Posted in இலங்கை செய்திகள்

அதிகாரபூர்வ இல்லத்தை கூட பெற்றுக்கொள்ளாத அமைச்சராக நான் இருந்தேன் -மனோ கணேசன்

அதிகாரபூர்வ இல்லத்தை கூட பெற்றுக்கொள்ளாத அமைச்சராக நான் இருந்தேன் -மனோ கணேசன்

மனோ கணேசன் எம்பி
அமைச்சர்கள் வாங்கி பயன்படுத்தியதாக கூறப்படும் வாகனங்கள் பற்றி பெரிய எடுப்பில் பேசப்படுகிறது.

எனது அமைச்சு பற்றியும் பேசப்பட்டது. நான் அமைச்சராகியது, 2015ம் ஆண்டு. அப்போது அங்கு இருந்த பழைய வாகனம், அன்றைய முன்னாள் அமைச்சர்கள்

வாசுதேவ நாணயக்கார, ஜோசப் மைக்கல் ஆகியோர் பயன்படுத்திய வாகனம் ஆகும். உடனடியாக வாகனம்

வாங்க நிதி ஒதுக்கீடு இருந்தாலும், நான் வாகனம் வாங்கவில்லை.

இரண்டு வருடம் முடிய, 2017ல் ஒருமுறை பணி காரணமாக நான் யாழ்ப்பாணம் சென்றபோது, எனது வாகனம் நடு

வீதியில் நின்று விட்டது. அதன்பிறகே வாகனம் வாங்கும்படி அமைச்சு செயலாளர் என்னிடம் கேட்டுக்கொண்டார்.

பிறகே வாகனம் வாங்கும்படி நான் சொன்னேன். அதாவது நிதி ஒதுக்கீடு இருந்தும் இரண்டு வருடம் கழித்து

அமைச்சருக்கு கடைசியாக வாகனம் வாங்கிய அமைச்சு, எனது அமைச்சே என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச

கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் எம்பி நேற்று பாராளுமன்றத்தில் உரையாடும் போது கூறினார்.

மனோ எம்பி மேலும் கூறியதாவது,

அமைச்சர்களுக்கு, அவ்வந்த அமைச்சுகள் வாகனம் வாங்குவது என்பது எப்போதும் எல்லா அரசாங்கங்களிலும் நடைபெறும் ஒரு விடயம். இதை வேண்டுமென்றே நீங்கள்

பெரிது படுத்துகிறீர்கள். இவ்வாகனங்களை எவரும் வீட்டுக்கு கொண்டு போவதில்லை. அவை அந்த அமைச்சின் வாகனங்கள். எம் சொந்த வாகனங்கள் அல்ல.

அமைச்சரவை ராஜினாமா செய்த அடுத்த நாளே, நான் என் வாகனங்களை எல்லாம் மீள எனது அமைச்சு செயலாளரிடம் ஒப்படைத்து விட்டேன். இன்று யாராவது ஒரு முன்னாள்

அமைச்சரின் வாகனங்கள் அந்த அமைச்சுகளுக்கு மீள ஒப்படைக்கப்பட்டிருக்காவிட்டால் அல்லது வாகனங்கள்

காணாமல் போய் இருந்தால், அவற்றை தேடுங்கள். நடவடிக்கை எடுங்கள்.

ஆகவே இந்த வாகனங்களை பற்றி பேசும்போது அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பொறுப்புடன் பேச வேண்டும். பொதுவாக பேசாமல், யார் இன்னமும் வாகனங்களை மீள

ஒப்படைக்கவில்லை, யார் என்ன வாகனம் பாவித்தார்கள், என்று பெயர் குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

இன்னொரு விடயம் இங்கே பேசப்படுவதில் ஒரு அடிப்படை மயக்கம் உள்ளது. அதாவது, இந்த வாகனங்கள் வாங்கும்

நிதி தொகையில் 60 விகிதம் மீண்டும் வரி காரணமாக அரசாங்க திறைசேரிக்கு போகிறது. ஒரு வாகனம் 40

மில்லியன் என்றால் சுமார் 30 மில்லியன் மீண்டும் அரசாங்க திறைசேரிக்கு போகிறது.

எனது அமைச்சில் மூன்று சொகுசு வாகனங்கள் இருந்ததாக கூறுகிறார்கள். ஒன்று அமைச்சரான எனது வாகனம்.

