Posted in Uncategorized

அமெரிக்காவில் கொரனோவால் 500,071 மக்கள் மரணம்

அமெரிக்காவில் கொரனோவால் 500,071 மக்கள் மரணம்

அமெரிக்காவில் பரவி வந்த கொரனோ நோயின் தாக்குதலில்சிக்கி இதுவரை 500,071 மக்கள் பலியாகியுள்ளதாக அந்த நட்டு அரசு அறிவித்துள்ளது ,

இந்த நோயினை கட்டு படுத்தும் மருந்துகள் கண்டு பிடிக்க பட்டுள்ள

நிலையிலும் நாள் தோறும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அமெரிக்காவில் பலியாகிய வண்ணம் உள்ளனர்

டிரம்பின் ஆட்சி காலத்தில் இந்த நோயினால் இறந்தவர்கள் எண்பது சதவீதமானவர்கள் கறுப்பின மக்கள் என புள்ளி விபரங்கள்

காண்பிக்கின்றன ,இது திட்டமிடப்பட்ட இன அழிப்பின் ஒன்றாக பேச படுகிது

Posted in உலக செய்திகள்

வானில் தீப்பிடித்த Boeing 777s விமானம் – அனைத்து விமானங்களும் தரையிறக்கம்

வானில் தீப்பிடித்த Boeing 777s விமானம் – அனைத்து விமானங்களும் தரையிறக்கம்

உலக நாடுகளில் அதிக விமான பாவனையில் உள்ள விமானமாக Boeing 777s விளங்குகிறது ,

சில நாடுகளுக்கு முன்பாக குறித்த விமானத்தின் வலதுபுற இயஙகிரம் ஒன்று தீப்பிடித்து கொண்ட நிலையில் மேற்படி விமான

நிறுவனத்தின் குறித்த Boeing 777s ரக விமானங்களில் பாதி தற்ப்போது தரையிறக்க பட்டுள்ள ,
பரப்பில் ஈடுபட தடை விதிக்க பட்டுள்ளது

தொடராக இவ்விதமான விபத்துக்களில் சிக்கி வருவதால் குறித்த விமானங்கள் பயண செய்திட மக்கள் அஞ்சி வருகின்றனர்

,இதனால் இந்த விமானங்களை கொள்வனவு செய்திட அடர் கொடுத்த

நிறுவனங்களும் அதனை கொள்வனவு செய்வதில் சற்று தாமதம் காண்பித்து வருகின்றனர் என குறிப்பிட படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

மரணவீட்டுக்கு சென்ற பேரூந்து கவிழ்ந்தது – 13 பேர் காயம்

மரணவீட்டுக்கு சென்ற பேரூந்து கவிழ்ந்தது – 13 பேர் காயம்

இலங்கை நுவரெலியா நானு ஓயா பகுதியில் பயணித்து கொண்டிருந்த தனியார் பேரூந்து ஒன்று

சாரதியின் கட்டுப் பாட்டை இழந்து விபத்தில்சிக்கியது ,இதன்பொழுது

அதில் பயணித்த 13 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்


மரண வீடொன்றுக்கு சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்த பொழுதே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கொரனோ நோயில் சிக்கி 130,000 பேர் மரணம்

பிரிட்டனில் கொரனோ நோயில் சிக்கி 130,000 பேர் மரணம்

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் ஒருலட்சத்து முப்பதாயிரம் பேர்

மரணமாகியுள்ளனர் ,மேலும் இதைவிட வீடுகள் ,வயோதிபர்

மடங்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை இதுவரை இணைக்கப்படவில்லை

இரண்டாம் அலையாக பரவி வரும் நிலையில் இவ்விதம் வசித்து

வந்தவர்கள் விபரங்கள் அறிவிக்க பட்டால் அது பல்லாயிரமாக உயரும் என எதிர் பார்க்க படுகிறது

இரண்டாம் அலையில் ,மருத்துவமனைகளில் இறந்தவர் விபரங்கள் மட்டுமே வெளியிட பட்டு வந்துள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் லொக்கடவுன் நீக்க படுகிறது -பாடசாலைகள் திறப்பு – விபரம் உள்ளே

