அர்ச்சுனாவுக்கு ஆதரவளித்தால் மிரட்டல்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவுக்கு ஆதரவளித்தால் மிரட்டல்

அர்ச்சுனாவுக்கு ஆதரவளித்தால் மிரட்டல்

அர்ச்சுனாவுக்கு ஆதரவளித்தால் மிரட்டல் ,அடங்க மறுக்கும் சத்தியமூர்த்தி,மருத்துவர் நாகநாதன் பரபரப்பு பேட்டி .

கீழே இதில் அழுத்தி பார்க்கவும்

நால்வர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு
Posted in இலங்கை செய்திகள்

நால்வர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு

நால்வர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு

 நால்வர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு ,வவுனியா பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளதாக வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன.

 முகமூடி அணிந்த நிலையில் வாள்களுடன் சென்று நபர்கள் அங்கிருந்த ஐயர் உள்ளிட்ட கணவன் மனைவி மற்றும் இருவர் மீது கடும் வாள்வெட்டு தாக்குதலை நடத்தி இருக்கின்றனர்.

 மர்ம நபர்கள் நடத்திய திடீர் வாள்வெட்டு தாக்குதலில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வீட்டில் நடத்தப்பட்ட இந்த வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை .

இது திட்டமிடப்பட்டு கூலி குழுக்களினால் வரவழைக்கப்பட்டஅந்த நபர்களூடாக இந்த தாக்குதல் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது ..

 தாக்குதலை நடத்தியவர்கள் தமது பால் பட்டு தாக்குதல் வெற்றி பெற்றதை அடுத்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்

 இவ்வாறு தப்பி சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தற்பொழுது குற்றத்தை தடுப்பு பிரிவுகள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது .

 வவுனியா பகுதியில் இடம்பெற்ற இந்த வாள் வெட்டுச் சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக அந்த பகுதி மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு இருக்கின்றனர்.

தீயில் எரிந்த வீடுகள்
Posted in இலங்கை செய்திகள்

தீயில் எரிந்த வீடுகள்

தீயில் எரிந்த வீடுகள் ,பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீன் பழைய தோட்டம் என அழைக்கப்படும் சீன் லோவர் பூண்டுலோயா தோட்டத்தில், வெள்ளிக்கிழமை (16) இரவு 08 மணி அளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து சம்பவத்தில் 28 வீடுகள் கொண்ட

இலக்கம் (01) தொடர் குடியிருப்பு லயத்தில் 25 வீடுகள் எரிந்து சாம்பலாகி உள்ளதாக பகுதிக்கு பொறுப்பான கிராம அபிவிருத்தி அதிகாரியின் அறிக்கை படி பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த திடீர் தீ விபத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 25 வீடுகளை சேர்ந்த 86 பேர் நிர்கதிக்குள்ளான நிலையில் அத் தோட்ட ஆலய மண்டபம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் இந்த திடீர் தீ பிடிப்பு சம்பவத்தினால் அதிர்ச்சிக்கு உள்ளான இரு வயோதிபர்கள் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் வீடுகளை இழந்து உள்ள மூன்று கர்ப்பிணி தாய்மார்கள் உறவினர்கள் வீடுகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தீ சம்பவத்துக்கான காரணம் மற்றும் சேத விவரங்களை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தனர்.

அதேநேரம் இந்த தீ பிடித்த சம்பவம் இடம்பெற்ற சிறிது நேரத்தில் சீன் தோட்டத்திற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இளைஞர்கள் போராடி உள்ள போதிலும் பலனளிக்கவில்லை எனவும் நுவரெலியா மாநகரசபை தீயணைப்பு பிரிவுக்கு அழைப்பு விடுக்கபட்டதாகவும் அவர்கள் உரிய நேரத்தில் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்த தீ பிடிப்பு சம்பவத்தை உணர்ந்த குடியிருப்பாளர்கள் முடிந்தவரை போராடி தமது உடைமைகளை காப்பாற்றியும் உள்ளனர் பலர் தமது உடைமைகளை இழந்துள்ளனர்.

அத்துடன் இந்த சம்பவத்தை அறிந்த அமைச்சர்,இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் சம்பவ இடத்திற்கு நள்ளிரவில் வருகை தந்து பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டதுடன் உடன் தேவைகளுக்கான வசதிகளும்,நிதி உதவியும் செய்து சென்றதாக தோட்ட மக்கள் தெரிவித்தனர்.

அவசர எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

அவசர எச்சரிக்கை

அவசர எச்சரிக்கை

 அவசர எச்சரிக்கை ,மக்களுக்கு அவசர எச்சரிக்கை மாநிலம் அறிவித்திருக்கின்றது அதன்படி களுகங்கையின் கிளை கங்கையான குடாகங்கையின் மேற்பகுதியில் பெய்துவரும் கடும் மழை காரணமாக அதிக மழைநீர் தேங்கியுள்ளதால் வல்ல அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 அதன் அடிப்படையில் புளத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்த நுவர ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்கும்படியும் அவ்வளையும் இங்கு இந்த குளம் உடைக்கப்பட்டு நீர் வெளியேறலாம் என்பதால் மக்களை 48 மணி எச்சரிக்கை இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதன் பொழுது மக்கள் எவ்வாறு தப்பிப்பது என்பது ஒரு பக்கமும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 அதிக அளவு மழை நீர் வீழ்ச்சி இடம் பெற்று வருவதால் அதிக வருட பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதாலேயே மக்களுக்கு இந்த அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என அஞ்சுகின்ற மக்கள் உடனடியாக அந்த பகுதிகளை விட்டு வெளியேறி வருகின்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக அங்கு இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பெண் கடத்தி படுகொலை அதிர்ச்சியில் உறவுகள்
Posted in இலங்கை செய்திகள்