அடுத்த இரண்டு வாகனங்கள் எவை? இன்று இந்த ஆளும் கூட்டணியின் தவிசாளர் யார்? முன்னாள் ஜனாதிபதி

மைத்திரிபால சிறிசேன. மைத்திரிபாலவுக்கு கீழ் இருந்த அமைச்சின் ராஜாங்க அமைச்சரே திரு. பெளசி. அதேபோல் பிரதி அமைச்சர் அலி சாஹிர் மௌலானா. இவர்கள்

இருவரும் கடைசி வருடத்திலேயே என் அமைச்சுடன் இணைக்கப்பட்டார்கள். இவர்கள் வாங்கி பயன்படுத்திய

வாகனங்களும் இப்போது எனது கணக்கில் சொல்லப்படுகிறது.

ஒரு அமைச்சரவை அமைச்சர் என்ற முறையில் எனக்கு அதிகாரபூர்வ இல்லம் ஒன்றை பெற்றுக்கொள்ள உரிமை உண்டு. ஆனால், அதைக்கூட நான் பெறவில்லை.

அமைச்சராக இருந்தபோதும் சரி, இப்போது சரி, எனது சொந்த வீட்டில்தான் நான் வாழ்கிறேன். நான் ஒருபோதும்

இந்த அமைச்சர்களுக்கான அதிகாரபூர்வ இல்லம் ஒன்றை கேட்டு பெறவே இல்லை. பத்தரமுல்லை மாதிவலயில்

அமைந்துள்ள எம்பீக்களின் விடுதி வீட்டை கூட நான் ஒருபோதும் பெற வில்லை.

நான் இப்படிதான் எனது அரசியல் பொதுபணிகளை செய்கிறேன். சொகுசு வாகனங்களை அரசியல் பதவி பெற்ற

பிறகுதான் கண்டவனும், நானல்ல. அதேவேளை அரசியல் பதவிகளை பயன்படுத்தி சுகம் அனுபவித்தவனும், நானல்ல

.

அதிகாரபூர்வ இல்லத்தை கூட
Posted in இலங்கை செய்திகள்

பிரிட்டனில் -ஆயுத முனை திருடனை- கடைக்குள் போட்டு தாக்கும் தமிழன்video

பிரிட்டன் தமிழர் கடைக்குள் துப்பாக்கியுடன் புகுந்த

திருடனை போட்டு தாக்கும் வீர தமிழன்

குறித்த சம்பவத்தை பார்க்கும் பொழுது உடல் பதறுகிறது

,இவ்வாறான ஆபத்தான வேலைகளில் எம்மவர்கள்

ஈடுபடுவதை தவிர்க்கவும் .

மீளவும் கத்தியுடன் அவரை குத்த வந்த வெறி பிடித்த

திருடனை பாருங்கள்

https://www.youtube.com/watch?v=iGbZzFoW_fg
https://www.youtube.com/watch?v=iGbZzFoW_fg&list=PLaP0pLxA2cX-0yoO-hS3e5cS1zkcUf8Sj
Posted in இலங்கை செய்திகள்

300 மில்லின் ரூபா செலவில் மலையகத்தின் 09 பெருந்தோட்ட பாடசாலைகளை இந்திய உதவி

300 மில்லின் ரூபா செலவில் மலையகத்தின் 09 பெருந்தோட்ட பாடசாலைகளை இந்திய உதவி

வே.இராதாகிருஸ்ணன் நடவடிக்கை

மலையத்தில் காணப்படும் 09 பெருந்தோட்ட பாடசாலைகளை இந்திய உதவி 300 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்வதற்கு தற்போதைய

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த வேலையில் இந்திய அரசாங்கத்துடன்

பேச்சுவார்த்தை நாடாத்தி அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்ததற்கு இனங்க அதற்கான அனுமதியை இந்திய அரசு வழங்கியுள்ளது. தொடர்ந்து இந்த

செயற்திட்டத்தை முன்னெடுத்து செல்வதற்கு நாளைய தினம் 20.02.2020 மாலை கல்வி அமைச்சின் செயலாளருக்கும் இந்திய அரசிற்கும் இடையிலான புரிந்துணர்வு கைசாத்து

உடன்படிக்கை கொழும்பு இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயத்தில் நடைபெற உள்ளது.
இதன் படி நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை

விக்னேஷ்வரா தமிழ் வித்தியாலயம் ஹட்டன் ஹெல்பொட தமிழ் வித்தியாலயம் டெம்பெஸ்டோர் தமிழ் வித்தியாலயம் நுவரெலியா வெஸ்டடோ தமிழ் வித்தியாலயம் கண்டி

மாவட்டத்தில் குண்டசாலை விவேகானந்த தமிழ் வித்தியாலயம் கண்டி விவேகானந்த தமிழ் வித்தியாலயம் பதுளை மாவட்டத்தில் நீவ்பேர்க் தமிழ் வித்தியாலயம் காலி

மாவட்டத்தில் தலங்கம சரஸ்வதி தமிழ் வித்தியாலயம் கேகாலை மாவட்டத்தில் ருவான்வெல ஸ்ரீ கலைவானி தமிழ் வித்தியாலயம் அடங்களாக 09 பாடசாலைகள் அபிவிருத்தி

