Posted in பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் அதிக வெப்பம் மக்கள் அவதி

பிரிட்டனில் அதிக வெப்பம் மக்கள் அவதி

பிரிட்டனில் இன்று திங்கட் கிழமை அதிக வெப்பம் காணப்பட்டது

இந்த வெப்பநிலை 40C ஆக பதிவானது ,இந்த வெப்பம் காரணமாக போக்குவரத்து பாதிக்க பட்டதுடன் பல பகுதிகளில் பாடசாலைகள் அடித்து மூடப்பட்டன.மக்கள் அவதிபட்டனர் .

மக்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கை வெளிப்படுத்த பட்ட நிலையில் வெப்ப பாதிப்பு தவிர்க்க பட்டுள்ளது.

தொடர்ந்து நாளை செய்வாய்க் கிழமை இது போன்ற அதிக வெப்ப காலநிலை காணப்படும் என அறிவிக்க பட்டுள்ளது .

நாளைக்கும் இந்த அதிக வெப்ப நிலை ஏற்படும் எனவும் இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது.

    Posted in இலங்கை செய்திகள்

    கோத்தாவுக்கு எதிராக அணிதிரண்ட மலேசியத் தமிழர்கள்நீதியின் முன் நிறுத்து

    கோத்தாவுக்கு எதிராக அணிதிரண்ட மலேசியத் தமிழர்கள்நீதியின் முன் நிறுத்து

    சிங்கப்பூரில் தற்போது நிலைகொண்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதியும் தமிழனப்படுகொலையாளியுமான கோத்தபாய இராஜபக்சவுக்கு எதிராக மலேசியத் தமிழர்கள் அணிதிரண்டு குரல் எழுப்பியுள்ளனர்.

    தலைநகர் கோலாலபம்பூரில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் முன் பினாங்கு மாநில் துணை முதல்வரும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைஞர் குழுப் பிரதிநிதியுமாகிய பேரா.இராமசாமி அவர்களது தலைமையில்

    அணிதிரண்ட தமிழர்கள், இனப்படுகொலையினை சிங்கப்பூர் வெளியேற்றி சர்வதேச நீதிமன்றிடம் கையளிக்க வேண்டும் என்ற முழக்கத்தினை எழுப்பினர்.

    மலேசியத் தமிழர் அரசியல் பிரதிநிதகளான சதீஸ் முனியாண்டி, டேவிட் மர்செல் உட்பட பல தமிழர் அமைப்பினர் இதில் பங்கெடுத்திருந்தனர்.

    சிங்கப்பூர் தூதரைச் சந்தித்து கோரிக்கை மனுவினை கையளித்து, தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சிங்கப்பூரில் இருந்து

    வெளியேற்றப்பட்டு சர்வதேச நீதிமன்றிடம் இனப்படுகொலையாளியான கோத்தபாயாவை கையளிக்க வேண்டும் என்ற கோரிக்கையிகை முன்வைத்தனர்.

    கோத்தாவுக்கு எதிராக அணிதிரண்ட மலேசியத் தமிழர்கள்நீதியின் முன் நிறுத்து
    கோத்தாவுக்கு எதிராக அணிதிரண்ட மலேசியத் தமிழர்கள்நீதியின் முன் நிறுத்து


    சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் கோத்தபாய இராஜபக்சவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.

    போர் குற்றங்களில் ஈடுபட்ட சிறிலங்காவின் அரசியல், இராணுவ தலைவர்களுக்கு எதிராக ஐ.நா உறுப்பு நாடுகள்,


    சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைச்சபையின்


    ஆணையாளர் மிச்சல் பசேலே அம்மையார் அவர்கள் முன்னர் அழைப்பொன்றினை விடுத்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

    https://youtu.be/Q8738uDw2BM
      Posted in உளவு செய்திகள்

      ஆயுதங்களுடன் பயணித்த உக்கிரேன் விமானம் வெடித்து சிதறல்

      ஆயுதங்களுடன் பயணித்த உக்கிரேன் விமானம் வெடித்து சிதறல்

      உக்கிரன் நாட்டின் இராணுவ கார்க்கோ விமானம் ஒன்று மிக ஆபத்தான கெமிக்கல் ஆயுதங்களை காவியபடி பயணித்த வேளை வெடித்து சிதறியது .

      இந்த விமானத்தில் அதி பயங்கரமான மிகவும் ஆபத்தான கெமிக்கல் ஆயுதங்களை காவியபடிபயணித்த பொழுது அந்த விமானத்தின் இயந்திரம் ஒன்றில் தீப்பற்றி கொண்டது .

      இந்த தீவிபத்த்தை அடுத்து அந்த உக்கிரேன் இராணுவ விமானம் வானில் வெடித்து சிதறியது .

      உக்கிரேன் இராணுவ கார்க்கோ ஆயுத விமானம் வெடித்து சிதறும் காட்சிகள் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன.