பெண் கடத்தி படுகொலை அதிர்ச்சியில் உறவுகள்

பெண் கடத்தி படுகொலை அதிர்ச்சியில் உறவுகள்

 பெண் கடத்தி படுகொலை அதிர்ச்சியில் உறவுகள் ,சிலாபம் காவல்துறைக்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

 அவர் ஒருவர் குறித்த பெண்ணை தூக்கிச் செல்கின்ற காட்சி காணப்பட்டதாகவும் அதனை அடுத்து மேற்படி பிகண்டுபிடிக்க விசாரணைகள் மேற்கொண்டனர்.

 இதன்போது காணாமல் போனவன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்க மீட்க கப்பட்டுள்ளதுடன் அவரை கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்படும் 34 வயதுடைய நபர் தற்பொழுது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஏன் இந்த பெண்ணை கடத்திச் சென்றார் எதற்காக இவ்வாறான விடயங்கள் மேற்கொள்ளப்பட்டது என்பது தெரியவில்லை தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தனிநபர் பழிவாங்கல் நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டதா அல்லது கூலிக்கு மாற்றப்பட்ட செயலா அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா என்பது தற்பொழுது விசாரணங்களை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

 இலங்கையில் இவ்வாறான கொலைகள் நாள்தோறும் இடப்பட்டு வருவதும் அதனால் பல மக்கள் பாதிக்கப்பட்டு வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த நாட்டை வளப்படுத்துவேன் சஜித்
Posted in இலங்கை செய்திகள்

இந்த நாட்டை வளப்படுத்துவேன் சஜித்

இந்த நாட்டை வளப்படுத்துவேன் சஜித்

இந்நாட்டின் வரலாறு புதிதாக எழுதப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் இந்த வேலைத்திட்டத்தின் சாட்சியாளர்களாக அல்லாமல் பங்காளர்களாக மாறி நாட்டின் வெற்றிப் பயணத்தில் பங்குதாரர்களாக இணைந்துகொள்வதோடு நாட்டை வலுவூட்டும் இந்தப் பயணத்தின் தலைவர்களாக மாறி செயற்படுமாறு எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நடைமுறை ரீதியாகவும் முற்போக்கு ரீதியாகவும் இந்தக் காலத்தில் மக்களுக்காக கருத்துக்களை முன்வைத்து போராட்டங்களை நடத்தியுள்ளதோடு, ஊழல் மோசடியை இல்லாது ஒழிக்கின்ற நோக்கில் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். ஏனைய கட்சித் தலைவர்களை போன்று மேடைகளில் ஏறி நாடகங்களை அரங்கேற்றாது வெற்றுப் பைல்களை காண்பித்து மக்களை ஏமாற்றுகின்ற நாடகங்களில் நடிக்காது, செயற்பட்டுள்ளோம். நாட்டை வங்கரோத்து நிலைக்கு கொண்டு சென்ற ராஜபக்ஸக்களை சட்டத்தின் முன் நிறுத்தி ராஜபக்ஸக்கள் நிதி மோசடியில் ஈடுபட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

திருடப்பட்ட நாட்டின் வளங்களையும் திருடப்பட்ட நாட்டின் பணத்தையும் மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக தனிநபர் சட்டமூலத்தை ஐக்கிய மக்கள் சக்தியே முதல் முதலில் சமர்ப்பித்துள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமக்கோ அல்லது தமது கட்சி உறுப்பினர்களுக்கோ திருடர்களுடன் எந்தவொரு ஒப்பந்தமும் இல்லை. திருடர்களை பாதுகாக்கின்றவர்களோடும் எந்தவொரு ஒப்பந்தமும் இல்லை. கைவாறு அரசியலை நிறுத்துவதோடு இந்த அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்கள் தெரிவித்தார்.

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்ற வெற்றியின் முதல் பொதுக் கூட்டம் நேற்று (16) குருநாகல் சத்தியவாதி மைதானத்தில் பெரும் சனத் திரளுக்கு மத்தியில் சிறப்பாக நடைபெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியையும் ஐக்கிய மக்கள் கூட்டணியினையும் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொண்டதுடன், குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பெரும் திரளான மக்கள் இந்த வெற்றிக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர்.

மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரம் மற்றும் வைன் ஸ்டோர்களுக்காக அனுமதிப்பத்திரங்களுக்காகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் விலைபேசப்படுகின்ற யுகத்தை நிறைவு செய்வோம். ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ள ஒவ்வொருவரும் வரங்களையும் வரப்பிரசாதங்களையும் எதிர்பார்க்காது கொள்கையை அடிப்படையாகக் கொண்டே எம்மோடு இணைந்தனர். எமது கட்சியின் நிதி பிரபஞ்சம் மற்றும் மூச்சு ஆகிய வேலைத்திட்டங்களுக்காகவே ஒதுக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது தெரிவித்தார்.

