லெப்ரினன்ட் புகழினி 24ஆவது ஆண்டு நினைவு
Posted in இலங்கை செய்திகள் நிலா தமிழ்

லெப்ரினன்ட் புகழினி 24ஆவது ஆண்டு நினைவு

லெப்ரினன்ட் புகழினி 24 ஆவது ஆண்டு நினைவு

லெப்ரினன்ட் புகழினி 24ஆவது ஆண்டு நினைவு ,வீரவணக்கங்கள் பேணி(புகழினி)என்றும் உன் நினைவுகளுடன்
லெப்ரினன்ட் புகழினி

யார் இந்த புகழினி


புகழினி என்றவுடன் எமக்கு நினைவுக்கு வருவது அவளது அழகான தெத்திப் பல்லுத் தெரியச் சிரிக்கும் கள்ளமில்லா வெண்சிரிப்பும் கல கல என்று எந்த நேரமும் வாயோயாமல் அலட்டும் வெகுளித்தனமான பேச்சும்.

கட்டைக் காலை வைத்துக்கொண்டு பாதத்தால் ஈருளியின் மிதிகட்டையை தொடமுடியாமல் அவதிப்பட்டு தெண்டித் தெண்டி ஈருருளி ஓட்டும் அழகு தான்.

அவளிடம் அணியும் ஆடை, செய்யும் வேலை எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி இருக்கும்.லெப்ரினன்ட் புகழினி 24ஆவது ஆண்டு நினைவு ,
எந்த நேரமும் “அயர்ன் ” பண்ணி (ironing) மடிப்புக் கலையாத ஆடைதான் அணிவாள்.

எந்த வேலையென்றாலும் நாளைக்கு செய்து முடிப்போம் என்று எண்ணாமல் அன்றே செய்து முடிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவள்.

எங்களின் நாவற் பழ நிறத்தழகி அவள். தெற்றுப்பல் தெரிய அவள் சிரிக்கும் அழகோ அழகு தான்.. பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

அவள் சராசரி உயரத்தை விட சற்று குறைவான குள்ளமான உருவத்தை உடையவள். இதனால் அவள் பல சிரமங்கள் சந்திக்க வேண்டி இருந்தது.

இவளது அழகிய சிறிய குடும்பம்

எடுத்துக்காட்டாக,சைக்கிள் ஓட்டுவதற்கு கூட எதாவது ஒரு உயரமான இடம் பார்த்து தான் ஏறி ஓடுவாள்.

இதனால் எல்லோரிடமும் நல்ல அறுவையையும் வாங்கிக் கட்டுவாள்
எல்லோரையும் போலவும் தான் புகழினியின் பிள்ளைப் பராய வாழ்க்கையும் இன்பத்துடன் அமைந்தது.

அம்மா, அப்பா, தம்பி, அவள் என அழகிய சிறிய குடும்பம் அவளுடையது. அவளது சொந்தப்பெயர் மேரி கொன்ஸ்ரலின். வீட்டில் ஒரேயொரு பெண்பிள்ளை என்பதால் சரியான செல்லமாக வளர்ந்தாள்.

அவளது சொந்த இடம் யாழ்,வலிகாமப்பகுதியில் சில்லாலை என்ற கிராமம். அவள் தனது கல்வியை பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியில் கற்றாள்.

வலிகாமம் பகுதியில் ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக அடிக்கடி இடப்பெயர்வு ஏற்பட்டதான் காரணத்தால் அவளாலும் ஒழுங்காக கல்வி கற்க முடியாத சூழ்நிலை காணப்பட்டது.

க.பொ.த சாதாரண தரத்தில் தோற்றி சித்தி

1994 ஆண்டு க.பொ.த சாதாரண தரத்தில் தோற்றி சித்தியடைந்து க.பொ.த உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்றுக்கொண்டு இருந்தாள்.


1995 ஆண்டு காலப்பகுதியில் எமது விடுதலைப் போராட்டமானது மிகவும் உச்சநிலையை அடைந்திருந்தது.

வலிகாமப்பகுதியில் எதிரியானவன் எம் நிலத்தை வன்கவர முன்னேறி வந்துகொண்டிருந்த போது எமது போராட்டத்தின்உண்மை நிலையை உணர்ந்து பல்லாயிரக்கணக்கான இளையோர்கள் தாமாகவே மனமுவந்து வந்து எமது அமைப்பில் இணைந்து கொண்டார்கள்.

அந்த வகையில் மேரி கொன்ஸ்ரலினும் “வண்ணக்கனவுகள் தன்னில் கரைந்துமே பெண்மை கரைந்தது போதும்…

இனி கண்ணைத் திறந்தொரு மின்னல் எழுந்திட விண்ணை விழுத்தலாம் வாரும்…

லெப்ரினன்ட் புகழினி 24ஆவது ஆண்டு நினைவு

பூகம்பமே என்னில் சூழட்டும் நெஞ்சில் போர் எனும் தீ வந்து மூழட்டும்” என்று 1995 ஆண்டு பங்குனி மாதத்தில் எமது அண்ணன் கரிகாலன் சேனையில் இணைந்து கொண்டாள்.

அங்கு அவள் மகளிரணியின் 30 வது பயிற்சிப் பாசறையில் புகழினி பெயருடன் போராளியாகப் புடம் போடப்பட்டாள்.


பின்பு 1995ம் ஆண்டு ஆவணி மாதத்தில் நிதித்துறை மகளிர் கணக்காய்வுப் பகுதி முகாமுக்கு அனுப்பப்பட்டாள்.

கணக்காய்வுப் பகுதிக்கு வந்த காலம்

புகழினி கணக்காய்வுப் பகுதிக்கு வந்த காலம் தொட்டு நீண்ட காலம் மருந்து,பால்மா கணக்காய்வு அணியிலேயே என்னுடன் இணைந்து கணக்காய்வை மேற்கொண்டாள்.

அவள் பணியிடத்தில் பணியாளர்களிடம் மிகவும் அன்பாகவும், பண்பாகவும் அதே வேளை தேவைப்படும்போது கண்டிப்பாகவும் பணியை மேற்கொள்ளுவாள்.

அவள் கணக்காய்வில் மட்டுமல்ல மற்ற இதர செயற்பாடுகளிலும் தன்னை வளர்த்துக்கொண்டாள்.

தற்காப்புக் கலையையும் திறம்பட பயின்று கறுப்புப் பட்டி


தற்காப்புக்கலையையும் திறம்பட பயின்று கறுப்புப் பட்டி வரை பெற்றாள். அது மட்டுமல்ல அவள் முறிப்பு நடனம் (break dance) ஆடுவதிலும் நல்ல தேர்ச்சி பெற்றவள்.

எங்கள் முகாமில் நத்தார்தின நிகழ்வுகள் நடைபெறும் போது அதில் (முறிப்பு ) நடனமாடி அவள்தான் கதாநாயகியாக திகழ்வாள்.

மேலும் அவள்
வாகன ஓட்டுனர் பயிற்சிக் கல்லூரியிலும் பயின்று உழவு இயந்திரமும் நன்றாக செலுத்துவாள்.

இயக்கத்துக்கு வரும் போது

இயக்கத்துக்கு வரும் போது புகழினிக்கு ஈருருளி கூட ஓட்டத்தெரியாது. ஆனால் பின்பு உழவு இயந்திரம் செலுத்தக்கூடிய அளவுக்கு அவளை எமது அமைப்பு வளர்த்து விட்டிருந்தது.


1996 ம் ஆண்டு ஆரம்பகாலம் தொடக்கம் 2000 ஆண்டு வரை நானும் புகழினியும் ஒன்றாகவே மருந்து பால்மா கணக்காய்வு அணியில் பணி மேற்கொண்டமையினால் எனக்கும் அவளுக்குமான உறவானது .

