Tag: சிங்கள கடற்படை
இந்திய மீனவர்களை துரத்திய சிங்கள கடற்படை
இந்திய மீனவர்களை துரத்திய சிங்கள கடற்படை
இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நேற்று (24) மாலை இலங்கை கடற்படையினரால் துரத்தப்பட்டனர்.
இவ்வாறு துரத்திய சமயம் கடற்படையினர் அவற்றை வீடியோ வடிவில் ஒளிப்பதிவு செய்ததோடு இந்திய படகுகளின் இலக்கங்களையும் குறித்துள்ளனர்.
இதன்போது படகுகள் நின்ற இடங்களை ஜீ.பி.எஸ் கருவிகள் மூலம் துல்லியமாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் தொடர்ச்சியாக அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.
Featured
தமிழக மீனவர்கள் படகுகளை கல் வீசி உடைத்த சிங்கள கடற்படை
தமிழக மீனவர்கள் படகுகளை கல் வீசி உடைத்த சிங்கள கடற்படை
இந்தியா கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வர மீனவர்கள் படகுகள் மீது ,இலங்கை சிங்கள கடல் படையினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர் ,
சில மீனவர்கள் படகுகள் மீது ,தமதகு கடல் பாடி கப்பல்களை மோதி செத்த பாடசுத்தியுள்ளனர் .
சிங்கள கடற்படையினர் அத்துமீறிய செயலினால் ,மீன்படியே கைவிட்டு கரை திரும்பினார் .
தொடரு சிங்கள இராணுவத்தின் கெடுபிடியால் தமிழக மீனவர்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்.
நெடுந்தீவில் தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படை மோதல் – ஒருவர் மரணம்
நெடுந்தீவில் தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படை மோதல் – ஒருவர் மரணம்
நெடுந்தீவுக்கும் கச்சத் தீவுக்கும் இடையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரின் படகு மோதியதில், இந்திய மீனவர்களின் படகு சேதமாக்கப்பட்டுள்ளது.
இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்து மீன் பிடித்துக் கொண்ட போது, இந்திய மீனவர்களின் படகை கடற்படையினர் தடுத்து நிறுத்த முற்பட்டபோது , இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் படகை தாக்க முற்பட்டுள்ளனர்.
இதன்போது கடற்படையினரின் ரோந்து கப்பல் முட்டியதில், இந்திய மீனவரின் படகு சேதமடைந்துள்ளது. இதில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த மீனவர்கள், தமிழ்நாடு – புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
நீரில் மூழ்கி காணாமல் போன மீனவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்
- என் புருசா நில்லுடா 146 | கௌரி பாடல் |En Purusaa Nilludaa |Tamil love Feeling songs
- என் கண்ணீர் துளியிலே உன்னை தேடுவேனே |621| en kanneer thuliyile unnai theduvene | VANNI MAINTHAN Song
- ஜிந்தா ஜீனுக்கு தான் |966 |காதல் பாடல் | LOVE TAMIL SONG
- சிக்கு சிக்கு தான் | 982|Chikku Chikku Than |
- மறக்க முடியல |964| காதல் பாடல் |Love song | MALA SONGS
கடலில் சிங்கள கடற்படை திடீர் ரோந்து அதிகரிப்பு
கடலில் சிங்கள கடற்படை திடீர் ரோந்து அதிகரிப்பு
இலக்கை கடல்பகுதிகள் எங்கும் சிங்கள கடற்படையின் ரோந்து கண் காணிப்பு அதிகரிக்க பட்டுள்ளது
இலங்கைக்குள் இந்தியாவில் இருந்து சட்டவிரோத அகதிகள் நுழைகின்றனர் என்ற குற்ற சாட்டை முன்வைத்து இந்த ரோந்து அதிகரிக்க பட்டுள்ளது
இலங்கை கடல் வழியை பயன்படுத்தி அவுஸ்ரேலியாவுக்கு இலங்கையில் இருந்து அகதிகள்
செல்கின்றனர் என கூறி ஐந்து ரோந்து படகுகளை இலங்கைக்கு அவுஸ்ரேலியா வழங்கி இருந்தமை இங்கே சுட்டி காட்ட தக்கது
38 பேர் சிங்கள கடற்படையினாரால் கைது
38 பேர் சிங்கள கடற்படையினாரால் கைது
2020 அக்டோபர் 15 ஆம் திகதி முதல் 2020 அக்டோபர் 20 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், கடற்படையினர் மற்றும்
காவல்துறையினர் இனைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடித்தல் மற்றும்
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 38 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் போல்டர் துடுவ, பவுல் துடுவ, கோபால்புரம், நயாரு ஆகிய கடற்பகுதிகளிலும்இ கொடுவமட களப்பு பகுதியிலும் மேற்கொண்டுள்ள
நடவடிக்கைகளின் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தியும், மின்சார விளக்குகளைப் பயன்படுத்தியும் சட்டவிரோத சுழியோடி நடவடிக்கைகள் மூலம் மீன்பிடியில்
ஈடுபட்ட 28 நபர்கள் கைது செய்யப்பட்டதுடன 07 டிங்கி படகுகள், தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் பல மீன்பிடி பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
இதற்கிடையில், வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் உச்சமுனாய் தீவுக்கு வட மேற்கு கடல் பகுதியில் சட்டவிரோத சுழியோடி நடவடிக்கைகள் மூலம் மீன்பிடியில்
ஈடுபட்ட 08 நபர்கள் ifJnra;ag;gl;ldu;. 02 டிங்கி படகுகள் மற்றும் சில சுழியோடி பொருட்களுk; கைப்பற்றப்பட்டன
மேலும், மன்னார் பொலிஸாருடன் ஒருங்கிணைந்து வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மன்னார், இருக்குளம்பிட்டி பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை
நடவடிக்கையின் போது சங்குகள் சேகரிக்கும் இடமொன்றில் இருந்து 70 மிமீ க்கும் குறைவான விட்டம் கொண்ட 60
சங்குக்களுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்தனர். மேலும்,அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 1814 சங்கு ஓடுகளை சட்டவிரோதமான
முறையில் சேகரித்து வைத்திருந்த மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டார்.
இவ்வாரு கைது செய்யப்பட்ட நபர்கள் 21 முதல் 55 வயது வரையிலான பொடுவக்கட்டு, குச்சவேலி, சாண்டிபே, நிலாவேலி, இக்பார் நகர், கோக்கிலாய், கந்தக்குலிய, கல்பிட்டி மற்றும்
இருக்குளம்பிட்டி பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு இயக்குநர்களிடம், முல்லைதீவ், குச்சவேலி, கல்பிட்டி மீன்வள ஆய்வாளர்களிடம் மற்றும் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்

























