தீவிரவாதிகள் அட்டூழியம் -கிராமங்களுக்குள் புகுந்து 47 பேரை சுட்டு கொன்று எரித்த கொடூரம்
தீவிரவாதிகள் அட்டூழியம் -கிராமங்களுக்குள் புகுந்து 47 பேரை சுட்டு கொன்று எரித்த கொடூரம்
வடமேற்கு நையீரியாவில் பல கிராமங்களுக்குள் புகுந்த தீவிரவாதிகள் அப்பாவி மக்களை சுட்டு கொன்றுள்ளனர் .
திடீரென மக்கள் கிராமங்களுக்குள் சென்று சுற்றிவளைத்த ஆயுத படைகள் அங்கிருந்த மக்களை தாக்கி கொடுமை படுத்தி அதன்
பின்னர் படுகோரமாக சுட்டு கொன்று கிராமத்தை எரித்து விட்டு தப்பி சென்றுள்ளனர்
இந்த தீவிரவாதிகளின் தொடர் வெறிச்செயலினாலே மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர் ,
பொக்கோ கராம் அமைப்பினர் மக்களை கடத்துவது ,கொலை ,செய்வது
பாலியல் வன்கொடுமை என தமது இனவாத ,இராணுவ அடக்குமுறையை கட்டவிழ்த்து வருவது தொடர்கிறது .

அமெரிக்கா விமானத்தை வீழ்த்த துரத்தி சென்ற ரசியா விமானம் – அதிர்ச்சி video
அமெரிக்கா விமானத்தை வீழ்த்த துரத்தி சென்ற ரசியா விமானம் – அதிர்ச்சி video
சிரியாவின் எல்லை அருகே பறந்து சென்ற அமெரிக்காவின் US Boeing P-8A விமானத்தை இடைமறித்த ரஷியா
விமானம் ,அமெரிக்கா பயணிகள் விமானம் போல செயல் படும் இந்த உளவு விமானத்தை மோதி வீழ்த்திட சென்ற திகில் காட்சி வெளியிட பட்டுள்ளது
சிரியாவில் நிறுத்த பட்டுள்ள ரசியாவின் s – 400 ரக வான்காப்பு ஏவுகணைகளை செயல் இழக்க வைக்கும் நகர்வில் இந்த அமெரிக்கா உளவு விமனம செயல் பட்டுள்ளது
அதனை கண்டறிந்த ரஷியா போர் விமானங்கள் சடுதியாக பறந்து சென்று அமெரிக்கா விமானத்தை இடைமறித்து மிரட்டி சென்ற காட்சிகள்
இவை ,மிக அருகில் விமானத்தை பின்புறமாக சென்று வீழ்த்தும் நிலை கொண்ட செயல் பாடாக இந்த சம்பவம்
அமைந்துள்ளது,அமெரிக்காவின் மூன்றாவது அத்து மீறல் சம்பவம் இதுவாகும் .
இந்த ஏவுகணைகளை செயல் இழக்க வைத்தால் அமெரிக்காவால் , ரசியாவின் விமான தளம் ,ஈரான் விமான தளங்களை இலகுவாக அழித்து விடலாம் என்பது அமெரிக்காவின் எண்ணம் .
அவ்வாறான தவறான கணிப்பிற்கு ரசியா கொடுத்த பெரும் அதிர்ச்சி வைத்தியம் வானில் இடை மறித்து அமெரிக்கா விமானத்தை வீழ்த்த முயன்ற செயலாகும்

#US Boeing P-8A Poseidon intercepted by #russian Su35 near #Syria pic.twitter.com/cq24O5bH8U
— Last Defender (@LastDef) April 20, 2020
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்

- இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்

- இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்து

- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்

- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு

ரஞ்சன் ராமநாயக்க பணியில் விடுதலை
ரஞ்சன் ராமநாயக்க பணியில் விடுதலை
முன்னாள் எம்பி ரஞ்சன் ராமநாயக்க குற்ற தடுப்பு பிரிவினரால் கைது
செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டார் ,அவர் தற்பொழுது விடுதலை பிணையில் செய்யப் பட்டுளளார்
ஆளும் அரசு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் தீவிரம் பெற்றுள்ளன
அதன் தொடர்ச்சியே இவ்வாறான மிரட்டி ,அடிபணிய வைக்கும் கைதுகள் என தெரிவிக்க படுகிறது