பலமானதாகவும் பல இனிமையான தருணங்களைக் கொண்டதாகவும் இருந்தது.

அவளது நினைவாக

அதில் சிலவற்றை அவளது நினைவாகப் பகிர்ந்து கொள்ள அவாக் கொண்டுள்ளேன்.


1996 ம் ஆண்டு வன்னிக்கு வன்னிக்கு வந்த புதிதில் எங்களுக்கு பணிக்கு செல்வதற்கு ஈருருளி கூட இல்லை.நானும் புகழினியும் ஈருருளி இல்லாத காரணத்தினால் நடராசாவில் (நடையில்) தான் பணிக்குச் செல்வோம்.

எங்களின் முகாமில் உள்ள போராளிகள் அனைவருக்கும் ஒவ்வொரு பட்டப்பெயர் வைத்து அழைப்பது வழமை.

புகழினிக்கு (பேணி) தான் பட்டப்பெயர். (எந்த நேரமும் “லொட லொட” என்று தகர டப்பா மாதிரி அலட்டுவதால் அவளுக்கு “பேணி” என்ற பட்டப்பெயர் உருவானது) என்னைப் பேணி “அரியத்தார்” என்று தான் கூப்பிடுவாள்.

லெப்ரினன்ட் புகழினி 24ஆவது ஆண்டு நினைவு

பின்பு பணிக்கு செல்வதற்கு இரண்டு பேருக்கு ஒரு ஈருருளி என்று கொடுக்கப்பட்டது.

அதில் நானும் பேணியும் (புகழினி) தான் ஒன்றாகப் பணிக்குச் செல்வோம். வழமையாக அவளை மருந்து பால்மா கடையில் விட்டு விட்டு நான் பொன்னம்பலம் மருத்துவ மனைக்குச் செல்வேன்.

மதிய நேர உணவு இடைவேளை


நாங்கள் பணிமுடித்துவிட்டு மதிய நேர உணவு இடைவேளைக்கு முகாமில் சென்று தான் சாப்பிடுவோம்.

அப்போது சாப்பிடும் தட்டுக் கழுவுற சோம்பலில் நானும் புகழினியும் ஒரு தட்டில் தான் உணவு உண்போம்.

சாப்பிட்ட தட்டைக் கழுவோனும் என்ற கள்ளத்தில் நான் முதலாவதாகச் சாப்பிட்டிட்டு தட்டை அவளிடம் தள்ளிவிட்டு ஓடி விடுவேன்.

அவள் என்னைத் திட்டிக் கொட்டிப் புறுபுறுத்தபடி ஒருவாறு தட்டைக் கொட்டிக் கழுவிப்போட்டு வருவாள்.

அவ்வாறு அவளது புறுபுறுப்பைக் கேட்பதிலேயே எனக்கு பெரியதொரு மகிழ்வு இருக்கும் .


1997 ம் ஆண்டு நாங்கள் க.பொ.த உயர்தரத்தை முடிக்காமல் எமது அமைப்பில் இணைந்த படியால் பணித்தேவையின் தகமை கருதி உயர்தரப் பரீட்சையில் தோற்றுவதற்கு பணிக்கப்பட்டோம்.

எங்களுடன் புகழினியும் இணைந்து கல்வி கற்றாள். அவள் இயல்பாகவே மிகவும் கூச்ச மனப்பாங்கும், இரக்க குணமும்,பயந்த சுபாவமும் உடையவள்.

அதனாலேயே அவளை எந்த நேரமும் கிண்டலடிப்பது தான் எமது பொழுதுபோக்கு.

பொறுப்பாளரால் நாம் வெளியே செல்வதற்கு தடை


உயர்தரம் படிக்கும் போது எமது பொறுப்பாளரால் நாம் வெளியே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் எமக்கோ வெளியில் விடுப்பு பார்க்காமல் இருக்க முடிவதில்லை.

எங்கள் முகாம் முற்றத்தில் பெரிய அடர்ந்து செழித்து வளர்ந்த மாமரம் ஒன்று உண்டு.

அதிலே ஏறிப் பார்த்தால் வெளியே குறிப்பிட்டளவு தொலைவு வரைக்கும் என்ன நடந்தாலும் பார்க்க முடியும்.

அதனால் நாங்கள் மாமரத்துக்கு மேலே ஏறி இருந்து படிக்கிறம் என்று கதைவிட்டு மாமரத்துக்கு மேலே ஏறி இருந்து விடுப்பு பார்த்துக்கொண்டு படிப்பதுண்டு.

புகழினிக்கு மாமரத்திலேயே எங்களோடு சேர்ந்து ஏறி இருந்து விடுப்பு பார்க்க விருப்பம்… ஆனால் ஏறத்தெரியாது.

அதனால் நாங்கள் இரண்டு பேர் அவளை மேலேயிருந்து அவளது இரண்டு கைகளையும் பிடித்து இழுக்க கீழே இருந்தும் ஒராள் தள்ளிவிட்டு ஒரு மாதிரி ஏற்றிப்போடுவோம்.


மேலே இருந்து படிக்கிறம் என்று போட்டு நாங்கள் மரத்தில் இருக்கிற மாம்பிஞ்சுகளால வீதியால் உந்துருளியில் பயணிக்கின்ற எங்கட இயக்க அண்ணாக்களுக்கு எறிவதுண்டு.

அண்ணாக்களும் எறிவது நாங்கள் என்று தெரிந்தாலும் பாவம் பிள்ளைகள் தானே என்று வீட்டுக் கண்டும் காணாத மாதிரி போய் விடுவார்கள்.


ஆனால் புகழினிக்கு நன்றாக இலக்குப் பார்த்து எறியத் தெரியாது. இப்படித் தான் ஒரு தடவை அவள் ஒரு உந்துருளிக்கு மாம்பிஞ்சால ஏறிய வெளிக்கிட்டு அது போய் பின்னால ஈருருளியில் வந்த அப்பு மேல பட்டு

அந்த அப்பு வந்து பொறுப்பாளரிட்ட வந்து பிள்ளையள் மாம்பிஞ்சால ஏறிஞ்சு போட்டுதுகள் என்று சொல்லிக் கொடுத்து புகழினியால நாங்கள் நாலுபேரும் நூறு தோப்புக்கரணம் போட்டதை இப்பவும் மறக்கமுடியாது.

கள்ள வேலைகள் செய்வதற்கு சரியான பயம்


புகழினிக்கு எங்களோட சேர்ந்து கள்ள வேலைகள் செய்வதற்கு சரியான பயம். நாங்கள் வலுக்கட்டாயமாக இழுத்தாலும் வரமாட்டாள்.

எங்களது முகாமிலிருக்கும் போராளிகளின் பெற்றோர் அவர்களின் பிள்ளைகளைப் பார்க்க வரும்போது சாப்பிடுவதற்கு நிறைய உலருணவுப் பொருட்கள் கொண்டுவந்து தருவதுண்டு.

அதை தமா அன்ரா தான் (ஒரு அக்காவின் பட்டப்பெயர்தான் தமா அன்ரா) எல்லோருக்கும் பகிர்ந்து கொடுப்பார்.

அவர் எல்லோருக்கும் அளவாகக் கொடுத்து விட்டு மிகுதியை ஒரு மேசையில் கடைசி இழுப்பறையில் (இலாச்சி) பதுக்கி வைப்பார்.

அதில் கடைசி இலாச்சிக்கு மட்டும் தான் பூட்டு உள்ளது. மற்றைய இரண்டு இலாச்சிகளுக்கும் பூட்டு இல்லை.

தமா அன்ரா கடைசி இலாச்சியில் வடிவாக வைத்து பூட்டிப் போட்டு அங்கால போனதும் நாங்கள் பூட்டில்லத மேல் இலாச்சியைக் கழட்டிப் போட்டு கீழ் இலாச்சியில் உள்ள தின்பண்டங்களை எல்லாம் எடுத்துச் சாப்பிடுவோம்.

