Tag: விடுமுறை
விடுமுறையில் பள்ளி மாணவர்களைக் காட்டு யானைகள் அச்சுறுத்துகின்றன
விடுமுறையில் பள்ளி மாணவர்களைக் காட்டு யானைகள் அச்சுறுத்துகின்றன
விடுமுறையில் பள்ளி மாணவர்களைக் காட்டு யானைகள் அச்சுறுத்துகின்றன
ஹம்பாந்தோட்டை பகுதியில் காட்டு யானை
ஹம்பாந்தோட்டை பகுதியில் காட்டு யானைகளால் ஏற்பட்ட மோதல் காரணமாக, ஹம்பாந்தோட்டை கல்வி
மண்டலத்திலுள்ள நொனகமவில் அமைந்துள்ள வெலிபட்டான்வில மகா வித்தியாலயம் மூடப்பட்டுள்ளது.
நொனகம, வெலிபட்டான்வில, லுனாம மற்றும் கியூலா பகுதிகளில் காட்டு யானைக் கூட்டம் ஒன்று அடிக்கடி நடமாடுவதாகவும், அத்துமீறி வரும் அந்த
யானைகளால் தங்கள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேரிடுமோ என்ற தொடர்ச்சியான அச்சத்தில் வாழ்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
வெலிபட்டான்வில மகா வித்தியாலயத்தின் முதல்வர் காமினி கமகே கூறுகையில், அப்பகுதியில் அடிக்கடி நடமாடும் ஒரு முரட்டு யானை, பள்ளி
வளாகத்தின் பின்புற வாயிலுக்கு அருகே ஒரு மாணவி
வளாகத்தின் பின்புற வாயிலுக்கு அருகே ஒரு மாணவியின் தாயாருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அது பலத்த
சேதமடைந்தது என்றார். மனித-யானை மோதலை இவ்வளவு நெருக்கமாக இதற்கு முன் அனுபவித்திராத குழந்தைகள், பள்ளி வளாகத்தில் காட்டு யானையைக் கண்டதும் பயந்துபோனதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் விளைவாக, அவர் பெற்றோரைத் தொடர்புகொண்டு, குழந்தைகளை ஒப்படைத்து, பள்ளியை மூடினார்.
அப்பகுதியிலிருந்து மந்தையை விரட்டியடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக களமேட்டிய வனவிலங்கு அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

இலங்கையில் பாடசாலைகள் அனைத்தும் விடுமுறை
இலங்கையில் பாடசாலைகள் அனைத்தும் விடுமுறை
இலங்கையில் பாடசாலைகள் அனைத்தும் விடுமுறை செய்யப்பட்டுள்ளதாக இலங்கையின் கல்வித்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
தற்பொழுது இடம்பெற இருக்கின்ற உள்ளூராட்சி தேர்தலை அடுத்து. வாக்கு அளிக்கும் மன்றங்களாக பாடசாலைகள் அமைய பெற்றுள்ளதால். அந்தக் காரணத்தினால் தற்பொழுது நாடு தழுவிய ரீதியில் .அனைத்து பாடசாலைகளும் இரண்டு நாட்களுக்கு விடுமுறை விடுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது .
தேர்தல் முடியும் வரை இந்த இரண்டு நாட்களும். முக்கியமான பாடசாலைகளில் வாக்களிப்பு கூடார இடம்பெற இருப்பதினால் .இந்த விடுமுறை நடத்தப்படுகிறது.
இரண்டு நாட்களும் மாணவர்கள் குசியில் உறைந்திருக்கின்றனர்.
விடுமுறை எப்பொழுது வரும் என எதிர்பார்த்து ,விடுமுறைக்காக காத்திருந்த மாணவர்களுக்கு, இந்த இரண்டு நாட்கள் விடுமுறை பெரும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.
இந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் பல கட்சிகள் தனித்தும், கட்சிகளாகும் போட்டியிடுகின்ற நிலையிலே ,இந்த தேர்தல் தற்பொழுது பரபரப்பாக மக்களினால் நல் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- டெங்கு பாதிப்பு அதிகரிப்பு