பிரிட்டனில் லொக்கடவுன் நீக்க படுகிறது -பாடசாலைகள் திறப்பு – விபரம் உள்ளே

பிரிட்டனில் நடைமுறையிலிருக்கும் லொக்கடவுன் திறக்க படுகிறது

அவை கட்டம் கட்டமான நகர்வின் ஊடக திறக்க பட உள்ளது என ஆளும் அரசு அறிவித்துள்ளது

எதிர் வரும் எட்டாம் திகதி பாடசலைகள் திறக்க படுகின்றன ,இரு வீட்டார் ,அல்லது ஆறு பேர் ஒன்றாக கலந்து பேச முடியும் ,

அதனை அடுத்து சித்திரை 12 ஆம் திகதி ,பார்கள் நீச்சல் தடாகங்கள்,ஆடம்பர கடைகள் உள்ளிட்டவைகள் திறக்க படும்

வைகாசி மாதம் 17 ஆம் திகதி நிகழ்கால கொரனோ விதிகளில் திடீர் மாற்றம் தளர்வு மேற்கொள்ள படுகிறது

அதன் படி ஒரே தடவையில் முப்பது பேர் கலந்து கொள்ள முடியும், மக்கள் வீதிகளில் நடமாட முடியும் ,அதாவது முழு லொக்கடவுன் நீக்க படுகிறது என்பதாக அரசு அறிவித்துள்ளது

Posted in Uncategorized

இத்தாலிய தூதர் உள்ளிட்டவர்கள் -குண்டு தாக்குதலில் படு கொலை

இத்தாலிய தூதர் உள்ளிட்டவர்கள் -குண்டு தாக்குதலில் படு கொலை

கொங்கோ நாட்டில் உள்ள தமது தூதரகத்திற்கு சென்று கொண்டிருந்த இத்தாலிய தூதரக அதிகாரிகள் வாகன

தொடரணியை இலக்கு வைத்து நடத்த பட்ட குண்டு தாக்குதலில் இத்தாலிய தூதரக அதிகாரி உள்ளிட்ட மூவர் படுகொலை செய்ய பட்டுள்ளனர்


மேற்படி தாக்குதலுக்கு இத்தாலிய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது

இறந்தவர்கள் சடலங்கள் நாட்டுக்கு எடுத்துவரப் படும் நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டுள்ளன

Posted in Uncategorized

செவ்வாயில் தரையிறங்கிய விண்கலம் – காணொளி வெளியிட்ட நாசா

செவ்வாயில் தரையிறங்கிய விண்கலம் – காணொளி வெளியிட்ட நாசா

நாசா விண்வெண்ளை ஆராய்ச்சி மையம் செவ்வாய்கிரகத்திற்கு விண்கலம் ஒன்றை அனுப்பியது ,இதன் பொழுது அந்த விண்கலம்

தரை இறங்கும் பொழுது ,அதன் சத்தம் ,மற்றும் காணொளி காட்சிகளை வெளியிட்டுள்ளது

பத்து நொடிகள் அடங்கிய அந்த ஒலியில் பல விடயங்களை கணிக்க முடிவதாக அது தெரிவித்துள்ளது ,மனிதர்கள் இங்கு உயிர் வாழ

போதுமான சூழல்கள் இருப்பதாக அது தெரிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

ஐநா மனித உரிமை கூட்ட தொடர் இன்று ஆரம்பம் – நெருக்கடியில் இலங்கை

ஐநா மனித உரிமை கூட்ட தொடர் இன்று ஆரம்பம் – நெருக்கடியில் இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்ட தொடர் இன்று ஆரம்பமாகிறது

நாற்பத்தி ஆறாவது கூட்டத் தொடரில் இலங்கை புரிந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரேரணைகள் கடுமையான மொழிவுகளுடன் முன் வைக்க பட்டுள்ளன

இந்த விடயத்தில் இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது ,இந்த கூட்ட தொடர் தமிழர்கள் எதிர்பார்க்கும்