கட்சி மாறுகின்றவர்களுக்கும் கட்சி மாறுவதற்கும் இடமளிப்பதோடு செப்டெம்பர் 21 ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவது தொடர்கதைகளாகவே அன்றி மக்களின் வாக்குரிமை மூலமே தெரிவு செய்யப்பட்டு, பொதுமக்களின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவேதாடு ஐக்கிய மக்கள் சக்தி சொல்வதை செய்கின்ற செய்வதைச் சொல்கின்ற கட்சியாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இனவாதத்தையும் மதவாதத்தையும் குரோதத்தையும் வைராக்கியத்தையும் அடிப்படையாக வைத்து அரசியல் தலைவர்கள் உருவாகினார்கள். அந்த குரோதத்திற்கு மத்தியில் ஐக்கியத்திற்கான விதையை முளைக்கச் செய்து ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டுள்ளது. பிரித்தாளுகின்ற இந்த புற்று நோய்க்குப் பதிலாக அன்பையும் கருணையையும் உணர்வுபூர்வமான தன்மையையும் வெளிப்படுத்துகின்ற அரச நிர்வாகத்தை உருவாக்கி காயப்பட்டுள்ள இந்நாட்டை சுகப்படுத்த தான் தயார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

குரோதத்தை வெளிப்படுத்துகின்றவர்களை மக்கள் வெறுப்பதோடு, இனவாதத்தையும் மதவாதத்தையும் ஒதுக்கி இலங்கைக்கேயான தன்மையுடன் கூடிய யுகத்தை உருவாக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மக்ளோடு மாத்திரமே ஒப்பந்தம் செய்திருக்கின்றது.

நாட்டின் ஜனாதிபதிக்கு இலகுத்தன்மை காணப்பட்டாலும் ஜனாதிபதி உலக சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு உல்லாசங்களை அனுபவித்து வருவதோடு நாட்டின் ஜனாதிபதி என்பவர் நாட்டின் தற்காலிக பாதுகாவலரே அன்றி நாட்டின் சொந்தக்காரர் அல்லர் என்று இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எனினும் நாட்டில் காணப்படுகின்ற பிரச்சினைகளை இனவாத மற்றும் சோசலிச சிந்தனையுள்ளவர்களால் தீர்க்க முடியாது. ஊழலையும் மோசடியையும் இல்லாது செய்து திருடப்பட்டுள்ள நாட்டின் சொத்துக்களை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு தேவையான சக்தியை பெற்றுத் தாருங்கள். மருந்துப் பொருள் ஊழல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அதற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி தான் கொண்டு வந்தது. அந்த மருந்து ஊழலில் ஈடுபட்டவர்களிடமே நாட்டை மீண்டும் கையளிக்காமல் சரியான தீர்க்கமான முடிவை எடுக்கமாறு எதிர்க்கட்சித் தலைவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

அர்ச்சுனா நாகநாதன் மருத்துவருக்கு ஆதரவாகசிக்கிய சத்தியமூர்த்தி
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா நாகநாதன் மருத்துவருக்கு ஆதரவாகசிக்கிய சத்தியமூர்த்தி

அர்ச்சுனா நாகநாதன் மருத்துவருக்கு ஆதரவாகசிக்கிய சத்தியமூர்த்தி

அர்ச்சுனா நாகநாதன் மருத்துவருக்கு ஆதரவாகசிக்கிய சத்தியமூர்த்தி,பொல்லு கொடுத்து அடிவாங்கிய அடாவடி மன்னன் சத்தியமூர்த்தி .

காணொளி முழு விபரம்

ரணில் விக்ரமசிங்கே சாதனை
Posted in இலங்கை செய்திகள்

ரணில் விக்ரமசிங்கே சாதனை

ரணில் விக்ரமசிங்கே சாதனை ,கடந்த 15 ஆண்டுகளில் திரு ரணில் விக்ரமசிங்கே 6 ஆண்டுகள் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் அதிகாரத்தில் இருந்துள்ளார்.

திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களின் அதிகாரத்தின் கீழ் தான்,

நாவற்குழி சிங்கள குடியேற்றம்சட்டபூர்வமாக்கப்பட்டது

வவுனியா வடக்கு கொக்கச்சான்குளம் (கலாபோகஸ்வெவ 1 & 2) நாமல்புர குடியேற்றங்கள் சட்டபூர்வ சிங்கள குடியேற்றங்களாக்கப்பட்டன

குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் மாலனூர் (12ஆம் கட்டை) மற்றும் ஏரமடு (10ஆம் கட்டை) பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன

திருகோணமலை சலப்பையாறு பகுதியில் 650 க்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் குடியேற்றபட்டன

வவுனியாவில் மன்னார் மதவாச்சி வீதியை சூழ்ந்த பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன

மன்னார் முசலிப் பகுதியில் சிங்களக் குடியேற்றம் உருவாக்கப்பட்டது

கொக்கடிவான் குளத்தின் சூழலிருந்த இருநூறு ஏக்கர் வயல் நிலம் 165 சிங்கள குடும்பங்களுக்கு பகிரப்பட்டது

ஒதியமலையை அண்டிய வவுனியாவின் எல்லைக் கிராமங்கள் பலவும் கஜபாகுபுர ஆக்கப்பட்டன.