கொரோனா நோயால் 295 பேர் பாதிப்பு
இன்றைய தினம் (2020.04.20) இதுவரையில் கொரோனா வைரசு தொற்றுக்கு
உள்ளாகி உறுதி செய்யப்பட்ட பதிய நோயாளர்கள் 24 பேர் பதிவாகியிருப்பதாக
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உறுதி செய்தார்.
இதற்கமைவாக இலங்கையில் பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 295 ஆகும்.
இன்றை தினத்தில் பதிவான அனைத்து நோயாளர்களும் கொழும்பு 12 பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் தனிமைப்படுத்தல்
நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள் மத்தியில்
இருந்து அடையாளங்காணப்பட்டவர்கள் என்றும் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்
ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்
முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த சில மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் மற்றும் தளர்த்தப்படும் நேரங்கள் திருத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 27 திங்கள் காலை 5.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமை வரை இரவு 8.00 மணி முதல் மறுநாள் காலை 5.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும்.
ஏப்ரல் 24 வெள்ளி இரவு 8.00 மணிக்கு இம்மாவட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 27 திங்கள் காலை 5.00 மணி வரை அமுலில் இருக்கும்.
அந்தவகையில் வார இறுதி நாட்களான 25 சனி மற்றும் 26 ஞாயிறு ஆகிய தினங்கள் இம்மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு பிரவேசிப்பது மற்றும் அங்கிருந்து வெளியேறிச் செல்வது அனைவருக்கும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ளுதல் மற்றும் விவசாய நடவடிக்கைகள்
போன்றவை தொடர்பில் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிபந்தனைகள், அறிவுறுத்தல்களில் மாற்றங்கள் இல்லை
இலங்கையில் வெடிக்க இருந்த குண்டு – தப்பிய மக்கள்
இலங்கையில் வெடிக்க இருந்த குண்டு – தப்பிய மக்கள்
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்குப் பின்னரும் மற்றுமொரு
பயங்கரவாத தாக்குதலை நடக்க திட்டமிடப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தனர்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதுதொடரபாக மேலும்
தெரிவிக்கையில் ,கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து மேற்கொள்ள
திட்டமிடப்பட்ட இரண்டாவது தாக்குதல் குறித்து தகவல்கள் புலனாய்வுப்பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகள் மூலம்
கண்டறியப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இதன் அடிப்படையில் இந்த தாக்குதலைத் திட்டமிட்டமை தொடர்பில் சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி தொடர்பாக ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு
பதிலளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அவரது தொழில் ரீதியான தொடரின் அடிப்படையில் இடம்பெற்ற தொடர்பு மற்றும்
தொலைபேசி அழைப்புகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படவில்லை. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சமிபத்தில்
மேற்கொண்ட விரிவான விசாரணையின் அடிப்படையிலேயே சட்டத்தரணி கைது இடம்பெற்றதாகவும் கூறினார்.
ஒரு சில அமைப்புகளை ஆரம்பித்து அதற்கு தலைமைத்துவம் வழங்கி, அதற்கு நிதியுதவி வழங்கிய நபர்கள் குறித்த விடயங்களும்
தற்போது இடம்பெற்று வரும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அவ்வாறானோரும் தற்போது
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர் . உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர்
பயங்கரவாத தலைவர் ஸஹ்ரான் ஹாசிமின் குழு இரண்டாக பிளவுபட்டதாகவும், அதில் ஒரு குழு பிரிந்து சென்றதோடு, மற்றைய
குழுவே இவ்வாறான தாக்குதலை மேற்கொண்டதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டிய பொலிஸ் ஊடகப்
பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன புலனாய்வுப் பிரிவினரை திசைதிருப்புவதற்காக பயங்கரவாதிகள் மேற்கொண்ட முயற்சி இது என்றும் கூறினார்.
இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் முஸ்லிம் தீவிரவாதத்தை ஏற்படுத்துவதற்காக சில அமைப்புகளுடன்
இணைந்து பணியாற்றியுள்ளமை மற்றும் இஸ்லாத்தை தவறான விளக்கங்கள் மூலம் வெளிப்படுத்தி ஒரு சில இளைஞர்களை
பிழையாக வழி நடாத்திச் சென்றுள்ளனர். இதில் இக்குண்டுதாரிகள் நேரடியாக தொடர்புபட்டுள்ளனர்.
இவ்வாறான திட்டத்திற்கு உதவி ஒத்தாசை, அதனைத் தூண்டியமை உள்ளிட்ட விடயங்களை மேற்கொண்டவர்கள் தொடர்பிலும்
தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுகிறது. தெற்காசிய வலயத்திலுள்ள நாடொன்றில்
மேற்கொள்ளப்படும் தாக்குதலொன்றை அடுத்து, அதனை மேற்கொள்ளும் சில வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை, இரகசியமாக இலங்கைக்கு அழைத்து வந்து பாதுகாப்பாக வைத்திருக்க
உதவுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தமை தொடர்பில் தகல்வகள் வெளிவந்துள்ளன என்று தெரிவித்த அவர் உயிர்த்த ஞாயிறு
தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் ஓரிரு மாதங்களில் இடம்பெற்ற விசாரணைகளின்போதும், குறித்த சட்டத்தரணி விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவித்த அவர்
சமிபத்திய விசாரணைகளின் அடிப்படையிலேயே அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகள் உயிர்த்த ஞாயிறு தொடர்பானவை அல்ல.
அவர் தனது கடமையில் தவறியமை தொடர்பில் வேறு குற்றத்தின் அடிப்படையிலானது எனவும் அவ்விசாரணை வேறாக
இடம்பெறுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன மேலும் தெரிவித்தனர்.

