Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கி சூடு ஒருவர் காயம் – ஆயுத தாரிகள் தப்பி ஓட்டம்

துப்பாக்கி சூடு ஒருவர் காயம் – ஆயுத தாரிகள் தப்பி ஓட்டம்

இலங்கை காலி பகுதியில் வீதியில் நின்றவர் மீது துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது.

ஊந்துருளியில் வருகை தந்த மூவர்,திடீரென துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு ,அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர் .

இவ்வாறு தப்பி சென்ற ஆயுத,தாரிகளை கைது செய்யும் ,நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் சமீப காலங்களாக, துப்பாக்கி சூட்டு தாக்குதல்கள் ,அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த நபர் மீதான துப்பாக்கி சூட்டு சம்பவம், ஏன் மேற்கொள்ள பட்டது என்பது தொடர்பில் தெரிவிக்க படவில்லை.

தொடரும் விசாரணைகளில் , ஆயுத தாரிகள் கைது செய்ய, படுவார்கள் என காவல்த்துறை ,நம்பிக்கை வெளியிட்டுள்ளது .

    Posted in இலங்கை செய்திகள்

    நல்லூர் ஆலயத்தில் சங்கிலி கொள்ளையடித்த பெண் கைது

    நல்லூர் ஆலயத்தில் சங்கிலி கொள்ளையடித்த பெண் கைது

    இலங்கை யாழ்ப்பாணம்நல்லூர் ஆலயத்தில் வழிபாட்டில் ,ஈடுபட்ட பெண் ஒருவர் ,அணிந்திருந்த தங்க சங்கிலியை , திருடி சென்ற பெண் ஒருவர், கைது செய்யப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்க பட்டுள்ளார் .

    தங்க சங்கிலியை பறிகொடுத்த பெண் ,வழங்கிய புகாரின் அடிப்படையில் ,இந்த கைது இடம்பெற்றுள்ளது.

    யாழ்ப்பாணத்தில் கொள்ளையில் ஈடுபடும் ,பெண்கள் சிலர் சமீப காலங்களாக கைது செய்ய பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது.

      Posted in இலங்கை செய்திகள்

      பேரூந்தில் நடத்துனரை அடித்து வீசிய பெண்

      பேரூந்தில் நடத்துனரை அடித்து வீசிய பெண்

      இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து, கண்டி நோக்கி பயணித்து கொண்டிருந்த ,பேரூந்து ஒன்றில் பயணித்த பெண் ,ஒருவர் அந்த நடத்துனரை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

      பேரூந்தில் பயணித்த பெண் பயணி ,நடத்துனர் டிக்கட் எடுக்கும் படி கூறிய போது , அவரை சரமாரியாக தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

      இந்த பெண்ணின் தாக்குதலில், காயமடைந்த நடத்துனர் ,ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

      பெண் நடத்துனரை தாக்கிய பொழுது ,மக்கள் அந்த பெண்ணை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்ததாக ,நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளன.


      தாக்குதலை நடத்திய பெண், மனநலம் பாதிக்க பட்டவர் என, அந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர் .

        மாணவர்களுக்கு காதல் பாடம் கற்ப்பிக்கும் ஆசிரியரை இடமாற்ற கோரி மக்கள் போராட்டம்
        Posted in இலங்கை செய்திகள்

        மாணவர்களுக்கு காதல் பாடம் கற்ப்பிக்கும் ஆசிரியரை இடமாற்ற கோரி மக்கள் போராட்டம்

        மாணவர்களுக்கு காதல் பாடம் கற்ப்பிக்கும் ஆசிரியரை இடமாற்ற கோரி மக்கள் போராட்டம்

        இலங்கை முல்லைத்தீவு மந்துவில் அரசரத்தினம் வித்தியாலத்தில் ,கல்வி போதித்து வரும் ஆசிரியர் ஒருவர், இடமாற்ற படத்தை அடுத்து, அங்கு மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

        குறித்த பாடசாலையில் ஆசிரிய ஒருவர். தனது காதல் கதையினை மாணவர்களுக்கு புகட்டி வந்த நிலையில்.
        அவரை இடம் மாற்றம் செய்திடும் படி மக்கள் கோரியுள்ளனர் .

        மேலும் இவர் மாணவர்களுக்கு .அடித்து துன்புறுத்தும் வேலைகளிலும் ஈடுபட்டுளளார் ,என்ற குட சாட்டு முன் வைக்க பட்டுள்ளது .

        மாணவர்கள் வெறுக்கும் ஆசிரியர் ,அங்கு கல்வி போதித்து வரும் நிலையிலும் ,மக்கள் மாணவர்கள் விரும்பும் ஆசிரியர் இடமாற்றம் செய்ய பட்ட நிலையிலும் ,இந்த போராட்டங்கள் இடம்பெற்று வருகிறது,

        மக்கள் கோரிக்கையை ஏற்று கொண்ட கல்வி நிர்வாகம், குறித்த ஆசிரியரை மீளவும் ,அதே பாடசாலைக்கு நியமிக்க நடவடிகை ,மேற் கொள்வதாக உறுதியளித்துள்ளது.

