Posted in இலங்கை செய்திகள்

ரணில் உடனடியாகப் பதவி விலக வேண்டும் – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடல்

ரணில் உடனடியாகப் பதவி விலக வேண்டும் – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடல்

நாட்டில் தற்பொழுது நிலவும் நெருக்கடி நிலையை தணிக்க ஒரு தீர்வாக பிரதமர் கூடிய விரைவில் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என பாராளுமன்ற அலுவலகங்கள் பற்றிய குழுவின் உறுப்பினர்கள் மற்றும்

பாராளுமன்ற கட்சி தலைவர்களின் பங்குபற்றலில் நேற்று (13) பிற்பகல் பாராளுமன்றக் கட்டத் தொகுதியில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரம் குறித்து கௌரவ சபாநாயகர் விளக்கம் அளித்தார்.

நாட்டில் நிலவும் சூழ்நிலை தொடர்பில் கட்சித் தலைவர்கள் நீண்ட நேரம் கலந்துரையாடியதுடன், பாதுகாப்பு படைகளின் பிரதானி, முப்படைகளின்

தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் தற்போதைய பாதுகாப்பு நிலமைகள் குறித்து இங்கு விளக்கம் அளித்தனர்.

நாட்டு மக்களுக்கு அறிவித்தது போன்று இன்று (13) நள்ளிரவு 12மணிக்கு முன்னர் ஜனாதிபதி அவர்களின் பதவி விலகல் கடிதம் அனுப்பி வைக்கப்படும்

என அதிமேதகு ஜனாதிபதி தொலைபேசி ஊடாக தனக்கு அறிவித்திருப்பதாக சபாநாயகர் இங்கு தெரிவித்தார்.

ரணில் உடனடியாகப் பதவி விலக வேண்டும் – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடல்

இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ டிரான் அலஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மைத்திரிபால சிறிசேன, கௌரவ லக்ஷ்மன் கிரியல்ல, கௌரவ அனுரகுமார திஸாநாயக்க, கௌரவ மனோ

கணேசன், கௌரவ வாசுதேவ நாணயக்கார , கௌரவ வீரசுமன வீரசிங்க, கௌரவ டக்ளஸ் தேவானந்தா, கௌரவ கயந்த கருணாதிலக, கௌரவ ரஞ்சித் மத்தும பண்டார, கௌரவ அங்கஜன் ராமநாதன் , கௌரவ கெவிந்து

குமாரசிங்க, கௌரவ ரவூப் ஹக்கீம், கௌரவ வி.ராதாகிருஷ்ணன், கௌரவ உதய கம்மன்பில,


சங்கைக்குரிய அத்துரலிய ரத்ன தேரர், கௌரவ எம் .ஏ சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் 6 மாதங்களில் விபத்தில் சிக்கி 459 பேர் உயிரிழப்பு

    இலங்கையில் 6 மாதங்களில் விபத்தில் சிக்கி 459 பேர் உயிரிழப்பு

    2022 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ,இடம்பெற்ற வீதி விபத்துகள் காரணமாக 1,459 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

    ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், 1,387 பாரிய வீதி விபத்துக்களில் 1,459 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துகளில் 3,326 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    இந்த காலகட்டத்தில், 4,309 சிறு விபத்துகளும், 2,229 விபத்துக்களில் சொத்துக்களுக்கான சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

    எவ்வாறாயினும், இந்த நாட்களில் திடீரென வீதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை
    குறைந்ததினால் விபத்துக்கள் மிகக்குறைவாகவே காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

      Posted in இலங்கை செய்திகள்

      கோட்டாவை தூக்கில் மாட்டு வெளிநாடுகளில் தமிழர்கள் போராட்டம்

      கோட்டாவை தூக்கில் மாட்டு வெளிநாடுகளில் தமிழர்கள் போராட்டம்

      ஓட ஓட விரட்டுவோம்….நீதியின் முன் நிறுத்துவோம்….! போராடத் தயாராகும் புலம்பெயர் தமிழர்கள் !! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

      தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் இனப்படுகொலையாளி கோத்தபாய இராஜபக்சவுக்கு எதிரான போராட்டங்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராகி வருவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

      நாட்டைவிட்டு வெளியேறி தற்போது மாலைதீவில் தஞ்மடைந்துள்ள சிறிலங்காவின் ஜனாதிபதி கோத்தபாய இராஜபக்ச, அங்கிருந்து சிங்கப்பூருக்கு செல்ல இருப்பதாக செய்திகள் கூறப்படுகின்னறன.

