கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் போகஹமடித்த – ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவராவார்.

உயிரிழந்தவர் மதுபானக்கடை ஒன்றை நடத்திவருவதாகவும், ஊழியர் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர், குறித்த ஊழியர் இரும்பு கம்பியால் தாக்கி கொலையை செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவினதும் அடிவருடியே விக்னேஸ்வரன்
Posted in இலங்கை செய்திகள்

ரணில் விக்கிரமசிங்கவினதும் அடிவருடியே விக்னேஸ்வரன்

ரணில் விக்கிரமசிங்கவினதும் அடிவருடியே விக்னேஸ்வரன்

இந்தியாவினதும் ரணில் விக்கிரமசிங்கவினதும் அடிவருடியே விக்னேஸ்வரன் எனவும் ஜனாதிபதி தேர்தலில் விரக்தியடைந்துள்ள தமிழ் மக்களை வாக்கு சாவடிக்கு இழுத்து செல்லவே பொது வேட்பாளர் நாடகம் நிகழ்த்தபடுவதாகவும் தேர்தல்கள் உரிய நேரத்தில் நடாத்தப்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள அக்கட்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

மோடிக்கு கையொப்பமிட்டு அனுப்பினார்

கடந்த காலத்தில் ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு அவர் முன்வந்து மோடிக்கு கையொப்பமிட்டு அனுப்பினார். 2016 ஆம் ஆண்டு ரணில் மைத்திரி கூட்டமைப்பு தயாரித்த ஒற்றையாட்சி வரைபினையும் அவர் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்.

இவ்வாறாக விக்னேஸ்வரனுக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்க்கும் இடையில் எந்தவித இடைவெளியும் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. இந்தியாவின் முகவராக இருக்கக்கூடிய ரணில் விக்கிரமசிங்கவை பலப்படுத்துகின்ற செயற்பாட்டிலேயே விக்னேஸ்வரன் தொடர்ந்து செயற்படுகின்றார்.

இன்று இந்திய மேற்குலக நாடுகளுக்கு ரணில் விக்கிரமசிங்வை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற சூழல் இருக்கின்றது. தமிழ் இனம் சார்ந்த

கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை மேற்கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க வடக்கிற்கு வருகை தருகின்ற பொழுது அவருக்கு செங்கம்பளம் விரித்து இவர்கள் வரவேற்பது கண்டிக்கத்தக்கது.

பாராளுமன்ற தேர்தல்

விக்னேஸ்வரன் பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதை பிற்போடுவதை வரவேற்றிருக்கின்றார். ஆனால் குறித்த தேர்தல்கள் உரிய காலத்தில் நடாத்தப்பட வேண்டும் என்பது தமிழ் தேசிய

மக்கள் முன்னணியினுடைய நிலைப்பாடாக காணப்படுகிறது. தேர்தல் பிற்போடப்படுவது ஜனநாயக படுகொலையையே நிகழ்த்தும்.

தமிழ் மக்கள் பேரவையில் பல தேசியகருத்தியல்களை உள்ளடக்கி உள்ளே நுழைந்தார் ஆனால் இந்திய நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அவர் செயற்பட்டார்.

உலகில் எங்கும் இல்லாத வகையில் ஒரு நீதியரசர் தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை உருவாக்கி அதன் பின்னர் கொள்கை பற்றி பேசலாம் என தெரிவித்தார்.

இது ஒரு உலக அதிசயம்

இது ஒரு உலக அதிசயம். இந்தியா காலால் இடுகின்ற கட்டளையை தலையால் நிறைவேற்றுகின்றவர் தான் விக்னேஸ்வரன்.

ஆகவே இந்தியாவை பிடி கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர் பொதுவேட்பாளர் விடயத்தில் இந்தியா இல்லை என கூறினாலும் ரணில்

விக்கிரமசிங்கவை வெல்ல வைக்க வேண்டுமானால் தமிழ் மக்கள் வாக்கு வசாவடிகளுக்கு செல்ல வேண்டும் தமிழ் மக்களுக்கு அந்த மனநிலை இல்லை.