சுட்டியல் ,கத்தி,துப்பாக்கியுடன் நட மாடியவரை -சுட்டும் கொன்ற பொலிஸ்
சுட்டியல் ,கத்தி,துப்பாக்கியுடன் நட மாடியவரை -சுட்டும் கொன்ற பொலிஸ்
அவுஸ்ரேலியா Rockdale, தெற்கு சிட்னி பகுதியில் கத்தி ,சுத்தியல் ,துப்பாக்கியுடன்
நடமாடிய நபரை சுற்றிவளைத்த போலீசார் அவரை சுட்டு படுகொலை செய்தனர் .
ஆயுதங்களை கீழே போடுமாறு போலீசார் வேண்டிய பொழுதும் அதனை
செவி மடுக்காது எதிர் நிலை எடுத்த காரணத்தால் அவர் மீது சரமாரி துப்பாக்கி சூட்டை மேற்கொண்டனர் .
இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடி துடித்து இறந்தார் .இது தீவிரவாத
செயலா என்பது தொடர்பில் போலீசார் தெரிவிக்கவில்லை

லொறிகளை தூக்கி பிரட்டி வீடுகளை உடைத் தெறிந்த கோர புயல் – video
லொறிகளை தூக்கி பிரட்டி வீடுகளை உடைத் தெறிந்த கோர புயல் – video
அமெரிக்காவில் நேற்று முன்தினம், முன்னைய தினம் இடம்பெற்ற புயலின் கோர தாண்டவத்தில்
லொறிகளை தூக்கி பிரட்டியுள்ளதும் ,வீடுகளை அடித்து உடைத்துள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன
இந்த புயலின் தாக்குதலில் சிக்கி ஒரு லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வந்தனர்
இந்த காட்சிகள் புயலின் வேகத்தை தெளிவாகவே சொல்லி செல்கின்றன
கொரனோ ஒரு புறம் மக்களை வாட்ட மறு புறம் புயல் இவ்வாறு
கதற வைத்துள்ளது குறிப்பிட தக்கது

அமெரிக்கா போர் கப்பலை இப்படித்தான் சுற்றி வளைத்தோம் -ஈரான் வெளியிட்ட – video
அமெரிக்கா போர் கப்பலை இப்படித்தான் சுற்றி வளைத்தோம் -ஈரான் வெளியிட்ட – video
ஈரான் பாரசீக வளைகுடா பகுதியில் ஈரான் எல்லைக்குள் நுழைய முயன்ற அமெரிக்காவின் போர் கப்பல்களை எப்படி சுற்றி
வளைத்தோம் என ஈரான் புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது
தமது கடல் படை கப்பல்களை ஈரான் தாக்கி அழிக்க முனைந்தது என பரப்புரை மேற்கொண்டு வந்தது ,அதற்கு பதிலடி தரும்
வகையில் இந்த காணொளியை அவசரமாக ஈரான் வெளியிட்டுள்ளது
தொடர்ந்து இவ்வாறான முறுகல் சம்பவங்கள் உக்கிரமடைந்து வருகிறது ,அமெரிக்கா போர் கப்பல்களுக்கு ஈரானின் இந்த
படகுகள் தூசு என்பதாகும் ,ஆனாலும் கடலில் இவ்வாறான கண்ணாம் பூச்சி ஆட்டம் தொடரத்தான் செய்கின்றன

- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்

- இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்

- இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்து

- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்

- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு

ஜப்பானில் பாரிய நில நடுக்கம் – சுனாமி அபாயம் – மக்கள் சிதறி ஓட்டம்
ஜப்பானில் பாரிய நில நடுக்கம் – சுனாமி அபாயம் – மக்கள் சிதறி ஓட்டம்
இன்று திங்கட்கிழமை அதி காலை கிழக்கு ஜப்பான் கடல் பகுதியை அண்மித்து
இடம் பெற்ற பாரிய நில நடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டுள்ளன ,இந்த நில அதிர்வு 6.4 ஆக பதிவாகியுள்ளது
சுனாமி அனர்த்தம் நிகழும் அபாயம் உளதாக எதிர் பார்க்க படுகிறது ,
மக்கள் பீதியில் சிதறி ஓடிய வண்ணம் உள்ளனர் ,வீடுகளை விட்டு வெளியில் உலாவுவதை அவதானிக்க முடிகிறது
இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவிலை ..சில
மணித்தியாலங்களில் இதே பகுதியில் முழுமையான விபரங்கள் இணைக்க படும்

கனடாவில் ஆயுததாரி வெறியாட்டம் -17 பேர் சுட்டு கொலை -போலீசார் குவிப்பு video
கனடாவில் ஆயுததாரி வெறியாட்டம் -17 பேர் சுட்டு கொலை -போலீசார் குவிப்பு
கனடாவின் வடக்கு Nova Scotia பகுதியில் 51 வயதுடைய ஆயுத தாரி மக்கள் மீது நடத்திய
துப்பாக்கி சூட்டில் பத்து பேர் பலியாகியுள்ளனர் .மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர் மக்களை சுட்டு கொன்ற ஆயுத தாரி
தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார் ,தற்போது ஆயுத போலீசார் குவிக்க பட்டு பாது காப்பு பல படுத்த பட்டுள்ளது
இந்த மக்கள் படுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,இது தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பில்
போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
கான்ஸ்டபிள் தர அதிகாரி ஒருவரும் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளார் ,மேலேயும் இரு காவல்துறை பெண்மணி காயமடைந்துள்ளார்

தீ கொண்டு எழுவாய் …!
தீ கொண்டு எழுவாய் …!
கறுப்பு தார் வீதியிலே
கடுகதி வேகத்திலே …
ஓடும் வண்டிகளின்
ஓல சத்தம் கேட்கிறது ….
நாளும் நால் உயிர் பலிகள்
நாள் தோறும் நடக்கையில..
கண் மூடி உறங்கும்
காவல்துறை நினைக்கையில….
வாள் தீட்டி ஆளும் தலை
வலியோடு வெட்டிடவே ….
ஆள் நெஞ்சு துடிக்கிறது
அங்கமெலாம் கொதிக்கிறது …..
பிரியும் உயிர் தடுத்திடவே
பிடரி அடி கொடுத்திடவே …
சாலைகளின் விதிமுறையை
சாலை காப்பு தடுக்கலையே ….
கையூட்டு கை நிறைய
கண்ணெதிரே உயிர் பிரிய …
வாய் பார்த்து நிற்கின்ற
வக்கற்ற அரசு இது …..
கொதிக்கின்ற கோபத்திலே
கொழுத்திடுவோம் வா மனிதா…
ஆட்சி தலை உடைத்தெறிந்து – நல்
ஆட்சியை நட்டிடுவோம் ….!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -20/04/2019
எயன்சியிடம் மனிசியை கூப்பிட பணம் கட்டி ஏமாந்து போனேன் -பாடல் video
எயன்சியிடம் மனிசியை கூப்பிட பணம் கட்டி ஏமாந்து போனேன் -பாடல் video
இன்னிசை பாடிவரும் பாடலை மாற்றிப் பாடும் இந்திரன் video
பாடகர் அவ்வப் போது எடுத்துக் கொள்வார் இவ்வாறான அவதாரங்கள்.
எயன்சியிடம் மனிசியை கூப்பிட பணம் கட்டி ஏமாந்து போனேன்