செய்யபடவுள்ளன. இந்த அபிவிருத்தியில் பாடசாலையின் கட்டடம் உட்பட் உட்கட்மைப்பு வசதிகள் தளபாடங்கள் அனைத்தும் பெற்றுக் கொடுக்கப்படும். தலா ஒரு

பாடசாலைக்கு 30 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்திகள் முன்னெடுக்கபடவுள்ளன


இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள்

முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்ணியின் பிரதி தலைவரும் முன்னால் அமைச்சருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன்


உன்மையிலேயே இது ஒரு சந்தோஷமான விடயமாகும். நான் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த பொழுது இதனை பெற்றுக் கொள்வதற்காக இந்திய அரசுடன் பல

சுற்று பேச்சுவார்த்தைகளை நடாத்தினேன். அதன் பயனாக இந்த பெறுபேறு கிடைத்துள்ளது. இதற்கு உதவி செய்த கல்வி அமைச்சின் முன்னால் செயலாளர் முன்னால் கல்வி

அமைச்சர் உட்பட அனைத்து பனிப்பாளர்களும் அதிகாரிகளுக்கும் உத்தியோகஸ்த்தர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அதே போல்

தொடர்ந்து இந்த வேலைத்திட்டத்தை தற்போதும் முன்னெடுத்து வரும் தற்போதைய கல்வி அமைச்சின் செயலாளர்; கல்வி அமைச்சர் உட்பட அனைத்து

பனிப்பாளர்களும் அதிகாரிகளுக்கும் உத்தியோகஸ்த்தர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். எமது நாட்டைவிட்டு

விடைபெற்று சென்ற முன்னால் இந்திய உயர் ஸ்தானிகர் சரன்ஜித் சிங் அவர்களுக்கும் தற்போதைய இந்திய உயர்

ஸ்தானிகர் அவர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்தக் கொள்கின்றேன் என்று கூறினார்.

300 மில்லின் ரூபா செலவில்
https://www.youtube.com/watch?v=Qhjx0fB5mZA
Posted in இலங்கை செய்திகள்

செட்டிகுளத்தில் முஸ்லிம் இளைஞர்களை மோதித்தள்ளிய இராணுவ வாகனம் photo

செட்டிகுளத்தில் முஸ்லிம் இளைஞர்களை மோதித்தள்ளிய இராணுவ வாகனம் photo


வவுனியா சின்னசிப்பிக்குளம் பகுதியில் இராணுவ வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி

விபத்துக்குள்ளாகியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 9.50 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

வவுனியா செட்டிகுளம் சின்னச்சிப்பிகுளம் பகுதியில் இருந்து செட்டிகுளம் ஹயசிங்கபுர இராணுவ முகாம்

நோக்கி‌ சென்றுகொண்டிருந்த ஹன்டர் வாகனத்தின் பின்பாக சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த சின்னசிப்பிகுளத்தை சேர்ந்த நௌபர் மிர்ஷட் (24வயது), அப்துல் ஜக்பர் ஜூவான் (22 வயது) ஆகிய இருவரும்

படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு நௌபர் மிர்ஷட்‌ என்ற இளைஞன்

மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செட்டிகுளத்தில் முஸ்லிம்
https://www.youtube.com/watch?v=Qhjx0fB5mZA
Posted in இலங்கை செய்திகள்

வன்னியில் மக்களின் காணியை ஆக்கிரமிக்கும் வனவள திணைக்களம்; இராஜாங்க அமைச்சர் சொன்ன பதில்

வன்னியில் மக்களின் காணியை ஆக்கிரமிக்கும் வனவள திணைக்களம்; இராஜாங்க அமைச்சர் சொன்ன பதில்

வன்னியில் வனவள திணைக்களத்தினால் எல்லைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் மக்களின் காணிப்பிரச்சினைகளை தீர்பதற்கு குழு அமைக்கப்படும்

என வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்

இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்,

வாழ்வாதாரத்திற்காக பொதுமக்கள் முன்வைக்கும் விடயங்களை நாம் பார்க்கதான் வேண்டும். அதேபோல அலுவலர்களது செயற்பாடுகளையும் கவனத்தில்

கொள்ளதான் வேண்டும். பலஆயிரம் வருடங்களாக சூழலோடு நாம் வாழ்ந்திருக்கிறோம். மனிதர்கள், வனம்

,வனவிலங்குகள் இவை மூன்றும் இணைந்ததாகவே எமது வாழ்க்கை அமைந்திருந்தது. இவை தீர்கப்படவேண்டிய பிரச்சனைகள்.