        இதனால் மக்கள் போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்பினார் .

          இலங்கையில் பிஸ்கட் விலை அதிகரிப்பு
          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் பிஸ்கட் விலை அதிகரிப்பு

          இலங்கையில் பிஸ்கட் விலை அதிகரிப்பு

          இலங்கையில் ஏற்பட்டுள்ள, பொருளாதார நெருக்கடி காரணமாக ,இப்போது பிஸ்கட் விலைகள் திடீரென அதிகரித்துள்ளது.

          நாள் தோறும் பொருட்களின் விலைகள் ,அதிகரித்து செல்கின்ற நிலையில் ,தற்போது பிஸ்கட் விலைகளும் அதிகரிக்க பட்டுள்ளது ,மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

          பிஸ்கட் தயாரிக்க பயனப்டுத்த படும் ,மாவின் விலை அதிகரிக்க பட்டதால் ,இந்த பிஸ்கட் விலைகளும் அதிகரிக்க பட்டுள்ளதாக ,இனிப்பு பண்டங்கள் உற்பத்தி சங்கம் அறிவித்துள்ளது .

            இலங்கை வந்தடைந்த சீனா ஆய்வு கப்பல்
            Posted in இலங்கை செய்திகள்

            இலங்கை வந்தடைந்த சீனா ஆய்வு கப்பல்

            இலங்கை வந்தடைந்த சீனா ஆய்வு கப்பல்

            இலங்கை கம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் ஆய்வு கப்பல் வந்தடைந்துள்ளது .

            இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, சீனாவின் ஆய்வு கப்பல் இலங்கை வந்தடைந்துள்ளது .

            இலங்கை இந்தியாவுக்கு இடையில் இந்த சீன கப்பல், விடயம் முறுகளை ஏற்படுத்தியுள்ளது .

            இலங்கை கடலில் தரித்து நிற்கும் ,இந்த சீனா கப்பல் ,இலங்கை மற்றும் இந்தியாவின் கடல் பகுதிகளை ஆய்வு செய்யும் .

            சீனாவின் இந்த கப்பல் உளவு வேளைகளில் ஈடுபடுவது என தெரிக்க பட்டுள்ள நிலையிலே, சர்ச்சையில் சீனாவின் கப்பல் சிக்கியுள்ளது.

              Posted in இலங்கை செய்திகள்

              வெளிநாட்டு தமிழர்கள் தடை என்னாலே இடம்பெற்றது டக்கிளஸ் பெருமிதம்

              வெளிநாட்டு தமிழர்கள் தடை என்னாலே இடம்பெற்றது டக்கிளஸ் பெருமிதம்

              இலங்கையில் மகிந்த ராஜபக்ச அரசினால், வெளிநாட்டில் உள்ள, தமிழர் அமைப்புக்கள் மீது தடைகள் விதிக்க பட்டது.

              அவ்வாறு விதிக்க பட்ட தடைகள் ,தற்போது நீக்க பட்டுள்ளதாக, இலங்கையில் ஆளும் அரசு அறிவித்துள்ளது .

              மேலும் கறுப்பு பட்டியலில் இணைக்க பட்ட, 350 க்கு மேற்பட்டவர்கள், மீதான தடையும் நீக்க பட்டுள்ளதாக இலங்கை அறிவித்தது .

              இவ்வாறான ,தமிழர் அமைப்புக்கள் மற்றும், நபர்கள் மீதான தடை நீக்குதலுக்கு தானே காரணம் என ,மன்மதன் டக்கிளஸ் தேவானந்தா பெருமிதம் தெரிவித்துள்ளார் .

              இந்த தடையின் பின்னராவது ,இலங்கையில் உள்ள மக்களுக்கு ,வெளிநாட்டு தமிழர்கள் ,உதவிட வேண்டும் என்கிறார் அமைச்சர் டாக்கின்ஸ்

              கேட்கல ,இலங்கை மக்களுக்கு உதவிடுங்க .ஓகே சார் .

                Posted in இலங்கை செய்திகள்

                ஓடையில் மிதந்த தமிழ் வாலிபன் சடலம்

                ஓடையில் மிதந்த தமிழ் வாலிபன் சடலம்

                இலங்கை நுவரெலியா பகுதியில் ,காணாமல் போன, வாலிபன் ஒருவர் ,நீரில் சடலமாக மிதந்த ,நிலையில் மீட்க பட்டுள்ளார்.

                நுவரெலியா பம்பரக்கலை தோட்டத்தில் ,வசித்து வரும் இருபது வயதுடைய ,இந்த வாலிபன் ,தோட்டம் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார்.

