உக்கிரேன் தலைநகரில் வெடித்து சிதறும் ரசியா ஏவுகணை
உக்கிரேன் தலைநகரில் வெடித்து சிதறும் ரசியா ஏவுகணை
உக்கிரேன் தலைநகர் கீவ் பகுதியில் ,ரசியா ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்த வண்ணம் உள்ளன .
கிருமியா பகுதியில் உள்ள, மிக பெரும் பாலத்தை உக்கிரேன், இராணுவம் தாக்கி அழித்த நிலையில் ,புட்டீனின் நேரடி உத்தரவின் பேரில் உக்கிரேன் தலைநகர், கடுமையான ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது .
இந்த ஏவுகணை தாக்குதலில் சிக்கி இதுவரை ,பத்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகியும் , பல டசின் பேர் படு காயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
தலைநகர் கீவ் பகுதியை இலக்கு வைத்து, ரசியா படைகள் தாக்குதல் நடத்துவது ,உக்கிரேன் ஜனாதிபதிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்கிரேன் குளிர் காலத்தில், ரசியாவின் மிக பெரும் திடீர் தாக்குதலுக்கு சிக்கி சீரழியும் நிலை காணப்படுகிறது .
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது

- நெதன்யாகு தனது அமெரிக்கப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இஸ்ரேலுக்குப் புறப்பட்டார்

- ஈரானுடனான உறவை கொலம்பியா முறைப்படி முறித்துக் கொண்டது

- இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரை

- இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் தடை

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியப் படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்

- இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்

- ஈரானின் உச்ச தலைவர் கையெழுத்துக் குறிப்பில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையைப் பாராட்டியுள்ளார்

- லெபனான் நகரில் இஸ்ரேலியத் தாக்குதலால் மின்வெட்டு

லெப் கேணல் குமரப்பா, லெப் கேணல் புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகள் வணக்கநிகழ்வு.
லெப் கேணல் குமரப்பா, லெப் கேணல் புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகள் வணக்கநிகழ்வு.
இலங்கை – இந்திய கூட்டுச்சதியால் பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 35 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
தமிழீழக் கடற்பரப்பில் பயணித்தவேளை சிறிலங்கா கடற்படையால் கைதுசெய்யப்பட்டு பலாலி படைத்தளத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த
இவர்களை கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கு சிறிலங்கா – இந்தியப் படைகள் மேற்கொண்டிருந்த கூட்டுச் சதியினை முறியடிக்க 05.10.1987 அன்று சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
யாழ். மாவட்ட தளபதி
லெப்.கேணல் குமரப்பா
(பாலசுந்தரம் இரத்தினபாலன் – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)
திருமலை மாவட்ட தளபதி
லெப்.கேணல் புலேந்திரன்
(குணநாயகம் தருமராசா – பாலையூற்று, திருகோணமலை.)
மேஜர் அப்துல்லா
(கணபதிப்பிள்ளை நகுலகுமார் – சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.)
கப்டன் பழனி
(பாலசுப்பிரமணியம் யோகேந்திரராசா – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)
கப்டன் கரன்
(வைத்திலிங்கம் மனோகரன் – சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்.)
கப்டன் மிரேஸ்
(தவராஜா மோகனராஜா – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)
கப்டன் நளன்
(கணபதிப்பிளளை குணேந்திரராஜா – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.)
லெப்டினன்ட் அன்பழகன்
(தேசோமயானந்தம் உத்தமசிகாமணி – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)
லெப்டினன்ட் தவக்குமார்
(சோமசுந்தரம் பாக்கியராஜா – முள்ளியான், யாழ்ப்பாணம்.)
2ம் லெப்டினன்ட் ரெஜினோல்ட்
(கபிரியேல் பேனாட் மரியநாயகம் – முள்ளியான், யாழ்ப்பாணம்.)
2ம் லெப்டினன்ட் ஆனந்தகுமார்
(ஞானபிரகாசம் பிரான்சிஸ் அலோசியஸ் – மணற்காடு, யாழ்ப்பாணம்.)
இவர்களுடன் சயனைட் உட்கொண்ட நிலையில் மருத்துவமனைக் கொண்டு செல்லப்பட்டு பண்டுவம் அளிக்கப்பட்ட போது 06.10.1987 அன்று
கப்டன் ரகுவப்பா
(இராஜமாணிக்கம் ரகுமான் – வல்வெட்டிதுறை, யாழ்ப்பாணம்.)
ஆகியோரும் வீரசாவினைத் தழுவிக் கொண்டார்கள்.
இன்று பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரினால் இலண்டன் சட்டன் பகுதியில் நினைவு கூரப்பட்டது .
நிகழ்வின் பொதுச்சுடரினை திருமதி சாமினி கண்ணன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
தமிழீழத் தேசியக் கொடியினை லெப்டினன் கேணல் புலேந்திரன் அவர்களின் மகன் திரு. சீலன் அவர்கள் ஏற்றிவைத்தார் . தொடர்ந்து ஈகைச்சுடரினை திருமதி சுஜி ஆனந்த் ஏற்றி வைத்தார் .
தாயாக விடுதலை போரிலே வீரச்சாவை தழுவி கொண்ட மாவீரர்களையும் மக்களையும் நினைவில் நிறுத்தி அகவணக்கம் செலுத்தபட்டது .
தொடர்ந்து, திருவுருவப்படத்திற்கான மலர்மாலையை சுபாசினி மற்றும் றஜனி அவர்களும் அணிவித்தார்கள்.
லெப் கேணல் குமரப்பா லெப் கேணல் புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகள் வணக்கநிகழ்வு
தொடர்ந்து மக்கள் மலர்வணக்கம் மற்றும் சுடர் வணக்கம் செலுத்தினார்கள் .
இந்நிகழ்வில் எழுச்சி நடனங்கள், நினைவெழுச்சி உரைகளை தொடர்ந்து 2022 ல் எக்செல் ( Exel) மண்டபத்தில் நடைபெற இருக்கும் மாவீரர்நாள் பற்றிய விடயங்கள் மக்களுடன்பகிரப்பட்டு துண்டுப் பிரசுரங்களும் கையளிக்கபட்டது.
நிறைவாகத் தமிழீழ தேசியக்கொடி கையேந்தலுடன்,
தமிழீழம் கிடைக்கும் வரை தொடந்து பயணிப்போம் என்கின்ற உறுதிமொழியோடு நிகழ்வானது நிறைவு பெற்றது.




- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

- வங்காள விரிகுடாவில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக ‘சிவப்பு’ எச்சரிக்கை

- கலு கங்கா துணைப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை

- செப்டம்பரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 100000 ஐத் தாண்டியது

- இலங்கை மத்திய வங்கி இப்படி அறிக்கை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

இலங்கை இராணுவத்தினர் 1500 க்கு மேற்பட்டவர்களுக்கு பதவி உயர்வு
இலங்கை இராணுவத்தினர் 1500 க்கு மேற்பட்டவர்களுக்கு பதவி உயர்வு
இலங்கை இராணுவம் தோற்றம் பெற்று 73 ஆண்டுகள் நிறைவடையும் வேளையில் ,இலங்கை இராணுவத்தின் முக்கிய நிலைகளில் உள்ள 372 அதிகாரிகளுக்கும் ,அதன் கீழ் நிலையில் உள்ள 1,127 இராணுவ சிப்பாய்களுக்கும் பதவி உயர்வு வழங்க பட்டுள்ளது .
இராணுவ தளபதியின் பரிந்துரையினால் ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் ஒப்புதலுடன், இந்த பதவி உயர்வுகள் வழங்க பட்டுள்ளன .
இந்த வருடத்தில் மட்டும் 7.499 பேருக்கு இலங்கை இராணுவம் பதவி உயர்வு வழங்கியுள்ளமை குறிப்பிட தக்கது .
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

வீட்டில் 1 கப் கோதுமை மாவு இருந்தால் போதும் பஞ்சு போல் சாப்டன அப்பம் சுடலாம்
வீட்டில் 1 கப் கோதுமை மாவு இருந்தால் போதும் பஞ்சு போல் சாப்டன அப்பம் சுடலாம் .
கோதுமை மாவில் அப்பம் செய்வது எப்படி ? செய்முறை ஒன்று
கோதுமை மாவு அப்பம் செய்வதற்கு ஒரு கப் அளவு கோதுமை மாவு சட்டியில் எடுத்து கொள்ளுங்கள் .
அதன் பின்னர் அடுப்பில கடயா வைத்து, அதில அரை கப்பல் அளவு வெள்ளம் ( சர்க்கரை ) சேர்த்து,அது கூட அரை கப் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்க .
தமிழ் சமையல்
மெல்லிய நெருப்பில் வைத்து ,அதனை நன்றாக சூடாக்கி கொள்ளுங்க .நன்றாக தண்ணி போல வெள்ளம் சூடானதும் ,வடிகட்டி எடுத்து வைத்த மாவில் ஊற்றி கலந்து கொள்ளுங்க .
வீட்டில் 1 கப் கோதுமை மாவு இருந்தால் போதும் பஞ்சு போல் சாப்டன அப்பம் சுடலாம்
அதன் பின்னர் அரை கப் அளவு தண்ணீர் விட்டு ,தோசை மாவு போல இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளுங்க .
இப்போ அரைக்கால் கரண்டி ஏலக்காய் சேர்த்து கொள்ளுங்க .அதே அளவு சமையல் சோடா சேர்த்து கொள்ளுங்க .
இப்போ அப்பத்திற்கு ஏற்ப மாவு ரெடியாடிச்சு .இனி கோதுமை மாவில் தயாரான அப்பம் பொரித்து எடுக்க வேண்டியது தாங்க .
செய்முறை இரண்டு
இப்போ அடுப்பில கடைய வைத்து ,தயாரான கோதுமை மாவு அப்ப மாவை
எண்ணையில், குழி கரண்டியில எடுத்து சுட்டு எடுத்து கொள்ளுங்க .
அப்ப மா ஒன்றுடன் ஒன்று ,முட்டி கொள்ளாத அளவுக்கு ,மாவை வேக வைத்து எடுத்து கொள்ளுங்க .
இப்போ கோதுமை மாவிலை தயாரான அப்பம் ,நன்றாக பஞ்சு போல பொரிந்து வந்திருக்கு .
இப்போ இனிப்பு கோதுமை மாவு அப்பம் தயாராகிடிச்சு .
அப்புறம் என்னங்க, ஒரு டீ கூட இதை சேர்த்து ,சாப்பிட்டு அசத்துங்க .
மிகவும் இலகுவான முறையில் ,சுலபமான கோதுமை மாவு அப்பம் ரெடியாகிடிச்சு .
இதுபோல இலகுவான முறையில ,நேரத்தை மீத படுத்தி செய்து கொள்ளும் இனிப்பு அப்பம் ,இது போல செய்து சாப்பிடுங்க மக்களே .
இட்லி தோசைக்கு பதிலாக இப்படி சுவையாக செஞ்சு அசத்துங்க
இட்லி தோசைக்கு பதிலாக இப்படி சுவையாக செஞ்சு அசத்துங்க
தினமும் இட்லி தோசை சாப்பிட்டு போர் அடிகுதா,அப்படின்னா இதோ இப்படி சுவையாக செஞ்சு அசத்துங்க .
மிக இலகுவான தரமான ,மிக சுவையான சமையல் .
பிள்ளைங்க முதல் வயதானவர்கள் வரை ,மிகவும் விரும்பி உண்ணும் உணவு .
அப்புறம் என்ன குஷி தாங்க .
இட்லி தோசைக்கு பதிலாக சுவையான டிபன் செய்முறை ஒன்று
தமிழ் சமையல்
மிக்சிங் போல் ஒன்றில் ஒரு கப் கோதுமை மாவு ,அரை கரண்டி உப்பு ,அரை கரண்டி மஞ்சள் ,அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல நன்றாக பிசைந்து மாவு எடுங்க .இப்போ மாவு ரெடியாடிச்சு
செய்முறை இரண்டு
இப்போ அவிய வைத்து தோல் உரித்த உருளைக்கிழங்கு, நன்றாக கட்டி இல்லாம மசிய வைத்து எடுங்க .
கூடவே ஒரு பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது சேர்த்து கொள்ளுங்க .
இட்லி தோசைக்கு பதிலாக இப்படி சுவையாக செஞ்சு அசத்துங்க
அப்புறம் மூன்று பச்சை மிளகாய் ,கூடவே பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ,கருவேப்பிலை கொஞ்சம் ,அரை கரண்டி இஞ்சி பூண்டு ,தேவையான அளவு உப்பு ,அரை கரண்டி சாட்மசாலா சேர்த்து கலக்கி விடுங்க .
அதன் பின்னர் காரம் மசாலா ,மஞ்சள் தூள் சேர்த்து, மசாலா தொக்கு செய்து கொள்ளுங்க .இப்போ இதுவும் ரெடியாடிச்சு .
செய்முறை மூன்று
சப்பாத்தி மாவை சப்பாத்தி போல தேய்த்து எடுத்து கொள்ளுங்க .இப்பபோ சப்பாத்தி மாவுக்கு நடுவில செய்து வைத்த சாட்பிங் மசாலாவை ரோல் போல சுற்றி எடுங்க .
இப்போ கத்தி வைத்து இரண்டு இஞ்சி அளவு துண்டுகளாக வெட்டி கொள்ளுங்க .
துண்டுகளாக வெட்டியதை அப்படியே தட்டை போல தட்டி எடுங்க .இப்போ இவற்றை எண்ணையில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளுங்க .
இப்போ செம்மையான டிபன் சுட சுட ரெடியாகிடிச்சு .
இட்டலி தோசைக்கு பதிலாக, சைடீஸ் இல்லாம சாப்பிடலாம் .
குழந்தைகள் எல்லாருமே நனறாக விரும்பி சாப்பிடுவாங்க .
இதுபோலவே நீங்களும் செஞ்சு அசத்துங்க மக்களே.
ஒன்பது பேரை கொன்ற புலி சுட்டு கொலை
ஒன்பது பேரை கொன்ற புலி சுட்டு கொலை
இந்தியா பிகார் மாநிலத்தில் ஒன்பது பேரை கொன்று திணற புலியை போலீசார் சுட்டு கொன்றுள்ளனர் .
மக்களினால் வழங்க பட்ட தகவல்களுக்கு அமைய, இருநூறு காவல்துறையினர் ,தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர் .
இதன் பொழுது காட்டுக்குள் பதுங்கி இருந்த ,புலி சுட்டு கொலை செய்ய பட்டுள்ளது .
இந்த புலி கொலை செய்யப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது

- நெதன்யாகு தனது அமெரிக்கப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இஸ்ரேலுக்குப் புறப்பட்டார்

- ஈரானுடனான உறவை கொலம்பியா முறைப்படி முறித்துக் கொண்டது

- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

மக்களை தாக்கிய பொலிஸ் அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை
மக்களை தாக்கிய பொலிஸ் அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை
அரசாங்கத்துக்கு எதிரானப் போராட்டங்களில் உயிரிழந்தவர்களை காலிமுகத்திடலில் அமைதியான முறையில் நினைவுக்கூர
முயற்சித்தவர்களிடம் பொலிஸார் நேற்று (09) மோசமாக நடந்துகொண்ட சம்பவம் தொடர்பில் இலங்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் பொலிஸாருக்கு எதிராக இந்த முறைப்பாட்டை செய்துள்ளது.
மக்களை தாக்கிய பொலிஸ் அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை
பிள்ளைகளுடன் காலிமுகத்திடலில் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தவர்களிடம் பொலிஸார் கடுமையாக
நடந்துக்கொண்டு அவர்களது மனித உரிமைகளை மீறியுள்ளதாகவும் அச்சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.
மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட உயர்
அதிகாரிகள் தொடர்பில் தகவல்களை வழங்க வேண்டுமென
பொதுமக்களிடம் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள்
சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

பாரிய விபத்து ஒருவர் மரணம் 6 பேர் காயம்
பாரிய விபத்து ஒருவர் மரணம் 6 பேர் காயம்
இலங்கை அத்துருகிரிய வெளிப்பகுதியில் அமைக்க பட்ட அதிவேக சுற்றுவட்ட பகுதியில் கார் ஒன்று மோதி விபத்தில் சிக்கியது .
இதன் பொழுது ஒருவர் மரணமாகியும் ,ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
இலங்கையில் நாள் தோறும் விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

யாழ் மீனவர்கள் வலையில் சிக்கிய சுறா மகிழ்ச்சியில் மீனவர்கள்
யாழ் மீனவர்கள் வலையில் சிக்கிய சுறா மகிழ்ச்சியில் மீனவர்கள்
யாழ்ப்பாண பருத்துறை மீனவர்கள் வலையில் 14 சுறா மீன்கள் சிக்கியுள்ளன .
இவை யாவும் 2000 கிலோவுக்கு அதிகமானவை என தெரிவிக்க படுகிறது .
இதன் இன்றைய இலங்கை மதிப்பு 19 லட்சம் என தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த மீன்கள் கொழும்புக்கு கூலர் வாகனங்கள் மூலம் ஏற்றுமதி செய்ய பட்டுள்ளது என்கின்றனர் மீனவர்கள் .
இந்த பெரிய சுறா மீன்கள் சிக்கிய நிலையில் பருத்துறை மீனவர்கள் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர்.
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