ஆட வைக்கும் -சாந்தன் மகன் பாடிய காதல் பாடல் -video
ஆட வைக்கும் -சாந்தன் மகன் பாடிய காதல் பாடல் -video
ஈழ விடுதலை பாடல்களை பாடிய தேனிசை குரலோன் சாந்தன் அவர்களை புதல்வன் ,மற்றும் அவர் தம் குழுவினர் பாடிய
காதல் பாடல் தற்பொழுது இணையத்தில் பட்டையை கிளப்புது ,அந்த பாடலை நீங்கேளே பாருஙகள் ,திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பாடல்
கண்ணை காட்டியே,…கண்ணை காட்டியே ….உன் பக்கம் என்னை நீ முழுசாய் சாய்கிறாய்…..
வம்பாய் பேசியா …வம்பாய் பேசியே …..உன்னிடை முழுதாய் நினைக்க வைக்கிறாய்…..
இசை : இசை நவீனம் ஸ்ரீ நிர்மலன்
பாடியவர் : கோகுலன் சாந்தன் -பிரதா கந்தப்பு
பாடல் வரிகள் : கி.தீபன்
அருமை அட்டகாசம் ,வாழ்த்துக்கள் ,அசத்துங்க ,,,இதுபோல மேலும் பல பாடல்களை எதிர் பார்க்கிறோம் .

ஏன் எதற்கு என்னை மறந்தாய் -கலக்கும் காதல் பாட்டு video
ஏன் எதற்கு என்னை மறந்தாய் -கலக்கும் காதல் பாட்டு video
நம்மவர் படைப்பில் புதிதாக வெளிவந்துள்ள பாடல்கள் .
காதில் தென்னிந்தியா திரைப்பட பாடல் போல இவை கேட்கும் போதே கட்டி போடுகின்றன .
கொஞ்சம் வாங்க பாருங்க ,,வரிகளை ரசியுங்க
ஈர் கை தட்டி வாழ்த்துரைப்போம்
இசை : இசையூற்று ஜெயந்தன்
பாடியவர் : லக்சி
பாடல் வரிகள் : கி.தீபன்
தயாரிப்பு : சுபர்த்தனா படைப்பகம்