குறிப்பாக சிலோன் தியேட்டர்,டொலர்ஸ் பாம், தனிக்கல், நாவலர் பண்ணை போன்ற பகுதிகளிலும் சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டன

முல்லைத்தீவின் எல்லையில் சிங்கபுர, 13 ஆம் கொலனி என பல சிங்களக் கிராமங்கள் உருவாக்கப்பட்டன

கொக்குத்தொடுவாயில் மட்டும் 2,156 ஏக்கர் நிலம் சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது

கொக்குதொடுவாய் பகுதியில் கோட்டக்கேணி அம்பட்டன் வாய்க்கால், வெள்ளக்கல்லடி,தொட்ட கண்ட குளம் போன்ற இடங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர்

கோட்டைக்கேணி பிள்ளையார் கோவில் பகுதியில் 825 ஏக்கர் நிலம் சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டது .

கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் 20 ஏக்கர் நிலம் சிங்கள குடியிருப்புக்காக வழங்கப்பட்டது

நாயாறு கொக்கிளாய் – முகத்துவாரம் பகுதிகளில் சுமார் 794 சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டன .

கொக்கிளாய்,கருநாட்டுக்கேணி பகுதியில் சிங்கள மீனவர்களுக்கு காணி உரிமம் வழங்கப்பட்டது

ஆண்டான்குளம், திருக்கோணப்பட்டி, ஆத்தங்கடவை, மருதடிக்குளவெளி, ஆலடிக்குளம், சாமிப்பில கண்டல், ஈரக்கொழுந்தன் வெளி, படலைக்கல்லு, நித்தகைகுளம் போன்ற பகுதிகளில் சுமார் 647 ஏக்கர் நிலம் சிங்கள குடியேற்றங்களுக்காக வழங்கப்பட்டது

கொக்குத்தொடுவாய்,புலிபாய்ந்தகல், நாயாறு, கொக்கிளாய் – முகத்துவாரம், சாலை ஆகிய 5 பல இடங்களில் பகுதிகளில் பருவகாலங்களில் தொழில் செய்ய தென்னிலங்கை மீனவர்கள் குடியேற்றப்பட்டனர்

சூரியனாறு, முந்திரிகைக்குளம் பகுதிகளில் சிங்கள குடியேற்றவாசிகளுக்கு தமிழ் மக்களின் வயல் நிலங்கள் அபகரிகப்பட்டு வழங்கப்பட்டது

மட்டக்களப்பு கெவிலியாமடு பகுதியில் சிங்கள மக்களுக்கான மாதிரி கிராமம் ஒன்று உருவாக்கப்பட்டு 20-25 சிங்கள குடும்பங்களுக்கு வீடுகளும் 60 இற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவிகளும் வழங்கப்பட்டன

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் 50 இற்கு மேற்பட்ட பொலநறுவை, அம்பாறையை சேர்ந்த பண வசதி படைத்த சிங்கள விவசாயிகள் பண்ணைகள் அமைக்க காணி வழங்கப்பட்டது

மேற்படி திட்டமிட்டட் குடியேற்றங்களுக்கு மேலாக, இக் காலப்பகுதிகளில் இலங்கை இராணுவம், தொல்லியல் திணைக்களம் , வன வள திணைக்களம் வனஜீவராசிகள் திணைக்களம் , மகாவலி அபிவிருத்தி சபை மற்றும் பிக்குகளால் மிக பல ஆயிரக்கணக்கான நிலங்கள், விவசாய காணிகள், மேய்ச்சல் தரைகள், நீர் நிலைகள் அபகரிக்கப்பட்டுள்ளன

இந்த ஆக்கிரமிப்புகள் எல்லாவற்றையும் மறைத்து விட்டு திரு ரணில் விக்கிரமசிங்க அவர்களை இப்போதும் சிலர் மீட்பராக சித்தரிக்கின்றார்கள்

இஸ்ரேலை தொடர்ந்து தாக்கும் ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தொடர்ந்து தாக்கும் ஹிஸ்புல்லா

இஸ்ரேலை தொடர்ந்து தாக்கும் ஹிஸ்புல்லா

இஸ்ரேலை தொடர்ந்து தாக்கும் ஹிஸ்புல்லா, அதிரும் இஸ்ரேல் முக்கிய முகாம்கள் ,அடித்து நொறுக்கும் ஏவுகணைகள் .எரியும் முகாம்கள் .

வீடியோ

வீழ்ந்து நொறுங்கிய போர் விமானம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய போர் விமானம்

வீழ்ந்து நொறுங்கிய போர் விமானம்

வீழ்ந்து நொறுங்கிய போர் விமானம், வெடித்த கடும் யுத்தம் ,

வீடியோ

60 கோடி வாங்கினார் சாணக்கியன்
Posted in இலங்கை செய்திகள்

60 கோடி வாங்கினார் சாணக்கியன்

60 கோடி வாங்கினார் சாணக்கியன்


60 கோடி வாங்கினார் சாணக்கியன் ,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், தனிப்பட்ட முறையில் 60 கோடி ரூபாயைப் பெற்றுக்கொண்டுள்ளதாக ரெலோ அமைப்பின்

செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,

மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியே தமக்கு வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

தம்மால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளைக் கருத்திற்கொண்டு, வழங்கப்பட்ட அந்த நிதியில் தற்போது மாவட்டத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் அரசியல் நோக்கத்திற்காகக் கோவிந்தன் கருணாகரம் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்

ஆசிரியை அடித்த உபஅதிபர் உட்பட நால்வர் கைது
Posted in இலங்கை செய்திகள்

ஆசிரியை அடித்த உபஅதிபர் உட்பட நால்வர் கைது

ஆசிரியை அடித்த உபஅதிபர் உட்பட நால்வர் கைது

ஆசிரியை அடித்த உபஅதிபர் உட்பட நால்வர் கைது ,பதுளை, வெலிமடை கல்வி பணிமனைக்குட்பட்ட உடபுஸ்ஸல்லாவ அலக்கொலை தமிழ் வித்தியாலயத்தில் பணியாற்றும் டெல்மார் தோட்டத்தை சேர்ந்த ஆசிரியை

ஒருவர் கடமை நேரத்தில் தாக்குதலுக்கு இலக்காகியமை தொடர்பாக அதே பாடசாலையில் கடமையாற்றும் உப அதிபர் உட்பட நால்வர் ஊவா பரணகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது சம்பவம் (15) இடம்பெற்றதாக ஊவா பரணகம பொலிஸார் தெரிவித்தனர்.

ஆசிரியை மீதான இந்த தாக்குதலில் தான் பணியாற்றும் வித்தியாலயத்தின் அதிபர் உள்ளிட்ட அவருக்கு தேவையான ஆசிரியர்கள் ஈடுப்பட்டதாக தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியை ஊவா பரணகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் (13.08.2024) செவ்வாய் கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போது தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியை உடப்புசல்லாவ பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் தன்னை தாக்கியவர்கள் தொடர்பில் தன்னால் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டிருந்த முறைப்பாடு உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டு தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட ஆசிரியை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது.

கடந்த ஐந்து வருடங்களாக குறித்த பாடசாலையில் கடமையாற்றி வரும் தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியைக்கு சுமார் ஒன்றரை ஆண்டுகளாக மாணவர்களுக்கு கற்பிக்க பாட நேரசூசி வழங்கப்படாது பாடசாலை அதிபரால் ஓரங்கட்டப்பட்டு உள்ளார்.

அதே நேரத்தில் பாடசாலையில் ஆசிரியராக புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ள அதிபரின் மகனுக்கு கூடுதலான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள நிலையில் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியை பாடசாலையின் கற்றல் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் ஓரங்கட்டப்பட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் பாடசாலையில் மேலதிக ஆசிரியர்கள் சேவைக்கு உள்ளதாக கூறி பாடசாலை அதிபர் பாதிக்கப்பட்ட ஆசிரியையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதே சந்தர்ப்பத்தில் அத்துமீறிய இடமாற்றத்தை கண்டித்து குறித்த ஆசிரியை கல்வி திணைக்களத்தின் மேலதிகாரிகளுக்கு புகார் செய்துள்ளதுடன் தனக்கு நேர்ந்ததால் தெரிவித்துள்ளார்.

ஆனால் நாளுக்கு நாள் பாடசாலை அதிபரின் செயற்பாட்டை தாங்கிக்கொள்ள முடியாத ஆசிரியை அத்துமீறிய இடமாற்றத்தை தடுக்க சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரின் உதவியுடன் வழக்கு தொடர்ந்து இடமாற்றத்தை தடை உத்தரவையும் பெற்றுள்ளார்.

இவ்வாறான செயற்பாட்டினால் ஆத்திரம் கொண்ட அதிபர்,உப அதிபர் உள்ளடங்களாக ஆசிரியர்கள் என நால்வர் ஆசிரியையை பழிவாங்கும் விதத்தில் ஆசிரியைக்கு பாடங்கள் கற்பிக்க இடம் கொடுக்காது பாடசாலை வகுப்பறையில் அமர்வதற்கும் கூட இடம் கொடுக்காது தொந்தரவு கொடுத்துள்ளனர்.

இது விடயமாக குறித்த ஆசிரியை பாடசாலை அதிபரிடம் வினவியபோது ஆத்திரம் கொண்ட அதிபர் ஆசிரியையை அவருக்கு தேவையான ஆசிரியர்களை வரவழைத்து தாக்கியுள்ளதுடன்,பாடசாலை அறை ஒன்றில் சிறை வைக்கப்பட்டதாகவும் ஆசிரியையின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டுக்கு அமைய நடவடிக்கை எடுத்து பொலிஸார் இந்த தாக்குதலை நடத்திய நால்வரை கைது செய்து விசாரணைகளின் பின் வெளிமடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் உள்ளதாக தெரிவித்தனர்.