இதே செயலகத்தில் முன்னர் கதைக்கபட்ட விடயங்கள் தொடர்பாக இன்றும் நாம் கதைத்துக்கொண்டிருக்கிறோம். கதைத்தால் மாத்திரம் பிரச்சனை தீராது என்பதை

உணரவேண்டும். முதற்கட்டமாக காணிப்பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வன்னிமாவட்டங்களின் அரச அதிபர்களை தலைமையாக கொண்டு, பிரதேசசெயலாளர்களையும்

உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு குறித்த பிரச்சனைகளை தீர்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதுடன், இந்த குழுவால் தீர்கப்படமுடியாத

பிரச்சனைகளை தேசிய குழு ஒன்றிற்கு பாரப்படுத்தப்பட்டு அதன் மூலம் தீர்பதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்.

இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமருடன் கலந்துரையாடவுள்ளேன். நான் இல்லாவிடிலும் இந்த

பொறுப்பிற்கு மீண்டும் வருகின்ற அமைச்சர் இவற்றை தீர்த்து வைக்கவேண்டும் என்பதே எனது வேண்டுகோள் என்றார்.

வன்னியில் மக்களின் காணியை
Posted in இலங்கை செய்திகள்

ஆங்கிலம் தெரிந்தால் லண்டனில் வேலை – அகதிகளுக்கும் அதிஷ்டம்

ஆங்கிலம் தெரிந்தால் லண்டனில் வேலை – அகதிகளுக்கும் அதிஷ்டம்

பிரிட்டனில் தேர்தலில் வழங்க பட்ட வாக்குறுதிக்கு அமைய தான் அகதிகளுக்கு விசா வழங்குவேன் என ஆளும் பிரதமர் கட்சி மீளவும் அறிவித்துள்ளது .

இந்த ஆண்டின் இறுதிக்குள் ஐரோப்பவில் இருந்து முற்றாக வெளியேறும் நிலையில் .பிரிட்டனில் தங்கியுள்ள

ஐரோப்பியர்கள் வெளியேறி சென்றால் அதனால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்பிட பிரிட்டன் முயல்கிறது

அதற்கு அகதிகளாக உள்ளவர்களுக்கு விசா வழ்ங்கும் நடைமுறையை அது கொண்டு வரவுள்ளது ,மேலும் அவர்கள் வேலை செய்யும் வாய்ப்பையும் அது வழங்க உள்ளது .

மேலும் பிற நாடுகளில் இருந்து பிரிட்டன் வந்து வேலை செய்ய வேண்டும் எனின் அவர்களுக்கு ஆங்கிலம் பேச தெரிந்து இருக்க வேண்டும் ,

அவ்வாறு இருந்தால் அவர்களை யாரையும் பிரிட்டனில் உள்ளவர் ஸ்பான்சர் செய்ய முடியும் எனவும் தெரிவிக்க

பட்டுள்ளதுடன் அவ்வாறு வருபவர்களுக்கு வருடம் 22 ஆயிரம் பவுண்டுகள் சம்பளம் .

அதாவது மாதம் தோறும் 1833 பவுண்டுகள் சம்பளமாக வழங்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது

மேலும் 32 லட்ச்சம் ஐரோப்பியர்கள் பிரிட்டனில் தங்கி வாழ விசாவுக்கு விண்ணப்பபம் செய்துள்ளமை குறிப்பிட தக்கது

The government wants a “points-based system” which takes different factors like skills and language into account when awarding visas which would allow people to work in the UK.

In a policy statement being published on Wednesday 19 February, the government says that to get a visa, applicants from anywhere in the world must:

Have a job offer from an “approved employer” at an “appropriate skill level”


Speak English
That will get an applicant to 50 points. But they must have 70 points to be

eligible for a visa. The most straightforward route to the final 20 points is that the applicant will:

Earn at least £25,600 (reduced from the £30,000 which currently applies to non-EU applicants. This was a recommendation from the MAC.)

ஆங்கிலம் தெரிந்தால்
https://www.youtube.com/watch?v=Qhjx0fB5mZA
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா யாழ்பாணத்துக்கு இடையில் கப்பல் போக்குவரத்து

இந்தியா யாழ்பாணத்துக்கு இடையில் கப்பல் போக்குவரத்து

இலங்கை யாழ்ப்பாணத்துக்கும் இந்திய அபுதுச்சேரிக்கும் இடையில் கப்பல் போக்குவர்த்து ஒன்றை நடத்துவதற்கு இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது

விரைவில் இந்த கப்பல் சேவை ஆரம்பிக்க படும் என இந்தியா கப்பலும் போக்குவரத்த்து அமைச்சர் தெரிவித்துளளார்

தற்போது விமான சேவை ஆரம்பிக்க பட்டுள்ள நிலையில் கப்பல் போக்குவரத்த்தும் ஆரம்பிக்க படவுள்ளமை குறிப்பிட தக்கது

இந்தியா யாழ்பாணத்துக்கு
https://www.youtube.com/watch?v=Qhjx0fB5mZA
Posted in இலங்கை செய்திகள்

தாய் மகள் மீது அகோர தாக்குதல்

தாய் மகள் மீது அகோர தாக்குதல்

இலங்கை பதுளை பகுதியில் தாய் மகள் மீது மர்ம நபர் ஒருவர் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளார் .