- யானைப் பல் புலிப் பல் விற்றவருக்கு 450000 அபராதம்

பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு
பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு
பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு ,2025 ஆம் ஆண்டுக்கான அரசாங்க பாடசாலைகளின் கல்விக் காலத்தின் முடிவு மற்றும் தொடக்கத்தை கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் கூற்றுப்படி, முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2025 அன்று முடிவடையும்.
முதல் தவணையின் மூன்றாம் கட்டம் ஏப்ரல் 21 ஆம் திகதி தொடங்கி 2025 மே 09 ஆம் திகதி முடிவடையும் என்று கல்வி அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை
பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை
பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை 2024 ஆண்டு பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவடைகின்றன.
இதற்கமைய, அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் அனைத்து தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கும் இன்று முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
அத்துடன், முஸ்லிம் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன.
இதன்படி, அனைத்து பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை ,நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் எதிர்வரம் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பாடசாலைகள் மூடப்படுவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மீண்டும் பாடசாலைகள் எதிர்வரும் 18ஆம் திகதி திறக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுமுறையில் வீடு செல்லும் அர்ச்சுனா
விடுமுறையில் வீடு செல்லும் அர்ச்சுனா
விடுமுறையில் வீடு செல்லும் அர்ச்சுனா ,வைத்தியர் ஷாஃபியும் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவும்.
எவ்வாறு வைத்தியர் ஷாப்பியை சுகாதார அமைச்சு மூன்று வருடங்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பி மீண்டும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மன்னிப்பு கோரி சேவையில் இணைத்துக் கொண்டதோ..
எவ்வாறு சாஃவி அவர்களின் உன்னதமான மருத்துவ சேவையை சுகாதார அமைச்சு கேள்விக்குறியாக்கியதோ..
அவ்வாறே..
சுகாதார அமைச்சு இன்றோ நாளையோ எனக்கு கட்டாய விடுமுறை அளிக்க இருப்பதாக அறிகிறேன்..
அப்படியாயின் அந்த நாளிலிருந்து யாழ்ப்பாணத்தில் இலவச மருத்துவ சிகிச்சை ஆரம்பிக்கப்படும்..
யாராவது பிரைவேட் வைத்திருப்பவர்கள் விரும்பினால் தொடர்பு கொள்ளவும்..
நான் எந்த கட்டணமும் இன்றி நோயாளர்களை பார்வையிடுவேன்..
உங்களுடைய கட்டணங்களையும் மருந்து செலவுகளையும் அறவிட்டு கொள்ளுங்கள்..
அசாத் அவர்களின் தொலைபேசி உரையாடலை நான் வெளியிட்ட பின்பும் மன்னார் நீதிமன்றத்தில் நான் குற்றமற்றவன் அல்லது குற்றம் இழைத்தவன்
என்று நிரூபிக்கப்படாத விடத்தும் சுகாதார அமைச்சு என்னை குற்றம் செய்தவர் என கட்டாய விடுமுறை அளிக்க இருப்பதாக அறிகின்றேன்..
நல்ல விடயம்..
சுகாதார அமைச்சுக்கு..
அமைச்சின் செயலாளருக்கும்..
நாட்டின் மாண்புமிகு மிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும்..
என்னை கொண்டு வருவேன் என்று ஏமாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்த்த அவர்களுக்கும்.
சும்மா ஒரு..
எப்படி வசதி?
இப்படிக்கு
வைத்திய கலாநிதி இராமநாதன் அர்ச்சுனா…இவ்வாறு முகநூலில் பதிவு ஒன்றை அர்ச்சுனா இராமநாதன் வெளியிட்டுள்ளார் .
அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை
அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை ,சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று (04) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றும் நாளையும் (05) இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஹோமாகம, கம்பஹா, களனி ஆகிய கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் கடுவெல பிரிவில் உள்ள பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலவும் வானிலையை கருத்தில் கொண்டு எதிர்வரும் நாட்களில் பாடசாலை களை நடத்துவது தொடர்பான தீர்மானங்களை பிராந்திய கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்குமாறு கல்வி அமைச்சு மாகாண அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.
Featured
சஜித்அநுர விவாதத்திற்காக பொது விடுமுறை
சஜித்அநுர விவாதத்திற்காக பொது விடுமுறை
சஜித்அநுர விவாதத்திற்காக பொது விடுமுறை ,எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார
திஸாநாயக்கவுக்கும் இடையிலான விவாதத்தை மக்கள் பார்க்கும் வகையில் அன்றைய தினத்தை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டுமென அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஆனால் அது தொடர்பான விவாதத்தை நடத்துவதில் இரு தரப்பினரும் ஆர்வம் காட்டவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“இன்று மற்ற இரண்டு முக்கிய வேட்பாளர்களிடம் நான் ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன்.
தயவுசெய்து அந்த விவாதத்தை நடத்துங்கள்
தயவுசெய்து அந்த விவாதத்தை நடத்துங்கள். ஏனெனில் இந்த விவாதத்தில் இருவரும் பங்கு பெறாத போக்கே காணப்படுகிறது.
நான் உண்மையில் ஜனாதிபதியிடம் பொது விடுமுறையை அறிவித்து இந்த விவாதத்தைப் பார்க்குமாறு இலங்கை மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கோரினேன்.
இவர்கள் இருவரின் விவாதத்தைப் பார்த்து எப்படி நாட்டைக் கட்டியெழுப்ப போகிறார்கள் என்று பார்ப்போம்.
ஏனெனில் சவால்களை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் நாட்டை எவ்வாறு கட்டியெழுப்ப போகிறார்கள் என முதலில் பார்க்க வேண்டும்.
இது ஒரு வாய்ச்சவடாலே.
இதை செய்ய முடியாது என்பது இரு தரப்புக்கும் தெரியும்.
ஒருவர் கடும் சிங்களத்தில் பேசுகிறார்.
மற்றையவர் கடும் ஆங்கிலத்தில் பேசுகிறார்.
இருவரும் பேசுவது இருவருக்குமே புரியாது.
வாய்ச்சவடாலின்றி செயலில் காட்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.
Featured
சம்பந்தன் ஐயாவுக்கு விடுமுறை
சம்பந்தன் ஐயாவுக்கு விடுமுறை
சம்பந்தன் ஐயாவுக்கு விடுமுறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா, பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காமல் இருக்க மேலும் 3 மாத கால விடுமுறை வழங்க பாராளுமன்றம் அனுமதியளித்துள்ளது.
பாராளுமன்றம் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி., த.தே.கூவின் தலைவர் இரா.சம்பந்தன்
பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காமல் இருக்க மேலும் 3 மாத கால விடுமுறை வழங்கும் முன்மொழிந்தார். அதற்கு பாராளுமன்றம் அங்கிகாரம் வழங்கியுள்ளது.
Featured
பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு
பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டின் அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13 ஆம் திகதி விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
இந்த விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை இடம்பெற வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு விடுமுறை அளிக்கும் பாடசாலைகளின் அதிபர்கள் இது தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

