பெண் எம்பி வீட்டுக்குள் நுழைய முயன்ற நபர் கைது
பெண் எம்பி வீட்டுக்குள் நுழைய முயன்ற நபர் கைது
இலங்கையின் MP Kokila Harshani Gunawardena’s எம்பியின் வீட்டுக்குள் நுழைய முயன்ற வாலிபர் கைது செய்ய பட்டுள்ளார் .
இருபத்தி ஐந்து வயதுடைய, வாலிபர் ஒருவர் ,இந்த எம்பியின் வீட்டுக்குள், நுழைய முன்றபோது ,காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார்.
இந்த வாலிபர் ஏன் .இந்த எம்பியின் வீட்டுக்குள். நுழைய முயன்றார் என்பது தொடர்பில் ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
வாலிபர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றது .
இலங்கையில் பாதுகாப்பு இறுக்கம் இராணுவம் பெருமிதம்
இலங்கையில் பாதுகாப்பு இறுக்கம் இராணுவம் பெருமிதம்
இலங்கையின் தேசிய பாதுகாப்பு என்பது சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டின் வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாதவாறு அதிக கவனத்தை கொண்டதாக
காணப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன நேற்று (ஆகஸ்ட் 17) தெரிவித்தார்.
நாட்டில் காணப்படும் சகல விதமான அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க வேண்டி அவதானத்துடன் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தேசிய பாதுகாப்பு கல்லூரி (NDC) ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதன் முறையாக நடத்தப்படும் “ஆராய்ச்சிக் கருத்தரங்கம் – 2022′ வின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு பாதுகாப்புச் செயலாளர் உரையாற்றினார்.
இலங்கையில் பாதுகாப்பு இறுக்கம் இராணுவம் பெருமிதம்
இந்த கருத்தரங்கு தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் முன்னேற்றத்திற்கு வழி வகுப்பதுடன் நாட்டின் நிரந்தரமான அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி
செய்வதற்காக எதிர்கால சவால்களை எதிர்கொள்வதிலும் பங்களிக்கும் என தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேற்படி கருத்தரங்கிற்கு வருகை தந்த பிரதம அதிதியான பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் குணரத்ன மற்றும் பிரதம பேச்சாளராக கலந்துக்கொண்ட முன்னாள்
ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகிய இருவரையும் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர வரவேற்றார்.
பாதுகாப்பு ஆராய்ச்சியை மேம்படுத்தவும், தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் தொடர்பான ஆராய்ச்சி சிந்தனைகளை ஆராய்வதற்கான சூழலை உருவாக்கவும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த முதலாவது ஆராய்ச்சி
கருத்தரங்கு ‘ பல்நிலை பாதுகாப்பு இயக்கவியலை ஆராய்தல்’ எனும் தொனிப்பொருளின் கீழ் இரத்மலானையிலுள்ள ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல
பாதுகாப்பு பல்கலைக்கழக பட்டதாரி கற்கைகள் பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஒரு நாட்டின் பிரஜைகள், பொருளாதாரம் மற்றும் பிற நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கான ஒரு நாட்டின் அரசாங்கத்தின் திறன் என தேசிய பாதுகாப்பை வரையறுத்த பாதுகாப்பு செயலாளர், நிகழ்காலத்தில் இராணுவமல்லாத தன்மையின்
பின்னணியில் பாதுகாப்பின் நோக்கம் பரந்தளவில் பொருளாதார பாதுகாப்பு, அரசியல் பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, உள்நாட்டுப் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு, மனித
பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குவதைச் சுற்றியே உள்ளது எனக்கூறினார்.
அரசியல், பொருளாதாரம் மற்றும் இராணுவ பலம் உள்ளிட்ட தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கங்கள் பயன்படுத்தும் பல்வேறு தந்திரோபாய முறைகளை சுட்டிக்காட்டிய அவர். அதன் பாரம்பரியமாக மையப்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும்
இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான இராணுவப் பாதுகாப்பு, வெளிப்புற படையெடுப்புகள் மற்றும் உள்நாட்டு கிளர்ச்சிகளிலிருந்து நாட்டைப்
பாதுகாப்பதில் இருந்து 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடந்த ஒரு நிகழ்வான குடிமகனின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான அதிக மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை நோக்கி அமைதியாக நகர்ந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.