தெரிவுக் குழு தீர்மானம் எடுக்காவிட்டால் சர்வசன வாக்கெடுப்பொன்று நடத்தப்படுமாம்
தெரிவுக் குழு தீர்மானம் எடுக்காவிட்டால் சர்வசன வாக்கெடுப்பொன்று நடத்தப்படுமாம்
பாராளுமன்றத் தேர்தல் முறை தொடர்பிலான தெரிவுக்குழுவொன்றை முன்மொழிவதாகவும், அந்த தெரிவுக்குழு, அடுத்த வருடம் ஜூலை மாதத்திற்குள் தீர்மானம் எடுக்காவிட்டால், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் தொழில் நிபுணர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
• தேர்தல் முறையில் பல திருத்தங்கள்
• உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8000 இலிருந்து 4000 ஆகக் குறைப்பதற்கு நடவடிக்கை
• தேர்தல்களுக்கு செலவிடப்படும் நிதி தொடர்பில் வரையறை
• அரசியல் கட்சி விதிகள் தொடர்பில் கவனம்
• உறுப்பினர்களின் நடத்தை மற்றும் நெறிமுறைகள் தொடர்பில் புதிய விதிகள் பாராளுமன்றத்தில் முன்வைப்பு
• அரசியல் கட்சிகள், போராட்டத்தின் பக்கம் சாய்ந்தாலும், போராட்டம், அரசியல் கட்சிகளின் பக்கம் சாயவில்லை.
-ஜனாதிபதி தெரிவிப்பு.
தெரிவுக் குழு தீர்மானம் எடுக்காவிட்டால் சர்வசன வாக்கெடுப்பொன்று நடத்தப்படுமாம்
நாட்டில் பெரும்பான்மையான மக்கள் தற்போதுள்ள அரசியல் முறை மையினை நிராகரிப்பதால், அவர்கள் விரும்பிய அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.
அதன்படி, அடுத்த தேர்தலுக்கு முன், உள்ளூராட்சி மன்றங்களுக்கான (பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகள்) உறுப்பினர்களின் எண்ணிக்கை 8000 இலிருந்து 4000 வரை குறைக்கப்படும் என்றும் “மக்கள் சபை” வேலைத்திட்டமும்
அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிரதேச சபையின் நிறைவேற்று அதிகாரம் தவிசாளர் என்ற ஒற்றைத்
தலைவருக்குச் செல்வதற்குப் பதிலாக தவிசாளர் தலைமையிலான குழுவுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், அடுத்த பிரதேச சபைத் தேர்தலுக்கு முன்னர் இந்தத் திருத்தங்களைச் செய்வதற்கு சட்ட வரைவு தயாரிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அரசியலில் ஊழல் தலைதூக்க முக்கிய காரணம் விருப்பு வாக்கு முறையே என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உடனடியாக விருப்பு வாக்கு முறையற்ற பட்டியல் முறை அல்லது கலப்பு முறை ஒன்றை (ஒற்றை மற்றும் விகிதாசார முறை) கொண்ட தேர்தல்
முறைமைக்கு செல்ல வேண்டும் எனவும் தேர்தலில் செலவிடப்படும் நிதிக்கும் தேர்தல் சட்டம் மூலம் வரையறைகள் இடப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தெரிவுக் குழு தீர்மானம் எடுக்காவிட்டால் சர்வசன வாக்கெடுப்பொன்று நடத்தப்படுமாம்
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்,
இன்று இந்த நாட்டில் இரண்டு பிரதான பிரச்சினைகள் உள்ளன.
ஒன்று பொருளாதாரத்தின் வீழ்ச்சி. இரண்டாவது, நாட்டின் பெரும்பான்மையான மக்களால் இந்த நாட்டின் அரசியல் முறைமை நிராகரிக்கப்பட்டுள்ளமை ஆகும். இந்தப் பொருளாதாரச் சரிவு அரசியல் முறைமையினால் ஏற்பட்டது என்று பலர் கூறுகின்றனர்.
பொருளாதாரத்திற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாம் கதைத்துள்ளோம். ஆனால் அரசியல் வேலைத்திட்டத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
இன்று எமது நாட்டின் பெரும்பான்மையான மக்கள் நாட்டின் அரசியல் முறைமை தொடர்பில் கேள்வி எழுப்புகின்றனர்
. பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களையும் தியவன்னா ஆற்றில் தள்ள வேண்டும் என்று கூறுகின்றனர்.
அவ்வாறு தனி நபர்கள் கூறவில்லை. அரசியல் முறைமையை அவர்கள் ஏற்காததால் தான் அவ்வாறு கூறுகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் இந்தப் போராட்டங்களை அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கவில்லை. அரசியல் கட்சிகளின் போராட்டங்களுக்கு மக்கள் வரவில்லை.
மக்கள் தனித்தனியாக முன் வந்தனர். துரதிர்ஷ்டவசமாக, மே மற்றும் ஜூன் மாதங்களில், ஒவ்வொரு அரசியல் அமைப்பும் இந்த எதிர்ப்பு இயக்கத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டன.
அதனுடன் வன்முறையும் வெடித்தது. வன்முறையின் மூலம் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி இடம்பெற்றது .
அதனால் அன்றைய போராட்டம் வீழ்ச்சி அடைந்தது.
இந்த அரசியல் முறைமை மாற்றப்பட வேண்டும் என்று மக்கள் தற்போதும் கூறுகின்றனர். வன்முறையை யாரும் விரும்புவதில்லை.
இதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த மனோபாவத்தை மாற்றிக்கொண்டே நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
கட்சி முறைமையினால் பாராளுமன்றத்தில் இன்று பல்வேறு குழுக்கள் உருவாகியுள்ளன. நான் ஜனாதிபதியாவதற்கு ஆளுங்கட்சியின் ஆதரவைப் பெற்றேன். இது ஒரு இரகசியம் அல்ல.
சிறு பகுதியினர் மற்ற வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர். மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் எனக்கு வாக்களித்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் கட்சிகளின் உறுப்பினர்களும் எனக்கு வாக்களித்தனர். அதனால் எனக்கு இரு தரப்பிலும் வாக்குகள் கிடைத்தன.
குறுகிய கட்சி பேதமின்றி மக்கள் நலனுக்காக நான் பணியாற்றுகிறேன். தற்போது எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்க, பாராளுமன்றத்தில் தேசிய சபையொன்று அமைக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்புக் குழுக்கள் போன்ற குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இவைகளை நிறைவு செய்ய முடியவில்லை.
சிலர் தேசிய சபையில் இணைந்துள்ளார்கள் சிலர் வருவதில்லை. அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என்றே நாடு எதிர்பார்க்கிறது. நாம் இத்தோடு நின்றுவிடக் கூடாது.
மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை சிந்தித்து அதன்படி செயல்பட வேண்டும். கிராம மட்ட அரசியலால் மக்கள் சலிப்படைந்து விட்டதால் இன்று புதிய கருத்தை ஏற்றுக் கொள்கிறோம். அது அரசாங்கமல்ல, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, மக்கள் சபை முறையை முன்வைத்துள்ளார்.
ஒவ்வொரு தொகுதியிலும், அந்த கிராமத்தில் உள்ள பொது அமைப்புகளை ஒருங்கிணைத்து, ஒரு குழுவாக பணிகளை செய்ய வேண்டும்.
அதுதான் மக்கள் சபை ஆகும். அந்த முறை நல்லது. இந்த அமைப்பு முன்பு கிராமோதய சபை என்ற பெயரில் இருந்தது.
அது அரசாங்கத்துடன் தொடர்புடையதொன்று, இது அரசாங்கத்துடன் தொடர்புடையது அல்ல. இந்த மக்கள் சபைத் திட்டத்தை செயல்படுத்த எதிர்பார்க்கிறோம்.
மக்கள் சபைகள் இயங்கும் போது பிரதேச சபைகளுடன் ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும். மக்கள் சபைகளை அகற்ற பிரதேச சபைகளுக்கு அனுமதி இல்லை.
நாம் எப்படி இணைந்து செயல்பட வேண்டும் என்பதைத் திட்டமிட வேண்டும். பிரதேச சபை முறைமை தொடர்பில் பல கேள்விகள் உள்ளன. பல பிரதேச சபைகள் இலாபம் கூட பெறுவதில்லை. வரிப்பணத்தை நம்பி இருக்கிறார்கள்.
பணம் பெறும் நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகள் சம்பளம் வழங்குவதற்கு அப்பணத்தை பயன்படுத்துகின்றன. எனவே இந்த முறையைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
ஆனால் கடந்த முறை நான்காயிரம், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், எட்டாயிரமாக அதிகரிக்கப்பட்டனர். நாடு அவ்வாறு கேட்கவில்லை.
கட்சித் தலைவர்கள் ஒன்று கூடி இந்த பணியை செய்தார்கள். எனவே, அடுத்த தேர்தலுக்கு முன்னர் எட்டாயிரத்தை நான்காயிரமாக குறைக்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் அந்தச் சட்டங்களைத் திருத்துவோம். இந்த திட்டத்தை அங்கிருந்து ஆரம்பிக்கலாம். மேலும் மற்றொரு அவசர திருத்தம் உள்ளது. இந்தப் பிரதேச சபைகளின் நிறைவேற்றுத் தலைவர்களாக தவிசாளர்கள் உள்ளனர்.
இதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். பிரதேச சபை முறைக்கு முன்னர், நகர சபைகள் மற்றும் கிராம சபைகள் இருந்தபோது அத்தகைய அதிகாரம் இருக்கவில்லை. எனவே பிரதேச சபைகளின் நிறைவேற்று அதிகாரத்தை நிறைவேற்றுக் குழுவிற்கு வழங்குவோம் .
அதன் தலைவர் தான் பிரதேச சபையின் தவிசாளர். இப்போது நிதிக் குழுக்கள் உள்ளன. அவ்வாறான ஒரு நிறைவேற்றுக் குழுவை உருவாக்குவோம்.
அடுத்த பிரதேச சபைத் தேர்தலுக்கு முன்னர் இந்த இரண்டு விடயங்களையும் நிறைவேற்ற வேண்டும். அதற்குத் தேவையான சட்ட வரைவை தயார் செய்யுமாறு அமைச்சர்களுக்கு அறிவித்துள்ளோம்.
மேலும் விருப்பு வாக்கு முறையை பலர் விரும்புவதில்லை. விருப்பு வாக்கு முறைமை பற்றி யாரும் முதலில் சிந்திக்கவில்லை. ஜே.ஆர்.ஜயவர்தன அவர்கள் மிக ஆழமாக சிந்தித்து 1975 இல் பட்டியல் முறையை முன்மொழிந்தார்.அது ஏனைய கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது .
அதன்படி நாம் நகர சபைத் தேர்தலை நடத்தினோம். மாநகர சபைத் தேர்தல் நடந்தது. மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல் நடைபெற்றது.
அந்த முறைமையை வெற்றிகரமாக நாம் முன்னெடுத்துச் சென்றோம்.
ஆனால் 1988 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் இருந்த கட்சிகள் திடீரென பட்டியல் முறைக்குப் பதிலாக விருப்பு வாக்கு முறையைக் கொண்டு வர முடிவு செய்தன.
ஒரு விருப்பு வாக்கு அல்ல, 03 விருப்பு வாக்குளை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டது. அதேபோல், 196 ஆக இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 225 ஆக அதிகரித்தனர்.
இந்நாட்டு அரசியலில் ஊழல் மோசடிகளுக்கு முக்கிய காரணம் விருப்பு வாக்கு முறையே ஆகும். எனவே நாம் புதிய தேர்தல் முறையொன்றைத் தயார் செய்ய வேண்டும்.
விருப்பு வாக்கு முறை இல்லாத பட்டியல் முறை அல்லது கலப்பு முறை (ஒற்றை மற்றும் விகித முறை) இவ்விரண்டில் ஒன்று பற்றி கலந்துரையாடிய பின்னர் ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும்.
எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் தீர்மானம் எடுத்து புதிய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும்.
அப்போது பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இன்று கட்சிகளிடையே உடன்பாடு இல்லை. பிரதான கட்சிகளுக்கு ஒன்று கூறுகின்றனர், சிறிய கட்சிகளுக்கு ஒன்றை கூறுகின்றனர்.
இப்படி முன்னோக்கிச் செல்ல முடியாது. அரசியல் கட்சிகள் இது தொடர்பில் தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
நான் நீதி அமைச்சருடனும் கலந்துரையாடினேன். நாம் பாராளுமன்றத் தேர்தல் முறைமை தொடர்பில் தீர்மானிப்பதற்கு தெரிவுக்குழுவொன்றை முன்மொழிய இருக்கிறோம். இதை தள்ளிப் போட முடியாது.
ஏனெனில் ஜூன் அல்லது ஜூலை மாதத்துக்குள் தீர்மானமெடுக்க முடியாவிட்டால், நான் எந்த முறை சிறந்தது என்று மக்களின் கருத்துகளைப் பெற சர்வசன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவேன்.
இதுபற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தப்படும். அந்த முறை குறித்து பேசப்பட்டு வருகிறது.
கலந்துரையாடி பொருத்தமான ஒரு முறை தெரிவு செய்யப்படும்.
எனவே பாராளுமன்றத்தின் தெரிவுக் குழு அது தொடர்பான செயற்பாடுகளை நிறைவு செய்ய வேண்டும். இல்லையென்றால் நான் இது தொடர்பான பொறுப்பை மக்கள் முன்னிலையில் விட்டுவிடுவேன்.
நாம் இதிலிருந்து விலகிச் செல்ல முடியாது. நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
இன்று தேர்தலுக்காக அதிக பணம் செலவிடப்படுகிறது. நான் 77 இல் பழைய முறையில் தான் தேர்தலில் போட்டியிட்டேன்.
அப்போது செலவு கட்டுப்படுத்தப்பட்டது. இன்று, சிலர் தேர்தலுக்காக 20-30, 50 மில்லியன் செலவிடுகின்றனர்.
