அச்சத்தில் மட்டக்களப்பு மக்கள் அச்சுறுத்தும் முதலை
அச்சத்தில் மட்டக்களப்பு மக்கள் அச்சுறுத்தும் முதலை
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான வெயிலுடனான வானிலை நீங்கி மழை பெய்துவரும் நிலையில் மக்கள் குடியிருப்புகளை நோக்கி முதலைகள் வருகை தரும் நிலையில் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட மக்கள் அதிகளவாக வாழும் கூழாவடி பகுதிக்குள் நுழைந்த முதலையொன்று மக்களினால் பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்குள் நீர்நிலைகள் இல்லாத போதிலும் முதலையொன்று மக்கள் பகுதிக்குள் நுழைந்ததனால் பெரும் பதற்ற நிலைமையேற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அதனை அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிடித்து அது தொடர்பான தகவல்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த முதலையினை கொண்டுசெல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
தற்போது மழையுடனான வானிலை நிலவும் நிலையில் முதலைகளின் நடமாட்டம் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்களுக்கு என ஜனாதிபதி வேட்பாளர் தேவையில்லை
தமிழ் மக்களுக்கு என ஜனாதிபதி வேட்பாளர் தேவையில்லை
ஜனாதிபதித் தேர்தலுக்கு தமிழ் மக்களுக்கு என தனி வேட்பாளர் தேவையில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க நடவடிக்கை எடுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் இதனைத் தெரிவித்தார்.
இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை நிறுத்த சீனாவிடம் கெஞ்சும் அமெரிக்கா
இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை நிறுத்த சீனாவிடம் கெஞ்சும் அமெரிக்கா
இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை நிறுத்த சீனாவிடம் கெஞ்சும் அமெரிக்கா .
உலக போர் பதட்டத்தை தடுக்க கோரி சீனாவிடம் அமெரிக்கா வேண்டாதல் விடுத்தது வருகிறது .
சீனா ஈரானை சமரசம் செய்து இஸ்ரேக்ள் மீதான தாக்குதலை நிறுத்தும் என வெள்ளைமாளிகை நம்பிக்கை
ஈரான் தாக்குதல் அச்சம் அலறும் இஸ்ரேல் மூன்றாம் உலக போர் வெடிக்கும் அபாயம்
ஈரான் தாக்குதல் அச்சம் அலறும் இஸ்ரேல் மூன்றாம் உலக போர் வெடிக்கும் அபாயம்
ஈரான் தாக்குதல் அச்சம் அலறும் இஸ்ரேல் ,எங்கும் இராணுவம் குவிப்பு .
மூன்றாம் உலக போர் வெடிக்கும் அபாயம் ,அமெரிக்கா கடும் எச்சரிக்கை
இஸ்ரேல் மீது ஈரான் 24 மணித்தியாலத்தில் தாக்குதல் நடத்தும் அமெரிக்கா
இஸ்ரேல் மீது ஈரான் 24 மணித்தியாலத்தில் தாக்குதல் நடத்தும் அமெரிக்கா
இஸ்ரேல் மீது ஈரான் 24 மணித்தியாலத்தில் தாக்குதல் நடத்தும் என அமெரிக்கா உளவுத்துறை அறிவிப்பு .
இஸ்ரேல் ஈரான் தூதரகம் மீது சிரியாவில் தாக்குதல் நடத்தியது ,அதற்கு பதலடியாகவே இசுரேல் மீது இரான் தாக்குதலை நடத்த தயாராகி வருகிறது .
பாலஸ்தீன போர் படைகள் இணைந்து தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக தகவல்
ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் எரியும் மின்சார மையங்கள்
44 பில்லியன் அமெரிக்க டொலர்களை சுருட்டிய பெண்ணுக்கு மரண தண்டனை
44 பில்லியன் அமெரிக்க டொலர்களை சுருட்டிய பெண்ணுக்கு மரண தண்டனை
வியட்நாமின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாகக் கருதப்படும் சைகோன் கொமர்ஷல் வங்கியில் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அறிவிக்கப்பட்ட திராங் மை லானுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோடீஸ்வர பெண் திராங் மை லானும் ஒருவர். இவரது நிறுவனமான வான் தின் பாட் நிறுவனத்தின் கீழ், உயர்தர ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. நிதிச் சேவைகளிலும் இந்த நிறுவனம் முதலீடு செய்துள்ளது.