‘தேசிய பாதுகாப்பு’ மற்றும் ‘மனித பாதுகாப்பு’ ஆகியவற்றுக்கு இடையேயான கருத்தியல் வளர்ச்சிகள் மற்றும் வேறுபாடுகளை மேற்கோள் காட்டி, நாட்டின் நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு, தேசிய பாதுகாப்பு இயக்கவியலில் இன்று
இலங்கையில் பாதுகாப்பு இறுக்கம் இராணுவம் பெருமிதம்
உலகளாவிய தொற்றுநோய்களை நிர்வகித்தல், காலநிலை மாற்றத்தைத் தணித்தல் மற்றும் மாற்றியமைத்தல், சுத்தமான நீரைப் பேணுதல், நம்பகமான உணவு விநியோகத்தை பராமரித்தல், தனிநபர்கள் மற்றும் சமூகங்களின் சொத்துக்களை
பாதுகாத்தல், பொருளாதார மற்றும் அரசியல் இக்கட்டான சூழ்நிலைகளைக் கையாள்வது மற்றும் பல சர்வதேச காரணிகலின் தாக்கத்திற்கு மத்தியில் அரசின்
இறையாண்மையைப் பாதுகாக்கும் திறன் ஆகியவற்றையும் உள்ளடக்கும் எனவும் தெரிவித்தார்.
ஆயுத மற்றும் போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோதமான மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடித்தல், புவி வெப்பமடைதல் மற்றும் அதன் விளைவாக கடல் மட்ட உயர்வு மற்றும் வானிலை மாற்றங்கள், அதிகரித்த கடல் மாசுபாடு மற்றும் கடல் சுற்றுச்சூழல் தாக்கம்,
குறையும் மீன்வளம், கடல் வெப்பநிலை மற்றும் உப்புத்தன்மை அதிகரிப்பு, இயற்கை அனர்த்தங்களினால் இந்து பெருங்கடலில் சமுத்திரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள்
ஆகியன இந்து சமுத்திரத்தில் இலங்கையின் பாதுகாப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
தலைமை உரையை ஆற்றிய லலித் வீரதுங்க அவர்கள் நவீன பாதுகாப்பு அமைப்புகள் இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மாத்திரமன்றி இராணுவம் அல்லாத மற்றும் கலப்பு
அச்சுறுத்தல்களுக்கும் முகம்கொடுக்கக்கூடியளவில் அமைந்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
மூன்று அமர்வுகளைக் கொண்ட இக்கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வின் போது கல்லூரியின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் கருணாசேகர வரவேற்புரையை நிகழ்த்தினார்.
கல்வியாளர்கள், இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளிடையே இணைப்பு வலையமைப்பை வளர்ப்பதற்கும், இன்றைய பாதுகாப்புச் சவால்களுடன்
தொடர்புடைய அறிவுசார்ந்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் இது போன்ற ஆராய்ச்சிக் கருத்தரங்கங்கள் உதவியாக அமையும்.
இந்நிகழ்வின் போது பாதுகாப்பு செயலாருக்கும் திரு.லலித் வீரதுங்க அவர்களுக்கும் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கருணாசேகர நினைவுச் சின்னங்களை வழங்கினார்.
பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, முப்படைத் தளபதிகள், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக உபவேந்தர், வெளிநாட்டு தூதரகங்களின் பாதுகாப்பு
இணைப்பாளர்கள், ஆலோசகர்கள், புத்திஜீவிகள், சிரேஷ்ட இராணுவ மற்றும் பொலிஸ் உயர்
அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இலங்கையில் மின்சாரா ஆட்டோ பயன்பாட்டுக்கு வந்தது
இலங்கையில் மின்சாரா ஆட்டோ பயன்பாட்டுக்கு வந்தது
இலங்கையில் மின்சாரா ஆட்டோ ,மக்கள் பயன் பாட்டுக்கு வந்துள்ளது .
இல்;இலங்கையில் ஏற்பட்டுள்ள ,எரிபொருள் நெருக்கடிக்கு, மாற்று திட்டமாக இந்த மின்சார ஆட்டோ தயாரிக்க பட்டுள்ளது .
அமெரிக்கா மாறறும் ,இலங்கை நிருவனங்கள், இணைந்து தயாரித்துள்ள, இந்த ஆட்டோ தற்போது ,மக்கள் பாவனைக்கு விட பட்டுள்ளது .
வெளிநாடு செல்ல முயன்ற10 பேர் கைது
வெளிநாடு செல்ல முயன்ற10 பேர் கைது
இலங்கையில் இருந்து காடல் வழியாக வெளிநாடு செல்ல தயராகி கொண்டிருந்த 10 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்.
ஆபத்தான கடல் வழியாக , வெளிநாட்டுக்கு இலங்கையர்கள் சென்ற வண்ணம் உள்ளனர்.