இவற்றை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது? இந்த தேர்தல் முறையால் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடைபட்டுள்ளனர். அப்படியானால், தேர்தல் சட்டத்தின் மூலம் தேர்தலுக்குச் செலவழிக்கக்கூடிய பணத்திற்கு வரையறைகள் வேண்டும்.
77 இல் தேர்தலில் நான் போட்டியிட்ட போது அந்த வரையறைகள் இருந்தன. அப்படித்தான் எமக்கு பணியாற்ற வேண்டியிருந்தது. போஸ்டர் ஒட்ட முடியவில்லை.
அப்படியானால், தேர்தலில் செலவிடப்படும் பணத்துக்குக் கட்டுப்பாடுகள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மற்றுமொறு விடயமும் இருக்கிறது.இன்று நமது அரசியல் கட்சிகளில் இளைஞர்கள் இல்லை. பலர் பழையவர்களுடன் பெயரளவில் வேலை செய்கிறார்கள்.
அப்படியானால், அரசியல் கட்சிகளின் யாப்பு, அவற்றின் செயல்பாடு, உறுப்பினர்களை சேர்ப்பது எப்படி, மத்திய குழுக்களைத் தேர்ந்தெடுப்பது, எப்படி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது என்று விடயங்கள் குறித்தும் தனியான சட்டம் முன்வைக்கப்பட வேண்டும்.
தற்போது ஜெர்மனி போன்ற நாடுகளில் அரசியல் கட்சி சட்டம் என்று சட்டங்கள் உள்ளன. அதன்படி செயல்பட வேண்டும். நிதி வசூலிப்பது எப்படி, நிதி வசூலிக்க முடியாத சந்தர்ப்பங்கள் என்ன என்பதற்கான விதிகள் உள்ளன.
அப்போதுதான் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட முடியும். அதற்கு எதிராக யார் வேண்டுமானாலும் நீதிமன்றம் செல்லலாம்.
வெளிப்படைத்தன்மை இருப்பதால், தேர்தல் செலவுகளுக்கு கட்டுப்பாடுகள் இருப்பதால் அந்த நாட்டு பாராளுமன்றம், அரசியல் கட்சிகளுக்கு பணம் கொடுக்கின்றன. தேர்தலுக்கும் பணம் வழங்கப்படுகிறது.
தனியார் நிறுவனங்களில் இருந்து பெறாமல் பாராளுமன்றத்தினால் பணம் கொடுப்பது நல்லது. அவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்காவிலும் இந்த முறை உள்ளது. அப்படியானால், இந்தச் சட்டங்களை நாமும் கொண்டு வர வேண்டும். அதுபற்றி ஆலோசனைகளை வழங்க தனியான ஆணைக்குழு ஒன்றை நியமிக்க எதிர்பார்க்கிறேன்.
இவை அனைத்தும் அடுத்த வருடத்துக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஒரு புதிய பொருளாதாரத்துடன், ஒரு புதிய அணுகுமுறை இருக்க வேண்டும். மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகச் செயல்பட முடியாது என சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.
அவர்கள் ஒழுக்கத்தை மீறியிருந்தால் உறுப்பினர்களுக்கு எதிராகச் செயல்பட முடியும். இதை எப்படியாவது வலுப்படுத்துவதற்காக பிரித்தானிய பாராளுமன்றத்தில் செய்வது போல், உறுப்பினர்களின் நடத்தை மற்றும் நெறிமுறைகள் குறித்த விதிகளை பாராளுமன்றத்தில் முன்வைப்பேன்.
அதற்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும். இங்கிலாந்தில், Parliamentary Standard Act சட்டம் உள்ளது, அவ்வாறு செயல்படவில்லை என்றால், அது குறித்து அறிவிக்கப்படும்.
அப்படித் அறிவிக்கும் போது மக்கள் ஆணை காரணமாக வெளியேற்றப்படுவார்கள். வேறு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
அண்மையில் கூட ஒருவர் விவாதத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்த விதிகள், கட்டுப்பாடுகள் அனைத்தையும் கொண்டு வந்து இந்த திருத்தங்களைச் மேற்கொண்டால் மக்களின் நம்பிக்கையைப் பெறலாம். அப்போது அடுத்த தேர்தலில் பலர் வாக்களிப்பார்கள்.
85% ஆனோர் வாக்களிக்க வேண்டும்.
மனப்பாங்கு ரீதியான மாற்றம் ஏற்பட வேண்டும். இன்னும் ஊர்வலம் செல்வதால் எந்தப் பயனும் இல்லை. இப்போது என்ன நடந்திருக்கிறது என்றால் அரசியல் கட்சிகள் தமக்கு ஆதரவைப் பெறுவதற்காக போராட்டத்தின் பக்கம் சாய்ந்துள்ளன.
போராட்டம் அரசியல் கட்சிகளில் சார்ந்து இல்லை. மக்களின் அபிப்பிராயங்களுக்கு ஏற்ப விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கொண்டுவந்து பாராளுமன்றத்திற்கு மக்கள் விரும்புபவர்களை நியமிக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும். இந்த வேலையைத்தான் எதிர்காலத்தில் நாம் செய்ய வேண்டும்.
இந்நிகழ்வில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, சிரேஷ்ட உப தவிசாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அகில விராஜ் காரியவசம், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, முன்னாள் அமைச்சர்
ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுனில் சாந்த மற்றும் சட்டத்தரணிகள், விசேட வைத்திய
நிபுணர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள்,
பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் உள்ளிட்ட நிபுணர்கள் பலர் கலந்துகொண்டனர்.
3 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு
3 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு
3 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதே இலக்கு
இந்த ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 41 ஆயிரத்து 34 ஐ கடந்துள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டு 3 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதே பணியகம் எதிர்பார்த்துள்ளது.
நாட்டில் வருடாந்தம் வெளிநாட்டு வேலைகளுக்காக செல்வோரின் எண்ணிக்கை பொதுவாக இரண்டு இலட்சத்து எண்பதாயிரத்திற்கும் மூன்று
3 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு
இலட்சத்திற்கும் இடைப்பட்டதாக காணப்படும். மத்திய வங்கியின் அறிக்கையின்படி,
2014ஆம் ஆண்டு அதிகளவானவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். இதன் எண்ணிக்கை 3 லட்சத்து 703 ஆகும்.
2016ஆம் ஆண்டு முதல், வெளிநாட்டு வேலைகளுக்கான செல்வோரின் எண்ணிக்கை படிப்படையாக குறைவடைந்த நிலையில் 2020ஆம் ஆண்டில், கொவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு,
குறித்த எண்ணிக்கை 53 ஆயிரத்து 711 ஆக குறைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