      இந்நிலையில் சர்வதேச நியாயாதிக்கத்தின் (universal jurisdiction) அடிப்படையில் இனப்படுகொலையாளி கோத்தபாய இராஜபக்ச கைது செய்யப்பட்டு

      கோட்டாவை தூக்கில் மாட்டு வெளிநாடுகளில் தமிழர்கள் போராட்டம்

      அந்நாட்டு நீதிமன்றின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்நாட்டு தூதரகங்கள் முன்னால் போராட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

      ‘ஓட ஓட விரட்டுவோம்….நீதியின் முன் நிறுத்துவோம்….!’

      என்ற முழக்கத்துடன் ஏற்பாடாகி வரும் இப்போராட்டத்தில் அனைத்து தமிழர் அமைப்புக்களையும் ஒருங்கிணையுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு கோரியுள்ளது.

      போர் குற்றங்களில் ஈடுபட்டுள்ள சிறிலங்காவின் அரச பிரதிநிதிகளுக்கு எதிராக ஐ.


      நா உறுப்பு நாடுகள் சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என


      ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் மிச்சல் பசேலே அம்மையாhர் அவர்கள் முன்னர் அழைப்பொன்றினை விடுத்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

        Posted in பிரித்தானிய செய்தி

        லண்டனில் வேகமாக பரவும் கொரோனோ தமிழர்கள் அதிகம் பாதிப்பு

        லண்டனில் வேகமாக பரவும் கொரோனோ தமிழர்கள் அதிகம் பாதிப்பு

        பிரிட்டன் லண்டன் பகுதியில் சமீப வாரங்களில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பல நூறு தமிழர்கள் பாதிக்க பட்டுள்ளனர்.

        மக்கள் முகமூடிகளை அணியாது உலவிய வண்ணம் உள்ளனர்

        பேருந்து மற்றும் பொது போக்குவரத்து பொது இடங்களில் அலட்சியத்துடன் நடந்து திரிந்தவர்களுக்கு இந்த நோயானது அதிகம் தாக்கியுள்ளது.

        தற்ப்போது கொரோனோ நோயானது மக்களுக்கு தொற்றி கொண்டாலே அதனை சோதனை செய்வதற்கு பணம் செலுத்த வேண்டும் .

        முன்னர் லண்டனில் அது இலவசமாக கிடைக்க பெற்று வந்த நிலையில் தற்போது அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்கிறது பிரிட்டன் அரசு .

        நமக்கு தெரிந்த பல தமிழர்கள் இந்த நோயினால் பீடிக்க பட்டுள்ளனர் ,தமிழர்களே எச்சரிக்கையாக செயல்படுங்கள்.


        பிரிட்டன் தழுவிய நிலையில் கொரனோ நோயானது மீளவும் அதிகமாக தாக்கி வருகிறது.

        வரும் முன் தடுப்போம் உயிரை கப்பபோம் .

          Posted in கொரனோ வைரஸ்

          பிரேசிலில் கொரனோவுக்கு சிக்கி 352 பேர் பலி

          பிரேசிலில் கொரனோவுக்கு சிக்கி 352 பேர் பலி

          பிரேசில் நாட்டில் மீள அதிகரித்து வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் மட்டும் 352 பேர் பலியாகியுள்ளனர்.

          மேலும் இந்த கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 64,771 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

          இந்த கொரனோ நோயானது உலகம் எங்கும் மிக வேகமாக மீள பரவிய வண்ணம் உள்ளதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

          பிரேசிலில் கொரனோவுக்கு சிக்கி 352 பேர் பலி

          இப்போது உலகம எங்கும் முப்பது வீதத்தினால் இந்த கொரனோ நோயானது அதிகரித்துள்ளது எனவும் ,இதனால் மீளவும் நாடுகள் முடக்க நிலைக்கு செல்லும் என எதிர் பார்க்க படுகிறது .

          மக்களை மிக விழிப்பாக இருக்கும் படியும் மாஸ்க் அணிந்து செல்லும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .

          மக்களே மீள உங்களை தேடி கொரனோ வருகிறத.உங்களை நீங்களே காப்பாற்றி கொள்ளுங்கள் .

            Posted in இலங்கை செய்திகள்

            கோட்டா வாகனங்கள் திருட்டு தேடும் பொலிஸ்

            கோட்டா வாகனங்கள் திருட்டு தேடும் பொலிஸ்

            ஜனாதிபதி இல்லம் மற்றும் மாளிகையை முற்றுகையிட்ட போராட்ட காரர்கள் அந்த ஜனாதிபதி மாளிகை மற்றும் காரியாலயங்கள் என்பனவற்றை சேதமாக்கினர் .

            அவ்வேளை ஜனாதிபதி மாளிகை மற்றும் காரியாலயங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருபது வாகனங்கள் மற்றும் அதன் கராச்சில் வைக்க பட்டிருந்த வாகன உதிரி பாகங்கள் என்பன காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

            இவ்வாறு கணம் போன வாகனங்களை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

            மேலும் ஜனாதிபதி மாளிகை என்பனவும் சேதமாக்க பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

            இதன் திரொலியாக பலர் கைது செய்யப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது.


            போலீசார் தகவல் அடிப்படையில் அங்கிருந்த வாகன உதிரிபாகங்களில் கிட்டத்தட்ட முழுவதுமாக காணாமல் போயுள்ளதக தெரிவிக்க படுகிறது.

            கோட்டா கொள்ளையடித்த பணத்தை விட அந்த வாகன உதிரி பக்கங்கள் பெறுமதியா என மக்கள் மன்றம் கேட்பது சரியாகாதான் உள்ளது .

              Posted in இலங்கை செய்திகள்

              பேரூந்துக்கு கல்வீச்சு தாக்குதல் நடத்திய பெண் கைது

              பேரூந்துக்கு கல்வீச்சு தாக்குதல் நடத்திய பெண் கைது

              வவுனியா புளியம் குளம் பகுதியில் பயணித்த அரச பேரூந்து ஒன்றை இளம் பெண் ஒருவர் வழிமறித்துள்ளார் .

              அவ்வேளை அந்த பேரூந்து நிற்காது புறப்பட்டு சென்றுள்ளது .

              இதனால் ஆத்திரமுற்ற இளம் பெண் அந்த அரச பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளார் .

              பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதலை புரிந்த குற்றத்திற்காக அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

              எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெரிதும் அவதியுற்று வரும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது.

                Posted in உலக செய்திகள்

                ரசியா இராணுவத்தின் 3 கேணல்கள் ஒரே நாளில் படுகொலை

                ரசியா இராணுவத்தின் 3 கேணல்கள் ஒரே நாளில் படுகொலை

                ரசியா இராணுவத்தின் முக்கிய படை தளபதிகளாக விளங்கிய மூன்று கேணல் தர இராணுவ அதிகாரிகள் உக்கிரேன் தாக்குதலில் படுகொலை செய்ய பட்டுள்ளனர்.

                இவர்களே முக்கிய தாக்குதல்களை உக்கிரேன் மீது திட்டமிட்டு வழிநடத்தி வந்தவர்கள் .

                அவ்விதமான மூவரும் இந்த போர் முனையில் உக்கிரேன் தாக்குதலில் படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.

                ரசியாவின் இராணுவ முக்கிய கேணல் தர நபர்கள் நடமாட்டங்களை அமெரிக்கா உளவுத்துறை கண்காணித்து தகவல் வழங்க அந்த செய்மதி தகவலுடன் ரசியா இராணுவம் மீது உக்கிரேன் தாக்குதலை நடத்தி வருகிறது

                .ரசியா இராணுவத்தின் 3 கேணல்கள் ஒரே நாளில் படுகொலை

                இதற்கு பதிலடி தரும் வகையில் ஈரான் வழங்கிய உளவு விமானங்களை பயன் படுத்தி ரசியா உக்கிரேன் மீது கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

                ஈரானின் இந்த உளவு விமானங்களின் செயல் பாடுகள் மிக முக்கியமான பலத்தை ரசியா இராணுவத்திற்கு வழங்கியுள்ளது.

                உக்கிரேன் கிழக்கு பகுதிகள் மீது ரசியா இராணுவம் அகோர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது.