ஆகவே வாக்கு சாவடிகளுக்கு சென்று மக்கள் வாக்களிக்கும் மனநிலையை உருவாக்கவே இந்த பொதுவேட்பாளர் நாடகம் அரங்கேறியுள்ளது.

இன்று கூட்டமைப்பினர் சொல்லும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்கும் நிலையில் தமிழ் மக்கள் இல்லை.

இவ்வாறு மக்கள் வெறுப்படைந்த நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதாக கூறியே விக்னேஸ்வரன் போன்றோர் செயற்படுகின்றனர்.

அவ்வாறு பொதுவேட்பாளர் யாரும் நிறுத்தபட்டால் கூட அவர் 72 மணித்தியாலத்திற்கு முதல் சொல்ல கூடும் எமது கோரிக்கைகளை சிங்கள வேட்பாளர்களில் ஒரு தரப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளனர் அவருக்கு வாக்களியுங்கள் என கூறி விலக கூடும்.

இல்லையெனில் இரண்டாவது விருப்பு வாக்கை சிங்கள வேட்பாளருக்கு வழங்க கூடும்.

இதன் காரணமாக எதிர் நிலையில் இருக்கூடிய மக்களின் மனநிலையை வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்லவே இந்த நாடகம் ஆடப்படுகன்றது என தெரிவித்தார்.

திருமண கோலத்தில் ஆசிரியையான இளம்பெண்
Posted in இலங்கை செய்திகள்

திருமண கோலத்தில் ஆசிரியையான இளம்பெண்

திருமண கோலத்தில் ஆசிரியையான இளம்பெண்

திருமண கோலத்தில் ஆசிரியையான இளம்பெண் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வின் போது இடம்பெற்ற சம்பவம் ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்தது.

இன்று தனது திருமண பந்தத்திற்கு தயாரான யுவதி ஒருவர், தனது திருமண ஆடை அலங்காரத்துடன் தனது ஆசிரிய நியமனத்தை பெற்றுக்கொள்வதற்காக நிகழ்விற்கு வருகை தந்திருந்தார்.

இவ்வாறு வருகை தந்தவர் அம்பலாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த திலினி என்ற யுவதி ஆவார்.

தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தலைமையில் ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (30) நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது

நீரின்றி தவித்தவர்களுக்கு உதவிய சட்ட ஆலோசர் பிரியன்
Posted in இலங்கை செய்திகள்

நீரின்றி தவித்தவர்களுக்கு உதவிய சட்ட ஆலோசர் பிரியன்

நீரின்றி தவித்தவர்களுக்கு உதவிய சட்ட ஆலோசர் பிரியன்


நீரின்றி தவித்தவர்களுக்கு உதவிய சட்ட ஆலோசர் பிரியன் ,நமக்காக போராடி காயமடைந்த நிலையில் ,காணப்படும் முன்னாள் போராளிகளின் கண்ணீரை தனது கரம், கொண்டு துடைத்து இருக்கிறார் சட்ட ஆலோசகர் பிரியன் அவர்கள் .

பிரிட்டனில் மிக பெரும் சட்ட ஆலோசகர் பிரியன்

பிரிட்டனில் மிக பெரும் சட்ட ஆலோசகராக விளங்கி வரும் பிரியன் அவர்கள் வழங்கிய இந்த உதவி என்பது பாராட்டுதலுக்கு உரியது .

ஓம் பராசக்தி அறக்கட்டளையின் ஊடாக அதன் ஸ்தாபகர் ,சட்ட ஆலோசகரும் மனித நேயவாதியும் ,மக்கள் நல திட்டத்தில் தன்னை அர்ப்பணித்திருக்கும் பிரியன் அவர்கள் வழங்கியுள்ளார் .