தீர்வினை பெற்று தருமா என்பதை முடிவில் தெரிய வரும் என தமிழர் தேசம் நம்புகிறது

Posted in இலங்கை செய்திகள்

நெடுந்தீவு கடலில் இரு மீனவர்கள் மாயம் – கண்ணீரில் உறவுகள்

நெடுந்தீவு கடலில் இரு மீனவர்கள் மாயம் – கண்ணீரில் உறவுகள்

இலங்கை நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் நோக்கி சென்ற இரு

மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்

இவ்வாறு காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் கடற்படை ஈடுபட்டுள்ளது


சமீப நாட்களாக தமிழர் பகுதிகளில் பலர் மர்மமாக படுகொலை செய்யப்பட்டு

வரும் நிலையில் இந்த காணாமல் போதலும் இடம்பெற்றுள்ளது இங்கே சுட்டி காட்ட தக்கது

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

இராணுவம் போர் குற்றத்தில் ஈடுபடவில்லை- இலங்கை திமிர் பேச்சு

இலங்கை ஹிட்லர் ர் மகிந்த ஆட்சியில் மேற்கொள்ள பட்ட தமிழ் இனப் படுகொலையின்

பொழுது இலங்கை அரச இராணுவம் எவ்வித போர் குற்றங்களிலோ ,மனித உரிமை மீறல்களிலோ ஈடுபடவில்லை என இலங்கை அரசு திமிராக பேசி வருகிறது

புலிகள் மீது குற்ற சாட்டு

அனைத்து குற்றங்களையும் புரிந்தவர்கள் ஒன்று பட்ட இலங்கை சோஷலிச குடியரசை இரண்டாக உடைக்க பிரிவினைவாத போரில்

ஈடுபட்ட தமிழீழ விடுதலை புலிகளே என ஆளும் இராணுவ மயப்படுத்தப் பட்ட இலங்கை பவுத்த பேரினவாத தேசம் தெரிவித்துள்ளது

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இடம் பெற்று வரும் இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இறுக்கமான நிலைகள் எட்ட பட்டு

அவை சர்வதேச விசாரணை வரை செல்ல வேண்டும் என்ற எழுத்துமூல வாக்குறுதிகள் காண்பிக்க பட்டுள்ள பொழுதும்

ஏற்று கொள்ள மறுக்கும் இலங்கை

,ஐநாவில் வெளியிட பட்ட இந்த அறிக்கையை எம்மால் ஏற்று கொள்ள முடியாது எனவும், அது ஆதாரங்கள் இலலாத பொய் புனைவுகள் என இலங்கை அரச ஆட்சியாளார்கள் மீளவும் கூறி வருகின்றனர்

பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு இலங்கை உட்பட்டு, பாதிக்க பட்ட மக்களுக்கு நேர்த்தியான தீர்வினை வழங்க வேண்டும்

என்கிறது ஐநா மனித உரிமை ஆணையம் ,ஆனால் அதனை செவி மடுத்து கொள்ளும் நோக்கில் இலங்கை செயல்படவில்லை

இந்தியாவை பணியவைத்து குறித்த குற்றங்களுக்கு எதிராக தனது நிலை காப்பை எடுத்து இலங்கை நகர்ந்து வருகிறது

கொழும்பு துறைமுக அபிவிருத்தி பணி கிளறலும் ,இதனை மையப்
படுத்திய இலங்கையின் பிராந்திய நலன் சார்ந்த நகர்வாக மாற்றம் பெற்றுளளது

இந்தியாவை அடக்கும் தந்திரம்

இந்தியாவை சீண்டி ,தமது கொள்கைக்குள் அடிபணிய வைக்கும் நரித்திட்ட நகர்வில் இலங்கை இராய தந்திரம் நகர்ந்து செல்கிறது

சுருங்க செல்ல போனால் தொட்டிலையும் ஆட்டி ,பிள்ளையையும் நுள்ளி விடுகின்ற நிலையில் சீனா,இந்தியா உறவு நகர்ந்து செல்கிறது