                இதுவரை இன்றைய நாளில் அறுபதுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக உக்கிரேன் தெரிவிக்கிறது .

                Posted in உலக செய்திகள்

                ஆர்மேனியாவில் புதிய இராணுவ தளம் 2000 ரசியா இராணுவம் குவிப்பு

                ஆர்மேனியாவில் புதிய இராணுவ தளம் 2000 ரசியா இராணுவம் குவிப்பு

                ஆர்மேனியாவில் ரசியா இராணுவம் பாரிய இராணுவ முகாம் ஒன்றை அமைக்கிறது .

                இந்த புதிய இராணுவ முகாமில் சுமார் இரண்டாயிரம் ரசியா இராணுவம் தங்க வைக்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன .


                விமான தளத்துடன் கூடிய நவீன வசதிகளுடன் இந்த இராணுவத் தளத்தை ரசியா இராணுவம் அமைத்து வருகிறது.

                ஆர்மேனியாவில் ரசியா இராணுவம் நிறுவ படுவதால் அமெரிக்கா நேட்டோ இராணுவம் கொதிப்பில் உறைந்துள்ளது .


                மேலும் இந்த ரசியா இராணுவ முகாம் அமைத்தல் நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை அதிகரித்துள்ளது.

                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                மலிவு விற்பனையில் லண்டன் Bexley Bromley Greenwich and Lewisham
                பகுதிகள் வீடுகள்

                மலிவு விற்பனையில் லண்டன் Bexley Bromley Greenwich and Lewisham
                பகுதிகள் வீடுகள்

                லண்டன் Bexley Bromley Greenwich and Lewisham
                பகுதிகள் உள்ள மாநகர சபைகளில் வீடுகள் ஐந்து லட்சம் வரை கடந்த பன்னிரெண்டு மாதங்களுக்குள் மலிவு விலையில் விற்பனை செய்யப் பட்டுள்ளன.

                கொரனோ தொற்று நோயானது வேகமாக பரவிய நிலையில் அந்த நோயின் தாக்குதலின் பொழுதும் வீடுகள் மலிவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

                இந்த பகுதிகளில் வீடுகளின் விலை ஐந்து லட்சம் முதல் £573,280.வரையிலான விலைக்குள் அதிகமாக விற்பனை செய்ய பட்டுள்ள புதிய புள்ளி விபரம் வெளியாகியுள்ளது.


                மேலும் இதே பகுதிகளில் மக்கள் வீடுகளை வாங்கி குவித்திட முயன்று வருவதாக அந்த தகவலில் மேலும் தெரிவிக்க பட்டுள்ளது .


                  கேழ்வரகு மாவுடன் பாசிப்பருப்பு சேர்த்து இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க| Ragi flour Healthy Breakfast
                  Posted in இலங்கை செய்திகள்

                  சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகிறார்

                  சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகிறார்

                  இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாச இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகிறார் .

                  இவரை ஜனாதிபதியாகி நியமிக்குமாறு எதிர் கட்சிகள் பல பரிந்துரை செய்துள்ளதால் இவரே ஜனாதிபதியாகும் நிலை உருவாக்கம் பெறுகிறது எனப்படுகிறது .

                  அவ்வாறு இல்லாவிடினும் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் சஜித் மகத்தான வெற்றியை தட்டி செல்வார் என எதிர்பார்க்க படுகிறது.

                  பிரதமராக டலஸ் அழகப்பெரும நியமிக்க படலாம் என்கின்ற உள்ளக கசிவு தகவல்கள் வெளியாகியுள்ளன.


                  ஜனாதிபதி கோட்டாவுக்கு அடுத்து மக்களினால் அதிக வாக்கு பெற்றவராக சஜித் உள்ளார் .

                  எனவே அவரே ஜனாதிபதியாக்க வேண்டும் எனப்து மக்கள் பொது நிலைப்பாடாகவும் உள்ளது குறிப்பிட தக்கது.

                    Posted in இலங்கை செய்திகள்

                    இலங்கைக்கு இந்தியா இராணுவம் அனுப்ப படமாட்டாது

                    இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவதாக ஊகங்களின் அடிப்படையில் பல்வேறு ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும்

                    வெளியாகியிருக்கும் செய்திகளை உயர் ஸ்தானிகராலயம் முற்றுமுழுதாக மறுக்கின்றது.