      இந்த இரட்சத கார்க்கோ விமானத்தில் விமானிகள் உள்ளிட்ட பன்னிரண்டு பேர் பயணித்துள்ளனர் .

      இவ்வாறு பயணித்த அனைவரும் அந்த விமானத்துடன் வெடித்து சிதறி இறந்துள்ளனர்.

      இந்த விமானத்தில் எவ்விதம் தீ பிடித்தது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

      ரசியா இராணுவத்தின் மீது தாக்குதலை மேற்கொள்ளும் நோக்கில் எடுத்துவரப்பட்ட நான்கு தொன் எடையுள்ள கெமிக்கல் ஆயுதங்களே விமானத்துடன் வெடித்து சிதறியுள்ளது.

      உக்கிரேன் கார்க்கோ விமனாத்தில் கெமிக்கல் ஆயுதங்கள் எடுத்துவரப்பட்ட தகவல் உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன .

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கையில் பாடசாலைகளிற்கு 20 தம திகதிவரை விடுமுறை

        இலங்கையில் பாடசாலைகளிற்கு 20 தம திகதிவரை விடுமுறை

        இலங்கை கொழும்பு ; இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்ட பாடு காரணமாக பாடசலைகள் யாவும் எதிர்வரும் 20தம திகதி வரை விடுமுறை விடுக்க பட்டுள்ளது .

        அதன் பின்னர் வழமை போன்று அணைத்து பாடசாலைகளும் இயங்கும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.


        இலங்கையில் பாடசாலைகளிற்கு செல்லும் மாணவர்கள் போக்குவரத்து பாதிக்க பட்டமையினாலும் ஆசிரியர்களுக்கு


        ஊதியம் வழங்கப்படுவதில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக இந்த விடுமுறை விக்க பட்டுள்ளதாக தெரியவருகிறது.

          Posted in இலங்கை செய்திகள்

          கோத்தாவை கைது செய் சட்டத்தின் முன் நிறுத்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழுத்தம்

          கோத்தாவை கைது செய் சட்டத்தின் முன் நிறுத்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழுத்தம்

          பிரான்ஸ் ; தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரச இனப்படுகொலையாளி கோத்தபாய இராஜபக்சவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்து என்ற தொடர்

          போராட்டங்கள் புலம்பெயர் தேசங்கள் எங்கும் இடம்பெற இருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

          போர் குற்றங்களில் ஈடுபட்ட சிறிலங்காவின் அரசியல், இராணுவ தலைவர்களுக்கு எதிராக ஐ.நா உறுப்பு நாடுகள், சர்வதேச நியாயாதிக்கத்தின்

          கீழ் சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் மிச்சல் பசேலே அம்மையாhர் அவர்கள் முன்னர் அழைப்பொன்றினை விடுத்திருந்தார்.

          அந்தவகையில் தற்போது ஒரு நாட்டின் அதிபருக்குரிய இராஜீக வரப்பிரசாதங்கள் ஏதுமன்ற ஓர் சாதாரண பொதுமகனாக சிங்கப்பூரில்

          நிற்கின்ற சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சவை, சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் கைது செய்து சட்டத்தின் முன் சிங்கப்பூர் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளன.

          அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, மலேசியா என பல்வேறு நாடுகளிலும் உள்ள சிங்கப்பூர் தூதரங்களுக்கு முன்னால்

          கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற இருப்பதோடு கோரிக்கை மனுவும் கையளிக்கப்படவுள்ளது.

          கோத்தபாய சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளராக இருந்த ஆறு மாத காலத்தில் 40 முதல் 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என

          ஐ.நா.வின் அறிக்கையொன்று தெரிவிப்பதோடு, நூற்றுக்கணக்கான தமிழ் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானர்கள்

          தெரிவிக்கின்றது. தவிர ஆயிரக்கணக்கான தமிழர்கள், குழந்தைகள் இவரது காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

          இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து சுமார் 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான

          குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் இன்னும் இல்லை என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

          சர்வதேச சட்டத்திற்கு எதிரான குற்றங்கள் ஓர் நாட்டின் எல்லைக்குள் நடக்காதபோதும், பாதிக்கப்பட்டவரோ அல்லது குற்றவாளியோ அந்த நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும், சர்வதேச சட்டத்திற்கு எதிரான

          குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க, ஓர் நாட்டின் அதிகார வரம்பிற்கு சர்வதேச நியாயாதிக்கம் வழி சமைக்கின்றது. இந்தக் கொள்கை மூன்றாம்

          நாடுகளின் தேசிய நீதிமன்றங்களுக்கு வாய்பளிக்கின்றது. வேறு நாட்டில் சர்வதேச குற்றங்களை புரிந்தவர்களை பொறுப்புக்கு உட்படுத்தவும்,

          தண்டனையிலிருந்து விடுபடுவதை தடுக்கவும் முடியும் என்ற சர்வதேச சட்டவெளி காணப்படுகின்றது.