புகழினியை இதுக்குக் கூட்டுச் சேர்த்தால் வரவும் மாட்டாள் நாங்கள் கொண்டு போய்க் கொடுத்தாலும் சாப்பிடவும் மாட்டாள்,

சாப்பாட்டு விஷயத்தில சொரணை வராது

சாப்பிட்டால் பிறகு தமா அன்ரா விடம் பேச்சு/கிழி வாங்க வேண்டிவரும் என்ற பயம் அவளுக்கு (எங்களுக்கு எவ்வளவு பேச்சு/ கிழி வாங்கினாலும் சாப்பாட்டு விஷயத்தில சொரணை வராது)
எங்களது முகாமுக்கு பின் புறத்தில் இரண்டு பெரிய பலா மரங்கள் உண்டு.

அதில் நிறைய பலாப்பழங்கள் கனிந்து தொங்குவதுண்டு எங்கள் முகாம் வளவுக்கு சொந்தக்கார ஆச்சி முகாமுக்கு பக்கத்து வீட்டில்தான் இருக்கிறவர்.

அவர் அடிக்கடி முகாமுக்கு வந்து எத்தனை பலாப்பழங்கள் காய்ந்திருக்கிறது என்று கண்காணிச்சுக்கொண்டு தான் இருப்பார்.

பலாப்பழங்களைக் கண்டால் வாயூறும்

எங்களுக்கோ அந்தப் பலாப்பழங்களைக் கண்டால் வாயூறும். ஆச்சியின் கண்ணில மண்ணைத் தூவி விட்டு அந்தப் பலாப்பழங்களை அடிக்கடி நாங்கள் பிடுங்கிச் சுவைப்பது உண்டு.

இந்தப் பலாப்பழம் பறிக்கின்ற நிகழ்வானது அடிக்கடி எங்கட நேரக் காவற்கடமை நேரத்தில் தான் நிகழும்.


மற்றக் குழப்படி வேலைகளுக்கு பயப்படுகின்ற புகழினி பலாப்பழத்தில் இருக்கிற விருப்பத்தில் இதுக்கு மட்டும் எங்களோடு கூட்டுச் சேருவாள்.

பலாப்பழம் ஏறிப் பறிக்கவோ வெட்டவோ வரமாட்டாள். நாங்கள் ஏறிப் பிடுங்கி வெட்டி வைத்தால் மற்றைய எங்கட கூட்டுச் களவாணிகளை (முகாமில் இருக்கிற எல்லோரையும் நாங்கள் இந்தப் நிகழ்வுக்கு சேர்ப்பது இல்லை…

பல விசுவாசக் குஞ்சுகளும் இருந்ததால் போட்டுக்கொடுத்து விடுவார்கள் என்ற பயம்) உறக்கத்தில் இருந்து எழுப்பிக் கூட்டிக் வந்து அவர்களுக்கும் பரிமாறி தானும் சாப்பிடுகின்ற வேலையை மட்டும் தான் பார்ப்பாள்.


இப்படித்தான் ஒருநாள் இரவு காவற்கடமை நேரத்தில் பலாப்பழத்தை இறக்கிச் சாப்பிட்டுப் போட்டுப் பலாச் சக்கையை புகழினியின் மொக்கை ஐடியாவால் பக்கத்து வீட்டு வளவுக்கை தூக்கிப் போட்டு அந்த பக்கத்து வீட்டுக்கார அக்கா முகாம் வளவுக்கு சொந்தகார ஆச்சியிடம் போட்டுக் கொடுத்து

பொறுப்பாளரிடம் சொல்லி சண்டை

அந்த ஆச்சி முகாமுக்கு வந்து பொறுப்பாளரிடம் சொல்லி சண்டை பிடித்து பொறுப்பாளர் ஆச்சியை ஒரு மாதிரி சமாளித்து அனுப்பின கதையை இப்பவும் எங்களால மறக்க முடியாது.

(எங்களின் பொறுப்பாளர் சாப்பாட்டு விடயங்களில் எங்களுக்குத் தண்டனை தருவதில்லை) இப்படி புகழினியால நாங்களும் மாட்டுப்பட்ட நிகழ்வுகள் நிறைய உண்டு.


புகழினியின் குடும்பத்தின் சூழ்நிலையானது மிகவும் கவலையளிக்கக் கூடியதாகவே காணப்பட்டது.

அவளது குடும்பம் சொந்த இடத்தில் இருந்த போது
சொந்த தொழில் செய்து வந்த படியால் நல்ல வசதியாகத்தான் வாழ்ந்து வந்தார்கள்.

வன்னி இடம் பெயர்வு

பின்பு வன்னிக்கு இடம்பெயர்ந்து வந்ததால் புகழினியின் அப்பாவுக்கு தொழில் வாய்ப்பின்றி அன்றாட உணவுத் தேவைக்குத் கூட அவதிப்பட்டார்கள்.

புகழினியின் அம்மா மகள் இயக்கத்துக்கு வந்ததால் அவளது பிரிவினையைத் தாங்க முடியாமல் கவலைப்பட்டு இருதய நோய் மற்றும் சுவாச நோய் போன்ற நோய்களால் பீடிக்கப்பட்டு மிகவும் அவதியுற்றார்.

அப்பா தான் ஓலைப்பாய், பெட்டி இழைத்து விற்று பிழைப்பு நடத்தி வந்தார். புகழினியின் தம்பியோ மிகவும் இளையவன்.

அப்போது பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டு இருந்தான். இதனால் நாங்கள் புகழினியுடன் அவளது வீட்டுக்கு செல்லும்போது புகலினியின் அம்மா “என்ர மகள் வீட்ட இருந்திருந்தால் படித்து உழைத்து எங்களின் பார்த்திருக்கலாம் தானே” என்று சொல்லி அழுது கவலைப்படுவார்.

ஆனால் புகழினியோ “வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்கு தேவை தானே. உங்களுக்கு தம்பி இருக்கிறான் தானே” என்று சொல்லிச் சிரித்துச் சமாளித்து விடுவாள்.


புகழினி எமது தலைவர் மீதும் போராட்டத்தின் மீதும் எல்லாப் போராளிகளைப் போன்றே மிகுந்த பற்றும் விசுவாசமும் உடையவள்.

இயக்கத்திலேயே “அண்ணையாணை” என்று கதைப்பதுண்டு.

எமது தலைவரின் புகைப்படங்களைச் சேகரித்து அதை ஒரு செருகேடாக (album) சேகரித்து வைத்து இருந்தாள்.

சில போராளிகள் வீட்டில் “அம்மாவாணை” என்று சத்தியம் செய்வது போல இயக்கத்திலேயே “அண்ணையாணை” என்று கதைப்பதுண்டு.

அது புகழினிக்குப் பிடிக்காது. சும்மா அண்ணையை போட்டு உங்கட லூசுக் கூத்துக்களுக்கு இழுக்காதீங்கோ என்பாள்.


எங்களின் பொறுப்பாளார் புகழினியின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு அவளைப் போர்க்களங்களுக்கு அனுப்புவதில்லை.

1999 ம் ஆண்டு எங்கள் முகாமில் இருந்து சிலபேர் நெடுங்கேணிப்பகுதிக்கு போர்க்களத்துக்கு சென்ற போது பொறுப்பாளர் புகழினியை அங்கே செல்வதற்கு அனுமதிக்க வில்லை.

ஆனால் அவள் அழுது சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து பொறுப்பாளரோடு சண்டை பிடித்து சண்டைக்களத்துக்கு சென்று அங்கு திறம்பட செயற்பட்டு முகாமுக்குத் திரும்பினாள்.