                    இச்செய்திகளும் இவ்வாறான நோக்குகளும் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை அடிப்படையாகக் கொண்டவை அல்ல.

                    1. ஜனநாயக பெறுமானங்கள் மற்றும் விழுமியங்கள், நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்புகள் மற்றும் அரசியலமைப்பு ரீதியான
                    2. கட்டமைப்பு ஆகியவற்றின் ஊடாக செழுமை மற்றும் முன்னேற்றத்தினை நனவாக்க விரும்பும் இலங்கை மக்களுடன் இந்தியா துணை நிற்பதாக இந்திய வெளியுறவு

                    3. அமைச்சின் ஊடகப்பேச்சாளர் நேற்றையதினம் மிகவும் தெளிவாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
                      Posted in உலக செய்திகள்

                      துப்பாக்கி சூடு 14 பேர் மரணம் 9 பேர் காயம்

                      துப்பாக்கி சூடு 14 பேர் மரணம் 9 பேர் காயம்

                      தென் ஆப்ரிக்கா tavern பகுதியில் மக்கள் கூடும் பகுதியில் ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் சிக்கி 14 மக்கள் பலியாகினர் .

                      மேலும் இந்த துப்பாக்கி தாக்குதலில் சிக்கி ஒன்பது பேர் படுகாயமடைந்தனர் ,காயமடைந்தவர்கள் ஐந்து பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது.

                      தென் ஆப்பிரிக்காவில் இடம்பெற்ற இந்த மர்ம ஆயுததாரி நடத்திய துப்பாககி சூட்டு தாக்குதல் ஏன் என்பது தொடர்பாக தெரியவரவிலை .

                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                      லண்டனில் சிறுவனை கடித்து குதறிய நாய்

                      லண்டனில் சிறுவனை கடித்து குதறிய நாய்

                      லண்டன் Cumberland Avenue, Canterbury பகுதில் ஒன்பது வயது சிறுவன் ஒருவனை நாய் ஒன்று திடீரென கடித்து குதறியது .

                      இந்த சம்பவத்தின் பொழுது அந்த சிறுவன் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அம்புலன்ஸ் உலங்குவானூர்தி மூலம் லண்டன் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டான்.

                      தற்போது லண்டன் மருத்துவ மனையில் சிகிச்சைபெற்று வரும் சிறுவன் நிலை தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை.

                      நாயின் உரிமையாளர் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உள்ளாக்க பட்டுள்ளார்.

                        Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

                        இந்தியா இராணுவம் இலங்கைக்கு வந்தால் புதிய ஆயுத மோதல் வெடிக்கும்

                        இந்தியா இராணுவம் இலங்கைக்கு வந்தால் புதிய ஆயுத மோதல் வெடிக்கும்

                        இலங்கைக்கு இந்தியா இராணுவம் இம்முறை வந்திறங்கினால் அது இலங்கைக்கு பெரும் நெருக்கடியை தருவிக்கும்.


                        சுருங்க சொல்ல போனால் இலங்கை பொல்லு கொடுத்து அடிவாங்க தயாராகிறது .

                        மக்கள் தமது அதிகார வர்க்கங்கள் புரிந்த இழிவு கெட்ட செயலினால் ராஜா பாக்ஸ அரசுக்கு எதிராக வீதி இறங்கினர் .

                        இதுவே தவறு என கருதி லஞ்ச ஊழல் பெருச்சாளிகளை காப்பாற்ற இந்தியா இராணுவ வரவு முனைந்தால் அதுவே இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியை தோற்றுவிக்கும் நாடாக இலங்கை மாற்றம் பெறும் .

                        சீனா தமிழர்களுக்கு உதவும் நிலையை ஏற்படுத்தும் .அதுவே இலங்கைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் நிலையும் தோன்றலாம் .

                        தவிர இந்தியா இராணுவத்தை வலிந்து சீண்டும் நகர்வில் சீனா கண்டிப்பாக செயல் படும் .

                        சீனாவின் ஆதிக்கம் கொழும்பை அண்மித்து அகல கால் பாதித்துள்ளது .சீனத்தவர்களும் சிங்களவர்களும் கலப்பு திருமணம் புரிந்துள்ளதுடன் பிள்ளைகளையும் பெற்றுள்ளனர் .