போராளி குடும்பத்தின் நீர் தேவை

முன்னாள் போராளி குடும்பத்தின் நீர் தேவைக்கு ,ஓம் பராசத்தி அறக்கட்டளையின் ஊடக ,ஒரு லட்சத்து பத்து ஆயிரம் ரூபா நிதி உதவி வழங்க .பட்டுள்ளது

அந்த நிதி உதவியின் ஊடாக ,பாதிக்க பட்டு வாழ்வாதாரத்தில் திணறி கொண்டிருந்த ,காயமடைந்த போராளி அவர்களுக்கு இந்த நன்கொடை உதவி திட்டம் வழங்க பட்டுள்ளது .

இவ்வேளை ஓம்பராசக்தி அறக்கட்டளை நிறுவத்தாருக்கு எமது நன்றிகள்

வீடியோ

வாய்க்காலுக்குள் கவிழ்ந்த வான்
Posted in இலங்கை செய்திகள்

வாய்க்காலுக்குள் கவிழ்ந்த வான்

வாய்க்காலுக்குள் தடம் புரண்ட வான்

வாய்க்காலுக்குள் கவிழ்ந்த வான் ,மூதூர் , பாலத்தோப்பூர் பகுதியிலுள்ள வாய்க்காலுக்குள் வேன் ஒன்று தடம் புரண்டு வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் வியாழக்கிழமை (30) அதிகாலை இடம்பெற்றுள்ளது .

இதன்போது வேன் சாரதி மாத்திரமே பயணித்துள்ளதுடன் அவர் எவ்வித காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.

மூதூரிலிருந்து தோப்பூருக்குச் சென்று திரும்பும் வழியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது .

வீதி விபத்துக்கள் அதிகம் இடம்பெற்று வருகிறது

மேலும் , இவ் விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

வாய்க்காலுக்குள் கவிழ்ந்த வான்

.இலங்கையில் இவ்விதமான வீதி விபத்துக்கள் அதிகம் இடம்பெற்று வருவதால் ,மக்கள் உயிர்பலி மற்றும் காயமடைந்து வரும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன .

வீதி விதிமுறையை முறையாக பின்பற்றாது

வாகன சாரதிகள் வீதி விதிமுறையை முறையாக பின்பற்றாது செல்கின்ற நிலையால் இவ்விதமான வீதி விபத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன ,

வேகத்தின் காரணமாக சாரதியின் கட்டுப்படி இழந்து வான் வாய்களுக்குள் பாய்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது குறிப்பிட தக்கது .

யாழ்ப்பாணத்தில் ஆசிரியருக்கு தடை
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஆசிரியருக்கு தடை

யாழ்ப்பாணத்தில் ஆசிரியருக்கு தடை

யாழ்ப்பாணத்தில் ஆசிரியருக்கு தடை ,யாழ்ப்பாணத்தில் 10 வயது மாணவிகளுடன் துர்நடத்தையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியருக்கு வடமாகாண கல்வி அமைச்சினால் பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

மானிப்பாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் , தரம் 05 இல் கல்வி கற்கும் மாணவிகளுடன் தவறாக நடந்து கொண்டதாக

ஆசிரியர் கைது

பாதிக்கபப்ட்ட மாணவி ஒருவரின் பெற்றோர்களால் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டிற்க்கமைய, ஆசிரியர் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார் .

குறித்த ஆசிரியர் தற்போது பிணையில் விடுவிக்கபட்டுள்ள நிலையில் மன்றில் வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

விசாரணை அறிக்கை

மேலும் , சம்பவம் தொடர்பில் திணைக்களம் ஊடான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் , விசாரணை அறிக்கை கல்வி

அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் , ஆசிரியருக்கு தனது பணியினை தொடர தடை விதிக்கப்பட்டு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் அதிகம் இடம்பற்று வருவதால் மக்கள் மத்தியில் ஒருவித சலனம் ஏற்பட்டுள்ளது

மாணவ்ர்களை ஆசிரியர்கள் இவ்விதம் நடத்தி கொள்வது போதை பொருள் காலாசாரார்த்தின் சீரழிவு என தெரிவிக்க படுகிறது .

