Tag: சிம்ரன்
புகைப்படம் வெளியிட்ட சிம்ரன்… அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்
புகைப்படம் வெளியிட்ட சிம்ரன்… அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்
பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த சிம்ரன், தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விஜய், அஜித், விஜயகாந்த், விக்ரம், சூர்யா என பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் இணைந்து தமிழ் சினிமாவை கலக்கியவர் சிம்ரன்.
திருமணத்திற்கு பிறகு சில காலம் நடிக்காமல் இருந்த சிம்ரன், திரிஷா இல்லனா நயன்தாரா மற்றும் ரஜினிமுருகன் போன்ற
திரைப்படங்களை தொடர்ந்து மாதவனுடன் இணைந்து திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
சிம்ரன்
தற்போது சிம்ரன் ஒரு துளி கூட மேக்கப் இல்லாமல் முடி முழுவதும் நரைத்தும் கன்னமெல்லாம் சுருங்கியும் தற்போதுள்ள நேச்சுரல் லுக்கில் பார்க்கவே அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கும்
புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள், அதிர்ச்சி அடைந்து என்ன சிம்ரன் இப்டி ஆயிடிங்க என கேட்டு வருகின்றனர்.
ரசிகர்களை பதற வைத்த அந்த நடிகை
ரசிகர்களை பதற வைத்த அந்த நடிகை
நடிகை சிம்ரன், தான் ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ரசிகர்களை பதற வைத்த சிம்ரன்
சிம்ரன்
நேருக்கு நேர், அவள் வருவாளா, நட்புக்காக, துள்ளாத
மனமும் துள்ளும், பம்மல் கே.சம்பந்தம் என்று பல வெற்றி படங்களில் நடித்துள்ள நடிகை சிம்ரன், புகழின் உச்சியில்
இருந்த போதே 2003ம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு திரையுலகை விட்டு விலகியே இருந்தார்.
அதன் பின்னர், நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் தீவிரமாக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்படத்தில் வில்லியாக மிரட்டிய சிம்ரனுக்கு ரஜினியுடன் ஜோடியாக நடித்த பேட்ட
படம் வரவேற்பை கொடுத்தது. மீண்டும் பழைய சிம்ரனைப் பார்த்த மகிழ்ச்சியில் அவரது ரசிகர்களும் கொண்டாடினார்கள்.
சிம்ரன்
இந்நிலையில், அவரது ட்விட்டர் பக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் படத்தின் படப்பிடிப்பின் போது
எடுக்கப்பட்டது என்று கூறி நெத்தி, கை, கால்களில் எல்லாம் ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை
வெளியிட்டு ரசிகர்களை பதற வைத்து விட்டார். இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், உண்மையிலேயே
நடிகை சிம்ரனுக்கு அடிப்பட்டுவிட்டதோ என்று கலங்கி, ஆறுதல் சொல்லி வருகிறார்கள். பின்னர், இது படப்பிடிப்பு
தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரிந்த பிறகு தான் நிம்மதி அடைந்தனர்.