                        சீனாவின் உளவுத்துறையால் மேற்கொள்ள பட்ட நீண்ட கால தந்திர திட்டமாக இவை காணப்படுகிறது .

                        இவ்வேளை இந்தியா இராணுவத்தை இலங்கை அழைத்தால் ., இந்தியா இராணுவம் இலங்கை வந்தடைந்தால், இம்முறை சுலபமாக இந்தியா இராணுவத்தை இலங்கையில் இருந்து மீள் பெற முடியா நிலையில் இலங்கை சிக்கும்.

                        இவ்வேளை தமிழர்களுக்கு இந்தியாவின் ஆதரவுடன் தீர்வினை வழங்க வேண்டிய நிலையும் ஏற்படலாம் .

                        மேலும் இம்முறை இலங்கைக்கு இந்தியா இராணுவம் பெரும் நெருக்கடியை வழங்கும்.

                        அது புதிய ஆயுத குழுக்களை உருவாக்கும் நிலைக்கு செல்லும் .இலங்கை புதிய போர் களமாக மாற்றம் பெறும் .

                        கோட்டபாயா ஆடுகளத்தில் இலங்கையில் நடக்க போகும் எதிர்மறை ஆயுத மோதலை தமிழர்கள் மட்டும் அல்ல சிங்களவர்களும் காண தயாராகுங்கள் .

                        இந்தியா துல்லியமாக சிந்தித்து தொலைதூர பார்வையுடன் செயல் பட்டால் தமிழர்கள் ஆதரவுடன் இந்தியாவை காப்பாற்றி கொள்ள முடியும் .

                        தொடர்ந்து தமிழர் அரசியல் நிலை தொடர்பில் இந்தியா தவறான கோணத்தில் அதன் வெளியுறவு கொள்கை காணப்படுகிறது .

                        இந்தியா வெளியுறவு கொள்கையில் மாற்றம் ஏற்படாது விடின் அது இந்தியா இலங்கையில் பெரும் அவமானத்துடன் வெளியேறும் நிலை ஏற்படும் .

                        இலங்கை ஆடு களம் மாற்றமடைகிறது .தமிழருக்கு புதிய நாடுகளின் ஆதரவு தானாக தேடி வரும் நிலையை இந்தியாவே உருவாக்க போகிறது என்பதே வெளிப்படை .

                        • வன்னி மைந்தன் –
                        Posted in இலங்கை செய்திகள்

                        ஜனாதிபதி மாளிகையில் மக்கள் கூட்டம் முற்றுகை காட்சிகள்இதோ

                        ஜனாதிபதி மாளிகையில் மக்கள் கூட்டம் முற்றுகை காட்சிகள்இதோ

                        இலங்கை ஜனாதிபதி பதவி விலக கோரி வீதி இறங்கி போராடட்ம மக்கள் தற்போது ஜனாதிபதி மாளிகை உள்ளே புகுந்து இரண்டாவது நாளாக தமது தமது கட்டுப் பாட்டுக்குள் ஜனாதிபதி மாளிகையை வைத்துள்ளனர்.

                        அதி நவீன வசதிகளுடன் ஆடம்பரமாக வசித்து வந்த ஜனாதிபதிகளின் வாழ்க்கையை இந்த விடயம் அம்பல படுத்தியுள்ளது.

                        ஜனாதிபதி மாளிகையில் மக்கள் கூட்டம் காட்சிகள்இதோ

                        மக்கள் ஜனாதிபதி அமரும் முக்கிய ஆசனங்களில் அமர்ந்து புகைப்படங்கள் காணொளிகளை பிடித்து மகிழ்ச்சியடைந்தனர் .

                        தொடர்ந்து ஆயிர கணக்கில் மக்கள் ஜனாதிபதி மாளிகையை நோக்கி வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

                        ஜனாதிபதி கோட்டா மற்றும் ரணில் பதவி விலகும் வரை தாம் ஜனாதிபதி மாளிகை உள்ளே தரித்து நிற்போம் என்கிறது மக்கள் கூட்டம்.

                        தற்போது ஜனாதிபதி மாளிகை மக்கள் கண்காட்சி பூங்காவாக மாற்றம் பெற்றுள்ளது.