வீடு புகுந்து இவ்வாறு தாக்குதலை மேற்கொண்ட நபர் தற்பொழுது காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார் .

கைதானவர் தீவிர விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளார்

தாய் மகள் மீது அகோர
https://www.youtube.com/watch?v=Qhjx0fB5mZA
Posted in இலங்கை செய்திகள்

தேயிலை தோட்டத்திற்குள் இருந்து 2 பெண் சிசு சடலம் மீட்பு

தேயிலை தோட்டத்திற்குள் இருந்து 2 பெண் சிசு சடலம் மீட்பு

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நுவரெலியா நேஸ்பி தோட்ட பகுதியில் உள்ள தேயிலை மலையில்

இருந்து இறந்த நிலையில் 2 பெண் சிசுக்களின் சடலங்களை நுவரெலியா பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (18) இடம்பெற்றதாகவும் நுவரெலியா பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

குறித்த தோட்ட தேயிலை மலையில் வீசி எறியப்பட்ட குறித்த சிசுக்கள் தொடர்பில் பொதுமக்களால்

பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு சென்று, சிசுக்களின் சடலங்களை மீட்டெடுத்தனர்.

இதேவேளை, மீட்டெடுத்த சிசுக்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும், சிசுக்களின் தாயார் தேடப்பட்டு

வருவதாகவும், குறித்த சிசுக்களை கொலை செய்தே வீசி எறியப் பட்டிருக்கலாமென நுவரெலியா பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

தேயிலை தோட்டத்திற்குள்
https://www.youtube.com/watch?v=Qhjx0fB5mZA
Posted in இலங்கை செய்திகள்

மகளை கொன்ற தாய்

மகளை கொன்ற தாய்

நிகவரெடிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலாகொலஹேன கந்தேகெதர வீதியின் கந்தேகெதர பகுதியில் இருந்து

தலாகொலஹேன நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (18) மாலை 3.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரான பெண் மற்றும் பின்னால் அமர்ந்து சென்ற அவரது இரண்டு குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 15 வயதுடைய சிறுமி வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மற்றைய இருவரும் நிகவரெடிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்தவர்களில் 2 வயது குழந்தை ஒன்றும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மகளை கொன்ற தாய்
Posted in இலங்கை செய்திகள்

கள்ள காதல் பெண் வெட்டிக் கொலை

கள்ள காதல் பெண் வெட்டிக் கொலை

லுணுகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிவுலேகம பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

லுணுகல, கிவுலேகம பகுதியை சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் மற்றுமொரு பெண் காயங்களுக்கு உள்ளதாகி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கள்ள காதல் சம்பவம் தொடர்பில் இந்த கொலை சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கள்ள காதல் பெண் வெட்டிக்
https://www.youtube.com/watch?v=Qhjx0fB5mZA
Posted in இலங்கை செய்திகள்

1 இலட்சம் கிலோ மீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும்

1 இலட்சம் கிலோ மீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும்

நாடளாவிய ரீதியில் சேதமடைந்துள்ள சுமார் 1 இலட்சம் கிலோ மீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் தேசிய

வேலைத்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (19) கண்டியில் ஆரம்பமாகின்றது.

ஜனாதிபதியின் ´சௌபாக்கியமான நோக்கு´ கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக வீதி மற்றும் பெருந்தெருக்கள் வீதி

அபிவிருத்தி அமைச்சினால் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

பேராதனை, கலஹா, தெல்தொட்ட, ரிகில்லகஸ்கட வீதிகள் அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்று ஆரம்பமாகின்றன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த ஆகியோர் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

1 இலட்சம் கிலோ மீற்றர் வீதிகளை
Posted in சினிமா

வரதட்சணை கொடுமையால் சினிமா பாடகி தற்கொலை

வரதட்சணை கொடுமையால் சினிமா பாடகி தற்கொலை

வரதட்சணை கொடுமையால் சினிமா பாடகி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வரதட்சணை கொடுமையால் சினிமா பாடகி தற்கொலை
சுஷ்மிதா


கன்னட சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்தவர் சுஷ்மிதா ராஜன் (26). எம்.பி.ஏ பட்டதாரியான இவர் கன்னட திரைப்படங்களில் பின்னணி பாடல்கள் பாடியுள்ளார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சாப்ட்வேர் என்ஜினியரான சரத்குமார் என்பவரை சுஷ்மிதா திருமணம்

செய்து கொண்டார். இருவரும் குமாரசாமி லே அவுட்டில் வசித்து வந்தனர்.

