Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் வாய், முகம், தாடை சத்திர சிகிச்சைகள் ஆரம்பம்

கிளிநொச்சியில் வாய், முகம், தாடை சத்திர சிகிச்சைகள் ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை முதன் முதலாக வாய், மூக்கு, தாடை சத்திர


சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர்
வைத்திய அதிகாரி சுகந்தன் தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்று மேற்படி
சிகிச்சைகளை பெற்று வந்த பொது மக்கள் இனிவரும் காலங்களில் குறித்த


சிகிச்சைகளை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ள முடியும்
எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் பணியாற்றி வந்த வாய், முகம், தாடை விசேட வைத்திய நிபுணர் மா.


தவராஜாவினால் மேற்படி சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

    Posted in மருத்துவம்

    முகப்பருவை நீக்கும் வழிகள்

    முகப்பருவை நீக்கும் வழிகள்

    முகப்பருக்கள் வராமல் தவிர்ப்பதற்கு சரும ஆரோக்கியத்துக்கு ஏற்ற உணவுகளை உட்கொள்வது அவசியமானது.

    பருவம் அடைந்த பெண்களிடையே தற்போது பரவலாகக் காணப்படும் பிரச்சினை, கருப்பை நீர்க்கட்டி. டீன்-ஏஜ் முதல் 45 வயது வரை உள்ள பெண்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படும் ஹார்மோன் கோளாறு

    இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதன் மூலம், கருமுட்டைகள் முதிர்ந்து வெளிவராமல், திரவங்கள் அடங்கிய குமிழ்களாக கருமுட்டைப் பையில் தங்கிவிடும்.

    இதனால் உடலில் பல பிரச்சினைகள் உண்டாகும். அவற்றுள் முக்கியமானது முகப்பருக்கள் வருவது.

    தோலுக்கு அடியில் அமைந்துள்ள ‘செபேஷியஸ்’ சுரப்பியில் இருந்து ‘சீபம்’ எனும் எண்ணெய்ப் பொருள் சுரக்கிறது. தோலின் மினுமினுப்புத் தன்மைக்கு இதுவே காரணம். மாசு மற்றும் தூசு போன்றவை இதில் படிந்து, சருமத் துளைகளை அடைத்துக்

    கொள்ளும்போது ‘சீபம்’ வெளிவர முடியாமல் தேங்கி நிற்கும். இதனால் பாக்டீரியா போன்ற கிருமிகளால் தொற்று ஏற்பட்டு சருமத்தில் பருக்கள் உருவாகின்றன.

    இவ்வாறு உண்டாகும் முகப்பருக்களை நீக்குவதற்கான வழிகளைப் பற்றி பார்க்கலாம்.

    முகப்பருக்கள் வராமல் தவிர்ப்பதற்கு சரும ஆரோக்கியத்துக்கு ஏற்ற உணவுகளை உட்கொள்வது அவசியமானது. தக்காளி, பிராக்கோலி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கீரை

    வகைகள், மீன், எலுமிச்சைப் பழம் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கும்போது சருமம் வறண்டு போகாமல் நீரேற்றத்துடன் இருக்கும்.

    கிரீன் டீ குடிப்பதன் மூலம் உடல் எடை குறைவதோடு, முகப்பரு பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும். கிரீன் டீயில் இருக்கும் ‘பாலிபீனால்’ எனும் மூலக்கூறு, கிருமித்தொற்றுக்களை அழிக்கும் தன்மை கொண்டது. இது முகப்பருக்கள் உண்டாவதைத் தடுக்கும்.

    தேனில் உள்ள பொருட்கள் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை கொண்டவை. இரவில் உறங்கச் செல்வதற்கு முன்பு, சில சொட்டு தேனை முகத்தில் தடவி காலையில் குளிர்ந்த

    முகப்பருவை நீக்கும் வழிகள்

    நீரில் முகத்தை கழுவலாம். பருவினால் முகத்தில் ஏற்படும் வீக்கத்தை தடுக்கக்கூடிய ஆற்றல் தேனிற்கு உண்டு.

    வேப்பிலைப் பொடியுடன் மஞ்சள் தூள், சந்தனம் சேர்த்து நீர்விட்டு குழைத்து பருக்களின் மீது பூசி வந்தால் விரைவில் குணமாகும்.

    அருகம்புல் பொடி, குப்பைமேனி இலைப்பொடி இரண்டையும் சமஅளவு எடுத்து தண்ணீர் ஊற்றிக் குழைத்து பருக்களின் மீது தடவலாம். தொடர்ந்து ஒரு வாரம் இவ்வாறு செய்து வந்தால் பருக்கள் நீங்கி சருமம் பளிச்சிடும்.

    முகப்பருக்களை நீக்குவதற்கு முடிந்தவரை ரசாயனங்களைத் தவிர்த்து, இயற்கை முறைகளைப் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.

