Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் தந்தை, மகளின் கண்டுபிடிப்பு

இலங்கையில் தந்தை தந்தை, மகளின் கண்டுபிடிப்பு

நாம் அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளான பேனாவின் மூலம் இயற்கையைப் பாதுகாக்கும் திட்டமொன்றை இலங்கையைச் சேர்ந்த தந்தையும் மகளும் கண்டுபிடித்துள்ளனர்.

பிளாஸ்டிக் உள்ளிட்ட இயற்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பொருட்களால் இத்தனை காலமும் பேனா தயாரிக்கப்பட்டு வந்துள்ளது.

இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களால் மட்டும் நாளொன்றுக்கு 80 கிலோ கிராம் அளவுக்கு பேனாக்கள் வீசப்பட்டு வருவதாக கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த செய்தியை அவதானித்த கண்டி பகுதியைச் சேர்ந்த சச்சினி கிறிஸ்டினா சுகிர்தன், இதற்கான மாற்றுத் திட்டத்தை சிந்தித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தான், தனது தந்தையான சுகிர்தனுடனும் கலந்துரையாடியுள்ளதாக கிறிஸ்டினா தெரிவித்தார்.

“இலங்கையில் கொவிட் தொற்றின் முதலாவது அலை ஏற்பட்டிருந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான முடக்க நிலையின் போதே, இந்த திட்டத்தை நான் சிந்திக்கத் தொடங்கினேன். இயற்கைக்கு பாதிப்பு இல்லாத பேனா ஒன்றை தயாரிக்க முடிவெடுத்தேன்,” என்று அவர் கூறினார்.

தன்னால் தயாரிக்கப்பட்டுள்ள பேனா, பயன்படுத்தப்பட்ட பின்னர், வெளியில் வீசப்படும் பட்சத்தில், அதில் இருந்து மரங்கள் வளரும் வகையில் இந்த பேனா தயாரிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக தயாரிக்கப்பட்டுள்ள பேனாவில், சிறிய வகையிலான செடிகள் மாத்திரமே வளரும் என பேனாவை தயாரித்த கிறிஸ்டினா கூறுகிறார்.

பேனாவின் அளவு சிறியதாக உள்ளதால், சிறிய விதைகளை மாத்திரமே பேனாவில் உள்ளடக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில் பெரிய மரக்கன்றுகள் வளரும் வகையில், இந்த பேனாவை தயாரிக்க தானும், தனது தந்தையும் எதிர்பார்த்துள்ளதாக கிறிஸ்டினா நம்பிக்கை தெரிவித்தார்.

தன்னால் தயாரிக்கப்பட்டுள்ள பேனா, 96 சதவீதம் இயற்கையுடன் ஒன்றிணைந்து செல்லும் என்றும் முதல் கட்டமாக, பேனாவில் மரக்கறி கன்றுகள், பூக்கன்றுகள் மற்றும் ஆயுர்வேத செடிகள் போன்ற விதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த பேனாவின் பின்புறத்தில் மரக்கறி, பூக்கன்று மற்றும் ஆயர்வேத செடிகளின் விதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், பேனாவின் பின்புறத்தில் இருந்தே, இந்த செடி துளிர்விட ஆரம்பிக்கின்றன.

இந்த பேனாவை, பின்புறமாக, மண்ணில் நட வேண்டும் என அவர் குறிப்பிட்டார். மேலும், இந்த பேனா, பயன்பாட்டிற்குப் பின்னர், மண்ணில் நடப்பட்டு ஒன்று முதல் இரண்டு வாரங்களில் கன்று வளரும் என அவர் தெரிவித்தார்.

குறிப்பாக நடப்படும் பேனாவுக்கு, உரிய வகையில் நீர் சேர்க்கப்படுவதாக இருந்தால், அந்த செடி உரிய வகையில் வளரும் என பேனாவை தயாரித்த கிறிஸ்டினா தெரிவிக்கிறார்.