எனக்கு இரு பொண்டாட்டி ,வேணும் என்பவருடன் எப்பொழுதும் சென்று விடுவேன் .,மற்றவரை கைவிட்டு விடுவேன் என்பது தான் இலங்கையின் நிலைப் பாடாக நகர்கிறது

மேற்படி இலங்கையின் இந்த இராய தந்திர நகர்வுக்கு இந்தியாவால் கட்டு போட முடியாத நிலை ஏற்படுகிறது ,

மாறாத இந்தியா புலிகள் நிலை

இந்திய கொள்கை வகுப்பாளர்களின் நகர்வுகள் ,புலிகள் இல்லாத காலத்திலும் ,புலிகள் நிலைப் பாடுகள் மீது கோபம் கொள்ள காரணமாக அமைந்து செல்கிறது

இந்திரா காந்தி வளர்த்த புலிகள் ,தமிழக முதல்வர் எம் யீ ஆரால் வளர்க்க பட்ட புலிகளுக்கு ,அதே நாடு ஒற்றை காரணத்தை வைத்து எதிராக நிற்பது வேடிக்கையாக உள்ளது

மாறும் உலக அரசியல்

இது கால மாற்றத்தில் மறையும் நிலை ஏற்படும் ,ஈராக்,ஈரான் பரம எதிரி நாடுகள் ,பெரும் போரை கூட தொடுத்தன ,ஆனால் இப்பொழுது இரு நாடுகளும் இணைந்து பொது எதிரிகளை வெளியேற்றுவதில் கங்கணம் கட்டி நிற்கின்றன

அவ்விதமான சூழல் எதிர்வரும் பத்து ஆண்டுக்குள் இலங்கையில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அடித்து சொல்கிறோம்

நீதி நிலை நாட்டும் ஐநா ..?

ஐநா மனித உரிமை பொது உலக சமாதானத்தை நிலை நாட்டை வேண்டும் எனின் ,தமிழர் இன படுகொலைக்கு உரிய தீர்வினை வழங்க வேண்டும் ,

அது ,பிரிந்து செல்லும் நாடு அமைத்தல் ,அல்லது மாநில சுயாட்சி முறைமையான ஆட்சி பகிர்வாக இது அமைய பெறும் ,பிரிட்டனில் மூன்று மானில சுயாட்சிகள் உள்ளமை குறிப்பிட தக்கது

அதுபோன்ற நிலை ஒன்றே இலங்கையை வசப்படுத்தும் ,நிலைக்கு இலங்கையின் ஆளும் அதிகாரங்கள் வழியமைத்து செல்கின்றன

புதைகுழி தோண்டும் கோட்டா,மகிந்தா

நிரந்தர அரசியல் தீர்வுக்கு சாதகமான பல வழிமுறைகள் கிடைக்க பெற்ற பொழுதும், இனவாத வெறியுடன் ,அடக்குமுறையை விரித்து செல்லும் நிலையினால் ,தவறான வரலாற்றை ஆளும் ஆட்சியாளர்கள் எழுதி வைக்க போகின்றனர்

அதுவே அவர்கள் ஆட்சிக்கு சாவு மணி அடிக்கும் ஒன்றாகவும் மாற்றம் பெற போகிறது ,நிலை மாறும் இலங்கை ஆளும் சிந்தையில்,திசை மாறும் உலகின் திடீர் நகர்வுகளுக்குள் சிக்கும் பேராபத்து ஏற்பட போகிறது …!

– வன்னி மைந்தன் –

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரனோவால் 445 பேர் மரணம்

இலங்கையில் கொரனோவால் 445 பேர் மரணம்

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 445 பேர் இதுவரை மரணமாகியுள்ளனர்

தொடர்ந்து இந்த நோயின் பரவல் கட்டு படுத்த நடவடிக்கை மேற்கொள்ள

பட்டு வருகின்ற பொழுதும் ,மக்கள் உயிர் பலியை தடுக்க முடியாது அரச நிர்வாகம் தினறி வருகிறது