பொதுவாக நாங்கள் வெளிப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் பெரிய வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளின் போது போராளிகள் பற்றாக்குறை காரணமாக விழுப்புண்ணடைந்து மாற்றுத்திறனாளிகளானோர்

நிருவாக நடவடிக்கை

மற்றும் நிருவாக நடவடிக்கைகளுக்கு மட்டும் தேவையான கொஞ்சப் பேரை மட்டும் முகாமில் விட்டு விட்டு மிகுதிப் பேரை இடையிடையே போர் பயிற்சிகள் தந்து களப்பணிகளுக்கு இணைத்துக் கொள்வார்கள்.


எங்களுக்கும் களப்பணியில் ஈடுபடுவதில்லை என்று குற்றவுணர்ச்சி ஏற்படுவதால் இப்படி இடையிடையே இணைப்பதால் மிகவும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் களப்பணிகளுக்குச் சென்று வருவோம்.

எமது தலைவரும் ஒரு போராளிக்கு வெளிநிருவாக்கப் பணிகளில் மட்டுமல்ல களப்பணிகளிலும் தேர்ச்சி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவார்.


அந்த வகையில் நிதித்துறை மகளிர் அணியைச்சேர்ந்த நாங்கள் 2000 ஆம் ஆண்டு மே மாதத்தில் மாலதி படையணியுடன் இணைந்து வலிந்த தாக்குதல் நடவடிக்கை ஒன்றுக்காக சுண்டிக்குளம் பகுதியில் போர்
பயிற்சியில் ஈடு பட்டுக்கொண்டிருந்தோம்.

பளை போர் முன்னரங்ககப் பகுதி

அதே வேளை எங்கள் புகழினி ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியில் பயின்று கொண்டிருந்தபடியால் அவர்களுடன் இணைந்து பளை போர் முன்னரங்ககப் பகுதியில் எம் மக்களின் காவற் தெய்வமாக காவற்கடமை புரிந்து கொண்டிருந்தாள்.


29.05.2000 அன்று எங்களுக்கு “புகழினி வீரச்சாவாம்” என்ற கொடிய செய்தி வந்தடைந்தது.

எல்லோரும் கலங்கிப் போய் நின்றோம். பளைப்பகுதியில் போர் முன்னரங்கப் பகுதியில் அவள் காவற்கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது

எதிரியின் ஆழ ஊடுருவும் அணியின் சுற்றிவளைப்பின் போது எதிரியுடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரமுடனும் தீரமுடனும் போராடி எங்களின் புகழினி லெப்ரினன்ட் புகழினியாக வீரச்சாவைத் தழுவிக்கொண்டாள்.


பின்பு நாங்கள் அனைவரும் எங்களது பயிற்சி முகாம் பொறுப்பாளரிடம் ஒரு நாள் அனுமதி பெற்று புகழினியின் இறுதி வணக்க நிகழ்வுக்கு சென்றோம்.

எங்கள் புகழினியின் வித்துடல்

அங்கே எங்கள் புகழினியின் வித்துடலை இறுதியாகக் கூட பார்க்க முடியாமல் வித்துடல் பேழை அடைக்கப்பட்டிருந்தது.

அதை விட புகழினியின் அப்பா என்னைப்பார்த்து “பிள்ளை உன்னோட தானே என்ர மகள் ஒன்றாகத் திரியுறவள் நீ மட்டும் தான் வந்திருக்கிறாய்

என்ரை மகள் எங்கே” என்று என்னைக் கட்டிப்பிடித்து கதறி அழுத்ததும் நானும் குற்றஉணர்வால் அழுததும் நான் சாகும் வரை என் நினைவை விட்டுப் போகாது.

பின்பு 2002 ஆம் ஆண்டு புகழினியின் அப்பா பொன்னம்பலம் மருத்துவ மனையில் நான் கணக்காய்வு பணியை மேற்கொண்டிருந்தபோது

என்னை வந்து சந்தித்து பிள்ளை தாங்கள் அனைவரும் சொந்த இடத்துக்கு (சில்லாலைக்கு) செல்லப்போகிறோம் என்று சொல்லி விட்டு “என்ர பிள்ளையில்லாமல் போகப்போகிறேன்” என்று கதறி அழுததை இன்றும் நினைத்தால் மனதை பாறாங்கல்லால் வைத்து அழுத்தியது மாதிரி ஒரு உணர்வைத் தருகிறது.


எங்களின் அன்புத் தோழி புகழினியே…

உன்னை இழந்த இந்த நாளில் மட்டுமல்ல எங்கள் வாழ்நாட்கள் முழுக்க என் நாளுமே எங்கள் பழைய தோழிமார் யாரோடு கதைத்தாலும் உன் நினைவைத்தான் மீட்டிக் கொண்டிருக்கின்றோம்.

உன்னைப் போன்ற ஒன்றாய்க் கூடி வாழ்ந்த தோழர்கள், தோழியர்களை இழந்து விட்டு நாங்கள் மட்டும் தப்பி வந்து குற்றவுணர்வுடன்

நடைபிணங்களாக எங்களின் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக புன்னகை என்னும் அரிதாரத்தைப் பூசிக்கொண்டு மனதுள்ளே எரிமலை போன்று குமுறிக் கொண்டு உயிர் இருந்தும் பிணமாக உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இப்பொழுதும் நீ என்னை “அ ரியத்தார்” என்று கூப்பிடும் ஒலி காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.


எம் தமிழீழ வரலாற்றில் என்றும் உன்கதை எழுதி வைக்கப்படும்.
வரலாற்று பதிப்பு போராளி எழுத்தாளர் -நிலாதமிழ்.

இஸ்ரேலை போட்டு தாக்கும் ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை போட்டு தாக்கும் ஹிஸ்புல்லா

இஸ்ரேலை போட்டு தாக்கும் ஹிஸ்புல்லா

இஸ்ரேலை போட்டு தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள் ஏவுகணைகள் .சற்றும் எதிர் பாராத புதிய போரியல் முறை தாக்குதலை ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய வண்ணம் உள்ளனர் .

அதிரடி தாக்குதல்

வடக்கு இஸ்ரலில் ஆக்கிரமிக்க பட்டு அத்துமீறி இராணுவ முகாம்களை அமைத்து ,நிலை கொண்டுள்ள இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு எதிராக அதிரடி தாக்குதலை ,தெற்கு லெபனான் ஹஸ்புல்லா போராளிகள் நடத்திய வண்னம் உள்ளனர் .

இடைவிடாது தொடரும் ஹிஸ்புல்லா இராணுவத்தின் அதிவேக மின்னல் தாக்குதலினால் இஸ்ரேலிய இராணுவ அதி உயர் படை தளங்கள் எரிந்து கொண்டுள்ளன .

கடும் தாக்குதல்

ஏவுகணை ,விமான தளங்கள் ,கட்டளை கண்காணிப்பு இராணுவ தளங்கள் என்பன கடும் தாக்குதலுக்கு உள்ளாகிய வண்ணம் உள்ளது .

கரந்தடி போர்முறையிலும் ,மரபு போர் முறையிலும் நன்கு தேர்ச்சி பெற்ற ஹிஸ்புல்லா போராளிகள், வீரமிகு தாக்குதலை எதிர்கொள்ள முடியாது ,இஸ்ரேல் இராணுவம் திணறிய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்க விடயமாகும் .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
146நாடுகள் பாலஸ்தீன தனிநாட்டுக்கு ஆதரவு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

146நாடுகள் பாலஸ்தீன தனிநாட்டுக்கு ஆதரவு

146நாடுகள் பாலஸ்தீன தனிநாட்டுக்கு ஆதரவு

146நாடுகள் பாலஸ்தீன தனிநாட்டுக்கு ஆதரவு வழங்கியுள்ள நிலையில் ,உலக பந்தில் பாலஸ்தீனம் இறைமை கொண்ட புதிய சுதந்திர நாடக மற்றம் பெறுகிறது .