இந்த பேனாவில் உள்ளடக்கப்பட்டுள்ள விதைகள் அனைத்தும், உரிய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே, பேனாவுக்குள் அடைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பேனாவின் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் ஆதரவு வழங்க முன்வந்துள்ளது. சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, அண்மையில், இந்த பேனாவை தயாரித்த கிரிஷ்டினா, அவரது தந்தை சுகிர்தன் ஆகியோரை அழைத்து, ஆலோசனை நடத்தியிருந்தார். அப்போது இந்த பேனாவின் உற்பத்தியை விரிவுபடுத்த அரசாங்கம் உதவி செய்யும் என அமைச்சர் உறுதியளித்துள்ளதாக பேனாவை தயாரித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று, இந்த பேனாவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒத்துழைப்பையும் இலங்கை அரசாங்கம் வழங்க முன்வந்துள்ளது.

இலங்கையிலுள்ள அரச பாடசாலை மாணவர்களுக்கு இந்த பேனாவின் பயன்பாட்டை அதிகரிப்பதே தமது நோக்கம் என அவர் கூறுகிறார். இதேபோன்று, பேனாவின் உற்பத்தியை அதிகரித்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தமது மற்றுமொரு நோக்கம் என்று கே.சுகிர்தன் தெரிவித்தார்.

இலங்கையை விடவும், வெளிநாடுகளில் வாழ்வோர் இயற்கையுடன் ஒன்றிணைந்து செல்வதற்கு முக்கியத்தும் வழங்குவதாகவும் அதனால், வெளிநாடுகளில் வாழ்வோருக்கு இந்த பேனாவை மிக இலகுவாக கொண்டு சேர்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.

எதிர்வரும் காலங்களில் இந்த பேனாவின் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்றும் கே.சுகிர்தன் நம்பிக்கை தெரிவித்தார்.

    Posted in Uncategorized

    முல்லையில் கத்தி குத்து – உயிருக்கு போராடும் பாதிக்க பட்டவர்

    முல்லையில் கத்தி குத்து – உயிருக்கு போராடும் பாதிக்க பட்டவர்

    முல்லைதீவு நீராவிப்[பிட்டி பகுதியில் நபர் ஒருவர் மீது கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது

    இந்த கத்தி குத்து தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் தற்போது யாழ்ப்பாண போதான வைத்தியசாலையில்

    அனுமதிக்க பட்டுள்ளார்
    மேற்படி சம்பவம் தொடர்பில் போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

      Posted in Uncategorized

      முரசுமோட்டையில் -ஆட்டிறைச்சியுடன் சாராய விருந்துபசார சலுகைக்கு விலைபோன அரச அதிகாரிகள் – VIDEO

      ஆட்டிறைச்சியுடன் சாராய விருந்துபசார சலுகைக்கு அரச அதிகாரிகள் விலைபோயுள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர். கிளிநொச்சியில் உள்ள விவசாயிகளே இவ்வாறு குற்றம் சாட்டுகின்றனர்

      . முரசுமோட்டை பகுதியில் பெரும்பாக உத்தியோகத்தர் சுந்தரமூர்த்தியின் உத்தரவுக்கு அமைவாக 6 ஏக்கர் செய்கை நிலம் அழிக்கப்பட்டமை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதன் பின்னர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

      குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உண்மை நிலையை ஆராய இன்று ஊடகவியலாளர்கள் சிலர் கிளிநொச்சி கமநல சேவைகள் திணைக்களத்திற்கு சென்றனர். விவசாயிகள்

      எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் பெரும்பாக உத்தியோகத்தர் சுந்தரமூர்த்தியிடம் வினவியபோது தெளிவான விடயங்களை வழங்க மறுத்தார்.