விவசாயம் செய்யும் இளம் நடிகை – வைரலாகும் வீடியோ
விவசாயம் செய்யும் இளம் நடிகை – வைரலாகும் வீடியோ
கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால் இளம் நடிகை ஒருவர் விவசாயம் செய்து வருகிறார்.
விவசாயம் செய்யும் இளம் நடிகை – வைரலாகும் வீடியோ
கீர்த்தி பாண்டியன்
பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர் கடந்தாண்டு வெளியான தும்பா படம் மூலம் திரையுலகில்
அறிமுகமானார். இதனை தொடர்ந்து மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கி பிரபலமான கோகுல் டைரக்டு செய்யும் இப்படத்தில் கீர்த்தி
பாண்டியனின் தந்தை அருண் பாண்டியனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தந்தை, மகள் பாச உறவை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.
கொரோனா ஊரடங்கில் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் நடிகை கீர்த்தி பாண்டியன்
சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கீர்த்தி பாண்டியன் டிராக்டர் ஓட்டியபடி சென்று நிலத்தில் உழுவது
போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. “கொரோனா விடுமுறையில் சொந்த நிலத்தில் உழுவதற்காக வந்து விட்டேன். இது சுற்றிலும்
வேலிகள் அமைத்து தனிமைப்படுத்தப்பட்ட இடம். பொது இடம் அல்ல. சொந்த நிலத்தில் உழுவது ஊரடங்கை மீறுவது போன்று
ஆகாது நாங்கள் ஊரடங்கை மதிக்கிறோம்” என்றும் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் நடிகை
அமெரிக்காவில் நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் நடிகை
அமெரிக்காவில் சரியான தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் தவித்து வருவதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சரியான தங்குமிடம் இல்லை…. நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் நடிகை
சவுந்தர்யா சர்மா
அனுபம் கெர் தயாரித்த ராஞ்சி டைரிஸ் படம் மூலம் அறிமுகமானவர் சவுந்தர்யா சர்மா. இந்த படத்துக்காக சில பட
விழாக்களில் அறிமுக நடிகை விருதை வாங்கினார். பல் மருத்துவரான இவர், நடிப்பு ஆர்வம் காரணமாக, தேசிய
நாடகப்பள்ளியில் பயின்றார். சொந்தமாக மஸ்டர்ட் அண்ட் ரெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
இதன் மூலம் படங்கள் தயாரிக்க இருக்கிறார். இவர் தனது அடுத்த பட வேலைகளுக்காக, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பிலிம்
அகாடமியில் நடக்கும் ஒர்க்ஷாப்பில் கலந்துகொள்ள சென்றிருந்தார். கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அங்கு சிக்கியுள்ளார்.
சவுந்தர்யா சர்மா
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரதாண்டவம் ஆடுகிறது. இந்நிலையில் நியூயார்க்கில் சிக்கியுள்ள சவுந்தர்யா,
மாணவர்களை மீட்க இந்திய அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். ‘சுமார் 400 மாணவர்கள் இங்கு
சிக்கியுள்ளனர். வாழ்வதற்கு கடினமான சூழல் நிலவுகிறது. ஒவ்வொருவருக்கும் சவாலான நேரம்.
சரியான தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் மாணவர்கள் தவித்து வருகிறார்கள். இந்திய தூதரகம் அவர்களுக்கு எந்த
உதவியையும் செய்யவில்லை. அதனால் மத்திய வெளியுறவு அமைச்சகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இணையத்தில் வைரலாகும் கொரனோ யுத்த பாடல் – வீடியோ
இணையத்தில் வைரால்கும் கொரனோ யுத்த பாடல் – வீடியோ
இலங்கையில் நீண்ட காலமாக முன்னணி இசைக்குழுவை நடாத்தி
சந்தவரான மூத்த இசையமைப்பாளர் கல்முனை சிவா அவர்கள்
இசையமைத்து வெளிவந்திருக்கும் புதிய கொரோனா பாடல் வெளிவந்துள்ளது.
பழமை என்பது எப்போதும் இனிமை. அதற்கமைய
இசையமைப்பாளர் இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
இந்தப் பாடலுடன் தொடர்ந்து இசையமைப்பாளர் இசையமைத்த
பாடல்கள் பல வெளிவரவுள்ள.
உங்கள் அயராத உழைப்பிற்கும் ,தளராத துணிவிற்கும் ,ஓயாது இசைக்கும் படைப்பிற்கும், எமது மனமார்ந்த ,வாழ்த்துக்கள் ,பாராட்டுக்கள்

இலங்கையில் 22, அரச நிறுவனங்களை திறக்க உத்தரவு – தடை நீக்கம்
இலங்கையில் 22, அரச நிறுவனங்களை திறக்க உத்தரவு – தடை நீக்கம்
ஏப்ரல், 22 புதன் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் அரச நிறுவனங்களின்
செயற்பாடுகள் குறித்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் தலைவர்கள் 22 புதன் முதல் ஒன்றுகூடி
தமது நிறுவனங்களின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து திட்டமிட வேண்டும்.
ஏப்ரல் 22,23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களின் தலைவர்கள் தமது பிரதித் தலைவர்கள்
உட்பட ஏனைய முக்கிய அதிகாரிகளை ஒன்றுகூட்டி அந்தந்த நிறுவனங்களின் சேவைக்கு அழைக்கப்படவுள்ள ஊழியர்களின்
எண்ணிக்கை, அழைக்கப்பட வேண்டிய அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் பணிகள் ஆகியவற்றை
தீர்மானிக்குமாறு நிறுவனத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டங்களில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் செயற்திட்டமொன்றை தயாரித்து 27 திங்கள் முதல் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
திட்டம் பற்றி ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவிக்குமாறும் நிறுவனத் தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 269 ஆக உயர்வு
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 269 ஆக உயர்வு
இலங்கையில் இதுவரையில் பதிவான கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 269 ஆகும்.
இன்றைய தினம் (2020.04.19) இதுவரையில் கொரோனா வைரசு தொற்றினால் உறுதி செய்யப்பட்ட 15 நோயாளர்கள்
பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உறுதி செய்தார்.
இந்த நோயாளர்கள் 15 பேரும் கொரோனா தொற்று நோயாளர்களுடன்
நெருக்கமாக தொடர்பை கொண்டிருந்ததினால் கொழும்பு பிரதேசத்தில்
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.