          இந்நிலையில், சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் இனப்படுகொலையாளியான
          கோத்தபாய கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் சிங்கப்பூர் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை


          நாம் வலுவாக முன்வைக்கின்றோம் என தெரவித்துள்ள நா.தமிழீழ அரசாங்கம்,
          தமிழினத்தின் மீது இனப்படுகொலையினை புரிந்தவர்களுக்கு எதிரான உளவியல் யுத்தமாகவும் இது
          உள்ளதென அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.

            Posted in இலங்கை செய்திகள்

            ஜனாதிபதி தெரிவு தொடர்பில் நாளை மனோ கணேசன்

            ஜனாதிபதி தெரிவு தொடர்பில் நாளை மனோ கணேசன்

            தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமைக்குழு ஜனாதிபதி தெரிவு தொடர்பில் நாளை முடிவு
            – தமுகூ தலைவர் மனோ கணேசன்

            தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழு நாளை செவ்வாய்கிழமை 19ம் திகதி
            மாலை 6 மணிக்கு கொழும்பு நுகேகொடை ஏகநாயக அவனியுவில் (#15/1 Ekanayake Avenue, Nugegoda)
            அமைந்துள்ள கட்சி செயலகத்தில் கூடி, 20ம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட
            வேட்பு மனுக்கள் சமர்பித்துள்ள அனைத்து வேட்பாளர்கள் தொடர்பிலும், கலந்துரையாடி முடிவெடுக்கும் என தமிழ்
            முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி ஊடகங்களுக்கு தெரிவத்துள்ளார்.

              Posted in மருத்துவம்

              உப்பை உணவில் அதிகம் சேர்த்தால் ஆயூள் குறைகிறது

              உப்பை உணவில் அதிகம் சேர்த்தால் ஆயூள் குறைகிறது

              உலகளாவிய ரீதியில் மக்கள் அதிகம் உப்பை உணவில் சுவைக்காக சேர்த்து வருகின்றனர் .


              இந்த உப்பை உணவில் அதிகம் சேர்ப்பதால் அதிக இரத்த அழுத்தம் ஏற்படுகிறது .

              இதுவே இதயத்தை பாதிக்கிறது .இதனால் உடல் நிலை கெட்டுப்போகிறது .

              உணவில் அதிக உப்பை சேர்ப்பதால் வாயுக்கு சுவையாக உணவுகள் கிடைக்கலாம் .

              ஆனால் நமது வாழ்வின் வாழும் ஆண்டு சுருங்கி விடுகிறது என்ற அபாயகர ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.

              ஐந்து லட்சம் மக்கள் மத்தியில் நடத்த பட்ட ஆய்வில் அதிகம் உப்பை உணவில் சேர்த்து கொள்ளும் ஆண் பெண்களில் பெண்கள் ஒன்றரை வருடம் ஆயுளை குறைத்து கொள்கின்றனர் .


              அதுவே ஆண்கள் இரண்டரை வருட ஆயூளை குறைத்து கொள்ளும் நிலை கண்டு பிடிக்க பட்டுள்ளது.

              மேலும் உப்பை அதிகம் உண்கின்ற மக்கள் அகால மரணத்தை அதிகம் சம்பாதித்து கொள்கின்றனர்.

              இதயத்தின் அளவு அதிகம் வழமைக்கு மீறி துடித்து விடுகிறது .இதனால் இரத்த அழுத்தம் ஏற்பட்டு இந்த உயிராபத்து உப்பால் இடம்பெறுகிறது.

              இரத்த அழுத்தம் ஏற்பட்டால் அவை மாரடைப்பை ஏற்படுத்தும் .ஆக உப்பை சுவைக்கு அதிகம் சேர்ப்பதால் உங்கள் உடல் நிலைக்கு நீங்களே கேடு விளைவித்து கொள்கின்றீர்கள் .

              அதனால் உணவில் உப்பை குறைப்போம் உடலை ஆரோக்கியமாக பாதுகாப்பபோம் .

              Error: View 6f7d65ec2l may not exist
              Posted in உளவு செய்திகள்

              ஈரான் உளவு விமானங்களை வாங்கி குவித்த ரசியா உக்கிரேனில் தாக்குதல் தீவிரம்

              ஈரான் உளவு விமானங்களை வாங்கி குவித்த ரசியா உக்கிரேனில் தாக்குதல் தீவிரம்

              உக்கிரன் நாட்டின் மீது போரினை தொடுத்துள்ள ரசியா நாடு பெரும் எதிர் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது.

              உக்கிரேன் போர் முனையில் துருக்கியின் உளவு விமானங்கள் பெரும் பங்களிப்பு புரிந்து வரும் நிலையில் ரசியா ஈரானின் உளவு விமானங்களை கொள்வனவு செய்துள்ளது .