பிள்ளைகளை துன்புறுத்திய தாய் கைது
Posted in இலங்கை செய்திகள்

பிள்ளைகளை துன்புறுத்திய தாய் கைது

பிள்ளைகளை துன்புறுத்திய தாய் கைது

பிள்ளைகளை துன்புறுத்திய தாய் கைது ,மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 11 வயது சிறுவனை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு கம்பால் அடித்து சித்திரவதை செய்ததுடன்

இரண்டரை வயது ஆண் குழந்தையை அடித்து துன்புறுத்திய 28 வயதுடைய தாய் ஒருவரை நேற்று (28) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பாதிக்கப்பட்ட இரு சிறுவர்களையும் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

தமிழரான குறித்த தாயார் திருமணம் முடித்த பின்னர் கணவரைவிட்டுவிட்டு அவருக்கு பிறந்த குழந்தையுடன் முஸ்லீம் மதத்திற்கு மதம்மாறி முஸ்லீம் நபர் ஒருவரை திருமணம் முடித்துள்ளார்.

சிங்களவர் ஒருவரை திருமணம் முடித்து

அதன்பின்னர் அவரை விட்டுவிட்டு புத்தளம் பகுதியிலுள்ள சிங்களவர் ஒருவரை திருமணம் முடித்து அவருக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை

இருக்கும் நிலையில், அவரையும் விட்டுவிட்டு இரு பிள்ளைகளுடன் மீண்டும் ஏறாவூர் சதாம் உசைன் கிராமத்தில் வந்து தங்கி வாழ்ந்து கொண்டுவருகின்றார்.

இந்த நிலையில், கடந்த ஏப்பிரல் மாதம் தனது 11 வயதுடைய மூத்த பிள்ளை புகைத்தலில் ஈடுபட்டார் என அந்த சிறுவனை பிடித்து மரம் ஒன்றில் தலைகீழக கட்டி தொங்க விட்டு கம்பால் தாக்கி சித்திரவதை செய்துள்ளார்.

அதேவேளை இரண்டாவது, இரண்டரை வயது மகனையும் அடித்து துன்புறுத்தி வருவதாக அந்த பிள்ளையின் தகப்பனான புத்தளத்தைச் சேர்ந்தவருக்கு

தெரியவந்ததையடுத்து அவர் உடனடியாக ஏறாவூருக்கு சென்று தாயாரிடம் தனது மகனை தருமாறு கேட்ட நிலையில், சிறுவனை தரமுடியாது என அவர் மறுத்துள்ளார்.

இதனையடுத்து குறித்த தந்தை, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து சம்பவதினமான நேற்று இரவு பொலிசார் குறித்த தாயாரின் கையடக்க தொலைபேசியை பரிசோதித்த போது, இரு சிறுவர்களை துன்புறுத்தும் போது எடுக்கப்பட்ட வீடியோக்களை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவரை கைது செய்தனர்.

பொலிசாரின் ஆரம்ப கட்டவிசாரணை

பின்னர் இரு பிள்ளைகளையும் மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பெண் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

பெண் ஒருவரின் சடலம் மீட்பு

பெண் ஒருவரின் சடலம் மீட்பு

பெண் ஒருவரின் சடலம் மீட்பு ,கொழும்பு பகுதியில் உள்ள கழிவு நீர் வடிகானிலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (29) பிற்பகல் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஸ்புர பகுதியில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில்

அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 45 முதல் 50 வயதிற்கு இடைப்பட்ட 4 அடி 09 அங்குல உயரமுடைய பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் பூக்கள் கொண்ட சிவப்பு நிற ஆடையை (கவுன்) அவர் அணிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இலங்கையில் நாள் தொடரும் இடம்பெற்று வரும் இவ்விதமான மர்ம படுகொலைகள் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது .

இந்த கொலைகளின் பைபுலத்தில் உள்ளவர்கள் யார் என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது .

சிகரெட் பாவனையால் 50பேர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

சிகரெட் பாவனையால் 50பேர் உயிரிழப்பு

சிகரெட் பாவனையால் 50பேர் உயிரிழப்பு

சிகரெட் பாவனையால் 50பேர் உயிரிழப்பு ,சிகரெட் பாவனையால் இந்நாட்டில் நாளாந்தம் 50 பேர் உயிரிழப்பதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 பேர் புகைப்பிடிப்பதால் உயிரிழப்பதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டுகிறது.

நாளை (31) அனுசரிக்கப்படும் உலக புகையிலை எதிர்ப்பு தினம் தொடர்பாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

உலக புகையிலை எதிர்ப்பு

புகையிலைத் தொழிலின் குறுக்கீட்டிலிருந்து நமது குழந்தைகளைப் பாதுகாப்பதே இந்த ஆண்டு உலக புகையிலை எதிர்ப்பு தினத்தின் தொனிப்பொருளாகும்.

தற்போது இலங்கையில் சிகரெட் பாவனை 9.1 வீதத்தால் குறைந்துள்ளதுடன் இளைஞர்கள் மத்தியில் சிகரெட் பாவனை வேகமாக குறைந்து வருவதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

புகையிலை நிறுவன அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டில் சிகரெட் உற்பத்தி 19 சதவீதம் குறைந்துள்ளது.

உலகில் சிகரெட் பாவனை குறைவடைந்து வரும் நாடுகளில் இலங்கையில் நல்ல போக்கு காணப்பட்டாலும் இன்னும் சுமார் 1.5 மில்லியன் மக்கள் சிகரெட் பாவனையில் ஈடுபடுவதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

பன்னாட்டு புகையிலை நிறுவனங்கள்

தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை சிகரெட் பயன்படுத்துவதற்கு பன்னாட்டு புகையிலை நிறுவனங்கள் பல தந்திரங்களை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இதேவேளை, பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச நோய் வைத்திய நிபுணர் சந்தன டி சில்வா தெரிவித்துள்ளார்.

கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி

கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி

கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி தாக்குதலை நடத்தி கொண்டிருக்கும் ஹமாஸ் தாக்குதலில், இஸ்ரேல் இராணுவம் பெரும் இழப்பை சந்தித்த வண்ணம் உள்ளது .

அவ்விதம் தெற்கு காசா ஜெபலியா பகுதியில் முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்ட, இஸ்ரேல் இராணுவத்தினரை உள்ளே நுழைய விட்டு ,கண்ணி வெடி தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

கண்ணிவெடி தாக்குதல்

ஹமாஸ் மக்கள் போராளிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவத்தின் ,மூன்று இராணுவ தளபதிகள் பலியாகியுள்ளனர் .

இவ்வாறு பலியான மூன்று இராணுவ தளபதிகளில் இருவர் 21 வயது மற்றும் 20 வயதி கொண்ட, இஸ்டாப் சார்யன்ட் தரத்திலான அதிகாரிகளே பலியாகியுள்ளதாக, இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .

தாக்குதல் படையணிகளுக்கு பலத்த இழப்பு

எட்டு மதங்களாக தொடரும் யுத்தத்தில் இஸ்ரேலிய இராணுவத்தின் முக்கிய முதன்மை தாக்குதல் படையணிகள் பலத்த இழப்பை சந்தித்து களத்தில் இருந்து அகற்ற பட்டுள்ளனர் .

அவ்வாறான நிலையில் தற்போது மீளவும் வலிந்து தாக்குதலை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் படைகள் உடைந்த வீடுகளுக்கு கால் வைத்து நடக்கும் பொழுது கண்ணிவெடிகளை புதைத்து வைத்து ,அதன் ஊடக பாரிய அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது ஹமாஸ் போராளிகள் படை .