                அவ்வாறு கூலி தொழில் புரிந்து வரும், இந்த வாலிபன் காணாமல் போயிருந்த நிலையில் ஓடையில் சடலமாக மீட்க பட்டுளளார்.

                கோட்டபாய ஆட்சியில் ஆரம்பித்து வைக்க பட்ட, இவ்வாறன மக்களை அச்சுறுத்தும் ,மர்ம கொலைகள், இலங்கையெங்கும் ,தொடர்ந்த வண்ணம் உள்ளது,

                தமிழ், ஆண் , பெண்கள் ,உள்ளிட்டவர்கள் இவ்வாறு , மர்மமான முறையில், நீர் நிலைகளில் இருந்து ,சடலங்களாக மீட்க பட்டு வருகின்றமை ,இங்கே குறிப்பிட தக்கது .

                  அமெரிக்கா இராணுவ தளம் மீது உளவு விமனம மூலம் தாக்குதல்
                  Posted in உலக செய்திகள்

                  அமெரிக்கா இராணுவ தளம் மீது உளவு விமானம் மூலம் தாக்குதல்

                  அமெரிக்கா இராணுவ தளம் மீது உளவு விமானம் மூலம் தாக்குதல்

                  அமெரிக்கா இராணுவத்தின், முக்கிய இராணுவ முகாம்கள் மீது ,உளவு விமானங்கள் மூலம் தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளது .

                  ஈராக்கை விட்டு விலகிட மறுத்து வரும் ,அமெரிக்கா இராணுவத்தினர் மீது ,ஈரானிய ஆதரவு குழுக்கள் ,ஈரானிய உளவு விமானங்களை, பயன் படுத்தி தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளன.

                  அமெரிக்கா இராணுவ தளம் மீது உளவு விமானம் மூலம் தாக்குதல்

                  சாமீப காலங்களாக ,அமெரிக்கா இராணுவத்தினர் , தரைவழி மற்றும் இராணுவ முகாம்கள் மீது ,ஏவுகணை மற்றும் விமானங்கள் மூலம் ,தாக்குதல்கள் நடத்த பட்டு வருவது அதிகரிக்க பட்டுள்ளது .

                  அமெரிக்கா இராணுவத்தை ,ஈராக்கில் இருந்து அகற்றும் தொடர் தாக்குதலாக இவை பார்க்க படுகிறது.

                  தொடரும் உக்கிர தாக்குதல்களினால் ,அமெரிக்கா இராணுவத்தின் உளவு உரனில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது .,என முக்கிய உளவு நிறுவனங்கள் கருத்துரைத்துள்ளமை குறிப்பிட தக்கது .

                  எனினும் ,இன்று நடத்த பட்ட, இந்த விமான தாக்குதல்களில், அமெரிக்கா இராணுவத்தினருக்கு ஏற்பட்ட ,சேத விபரங்கள் வெளியிடப்படவில்லை .

                  அமெரிக்கா இராணுவத்தினர் இலக்கு வைத்து ,துரத்தி துரத்தி தாக்க படுவதன் ஊடாக ,மிக தெளிவான செய்தி ஒன்றை போராளி குழுக்கள் சொல்லி கொள்கின்றன .

                  ஈராக்கில் அமெரிக்கா மற்றும் அதன் சார்பு கூட்டணி நாடுகள் ,தங்கி இருக்கும் வரை ,எமது தாக்குதல்கள் விரிந்து பரந்து செல்லும், எனற களத்தை இவை காட்டி கொள்கின்றன .

                  இதன் உள்ளக போரியல் தந்திரமும் ,அதற்குள் சிக்க வைக்க படும் அமெரிக்கா இராணுவத்தின் மன நிலைகளையும் ,படம் பிடித்து காட்டும் நிகழ்வாக இது அமைய பெற்றுள்ளது .

                  சதாம் உசேன் அணுகுண்டு தயாரிக்கிறார் என பொய்யை கூறி ,எண்ணெய் வளங்களை ஆக்கிரமிக்க ,நுழைந்த அமெரிக்கா இராணுவம் ,அழகிய ஈராக் நாட்டை போர் மேகம் கொண்ட நாடக மாற்றியுள்ளது .

                  இதன் ஊடாக அந்த ஈராக் மக்கள் ஒற்றுமை சிதைத்து ,அந்த நாட்டை தமது ஆளும் அதிகாரத்தின் கீழ் அடக்கியாள துடிக்கும் அமெரிக்காவை இந்த போராளிகள் துரத்தி தாக்குவது சரி தான் என்கிறது ஒரு தரப்பு .

                  ஈரான் ஆதரவுடன் நடத்த பட்டு வரும் இந்த தாக்குதல்கள் விரைவில் வீச்சு பெறும் என எதிர் பார்க்க படுகிறது .