              இந்த ஈரான் உளவு விமானத்தின் செயல் திறன் ரசியா இராணுவத்தினருக்கு கை கொடுத்து வருவதால் ஈரானிடம் இருந்து மேலும் இதே உளவு விமானங்களை வாங்கி குவித்திட ரசியா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

              ஈரான் உளவு விமானங்களை வாங்கி குவித்த ரசியா உக்கிரேனில் தாக்குதல் தீவிரம்

              உக்கிரேன் ரசியா போரினால் உலக நாடுகளில் உணவு மற்றும் எரிபொருள் விலை ஏற்றம் அதிகரித்துள்ளது.

              உக்கிரேன் ரசியா போர் முடிவுக்கு வந்தால் மட்டும் இந்த பேரவலத்தின் இருந்து நாடுகளை பாதுகாக்கலாம் என்ற நிலை உருவாக்கம் பெற்றுள்ளது .

              இவ்வாறான நிலையில் ரசியா உக்கிரேனில் போரினை வேகப்படுத்த ஈரான் உளவு விமானங்களை அதிகம் நம்பியுள்ளதாக எதிர் பார்க்க படுகிறது.

              ஈரானின் உளவு விமனங்கள் உக்கிரேன் களமுனையில் பறப்பதை அமெரிக்கா உளவு துறையினர் செய்தி படங்களுடன் வெளியிட்டுள்ளமை குறிப்பிட தக்கது.

                Posted in உலக செய்திகள்

                இளம்பெண்ணை மனைவியுடன் இனைந்து கற்பழித்த கணவன்

                இளம்பெண்ணை மனைவியுடன் இனைந்து கற்பழித்த கணவன்

                இந்திய டில்லி பகுதியில் செருப்பு தொழில் சாலையில் பணிபுரிந்த 15 வயது இளம் பெண்ணை அந்த நிறுவனத்தின் மேனேஜர் கற்பழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என அந்த சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்ற கணவன் தனது மனைவியுடன் இணைந்து இளம் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

                மூன்று நாட்களாக கொடூரமாக கற்பழித்த அவர் பின்னர் பெண்ணின் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் பொழுது அவளது வாய்க்குள் அசிட்டை ஊற்றியுள்ளார் .

                இளம்பெண்ணை மனைவியுடன் இனைந்து கற்பழித்த கணவன்

                அதனை அருந்திய இளம் பெண் உடல் பகுதியில் பலமாக எரிந்த நிலையில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்.

                கொலை கற்பழிப்பு மற்றும் கடத்தல் வழக்கில் மேனேஜர் கைது செய்யப்பட்டு நீதிமனற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் .

                மேற்படி இளம் பெண் கற்பழிப்பு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                பெண்கள் அமைப்புக்கள் இந்த கற்பழிப்பை புரிந்த நபருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என போராட்டங்களில் குதித்துள்ளனர்.

                தனது மனைவியுடன் இணைந்து இளம் பெண்ணை கற்பழித்த கணவன் செயல் உலகளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  மக்கள் போராட்டம் 100 நாட்களை நிறைவு

                  மக்கள் போராட்டம் 100 நாட்களை நிறைவு

                  காலி முகத்திடலில் ஆரம்பமான போராட்டம் இன்றுடன் (17) 100 நாட்களை நிறைவு செய்கிறது.

                  கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி, கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுமாறு வலியுறுத்தி இளைஞர்கள் குழுவொன்று இந்த எதிர்ப்புப் பிரச்சாரத்தை ஆரம்பித்தது.

                  இதேவேளை, போராட்டத்தில் தங்களது உயிரை அர்ப்பணித்த மக்களைக் நினைவுகூறும் விசேட நிகழ்வும் நேற்று (16) இரவு போராட்ட களத்தில் இடம்பெற்றது.

                  இதற்கு திரளான மக்கள் கலந்துகொண்டதுடன், போராட்டத்தின் 100வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

                    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                    நீயே என் கவிதை

                    நீயே என் கவிதை

                    இன்றொரு கவிதை கண்டேன்
                    இதயம் மகிழ்ந்து நின்றேன்
                    நுண்ணுயிர் போல நுழையும் – உன்
                    நுணுக்கம் கண்டு மகிழ்ந்தேன்

                    விண்ணது எழுந்து ஆடும்- உன்
                    வீரிய குரலது கண்டால்
                    பொன் மனம் எழுந்து ஆடும் – உன்
                    பொடி படும் தமிழது கண்டால்

                    பாவையர் கூடி வந்தால் – அட
                    பாவும் உனக்குள் மோதும்
                    பாவையர் கூடி பாடின் – அட
                    பகலும் உனக்குள் இருளும்

                    வைர முத்து குரலோ
                    வந்து காதில் வீழ்ந்தால்
                    துள்ளி ஆடும் புல்லும் – மழை
                    துளியை தூவும் வானம்

                    கவியின் அழகும் நீதான் – அந்த
                    கடலின் அலையும் நீதான்
                    மொழியின் மலர்வு நீதான் – உன்னை
                    மொழிந்தேன் இன்று நான்தான் …!