திடீர் திடீரென ஹமாஸ் நடத்தும் கண்ணிவெடி தாக்குதலில் ,இஸ்ரேலிய படைகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுளதாக மேற்படி இராணுவ தளபதிகள் மூவர் பலியான விடயம் எடுத்து காட்டியுள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
காதலியின் நிர்வாணபடங்களை வெளியிட்ட காதலன்
Posted in இலங்கை செய்திகள்

காதலியின் நிர்வாணபடங்களை வெளியிட்ட காதலன்

காதலியின் நிர்வாணபடங்களை வெளியிட்ட காதலன்

காதலியின் நிர்வாணபடங்களை வெளியிட்ட காதலன் ,17 வயதுடைய பாடசாலை மாணவியின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில்

வெளியிட்ட குற்றச்சாட்டில் 18 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் மத்தேகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

நுகேகொட பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கைது செய்யப்பட்ட மாணவன்

கைது செய்யப்பட்ட மாணவன் நுகேகொட பிரதேசத்தில் உள்ள பிரத்தியேக வகுப்பொன்றிக்கு சென்று கொண்டிருந்த போது, ​​மத்தேகொட , குடமாதுவ

பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவருடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் .

இந் நிலையில் , குறித்த மாணவன் அடிக்கடி மருந்து வகைகளை உட்கொள்வதை அறிந்த மாணவி அது தொடர்பில் வினவிய போது மாணவனுக்கு தீராத நோய் ஒன்று ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது .

பின்னர் குறித்த மாணவி அவர்களின் காதல் உறவை முறித்துக்கொண்டு வேறொரு இளைஞனுடன் காதலை வளர்த்துக்கொண்டுள்ளார் .

இதனால் கோபமடைந்த மாணவன் , குறித்த இருவரும் காதல் உறவில் இருந்த போது , வீடியோ அழைப்புகள் மூலம் ஸ்கிரீன் ஷாட் செய்யப்பட்ட மாணவியின் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் .

மாணவியின் நண்பர்கள்

மாணவியின் நண்பர்கள் சிலர் இந்த புகைப்படங்களை பார்த்து சம்பந்தப்பட்ட மாணவிக்கு தெரியப்படுத்தியதையடுத்து, இது தொடர்பில் பொலிஸாரிடம்

செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் , கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக

விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

இஸ்ரேலை அடக்க பொருளாதார தடை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை அடக்க பொருளாதார தடை

இஸ்ரேலை அடக்க பொருளாதார தடை

இஸ்ரேலை அடக்க பொருளாதார தடை விதிக்க ஐக்கிய நாடுகள் சபை நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது .

அதன் அடிப்படையில் தற்போது இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் இணைந்து பொருளாதார தடையை விதிக்க ஏற்பாடுகள் முடுக்கிவிட பட்டுள்ளன .

இவ்விதமான நகர்வுகள் தற்போது ஆரம்பிக்க பட்டுள்ள நிலையில் ,இஸ்ரேல் மிக பெரும் நெருக்கடியில் சிக்க போவதாக ,இஸ்ரேல் நேச நாடுகளே வெளிப்படையாக தெரிவிக்க ஆரம்பித்துள்ளன .

எகிப்தின் எல்லையோரத்தில் இஸ்ரேல் இராணுவம்

எகிப்தின் எல்லையோரத்தில் இஸ்ரேல் இராணுவம் வலிந்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் ,அதனை தடுக்க பொருளாதார தடையை ஆயுதமாக எடுத்து செயல் பட ,தற்போது உலக நாடுகள் முனைப்பு காண்பித்து வருகின்றன

பாலஸ்தீன மக்களை நாடற்றவர்களாக விரட்டியடிக்கும் இஸ்ரேல்

பாலஸ்தீன மக்களை நாடற்றவர்களாக எகிப்திற்குல் விரட்டியடிக்கும் இனவாத நில அபகரிப்பு ,இனப்படுகொலை தாக்குதலை ,இஸ்ரேல் நடத்தி வருவதை கண்ணுற்ற சர்வதேச நாடுகள் ,இந்த பொருளாதார தடையை விதிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன .

அவ்விதம் பொருளாதார தடை இஸ்ரேலுக்கு விதிக்க பட்டால் , இஸ்ரேல் ரூவாண்டாவாக மாறும் என ,இஸ்ரேல் நாட்டின் மிக முக்கிய இராணுவ ஊடக ஆய்வாளர் ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார் .

Error: View 9293b2au4w may not exist