அவ்வாறு , தலைமன்னார் கடல் பகுதியில் இருந்து ,படகு மூலம் ,வெளிநாடு ,செல்ல தயாராகி கொண்டிருந்த வேளை இவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதானவர்கள் ,கடற்படை விசாரணைகளின் பின்னர் .,காவல்துறையிடம் பார்ப்படுத்த பட்டுள்ளனர்.
கொக்கைனுடன் போலந்து நாட்டவர கைது இதன் பெறுமதி 24.5 கோடி
கொக்கைனுடன் போலந்து நாட்டவர கைது இதன் பெறுமதி 24.5 கோடி
சுமார் 24.5 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் போலந்து நாட்டைச் சேர்ந்த பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கொலம்பியாவில் இருந்து கட்டார் ஊடாக கட்டுநாயக்கவிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபரின் பயணப் பையில் இருந்து 5 கிலோவுக்கும் அதிகமான கொக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்
லண்டன் கென்ட்டில் மழை வெள்ளம் மக்களுக்கு எச்சரிக்கை
லண்டன் கென்ட்டில் மழை வெள்ளம் மக்களுக்கு எச்சரிக்கை
பிரிட்டன் லண்டன் கென்ட் பகுதியில் ,கடும் மழை மற்றும் வெள்ள பெருக்கு ஏற்படும் எனவும் ,இவ்வேளை மக்களை விழிப்பாக, இருக்கும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
அதிகம் வெப்பம் காரணமாக ,காடுகள் முதல் ,வீடுகள் வரை, எரிந்து அழிந்துள்ளன .
அவ்விதமான அதிக வெப்பம் நிலவிய, சில வாரங்களில் மீள ,மழை வெள்ளம் புயல் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது.
பருவகாலங்கள் மாற்றத்தின் சுழற்சியால் ,மழை ,வெள்ளம் ,புயல் ,வெப்பத்தினால் , மக்கள் பெரிதும் துயரினை, சந்தித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.
பள்ளி வாசலுக்குள் வெடித்த குண்டு 20 பேர் மரணம் 40 பேர் காயம்
பள்ளி வாசலுக்குள் வெடித்த குண்டு 20 பேர் மரணம் 40 பேர் காயம்
ஆப்கானிஸ்தான் தலைநகர் வடக்கு காபூல் பகுதியில் ,பள்ளி வாசல் ஒன்றுக்குள் குண்டு வெடித்து சிதறியது . ,இதன் போது 20 பேர் மரணமாகியும் ,40 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
தலிபான்கள் வசம் நாடு வீழ்ச்சியடைந்த பின்னர், நாள்தோறும் பள்ளிவாசல் மற்றும் பொது இடங்களில் குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளது .
இதனால் மக்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது .
தலிபான்கள் சிவில் நிர்வாகம் முடக்க படும் ,தாக்குதலாக இவை பார்க்க படுகிறது .
இவ்வாறு தொடர்நதுகுண்டு தாக்குதல்கள் இடம்பெற்றால் ,தலிபான்கள் ஆட்சியும் நாட்டில் சீர்குலைக்க பட்டு , புதிய ஆட்சி பீடம் ,அரியணையில் ஏறும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
பெண்ணை வீடு புகுந்து கட்டி கொலை செய்து நகை கொள்ளை
பெண்ணை வீடு புகுந்து கட்டி கொலை செய்து நகை கொள்ளை
இலங்கை உகுரஸ்ஸபிட்டிய பகுதியில் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள், பெண் ஒருவர் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பியுள்ளனர் .
இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் ,பெண்ணின் வாய் ,கை ,கால்களை, கட்டி போட்டு அவர் அணிந்திருந்த, தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர் .
பெண் படுகொலை செய்யப்பட்ட பட்ட நிலையில் ,சடலமாக மீட்க பட்டார் .
மீட்க பட்ட பெண்ணின் சடலம் ,உடல்கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது .
கொள்ளையர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் ,போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது
- நெதன்யாகு தனது அமெரிக்கப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இஸ்ரேலுக்குப் புறப்பட்டார்
- ஈரானுடனான உறவை கொலம்பியா முறைப்படி முறித்துக் கொண்டது
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது
இலங்கையில் சீனா கப்பல் தமிழக கடற்கரையோரங்கள் பாதுகாப்பு இறுக்கம்
இலங்கையில் சீனா கப்பல் தமிழக கடற்கரையோரங்கள் பாதுகாப்பு இறுக்கம்
சீனா ஆய்வு கப்பல் இலங்கை துறைமுகத்தில் தரித்துள்ளது.