                    வன்னி மைந்தன் ( ஜெகன் )
                    ஆக்கம் 17-07-2022

                    வன்னி மைந்தன் கவிதைகள்

                    Posted in மருத்துவம்

                    அதிக மாதவிடாய் வலி ஏன் ஏற்படுகிறது ENDOMETRIOSIS IN TAMIL

                    அதிக மாதவிடாய் வலி ஏன் ஏற்படுகிறது ENDOMETRIOSIS IN TAMIL

                    பெண்களுக்கு அதிக மாதவிடாய் வலி ஏன் ஏற்படுகிறது .இதனை ஏற்படுத்தும் காரணி என்ன ..?


                    பெண்ணின் கருவுருவத்தை சுற்றி காணப்படும் கருப்பையில் ஏற்படும் அது இரத்த குருதியாக வெளியேறும் காரண தொழில் பாடு எங்கு உருவாகிறது .

                    மாதவிடாய் என்பது கருப்பையில் ஏற்படும் இரசாயன மாற்றங்கள் காரணமாக இரத்த கசிவு ஏற்படும் இதன் பொழுது வலிகள் ஏற்படும்.

                    இந்த வலிகளை கட்டு படுத்த அல்லது இது ஏற்பட முக்கிய காரணம் என்ன ..?மாதவிடாய் இல்லாத காலத்திலும் வலிகள் ஏற்படும் அது எவ்வாறு ஏற்படுகிறது.

                    கண்டிப்பாக பெண்கள் இதனை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் .

                    மலத்துடனும் இந்த இரத்த கசிவு ஏற்படும் ,ஆகவே பெண்கள் இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

                    Error: View 6f7d65ec2l may not exist
                    Posted in மருத்துவம்

                    உணவு ஒவ்வாமை FOOD ALLERGY எவ்வாறு தடுப்பது

                    உணவு ஒவ்வாமை FOOD ALLERGY எவ்வாறு தடுப்பது

                    மக்கள் நாள் தோறும் உண்ணும் உணவுகளில் உணவு ஒவ்வாமை தன்மை காணப்படுகிறது .


                    இந்த உணவு ஒவ்வாமை என்பதை எவ்வாறு தடுக்கலாம் என்பதை இங்கே கவனியுங்கள்.

                    மக்களுக்கு அழற்சி ஓவ்வாமை ஏற்பட காரணம் என்ன ..? அதனை எவ்வாறு தடுக்கலாம் அல்லது தவிர்க்கலாம் என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்.

                    உணவு ஒவ்வாமை FOOD ALLERGY எவ்வாறு தடுப்பது

                    இந்த ஒவ்வாமை என்பது தோள்கள் மூலமே வெளிப்படும் ,அது எவ்வாறு தென்படுகிறது என்பதை பார்க்கலாம் .

                    உணவு ஒவ்வாமை என்பது சக்தி ,வயிற்றோட்டம் மற்றும் தோல்களில் ஏற்படும் மாற்றங்கள் ஊடாக அவதானிக்க முடியும்.

                    எந்த உணவுகளை நாம் உண்னக் கூடாது என்கிறார்கள் என்றால் ,நண்டு றால கச்சான் ,பால் முட்டை அண்ணாசி பழம் போன்றவற்றுக்கு அதிகமாக காணப்படும் .


                    அப்படி என்றால் இதனை எவ்வாறு தடுக்கலாம் என்பதை நீங்கள் புரிந்து இருப்பீர்கள்.

                    சரி வாருங்கள் நம்மவர் கூடும் இந்த மருத்துவ குறிப்பை காதில் போட்டு கொள்வோம் வாருங்கள்.

                    Posted in மருத்துவம்

                    விபத்தின் பின் செய்ய கூடாத விடயங்கள்/do not do these after accidents

                    விபத்தின் பின் செய்ய கூடாத விடயங்கள்/do not do these after accidents

                    விபத்தின் பொழுது பாதிக்க பட்டவர்கள் உடனே செய்யக்கூடாத விடயம் என்ன என்பதை நாங்கள் இங்கே பார்த்துக்கொள்ளுவோம் .

                    நமது மக்கள் விபத்தில் காயங்கள் ஏற்பட்டால் உடனே செய்து கொள்ளும் தவறான முறைமைகள் என்ன என்பதை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம் .