                        இங்கே ஜனாதிபதி மாளிகை குறித்த பல காணொளி காட்சிகள் வைரலாகி வருகிறது .

                        ஜனாதிபதி மாளிகையில் கோட்டாபய போலவே அவரது ஆசனத்தில் அமர்ந்து மகிழும் வாலிபர்கள் கிண்டல் பேச்சுக்கள் கலக்கலாக வைரலாகி வருகிறது.

                        மக்கள் பணத்தில் ஜனாதிபதி மாளிகை ஆண்ட கோமாளி கோட்டாவின் கோட்டைக்குள் மக்கள் வெள்ளம் புகுந்துள்ளது.


                        இலங்கை வரலாற்றில் பதிய பட்ட புதிய வரலாறு .தனி பெரும் பான்மை மூலம் வென்றவர் என்ற பெயரை கொண்ட கோட்டா இன்று அதே சிங்கள மக்களினால் ஜனாதிபதி மாளிகையை விட்டு நாயை போல விரட்ட பட்ட வரலாற்று சம்பவம் பதிவாகியுள்ளது .

                        தமிழன் அழிந்த அதே மாதத்தில் ஆரம்பிக்க பட்ட ராஜபக்ச கூட்டத்தின் அவலம் இது .

                        அரசியல் வாதிகளிற்கு நல்ல பாடமாக அமைய பெற்றுள்ளது .இது போலவே தமிழ் தலைமைகளுக்கு நடக்கும் என்பது நம்ம அரசியல்வாதிகள் புரிந்து கொண்டால் சிறப்பு .

                        மக்கள் முதுகில் ஏறி சவாரி செய்திட நினைக்கும் அரசியல்வாதிகளிற்கு மக்கள் இனித் தர தயாராகும் தண்டனைகள் எவ்வாறு அமையும் என்பதை இதன் ஊடக காண முடியும் .

                        ஜனாதிபதி மாளிகையில் மக்கள் கூட்டம் காட்சிகள்இதோ
                        ஜனாதிபதி மாளிகையில் மக்கள் கூட்டம் முற்றுகை காட்சிகள்இதோ
                          Posted in இலங்கை செய்திகள்

                          கோட்டா ரணில் பதவி விலகும்வரை ஜனாதிபதி மாளிகையில் தரித்து நிற்கும் மக்கள்

                          கோட்டா ரணில் பதவி விலகும்வரை ஜனாதிபதி மாளிகையில் தரித்து நிற்கும் மக்கள்

                          இலங்கையின் மக்களாட்சி தலைவரான கோட்டபாய ரணில் பதவி விலகும்வரை நாம் ஜனாதிபதி மாளிகையில் தரித்து நிற்போம் என கூறியவாறு மக்கள் பெரும் திரளில் அங்கே நிற்கின்றனர் .

                          எதிர்வரும் பதின்மூன்றாம் திகதி இலங்கை ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகுவர் என அறிவித்துள்ள நிலையில் மக்கள் அதனை ஏற்காது தொடர்ந்தும் அலரிமாளிகையில் மற்றும் ஜனாதிபதி செயலகம் அருகில் காத்துள்ளனர்.

                          இராணுவம் பொலிசார் மக்களுடன் முறுகளில் ஈடுபட்டால் அதுவே பெரும் வன்முறை மோதலாக வெடிக்கும் நிலை காணப்படுகிறது.

                          முட்டாள் கோட்டாவும் பொம்மை ரணிலும் எமக்கு வேண்டாம் என்கிறது மக்கள் மன்றம் ,தம்மை எதிர்த்தவர்களை பழிவாங்க துடிக்கிறது இந்த அரசியல் தலைகள் .

                          Posted in இலங்கை செய்திகள்

                          ஊடகவியலாளர்களை தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம் சஜித்

                          ஊடகவியலாளர்களை தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம் சஜித்

                          பிரதமர் ரணிலின் இல்லத்திற்கு முன்னால் ஊடகவியலாளர்களை இலக்காக் கொண்டு தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்*!