சீனாவின் இந்த கப்பல் வருகையை அடுத்து ,தமிழகத்தின் கடல் கரையோரங்கள் பாதுகாப்பு அதிகரிக்க பட்டுள்ளது.
ஆறு போர் கப்பல்கள், மற்றும் உலங்குவானூர்திகள் , விமானங்கள் என்பன ரோந்து கண்காணிப்பில் ஈடுபடுத்த பட்டுள்ளன.
சீனாவின் இந்த ஆய்வு கப்பல் ,இலங்கை வந்தடைந்துள்ளது .அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிட தக்கது .
இலங்கையில் நடிகர் மம்முட்டி சனத் ஜெயசூரியா சந்தித்தார்
இலங்கையில் நடிகர் மம்முட்டி சனத் ஜெயசூரியா சந்தித்தார்
இலங்கையில் நடிகர் மம்முட்டி திரைப்படம் ஒன்றில் நாடித்திட வந்துள்ளார் .
இவரை இலங்கை கிரிக்கட் வீர்ரர் சனத் ஜெயசூரிய சந்தித்துள்ளார் .
மம்முட்டியை, தான் சந்தித்துள்ளதாக, சனத் ஜெயசூரிய தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார் .
மம்முட்டி சனத் ஜெயசூரியா இருவருக்கும் இடையில் நிலவிய நட்பின் காரணமாக, இந்த சநதிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
யாழில் பகிடிவதை பேராசியர் மாணவர்கள் தற்கொலை முயற்சி
யாழில் பகிடிவதை பேராசியர் மாணவர்கள் தற்கொலை முயற்சி
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பேராசியரையர் அறுவர் உள்ளிட்ட மாணவர்கள் தற்கொலைக்கு முயன்ற செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
துணை துறை தலைவர் பதவியில் உள்ள ஒருவர் வெளிநாடு சென்று கல்வி கற்க முனைந்துள்ளார் .
ஆனால் அந்த பதவி பறிபோய் விடும் என்ற பீதியில் ,அவர் வெளிநாடு செல்லாது அங்கே கல்வியை தொடர்ந்துள்ளார் .
யாழில் பகிடிவதை பேராசியர் மாணவர்கள் தற்கொலை முயற்சி
இதனால புதிதாக துறை தலைவர் கிடைக்க பெறவிருந்த பேராசிரியர் , யாழ்ப்பாண பல்கலைக்கழக வேந்தர் முன்னிலையில் ,உடலில் எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்துள்ளார் .
இவரால் இதே பல்கலைக்கழகத்தில் ,18 மாணவர்கள்பகிடிவதை புரிந்தனர் எனவும் ,அதில் சில மாணவர்கள் பெயரை குறிப்பிட்டு, இவர்களே மாபியாக்கள் என திட்டிய நிலையில் ,
மாணவர் ஒருவனும் ,மாணவியும் வீட்டிற்குள் தூக்கு மாட்டி தற்கொலை செய்திட முனைந்துள்ளனர்.
மேற்படி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழில் ரயிலிக்குள் வீழ்ந்து காயமடைந்த இராணுவ சிப்பாய்
யாழில் ரயிலிக்குள் வீழ்ந்து காயமடைந்த இராணுவ சிப்பாய்
கொழும்பு பகுதியில் இருந்து ,யாழ்ப்பாணத்துக்கு கடமைக்கு வந்த , இராணுவ சிப்பாய் ஒருவர் ரயிலுக்குள் வீழ்ந்து காயமடைந்துள்ளார்.
யாழ்ப்பாண ரயில் நிலையத்தில் இறங்க வேண்டிய இராணுவ சிப்பாய் ,ரயிலை தவறவிட்டு சுன்னாகத்தை கண்டு திகைத்து போயுள்ளளார் .
நித்திரை தூக்கத்தில் இருந்த இராணுவ சிப்பாய் தீடிரென எழுந்து இறங்க முற்பட்ட நிலையில் ,இவ்விதம் வீழ்ந்து படுக்கயமடைந்த நிலையில் ,தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார்
ரயிலுக்குள் வீழ்ந்த இராணுவ சிப்பாயை , காப்பாற்றிய மக்கள், இவ்விதம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளமை குறிப்பிட தக்கது.
இலங்கையில் குவியும் சுற்றுலா பயணிக்கள் மகிழ்ச்சியில் அரசு
இலங்கையில் குவியும் சுற்றுலா பயணிக்கள் மகிழ்ச்சியில் அரசு
இலங்கையில் வீழ்ந்து போன உல்லாசத்துறை ,மீளவும் புத்துயிர் பெற்றுவருகிறது .இலங்கைக்கு மீளவும் உல்லாசப்பயணிகள் வரவு அதிகரித்துள்ளது
.