சைகோன் கமர்ஷியல் வங்கியின் சுமார் 90 சதவீத பங்குகளை வைத்திருந்த லான், போலி கடன் விண்ணப்பங்களை பயன்படுத்தி அந்த வங்கியில் இருந்து பணத்தை எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மோசடியில் ஈடுபட்டதாகவும், இதனால் வங்கிக்கு 27 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த தொகை நாட்டின் 2023 மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) ஆறு சதவீதத்திற்கு சமம்.
நாட்டையே அதிர வைத்த இந்த மோசடி வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், லான் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதிகள் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளனர். வியட்நாமில் இத்தகைய வழக்கில் மரண தண்டனை என்பது வழக்கத்திற்கு மாறாக கடுமையான தண்டனை ஆகும்.
இதேபோல் இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 85 பேர் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இலஞ்சம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் முதல் நிதி கையாடல் மற்றும் வங்கிச் சட்டத்தை மீறுதல் வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை லான் மறுத்துள்ளார். தனக்கு கீழ் உள்ள அதிகாரிகள்தான் இதற்கு காரணம் என்றும் கூறினார்.
இறுதிக்கட்ட விசாரணைக்காக லான் கடந்த வாரம் நீதிமன்றில் ஆஜரானபோது, தான் கடுமையான விரக்தியில் இருப்பதாகவும், தற்கொலை செய்யத் தோன்றுவதாகவும் கூறினார். “நான் மிகவும் கோபமாக இருக்கிறேன். இந்தக் கடுமையான வணிகச் சூழலில், வங்கித் துறையில் எனக்கு சிறிதும் அறிவு இல்லை” என்றும் அவர் தெரிவித்தார்.
விசேட அதிரடிப்படை அதிகாரி மீது கொலைவெறித் தாக்குதல்
விசேட அதிரடிப்படை அதிகாரி மீது கொலைவெறித் தாக்குதல்
குற்றச் செயல் ஒன்றுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நபர்களை கைது செய்ய முயன்ற விசேட அதிரடிப்படை அதிகாரி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்த முயன்ற 17 வயது இளைஞனொருவர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது, மன்னார் பெரிய கரிசல் பிரதேசத்தில் கடந்த10 ஆம் திகதி மாலை நடைபெற்றது.
குற்றச் செயல் ஒன்றைப் புரிவதற்காக தயார் நிலையில் இருந்த நபர் ஒருவரை கைது செய்வதற்காக விசேட அதிரடிப்படையினர் மன்னார் பெரிய கரிசல் பிரதேசத்தில் திடீர் சுற்றிவளைப்பு நடத்தியுள்ளனர்.
இதன் போது குறித்த சந்தேக நபரிடமிருந்து மூன்று கூரிய வாள்கள், கூரிய கத்திகள் மற்றும் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து 40 வயதான சந்தேக நபரும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்ட நபரின் உறவினரான 17 வயது இளைஞன் ஒருவர் கூரிய கத்தியால் விசேட அதிரடிப்படையினர் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்த முயன்றதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது காயத்திற்கு உள்ளான விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 17 வயதுடைய இளைஞன் பாடசாலை செல்லும் மாணவன் எனவும் தெரிய வந்துள்ளது
கணவனை கழுத்தறுத்து கொன்று மனைவி கள்ளக்காதலன் கைது
கணவனை கழுத்தறுத்து கொன்று மனைவி கள்ளக்காதலன் கைது
வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்ததாக கடந்த 10ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட சம்பவம் கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவத்தில் அக்கரைப்பற்று கோளாவில் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
நேற்று (11) நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் போது கழுத்தை அறுத்ததால் ஏற்பட்ட அதிக இரத்தப்போக்கு காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அக்கரைப்பற்று வைத்தியசாலையில் இந்த பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இந்த மரணம் தொடர்பில் உயிரிழந்தவரின் 33 வயது மனைவி மற்றும் அவரது 63 வயதுடைய கள்ளக்காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சடலம் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வீடொன்றில் கொள்ளையிட்டு தப்பிச் சென்ற கும்பல் சிக்கியது
வீடொன்றில் கொள்ளையிட்டு தப்பிச் சென்ற கும்பல் சிக்கியது
இரவு வேளையில் வீட்டினுள் நுழைந்த குழுவொன்று வீட்டில் இருந்த பெண்ணை அச்சுறுத்தி பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் ஒன்று அலவாகும்புர பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
சம்பவத்தின் போது வீட்டின் உரிமையாளரின் மனைவி மட்டும் அங்கிருந்த நிலையில் கொள்ளையர்கள் அவரை தாக்கி அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 10ஆம் திகதி வெள்ளை நிற வேனில் வந்த சந்தேகநபர்கள் மற்றும் பெண் சந்தேகநபர் ஒருவரே இந்தக் கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர்.
பின்னர், மஹியங்கனை பொலிஸார் சந்தேக நபர்களை வீதித்தடையில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
அதன்படி, தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளை சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனது உள்ளாடையை கூட விட்டு வைக்கவில்லை
எனது உள்ளாடையை கூட விட்டு வைக்கவில்லை
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் மேக்னா நாயுடு. தமிழில் வீராச்சாமி, வைத்தீஸ்வரன், வாடா போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். அதன்பின் குட்டி, சிறுத்தை, புலிவேஷம், இளமி ஊஞ்சல், தர்மபிரபு உள்ளிட்ட படங்களில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டமும் போட்டிருக்கிறார்.
சமீபத்தில் மேக்னா நாயுடு தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் அவர், எங்களுக்கு கோவாவில் வீடு ஒன்று இருக்கிறது. என்னுடைய வீட்டை நாங்கள் ஒப்பந்தம் செய்த பராமரிப்பாளர் பராமரித்து கொண்டிருந்தார்.
தன்னை துணை நடிகர் என்று கூறியதால், எங்கள் வீட்டை ஒரு தம்பதியர்களுக்கு வாடகைக்கு கொடுத்தோம். கடந்த சில மாதங்களாக அவர்கள் வாடகை செலுத்தாமல் இருந்தனர். இந்நிலையில், திடீரென இரவோடு இரவாக அந்த தம்பதியர்கள் காணாமல் போய்விட்டார்கள்.
என்னுடைய துணிமணிகள் மற்றும் உபகரணங்கள் எல்லாம் அந்த வீட்டில் நான் வைத்திருந்தேன். அங்கு இருந்த என்னுடைய அத்தனை பொருட்களையும் திருடிவிட்டு சென்றுள்ளனர். என்னுடைய உள்ளாடையை கூட விட்டுவைக்கவில்லை என்று நடிகை மேக்னா நாயுடு கூறியுள்ளார்.
பரந்தன் பகுதியில் இரண்டு பிள்ளை தந்தை சடலமாக மீட்பு
பரந்தன் பகுதியில் இரண்டு பிள்ளை தந்தை சடலமாக மீட்பு
இரண்டு பிள்ளை தந்தை நீர்ப்பாசன வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய பரந்தன் பகுதியில் நீர்ப்பாசன வாய்க்காலில் இவ்வாறு குறித்த நபர் அடையாளம் காணப்பட்ட நிலையில் பொலிசாரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியை சேர்ந்த பெனடிற் பெனிஸ் நிமலன் எனும் 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன
சுமந்திரனை அவமானப்படுத்திய ஜேவிபி செயல் அருவருப்பானது
சுமந்திரனை அவமானப்படுத்திய ஜேவிபி செயல் அருவருப்பானது
ஜே.வி.பியின் மாநாட்டுக்கு அழையா விருந்தாளியாக சுமந்திரன் வந்திருந்தார் எனக் கூறி சுமந்திரனை அவமதித்தது விரும்பத்தகாத செயல் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
யாழப்பாணத்திலுள்ள தனது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் கேட்டதற்கு பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்திருந்த அவர் மேலும் கூறுகையில் –
அண்மையில் தென்னிலங்கை தேசிய கட்சியான ஜே.வி.பி கட்சி தனது கட்சி மாநாடொன்றை யாழ்ப்பாணத்தில் நடத்தியிருந்தது.
இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுக்காமல் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் சென்றதாக ஜேவிபியின் பேச்சாளர் எனக் கூறுபவர் ஊடக சந்திப்பொன்றில்தெரிவித்துள்ளார்.
தமது நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவரை அவமானப்படுத்தும் வகையில் ஏன் அவ்வாறு கூறினார் என்று தெரியவில்லை.
இதேநேரம் மாநாடொன்றிற்கு ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது இயல்பான ஒன்றுதான்.
அதேநேரம் கட்சிக்கான அழைப்பு விடுக்கப்பட்டால் அந்த அழைபை ஏற்று அழைக்கப்பட்ட கட்சியின் சார்பில் எவரும் செல்லமுடியும்.
அந்த வகையில்தான் சுமந்திரனும் சென்றிருப்பார் என நினைக்கின்றேன்.
அந்தவகையில் சுமந்திரனை அவமானப்படுத்தும் வகையிலேயே குறித்த பேச்சாளர் கூறியுள்ளார் என்றே நான் கருதுகின்றேன்.
அத்துடன் அத்தகைய அவமானப்படுத்தும் செயல் எனக்கு பிடிக்கவில்லை.
இதேவேளை குறித்த கட்சி ஒரு தேசிய கட்சி.
இவ்வாறான நிலையில் அண்மையில் குறித்த கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்தியா சென்றிருந்தனர்.
இந்தியா சென்ற அவர்கள் தமிழர் பிரச்சினை பற்றி பேசியிருக்க மாட்டார்கள் என்பதோடு, அது தொடர்பில் பேசுவதற்கும் விரும்பியும் இருக்காது.
அதேநேரம் மீனவர் பிரச்சினை தொடர்பில் பேசியிருக்கலாம்.
ஆனால் அவ்விடயம் தொடர்பில் வாய்பொத்தியிருந்துள்ளனர்.
இதேநேரம் அரசியலுரிமை தொடர்பில் அவர்கள் பேசியிருக்கமாட்டார்கள் என்று எனக்கு நன்கு தெரியும்.
ஆனால் மீனவர் பிரச்சினை தொடர்பில் அங்கு பேசவில்லை என்பது எனக்கு மனவருத்தமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
அமெரிக்கா போர் கப்பல்களை தாக்கிய ஹவுதி விமான தாக்குதல்
வெல்ல போறேன் காத்திரு
வெல்ல போறேன் காத்திரு
வெல்லாய் என்ற வெற்றிடம் நிரப்பிட
வென்றிட வெற்றி தேடுகிறேன்
நாளை எந்தன் நாளென எண்ணியே
நாளுமே நாளும் ஓடுகிறேன்
பொல்லா வார்த்தைகள் எறிந்தார் வாய்களை
பொடியாக்க முனைகின்றேன்
எல்லாம் தெரிந்தார் என்றே முழங்கிய
ஏற்றத்தாரே வருகிறேன்
தடுத்தார் வழிகளை உடைத்தே
தரணியில் தலை நிமிர்ந்தேன்
இல்லா அறிவு என்றார் முன்னிலை
இயக்கம் இயம்பி நின்றேன்
வாசலில் வந்து வெற்றியில் உள்ளேன்
வரியில் எழுதி வைத்தேன்
சொன்னால் செய்திடும் வல்லமை யானாம்
சொல்லி விட்டே வெல்கின்றேன்
இதுவரை தமிழர் புரியா சாதனை
இமயமாய் நானே புரிவேன்
இழிந்த நாவும் இடித்த உரலும்
இமயம் பார்க்க வைப்பேன்
கடுகதி வேகம் காண்பீர் நீரும்
கண்ணீர் மழையில் தவள்வீர்
எப்படி வென்றான் இப்படி என்றே
எண்ணி எண்ணி துவள்வீர் …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 11-04-2024
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

