வீட்டில் 1 கப் கோதுமை மாவு இருந்தால் போதும் பஞ்சு போல் சாப்டன அப்பம் சுடலாம்

1 கப் கோதுமை மாவு போதும் பஞ்சு போல அப்பம் 10 நிமிடத்தில் சுடலாம்
Spread the love

வீட்டில் 1 கப் கோதுமை மாவு இருந்தால் போதும் பஞ்சு போல் சாப்டன அப்பம் சுடலாம் .

கோதுமை மாவில் அப்பம் செய்வது எப்படி ? செய்முறை ஒன்று

கோதுமை மாவு அப்பம் செய்வதற்கு ஒரு கப் அளவு கோதுமை மாவு சட்டியில் எடுத்து கொள்ளுங்கள் .


அதன் பின்னர் அடுப்பில கடயா வைத்து, அதில அரை கப்பல் அளவு வெள்ளம் ( சர்க்கரை ) சேர்த்து,அது கூட அரை கப் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்க .

மெல்லிய நெருப்பில் வைத்து ,அதனை நன்றாக சூடாக்கி கொள்ளுங்க .நன்றாக தண்ணி போல வெள்ளம் சூடானதும் ,வடிகட்டி எடுத்து வைத்த மாவில் ஊற்றி கலந்து கொள்ளுங்க .

வீட்டில் 1 கப் கோதுமை மாவு இருந்தால் போதும் பஞ்சு போல் சாப்டன அப்பம் சுடலாம்

அதன் பின்னர் அரை கப் அளவு தண்ணீர் விட்டு ,தோசை மாவு போல இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளுங்க .

இப்போ அரைக்கால் கரண்டி ஏலக்காய் சேர்த்து கொள்ளுங்க .அதே அளவு சமையல் சோடா சேர்த்து கொள்ளுங்க .


இப்போ அப்பத்திற்கு ஏற்ப மாவு ரெடியாடிச்சு .இனி கோதுமை மாவில் தயாரான அப்பம் பொரித்து எடுக்க வேண்டியது தாங்க .

செய்முறை இரண்டு

இப்போ அடுப்பில கடைய வைத்து ,தயாரான கோதுமை மாவு அப்ப மாவை
எண்ணையில், குழி கரண்டியில எடுத்து சுட்டு எடுத்து கொள்ளுங்க .

அப்ப மா ஒன்றுடன் ஒன்று ,முட்டி கொள்ளாத அளவுக்கு ,மாவை வேக வைத்து எடுத்து கொள்ளுங்க .

இப்போ கோதுமை மாவிலை தயாரான அப்பம் ,நன்றாக பஞ்சு போல பொரிந்து வந்திருக்கு .

இப்போ இனிப்பு கோதுமை மாவு அப்பம் தயாராகிடிச்சு .

அப்புறம் என்னங்க, ஒரு டீ கூட இதை சேர்த்து ,சாப்பிட்டு அசத்துங்க .

மிகவும் இலகுவான முறையில் ,சுலபமான கோதுமை மாவு அப்பம் ரெடியாகிடிச்சு .

இதுபோல இலகுவான முறையில ,நேரத்தை மீத படுத்தி செய்து கொள்ளும் இனிப்பு அப்பம் ,இது போல செய்து சாப்பிடுங்க மக்களே .

Leave a Reply