இந்த உல்லாச பயணிகள் வருகையால் இலங்கை அரசு மகிழ்ச்சியில் உள்ளது .
பதினேழாயிரம் பேர் இவ்விதம் இலங்கை வந்தடைந்துள்ளதாக , உல்லாசத்துறை அறிவித்துள்ளது .
இலங்கையில் வீழ்ந்து போன பொருளாதாரத்தை மீளவும் நிமிரத்திட, உலலாச துறை முக்கியமான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .
லண்டன் அமெரிக்காவுக்கு 30 நிமிடத்தில் பயணம் American விமான நிறுவனம் அதிரடி
லண்டன் அமெரிக்காவுக்கு 30 நிமிடத்தில் பயணம் American விமான நிறுவனம் அதிரடி
அமெரிக்காவில் இருந்து ,லண்டனுக்கு முப்பது நிமிடத்தில் பயணிக்கும் ,சூப்பர் சொனிக் ,விமானம் ஒன்றை அமெரிக்கா விமான நிறுவனம் அறிமுகம் செய்கிறது .
American Airlines விமான நிறுவனம் அதிக விலை கூடிய இந்த விமானத்தை வாங்கி கொள்கிறது .
இந்த விமானத்தில் லண்டனுக்கு அரை மணிநேரத்தில் பயணிக்கலாம் ,ஆனால் இதன் விமான டிக்கட் விலை என்ன தெரியுமா ..?
லண்டன் அமெரிக்காவுக்கு 30 நிமிடத்தில் பயணம் American விமான நிறுவனம் அதிரடி
$4,000 to $5,000 அமெரிக்கடொலர்களாம் .அப்டி என்றால் இத விமானத்தில் செல்வந்தர்கள் மட்டுமே செல்ல கூடிய வகையில், இந்த விமானம் தயாரிக்க படுவதுடன் .அதன் சேவையும் ஆரம்பிக்க படவுள்ளது.
முக்கிய பிரபலங்கள் இந்த விமானத்தை பயன் படுத்த போகின்றனர் .அவ்வாறு எனின் இந்த விமானங்களை இலக்கு வைத்து இலகுவாக வீழ்த்திடவும் முடியும் சந்தேகம் இல்லை.
காரணம் இதில் பயணிப்பவர்கள் யாவரும் செல்வந்தர்கள் ,மற்றும் பிரபலங்கள் என்பதாகும்.
அப்படி என்றால் இந்த விமானத்தை ,கொள்ளையர்கள் மற்றும் ,தீவிரவாத குறி வைப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை .
இப்ப சொல்லுங் இந்த விமனத்தில் நீங்கள் பயணிக்க ஆசை உள்ளதா ..?
ஆப்கானிஸ்தான் நாடு தம் வசமானதை கொண்டாடும் தலிபான்கள்
ஆப்கானிஸ்தான் நாடு தம் வசமானதை கொண்டாடும் தலிபான்கள்
ஆப்கானிஸ்தான் நாடு தமது கட்டு பாட்டுக்குள், வீழ்ந்த நிகழ்வு நாளினை, தலிபான் போராளிகள் ,குதூகலமாக கொண்டாடி வருகின்றனர் .
தலிபான்கள், உலக நாடுகளினால் ,பயங்கரவாதைகள் என சித்தரிக்க பட்டு தடை விதிக்க பட்டிருந்தது.
,அவ்வாறான தீவிரவாதிகள் , இன்று ஒரு நாட்டை ஆட்சி செய்கின்றனர்.
உலக வல்லரசுகள். தமது நலனுக்கு , ஒரு போராளி குழுவை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி ,அந்த அமைப்பின் மீது பழிவாங்கும் துடைத்தழிப்பு தாக்குதலை நடத்தும் .
அவ்வாறு தான் ,தலிபான்கள் மீது அமெரிக்கா கூட்டு நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்தின .
ஆனால் முடிவில் ,இன்று ஆப்கானிஸ்தான் ,தலிபான்கள் வசம் வீழ்ந்துள்ளது .
அரச இராணுவம் பயன் படுத்தி வந்த , அனைத்து விதமான ஆயுத தள பாடங்களும் ,தலிபான்கள் வசம் வீழ்ந்தது .
ஆப்கானிஸ்தான் நாடு தம் வசமானதை கொண்டாடும் தலிபான்கள்
தற்போது போர் விமானங்கள் ,யுத்த டாங்கிகள்,ஏவுகணைகள் வரை தலிபான்கள் தமது வச படுத்தியதுடன் ,புதிய ஆயுத தளபாடங்களையும் உத்தியோக பூர்வமாக தயாரித்து வருகின்றனர்.