மைத்திரி ரணில் தேர்தலில் மோதல்
Posted in இலங்கை செய்திகள்

மைத்திரி ரணில் தேர்தலில் மோதல்

மைத்திரி ரணில் தேர்தலில் மோதல்

மைத்திரி ரணில் தேர்தலில் மோதல் ,ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

சிறிசேன தூது அனுப்பியதாகவும், ஆனால் அந்த கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாகவும் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அந்த கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி, நம்ப முடியாத ஒருவரின் ஆதரவை தமக்கு வேண்டாம் என தெரிவித்ததாகவும் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

“எங்கள் கட்சியின் முன்னாள் தலைவர் இப்போது போக வழியில்லாத நிலையில் இருக்கிறார், எந்தக் கட்சியும் அவரை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை, அவர் நம்பிக்கையை சிதைக்கும்போது, ​​​​

, இப்போது அவர் எங்காவது குப்பைகளை நிறைய தேடுகிறார். ஆனால், ஒரு முன்னாள் ஜனாதிபதி, “இவ்வளவு கீழ்த்தரமான நிலைக்குச் சென்றமைக்காக

நாங்கள் வருந்துகிறோம்” என்று பெலியத்திலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் குழுவின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசுகையில் அமைச்சர் கூறினார்.

மஹிந்த மற்றும் நாமல் அனுராதபுரத்தில்
Posted in இலங்கை செய்திகள்

மஹிந்த மற்றும் நாமல் அனுராதபுரத்தில்

மஹிந்த மற்றும் நாமல் அனுராதபுரத்தில்

மஹிந்த மற்றும் நாமல் அனுராதபுரத்தில் ,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்று (16) அனுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதியில் ஆசிர்வாதம் பெற்றனர்.

பின்னர், மகா சங்கரத்தினருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

துப்பாக்கிச் சூடு இளைஞன் பலி
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூடு இளைஞன் பலி

துப்பாக்கிச் சூடு இளைஞன் பலி

துப்பாக்கிச் சூடு இளைஞன் பலி ,அநுராதபுரம் – ஸ்ரீபுர, கெமுனுபுர, பிள்ளையார் சந்தியில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 26 வயதுடைய நபர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரி – 56 ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

யானையை பொலிஸார் சுட்டு கொன்றது ஏன்
Posted in இலங்கை செய்திகள்

யானையை பொலிஸார் சுட்டு கொன்றது ஏன்

யானையை பொலிஸார் சுட்டு கொன்றது ஏன்

யானையை பொலிஸார் சுட்டு கொன்றது ஏன் ,வீதியில் பயணித்த காட்டு யானை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளை பகமூன பிரதான வீதியின் பகமூன தமனயாய தம்புர பிரதேசத்தில் இந்த காட்டு யானை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (15) இரவு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பக்கமூன வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தது 35 வயதான ‘ராஜா’ என அழைக்கப்படும் காட்டு யானையாகும்.

குறித்த யானைக்கு ஒரு கண் பார்வை தெரியாது எனவும் கூறப்படுகிறது.

இந்த காட்டு யானையால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் முச்சக்கரவண்டியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, பொலிஸ் உத்தியோகத்தர்களை காட்டு யானையை தாக்க முற்பட்டதாகவும், இதனால் ரி56 ரக துப்பாக்கியால் காட்டு யானையை சுட்டுக்கொன்றதாகவும் பகமூன பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் காரணமாக நேற்று இரவு அப்பகுதி மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹபரணை உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுதத் அஸ்மடல தெரிவித்துள்ளார்.

சிந்துஜா அவருடைய பிள்ளை
Posted in இலங்கை செய்திகள்

சிந்துஜா அவருடைய பிள்ளை

சிந்துஜா அவருடைய பிள்ளை

சிந்துஜா அவருடைய பிள்ளை ,பெரும்பாலும் சில விடயங்களை நான் கண்டும் காணாதுபோன்று கடந்து போவது வழக்கம்.


கீழ்த்தரப்பட்ட இணையத்தளமானது தமிழ் முஸ்லிம் பேசும் மாவட்டத்தில் முக்கியமாக வடக்கு கிழக்கிலே ஒரு அரசியல் கட்சியை சார்ந்தது என்பதை இந்த இணையதளத்தினது கடந்த பகுதிகளை நீங்கள் பார்க்கும் போது தெளிவாக தெரிந்திருக்கும்.


வைத்தியர் செந்தூரன் அவர்கள் தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் ஜனாதிபதியின் ஊட்டலின் அடிப்படையில் முக்கியமாக வடக்கு மாகாணத்திலே நாங்கள் யாரை பிழை விட்டு இருக்கிறார்கள் என்று சொல்லுகிறோமோ அந்த

வைத்தியர்கள் சார்ந்த மற்றும் வைத்தியர் செந்தூரன் தனக்கென ஒரு பரப்புரை செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை இவர்கள் திட்டமிட்ட

ரீதியில் முதலே வகையாக திட்டமிட்டு பனர்கள் பிரிண்ட் பண்ணப்பட்டு வைத்திய செந்தூரன் அவர்கள் பச்சை கலர் உடுப்புடன் அழைக்கப்பட்டு அங்கே ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டது.