                    விபத்தின் பின் செய்ய கூடாத விடயங்கள்/do not do these after accidents

                    விபத்தின் பொழுது உடல் உறுப்புக்கள் துண்டிக்க பட்டால் அதனை தூய்மையான பொழித்தீன் பையுக்குள் வைத்து அதனை ஐஸ் கட்டிக்குள் வைத்து மருத்துவ மனைக்கு எடுத்து சென்றால் அதனை பொருத்த முடியும் என்கின்ற விடயம் இங்கே முதன்மை பெறுகிறது .

                    மேலும் வாய் ,மூக்கு ,கை கால்களில் காயங்கள் ஏற்படும் பொழுது அதில் ஓடும் இரத்த போக்கை கட்டு படுத்த நாம் என்ன செய்யவேண்டும் என்கின்ற விடயமும் இங்கே முதன்மை பெறுகிறது .

                    மிக முக்கியமான மருத்துவ குறிப்பாக இந்த விபத்தின் பொழுது நாம் செய்திட கூடாத விடயங்கள் விளக்க படுகின்றன .

                    மக்கள் உதாசீனமாக செய்து கொள்ளாது இதனை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள் .

                    இதில் அழுத்தி காணொளி பாருங்க

                      Posted in பிரித்தானிய செய்தி

                      லண்டனில் இளம் பெண் குற்றி கொலை இருவர் கைது

                      லண்டனில் இளம் பெண் குற்றி கொலை இருவர் கைது

                      லண்டன் Elfirda Close பகுதியில் வீட்டுக்குள் வைத்து முப்பது வயதுடைய இளம் பெண் ஒருவர் குற்றி கொலை செய்யப்பட்டுள்ளார் .

                      பலமான கத்தி குத்துக்கு இலக்கண நிலையில் பெண் மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.

                      லண்டனில் இளம் பெண் குற்றி கொலை இருவர் கைது
                      லண்டனில் இளம் பெண் குற்றி கொலை இருவர் கைது

                      இந்த பெண் கொலை குற்றத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்ற சாட்டில் முப்பது வயதான ஆணும் இருபது வயதுடைய பெண்ணும் கைது செய்யப்பட்டனர் .

                      இருபது வயது பெண் இந்த பெண்ணை குற்றி கொலை புரிந்திட உதவினார் என்ற குற்றத்தில் கைது செய்ய பட்டுள்ளார்.

                      கைதானவர்கள் ஆண் பெண் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .


                      லண்டனில் சமீப காலங்களாக இவ்விதமான கத்தி குத்து தாக்குதல்கள் சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது.

                        Posted in இலங்கை செய்திகள்

                        ரணிலை விரட்டுவோம் மக்கள் முழக்கம் கொதிக்கும் இலங்கை

                        ரணிலை விரட்டுவோம் மக்கள் முழக்கம் கொதிக்கும் இலங்கை

                        இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கா அதிகாரத்தில் இருப்பதை அனுமதிக்க முடியாது என இலங்கை போராட்ட காரர்கள் அறிவித்துள்ளனர்.

                        தொடர்ந்தும் அதி உயர் பதவியில் நாட்டை மேலும் ரணில் விக்கிரமசிங்க ஆள முனைந்தால் அவருக்கு எதிராக பாரிய போராட்டத்தை முன்னெடுப்போம்.

                        பல் நாட்டு அரசுடன் இணைந்து அதிகாரத்தை தக்கவைத்து கொள்ள ரணில் விக்கிரமசிங்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர் .

                        ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றிடவும் மேலும் நாட்டை கீழ்நோக்கி செல்லும் நிலைக்கு எடுத்து செல்ல பிற் படுத்தப்பட்ட சிந்தனைக்குள் ஊறியுள்ள ரணில் முயல்வார் .

                        ரணிலை விரட்டுவோம் மக்கள் முழக்கம் கொதிக்கும் இலங்கை

                        அதனால் அவரை அந்த பதவியில்; இருந்து விரட்டும் வரை நாம் போராடுவோம் என்கின்றனர் மக்கள் .

                        இவ்வாறான மக்கள் போராட்டங்கள் இலங்கையில் தொடர்ந்தால் இலங்கை மேலும் சோமாலியாக மாறும் நிலை ஏற்படும் என மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

                        மக்கள் மன்றம் விரும்பாத ஒருவர் ஜனாதிபதி நிலையில் அங்கம் வகிப்பதை முற்றாக கைவிட வேண்டும் என அந்த போராட்ட கார்கள் தெரிவித்துள்ளனர்.


                        எரிபொருளை நாட்டுக்குள் எடுத்து அதனை நிவர்த்தி செய்துவிட்டால் மக்கள் போராட்டம் அமைதியாகிவிடும் என்பதால் எரிபொருளில் மற்றும் எரிவாயு விநியோகத்தை150 ரூபாவுக்குள் மக்களுக்குவிற்பனை செய்திடும் நரி தந்திரத்தில் ரணில் ஈடுபட்டுள்ளார்.