      Posted in மருத்துவம்

      முகத்தில் வழியும் எண்ணெய்- தவிர்க்கும் வழிகள்

      முகத்தில் வழியும் எண்ணெய்- தவிர்க்கும் வழிகள்

      முகத்தில் எண்ணெய் வழிவதை குறைத்து, நாள் முழுக்க பளபளப்பாக தோன்ற இந்த விசயங்களைத்தான் நீங்கள்

      செய்ய வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

      முகத்தில் வழியும் எண்ணெய்- தவிர்க்கும் வழிகள்
      முகத்தில் வழியும் எண்ணெய்- தவிர்க்கும் வழிகள்


      எத்தகைய சருமமாக இருந்தாலும் சரி, அதை காலை முதல் மாலை வரை, புத்துணர்ச்சியுடன், பளிச்சென பராமரிக்கும்

      ஆர்வம் உங்களுக்கு இருந்தால் போதும். உங்கள் முகத்தை அழகாக மாற்றுவது எளிது. எண்ணெய் வழியும்

      பிரச்சனையை தவிர்க்க, இதோ உங்களுக்கு சில அழகு குறிப்புகள். இவை உங்களுக்கு நிச்சயமாக நல்ல பயன் தரும்:

      உங்களது முகத்தில் ரொம்ப எண்ணெய் வழிந்தால், மை ஒற்றும் காகிதம் பயன்படுத்தி, அதை ஒற்றி

      எடுத்துவிடுங்கள். இந்த மை ஒற்றும் காகிதம் எப்போதும் கையில் வைத்திருப்பது நல்லது. அனைத்து அழகுப் பொருட்கள் விற்கும் கடைகளிலும் இது கிடைக்கும்.

      முகத்தை நன்கு சுத்தம் செய்ய மறந்துவிடாதீர்கள். உங்கள் முகத்தில் எண்ணெய் வழிவதால், எந்நேரமும் அதனை

      பேப்பர் வைத்து துடைத்துக் கொண்டே இருக்கனும் என்பது அவசியமில்லை. அதற்குப் பதிலாக, முகத்தை சுத்தம்

      செய்ய உதவும் பொருட்கள் நிறைய மார்க்கெட்டில் கிடைக்கப்பெறுகின்றன. அவற்றை வாங்கி

      பயன்படுத்தலாம். முகத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்வதால், முகத்தின் இறுக்கம் மறைந்து, தளர்வு ஏற்படும். இதுதவிர,

      முகத்தில் உள்ள எண்ணெய்பசை, அழுக்குகள் அகன்றுவிடும். இந்த வைத்திய முறையை மிக மெதுவாகச்

      செய்ய வேண்டும். கடுமையாகச் செய்தால், ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

      முகத்தில் எண்ணெய் வழிவதை கட்டுப்படுத்த, இலகுவான, எண்ணெய் பசையற்ற மாஸ்ச்சுரைஸரை தடவுங்கள். இதை மறந்துவிடவேண்டாம்.

      பிரைமர் தடவுவதால், முகத்தின் எண்ணெய்பசை உடனடியாக உறிஞ்சப்படுகிறது. உங்களுக்கு

      மென்மையான, வெல்வெட் போன்ற முகம் கிடைக்க, இது உதவும். லேக்மி ஆலி டே கிரீம், அக்வா ஜெல்லை பிரைமராக பயன்படுத்தி, கன்ன கதுப்புகள், நெற்றி உள்ளிட்ட

      பகுதிகளில் தடவுங்கள். இது நாள் முழுக்க முகம் பளபளப்புடன் இருக்க உதவும். இதுதவிர, முகத்தில் உள்ள

      ஓட்டைகள், பள்ளங்கள், தழும்புகள் போன்றவற்றை, இது மறைத்து, மேக்அப்பை எடுத்துக் காட்ட உதவும்.

      படுக்கை நேரத்திலும், மேக்அப் விசயத்தில் சற்று கவனம் செலுத்துவது நலம் என்றே சொல்வேன். அதாவது, நீங்கள்

      தினமும் கிரீம் பயன்படுத்திவந்தால், லோஷன் வகையான பொருட்களை, படுக்கும் முன்பு, தடவிக் கொள்ளுங்கள்.

      நீங்கள் லோஷன் விரும்பி எனில், ஹைட்ரேட்டிங் சீரம் பயன்படுத்தி பாருங்கள். அதேபோல, லோஷன் தடவும்

      முன்பு, எங்கே தடவுகிறோம் என்பதில் கவனம் தேவை. மறந்தும்கூட மூக்கின் மீது தடவ வேண்டாம். அங்குதான் நிறைய எண்ணெய் சுரப்பிகள் உள்ளன.

      https://www.youtube.com/watch?v=Y6Uc68tIwx4