விடுமுறை இங்கே செல்லுங்க சாப்பாடு கொட்டல் அசத்தல் மலிவு விலை வீடியோ பாருங்கள்
விடுமுறை இங்கே செல்லுங்க சாப்பாடு கொட்டல் அசத்தல் மலிவு விலை வீடியோ பாருங்கள்
நீங்கள் விடுமுறையை கழிக்க செல்ல வேண்டுமா ,மலிந்த விலையில் தரமான உணவுகள் ,அழகிய கொட்டல் ,மற்றும் சுற்றுலா தளங்கள் .
இப்படி ஒரு நாட்டில் இத்தனை வசதிகள் உள்ளதா என , உங்களை பிரமிக்க வைக்கும் காட்சிகள் .
இதில் அழுத்தி காணொளி பாருங்கள்
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தைby நிருபர் காவலன்
- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்by நிருபர் காவலன்
- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளதுby நிருபர் காவலன்
- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணைby நிருபர் காவலன்
- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்by நிருபர் காவலன்
6 மாசமா அவர் விடுமுறை கேட்டு கொடுக்கல.. டிஐஜி உயிரிழப்பு குறித்து..சீமான் சொன்ன அதிர்ச்சி தகவல்
6 மாசமா அவர் விடுமுறை கேட்டு கொடுக்கல.. டிஐஜி உயிரிழப்பு குறித்து..சீமான் சொன்ன அதிர்ச்சி தகவல்.
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்

- திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்

- நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி

- திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில்

- தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்

- தண்ணீர் மாநாடு – சீமான் உயிரின் உரை

- அண்ணன் வாறான் அண்ணன் சீமான் வாறாண் |Annan Varan Annan Seeman Vaaran|சீமான் புதிய பாடல்

- நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் சீமான்

- தீயாக பேசிய சீமான்

- அணில் ஏன் UNCLE என கத்துகிறது சீமான்

பாடசாலை விடுமுறை நாட்கள் குறைக்க நடவடிக்கை
பாடசாலை விடுமுறை நாட்கள் குறைக்க நடவடிக்கை
அடுத்த ஆண்டில் பாடசாலை விடுமுறை நாட்களை குறைத்து, அந்த வருடத்திற்குள்ளேயே பாடத்திட்டங்களை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
திட்டமிட்டவாறு இந்த ஆண்டு இறுதிக்குள் பாடத்திட்டங்களை நிறைவு செய்யவே தீர்மானித்திருந்த போதிலும், உயர்தரப் பரீட்சையை ஜனவரிக்கு ஒத்தி வைக்க நேரிட்டதால், தவணைகள் தள்ளிப் போயுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை
குறைப்பது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Featured
இலங்கையில் பாடசாலைகளிற்கு 20 தம திகதிவரை விடுமுறை
இலங்கையில் பாடசாலைகளிற்கு 20 தம திகதிவரை விடுமுறை
இலங்கை கொழும்பு ; இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்ட பாடு காரணமாக பாடசலைகள் யாவும் எதிர்வரும் 20தம திகதி வரை விடுமுறை விடுக்க பட்டுள்ளது .
அதன் பின்னர் வழமை போன்று அணைத்து பாடசாலைகளும் இயங்கும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கையில் பாடசாலைகளிற்கு செல்லும் மாணவர்கள் போக்குவரத்து பாதிக்க பட்டமையினாலும் ஆசிரியர்களுக்கு
ஊதியம் வழங்கப்படுவதில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக இந்த விடுமுறை விக்க பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பாடசாலைகளுக்கு விடுமுறை மகிழ்ச்சியில் மாணவர்கள்
பாடசாலைகளுக்கு விடுமுறை மகிழ்ச்சியில் மாணவர்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக எதிர் வரும்
திங்கள் முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க படுகிறது
இந்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க படுவது தொடர்பில் கல்வி அமைச்சு உத்தியோக பூர்வமாக தெரிவித்துள்ளது
அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க படுவது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுதியுள்ளது
நிகழ்கால இலங்கை அரசின் நெருக்கடி மற்றும் ஆசிரியர்களுக்கு
சம்பளம் வழங்குதல் தீர்வுக்கு இவை பயனுள்ளதாக அமையும் என எதிர் பார்க்க படுகிறது
ஆசிரியர்களுக்கு மூன்று மாதம் சம்பளம் வழங்கப்படா மாட்டாது என அவர்கள் வீடுகளுக்கு கடிதங்கள் பறந்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
நான்கு மாகாணங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை
நான்கு மாகாணங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக
நாடளாவிய ரீதியில் உள்ள நான்கு வடக்கு,தெற்கு ,வடமேல்,கிழக்கு
,மாகாணங்களின் பாடசாலைகள் மறு அறிவிதல் வரை விடுமுறை விடுவிக்க பட்டுள்ளது
ஆசிரியர்கள்,மாணவர்கள் போக்குவரத்து நிலையை கருத்தில் கொண்டு இந்த
உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது
ஆகஸ்ட் மாத பாடசாலை விடுமுறை ஒருவாரம்
ஆகஸ்ட் மாத பாடசாலை விடுமுறை ஒருவாரம்
இம்முறை ஆகஸ்ட் மாத பாடசாலை விடுமுறை ஒரு வாரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வருடத்திற்கான பாடசாலைகளின் இரண்டாவது வாரம் சுகாதார பரிந்துரைகளுக்கமைவாக இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி 15 மாணவர்கள் உள்ள வகுப்பொன்று வாரத்தின் எல்லா நாட்களும் நடைபெறவேண்டும்.
அத்துடன், 16 க்கும் 30 க்கும் இடைப்பட்ட மாணவர்களைக் கொண்ட வகுப்பொன்று 2 குழுக்களாகப் பிரித்து ஒரு வாரத்திற்கு ஒருமுறை என்றவாறு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முப்பது மாணவர்களைவிட கூடிய வகுப்புக்கள் மூன்று குழுக்களாகப் பிரித்து சமனான எண்ணிக்கையிலான நாட்களில் வகுப்புக்களை நடத்த வேண்டும்.
மேலும் நேற்றைய தினம் அதிகளவிலான பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை உயர் மட்டத்தில் காணப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதேவேளை நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் ஏப்ரல் மாதம் 27ம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொரனோ அபாயம் -இராணுவத்தினர் விடுமுறைகள் இரத்து
கொரனோ அபாயம் -இராணுவத்தினர் விடுமுறைகள் இரத்து
முப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
முப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து விடுமுறைகளும் பாதுகாப்பு
அமைச்சினால் ரத்து செய்யப்படுவதினால் அனைத்து படைவீரர்களும் தத்தமது முகாம்களுக்கு திரும்ப வேண்டுமென பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
தற்போது விடுமுறையில் உள்ள படைவீரர்கள் தமது தலைமை அதிகாரிகளை தொடர்பு கொண்டு இது தொடர்பான மேலதிக
அறிவுறுத்தல்களை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
முப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து விடுமுறைகளும் ரத்து
செய்யப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குரணரத்னவினால் ஒப்பமிடப்பட்டு முப்படைகளின்
தளபதிகளுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






