                    வெள்ளத்தில் சிக்கி 31 பேர் மரணம் 100 பேரை காணவில்லை
                    Posted in உலக செய்திகள்

                    வெள்ளத்தில் சிக்கி 31 பேர் மரணம் 100 பேரை காணவில்லை

                    வெள்ளத்தில் சிக்கி 31 பேர் மரணம் 100 பேரை காணவில்லை

                    ஆப்கனிஸ்தான் வடக்கு Parwan மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி, இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 100 பேர் காணாமல் போயுள்ளனர்.

                    பதினேழுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் ,இதுவரை மீட்க பட்டுள்ளனர்.

                    அடித்து பாயும் அகோர வெள்ளத்தில் சிக்கி ,வாகனங்கள் வீடுகள் உடைமைகள் என்பன , வெள்ள நீரில் அடித்து செல்ல பட்டுள்ளன .

                    காணாமல் போன நூறு மக்களை,தேடி கண்டு பிடிக்கும் பணிகள் முடுக்கி விட ப் பட்டுள்ளன.

                    வீடுகள் மற்றும் உடமைகளை இழந்த மக்கள், அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்.

                    தமது உறவுகளை பறி கொடுத்த மக்கள் ,கண்ணீரில் தவித்த வண்ணம் உள்ளனர்.

                    இந்த வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்கள் உயிர் பலி, அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது .

                      கார் குண்டு தாக்குதல் நால்வர் மரணம்
                      Posted in உலக செய்திகள்

                      கார் குண்டு தாக்குதல் நால்வர் மரணம்

                      கார் குண்டு தாக்குதல் நால்வர் மரணம்

                      ஆப்கனிஸ்தான் தலைநகர் காபூல் பகுதியில் மக்களை இலக்கு வைத்து நடத்த பட்ட கார் குண்டு தாக்குதலில் சிக்கி இதுவரை நல்லவர் பலியாகியுள்ளனர்.

                      மேலும் டசின் கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர் .

                      ஆப்கனிஸ்தான் தலிபான்கள் வசம் வீழ்ச்சியடைந்த நிலையில், தற்பொழுது அங்கு பெரும் குண்டு தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

                      இந்த குண்டு தாக்குதல்களை தடுத்திட முடியாது தலிபான்கள் திணறி வருகின்றனர் .

                      காபூல் பகுதியில் குண்டு வெடிப்புக்கள் ,தொடர்ந்த வண்ணம் உள்ளதினால், தலிபான்கள் சிவில் நிர்வாக சேவை பாத்திக்க பட்டுள்ளது .

                      இந்த தாக்குதல்கள் ஐஸ் எஸ் மற்றும் அரச ஆதரவு குழுக்கள் இணைந்து நடத்தி வருவதாக தெரிவிக்க படுகிறது .

                        வெள்ளத்தில் சிக்கி 52 மக்கள் பலி 59 பேர் பாதிப்பு
                        Posted in உலக செய்திகள்

                        வெள்ளத்தில் சிக்கி 52 மக்கள் பலி 89 ஆயிரம் மக்கள் பாதிப்பு

                        வெள்ளத்தில் சிக்கி 52 மக்கள் பலி 89 ஆயிரம் மக்கள் பாதிப்பு

                        சூடானில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 52 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 89 ஆயிரம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்.

                        நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் இந்த வெள்ளத்தினால் அழிந்துள்ளது .
                        வீடுகளுக்குள் வெள்ளம் அடித்து புகுந்ததினால் , வீட்டின் பொருட்கள் யாவும் வெள்ளத்துடன் அடித்து செல்ல பட்டுள்ளது.

                        சூடானில் வெள்ளத்தினால் , பாதிக்க பட்ட மக்களுக்கு ,ஆளும் அரசு உரிய உதவிகளை வழங்கவில்லை என்ற குற்ற சாட்டு முன் வைக்க பட்டுள்ளது.

                        சூடானில் பாதிக்க பட்ட மக்களுக்கு, தாம் உதவிட தயராக உள்ளதாக, ஈரான் அறிவித்துள்ளதுடன் ,கடும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.