- அழும் நீதி

- அர்ச்சுனா

- ஏன் அழுகின்றாய்

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஆறுதல் கூறி விடு

- வீர மகன் அர்ச்சுனா

- அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு

- அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை

- என்னை அழைப்பாயா

- என்னை அழைக்காயா

- எழுந்து வா

நூற்றுக்கு கணக்கான இஸ்ரேல் ராணுவம் தப்பி ஓட்டம்
மேன்முறையீட்டு நீதிமன்றிலும் கெஹலியவிற்கு தொடரும் சிக்கல்
மேன்முறையீட்டு நீதிமன்றிலும் கெஹலியவிற்கு தொடரும் சிக்கல்
விசாரணை முடியும் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை வலுவிழக்க செய்யுமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்திருந்த மனுவை முதல் சந்தர்ப்பத்திலேயே இரத்து செய்யுமாறு சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று கோரிக்கை விடுத்தார்.
தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் விசாரணை முடியும் வரை தன்னை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்குமாறு பிறப்பித்த உத்தரவை வலுவிழக்க செய்யுமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த ரிட் மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டி.என்.சமரக்கோன் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.
இதன்போது சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நிர்மலன் விக்னேஸ்வரன், ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்து இந்த ரிட் மனுவை முதல் சந்தர்ப்பத்திலேயே நிராகரிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை, தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்து சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவின் பிணை கோரிக்கையை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று (10) நிராகரித்துள்ளது.
பிணை வழங்குவதற்கு விசேட சமர்ப்பணங்கள் எதுவும் முன்வைக்கப்படாதமையே இதற்குக் காரணமாகும்.
அத்துடன், குறித்த கொள்வனவு நடவடிக்கையில் கணிப்பீட்டு குழு உறுப்பினராக இருந்த வைத்தியர் துசித சுதர்ஷனின் பிணை கோரிக்கையை பரிசீலிப்பதை ஒத்திவைத்த மாளிகாகந்த நீதவான் லொச்சனி அபேவிக்ரம, சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மலையக யுவதி ஹோட்டலில் மர்மமாக உயிரிழப்பு
மலையக யுவதி ஹோட்டலில் மர்மமாக உயிரிழப்பு
அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனமேந்திர மாவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
நேற்று (10) மாலை குறித்த விடுதியில் தங்கியிருந்த ஜோடியில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
உயிரிழந்த யுவதி நேற்று மாலை நபர் ஒருவருடன் ஹோட்டலுக்கு வந்து அங்குள்ள அறையில் தங்கியிருந்த நிலையில், சிறிது நேரத்தில் யுவதி மயங்கி விழுந்துள்ளதாக உடன் இருந்த நபர் ஹோட்டல் நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வழங்கிய தகவலை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் அதிகம் விரும்பும் இடம்
சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் அதிகம் விரும்பும் இடம்
இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில், நாட்டின் தேசிய பூங்காக்களைப் பார்வையிட வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் 200,000க்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தேசிய பூங்காக்களுக்கு வருகை தந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 100,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் யால தேசிய பூங்காவை பார்வையிட வந்துள்ளனர்.
மேலும், வஸ்கமுவ, குமண, வில்பத்து, புந்தல, உடவலவ, மின்னேரியா, கவுடுல்ல போன்ற தேசிய பூங்காக்களுக்கு அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேசிய பூங்காக்களுக்கு வருகை தந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் மூலம் கடந்த மூன்று மாதங்களில் 200 கோடி ரூபாவிற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேசிய பூங்காக்கள் மூலம் பெறக்கூடிய வருமானம் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வருடத்தில் இதுவரையான காலப்பகுதி வரையில் 686,321 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் எனவும், அவர்களின் எண்ணிக்கை 106,004 பேர் எனவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
புத்தாண்டுக் காலத்தை முன்னிட்டு கொழும்பில் பயணிகள் அவதி
புத்தாண்டுக் காலத்தை முன்னிட்டு கொழும்பில் பயணிகள் அவதி
புத்தாண்டுக் காலத்தை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக நேற்று (10) முதல் விசேட பொதுப் போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எனினும் இன்று காலையில் முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதற்காக 1,400 பேருந்துகளை இலங்கை போக்குவரத்து சபை ஈடுபடுத்தியுள்ளதுடன், தேவைக்கேற்ப மேலதிக பேருந்துகளை வாடகைக்கு அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தேசிய போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நேற்று இரவு புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை மற்றும் மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகள் நீண்ட தூர சேவை பஸ்கள் இன்மையால் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.
இதனால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் பேருந்து நிலையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதற்கிடையில், போதியளவு நெடுஞ்சாலைப் பேருந்துகள் இயங்கிய போதிலும், இன்று காலை மாகும்புர பல்வகை போக்குவரத்து மையத்தில் ஏராளமான மக்கள் காணப்பட்டனர்.
சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக இன்று காலை கோட்டை ரயில் நிலையத்திற்குகம் ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர்.