அதற்கு முக்கியமான சூத்திரதாரி வடக்கு மாகாணத்தில் தற்போது வடக்கு மாகாண சுகாதார துறையில் முக்கிய பதவி வைக்கும் ஒரு சிங்கள வைத்தியரும் மற்றும் சம்பந்தப்பட்ட சிந்துஜா இறந்த வைத்தியசாலையில் வேலை செய்கின்ற அதற்கு

சார்பாக இருந்த சில பல ஊழியர்கள் மற்றும் முதலில் வைத்தியசாலை பக்கம் என்று இருந்து மறுபடியும் கழுதை போன்று குத்துக்கரணம் அடித்த பொது அமைப்புகளின் தலைவர் சிவகரன் ஆகியோர்களுக்கு திட்டமிட்ட ரீதியில் தாங்கள்தான் இந்த

போராட்டத்தை செய்கிறோம் என்றும் அதற்குரிய கிரெடிட் அல்லது பலன்களை தங்களது பேரில் மாற்றிக் கொள்ள முனைகின்ற சம்பந்தப்பட்ட ஒரு சில அரசியல் சார்ந்த புள்ளிகளும் அவர்களுடைய அடியாட்களும் விசிறிகளுமே இந்த திட்டத்தை

நன்கு திட்டமிடாமல் (திட்டமிட்டதென நினைத்துக் கொண்டு) செய்திருந்தார்கள்.
பொதுமக்களுக்கு இது சம்பந்தமான நன்கு தெளிவான அடிப்படை அறிவு உண்டு என்பதை இவர்கள் ஒரு முட்டாள்கள் சமூகம் போதிக்கின்றது போன்று ஒரு மன்னார்

என்ற ஒரு படித்த சமூகத்தை ஒரு காலத்திலேயே வடக்கு கிழக்கிலே மன்னார் என்று சொன்னால் நடுங்கும் அளவுக்கு கல்விமான்களை கொண்டிருந்த ஒரு சமூகத்தை திட்டமிட்ட ரீதியில் இனரீதியில் அடக்கி ஒடுக்கி அவர்கள் செய்கின்ற இந்த கூத்தானது

தமிழ் மக்களினுடைய இனத்தை இருப்பை கேள்விக்குறியாக்குவதும் மேலும் தமிழ் மக்களுடைய குரலை அரசியல் ரீதியாக ஒடுக்குவதற்குமே இவர்கள் இந்த திட்டமிட்ட செயலை செய்கிறார்கள்.


மிகவும் கவலைக்குரிய விடயம் என்றால் இதில் நாங்கள் சம்பந்தப்படாத ஒரு சில சக்திகள் கூட்டாக வேலை செய்கின்றன.


ஆகவே பொதுமக்கள் வைத்திய செந்தூரனோ அல்லது சிவகரனோ செய்கின்ற ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக எதையுமே செய்ய மாட்டார்கள் என்பது எனது கணிப்பு.


ஆனாலும் உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறான போராட்டங்களில் இணையும் போது நன்மதிப்பு மிக்க நீதிமன்றத்தை நாங்கள் அவமதிப்பதாகவும் அதுமட்டுமல்ல இந்தப் போராட்டத்தை பல திசைக்கு இழுத்து போராட்டத்தை மழுங்கடிக்கின்ற அரசியல்

லாபம் தேடுகின்ற செய்திகளை பொதுமக்கள் தெளிவாக அறிந்து கொண்டுள்ளார்கள் என்பதை இந்த கழுதைகள் அறிந்து கொள்ளாவிட்டால் அதற்கு பொதுமக்களாகவும் பொதுமக்கள் சார்பாகவும் நான் பொறுப்பு அல்ல.


பொறுப்புத் திறப்பு.
முட்டாள்களுக்கானது.


சம்பந்தப்பட்ட சிந்துஜா அவருடைய பிள்ளை சம்பந்தமான முழு பொறுப்பும் இதுவரை இவர்களுக்கு இருந்தும் நான் வைத்தியசாலையை நோக்கி வரும் வரை இவர்கள் எதுவுமே செய்யவில்லை என்பது பொதுமக்களுக்கு நன்றாகவே தெரியும்

இவர்களுடைய தெருக்கூத்துகளை தெருக்கூத்துகளாக வீட்டில் இருந்து சாப்பிட்டுவிட்டு நன்றாக அனுபவிப்போம் இப்படிக்கு உங்கள் அன்பு மகன் மன்னாரின் மைந்தன் இராமநாதன் அர்ச்சுனா.

இவ்வாறு அர்ச்சுனா அதனது முகநூலில் பதிவிட்டுள்ளார் .

ஈரான் புதிய ஆயுதம் மிரளும் உலகம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் புதிய ஆயுதம் மிரளும் உலகம்

ஈரான் புதிய ஆயுதம் மிரளும் உலகம்

ஈரான் புதிய ஆயுதம் மிரளும் உலகம், பொருளாடஹர தடைகளை விதித்து அடக்கி ஒடுக்க முற்பட்ட பொழுதும் தற்போது அதனை உடைத்தெறிந்து ,ஈரான் அசுர வளர்ச்சி பெற்றுள்ளதையே மேற்படி விடயம் எடுத்து காண்பிக்கிறது .

வீடியோ

மன்னாரில் குழந்தையை பறிக்க சதி திட்டம்
Posted in இலங்கை செய்திகள்

மன்னாரில் குழந்தையை பறிக்க சதி திட்டம்

மன்னாரில் குழந்தையை பறிக்க சதி திட்டம்

மன்னாரில் குழந்தையை பறிக்க சதி திட்டம் ,மன்னர் மருத்துவமனையில் பலியான பட்டதாரி இறந்த பெண்ணுடைய குழந்தை இனம் வெளியில் எடுத்துச் சென்று அந்த குழந்தையின் உயிரை மாய்க்கும் நடவடிக்கையில் செந்தூரன் உள்ளிட்டவர்கள் ஈடுபட்டு வருவதாக மருத்துவர்கள் சிலர் கூட்டணி சுமத்தி இருக்கும்.