                        இந்த வெள்ளத்தில் பாதிக்க பட்ட மக்களுக்கு, உதவிட மறுத்துள்ள சூடான்
                        அரசின் ,தட்டி கழிப்பு செயல்பாடுகள் உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

                          டயஸ்போரா அமைப்புகளை சந்தித்து உரையாட நான் தயார் மனோ கணேசன்
                          Posted in இலங்கை செய்திகள்

                          டயஸ்போரா அமைப்புகளை சந்தித்து உரையாட நான் தயார் மனோ கணேசன்

                          டயஸ்போரா அமைப்புகளை சந்தித்து உரையாட நான் தயார். அதற்கான அடிப்படையை அரசு உருவாக்க வேண்டும்

                          – மனோ கணேசன்

                          ரணில் நிர்வாகம், உலகத் தமிழர் பேரவை, பிரிட்டன் தமிழர் பேரவை, கனடா தமிழ்க் காங்கிரஸ், ஆஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ், உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் திராவிட ஈழ மக்கள் சம்மேளனம் ஆகிய ஆறு

                          அமைப்புக்கள் மீதான தடையும், 316 தனிநபர்களுக்குமான தடையும் நீக்கியுள்ளது. இந்நடவடிக்கையை நான் வரவேற்கிறேன்.  ஆனால், தடை நீக்கம் மாத்திரம் அவர்களை திருப்தி படுத்த போவதில்லை.  

                          இலங்கையின் 52 பில்லியன் டொலர் கடன்சுமை, நாட்டை நடத்த மாதாந்த 500 மில்லியன் டொலர் தேவை ஆகிய வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்துள்ள அனைத்து

                          தமிழ், சிங்கள மக்களின் ஒத்துழைப்புகளை நாம் நாட வேண்டும். இதற்காக கால தாமதம் செய்யாமல், இந்நாட்டின் தேசிய ஐக்கியம் மற்றும்

                          இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலும், ஊழலற்ற நிதி நிர்வாகம் தொடர்பிலும் ஒரு குறைந்தபட்ச பொது கோட்பாடுகளை இலங்கை அரசு புலம்பெயர்

                          இலங்கையர்களை நோக்கி அரசாங்கத்தின் உத்தரவாதமாக அறிவிக்க வேண்டும்.    

                          டயஸ்போரா அமைப்புகளை சந்தித்து உரையாட நான் தயார் மனோ கணேசன்

                          இந்த அடிப்படையில் தமிழ் அமைப்புகள் மட்டுமல்ல,  இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்துள்ள சிங்கள மற்றும் அனைத்து மக்களது அமைப்புகளுடனும் சென்று உரையாட நான் தயாராக இருக்கின்றேன்.

                          ஒரு பக்கம் தமிழர் என்ற முறையிலும், மறுபுறம் தெற்கில் சிங்கள மக்கள் வாழும் கொழும்பு மாவட்ட எம்பி  என்ற முறையிலும் நான் இந்த பாத்திரத்தை வகிப்பது பொருத்தமானது என நம்புகிறேன்.

                          அரசில் அமைச்சு பதவிகளை பெறுவதை விட இதுதான் பிரயோஜனமானது எனவும் நான் நம்புகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன்  எம்பி தெரிவித்துள்ளார்.

                          இன்று நடத்திய விசேட ஊடக சந்திப்பில் மனோ எம்பி மேலும் கூறியதாவது,

                          இன்று நாம் உலக நாடுகளிடம் கையேந்தி கொண்டு இருக்கிறோம். ஆனால், இந்தியாவை தவிர எவரும் எமக்கு உதவில்லை.

                          இந்திய மக்களின் வரிப்பணம் மூலமான இந்த உதவிகள் இன்னமும் எவ்வளவு நாளைக்கு கிடைக்கும் என தெரியவில்லை.  சர்வதேச நாணய நிதி, உலக வங்கி ஆகியவை ஒதுங்கியே இருக்கின்றன.  

                          அவர்களிடம் முன்வைக்கும் சமூக பொருளாதார திட்டம் என்ன? ஜனாதிபதி பதவி ஏற்று  பல வாரங்கள் ஆகியும் இவை எதுவும் இன்னமும் நடைபெறவில்லை.

                          இந்நிலையில் பழைய அடிப்படைகளில் இருந்து மாறி, புதிய முறையில் பார்க்க, சிந்திக்க முடியுமானால், நாம் உலகம் முழுக்க வாழும் நமது நாட்டு மக்களிடம், தாய் நாட்டுக்கு உதவுங்கள் என கோர முடியும்.

                          உலகம் முழுக்க புலம் பெயர்ந்துள்ள அனைத்து தமிழ், சிங்கள இலங்கையர்கள் சுமார் 25 இலட்சம் பேர் வாழ்கிறார்கள்.

                          இவர்கள் அனைவரும் மனமுவந்து நாட்டுக்கு உதவக்கூடிய அளவில் அவர்களது நம்பிக்கையை பெறுவது நாட்டின், நாட்டு அரசின் கடமை.

                          இந்நாட்டில் வாழ முடியாமல், வெளிநாடுகளுக்கு போய் விட்ட  இவர்களுக்கு நாடு நல்ல திசையில் மாறுகிறது என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும்.

                          ஆனால், அவற்றுக்கு முன்நிபந்தனைகள் உண்டு. புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் குறிப்பாக நாட்டின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் உத்தரவாதங்களை எதிர்பார்ப்பார்கள்.