இவர்களுடன் சரத்குமாரின் பெரியம்மா வைதேகி, சகோதரி கீதா ஆகியோர் வசித்து வந்தனர். கருத்து வேறுபாடு தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு

வந்தது. குறிப்பாக சரத் மற்றும் அவரது குடும்பத்தினர் தரப்பில் வரதட்சணை கேட்டு அதிகளவு

கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் மனதளவிலும், உடல் அளவிலும் சுஷ்மிதா மிகவும் பாதிக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கணவனிடம் கோபித்துக் கொண்டு,

அன்னபூர் னேஸ்வரிநகர் மாலகாலாவில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று தூக்கம் வருவதாக

கூறிவிட்டு அறைக்கு சென்றவர் அதிகாலை வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. வழக்கமாக

சுஷ்மிதா தாமதமாகத்தான் எழுந்திருப்பார் என்று நினைத்து தாய் மற்றும் சகோதரன் இருந்துவிட்டனர்.

பின்னர் தங்கள் மொபைல்போனை எடுத்து பார்த்தபோதுதான், அதில் சுஷ்மிதா அனுப்பியிருந்த

தற்கொலை கடிதம் இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது, சுஷ்மிதா தூக்கில்

பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். இது குறித்து தாய் மற்றும் சகோதரரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள்

தங்கள் வாட்ஸ் அப்பிற்கு வந்த தற்கொலை கடிதம் தொடர்பான மெசேஜை எடுத்து காட்டினர்.

கணவருடன் சுஷ்மிதா

அதில் சுஷ்மிதா கூறியிருப்பதாவது:- அம்மா என்னை மன்னித்துவிடு. நான் செய்த தவறுக்கு நானே தண்டனை அனுபவித்து விட்டேன். எனது கணவர் அவரது பெரியம்மா

வைதேகியின் பேச்சை கேட்டு தொடர்ந்து வரதட்சணை தொல்லை கொடுத்து வந்தார். இதற்கு கணவனின் சகோதரி

கீதாவும் காரணம். அனை வரும் ஒன்று சேர்ந்து என்னை மனதளவிலும், உடல் அளவிலும் வேதனைப்படுத்தி விட்டனர்.

பல முறை நான் அவர்களின் காலில் விழுந்தும் என்னை விடவில்லை. இந்த கொடுமை தாங்காமல் அவர்கள் வீட்டில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தேன். ஆனால்

முடியவில்லை. பிறந்த வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டால் தான், முறையான ஆதாரங்கள் கிடைக்கும் என்று கருதி நான் நமது வீட்டில் தற்கொலை செய்து

கொண்டேன். இந்த விபரீத முடிவால் நான் உனது அன்பை பெற முடியாதவளாகி விட்டேன்.

என்னுடைய இந்த தற்கொலைக்கு காரணமான அவர்களை சும்மா விட்டுவிடாதீர்கள். அவர்களுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுங்கள். அப்போதுதான் எனது ஆத்மா

சாந்தியடையும். இறுதியாக உங்களை சந்தித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என்னை நமது சொந்த ஊரிலேயே

புதைத்து விடுங்கள். இல்லையென்றால் எரித்து விடுங்கள். ஆனால் என்னை வேதனைபடுத்தியவர்களை சும்மா விட்டுவிடாதீர்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

சுஷ்மிதாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கணவன் சரத், அவரது பெரியம்மா வைதேகி, சகோதரி கீதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசார்

அவர்களை தேடியபோது, 3 பேரும் மாயமாகி விட்டனர். தனிப்படை போலீசார் அவர்களை தேடிவருகின்றனர்.

வரதட்சணை கொடுமையால் சினிமா
https://www.youtube.com/watch?v=Qhjx0fB5mZA
Posted in சினிமா

சைவத்துக்கு மாறிய ரகுல் பிரீத் சிங்

சைவத்துக்கு மாறிய ரகுல் பிரீத் சிங்

இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், சைவத்துக்கு மாறியுள்ளதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சைவத்துக்கு மாறிய ரகுல் பிரீத் சிங்
ரகுல் பிரீத் சிங்


என்ஜிகே படத்தை அடுத்து இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங் இந்தியிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும், தீவிர அசைவ உணவு

பிரியையான ரகுல் பிரீத் சிங் திடீரென்று முழு சைவத்திற்கு தான் மாறியிருப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

அதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், நான் திடீரென்றுதான் சைவத்துக்கு மாறினேன். அந்த

மாற்றத்திற்கு பிறகு எனக்குள் ஆற்றல் அதிகரித்திருப்பதாக உணர்கிறேன். மேலும், மும்பையில் படப்பிடிப்பு

நடக்கும்போது வீட்டில் இருந்தே பழங்களை எடுத்து செல்கிறேன்.