அர்ஜுனன் ராமநாதன் மன்னருக்கு சென்று பாதிக்கப்பட்ட தீர்வினை வேண்டி கொடுத்து அவர் சிறை சென்றிருந்தார்

அவர்ன காலப்பகுதியில் தற்பொழுது செந்துரனுக்கு எதிராக மக்கள் சர்வதேச அளவில் கொதித்து கிளம்பி எழும்பி வருகின்ற நிலையில் தற்போது பாதிக்கப்பட்ட பெண்களுடைய குழந்தை மற்றும் தாயாருக்கு நோய்களை ஏற்படுத்தி

அவர்களுக்கு அவதூறுகளை பரப்பி சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களை அழித்தொழிப்பு நடவடிக்கையிலான சூழ்ச்சியாக இது பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு உதவி செய்த வருவதாக தெரிவித்து கொண்டு இருக்கும் இவர்கள் டேனீஸ்வரன் சத்தியமூர்த்தி மற்றும் சார்ஸ் நிர்மல் நாதன், செல்வமகள் போன்றவள் வழிநடத்தப்படுவதாகவும் மக்கள் மத்தியில் கூட்டும் சுமத்தப்பட்டுள்ளது.

இவர்கள் தமது தேர்தல் நிலம் கருதியே நிவாரண செயற்பாடுகள் ஈடுபட்டு வருவதாகவும் அதனை அடுத்து தற்பொழுது மக்கள் மத்தியில் இருந்து இவர்கள் விரட்டி அடிக்கப்பட வேண்டும் என்கின்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

அர்ச்சனா ராமநாதருக்கு ஆதரவாக சாட்சிகள் இருக்கின்ற பட்டதாரி பொண்ணுடைய தாயும் மற்றும் அந்த சிசுமை தற்போது பாதிப்புக்கு உள்ளாக்கும் நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் இவர்களது வேலைகளில் யாரும் விழுந்து விட வேண்டாம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட மக்கள் இந்த சாதி வேலையில் இருந்து இந்த குடும்பத்தினை காப்பாற்றி பாதுகாக்க வேண்டும் என அர்ச்சனா ராமநாதன் தனது முகநூல் பக்கத்தில் இப்படி குறிப்பாக வெளியிடலாமே குறிப்பிடத்தக்கது..

பிணத்தின் மருந்தை மீன்களுக்கு அடிக்கும் மீனவர்கள்
Posted in இலங்கை செய்திகள்

பிணத்தின் மருந்தை மீன்களுக்கு அடிக்கும் மீனவர்கள்

பிணத்தின் மருந்தை மீன்களுக்கு அடிக்கும் மீனவர்கள்

பிணத்தின் மருந்தை மீன்களுக்கு அடிக்கும் மீனவர்கள் ,இலங்கை யாழ்ப்பாண பகுதிகளில் பிணத்திற்கு அடிக்கப்படும் ஒருவகையான மருந்தினை மீன்களுக்கு அடித்து அவை பழுதாகாமல் இருப்பதற்காக பயன்படுத்தி வருவதாக மருத்துவர்கள் குற்றம் சுமத்தி இருக்கின்றனர்.

பிணங்கள் பழுதடையாமல் இருப்பதற்காக அடிக்கப்படும் அந்த திரவ வடிவிலான மருந்தினை மீன்களுக்கு பயன்படுத்துவதால் அந்த மீன்களுக்கு அருகில் இளையான் மொய்ப்பதில்லை எனவும்,

அதை உண்ணுகின்ற மக்களுக்கு கேன்சர் நோய் உள்ளிட்டவை ஏற்படுவதாகவும் மக்களை மிக அவதாரமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கோப்பாய் உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான மீன்கள் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகவும் தமிழருடைய வடமகான

பகுதிகளில் இந்த இவ்வாறான மருந்துகளை பயன்படுத்தி நீங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் ,

அவற்றை இரண்டு நாட்கள் பிரிட்ஜ்கள் வைத்தாலே துர்நாற்றம் வீசுகின்ற நிலை காணப்படுவதாகவும் மீனவர்கள் செய்கின்ற இந்த லீலைகளை மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

தமது குறுகிய கால வியாபார நோக்கத்தை கருதி இவ்வாறு செய்கின்ற மீனவர்கள் இந்த செயல்பாட்டினால் அதனை வாங்கி சுவைத்து உனக்கு இந்த

மீனவர்கள் பலர் பாதிக்கப்படுவதாகவும் அவர்களுக்கு இதை உண்கின்ற பொழுது வயிற்று நோய் தாக்கம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன்களை வாங்கி உண்ணும் மக்களை மிகையாக இருங்கள் உங்கள் உங்களுடைய விரும்பி உண்ணும் மீன்களுக்குள் இவ்வாறான பணத்துக்கு

அடிக்கப்படும் மருந்துகளை பயன்படுத்துவதால் உங்கள் உடல் உபாய்கள் அவயகரமான நிலைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.