                          பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு முன்பாக அரச வன்முறையைப் பயன்படுத்தி சிரச ஊடகவியலாளர்கள் நால்வரை இலக்காக்

                          கொண்டு அவர்கள் மீது பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் நடத்திய கொடூரமான மனிதாபிமானமற்ற தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

                          அது மட்டுமன்றி, தாக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைக் கூட விரட்டி விரட்டி தாக்கும் அளவுக்கு பாதுகாப்புப் படையினர் மனிதாபிமானமற்றவர்களாக மாறிவிட்டனர்.

                          ஊடகவியலாளர்களை தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம் சஜித்

                          மக்களுக்கு தகவல் அறியும் உரிமையை உறுதி செய்வதற்காக நாகரீகமான ஊடகப் பயன்பாட்டில் ஈடுபட்ட மற்றும் அது தொடர்பாக மக்களின்

                          நன்மதிப்பைப் பெற்ற ஊடகவியலாளர்கள் குழுவொன்று குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டமை அதிகாரம் வாய்ந்த ஜனாதிபதியை நான்கு சுவர்களுக்குள்

                          முடக்கி வீட்டுக்கு அனுப்பிய மக்கள் போராட்டத்திலிருந்து பிரதமர் இன்னும் பாடம் கற்கவில்லை என்பதையே இந்தக் கோழைத்தனமான தாக்குதல் உணர்த்துகிறது.

                          மக்கள் இறையாண்மை மக்களிடமே உள்ளது என்பதை முன்னெப்போதையும் விட அதிகமாக நிரூபிக்கப்படும் இச்சூழ்நிலையிலும் கூட இவ்வளவு

                          கொடூரமாக நடந்துகொள்ள பாதுகாப்புப் படையினருக்கு பனிப்புரை வழங்கியது யார் என்பதும், சிரச ஊடகவியலாளர்களையே குறிவைத்து

                          தாக்குதலை நடத்தும் தேவை யாருக்குள்ளது என்ற விடயத்தில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

                          உடனடியாக பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்.

                          எந்தவொரு சக்திவாய்ந்த அதிகாரமும் மக்கள் சக்தியால் தோற்கடிக்கப்படும் என்பதை சட்டவிரோத பிரதமர் அறிந்திருக்க


                          வேண்டும் என்பதோடு,நாடு அராஜக நிலைக்கு செல்ல வழிவகுக்காமல் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.

                            Posted in இலங்கை செய்திகள்

                            இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் சவேந்திர சில்வா வேண்டுதல்

                            இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் சவேந்திர சில்வா வேண்டுதல்

                            இலங்கை இராணுவத்தின் இராணுவத் தளபதியாக விளங்கிய சவேந்திர சில்வா இராணுவத்தினர் மீது மக்கள் தாக்குதல் நடத்த வேண்டாம் என கண்டிப்பான வேண்டுதலை விடுத்துள்ளனர்.

                            கொதிப்பில் மீளவும் மக்கள் இலங்கை இராணுவத்தின் சமீப கால மக்கள் மீதான வன்முறை தாக்குதல் தொடர்பில் எவ்வித கருத்தையும் தெரிவிக்காது இவ்விதம் சவேந்திர சில்வா அறிவித்துள்ளது மக்கள் மத்தியில் மீளவும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது .

                            தொடர்ந்து செல்லும் அரசியல்வாதிகளிற்கு எதிரான மக்கள் போராட்டத்தை இவரது பேச்சு மீண்டும் தூண்டி விடும் என எதிர் பார்க்க படுகிறது

                              Posted in பிரித்தானிய செய்தி

                              லண்டனில் குத்துக் கரணம் அடித்த கார்

                              லண்டனில் குத்துக் கரணம் அடித்த கார்

                              லண்டன் Albert Road, Ashford. பகுதியில் வேகமாக பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து குத்துக்கரணம் அடித்துள்ளது.

                              தலைகீழாக கவிழ்ந்த காரில் இருந்தவர்கள் பலத்த காயங்களுடன் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

                              இந்த கார் விபத்தினால் அந்த வழி சாலை போக்குவரத்து சில மணி நேரம் தடை பட்டது.

                              சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் அம்புலன்ஸ் என்பன பாதிக்க பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர் .

                              குத்துகரணம் அடித்து கவிழ்ந்த கார் விபத்து தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்.

                              லண்டனில் கார்கள் இப்படியும் குத்துகாரணம் அடிக்கும் என்பது இதன் மூலம் காணமுடிகிறது .