இஸ்ரேல் அரசா பயங்கரவாதம்

இஸ்ரேல் அரச பயங்கரவாதம் நடத்தி கொண்டிருக்கும் ,அத்துமீறிய ஆக்கிரமிப்பு நடவடிக்கை காரணமாக ஆயிர கணக்கான மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர் .

இவ்வாறான படுகொலைகளை தொடர்ந்து அனுமதிக்க முடியாது என்கின்ற நிலையில் ,தற்போது 146 நாடுகள் தமது அமோக ஆதரவை அளித்துள்ளனர் .

பாரிய இனஅழிப்பு தாக்குதல்

ரபா எல்லை வழியாக பாரிய இனஅழிப்பு தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ள நிலையில் ,அவ்வாறான கொடிய போரை இஸ்ரேல் நீடித்தால் மிக பெரும் மனித பேரழிவு இடம்பெறும்.

அதனால் அதனை தடுக்கும் நகர்வில் அமெரிக்கா உள்ளிட்ட அதரவு நாடுகள் செயலாற்றி வருகின்றனர் .

இதனால் வேறுவழியின்றி தற்போது இஸ்ரேல் சர்வதேச பொறிமுறை வலைக்குள் சிக்கியுள்ளது .

அதுவே தனி நாட்டு அங்கீகாரத்தை பாலஸ்தீனம் மக்களுக்கு பெற்று கொடுக்க போகிறது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
பஸ் புரண்டதில் 27 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பஸ் புரண்டதில் 27பேர் காயம்

பஸ் புரண்டதில் 27பேர் காயம்

பஸ் புரண்டதில் 27பேர் காயம் ,கொழும்பு பதுளை பிரதான வீதியில் பெல்மடுல்ல நகருக்கு அருகில் தனியார் பஸ்ஸொன்றும் முச்சக்கர

வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் 27 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேரூந்து

எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேரூந்து, எதிர்திசையில் இருந்து வந்த முச்சக்கரவண்டி பேருந்தை நோக்கி வந்த போது,

​​பஸ் சாரதி முச்சக்கரவண்டி பஸ்ஸில் மோதாமல் இருக்க முயற்சித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மண் திட்டுடன் மோதி விபத்து

அப்போது, ​​சாலையில் இருந்த மண் திட்டுடன் மோதி, பஸ் சில அடிகள் கீழே சாலையில் கவிழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் பஸ் மற்றும் முச்சக்கர வண்டியில் இருந்த நால்வர் அடங்குகின்றனர்.

காயமடைந்த 20 பேர் கெஹாவத்தை ஆதார வைத்தியசாலையிலும் ஏழு பேர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வைத்தியசாலை வட்டாரத்தால் தெரிவிக்க பட்டுள்ளது .

இறைச்சி விலைகள் அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இறைச்சி விலைகள் அதிகரிப்பு

இறைச்சி விலைகள் அதிகரிப்பு

இறைச்சி விலைகள் அதிகரிப்பு ,மீன் பிடித்தல் குறைவதால், உள்ளூர் சந்தையில் கோழி உள்ளிட்ட இறைச்சி வகைகளின் விலை அதிகரித்துள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.

மீன்பிடிக்க வேண்டாம் வானிலை ஆய்வு மையம்

கடல் சீற்றம் காரணமாக மீன்பிடிக்க வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியதால் மீன் விலை உயர்ந்துள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும், மீனவ மற்றும் கடற்படை சமூகங்கள் மறு அறிவித்தல் வரை வெளியில் செல்லவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் இறைச்சி விலை அதிகரிப்பு

இதனால், உள்ளூர் இறைச்சி விலை அதிகரித்துள்ளது. அதன்படி, நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் புதிய கோழி 1,080. ரூபாயாகும்

ஃப்ரெஷ் சிக்கன் – ரூ.1,200

கோழி (தோல் இல்லாதது) – ரூ.1,100

உறைந்த கோழி – ரூ.1,100

கறி கோழி – ரூ. 1,100

ஹபேட் – ரூ.1,400

கட் ஆஃப் – ரூ. 600

ஆட்டிறைச்சி – ரூ.3,300

மாட்டிறைச்சி – ரூ.2,500

யாழில் திரைப்பட பாணியில் சண்டித்தனம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் திரைப்பட பாணியில் சண்டித்தனம்

யாழில் திரைப்பட பாணியில் சண்டித்தனம்


யாழில் திரைப்பட பாணியில் சண்டித்தனம் ,யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் திரைப்பட பாணியில் மோட்டார் சைக்கிளுடன் உள்நுழைந்த இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நேற்றிரவு 10 மணியளவில் காயமேற்பட்ட ஒருவரை ஏற்றிக்கொண்டு மோட்டார் சைக்கிளை செலுத்தியவாறு யாழ்ப்பாணம் போதனா

வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சை பிரிவு

வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்குள் ஒருவர் நுழைந்துள்ளார்.

இது தொடர்பில், வைத்தியசாலை ஊழியர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வருகை தந்தவரிடம் கேள்வி எழுப்பியபோது, குறித்த நபர் அவரை அச்சு இயந்திரத்தால் தாக்குவது கண்காணிப்பு கமராவில் பதிவாகியிருந்தது.

இதன்போது, காயமடைந்த வைத்தியசாலை ஊழியர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

பொலிஸ் விசாரணை

வைத்தியசாலைக்குள் அத்துமீறி மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் மதுபோதையில் இருந்தததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்நபர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரையும் ஜூன் 11 ம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மோட்டார் சைக்கிளில் வந்த காயமடைந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உணவில் மட்டைத்தேள் உணவகத்திற்கு சீல்
Posted in இலங்கை செய்திகள்

உணவில் மட்டைத்தேள் உணவகத்திற்கு சீல்

உணவில் மட்டைத்தேள் உணவகத்திற்கு சீல்

உணவில் மட்டைத்தேள் உணவகத்திற்கு சீல் ,கடந்த வெள்ளிக்கிழமை திருநெல்வேலி பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில் மதிய உணவு வாங்கிய

ஒருவரின் சோற்று பார்சலில் மட்டைத்தேள் காணப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனிற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்தது.

உணவகம் திருநெல்வேலி

இதனையடுத்து சனிக்கிழமை குறித்த உணவகம் திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனினால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது பொது சுகாதார பரிசோதகரால் ஏற்கனவே வழங்கப்பட்ட திருத்த வேலைகள் எவையும் நிவர்த்தி செய்யப்படாமல் இருப்பது அவதானிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்றைய தினம் (27) கடை உரிமையாளரிற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான்

வழக்கை நேற்றை தினம் விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான், உரிமையாளரிற்கு 45,000/= அபராதம் அறவிட்டதுடன் கடையினை திருத்த

வேலைகள் முடிவடையும் வரை சீல்வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகரிற்கு கட்டளை வழங்கினார்.

இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் குறித்த உணவகம் நேற்யை தினம் சீல் வைத்து மூடப்பட்டது.

வௌ்ள அபாய எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

வௌ்ள அபாய எச்சரிக்கை

வௌ்ள அபாய எச்சரிக்கை

வௌ்ள அபாய எச்சரிக்கை ,அத்தனகலு ஓயாவிற்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்படும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அந்த பகுதிகளில் உள்ள வீதிகள் மற்றும் கிளை வீதிகளில் பயணிக்கும் போது பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, களுகங்கையில் குடா கங்கைக்கு வழங்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கால நிலை காரணமாக பல்லாயிரம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .

வெள்ளப் பெருக்கு

அதிக வெள்ளப் பெருக்கு பல பகுதிகளில் இடம்பெற்று வருவதால் ,அந்த வெள்ளத்தில் பாதிக்க பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பல உதவிகளை வழங்கி வருகிறது .

ஆண்டுதோறும் இலங்கையில் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் அதிகம் பாதிக்க பட்டு வருவதால் மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் என்பது இங்கே குறிப்பிட தக்கது .

இலங்கையில் சூடு பிடிக்கும் தேர்தல்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் சூடு பிடிக்கும் தேர்தல்

இலங்கையில் சூடு பிடிக்கும் தேர்தல்

இலங்கையில் சூடு பிடிக்கும் தேர்தல் ,தேர்தல்களை பிற்போடப்படுமனால் அதை கண்டிக்கின்றோம் ,அரச அமைப்பின் பிரகாரம் நடக்கவிருக்கும் தேர்தல்களை பிற்போடப்படுமனால் கண்டிக்கின்றோம் .

ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுசெயலாளர்

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுசெயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்த ஒரு செய்தி ஒன்று.

இரண்டு தேர்தல்கள், ஜனாதிபதி தேர்தல் மட்டும் அடுத்த வருடம் நடக்கவிருத்த பொது தேர்தல் இரண்டையும் இரண்டு வருடங்களுக்கு பிற்போடப்படுவதாக யோசனையை முன்வைத்துள்ளாராம்.

ஏற்கனவே மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமல் ஐந்து வருடங்களாக பிற்போடப்பட்டு வருகிறது.

உள்ளூராட்சி தேர்தல்களும் பணம் இல்லாத பொய்யான காரணத்தால் காலவறையின்றி பிற்போடப்பட்டு இருக்கின்றது.

இப்பொழுது நடக்கவிருக்கும் தேர்தலைகளையும் பிற்போடப்பட்டால் நாட்டில்ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டதாக தான் கருதபட வேண்டும்.

மீண்டும் பாரிய மக்கள் போராட்டம்

அரச அமைப்பின் பிரகாரம் நடக்கவிருக்கும் தேர்தல்களை பிற்போடப்படுமனால் அதை நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம் நாட்டில் மீண்டும் ஒரு பாரிய மக்கள் போராட்டம் வழிவகுக்கும் என எச்சரிக்கையாக இருக்கும் என தெரிவித்தார்.

ஈழத் தமிழச்சி ஏலாத் தமிழச்சியா
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

ஈழத் தமிழச்சி ஏலாத் தமிழச்சியா

ஈழத் தமிழச்சி ஏலாத் தமிழச்சியா

அடுக்களையில் குந்தியவள்.
அடுத்தவருக்காய் ரத்தம் சிந்தியவள்.

✍️ பாத்திரங்கள் மினுக்கியவள்.
பாத்திருக்க பகையை நொறுக்கியவள்.

✍️விடுதலையின்றி ஏங்கியவள்.
சுடுகலனை கையில் ஏந்தியவள்.

✍️கவலையில் விழி வாடியவள்.
கடலில் சுழி ஓடியவள்.

✍️இயந்திரமாய் இருந்தவள்.
சுதந்திரமாய்ப் பறந்தவள்.

✍️கடும் சட்டங்களால் துடித்தவள்.
கரும்புலியாக வெடித்தவள்.

✍️புறநானூற்றை மேவியவள்.
பிறநாட்டுடன் மோதியவள்.

✍️புலிவடிவாக சீறியவள்.
புயல் மழையாக மாறியவள்.

🍁பூவாக மலர்ந்தவள்.
👍புது வரலாறாக நிமிர்ந்தவள்.❗

-பிறேமா(எழில்)-28-05-2024

பெண் ஒருவர் வெட்டி படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

பெண் ஒருவர் வெட்டி படுகொலை

கொழும்பில் பெண் ஒருவர் வெட்டி கொலை

பெண் ஒருவர் வெட்டி படுகொலை ,சீதுவை லியனகேமுல்ல பிரதேசத்தில் பெண் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

காலி நெலுவ பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரிந்து வந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 06 வருடங்களாக குறித்த பெண் வர்த்தக வலயத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் லியனகேமுல்ல பிரதேசத்தில் தற்காலிகமாக தங்கியிருந்துள்ளார்.

நீர்கொழும்பு பதில் நீதவான்

நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக்க சில்வா, சம்பவ இடத்தில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் நாள்தோறும் தொடராக இடம்பெற்று வரும் இவ்வாறான படுகொலை நடவடிக்கை காரணமாக ,மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இந்த கொலைகளை நடத்துவது யார் ஏன் இடம்பெறுகிறது என்கின்ற கேள்வியே இப்பொழுது எழுப்ப பட்டுள்ளது .

பொலிஸில் சரணடைந்த 11பாடசாலை மாணவிகள்
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸில் சரணடைந்த 11பாடசாலை மாணவிகள்

பொலிஸில் சரணடைந்த 11பாடசாலை மாணவிகள்


பொலிஸில் சரணடைந்த 11பாடசாலை மாணவிகள் ,யாழ்ப்பாணம், தீவகம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றின் விடுதியில் கிறிஸ்தவ அருட்சகோதரி ஒருவரின் கொடூர தாக்குதலை தாங்க முடியாமல்,

அங்கு தங்கியிருந்த 11 பாடசாலை மாணவிகள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

10 முதல் 17 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவிகளே பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

அகப்பை காம்பு மற்றும் தடியால் தாக்குவது,

அகப்பை காம்பு மற்றும் தடியால் தாக்குவது, தலைமுடியை பிடித்து சுவருடன் தாக்குவதென, விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரி கடந்த 3 வருடங்களாக தம்மை சித்திரவதை செய்வதாக மாணவிகள் கண்ணீருடன் முறையிட்டுள்ளனர்.

புது வகையான ஆங்கில உச்சரிப்பை பேசச் சொல்வது, ஆங்கில உச்சரிப்பு தவறு, ஆங்கிலம் முறையாக பேசாதது, பிரார்த்தனையை முறையாக மனனம் செய்யாதது உள்ளிட்ட காரணங்களிற்காகவே அருட் சகோதரி தாக்குதல் நடத்தியதாக குறிப்பிடப்படுகிறது.

அத்துடன், பாடசாலை மாணவிகளுடன் உரையாடக்கூடாத கெட்ட வார்த்தைகளையும் உபயோகித்து திட்டுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

பாடசாலையில் குறித்த விடயத்தை சொன்னபோதும் சமாளித்து போகுமாறு கூறவே அச்சம் காரணமாக 11 மாணவிகளும் இன்று ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இதனையடுத்து அனைத்து மாணவிகளும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டனர்.

மாணவிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனை யில், அவர்களின் உடலில் தாக்கப்பட்ட தழும்புகள் அவதானிக்கப்பட்டுள்ளது.

குறித்த 11 மாணவிகளும் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விடுதி பொறுப்பாசிரியரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பாலஸ்தீனம் 194வது நாடாக மலர்வு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

பாலஸ்தீனம் 194வது நாடாக மலர்வு

பாலஸ்தீனம் 194 வைத்து நாடாக மலர்வு


பாலஸ்தீனம் 194வது நாடாக மலர்வு ,பாலஸ்தீனம் வரலாறு விடுதலை பெற்றது எப்படி..?

இலங்கை தனி நாடாக ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை அடைந்த மாதிரி 1948 ஆம் ஆண்டு இஸ்ரேலும் தனிநாடாக அறிமுக ப்படுத்த பட்டது .

அன்றில் இருந்து பலஸ்தீன மக்களும், எமது ஈழ மக்கள் பெரும்பான்மை இனத்தினரிடமிருந்து நசுக்க பட்டு வந்ததைப் போலவே, நசுக்கப்பட்டு நாடு இல்லாமல் ஆக்க பட்டனர் .

நக்பா படுகொலை


நக்பா படுகொலை அகதியாக துரத்தியடிக்கப்பட்டனர். நீண்டகாலமாக் தொடர்ந்த இந்தச் சம்பவமானது பலத்த சொத்திழப்புகள் உயிரிழப்புக்களைச்சம்பவம் சந்தித்த வண்ணம் தொடர்ந்திருந்தது.

தற்போது ஏற்பட்ட இஸ்ரேல் அரசின் மிலேச்சத்தனமான தாக்குதலில். 36 000 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டும் 76000 பேர்காயமடைந்தும் உள்ளனர்.

இது இரண்டாவது நக்பா இனப்படுகொலையாக உலக நாடுகளால் கருதப்பட்டது.

இஸ்ரேல் நெதன்யாகுவின் இனப்படுகொலை

அதன் எதிரொலியாகவே இஸ்ரேல் நெதன்யாகுவின் இனப்படுகொலைக்கு எதிரான தீர்ப்பாக ,பலஸ்தீன தேசம் ஐரோப்பிய கூட்டமைப்புக்கு உட்பட்ட நாடுகளான ஸ்பெயின், அயர்லாந்து, நோர்வே போன்ற நாடுகளால் தனிநாடக அறிவிக்க பட்டுள்ளது .

இதே போலவே இலங்கையில் சிங்கள பெரும்பான்மை இனத்தினரால் எவ்வித உரிமைகளும் மறுக்கப்பட்ட

பாலஸ்தீனம் 194வது நாடாக மலர்வு

நில வன்பறிப்பு’ இனச்சுத்திகரிப்பு என்று நசுக்கப்பட்டு 33 வருடங்களுக்கு மேலாக தனிநாடு கோரிப் போராடி இறுதியில் முள்ளிவாய்க்கால் படுகொலையில் பல இலட்சம் மக்களுக்கு மேல் உயிரிழப்புகளைச் சந்தித்தனர் .

தனிநாட்டுக் கோரிக்கை

முடக்கப்பட்ட ஈழமக்களுக்கு உலகநாடுகள் எதுவும் இன்னும் இறங்காமல் தனிநாட்டுக் கோரிக்கையை இழுத்தடித்து வருவது குறிப்பிடத்தக்கது

எப்படியாயினும் அமெரிக்காவின் கோரமுகத்தினைப் பிரதிபலிக்கும் நாடான இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாகவும் ,

சமாதானத்தை பிரதிபலிக்கும் நாடான நோர்வே எடுத்துள்ள இந்த முடிவு தெற்காசிய நாடுகளில் இடம்பெறும் உள்நாட்டு யுத்தங்களுக்கு நல்லதொரு முடிவைத் தரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது .

முள்ளிவாய்க்கால் இனவழிப்பு

இது இலங்கையில் ஈழ மக்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இனவழிப்புச் சம்பவத்தின் எதிரொலிப்பாகவும் ,ஈழ மக்களுக்கும் நல்லதொரு முடிவைத் தரும் என்று ஒரு நம்பிக்கையை உருவாக்கும் தீர்வாகவும் கருத முடிகின்றது.

மேலும் தளராத உறுதியுடன் போராடி வெற்றி பெற்று தனிநாட்டைப் பெற்றுக் கொண்ட ,பலஸ்தீன மக்களுக்கு எமது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எழுத்துருவாக்கம் – நிலா தமிழ் –

வீடியோ

பாலஸ்தீனம் தனி நாடாக அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

பாலஸ்தீனம் தனி நாடாக அறிவிப்பு

பாலஸ்தீனம் தனி நாடாக அறிவிப்பு

பாலஸ்தீனம் தனி நாடாக அறிவிப்பு கொண்டாட்டம் மக்கள் .

இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவத்தினரால் பாலஸ்தீனம் காசா மக்கள் மீது கொடூர இனஅழிப்பு நடத்த பட்டு வந்தது .

இனப் படுகொலையின் உச்சம்

அவ்வாறன இனப்படுகொலையின் உச்சத்தின் காரணமாக இந்த எட்டு மாதத்தில் முப்பத்தி ஆறாயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர் ,எழுபத்தி ஆறாயிரம் பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தனர் .

அவ்வாறன நிலையில் திட்டமிட்டபடி இன்று ஸ்பெயின் ,நோர்வே ,ஐயர்லாந்த் ,என்பன உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளனர் .

பாலஸ்தீனம் சுதந்திர நாடாக அறிவிப்பு

உலக பந்தில் புதிய நாடாக பாலஸ்தீனம் சுதந்திர நாடாக அறிவிக்க பட்டுள்ளது .

அழுத மக்களின் கண்ணீருக்கும் ,வலிகளுக்கும் ,உயிர் உடமை இழப்புக்களும் ,இன்று தீர்வு கிட்டப்பட்டுள்ளது .

மனம் எல்லாம் அப்படி ஒரு சந்தோசம் ,இனம் புரியாத மகிழ்வு .நாம் பலஸ்தீனியர் இல்லை ,ஆனால் அந்த மக்கள் வலிகள் எமக்கு நிகழ்ந்தது போன்று ஒன்றாக காணப்பட்டது .

அதனால் அந்த மக்கள் மகிழ்வான நிலையன் சுதந்திரத்துடன் வாழ்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் பலம் கொடுக்க வேண்டும் .

கடவுளுக்கும் அங்கீகரித்த அணைத்து நாடுகளுக்கும் இவ்வேளை எமது நன்றி ,

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஜனாதிபதியின் வீட்டுக்குத் தீ
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியின் வீட்டுக்குத் தீ

ஜனாதிபதியின் வீட்டுக்குத் தீ

ஜனாதிபதியின் வீட்டுக்குத் தீ ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது கொள்ளுப்பிட்டியில் அத்துமீறி நுழைந்து அவரது வீட்டில் இருந்த

சொத்துக்களை சேதப்படுத்தி வீட்டுக்குத் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நவுட்டுடுவ கிரந்திடிய பிரதேசத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் (36) ஆசிரியர் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

இப்போராட்டத்தின் போது, ​​கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இரவு, கொள்ளுப்பிட்டியில் உள்ள ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்குள்

பலவந்தமாக நுழைந்த போராட்டக்குழுவினர் அவரது சொத்துக்களைத் தாக்கி தீயிட்டு சேதப்படுத்தியுள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்ட நபர்

இச்சம்பவம் தொடர்பாக 25க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் அவ்வப்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர். நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தலை அடுத்தே மேற்படி விடயங்களை தூசி தட்டப்பட்டு நடத்த பட்டு வருகிறது .

வெட்டி கொலையான காதல் ​ஜோடி
Posted in உலக செய்திகள்

வெட்டி கொலையான காதல் ​ஜோடி

வெட்டி கொலையான காதல் ​ஜோடி

வெட்டி கொலையான காதல் ​ஜோடி ,முன்விரோதம் காரணமாக உறங்கிக் கொண்டிருந்த காதல் ஜோடி மீது கொடூரமான முறையில் ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஒன்று சென்னையில் பதிவாகியுள்ளது.

சென்னை டி.பி.சத்திரம் 27-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் இஸ்ரவேல் (வயது 20). இவர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு

படித்ததாக கூறப்படுகிறது. இவர் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது.

பாடசாலை மாணவி

இவர், ஜாபர்கான்பேட்டை பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர்கள் 2 பேரும் ஒன்றாக ஜாலியாக சுற்றி வந்தனர். கடந்த சனிக்கிழமை இரவு பெரியமேடு பகுதியில் ஒன்றாக கைகோர்த்தபடி நடந்து வந்தனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி அப்பாஸ் என்பவர் வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இஸ்ரவேலின் காதலியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். அதில் மோதல் ஏற்பட்டது. அக்கம், பக்கத்தினர் தடுத்து அவர்களை விலக்கி விட்டுள்ளனர்.

ஆனால் அப்பாஸ் இஸ்ரவேலையும், அவரது காதலியையும் தீர்த்துக்கட்டாமல் விட மாட்டேன் என்று மிரட்டி அனுப்பியதாக தெரிகிறது.

இதனால் இஸ்ரவேல் மிகவும் எச்சரிக்கையோடு தனது காதலியோடு டி.பி.சத்திரம் பகுதியில் உள்ள வீட்டின் மொட்டை மாடியில் நேற்று முன்தினம் இரவு படுத்து தூங்கி உள்ளார்.

அவர்களை தீர்த்துக்கட்டும் நோக்கத்தோடு அப்பாஸ் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து கொடூர தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

காதலிக்கும் அரிவாள் வெட்டு

இஸ்ரவேலுக்கும், அவரது காதலிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் இஸ்ரவேல் பலத்த காயமடைந்தார்.

அவரது காதலிக்கும் காயம் ஏற்பட்டது. அக்கம், பக்கத்தினர் திரண்டு வந்ததால் அப்பாசும், அவரது நண்பர்களும் தப்பி ஓடிவிட்டனர்.

இஸ்ரவேலும், அவரது காதலியும் கீழ்ப்பாக்கம் அரசு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் பொலிசார் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அப்பாசும், மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Error: View 9293b2au4w may not exist
கிணற்றில் இருந்து சடலமொன்று கண்டுபிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

கிணற்றில் இருந்து சடலமொன்று கண்டுபிடிப்பு

கிணற்றில் இருந்து சடலமொன்று கண்டுபிடிப்பு

கிணற்றில் இருந்து சடலமொன்று கண்டுபிடிப்பு ,வெல்லாவெளி, மண்டூர் பிரதேசத்தில் வெல்லாவெளி களுபாலமவிற்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து சடலமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (27) காலை வெல்லாவெளி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி, சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மண்டூர் பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு

கடந்த 26ஆம் திகதி அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு தொடர்பாக சமாதான சபைக்கு அனுப்பப்பட்ட முறைப்பாட்டில் பங்கேற்பதற்காக வீட்டில் இருந்து

தலையில் அடித்து கிணற்றில் வீச பட்ட சடலம்

சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஒரு குழுவால் அல்லது தனி நபரால் உயிரிழந்தவரின் தலையில் அடித்து கிணற்றில் வீசப்பட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளது. .

இந்த கொலை யுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ரணில் முன்னிலையில் சுமந்திரன்
Posted in இலங்கை செய்திகள்

ரணில் முன்னிலையில் சுமந்திரன்

ரணில் முன்னிலையில் சுமந்திரன்

ரணில் முன்னிலையில் சுமந்திரன் ,யாராவது ஒருவர் என்னை துரோகி என்று சொல்லிவிடுவார் எனப் பயந்து உண்மையை சொல்வதற்கு நான் எப்போதுமே பயப்பட்டதில்லை
என பாராளுமன்ற உறுப்பினரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ரணிலின் பயணத்திற்கு வடக்கு மக்கள் தடை

கடந்த 2005 ஆம் ஆண்டு ரணிலின் பயணத்திற்கு வடக்கு மக்கள் தடையாக இருந்திருக்கலாம் அதை இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூர்வார்கள்

என நினைப்பதாக ஐனாதிபதி ரணில் முன்னிலையில் நீங்கள் சில தினங்களிற்கு கூறியிருப்பது தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் நேற்று

நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பிதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது…

தேர்தலில் என்ன நடந்தது

அந்த தேர்தலில் என்ன நடந்தது என்பது எல்லாருக்கும் தெரிந்த விசயம் தானே. ஆனாலும் கிழக்கு மாகாணம் வாக்களித்தது. கிழக்கு மாகாண மக்களுக்கும் இந்த அறிவித்தல் கொடுத்தாலும் அங்கு மக்கள் வாக்களித்தனர்.

ஏனென்றால் அதை அமுல்படுத்துகிற அதிகாரம் அந்தப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருக்கவில்லை.

ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் மக்கள் வாக்களிக்கவில்லை. எனினும் ஒருசிலர் வாக்களித்தவர்கள் என நினைக்கிறேன்.

வாக்களித்த ஒரு சிலரும் அந்த நேரம் நூறுவீதம் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தான் வாக்களித்தார்கள்.

ஆனபடியால் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் யாருக்கு அந்த வாக்கு போயிருக்கும் என்பதில் எவருக்கும் எந்த விதமான சந்தேகமும் இதுவரையில் இருந்த்தில்லை.

ஆனால் இன்றைக்கு ஊடகவியலாளர்கள் தான் இப்படியான சந்தேகத்தை எழுப்புகிறீர்கள்.

தெரிந்த ஒரு விடயத்தை கதைப்பதற்கு பயந்து

எல்லாருக்கும் தெரிந்த ஒரு விடயத்தை கதைப்பதற்கு பயந்து இதைச் சொன்னால் துரோகி என்று சொல்லிவிடுவீர்கள் என கருதி ஊடகவியலாளரே பயந்திருக்கிற ஒரு சூழலைத் தான் இன்றைக்கு இங்கு கேட்கிற கேள்வி

காட்டுகிறதே தவிர எப்படி வாக்கு கொடுக்கப்பட்டிருக்கும் என்பது தொடர்பில் மக்களுக்கு மிகத் தெளிவு இருக்கிறது.

எனினும் நான் எப்போதுமே யாராவது ஒருவர் என்னைத் துரோகி என்று சொல்லிவிடுவார் எனப் பயந்து உண்மையைச் சொல்வதற்கு பயப்பட்டதில்லை என்பதையும் கூறிக்கொள்கிறேன் என்றார்.

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
Posted in உலக செய்திகள்

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பயணிகள் அவசரமாக வெளியிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியிலிருந்து வாரணாசி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு கொடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து தனி இடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட விமானம் முழு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் விமானத்தில் இருந்த பயணிகள் உடனடியாக அவசர வழியாக வெளியேற்றப்பட்டனர்.

இன்று காலை டெல்லியிலிருந்து வாரணாசி செல்வதற்காக இண்டிகோ விமானம் புறப்படத் தயாராக இருந்தது.

பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டு இருந்தனர். இன்னும் சற்று நேரத்தில் விமானம் புறப்பட இருந்தது.

இந்தநிலையில் இண்டிகோ நிறுவனத்திற்கு விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என மிரட்டல் வெளியானது.

உடனடியாக விமான நிலைய அதிகாரிகள், பொலிஸார், தீயணைப்புத் துறையினர் விமானத்தை விமான நிலையத்தின் ஒதுக்குப்புறமான பகுதிக்கு கொண்டு சென்றனர்.

பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றம்

விமானத்தில் இருந்த பயணிகள் அவசர அவசரமாக அவசர வழியில் வெளியேற்றப்பட்டனர்.

தொடர்ந்து விமானம் முழுமையாக வெடிகுண்டு நிபுணர்களால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரச சேவையில் சம்பள முரண்பாடுகள்
Posted in இலங்கை செய்திகள்

அரச சேவையில் சம்பள முரண்பாடுகள்

அரச சேவையில் சம்பள முரண்பாடுகள்

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்கு விசேட குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (27) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல துறைகளில் நிலவும் சம்பள முரண்பாடு

அரச சேவையின் பல துறைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நீக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், உடனடி தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி அமைச்சரவைக்கு பரிந்துரைத்துள்ளார்.#

தீர்வுகளை பரிந்துரைப்பதற்கு குழு

இதன்படி, ஒவ்வொரு துறையிலும் நிலவும் சம்பள முரண்பாடுகளை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை பரிந்துரைப்பதற்கு குழுவொன்றை நியமிக்க வேண்டும்

என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ளதுடன், பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் அடங்கிய குறித்த குழுவை விரைவில் நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன்

ஏக்கநாயக்கவுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தலை அடுத்து இந்த மாற்றங்கள் அதிரடியாக நிகழ்கின்றன