                          டயஸ்போரா அமைப்புகளை சந்தித்து உரையாட நான் தயார் மனோ கணேசன்

                          புலம் பெயர்ந்துள்ள சிங்கள மக்கள் குறிப்பாக தமது உதவிகள் ஊழல், வீண்விரயம் ஆகியவற்றை செய்யும் அரசியல்வாதிகளின் கைகளுக்கு போய்விடக்கூடாது  தொடர்பில் உத்தரவாதங்களை எதிர்பார்ப்பார்கள்.

                          இந்நாடு சிங்கள பெளத்த நாடு என்ற அடிப்படை மாற வேண்டும். இந்நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம் நாடு என்ற அடிப்படை ஏற்கப்பட வேண்டும்.

                          இந்நாடு மத சார்பற்ற நாடாக மாறவும் வேண்டும். இலங்கையர் என்ற அடையாளம் மேலெழும்ப வேண்டும்.

                          அதேபோல் வெளிநாட்டில் இருந்து வரும், ஒவ்வொரு டொலரும், பவுண்டும், யூரோவும் நாட்டின் தேவைகளுக்காக வெளிப்படை தன்மையுடன் கூடிய பொறுப்பு கூறலுடன் பயன்படுத்தப்பட வேண்டும்.

                          இவை பற்றிய குறைந்தபட்ச பொது கோட்பாடுகளை உத்தரவாதமாக இலங்கை அரசும், எதிர் கட்சிகளும் அறிவிக்கும்மானால், இது சாத்தியப்படலாம்.  

                          இந்த அடிப்படையில் தமிழ் அமைப்புகள் மட்டுமல்ல,  இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்துள்ள சிங்கள மற்றும் அனைத்து மக்களது அமைப்புகளுடனும் சென்று உரையாட நான் தயாராக இருக்கின்றேன்.

                          ஒரு பக்கம் தமிழர் என்ற முறையிலும், மறுபுறம் தெற்கில் சிங்கள மக்கள் வாழும் கொழும்பு மாவட்ட எம்பி  என்ற முறையிலும் நான் இந்த பாத்திரத்தை வகிப்பது பொருத்தமானது என நம்புகிறேன்.

                          அரசில் அமைச்சு பதவிகளை பெறுவதை விட இதுதான் பிரயோஜனமானது எனவும் நான் நம்புகிறேன்.    

                            Posted in இலங்கை செய்திகள்

                            ரயிலில் மோதி காதல் ஜோடி காயம் காதல் செய்த கோலம்

                            ரயிலில் மோதி காதல் ஜோடி காயம் காதல் செய்த கோலம்

                            இலங்கையில் காதல் ஜோடிகள் ,ரயில்வே தண்டவாளத்தில் நடந்து, சென்று கொண்டிருந்த பொழுது ,ரயிலில் மோதி படுகாயமடைந்த நிலையில் ,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

                            இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரும் .17 வயது இளம் பெண் ஒருவருக்கும் இடையில். முறையற்ற காதல் நிலவி வந்துள்ளது .

                            இவ்வாறு இருவரும் ரயில்வே தாண்டவளத்தில் கதைத்த படி காதல் புரிந்த ,நடந்து சென்று கொண்டிருந்த பொழுது, பின்னல் வந்த ரயில் மோதி , படுகாயமடைந்துள்ளனர் .

                            காயமடைந்த காதல் ஜோடி , டிக்கோயா மருத்துவமனையில் ,சிகிச்சை பெற்று வருகின்றனர்,

                            இதில் காதலி ,பலத்த காயமடைந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக இடம் மாற்ற பட்டுள்ளார் .

                            கள்ள காதல் செய்த கோலம் .

                              Posted in இலங்கை செய்திகள்

                              கோடீஸ்வர பெண் வெட்டி படு கொலை நடந்ததது என்ன

                              கோடீஸ்வர பெண் வெட்டி படு கொலை நடந்ததது என்ன

                              இலங்கை கண்டி பகுதியில் ,தனியாக வசித்து வந்த , கோடீஸ்வர பெண் ஒருவர் வெட்டி கொலை செய்ய பட்டுளளார்,

                              குறித்த பெண் ,தான் குடியிருக்கும் வீட்டின் அருகே, கடைகள் பலதை வாடகைக்கு விட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது.

                              சொத்து தகராறு காரணமாக ,இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக ,எதிர்பார்க்க படுகிறது,

                              இந்த, கோடீஸ்வர பெண்ணின் ,கணவர் இறந்த நிலையில் ,தனிமையில் வசித்து வந்துள்ளார்.

                              கோடீஸ்வர பெண் வெட்டி படு கொலை நடந்ததது என்ன

                              இவரது இரு பிள்ளைகளும், அவுஸ்ரேலியாவில் வசித்து வருகின்றனர் .