ரகுல் பிரீத் சிங்

அதேசமயம் வெளிநாடுகளுக்கு படப்பிடிப்புக்கு செல்லும்போது அரிசியுடன் காய்கறி, பருப்பை கலந்து

சமைக்கிறார்கள். ஆனால் நான் அதில் சுவைக்காக சைவ நெய்யை கலந்து சாப்பிடுகிறேன் என்று ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

சைவத்துக்கு மாறிய ரகுல்
https://www.youtube.com/watch?v=Qhjx0fB5mZA
Posted in சினிமா

இயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம்

இயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம்

தாலாட்டு கேட்குதம்மா, அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜ் கபூர் அவர்களின் மகன் இன்று மரணமடைந்துள்ளார்.

இயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம்
ராஜ் கபூரின் மகன்


தாலாட்டு கேட்குதம்மா, அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ராஜ் கபூர். தொடர்ந்து தமிழ் படங்களிலும் சீரியலிலும் நடித்து

வருகிறார். இவருக்கு ஷஜீலா கபூர் என்ற மனைவியும் ஷாருக் கபூர் என்ற மகனும் ஷமீமா, ஷானியா என இரண்டு மகள்களும் உள்ளனர்.

ராஜ் கபூரின் மகன்

ஷாருக் கபூர் சில மாதங்களுக்கு புட் பாய்சன் காரணமாக உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

அவருக்கு உடல்நலம் சரியானால் மெக்காவுக்கு வருவதாக குடும்பத்தினர் வேண்டி இருந்தனர். அதன்படி மெக்காவுக்கு சென்றனர். ஆனால் அங்கு நிலவும் சீதோஷ்ண நிலை

காரணமாக ஷாருக்குக்கு மீண்டும் உடல் நிலை மோசமாகி இன்று காலை மரணம் அடைந்துள்ளார். அவருக்கு வயது 23.

இயக்குனர் ராஜ்கபூரின் மகன்
Posted in இலங்கை செய்திகள்

லண்டனில் நல்ல சாப்பாடு சாப்பிட்ட சுமந்திரன் மாமா

லண்டனில் நல்ல சாப்பாடு சாப்பிட்ட சுமந்திரன் மாமா

தமிழ் கூத்தமைப்பின் பேச்சாளரும் தமிழின விரோதியாகவும் உள்ள


சுமந்திரன் பிரித்தானிய வந்து தனது தோழர்களுடன் விருந்து உண்டு சென்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

இலங்கையில் இரத்த காட்டேறி கோத்தா ,மகிந்தாவினால் இடம் பெற்ற தமிழர் பாடுகொலை இனப்படுகொலை அல்ல

அது போர்க்குற்றம் எனவே கூறி தனது சுக போக வாழ்வில் செழித்து மலரும் சுமந்திரன் குள்ள நரி என தமிழர்கள்

கோபத்தோடு பேசி வரும் சம் பாசனைகள் சமூக வலைத்தளங்களில் குவிந்து கிடக்கிறது

புலிகளினால் உருவாக்க ப்பட்ட கூட்டமைப்பின் நிலை இப்படி தான் உள்ளது

லண்டனில் நல்ல சாப்பாடு
Posted in உளவு செய்திகள்

ஆயுத கப்பல் மூழ்கடிப்பு – வெடித்தது சண்டை video

ஆயுத கப்பல் மூழ்கடிப்பு – வெடித்தது சண்டை video

துருக்கியில் இருந்து பெரும் அதி நவீன ஆயுதங்களை காவிய படி

வந்த கப்பல் ஒன்றின் மீது சிரியா இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது .தற்போது கப்பல் எரிந்த வண்ணம்

உள்ளது முழுமையான விபரம் காணொளியில்

ஆயுத கப்பல் மூழ்கடிப்பு - வெடித்தது சண்டை video
https://www.youtube.com/watch?v=W-DbipGO3yU
https://www.youtube.com/watch?v=Qhjx0fB5mZA
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் திருடர்களை விடுதலை செய்த பொலிஸார் – photo

வவுனியாவில் திருடர்களை விடுதலை செய்த பொலிஸார் – photo

வவுனியாவில் திருடர்களை விடுதலை செய்த பொலிஸார் : இரவில் பொலிஸ் நிலையம் முன் திரண்ட இளைஞர்கள்