உலகில் தடை செய்ய பட்ட ,ஒரு போராளி குழு ,ஒரு நாட்டை ஆக்கிரமித்து ,அந்த அரசை ஒட வைத்து ,வெற்றி கண்டது எனின் ,தற்காலத்தில் தலிபான்கள் தான் என்பது வரலாறாக படிந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் புகும் நாடுகள் , ஆட்சி கவிழ்க்க பட்டு ,அந்த நாடு போராளிகள் வசம் சென்றுள்ள, வரலாறு தலிபான்கள் மூலம் மீளவும் பதிய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .
பீச்சில் சுறாவை இழுத்து செல்லும் நபர் வைரலாகும் காணொளி
பீச்சில் சுறாவை இழுத்து செல்லும் நபர் வைரலாகும் காணொளி
Island பீச் பகுதியில் வாலிபர் ஒருவர், சுறா மீன் ஒன்றை, நீரில் இருந்து இழுத்து செல்லும் காட்சிகள், வைரலாகி வருகிறது.
மிகவும் கொடிய சுறா மீனை ,தனியாக கையினால் பிடித்து , இழுத்து செல்லும் வாலிபரின் ,துடிப்பு மிகு காட்சிகள் , பார்ப்பவர்களை மிரள வைக்கிறது.
பல நாடுகளின் கடற்பரப்பில் ,அதாவது பீச்சில் குளித்து கொண்டிருந்த மக்களை ,இவ்வகையான, சுறாக்கள் கடித்து குதறியுள்ளன.
அவ்வாறான கொடிய வேட்டை சுறா ஒன்றை, மிக துணிச்சலாக சென்று பிடித்து செல்லும் காட்சியே, செம வைரலாகி வருகிறது.
இவரது இந்த துணிச்சலுக்கு பாராட்டு குவிந்து வருவதுடன் ,அப்பவி சுறா மீன் ஒன்றை பிடித்து செல்லும், இவரை சிறையில் அடைக்க வேண்டும் ,என்ற வாதங்களும் ,சமூக வலைத்தளங்களில் பதிவாகிய வண்ணம் உள்ளது.
உண்மையில் இவ்வகையான சுறா பல நூறு டொலர் பெறுமதி வாய்ந்தவை என்பது இங்கே குறிப்பிட தக்கது.
வெடித்து சிதறிய ஆயுத கிடங்கு உக்கிரம் பெறும் போர்
வெடித்து சிதறிய ஆயுத கிடங்கு உக்கிரம் பெறும் போர்
கிரிமியா பகுதியில் உள்ள ஆயுத கிடங்கு ஒன்று வெடித்து சிதறியுள்ளது.
இந்த ஆயுத கிடங்கு வெடித்து சிதறும் காட்சிகளை படம் பிடித்த நபர் ஒருவர் அதனை வெளியிட்டுள்ளார்.
இந்த காட்சிகள் தற்போது ,சமூக ஊடகங்கள் முதல் ,சர்வதேச ஊடகங்கள் வரை முதன்மை இடத்தை பிடித்துள்ளன .
கிரிமியா பகுதியில் வெடித்து சிதறும் ,இந்த ஆயுத கிடங்கின் மீது ,எதிரி இராணுவம் தாக்குதல் , நடத்தி இருக்க கூடும் என ,எதிர் பார்க்க படுகிறது.
ரஸ்யாவின் ஆளுகைக்குள். அல்லது அதன் கட்டு பாட்டுக்குள் கிட்டத்தட்ட உள்ள, நாட்டின் ஆயுத கிடங்கு வெடித்து சிதறியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆயுத கிடங்கின் மீது திட்டமிடப்பட்டு தாக்குதல்கள் நடத்த பட்டு இருக்கலாம் என்ற வாதமே முதன்மை பெற்றுள்ளது .
ரஷ்ய தரப்பில் இருந்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிட தக்கது
ரஷ்ய இராணுவத்தினருக்கு புதிய ஏவுகணைகள் மிரளும் எதிரி
ரஷ்ய இராணுவத்தினருக்கு புதிய ஏவுகணைகள் மிரளும் எதிரி
ரஷ்ய இராணுவத்தினருக்கு ,ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு புதிய வகை எதிர் S-500 air defense systems வழங்கியுள்ளது.
இந்த ஏவுகணை ,எதிரி இராணுவத்தின் ஏவுகணைகள் ,மற்றும் எதிரி இராணுவ இலக்குகளை, துல்லியமாக தாக்கிடும் திறன் கொண்டது ,என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சம காலத்தில் ,ரஷ்ய இராணுவம் பயன்படுத்தி வரும் ,இவ்வகையான ஏவுகணைகள் ,மேம்படுத்த பட்ட ஏவுகணை தொகுதியாக இவை உள்ளது .
இந்த,ஏவுகணையின் செயல் பாட்டு திறன் ,கடந்த காலத்தில் பாவனைக்கு உட்படுத்த பட்ட ,ஏவுகணைகள் தரத்தில் இருந்து மாறுபட்டு உள்ளது .
அதனால் ரஷ்ய இராணுவத்தினருக்கு ,இந்த ஏவுகணைகள் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது .
உக்கிரேன் நாட்டின் மீது ,எதிரியான ரஷ்ய இராணுவம் ,ஆக்கிரமிப்பு வலிந்து ,தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .
ரஷ்ய இராணுவத்தினருக்கு புதிய ஏவுகணைகள் மிரளும் எதிரி
எதிரியான உக்கிரேன் இராணுவத்தினருக்கு ஆதரவாக ,அமெரிக்கா,பிரித்தானியா உள்ளிட்ட மேற்கு நாடுகள் ஆதரவாக உள்ளன .
எதிரிகளுக்கு அமெரிக்கா,பிரித்தானியா நாடுகள் வாழங்கிய ஆயுத உதவிகள் ஊடாக ,ரஷ்ய இராணுவம் பலத்த ,இழப்பை சந்தித்து வருகின்றன .
அந்த இராணுவ பின்னடைவு ,மற்றும் இராணுவ இழப்பை தவிர்த்திட ,தற்போது ரஷ்ய இராணுவம் புதிய ஆயுதங்களை பாவனைக்கு உள்ளாக்கி வருகிறது .
உக்கிரன் முக்கிய நகரங்கள் எங்கும் , எதிரி ரஷ்ய தாக்குதலினால் ,உக்கிரேன் உள் கட்டுமானம் முற்றாக சிதைந்துள்ளது .
ஒரு நாட்டினை முற்றாக தமது கட்டு பாட்டுக்குள் , கொண்டுவர வேண்டும் ,எனின் அந்த இராணுவத்தின் மீது ,எதிரி இடைவிடாத போரினை தொடுக்க வேண்டும் .
எதிரி இராணுவத்தின் ஓயாக போர் ஊடகாவே இராணுவம் சிதைவுறும் ,இழப்புக்கள் அதிகமாகும் .அந்த எதிரி இராணுவத்தினரின் உளவியலில் பாதிப்பு ஏற்படும் .
அப்பொழுது ஏற்படும் இராணுவ தொய்வு நிலையை கருத்தில் வைத்து அந்த எதிரிகள் நாட்டை முற்றாக ஆக்கிரமித்து கொள்ள முடியும்.
அமெரிக்கா ,பயங்கரவாதம் என்ற போர்வையில் ,மத்திய கிழக்கு நாடுகள் மீது மேற்கொண்ட எதிர் போர்கள் அவ்வாறே அமைந்திருந்தன.
அது போன்ற எதிர் தாக்குதல்களை திட்டமிட்டு ரஷ்ய நடத்தி வருகிறது .
உக்கிரேன் எதிரி மீதான தாக்குதல் நடவடிக்கை நாள் ஒன்றுக்கு 300 மில்லியன் யூரோ செலவிட படுவதாக ரஷ்ய அறிவித்திருந்தது.
உக்கிரேனில் இருந்து இந்த பணத்தினை எதிரியான ரஷ்யா அறுவடை செய்து கொள்கிறது .
வெளிப்படையாக சொல்ல போனால் உக்கிரேனின் வளங்களை
எதிரியான ரஸ்யா கொள்ளையடித்து செல்கிறது.
ரஷ்ய எதிரியின் சிறந்த வியுயுகம் இது என்பதே இந்த போரின் பின்னால் மறைந்து கிடைக்கும் உண்மைகளாக உள்ளது .
அதற்கு பலம் சேர்க்கும் வகையில் இந்த புதிய ஏவுகணைகள் பங்களிப்பு எதிரிக்கு தாக்கத்தை ஏற்படுத்த படவுள்ளது .
சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி விமானங்கள் தாக்குதல்
சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி விமானங்கள் தாக்குதல்
வடக்கு சிரியாவில் அலெப்போ பகுதிகளில் அமைந்துள்ள ,சிரியா இராணுவத்தின் , முன்னரங்க நிலைகள் மீது, துருக்கிய இராணுவ போர் விமானங்கள் ,அகோர வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளன .
துருக்கி போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ,சிரியா இராணுவத்தினர் டசின் கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
மேலும் துருக்கி விமானங்களின் தாக்குதலில் ,சிரியா இராணுவத்தினர் படுகாயமடைந்து உள்ளத்துடன் ,குறித்த இராணுவ நிலைகள் பலத்த சேதமடைந்த்துள்ளன.
சிரியா நாட்டின் வடக்கு பகுதியை ஆக்கிரமிக்கும் நோக்குடன் துருக்கி இராணுவம் ,பெரும் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது .
ஐம்பதயிரம் துருக்கி இராணுவம் குவிக்க பட்டுஉள்ளனர்.
சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி இராணுவ குழுக்கள், மற்றும் துருக்கி இராணுவம் என்பன ,சம வேளையில் விமான ஆதரவு தாக்குதல்களை, நடத்திய வண்ணம் உள்ளனர்.
சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி விமானங்கள் தாக்குதல்
பத்து ஆண்டுகளாக ,சிரியா நாட்டின் மீது ,பல் நாட்டு ,கூட்டு படைகள், தொடர் இராணுவ தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர்.
இந்த இராணுவ தாக்குதல்ககளில் , சிக்கி இதுவரை ,இரண்டு லட்சம் சிரியா மக்கள் பலியாகியுள்ளனர்.
மேலும். முப்பது லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள். சிரியாவை விட்டு .அயல் நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
சிரியா நாடு எங்கும் சுடு காடாக காட்சியளிக்கிறது .
முக்கிய பழைமை வாய்ந்த புராதன நகரங்கள் , என்பன குண்டுகளின் தாக்குதலில் சிக்கி இடிந்துள்ளன.
மிக பெரும் பெரும் , வரலாற்று பெருமை கொண்ட ,பகுதிகளும் சுடுகாடாக காட்சியளிக்கிறது .
பல் நாட்டு இராணுவத்தினரின் ,கூட்டிணைந்த தாக்குதல் ஊடாக ,அழகிய சிரியா நாடு இன்று அழகிழந்து தவிக்கிறது.
சிரியா இராணுவத்தினருக்கு ஆதரவாக ரஷ்யா களத்தில் குதித்துள்ளது .
சிரியாவின் வடக்கு பகுதிகளில் குருதீஸ் போராளிகள் ,தமது தாயகம் கோரி போராடி வருகின்றனர்.
அவ்வாறான எல்லை பகுதிகள் மீது துருக்கி இராணுவம், பெரும் தாக்குதலை தற்போது நடத்திய வண்ணம் உள்ளது .
குருதீஸ் போராளிகளை ,முற்றாக அழிக்கும், துடைத்தழிப்பு ,தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் ,சிரியா இராணுவத்தின் நிலைகள் மீதும் விமான தாக்குதல் நடத்த பட்டு வருகிறது .
அரேபிய நாடுகளில் ,குட்டி அமெரிக்காவாக ,துருக்கி தன்னை அடையாள படுத்தி ,அடக்குமுறை இராணுவ வன்முறை தாக்குதல்களை மேற் கொள்கின்றமை குறிப்பிட தக்கது .
தாய்லாந்து பயணித்த கோட்டாவுக்கு விமான பணத்தை செலுத்திய இலங்கை
தாய்லாந்து பயணித்த கோட்டாவுக்கு விமான பணத்தை செலுத்திய இலங்கை
இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, தாய்லாந்துக்கு பயணித்த விமான பணத்தை ,இலங்கை அரசு செலுத்தியுள்ளது .
இலங்கையின் ஜனாதிபதிகளுக்குரிய சலுகைகள் அடிப் படையில் ,தாய்லாந்து விமான போக்குவரத்து ,பணம் செலுத்த பட்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.
மேலும் ஜனாதிபதிக்கு பின்னர், அவரது மனைவிக்கு, அதே சலுகைகள் வழங்க படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மக்களினால் கோட்டபாய ராஜபக்ச நாட்டை விட்டு, துரத்த பட்டுள்ள பொழுதும் ,இலங்கையின் சட்ட பிரகாரம், தாம் அதனை கோட்டாவுக்கு செய்துவருவதாக, இலங்கை விளக்கம் அளித்துள்ளது.
கோட்டாவுக்கு வழங்க பட்டுள்ள இந்த சலுகை செய்திகள் வெகுவாக பரவிய நிலையில், மக்கள் ஆளும் ரணில் அரசு மீது கொதிப்பில் உறைந்துள்ளனர்.

