Posted in இலங்கை செய்திகள்

தொண்டமனாறு கடலில் வாலிபர் மரணம்

தொண்டமனாறு கடலில் வாலிபர் மரணம்

இலங்கை யாழ்பாணம் தொண்டமனாறு கடல் பகுதியில் நீராட

சென்ற பதினேழு வயது வாலிபர் ஒருவர் நீரலையில் அடித்து செல்ல பட்டு மரணமாகியுள்ளார்

எனினும் அவர் மீட்க பட்டு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

Posted in குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி

காரோடு சிறுவர்களை கடத்தி சென்ற திருடர்கள்

பிரிட்டன் புறநகர் பகுதியாக விளங்கும் Birmingham பகுதியில் பதின் ஐந்து வயதுடைய திருடர்கள் சிறுவர்களுடன் காரினை கடத்தி சென்றுள்ளனர் .

சிறுவர் கடத்தல்

இயந்திரத்தை ஆன் செய்தபடி காரினை விட்டு சென்ற தந்தைக்கு ஏற்பட்ட மேற்படி செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

மேற்படி சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு விரைந்து தெரிவிக்க பட்ட நிலையில் ,

பொலிசார் சுற்றிவளைப்பு

விரைந்து செயல் பட்ட மிட்லண்ட் காவல் துறையினர் கடத்தல் காரர்களை காருடன் மடக்கி பிடித்தனர்

சிறுவர்கள் எவ்வித பாதிப்பும் இன்றி மீட்க பட்டனர்

மேற்படி இரு கார் திருடர்களும் கைது செய்யப்பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

திருடர்கள்
,இவ்விருவரும் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடும் திருடர்கள் என கண்டு பிடிக்க பட்டுள்ளது

பெற்றவர்களே யாக்கிரதை பிள்ளைகளை இவ்விதம் காருக்குள் விட்டு செல்லாதீர்கள்

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் பற்றி எரிந்த warehouse- அடித்துமூடப் பட்ட வீதிகள்

லண்டனில் பற்றி எரிந்த warehouse- அடித்துமூடப் பட்ட வீதிகள்

தீ பரவல்

லண்டன் எம் 67 வேக சாலைக்கு அருகில் அமையப் பெற்றிருந்த warehouse

ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது ,இந்த தீ பரவல் அதிவேகமாக பரவிய நிலையில் அந்த கடை முற்றாக எரிந்து அழிந்துள்ளது

இந்த தீ பரவல் வானில் பெரும் புகை மூட்டங்களாக காணப்பட்ட நிலையில் குறித்த வேக சாலை அடித்து மூடப் பட்டதுடன்

வீட்டு யன்னல்கள் பூட்டு

அயலில் உள்ள வீட்டு யன்னல்கள் யாவரும் அடித்து பூட்டும்படி உத்தரவிடப்பட்டது

இந்த தீயினை கட்டுப்படுத்த சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் களத்தில் குவிக்க பட்டனர்

தொடரும் விசாரணைகள்

இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

Posted in Uncategorized

பிரிட்டனில் ரவுடி கொலையாளிகளுக்கு 100 வருடம் சிறை

பிரிட்டனில் ரவுடி கொலையாளிகளுக்கு 100 வருடம் சிறை

பிரிட்டன் Scarborough, North Yorkshireபகுதியில் நபர் ஒருவரை அதிகாலை வேளை கத்தியால் குத்தி கொன்ற ஐந்து பேர் அடங்கிய

ரவுடி கும்பளுக்கு நூறு வருடம் சிறைவழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

இளம் கொலையாளிகள்

மேற்படி கொலையை புரிந்த ஐவரும் 19 முதல் 23 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது


நீண்ட வருடங்களாக இடம்பெற்று வந்த நீதி விசாரணைகளில் மூலம் இந்த தீர்ப்பினை நீதிமன்றம் அதிரடியாக வழங்கியுள்ளது

அதிக ஆண்டுகள் தீர்ப்பு வழங்க பட்டுள்ளது இவ்விதமான கொலைகளை புரியும் குற்றவாளிக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது

Posted in சினிமா

நடிகையிடம் ரசிகர்கள் ஆபாச கோரிக்கை

சமூகவலைதளங்களால் பிரபலங்கள் தங்கள் ரசிகர்களுடன் எளிதாக தொடர்பில் இருக்க முடிகிறது. ஆனால் சில நெகட்டிவான மனிதர்களின் வக்கிரமான செயல்களையும் இதில் தவிர்க்க

இளம் நடிகை பிரியா

முடிவதில்லை. இளம் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், ‘ஓரு அதார் லவ்’ படத்தின் ‘மாணிக்க மலராய பூவி’ என்ற பாடலில் கண் சிமிட்டியதால், 2018-ஆம் ஆண்டில் இணையத்தில் வைரலானார்.

பின்னர் அவர் இந்திய அளவில் கவனிக்கப்பட்டார். அதோடு ‘ஸ்ரீதேவி பங்களா’ என்ற பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பையும்

பெற்றார். சமூக ஊடகங்களில் தீவிரமாக உள்ள பிரியா, ‘ஹேப்பி நியூ இயர்’ என்ற படத்தில் இடம் பெற்றுள்ள ‘மான்வா லாகே’ பாடலுக்கு உதட்டை அசைத்து வீடியோ ஒன்றை பதிவேற்றியிருந்தார்.

பிரியா வாரியர் பதிவிட்ட புகைப்படம்

இதற்கு பிரியாவின் நண்பரும், இணைய பிரபலமுமான ஷரன் நாயர், “உங்கள் உதட்டை எப்படி கடிக்க வேண்டும் என்று எனக்குக் கற்றுக் கொடுங்கள்” என்று கேட்டிருந்தார். எதிர்பார்ப்புகளுக்கு

மாறாக இருபத்தி இரண்டு வயதான நடிகை பிரியா, “ஹ்ம்ம்ம்ம் நான் செய்வேன்” என்று பதிலளித்திருந்தார். இப்போது தங்களுக்கும்

அதை கற்பிக்க வேண்டுமென, மற்றவர்களும் பிரியாவுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Posted in சினிமா

நடிக்க உடம்பில் தெம்பு இருக்கு…. யாரும் வாய்ப்பு தருவதில்லை – கண்கலங்கிய வடிவேலு

தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர்.

இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க அவர் மறுத்ததால் இயக்குனர் ஷங்கர் அளித்த புகாரின் பேரில் வடிவேலுவை புதிய

படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.

இதனால் கடந்த சில வருடங்களாக படங்களில் வடிவேல் நடிக்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தின் தடையை மீறி அவருக்கு வாய்ப்பு அளிக்க பட அதிபர்கள் தயங்குகின்றனர்.

வடிவேலு

இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வடிவேலு, பட வாய்ப்பு கிடைக்காதது குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது: “உங்களுக்கெல்லாம் ஒரு வருஷம் தான் லாக்டவுன்.

பட வாய்ப்பு இல்லை வடிவேலு

ஆனால் நான் பத்து வருஷமா லாக்டவுனிலேயே தான் இருக்கிறேன். இப்போதும் நடிக்க உடம்பில் தெம்பு இருக்கு, ஆனால் யாரும்

வாய்ப்பு தருவதில்லை எனக்கூறிய வடிவேலு, கர்ணன் படத்தில் வரும் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலில் வஞ்சத்தில் வீழ்ந்தேனடா என்ற வரியை பாடும்போது கண்கலங்கினாராம்.

Posted in Uncategorized

வானில் வெடித்து சிதறிய விமானம் – கருகி வீழ்ந்த மனித உடல்கள்

வானில் வெடித்து சிதறிய விமானம் – கருகி வீழ்ந்த மனித உடல்கள்

இன்று சற்று முன்னர் நையீரியா நாட்டில் Air B350i என்ற இலகுரக பயணிகள் விமானம் ஒன்று திடீரென வானில் தீப்பிடித்த படி எரிந்து

வீழ்ந்துள்ளது ,இதன் பொழுது அதில் பயணம் செய்த ஏழுபேர் தீயில் கருகி பலியாகினர்

விமான பாகங்கள்

விமானத்தின் சிதறல்கள் ஆங்காங்கே காணப்படுகிறது ,குறித்த விபத்து தொடர்பான தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது

இயந்திர கோளாறு

குறித்த விமானம் இயந்திர கோளாறு காரணமாகவே வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது

Posted in சினிமா

பிறந்து 12 நாட்களே ஆன குழந்தைக்கு இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கிய நடிகை

பிறந்து 12 நாட்களே ஆன குழந்தைக்கு இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கிய நடிகை

தமிழில் வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் அறிமுகமானவர் அனிதா ஹசானந்தனி. விக்ரம் நடித்த சாமுராய், எஸ்.ஏ.சந்திரசேகர்

இயக்கிய சுக்ரன், மகாராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்

. ஐஸ்வர்யாராயின் தால் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கு, இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.

கணவருடன் அனிதா ஹசானந்தனி

கடந்த 2013-ம் ஆண்டு, ரோகித் ரெட்டி என்பவரை அனிதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த பிப்ரவரி 9-ந்

தேதி ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு ஆரவ் ரெட்டி என்று பெயரை வைத்துள்ளனர். நடிகை அனிதா

ஹசானந்தனி, தனது குழந்தை ஆரவ் ரெட்டிக்காக இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய பக்கத்தையும் ஆரம்பித்துள்ளார்.

அதில் தனது குழந்தையின் புகைப்படங்களை பதிவிடுவதற்காக இந்த பக்கத்தை அவர் தொடங்கி உள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு – தொடரும் மர்ம கொலைகள்

கிளிநொச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு – தொடரும் மர்ம கொலைகள்

இலங்கை கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க பட்டுளளார்

பொலீஸ் விசாரணை

,தற்போது நாம் கிளிநொச்சி காவல்துறையினரை தொடர்பு கொண்டு வினவியபோது இறப்பை உறுதி படுத்திய அவர்கள் இது ஒரு தற்கொலை என்றனர்

நாம் இது திட்டமிப்பட்ட படு கொலையாக உள்ளதாக சந்தேகம் உள்ளது என்ற பொழுது ,விசாரணைகள் இப்பொழுது ஆரம்பிக்க

பட்டுள்ளது என்றும் ,விரைவில் இது தொடர்பான முழுமையான விபாரங்கள் தெரிய படுத்த படும் என போலிசார் நமக்கு தெரிவித்தனர்

பளை,முரசுமோட்டை வாலிபர்

பளை,முரசுமோட்டையை பூர்வீகமாக கொண்ட சுமார் நாப்பது வயது மதிக்க தக்க இளம் குடும்பஸ்தரே இவ்வாறு மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க பட்டுளளார்

சகோதரன் வீட்டுக்கு வருவதாக கூறி இருந்தார் இன்னும் வரவில்லை என அவரை தேடி சென்ற பொழுது ,அவரது வாகனம் குறித்த பகுதியில் நிற்பதை கண்ணுற்ற சகோதரன் ஒடி சென்று பார்த்த

பொழுது அவர் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி உற்றுள்ளனர் ,அதன் பின்னர் போலீசாருக்கு தெரிய படுத்த பட்டுள்ளது

சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த படுகிறது

kirupa

மர்ம கொலைகள்

கோத்தபாயவின் ஆட்சியில் தொடராக இவ்விதமான மர்ம கொலைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,தனி நபர் ,அரசியல் பழிவாங்கல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளது

இறந்தவர் இவ்விதமான தற்கொலையில் ஈடுபடும் சிந்தனை கொண்டவர் அல்ல என்பதே உறவினர்கள் வாதமாக உள்ளது

இந்த மர்ம கொலைகள் பின்னால் உள்ளவர்கள் கண்டுபிடிக்க பட்டு தண்டிக்க படுவார்களா ..?

யாழில் கடலில் வாலிபர் சடலம் – இந்த செய்தியை பாருங்கள் மர்ம கொலைகள் பட்டியல் தெரிய வரும் ,கோட்டா அரசின் மக்களை அச்சுறுத்தும் கொலைகளில் இதுவும் ஒன்று