தமிழக மீனவர்கள் படகுகளை கல் வீசி உடைத்த சிங்கள கடற்படை
தமிழக மீனவர்கள் படகுகளை கல் வீசி உடைத்த சிங்கள கடற்படை
இந்தியா கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வர மீனவர்கள் படகுகள் மீது ,இலங்கை சிங்கள கடல் படையினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர் ,
சில மீனவர்கள் படகுகள் மீது ,தமதகு கடல் பாடி கப்பல்களை மோதி செத்த பாடசுத்தியுள்ளனர் .
சிங்கள கடற்படையினர் அத்துமீறிய செயலினால் ,மீன்படியே கைவிட்டு கரை திரும்பினார் .
தொடரு சிங்கள இராணுவத்தின் கெடுபிடியால் தமிழக மீனவர்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்.
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

நயன்தாராவுக்கு இரட்டை குழந்தை பிறந்தது ஐந்து மாத்தில் சாதனை
நயன்தாராவுக்கு இரட்டை குழந்தை பிறந்தது ஐந்து மாத்தில் சாதனை
பிரபல நடிகை நயன்தாராவுக்கு இரட்டைகுழந்தை பிறந்துள்ளது என விக்கின்ஸ் சிவன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார் .
நயன்தாரா விக்கினேஸ் சிவனுக்கு திருமணமாகி ஐந்து மாதங்கள் ஆகும் வேளையில் ,இந்த குழந்தை பிறந்துள்ளது ,ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
ஐந்து மாத்திற்கு சினிமா நடிகைகளுக்கு குழந்தை, பிறக்குமா என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பிய வண்ணம் உள்ளனர் .
ஏதோ ஒண்ணு நடக்குது பார்த்து சிரிச்சிகிட்டு போக வேண்டியது தான் , என்கின்ற சீமான் டயலாக் நினைவுக்கு வருகிறது .
கறிவேப்பிலை சட்னி இப்படி செய்து சாப்பிடுங்க செம சுவையாக இருக்கும்
கறிவேப்பிலை சட்னி இப்படி செய்து சாப்பிடுங்க செம சுவையாக இருக்கும்
கறிவேப்பிலை சட்னி வீட்டில இப்படி செய்து சாப்பிடுங்க, செம சுவையாக இருக்கும் .
இந்த கறிவேப்பிலை கார சட்னி சாதம் ,மற்றும் இட்லி தோசை கூட சாப்பிட ரெம்ப சுவையாக இருக்கும் .
அப்படி சுவையான கார கறிவிப்பிலை சட்னி ,எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க .
கறிவேப்பிலை கார சட்னி செய்வது எப்படி செய்முறை ஒன்று
அடுப்பில கடாயா வைத்து ,அதில கொஞ்சம் எண்ணெய் விட்டு ,அந்த எண்ணெய் சூடானதும் ,ஒரு கரண்டி உளுத்தம் பருப்பு ,ஏழு சின்ன வெங்காயம் ,போட்டு நன்றாக வதக்கி வாங்க .
வதங்கி வந்த பின்னர், காரத்திற்கு ஏற்ப வாறு மிளகாய் ,அப்புறம் ஒன்றரை கப்பு வேர்க்கடலை ,கூடவே புளி,ஒரு கப் அளவு துருவிய தேங்காய் ,தேவையான கருவேப்பிலை சேர்த்து வதக்கி வாங்க .
வதக்கியதை இறக்கி ஆற வைத்த பின்னர், மிக்சியில உப்பு சேர்த்து சேர்த்து அரைத்திடுங்க .
மிக சுலபமான கருவேப்பிலை கார சட்னி ரெடியாடிச்சு .
இந்த கருவேப்பிலை சட்னியில் ,அயன் சத்து கூட இருக்கு ,இவை கண்களுக்கு மற்றும் உடலுக்கு மிக அவசியமானது .
வாரத்தில இரண்டு முறை இந்த கருவேப்பிலை சட்னி செய்து சாப்பிட்டு வாங்க .மக்களே உடல் ஆரோக்கியமாக விளங்கும் .
பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி
பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி
பங்கு சந்தையில் இலகுவாக பணம் சம்பாதிப்பது எப்படி என்கின்ற உங்கள் கேள்விகளுக்கு, இந்த ,பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி என்கின்ற பகுதியில் விளக்குகிறோம் .
வீட்டில் இருந்த படியே ஆன்லைன் மூலம் பங்கு சந்தையில் ,பணம் சம்பாதிப்பது இலகுவான ஒன்று தான் .
அதற்கு பங்கு சந்தை அடிப்படை விதிகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் .
எந்த பங்குகளை, எவ்வாறு தெரிவு செய்வது என்பதையும் , பங்குகள் இழப்பின்றி அச்சம் இன்றி வாங்கி விற்க முடியும் என்பது தொடர்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும் .
அவற்றை கற்று கொண்டால், பங்கு சந்தையில் இலகுவாக பணத்தை சம்பாதிக்க முடியும் .
பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி
பங்கு சந்தையில் சேர்வது எப்படி ..?
உலக பங்கு சந்தையில் சேர்வதற்கு ,நாம் ஆபத்து இல்லாத நம்பிக்கையான புரோக்கரை நாட வேண்டும் .
அவ்வாறு தெரிவு செய்திடும் போர்ஸ் புறக்கோரில் ,லெவெரெச் .ஸ்ப்ரெட் எவை என்பதை கண்டு கொள்ள வேண்டும் .
லெவர்ச் எனறால் என்ன ..? லெவர்ச் என்பது உதாரணத்திற்கு 100 டொலர் முதலீடு செய்தல் தங்கம் வாங்கி கொள்ள முற் படுகிண்றீர்கள் என வைத்து கொள்வோம் .
அந்த தங்கத்தை 0.01 மட்டுமே உங்கள் அந்த நூறு டாலரில் இருந்து ரேட் பண்ண அனுமதிப்பார்கள் .
இவ்வாறு கூடுதலாக எமக்கு வழங்கினால் அதவாது 1.500 என்கின்ற விகிதத்தில் காணப்பட்டால் அது நமக்கு பயன் மிக்கது ஆகும் .
அத்துடன் பேபால் ,வங்கிகள் ஊடாக பணத்தினை மீள பெறுவதற்கும் ,உள் செலுத்துவதற்கும்,கூலி கட்டணங்கள் இல்லாத இலவசமான சேவையாக உள்ளதை காண வேண்டும் .
அவ்வாறான புரோக்கர் தெரிவு செய்து கொள்வது சால சிறந்தது .
பங்கு சந்தையில் பணம் சம்பாதிக்க முடியுமா ..?
உலக பங்கு சந்தையில் ஆன்லைன் மூலம் பணத்தை சம்பாதிக்க முடியும் என்றால் ,நமது பதில் ,ஆம் என்றே அடித்து கூறுவோம் .
பங்குகள் வாங்கி விற்கும் அடிப்படை விதிகள் ,கணிப்புக்கள் தெரிந்தால் மிக இலகுவான ஒன்றே இந்த பங்கு சந்தை வர்த்தகம் .
பங்கு வர்த்தகத்தின் ஊடாக ,அதிக லாபத்தை பெற்று கொள்ள முடியும் ,தவிர ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகவும் முடியும் .அதே வேளையில் ஒரே நாளில் பிச்சை காரராக மாறிடவும் முடியும் .
சந்தை பங்கு விதிகளை தெரிந்து அதற்கு ஏற்ப ,ரேட் செய்தால் அதிக பணம் பங்கு சந்தையில் சம்பாதிக்கலாம் .
பங்கு சந்தை இலவச பயிற்சி ….
இழப்பு இன்றி பணத்தை சம்பாதிக்க , பணம் இலவ பயிற்சிகளை வழங்குகிறோம் .
அல்லது நீங்கள் இலகுவாக பயிற்சிகளை பெற்று கொண்டு, அதன் பின்னர் ரியல் மார்க்கட்டில் ,பணத்தை முதலீடு செய்து பங்கு சந்தையில் பணத்தை சம்பாதித்து கொள்ளுங்கள் .
பங்கு சந்தை பயிற்சி இலகுவாக கற்று கொள்ள, பணம் முக்கிய சில டிப்ஸ் வழங்கி இருக்கிறோம் .
எமது YOUTUBE சனலில் சென்று பார்த்து கொள்ளுங்கள் .
எந்த சாட்டை மைய படுத்தி நகர வேண்டும் என்கின்ற கணக்கு முதல் RSI வரை முக்கிய மூல வகுப்புக்கள் வழங்கி உள்ளோம் .
பங்கு சந்தை பயிற்சியில், பங்கு சந்தை விதிகளை கற்று கொண்டு செயல்பாட்டால் ,பங்கு சந்தையில் பணம் இலகுவாக சம்பாதிக்க முடியும் .
பங்கு சந்தையில் வெற்றி பெரும் ஜாதகம்..
இந்த பங்கு சந்தை பயிற்சிகளை இலகுவாக கற்று கொண்டால் ,நீங்களே பங்கு சந்தையில் வெற்றி பெரும் ஜாதகம் என்ற பெயரை தட்டி செல்வீர்கள் .
பங்கு சந்தையில் வெற்றி பெறும் முதல் ஜாதக காரார் , என்ற பெருமையை நீங்கள் தட்டி செல்லும் வாய்ப்பை இன்றே ஏற்படுத்துங்கள் .
அதற்கு பங்கு சந்தை பயிற்சிகள் ஊடாக இலகுவான வெற்றியை தேடி கொள்ளுங்கள் .
இழப்புகளை சந்திக்க முன்னர் கடுமையான பயிற்சிகளை பெற்று கொண்டு ,
அதில் இருந்து இழப்புகளை தவிர்த்து சிறிய முதலீடு , மூலம் பெரும் இலாபத்தை பங்கு சந்தையில் பெற்று கொள்ள முடியும் மக்களே .
இதோ கீழ் உள்ள காணொளியை பாருங்கள் .
இலங்கை வரும் எட்டப்பன் எரிக் சொல்கெம்
இலங்கை வரும் எட்டப்பன் எரிக் சொல்கெம்
இலங்கை வருகிறார் தமிழின கொலையாளி எட்டப்பன் எரிக் சோல்கெம் .
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பேன் பேரில் இலங்கை வருகிறார் எரிக் சொல்கெம் .
மூன்றாம் உலக நாடுகளின் அனுசரணையுடன் இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளின் பொழுது ,சமாதான குழுவின் தலைவராக எரிக் சொல்கெம் நியமிக்க பட்டார் .
இவரே இலங்கையில் விடுதலை புலிகள் அழிவிற்கு மிக பெரும் காரணியாக செயல் பட்டார் .
அவ்வாறான நபரே மீளவும் இன்று இலங்கைக்கு, ரணில் அழைப்பை ஏற்று செல்கின்றார் .
இவரின் ஊடக தமிழர்களை நசுக்க செயல் திட்டம் இடம்பெறுவதாக எதிர் பார்க்க படுகிறது .
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

வெளிநாடுகளுக்கு அதிகளவான ஆண்கள் பயணம்
வெளிநாடுகளுக்கு அதிகளவான ஆண்கள் பயணம்
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகளவான ஆண்கள் பயணித்துள்ளனர் என இலங்கை அரசு
தெரிவித்துள்ளது .
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து ,அதிகளவான மக்கள் கடவு சீட்டுக்கு விண்ணப்பம் செய்தனர் .
இந்த விண்ணப்பத்தின் பொழுது 409,919 ஆண்களும் 290,814 கடவுசீட்டை பெற்றுள்ளனர் என்கிறது இலங்கை அரசு .
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

விபத்தில் சிக்கி காவல்துறை அதிகாரி மாரணம்
விபத்தில் சிக்கி காவல்துறை அதிகாரி மாரணம்
பேருவளை பகுதியில் இரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியதில் காவல்துறை அதிகாரி பலியாகியுள்ளார் .
மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
காயம்,அடைந்தவர்களின் காவல்துறை ஊழியர் ஒருவர் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

வாட்சாப் பயன்படுத்து வோருக்கு வருகிறது ஆப்பு
வாட்சாப் பயன்படுத்து வோருக்கு வருகிறது ஆப்பு
உலகில் அதிக பாவனையில் உள்ள வாட்சாப் பாவனையாளர்களுக்கு வருகிறது புதிய ஆப்பு .
மக்கள் பாதுகாப்பை கருதி ,வாட்சாப்பில் இனி வரும் காலங்களில் ,ஸ்கிரீன் சாட் எடுக்க முடியாது என்கிறது வாட்சாப் அறிவிப்பு .
வீடியோ திரையில் கதைப்பவர்கள் காட்சிகளை ,ஸ்கிரீன் சாட் எடுத்து அவர்களை மிரட்டி வரும் சம்பவங்கள் இடம் பெறுவதால் ,அவற்றை தமது நிறுவனம் தடை செய்கிறது என்கிறது வாட்சாப் .
வாட்சாப் பயன்படுத்து வோருக்கு வருகிறது ஆப்பு
மெட்ரா என்கின்ற புதிய வடிவைப்பிற்குள் ,வாட்சாப் உள்ளீடு செயல் படும் பொழுது ,இந்த ஸ்கிரீன் சாட் எடுத்தல் முற்றாக தடை படும் என்கிறது அந்த நிறுவனம் .
அப்புறம் என்ன கில்லாடிகள் ,வேலை புரிந்தவர்களுக்கு இனி திண்டாட்டம் தான் போங்க .
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது

- நெதன்யாகு தனது அமெரிக்கப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இஸ்ரேலுக்குப் புறப்பட்டார்

- ஈரானுடனான உறவை கொலம்பியா முறைப்படி முறித்துக் கொண்டது

- இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரை

இலங்கையில் மீன்களின் விலைகள் திடீரென குறைவு
இலங்கையில் மீன்களின் விலைகள் திடீரென குறைவு
இலங்கையில் திடீரென சிறிய மீன்களின் விலைகள் குறைவடைந்துள்ளது .
மீனவர்கள் கடலுக்கு சென்று அதிகளவு மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் ,
இந்த மீன் விலை திடீரென குறைந்துள்ளது என்கிறது மீனவர் வர்த்தக சங்கம் .
இந்த விலையானது இவ்விதம் தொடர்ச்சியாகா வீழ்ச்சி நிலையில் இருக்குமா என்பது சந்தேகமே .
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்































