                              கத்தியால் வெட்டிய நபர் ,அங்கிருந்து வெளியேறி சென்ற காட்சியை ,நேரில் பார்த்த சாட்ச்சி தெரிவித்துள்ளது.

                              எனினும் குறித்த கொலையை புரிந்த நபர். தன்னை கத்தியை காண்பித்து மிரடியதாக அந்த சாட்சி தெரிவித்துள்ளார்.

                              இரத்த வெள்ளத்தில் துடித்த பெண்ணை ,விரைந்து மருத்துவமனைக்கு எடுத்து செல்லவில்லை என்ற அதிர்ச்சி செய்தியும் வெளியாகியுள்ளது .

                              கோடீஸ்வர பெண் ஏன் கொலை செய்ய பட்டார் .என்பது தொடர்பில் போலீஸ் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

                                Posted in இலங்கை செய்திகள்

                                யானை தாக்குதலில் சிக்கி 34 பேர் மரணம்

                                யானை தாக்குதலில் சிக்கி 34 பேர் மரணம்

                                இந்த வருடத்தின். முதலாவது நான்கு மாத்தில் மட்டும் .யானைகளின் தாக்குதலில் சிக்கி 34 பேர் பலியாகியுள்ளனர்.

                                மேலும் 47 காட்டு யானைகளும் .கொலை செய்ய பட்டுள்ளன .

                                எண்ணிக்கையில் ,இவை அதிகமாக உள்ளதாக, வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

                                காட்டு யானைகளின் .அத்துமீறும் தாக்குதல்களில். சிக்கி உயிரிழக்கும் மக்கள் எண்ணிக்கை .நாள் தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

                                இந்த. காட்டு யானைகளின் இருந்து. தம்மை பாதுகாத்து கொள்ளுமாறு. மக்கள் அரசை வேண்டியுள்ள பொழுதும்,வன ஜீவாரசிகள் காப்பகத்தினால் ,மக்கள் காப்பாற்ற தவறி வரும் நிலையில், மனித உயிரிழப்பு அதிகமாகி வருவதாகதெரிவிக்க படுகிறது .

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  ஐந்து நாள் பாடசாலை இடம்பெறும் கல்வி அமைச்சு

                                  ஐந்து நாள் பாடசாலை இடம்பெறும் கல்வி அமைச்சு

                                  இலங்கையில் ,இந்த வாரம் ஐந்து நாட்களும் பாடசாலை இடம்பெறும், என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது .

                                  வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும், பாடசாலை இடம்பெற்று வந்த நிலையில் ,தற்பொழுது ஐந்து நாட்கள் ,இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. .

                                  இந்த அறிவிப்பு ,படிக்கும் பாடசாலை மாணவர்கள் மத்தியில், மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

                                  எனினும் இவ்வாறு ,எதிர்வரும் வராமும் ,பாடசாலை தொடருமா, என்பதே கேள்வியாக உள்ளது .

                                    இந்தியா இலங்கைக்கு வாழங்கிய பால்மா காலவாதி
                                    Posted in இலங்கை செய்திகள்

                                    இந்தியா இலங்கைக்கு வாழங்கிய பால்மா காலவாதி

                                    இந்தியா இலங்கைக்கு வாழங்கிய பால்மா காலவாதி

                                    இலங்கைக்கு தமிழக அரசு அனுப்பி வைத்த ,உணவு பொருட்களில் ,பால்மா பைகள் காலாவதியான நிலையில் உள்ளதாக, கணடறிய பட்டுள்ளது.

                                    குறித்த பால்மா பைகளில் ,அதன் முடியும் திகதி காணப்படவில்லை ,இதனால் அந்த பால்மா பாக்கட் காலாவதியானதாக இருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.

                                    எனினும் இது தொடர்பான சோதனைகள் இடம்பெற்றுள்ளது .

                                    அவ்வாறு காலாவதி என ஏதும் கண்டறியப்படவில்லை என்றும், இதில் திகதி பதிவிடப்படாது உள்ளமையால், பலத்த சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக ,உணவு பாதுகாப்பு ஆணையர் தெரிவித்தார் .

                                    மேற்படி சம்பவம் ,தமிழக அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது.

                                      கிழக்கு மாகாண எழுத்தாளர்களின் படைப்புக்களை வெளியீடு செய்துவைக்கும் விழா
                                      Posted in இலங்கை செய்திகள்

                                      கிழக்கு மாகாண எழுத்தாளர்களின் படைப்புக்களை வெளியீடு செய்துவைக்கும் விழா

                                      கிழக்கு மாகாண எழுத்தாளர்களின் படைப்புக்களை வெளியீடு செய்துவைக்கும் விழா

                                      கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ், சிங்கள எழுத்தாளர்களின் படைப்புக்கள் மற்றும் அவர்களின் திறமைகளை வெளியுலகிற்கு கொண்டு வருகின்ற

                                      செயற்பாடுகளை மாகாண பண்பாட்டாலுவல்கள் திணைக்களம் கடந்த பல வருடங்களாக பாரிய பங்காற்றிவருகின்றதென கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் (திருமதி) சரண்யா சுதர்சன் தெரிவித்தார்.