                        இது தனது அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள்வும் மக்கள் எழுச்சியை மழுங்கடிக்க ரணில் விக்கிரமசிங்க போட்டுள்ள மகா நரி திட்டங்களில் இதுவும் ஒன்று என போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர் .

                          Posted in சீமான் பேச்சு

                          போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இலங்கை சீமான்

                          போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இலங்கை சீமான்

                          இலங்கையில் கோட்டபாய தோற்றது ஏன் அவர்களை மக்கள் விரட்டுவது ஏன்

                          .இதே நிலை இந்தியாவுக்கு வந்துவிட கூடாது ஏன் நாம் தமிழர் கட்சி சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார் .

                          இலங்கை ஜனாதிபதி மாளிகையை மக்கள் முற்றுகையிட்டு துரத்தியதன் பின்னர் புதிய தலைமுறை தொலைக்காட்சி மேற்கொண்ட நேரலையில் சீமான் இந்த விடயம் தொடர்பாக உரையாடினார் .

                          இதில் அழுத்தி காணொளி பார்க்கலாம்

                          Posted in சீமான் பேச்சு

                          எடப்பாடியை கலாய்த்த சீமான் வீடியோ

                          எடப்பாடியை கலாய்த்த சீமான் வீடியோ

                          தமிழகம் ,இந்தியா -நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் அவர்கள் எடப்பாடி பழனிசாமியை கலாய்த்துள்ள காணொளி வைரலாகி வருகிறது .

                          நாம் தமிழர் கட்சி சீமான் அவர்கள் தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சி எனவும் அதுவே எதிர் காலத்தில் எதிர்க்கட்சி நிலைக்கு முன்னேறி தமிழகத்தை மட்டும் அல்ல இந்தியாவை திணறடிக்கும் என எதிர்பார்க்க படுகிறது .

                          செய்தியாளர்கள் சந்தின் பொழுதே நாம் தமிழர் சீமான் அவர்கள் எடப்பாடி பழனிசாமியை இவ்வாறு கலாய்த்துள்ளார் .

                          சீமானின் முற்போக்கு பார்வையும் அவரது திறனாய்வும் தற்காலத்தில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை படம் பிடித்து காட்டியுள்ளது .

                          இதனால் சீமான் மக்கள் மனதில் ஆழ பதிந்துள்ள ஆசானாக வாழ்ந்து வருகிறார் ,இவரே தமிழகத்தை பாதுகாக்க சிறந்த தலைவன் என்கிறது இளம் வாலிபங்கள் .

                          இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்

                          Posted in உளவு செய்திகள்

                          கோட்டபாயாவை ஏற்க மறுக்கும் நாடுகள் மிரட்டும் அமெரிக்கா

                          கோட்டபாயாவை ஏற்க மறுக்கும் நாடுகள் மிரட்டும் அமெரிக்கா

                          இலங்கை ஜனாதிபதி கோத்தபாயா அமெரிக்கா செல்ல முயனறார் .ஆனால் அமெரிக்கா அரசு விசா வழங்குவதை நிறுத்தி அவரது பயணத்திற்கான ஆப்பு வைக்கும் ஆட்டத்தை ஆரம்பித்தது .

                          அதனை தொடர்ந்து தற்போது மலேசியாவுக்கு சென்றார்

                          .அங்கும் அவருக்கான அடைக்கலத்தை வழங்க முடியாத நெருக்கடி அந்த நாட்டு ஆளும் அரசுக்கு எதிர் கட்சிகள் மற்றும் ஒன்றிணைந்த கட்சிகளினால் நெருக்கடி வழங்கப்பட்டது .

                          அதனால் மலேசியாவில் இருந்து தற்போது சிங்கப்பூருக்கு பயணமானார் .

                          அங்கு புகலிட அடைக்கல கோரிக்கை வழங்குவதில்லை என்று சிங்கப்பூர் கையி விரித்து விட்டது .

                          அதனை தொடர்ந்து டுபாய் அல்லது அபுதாபிக்கு அவர் தப்பி செல்லும் நிலை ஏற்படவுள்ளது.

                          அங்கும் அவருக்கான அடைக்கலம் அல்லது பாதுகாப்பு வழங்கும் நிலை கேள்விக்குறியாகியுள்ளது .

                          ஐரோப்பா எங்கும் கோட்டபாய செல்ல முடியாத நிலையில் உள்ளனர் .கரணம் தமிழர்கள் போராட்டத்தில் குதித்து இவரை போர்குற்றத்தில் தூக்கிசென்று விடுவார்கள் .

                          கோட்டபாயாவை ஏற்க மறுக்கும் நாடுகள் மிரட்டும் அமெரிக்கா

                          தற்போது எந்த நாட்டிலும் நிரந்தரமாக தங்கிட முடியா நிலையில் கோட்டபாய சிக்கி தவித்த வண்ணம் உள்ளார் .

                          அப்படி என்றால் அவருக்கு மாற்று வழி என்ன மீளவும் இலங்கைக்கு திரும்பி வரவேண்டும்.

                          இலங்கை நாட்டில் கோட்டபாய தங்கிட முடியாத நெருக்கடி இவர்களுக்கு உள்ளது .

                          கோட்டபாய மனைவியுடன் நாடு நாடாக ஓடுவதற்கு பின்புல காரணம் அமெரிக்கா .

                          அமெரிக்காவே கோட்டபாயவுக்கு அடைக்கலம் வழங்க வேண்டாம் என்ற அழுத்தத்தை கொடுத்து வருகிறது .

                          இதனால் ராஜபக்ச குடும்பங்கள் பீதியில் உறைந்துள்ளனர் .

                          நாடுகளை கூட்டி வைத்து புலிகளையும் தமிழர்களையும் பயங்கரவாதம் என்ற தோரணையில் அழித்தனர் .

                          ஆனால் தற்போது உலக நாடுகள் இவர்களை கைவிட்ட நிலையில் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

                          இதன் மறுமுனை எதுவாக உள்ளது எனின் நீங்கள் செத்து போங்கள் என்பது தான் .

                          அவ்வாறு நோக்கின் கோட்டபாய உள்ளிட்டவர்கள் போர்குற்றத்தில் சர்வதேச நாடுகளில் வைத்து தூக்கி செல்லும் நகர்வுகள் முன்னெடுக்க படுகின்றன.

                          தமிழர்களின் சாபங்களும் கண்ணீரும் தற்போது 13 வருடங்களின் பின்னர் ராஜபக்ச குடும்பத்தை துரத்தி வருகிறது.

                          தனது சொந்த மக்களும் ராஜபக்ச குடும்பத்தை வெறுத்துள்ள நிலையில் தமிழர்களும் எதிரியாக உள்ள நிலையில் என்ன செய்வதென்று தெரியாது பெரும் பொறிக்குள் ராஜபக்ச குடும்பம் சிக்கியுள்ளது.

                          இன்று இரவு அல்லது நாளை அரபு நாடு ஒன்றுக்கு பயணிக்கும் கோட்டபாய அங்கு தங்கி இருக்கும் நிலையில் உள்ளார் .

                          ஆனால் அவருக்கு அமெரிக்கா அரசியல் சதுரங்க ஆட்டம் சாத்தியமான ஒன்றாகி காணப்படவில்லை .

                          கோட்டாபய நாயை போல ஆடு நாடாக ஓட வேண்டிய நிலையிலேயே சிக்கியுள்ளார் என்பதே நிலையாக உள்ளது.

                          அமெரிக்கா கோட்டாவை பழிவாங்க காரணம் ,சீனாவுடன் நெருங்க ஒட்டி தமக்கு எதிராக செயல்பட்டதை இப்பொழுது சாதிக்கிறது.

                          இப்பொழுது என்றாலும் ராஜபாக்ஸை குடும்பம் உலக நாகரிக அரசியலை புரிந்திருப்பார்களாக…?

                          இப்பொழுது மக்கள் கேள்வி என்னவெனில் ஏன் கோட்டபாய சீனாவுக்கு தப்பி ஓடவில்லை என்பது தான் .

                          இலங்கை நாட்டை பிச்சைகார நிலைக்கு ஆக்கியதே புத்த மதம் என நம்பிய சீனா தனே .

                          அப்புறம் எப்படி சீனா காரனிடம் போய் தப்பிக்க முடியும் .இதைத்தான் ஆப்பு என்பார்கள் .ஆப்பு என்றால் அப்படி சிறந்த ஆப்பு .கோட்டா கோ கோம் Gotta GO Home அல்ல கோட்டா நோ கோம் Gotta NO Home.

                          • வன்னி மைந்தன் –
                            Posted in இலங்கை செய்திகள்

                            மக்கள் போராட்டங்களை தடுக்க கொழும்பில் ஊரடங்கு

                            மக்கள் போராட்டங்களை தடுக்க கொழும்பில் ஊரடங்கு

                            இலங்கையில் ஜனாதிபதி கோட்டாவை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவை பதவி விலக வேண்டும் என கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

                            ஆனால் ரணில் பதவி விலகி மறுத்து மக்களை அடக்கி ஒடுக்க இராணுவம் போலீசை ஏவி விட்டுள்ளனர் .

                            இதனால் இன்று மதியம் 12 மணி முதல் காலை ஐந்து மணிவரை கொழும்பு பகுதியில் ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது.

                            பிரதமர் ரணிலின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

                            ஊரடங்கு நீக்க பட்ட பின்னர் பிரதமர் ரணிலுக்கு எதிராக ஆயிர கணக்கில் மக்கள் எதிர்ப்பு பேரணியில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது.