Posted in இலங்கை செய்திகள்

உதயசூரின் சின்னத்தில் புதிய கூட்டணி

உதயசூரின் சின்னத்தில் புதிய கூட்டணி

கிழக்கில் 4 கட்சிகள் இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி கட்சி உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் சின்னம்

உதயசூரின் சின்னம் தெரிவு செய்யப்பட்டு தேர்தலில் களமிறங்கவுள்ளதாக கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ரி. சிவநாதன் தொரிவித்தார்

மட்டக்களப்பு ஏரன்ஸ் வீதியில் அமைந்துள்ள கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைமைகாரியலயத்தில் நேற்று (22)

இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வி. ஆனந்த சங்கரி, இலங்கை தமிழர் முற்போக்கு முன்னணி கட்சி

தலைவர்முன்னாள் பிரதி அமைச்கருமான நா.கணேசமூர்த்தி ஆகியேர் கலந்து கொண்டுனர். இதன்

போது கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ரி. சிவநாதன் இவ்வாறு தெரிவித்தனர்.

கிழக்கு தமிழர் ஒன்றியம் நீண்ட காலமாக கிழக்கில் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றினைத்து பொதுச்

சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற முயற்சியை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஆரம்பித்து இன்று சிவராத்திரி தினத்தில் வெற்றி கண்டுள்ளது.

கிழக்கு தமிழர் ஒன்றிய தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற செயற்குழு கூட்டத்திலே எதிர்வருகின்ற

பாராளமன்றம் மாகாணசபை தேர்தலில் போட்டியிட வைப்பதற்கான கலந்துரையாடல் சுமூகமான முறையில்

இடம்பெற்றது தமிழர் ஐக்கிய முன்னணி பெயர் கொண்ட கூட்டணி அமைக்கப்பட்டு இதன் சின்னம் உதய சூரியன் ஆகும்.

தற்போது 4 கட்சிகளான பி. ஆனந்த சங்கரியை தலைசராக கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, சிரேஷ்ட

சட்டத்தரணியான ரி. சிவநாதன் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனை தலைவராக கொண்ட முற்போக்கு

தமிழர் அமைப்பு, முன்னாள் பிரதி அமைச்சாரன நா. கணேசமூர்தியை தலைவரான கொண்ட இலங்கை தமிழர்

முற்போக்கு முன்னணி ஆகிய 4 கட்சிகள் இன்று இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி என கட்சி உருவாக்கப்பட்டு தமிழ்

மக்களின் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணயின் சின்னமான உதய சூரியன் சின்னத்தை இந்த தமிழர் ஜக்கிய

முன்னணியின் ஏகோபித்த சின்னமாக தெரிவு செய்து உடன்பாட்டில் கைச்சாத்துட்டுள்னர்.

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கிழக்கு தமிழர் ஓன்றியம் பேச்சு வார்த்தையில் பல தடவை ஈடுபட்டோம் அவர்கள்

எங்கள் கொள்கையை ஏற்றுக் கொண்டிருந்தனர். கள நிலை யதார்த்த நிலையை உணர்ந்து எமது முயற்சி நன்று

என்றனர். ஆனால் தாங்கள் வீட்டு சின்னத்தை விட்டு எமது சின்னத்தில் வருவது பிரச்சனையுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

கிழக்கு மாகாணத்தின் கள நிலையை கருத்தில் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பை விடுத்து ஏனைய தமிழ் கட்சிகள் ஒன்றினைந்து ஒரு குடையின் கீழ் சேர்ந்து

போட்டியிடுவது மிகவும் சாதூரியமானது சானக்கியமான விடயமாக அமையும் இதன் மூலம் தமிழர்களின் வாக்கு

சிதறடிக்காமல் கனிசமான ஆசனங்களை பெற்றுக் கொள்ளலாம்.

கடந்த காலத்தில் தேசிய தலைவர் தமிழ் மக்களின் வாக்கு சிதறக் கூடாது என அவர் துரோகி என்றும் தியாகி என்றும்

பார்க்காமல் அவருக்கு துரோகிகளாக இருந்த இயக்கங்களையும் சேர்த்து இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியிருந்தார்.

அதேபோல கிழக்கு மாகாணத்தில் வாக்குகள் சிதறக் கூடாது என கருத்தில் எடுத்து அம்பாறை மட்டக்களப்பு

திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் கட்சிகள் ஒன்றினைகின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அதே நோக்கம் தான் இந்த தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியும் உருவாக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது அதன் மூலம் இனப் பிரச்சனைக்கான

சாத்தியமான தீர்வை அடைவது அதன் மூலம் தமிழ் மக்களின் அபிவிருத்தி பாதையை முன்னெடுப்பது எனவே

வெறுமனமே போலி தேசியம் பேசி தமிழ் மக்களை பட்டினிச் சாவில் போட விரும்பவில்லை தமிழ் தேசிய

கூட்டமைப்புக்கு எதிரானனவர்ள் அல்ல அவர்கள் இதுவரை காலம் பயணித்த விதம் தமிழ் மக்களை பாதுகாக்க கூடியதானது அல்ல.

அவர்கள் தனிநலனை பேணக் கூடியதை தான் இதுவரை காலமும் இருந்தது. ஆகவே தமிழ் மக்கள் அவர்கள் மீது

நம்பிக்கையில்லை எனவே தமிழ் மக்களை பாதுகாக்க கூடிய மாற்று அணி தேவை அது புத்துஜீவிகள் கொண்ட

நல்ல அமைப்பை உருவாவேண்டும் என மக்களின் அவாவாக இருந்தது அதனால் இந்த அணியை உருவாகியுள்ளோம்.

எனவே ஏனைய தமிழ் கட்சிகள் வந்து இணையுமாறு அழைப்பு விடுகின்றோம் அதேவேளை கருணா அம்மானை

கொண்டு தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியும் எம்முடன் நேர்ந்து செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளனர்

. அவர்கள் எதிர்வரும் நாட்களில் உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளனர் என அவர் தெரிவித்தார்

Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் தேங்காய் ஏற்றி சென்ற பட்டா ரக வாகனம் பாலத்திற்குள் பாய்ந்து விபத்து PHOTO

வவுனியாவில் தேங்காய் ஏற்றி சென்ற பட்டா ரக வாகனம் பாலத்திற்குள் பாய்ந்து விபத்து PHOTO

வவுனியா நொச்சிமோட்டை பாலத்தடியில் இன்று (21.02.2020) அதிகாலை 4.00 மணியளவில் இலகுரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.

இவ் விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

யாழிலிருந்து ஏ9 வீதியூடாக வவுனியா நோக்கி தேங்காய்களை ஏற்றிக்கொண்டு பயணித்துக் கொண்டிருந்த இலகுரக வாகனம் நொச்சிமோட்டை

பாலத்திற்கு அருகில் சென்றபோது வேக்கட்டுப்பாட்டை இழந்து பாலத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் வாகனம் சிறு சேதங்களுக்குள்ளாகியுள்ளதுடன் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் தேங்காய்
வவுனியாவில் தேங்காய்
Posted in இலங்கை செய்திகள்

பேஸ்புக்கில் பெண்களின் படங்களை நிர்வாணப் படமாக்கி வெளியிட்ட கும்பல்

பேஸ்புக்கில் பெண்களின் படங்களை நிர்வாணப் படமாக்கி வெளியிட்ட கும்பல்

இலங்கையில் பேஸ்புக்கில் உள்ள பெண்களின் படங்களை நிர்வாண படங்களாக்கி வெளியிட்ட கும்பல் ஒன்றை காவல் துறையினர் மடக்கி பிடித்துள்ளனர் .

இவ்வாறு கைதுசெய்ய பட்டுள்ள ஏழு பேரிடம் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

இவர்கள் அனைவரும் மாணவர்கள் என்பதுடன் அனைவரும் இருபது வயதுக்கு உள்ளிட்டவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

ஆடைகள் அணிந்த வண்ணம் தமது பக்கங்களில் வெளியிட்ட பெண்களின் புகைப்படத்தை எடுத்து இவ்வாறு நிர்வாணப் படமாக்கி வெளியிட்டுள்ளனர்

இதற்கு என விசேட தொழில்நுட்பத்தை இவர்கள் பயன் படுத்தியுள்ளது கண்டறிய பட்டுள்ளது

பேஸ்புக்கில் பெண்களின்
பேஸ்புக்கில் பெண்களின்
https://www.youtube.com/watch?v=V2x2bofkbpY
Posted in இலங்கை செய்திகள்

தாய் கள்ள காதல் ,பொலிஸ் சிப்பாயை கொன்று வீசிய மகன்

தாய் கள்ள காதல் ,பொலிஸ் சிப்பாயை கொன்று வீசிய மகன்

காணாமல்போன பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை செய்யப்பட்டதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, 3

பொலிஸ் குழுக்கள் கடந்த 18 ஆம் திகதி முதல் குளியாபிட்டிய, கங்கனிமுல்ல காட்டில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது காட்டில் பல இடங்களில் இரத்தம் காணப்பட்டதாகவும் ஆனால் சடலம்

எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் வீரகெட்டிய பகுதியை வசிப்பிடமாக கொண்ட 37 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த 16 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடவத்த பகுதியில் உள்ள பெண் ஒருவருடன் கள்ள உறவில்

இருந்ததாகவும், அந்த பெண்ணின் மகன் இந்த கொலையை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாய் கள்ள காதல் பொலிஸ்
https://www.youtube.com/watch?v=V2x2bofkbpY
Posted in இலங்கை செய்திகள்

நேரெதிர் மோதிய இரு பேரூந்துகள் – 40 பேர் காயம்

நேரெதிர் மோதிய இரு பேரூந்துகள் – 40 பேர் காயம்

தம்புள்ள பகுதியில் நேரெதிர் இரு பேரூந்துகள் மோதியதில் அதில் பயணித்த நாற்பது
பொதுமக்கள் படுகாயமடைந்தனர் .

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

குறித்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

சாரதிகள் அலட்சிய போக்கே இவ்வாறான விபத்துக்களுக்கு காரணம் என கண்டறிய பட்டுள்ளது

நேரெதிர் மோதிய இரு
நேரெதிர் மோதிய இரு
https://www.youtube.com/watch?v=V2x2bofkbpY
Posted in இலங்கை செய்திகள்

காவல்துறையை ஊழியரை கொன்று வீசிய பேரூந்து

காவல்துறையை ஊழியரை கொன்று வீசிய பேரூந்து

மஸ்கெலியாவில் இருந்து நல்லதன்னி நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர்

ஒருவர் மவுசாகலை சோதனை சாவடியில் வைத்து பேருந்தின் பின் டயர் பகுதியில் சிக்குண்டு உயிரிழந்து உள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (20) இரவு 7 மணி அளவில் இடம்பெற்றதாகவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸ் திணைக்களத்தின் வாழ்க்கை பாதுகாப்பு பிரிவில் பணியாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

40 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான கெப்படிபொல பகுதியை சேர்ந்த அஜித்வீரசூரிய என்ற

பொலிஸ் உத்தியோக்தரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

வீதியில் இறந்த நிலையில் மீட்க பட்ட முஸ்லீம் நபர்

வீதியில் இறந்த நிலையில் மீட்க பட்ட முஸ்லீம் நபர்

இலங்கை திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் இறந்த நிலையில் முஸ்லீம் நபர் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

இவரது இறப்பு கொலையா,தற்கொலையா என்பது தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் .

48 வயதுடைய நபரே இவ்வாறு இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

வீதியில் இறந்த நிலையில்
வீதியில் இறந்த நிலையில்
Posted in இலங்கை செய்திகள்

இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து – லைகா நிறுவனம் மீது வழக்கு

இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து – லைகா நிறுவனம் மீது வழக்கு

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக லைகா நிறுவனம் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து – லைகா நிறுவனம் மீது வழக்குப்பதிவு
விபத்து நிகழ்ந்த பகுதி


சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் படம் ‘இந்தியன்-2’. இதன் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி. பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து

வருகிறது. நேற்று இரவு மிக உயரமான ராட்சத கிரேனில் மின்விளக்குகளை பொருத்தி காட்சிகள் படமாக்கப்பட்டது.

அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குனர் கிரு‌‌ஷ்ணா, கலை உதவி

இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9

பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நடிகர் கமல் தரப்பில் தலா ரூ.1 கோடி நிதியுதவியும், லைகா

நிறுவனம் சார்பில் ரூ.50 லட்சம் நிதியுதவியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து நிகழ்ந்த பகுதி

இந்நிலையில், இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ்

நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் கிரேன் உரிமையாளர், புரொடக்‌ஷன் மேனேஜர்

மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இணை இயக்குனர் குமார் என்பவர் கொடுத்த புகாரின்

அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் 2 படப்பிடிப்பில்
https://www.youtube.com/watch?v=V2x2bofkbpY
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா ரூ.12 கோடி நிதி

யாழ்ப்பாணம் விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா ரூ.12 கோடி நிதி

யாழ்ப்பாணம் விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா ரூ.11 கோடியே 83 லட்சம் நிதி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

யாழ்ப்பாணம் விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா ரூ.12 கோடி நிதி
யாழ்ப்பாணம் விமான நிலையம்

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் பெருவாரியாக வாழ்கின்றனர். அங்குள்ள யாழ்ப்பாணம்,

அந்த நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாகும். இதுதான் விடுதலைப் புலிகளின் தலைமையகமாக திகழ்ந்தது.

இந்தியாவின் அலையன்ஸ் ஏர் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் சென்னைக்கு ஒரு விமான சேவையை

தொடங்கியபோது, யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்கும் முதல்

நிறுவனமாக மாறியது. இந்த மாதம்தான் கொழும்பு நகரில் இருந்து யாழ்ப்பாணம் பலாலிக்கு முதல் பயணிகள் விமான

சேவை தொடங்கியது. இதன் மூலம் யாழ்ப்பாணம் பலாலி, சென்னை இடையே பயணிகள் விமான போக்குவரத்து சீராக நடைபெறும்.

இந்த விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா முன்வந்துள்ளது. இதற்காக இந்தியா ரூ.11 கோடியே 83 லட்சம்

நிதி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. இந்த திட்டத்துக்கு இலங்கை மந்திரிசபை நேற்று முன்தினம் ஒப்புதல்

அளித்தது. இந்த நிலையில் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை மேம்படுத்த விரைவில் இந்தியாவுடன்

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று இலங்கை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின்படி, யாழ்ப்பாணம் பலாலி

விமான நிலையத்தில் முனையம் மாற்றியமைப்பு, மின்வினியோகங்கள், பயன்பாட்டு சேவைகள்,

போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படும் என்று இலங்கை அறிவித்துள்ளது.

இதன்காரணமாக வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் சமூக பொருளாதார நலன்கள் அதிகரிக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

யாழ்ப்பாணம் விமான நிலையத்தை
https://www.youtube.com/watch?v=V2x2bofkbpY
Posted in மருத்துவம்

முகத்தில் வழியும் எண்ணெய்- தவிர்க்கும் வழிகள்

முகத்தில் வழியும் எண்ணெய்- தவிர்க்கும் வழிகள்

முகத்தில் எண்ணெய் வழிவதை குறைத்து, நாள் முழுக்க பளபளப்பாக தோன்ற இந்த விசயங்களைத்தான் நீங்கள்

செய்ய வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

முகத்தில் வழியும் எண்ணெய்- தவிர்க்கும் வழிகள்
முகத்தில் வழியும் எண்ணெய்- தவிர்க்கும் வழிகள்


எத்தகைய சருமமாக இருந்தாலும் சரி, அதை காலை முதல் மாலை வரை, புத்துணர்ச்சியுடன், பளிச்சென பராமரிக்கும்

ஆர்வம் உங்களுக்கு இருந்தால் போதும். உங்கள் முகத்தை அழகாக மாற்றுவது எளிது. எண்ணெய் வழியும்

பிரச்சனையை தவிர்க்க, இதோ உங்களுக்கு சில அழகு குறிப்புகள். இவை உங்களுக்கு நிச்சயமாக நல்ல பயன் தரும்:

உங்களது முகத்தில் ரொம்ப எண்ணெய் வழிந்தால், மை ஒற்றும் காகிதம் பயன்படுத்தி, அதை ஒற்றி

எடுத்துவிடுங்கள். இந்த மை ஒற்றும் காகிதம் எப்போதும் கையில் வைத்திருப்பது நல்லது. அனைத்து அழகுப் பொருட்கள் விற்கும் கடைகளிலும் இது கிடைக்கும்.

முகத்தை நன்கு சுத்தம் செய்ய மறந்துவிடாதீர்கள். உங்கள் முகத்தில் எண்ணெய் வழிவதால், எந்நேரமும் அதனை

பேப்பர் வைத்து துடைத்துக் கொண்டே இருக்கனும் என்பது அவசியமில்லை. அதற்குப் பதிலாக, முகத்தை சுத்தம்

செய்ய உதவும் பொருட்கள் நிறைய மார்க்கெட்டில் கிடைக்கப்பெறுகின்றன. அவற்றை வாங்கி

பயன்படுத்தலாம். முகத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்வதால், முகத்தின் இறுக்கம் மறைந்து, தளர்வு ஏற்படும். இதுதவிர,

முகத்தில் உள்ள எண்ணெய்பசை, அழுக்குகள் அகன்றுவிடும். இந்த வைத்திய முறையை மிக மெதுவாகச்

செய்ய வேண்டும். கடுமையாகச் செய்தால், ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

முகத்தில் எண்ணெய் வழிவதை கட்டுப்படுத்த, இலகுவான, எண்ணெய் பசையற்ற மாஸ்ச்சுரைஸரை தடவுங்கள். இதை மறந்துவிடவேண்டாம்.

பிரைமர் தடவுவதால், முகத்தின் எண்ணெய்பசை உடனடியாக உறிஞ்சப்படுகிறது. உங்களுக்கு

மென்மையான, வெல்வெட் போன்ற முகம் கிடைக்க, இது உதவும். லேக்மி ஆலி டே கிரீம், அக்வா ஜெல்லை பிரைமராக பயன்படுத்தி, கன்ன கதுப்புகள், நெற்றி உள்ளிட்ட

பகுதிகளில் தடவுங்கள். இது நாள் முழுக்க முகம் பளபளப்புடன் இருக்க உதவும். இதுதவிர, முகத்தில் உள்ள

ஓட்டைகள், பள்ளங்கள், தழும்புகள் போன்றவற்றை, இது மறைத்து, மேக்அப்பை எடுத்துக் காட்ட உதவும்.

படுக்கை நேரத்திலும், மேக்அப் விசயத்தில் சற்று கவனம் செலுத்துவது நலம் என்றே சொல்வேன். அதாவது, நீங்கள்

தினமும் கிரீம் பயன்படுத்திவந்தால், லோஷன் வகையான பொருட்களை, படுக்கும் முன்பு, தடவிக் கொள்ளுங்கள்.

நீங்கள் லோஷன் விரும்பி எனில், ஹைட்ரேட்டிங் சீரம் பயன்படுத்தி பாருங்கள். அதேபோல, லோஷன் தடவும்

முன்பு, எங்கே தடவுகிறோம் என்பதில் கவனம் தேவை. மறந்தும்கூட மூக்கின் மீது தடவ வேண்டாம். அங்குதான் நிறைய எண்ணெய் சுரப்பிகள் உள்ளன.

https://www.youtube.com/watch?v=Y6Uc68tIwx4
Posted in சினிமா

தமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை – ராஷ்மிகா

தமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை – ராஷ்மிகா

தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை என்று கூறியுள்ளார்.

தமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை – ராஷ்மிகா
ராஷ்மிகா


நடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த ஒரு வருட காலத்தில் கிடுகிடுவென முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டார். தெலுங்கு மற்றும் தமிழில் பிசியாக வலம் வரும் இவர்,

தற்போது தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் நடிக்கிறார். விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் கூட இவர் தான் கதாநாயகியாக நடிக்கிறார் என்று சொல்லப்பட்ட

நிலையில் அந்த வாய்ப்பு திடீரென பேட்ட படத்தில் நடித்த மாளவிகா மோகனனுக்கு சென்று விட்டது.

தற்போது தெலுங்கில் பீஷ்மா என்கிற படத்தில் நடித்துள்ள ராஷ்மிகா, அந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில்

கலந்து கொண்டு வருகிறார். அப்போது அவரிடம் உங்களது நண்பர், பாய்பிரண்ட் மற்றும் உங்களுக்கு கணவராக

வரப்போகிறவர் என எந்தெந்த நடிகர்களை கூறுவீர்கள் என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது..

ராஷ்மிகா

அதில் தெலுங்கு நடிகர் நிதின் எனக்கு நண்பராக இருக்க வேண்டும் எனக் கூறியவர், எனக்கு பாய் பிரண்டாக இருக்க

வேண்டும் என நான் விரும்புவது நடிகர் விஜய்யை தான் என கூறியுள்ளார் ராஷ்மிகா. ஆனால் தனக்கு கணவனாக

வரப்போகும் நபர் என எந்த நடிகரையும் குறிப்பிட்டுச் சொல்லாதவர், தமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை என கூறியுள்ளார்.

தமிழ் நடிகரை திருமணம்
தமிழ் நடிகரை திருமணம்
https://www.youtube.com/watch?v=Y6Uc68tIwx4
Posted in சினிமா

என்னை ஒழிக்க முயன்றார் – சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார்

என்னை ஒழிக்க முயன்றார் – சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார்

பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான தர்ஷன், என்னை ஒழிக்கமுயன்றார் என்று நடிகை சனம் ஷெட்டி மீது புகார் கூறியிருக்கிறார்.

என்னைஒழிக்க முயன்றார் – சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார்
சனம் ஷெட்டி – தர்ஷன்
தர்ஷனுடன் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது என்றும், இப்போது என்னை திருமணம் செய்ய மறுக்கிறார் எனவும்

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை சனம் ஷெட்டி புகார் அளித்தார். இதற்கு பதில் அளித்த தர்ஷன் முன்னாள்

காதலருடன் சனம் ஷெட்டி இருந்ததை பார்த்த பிறகு அவர் வேண்டாம் என்று விலகி விட்டேன் என்றார்.

இதனை சனம் ஷெட்டி மறுத்தார். தர்ஷனும், நானும் இரண்டரை வருடம் கணவன்-மனைவி போலவே

வாழ்ந்தோம். திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டோம். ஆனால் அவர் மாறி விட்டார். முன்னாள் காதலருடன் நான் இருந்ததாக கூறி இருப்பதில் உண்மை இல்லை என்றார்.

இந்த நிலையில் சனம் ஷெட்டியை பிரிந்த காரணத்தை தர்ஷன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

சனம் ஷெட்டி – தர்ஷன்

“சில உறவுகள் தோல்வி அடைவதற்கு என்ன காரணமாக இருந்தாலும், அது இருவர் சம்பந்தப்பட்ட விஷயம். ஒருவருக்கு அல்லது இருவருக்கு மகிழ்ச்சி இல்லை என்றால்

பிரச்சினை சிக்கலாவதற்குள் சுமுகமாக பிரிவதுதான் தீர்வாக இருக்கும். மகிழ்ச்சியில்லாத உறவை தொடர்வது சரியல்ல.

அந்த நபர் மீது மரியாதை வைத்திருந்தேன். ஆனால் எங்கள் உறவு ஆரோக்கியமானதாக இல்லை. அவர் என்னை ஒழிக்க முயன்றார். நான் காயப்பட்டேன். அவரது

குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. எனது எதிர்காலம் மீது முன்பை விட அதிக கவனம் செலுத்தி வருகிறேன். எனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு நன்றி.”

இவ்வாறு தர்ஷன் கூறியுள்ளார்.

https://www.youtube.com/watch?v=Y6Uc68tIwx4
Posted in சினிமா

ரசிகர்களை பதற வைத்த அந்த நடிகை

ரசிகர்களை பதற வைத்த அந்த நடிகை

நடிகை சிம்ரன், தான் ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களை பதற வைத்த சிம்ரன்
சிம்ரன்
நேருக்கு நேர், அவள் வருவாளா, நட்புக்காக, துள்ளாத

மனமும் துள்ளும், பம்மல் கே.சம்பந்தம் என்று பல வெற்றி படங்களில் நடித்துள்ள நடிகை சிம்ரன், புகழின் உச்சியில்

இருந்த போதே 2003ம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு திரையுலகை விட்டு விலகியே இருந்தார்.

அதன் பின்னர், நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் தீவிரமாக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்படத்தில் வில்லியாக மிரட்டிய சிம்ரனுக்கு ரஜினியுடன் ஜோடியாக நடித்த பேட்ட

படம் வரவேற்பை கொடுத்தது. மீண்டும் பழைய சிம்ரனைப் பார்த்த மகிழ்ச்சியில் அவரது ரசிகர்களும் கொண்டாடினார்கள்.

சிம்ரன்

இந்நிலையில், அவரது ட்விட்டர் பக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் படத்தின் படப்பிடிப்பின் போது

எடுக்கப்பட்டது என்று கூறி நெத்தி, கை, கால்களில் எல்லாம் ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை

வெளியிட்டு ரசிகர்களை பதற வைத்து விட்டார். இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், உண்மையிலேயே

நடிகை சிம்ரனுக்கு அடிப்பட்டுவிட்டதோ என்று கலங்கி, ஆறுதல் சொல்லி வருகிறார்கள். பின்னர், இது படப்பிடிப்பு

தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரிந்த பிறகு தான் நிம்மதி அடைந்தனர்.

ரசிகர்களை பதற வைத்த
ரசிகர்களை பதற வைத்த
https://www.youtube.com/watch?v=Y6Uc68tIwx4
Posted in சினிமா

நடிகையின் கவர்ச்சிக்கு எதிர்ப்பு

நடிகையின் கவர்ச்சிக்கு எதிர்ப்பு

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கியாரா அத்வானியின் சமீபத்திய கவர்ச்சி போட்டோஷூட்டுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

டோனி பட நடிகையின் கவர்ச்சிக்கு எதிர்ப்பு
கியாரா அத்வானி


கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை படத்தில் நடித்தவர் கியாரா அத்வானி. அடுத்து மெஷின், லஸ்ட் ஸ்டோரிஸ் போன்ற இந்தி படங்களில் நடித்ததுடன் தமிழ், தெலுங்கில்

உருவான பரத் எனும் நான் படத்தில் மகேஷ்பாபு ஜோடியாக நடித்திருந்தார். முன்னணி ஹீரோயின்கள் ஒருபக்கம்

திரைப்படத்தில் நடித்தாலும் வெப் தொடரிலும் நடித்து வருகின்றனர். அந்த வரிசையில் கியாராவும் வெப் தொடரில் நடிக்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில் கியாரா நடத்திய போட்டோஷூட் சர்ச்சையாகி இருக்கிறது. அரை நிர்வாண தோற்றத்தில்

நிற்கும் அவர் தோட்டத்தில் இருக்கும் ஒரு செடியின் இலையை கொண்டு தனது உடலை இலைமறை காய்போல் மறைத்தும் காட்டியும் போஸ் தந்திருக்கிறார்.

கியாரா அத்வானி

இதுபற்றி அவர் கூறும்போது, ‘இது கலையின் ஒரு பகுதி. இப்படத்தில் ஆபாசம் கிடையாது’ என குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் ஒரு சிலர், ‘இந்திய கலாச்சாரத்தையும், மதிப்பையும் குலைக்கும் வகையில் கியாரா போஸ் அளித்திருக்கிறார்’ என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நடிகையின் கவர்ச்சிக்கு எதிர்ப்பு

Posted in இலங்கை செய்திகள்

லண்டன் பள்ளிவாசலில் கத்தி குத்து -ஆயுத பொலிசார் குவிப்பு

லண்டன் பள்ளிவாசலில் கத்தி குத்து -ஆயுத பொலிசார் குவிப்பு

பிரட்டன் மத்திய லண்டன் பகுதியில் அமைந்துள்ள முஸ்லீம்கள் பள்ளி


வாசலுக்குள் புகுந்த நபர் ஒருவர் அங்கு நின்ற 70 வாயது நபர் மீது சரமரியாக கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டார் .

இதனால் அவர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுளளார் .

எனினும் அவர் உயிராபத்து இன்றி மருத்துவமனையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

இது ஒரு பயங்கர தாக்குதல் சம்பவமாக தெரிவிக்க பட்டுள்ளது .


தற்போது ஆயுத போலீசார் குவிக்க பட்டு பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது

கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டவர் வெள்ளை இனத்தவர் என அடையாளம் காண பட்டுளளார் ,அவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுளளார்

லண்டன் பள்ளிவாசலில் கத்தி
லண்டன் பள்ளிவாசலில் கத்தி
https://www.youtube.com/watch?v=Y6Uc68tIwx4
Posted in இலங்கை செய்திகள்

யாழில் இருந்து தமிழகத்திற்கு 7 நாள் விமான சேவை

யாழில் இருந்து தமிழகத்திற்கு 7 நாள் விமான சேவை

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் இருந்து

தமிழகத்திற்கு வாரத்தில் ஏழு நாட்களுக்கும் விமான

சேவையை நடத்த உள்ளதாக குறித்த சேவையை

மேற்கொள்ளும் விமான சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

நாள் தோறும் மக்களின் வருகை அதிகரித்து செல்வதை

அடுத்து இந்த பயண சேவை விரிவாக்க பட்டுள்ளது .

எதிர் வரும் பங்குனி இறுதியில் இருந்து இந்த சேவை ஏழு நாளும் மேற்கொள்ள திட்டமிட்ட பட்டுள்ளது

நூறு முதல் நூற்றி ஐம்பது பயணிகள் நாள்தோறும் பயணம்

செய்யும் நிலையில் இந்த சேவை விஸ்தரிக்க பட்டுள்ளது

என தெரிவிக்க பட்டுள்ளது

யாழில் இருந்து தமிழகத்திற்கு
யாழில் இருந்து தமிழகத்திற்கு
https://www.youtube.com/watch?v=Y6Uc68tIwx4
Posted in இலங்கை செய்திகள்

வெளிநாட்டு வேலை பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்த நபர் கைது

வெளிநாட்டு வேலை பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்த நபர் கைது

இளநகையில் இருந்து சைப்ரஸ் நாட்டுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி 80 ஆயிரம் ரூபா பண

மோசடியில் ஈடுபட்ட நபரொருவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

பொலிசாருக்கு வழங்க பட்ட முறைப் பாட்டை அடுத்து இந்த கைது வேடடை இடம்பெற்றுள்ளது ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

விசாரணைகளை அடுத்து இவருடன் தொடர்பில் இருந்த மேலும் பலர் கைது செய்ய படலாம் என எதிர் பார்க்க படுகிறது

https://www.youtube.com/watch?v=Qhjx0fB5mZA
Posted in இலங்கை செய்திகள்

தப்பி ஓடிய 13 அதிகாரிகள் உள்ளிட்ட – 8024 இராணுவத்தினர் மீள் இணைவு

தப்பி ஓடிய 13 அதிகாரிகள் உள்ளிட்ட – 8024 இராணுவத்தினர் மீள் இணைவு

இலங்கை இராணுவத்தில் இருந்து தப்பி ஓடியா சுமார் ஐம்பதாயிரம் படையில் ,அரசு வழங்கிய பொது மன்னிப்பு

காலத்தில் மட்டும் 13 அதிகாரிகள் மற்றும் முப்படையைச் சேர்ந்த 8024 இராணுவத்தினர் மீளவும் இராணுவத்தில்

தம்மை இணைத்துள்ளதாக இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது

இது தமக்கு கிடைக்க பெற்ற மகத்தான வெற்றி என இராணுவம் அறிவித்துள்ளது ,புலிகளின் தாக்குதல்களை

எதிர்கொள்ள முடியாது இந்த இராணுவதினர் தப்பி ஓடி இருந்தனர் ,அவ்வாறனவர்கள் மீளவும் இணைந்துள்ளனர்

.இவர்களை காணவில்லை பாட்டியலில் இராணுவம் இணைத்திருந்தமை குறிப்பிட தக்கது

தப்பி ஓடிய 13 அதிகாரிகள்
https://www.youtube.com/watch?v=iGbZzFoW_fg
Posted in இலங்கை செய்திகள்

கத்தியால் வெட்டி நபர் படுகொலை – சடலம் மீட்பு

கத்தியால் வெட்டி நபர் படுகொலை – சடலம் மீட்பு

இலங்கை மாத்தறை பகுதியில் மர்ம நபர்களினால் நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்ய பட்டுளளார்

இரத்த வெள்ளத்தில் மிதந்த சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது

இலங்கையில் தற்பொழுது கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்காகி பலர் பலியாகி வருகின்றமையும்


இதனை தடுக்க இலங்கை அரசு முடியாது திணறி வருவதும் குறிப்பிட தக்கது

கத்தியால் வெட்டி நபர்
https://www.youtube.com/watch?v=iGbZzFoW_fg
Posted in இலங்கை செய்திகள்

ஜெனீவா மனித உரிமை தீர்மானத்தில் இருந்து விலக அமைச்சரவை அனுமதி

ஜெனீவா மனித உரிமை தீர்மானத்தில் இருந்து விலக அமைச்சரவை அனுமதி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் 2015 ஆம் ஆண்டு கூட்டாக கொண்டு வந்த தீர்மானத்தை

மீளப்பெற்றுக் கொள்ள இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுவரும் அமைச்சரவை தீர்மானங்களை

அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுள்ள அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

ஜெனீவா மனித உரிமை