                                      கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அச்சுருவாக்கப்பட்ட 4 வகை நூல்களை வெளியீட்டு வைக்கும் விழாவும்,

                                      நூல்களை நூலாசிரியர்களிடம் கையளித்து வைக்கும் நிகழ்வும் (14) திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

                                      அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மூவின மக்களும் வாழுகின்ற மாகாணமாக இருக்கின்றது. அவர்களுக்குள் இருக்கின்ற படைப்புக்கள் மற்றும் கலை, கலாசார

                                      கிழக்கு மாகாண எழுத்தாளர்களின் படைப்புக்களை வெளியீடு செய்துவைக்கும் விழா

                                      விடயங்களை வெளியுலகிற்கு கொண்டு செல்வதுடன் நின்றுவிடாமல் அவர்களையும், இளம் எழுத்தாளர்களையும் இன்னுமின்னும் ஊக்குவிக்கும் செயற்பாடுகளை மாகாண திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.

                                      மாகாணத்திலுள்ள படைப்பாளிகளினால் சமர்ப்பிக்கப்படுகின்ற படைப்புக்கள் யாவும் அதற்கான குழுவினர்களினால் பரிசீலிக்கப்பட்டு, அதில் திறமையான படைப்புக்கள் இனங்கண்டு இவ்வாறு வெளியீடு செய்து

                                      படைப்பாளிகளுக்கும் நூல்களை வழங்கி வருகின்றோம். இதன் மூலம் அவர்கள் இன்னும் பல படைப்புக்களை வெளிக்கொண்டு வருகின்ற

                                      ஊக்கத்தையும், இளம் எழுத்தாளர்களின் ஆர்வத்தையும் ஏற்படுத்துகின்றது என்றார்.

                                      இதன்போது, அம்மாவுக்கு பிடித்த கனி என்ற சிறுவர் பாடல்கள் எழுதிய நூலாசிரியர் கலாபூசனம் பி.கனகரத்தினம், கொட்டியாரப்பற்று வன்னிபங்கள் என்ற வரலாறு எழுதிய நூலாசிரியர் வைத்திய கலாநிதி த.ஜீவராஜ், நவீன

                                      சீதை என்ற சிறுவர் கதைகள் எழுதிய நூலாசிரியர் கவிச்சுடர் (திருமதி) க.சிவரமணி, கடலோரப்பாதை என்ற சிறுவர் கதைகள் எழுதிய நூலாசிரியர் ஏ.எம்.முகைதீன் ஆகியோர்களினால் எழுதப்பட்ட நூல்கள் கிழக்கு மாகாண

                                      பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அச்சுருவாக்கப்பட்டு வெளியீடு செய்யப்பட்டதுடன், அவர்களுக்கு தலா 200 நூல்களையும் மாகாணப் பணிப்பாளர் (திருமதி) சரண்யா சுதர்சன் வழங்கி வைத்தார்.

                                      கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு மிக
                                      அண்மையில் நியமனம் பெற்ற மாகாணப் பணிப்பாளருக்கு

                                      இவ்விழாவின்போது
                                      பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

                                      பைஷல் இஸ்மாயில் –

                                        தீயில் எரிந்த சந்தை - பலர் காயம்
                                        Posted in உலக செய்திகள்

                                        தீயில் எரிந்த சந்தை – பலர் காயம்

                                        தீயில் எரிந்த சந்தை – பலர் காயம்

                                        ஆர்மேனியா Surmalu சந்தை பகுதியில், திடிரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, ஒருவர் பலியாகியுள்ளார் ,மேலு பலர் காயமடைந்துள்ளனர்.

                                        அதிக மக்கள் கூடிய சந்தை பகுதியில் ,இடம் பெற்ற இந்த தீ விபத்தினால், அந்த சந்தை பகுதியில் அமைந்திருந்த கட்டடங்கள் எரிந்து அழிந்துள்ளன.

                                        மேலும், சந்தைக்கு வருகை தந்த மக்களது ,வாகனங்கள் தீயில் சிக்கி எரிந்துள்ளன .

                                        தற்போது சந்தை எரிந்த நிலையில் , சுடு காடாக காட்சியளிக்கிறது .

                                        வியாபாரிகள் தமது உடமைகளை இழந்து கண்ணீரில் தவித்து வருகின்றனர் .
                                        காயமடைந்தவர்கள் யாவரும் ,அருகில் உள்ள மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

                                        சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் ,தீயினை அணைத்த பொழுதும் ,அங்கு பெரும் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளது.

                                        இந்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .