மக்களை தாக்கிய பொலிஸ் அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை
அரசாங்கத்துக்கு எதிரானப் போராட்டங்களில் உயிரிழந்தவர்களை காலிமுகத்திடலில் அமைதியான முறையில் நினைவுக்கூர
முயற்சித்தவர்களிடம் பொலிஸார் நேற்று (09) மோசமாக நடந்துகொண்ட சம்பவம் தொடர்பில் இலங்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் பொலிஸாருக்கு எதிராக இந்த முறைப்பாட்டை செய்துள்ளது.
மக்களை தாக்கிய பொலிஸ் அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை
பிள்ளைகளுடன் காலிமுகத்திடலில் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தவர்களிடம் பொலிஸார் கடுமையாக
நடந்துக்கொண்டு அவர்களது மனித உரிமைகளை மீறியுள்ளதாகவும் அச்சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.
மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட உயர்
அதிகாரிகள் தொடர்பில் தகவல்களை வழங்க வேண்டுமென
பொதுமக்களிடம் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள்
சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
- வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் இலங்கை செல்கிறார்

- கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன

- சஷீந்திர ராஜபக்ச மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்தது

- ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டதை ஜனதாவாதி கூட்டு எதிர்க்கட்சி கண்டிக்கிறது

- மாகசின் சிறையில் சிறப்புப் பாதுகாப்பில் ஷிராந்தி ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளார்