வவுனியா பாரதிபுரம் பகுதியில் மூன்று திருடர்களை மடக்கி பிடித்து இளைஞர்கள் பொலிஸ் நிலையத்தில்

ஒப்படைந்திருந்த நிலையில் இரு திருடர்களை பொலிஸார் விடுதலை செய்துள்ளதாக தெரிவித்து நேற்றையதினம்

(17.02.2020) இரவு 10.00 மணியளவில் அக்கிராம இளைஞர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தினை முற்றுகையிட்டனர்

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் , விநாயகபுரம் , 50வீட்டுத்திட்டம்

போன்ற பகுதிகளில் கடந்த 15.02.2020 அன்றையதினம் சில வீடுகளிலிருந்த முச்சக்கரவண்டியின் பேட்ரிகள் களவாளப்பட்டிருந்தன.

இதனையடுத்து நேற்று முன்தினம் (16.02) அப்பகுதி இளைஞர்கள் ஒன்றினைந்து நள்ளிரவில் குறித்த பகுதிகளில் நடமாடியவர்களின் விபரங்களை கேட்டறிந்து குறித்த

திருடர்களில் இருவரை மடக்கி பிடித்து (16.02.2020) அன்றையதினமே வவுனியா பொலிஸ் நிலையத்தில்

ஒப்படைத்திருந்தனர் . எனினும் பொலிஸார் குறித்த இருவரையும் நீதிமன்றத்தில் ஆயர்படுத்துவதற்குரிய

எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாது அவர்களை அன்றையதினமே விடுதலை செய்துள்ளனர்.

பொலிஸில் ஒப்படைந்த திருடர்கள் நேற்றையதினம் (17.02) அப்பகுதியில் நடமாடியதினை கண்ட அப்பகுதி

இளைஞர்கள் அவர்களை மடக்கி பிடித்து தொலைபேசியில் அவர்களை வாக்குமூலத்தினை பெற்றுள்ளனர்.

இதன் போது மூவர் இணைந்து இவ் திருட்டு சம்பவத்தில் தொடர்புபட்டுள்ளனர் என கண்டறிப்பட்டது.

இதனையடுத்து குறித்த மூன்று திருடர்களையும் நேற்றையதினம் மாலை 5.30 மணியளவில் வவுனியா

பொலிஸ் நிலையத்தில் மீண்டும் ஒப்படைத்த சமயத்தில் அவர்களில் இருவரை பொலிஸார் விடுதலை செய்துள்ளதாக

தெரிவித்து அக்கிராம இளைஞர்கள் வவுனியா பொலிஸ் நிலையம் முன்பாக இரவு 10.00 மணி தொடக்கம் 11.30

மணிவரை தீர்வு கிடைக்க வேண்டுமேன தெரிவித்து காத்திருந்தனர்.

அதன் பின்னர் வன்னி பிராந்திய தமிழ் மொழி மூல பொலிஸ் முறைப்பாட்டு பிரிவுக்கு இவ்விடயத்தினை

தெரியப்படுத்தியமையினையடுத்து அவர்கள் உரிய தீர்வினை பெற்றுத்தருவதாக தெரிவித்தமையினையடுத்து குறித்த இளைஞர்கள் வீடு திரும்பினர்.

எனினும் இது வரை பொலிஸாரினால் விடுதலை செய்யப்பட்ட இரு திருடர்களை பொலிஸார் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் திருடர்களை

https://www.youtube.com/watch?v=Qhjx0fB5mZA
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 40,000 போலி வைத்தியர்கள்- அதிர்ச்சி தகவல்

இலங்கையில் 40,000 போலி வைத்தியர்கள்- அதிர்ச்சி தகவல்

நாடு முழுவதும் சுமார் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான போலி வைத்தியர்கள் மக்களுக்கு சிகிச்சை அளித்து

வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அவ்வாறான போலி வைத்தியர்களில் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமானோரை அடையாளம்

கண்டுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித்த அளுத்கே தெரிவித்தள்ளார்.

ஆகவே அவ்வாறான போலி வைத்தியர்களை இனங்கண்டு தண்டிக்க நடைமுறையில் சட்டங்களில் திருத்தங்களை

கொண்டுவருமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 40000 போலி
Posted in இலங்கை செய்திகள்

19 ஆவது மாடியில் இருந்து விழுந்து பெண் ஒருவர் பலி

19 ஆவது மாடியில் இருந்து விழுந்து பெண் ஒருவர் பலி

வௌ்ளவத்தயில் 19 ஆவது மாடியில் இருந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (17) பிற்பகல் 2.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் ஹெல்லொக் பகுதி​யை சேர்ந்த 41 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வௌ்ளவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

19 ஆவது மாடியில் இருந்து விழுந்து