      ஊடகவியலாளர்களாக அல்லாது பொதுமகனாக விளக்கம் வழங்கப்பட வேண்டும் எனவும், விளக்கத்தை தெளிவாக வழங்குமாறும் அவரிடம் வினவினர். ஆனாலும், தனது அரச வேலைக்கு

      இடையூறாக காணப்படுவதாகவும், தனக்கு விளக்கமாக விடயங்களை வழங்க முடியாது எனவும் பெரும்பாக உத்தியோகத்தரான சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

      குறிதத் விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு முறைப்பாடடு புத்தகம் அல்லது முறைப்பாட்டு பெட்டி உள்ளதா என அங்கிருந்த உத்தியுாகத்தர்களிடம் வினவியபோது அவ்வாறான எதுவும் இல்லை என தெரிவித்ததுடன், குறித்த பெரும்பாக உத்தியோகத்தரிடம்

      வினவினர். குறித்த புத்தகம் அங்கேதும் இருக்கும் எடுத்து அவர்களிடம் கொடுங்கள் என அசாட்டாக பதிலளித்துள்ளார். இதன்போது புதிதாக எவ்விடயமும் குறிப்பிடப்படாத குறிப்பு புதிய புத்தகம் ஒன்று உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்டதுடன், அப்புத்தகத்தில் ஊடகவியலாளர்கள் முறைப்பாட்டை பதிவு செய்தனர்.

      கிளிநொச்சியில் சிறுபோக செய்கை இடம்பெற்று வரும் நிலையில் காலபோகம் மேற்கொண்டவர்களே சிறுபோகம் செய்ய வேண்டும் என பெரும்பாக உத்தியோகத்தரின்

      தன்னிச்சையான முடிவு விவசாயிகள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விடயம் தொடர்பில் உண்மைநிலையை அறிய சென்ற போதே மேற்குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

      கிளிநொச்சியில் இவ்வாறான பல சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இவ்விடயங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களிற்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக உண்மைநிலையை கண்டறிய முடிந்தது. இரண்டு போகங்கள் செய்யக்கூடிய காணியில்

      காலபோக செய்கை இவ்வருட ஆரம்ப பகுதியில் நிறைவடைந்தது. தற்போது சிறுபோக செய்கை ஆரம்பித்துள்ள நிலையில் காலபோகம் செய்தவர்களே சிறுபோக செய்கையும் மேற்கொள்ள வேண்டும் என கமநல சேவைகள் திணைக்களம் கட்டுப்பாடு ஒன்றை தாமே முன்வைத்துள்ளது.

      ஆனாலும் குறித்த வரையறையானது மாவட்ட விவசாய திட்டமிடல் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானம் எனவும், அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் பெரும்பாக உத்தியோகத்தர் சுந்தரமூர்த்தி தெரிவிக்கின்றார்.

      காலபோக செய்கை மேற்கொள்வதற்காக பல காணி உரிமையாளர்கள் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு குத்தகைக்கு வழங்கியும், உறவினர் நண்பர்களிற்கு வழங்கியும் உள்ளனர்.

      இதனால் மேற்கொள்ளப்பட்டுவரும் சிறுபோக செய்கையை காணி உரிமையாளர்கள் மேற்கொள்ளவோ அல்லது வேறு நபர்களிற்கு குத்தகைக்க வழங்கவோ முடியாத நிலை காணப்படுகின்றது.

      இவ்வாறான நிலையில் முரசுமோட்டை பகுதியில் காணி உரிமையாளரால் மேற்கொள்ளப்பட்ட 6 ஏக்கர் செய்கை மேற்கொள்ளப்பட்ட காணி குறித்த பெரும்பாக உத்தியோகத்தரினால்

      காலபோகம் செய்த நபருக்கு அழித்து விதைப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

      இந்த நிலையில் காணி உரிமையாளர் 119 ஊடாக பொலிசாருக்கு அவசர அழைப்பு விடுத்து நடவடிக்கை மேற்கொள்ள முயன்றபோது குறிதத் காணியை அழித்து விதைப்பதற்கு பெரும்பாக

      உத்தியோகத்தர் சுந்தரமூர்தியே அறிவுறுத்தியதாக விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்ததாக பாதிக்கப்பட்ட விவசாயி குறிப்பிடுகின்றார்.

      குத்தகைக்கு வழங்கப்பட்ட நபருடனான ஒப்பந்தமானது சட்டத்தரணி ஊடக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது எனவும், காணி உரிமையாளரான தாம் சிறுபோக செய்கை

      மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டபோது பெரும்பாக உத்தியோகத்தர் கடமையை செய்வதற்கு இழுத்தடிப்பு மேற்கொண்டதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயி தெரிவிக்கின்றார்.

      கமநல சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்களிற்கு ஆடு அடிச்சு, சாராயத்துடன் விருந்து வைத்த சம்பவம் தொடர்பில் தான் அறிந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயி தெரிவிக்கின்றார்.

      காலபோக செய்கை மேற்கொண்டவர்கள்தான் சிறுபோக செய்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெரும்பாக உத்தியுாகத்தர்

      குறிப்பிட்ட புாதிலும், குறித்த கூட்டறிக்கையின் குறிப்பினை காண்பிக்குமாறு கேட்டபோது அக்குறுிப்பு தமக்கு கிடைக்கவில்லை என்று சாட்டுப்போக்கினையே அவர் கூறினார்.

      குறித்த விடயத்தின் உண்மைத்தன்மையை அறிவதற்கு மாவட்ட செயலகத்தின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் சிலரை நேரடியாக சந்தித்து வினவியபோது, அவ்வாறான கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

      பெரும்பாக உத்தியோகத்தர் தொடர்பில் விவசாயிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை அறிந்து, விவசாயிகளிற்கு நேர்மையாக மேற்கொள்ளவேண்டிய சேவைகளை மேற்கொள்ளத்தவறியமை தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

      பொதுமக்களின் கருத்தை கேட்க தவறியமை, முறைப்பாட்டு புத்தகம் அல்லது முறைப்பாட்டு பெட்டியை அலுவலகத்தில் காண்பிக்க தவறியமை, எடுக்கப்படாத தீர்மானம் ஒன்றை

      நடைமுறைப்படுத்த முற்றப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கிளிநொச்சி கமநலசேவைகள் திணைக்கள பெரும்பாக உத்தியுாகத்தர் சுந்தரமூர்த்தி மீது விவசாயிகளால் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

      நிருபர் – சங்கிலியன்

        Posted in இலங்கை செய்திகள்

        தீவிரவாத தேரர்கள், இன்னொரு “ரவுண்ட்” ஆடப்பார்க்கிறார்கள்-மனோ கணேசன்

        பெளத்த அமைப்புகளுக்கு அரசு தடை எனக்கூறி, தீவிரவாத தேரர்கள், இன்னொரு “ரவுண்ட்” ஆடப்பார்க்கிறார்கள்

        தமுகூ தலைவர் மனோ கணேசன்

        பெங்கமுவே நாலக தேரர், அஸ்கிரிய அனுநாயக தம்மானந்த தேரர், ரத்தன தேரர், முருத்தெடுகம ஆனந்த தேரர், சிங்கள ராவய தேரர், ஞானசார தேரர், ராவண பலய தேரர் ஆகிய பெளத்த தீவிரர்கள், இப்போது புதிய பாடல் ஒன்றை பாடுகிறார்கள்.

        இந்த அரசு தமது பெளத்த அமைப்புகளை தடை செய்ய போகிறது என்ற புரளியை கிளப்பி மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார்கள்.

        உண்மையில் இந்நாடு உருப்பட வேண்டுமானால், பெளத்த தேரர்கள் அரசியலில் தலையிடுவதை தடை செய்யத்தான் வேண்டும். நான் இரண்டு கைகளையும் உயர்த்தி ஆதரிப்பேன்.

        ஆனால், இந்த அரசு இப்போது இவர்களை தடை செய்து தற்கொலை செய்ய போவதில்லை என தமுகூ தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

        மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

        முஸ்லிம் அரசியல்வாதிகள், குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் ரிசாத், ரவுப் மீது, உயிர்த்த ஞாயிறு குண்டு தொடர்பில் குற்றம் சாட்டப்பட வேண்டும் என இவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அதற்கான சாட்சியம் இல்லை. அப்படி சாட்சியங்கள் இருந்தால், இந்த அரசே சும்மா விடாது.

        தேரர்களிடம் சாட்சியம் இருந்தால் அதை விசாரணை கமிசனிடம் அவர்கள் தர வேண்டும். ஆனால், அப்படி இவர்களிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை.

        தமிழ், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் மட்டுமே இருக்கிறது. தமிழ், முஸ்லிம் அடிப்படைவாதம் பற்றி பேசும் இவர்கள் தமது அடிப்படைவாத, இனவாதத்தை தேசபக்தியாக காட்டுகிறார்கள்.

        ஆகவே இன்று, அரசின் பிரதான கட்சியில் உள்ள தீவிரவாதிகளையும், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட நபர்களையும் கொண்டு, எதிரணியிலும் சிங்கள பெளத்த தீவிரர்கள்

        கிடைத்தால், அவர்களையும் சேர்த்து, இந்த அரசின் மீதான சிங்கள மக்களின் அதிருப்தியை திசை திருப்பி, மீண்டும் ஒருமுறை சிங்கள பெளத்த அரசு ஒன்றை அமைக்க முயல்கிறார்கள்.

        அதாவது இன்னொரு ரவுன்ட் வர முயல்கிறார்கள்.

        இனிவரும் மாற்று அரசு, ஒரு சிங்கள பெளத்த அரசாக இருப்பதை நாம் ஏற்க முடியாது. உலகமும் ஏற்காது. அது ஒரு இலங்கை (ஸ்ரீலங்கா) அரசாக மட்டுமே இருக்க முடியும்.

        இல்லாவிட்டால் அடுத்த இரண்டு வருடத்தில், இலங்கை நாடு அரசியல், சமூக, பொருளாதார துறைகளில் தோற்றுப்போன நாடாக உலகில் ஒதுக்கப்படும். அதன்பிறகு சாம்பலில் இருந்து எழுந்து வர வேண்டியதுதான்

          Posted in இலங்கை செய்திகள்

          ஈழத்தமிழர்களின் உற்ற தோழர் – அமெரிக்காவின் முன்னாள் தலைமைச் சட்டத்தரணி ரம்சி கிளர்க் மறைவு !

          ஈழத்தமிழர்களின் உற்ற தோழர் – அமெரிக்காவின் முன்னாள் தலைமைச் சட்டத்தரணி ரம்சி கிளர்க் மறைவு !

          அமெரிக்காவின் முன்னாள் தலைமைச் சட்டத்தரணியும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் மேற்சபை உறுப்பினருமாகிய ஈழத்தமிழர்களின் மதிப்புக்குரிய ராம்சி கிளர்க்கின் மறைவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

          தமிழீழ விடுதலைப் புலிகளை ‘வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு’ என்று அமெரிக்க அரசு அறிவித்த போது, சட்டத்தரணி என்ற முறையில் ராம்சி கிளர்க் அவர்கள,; அதனை எதிர்த்து விடுதலைப் புலிகள் சார்பில் வழக்காடியிருந்தவர்.

          அன்னாரின் இழப்பு தனது ஈழத்தமிழர் தேசத்தின் இரங்கலைத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், நீதியும், சுதந்திர அரசியல் இறைமையும் கொண்ட தமிழீழ அரசை நிறுவிக்

          கொள்வதற்குமான ஈழத்தமிழர் போரட்டத்தின் அயரா ஆதரவாளரான விளங்கிய அமரர் ரம்சி கிளர்க், ஈழத்தமிழர்களின் மதிப்புக்குரிய கூட்டளியாகத் திகழ்ந்தார் என தெரிவித்துள்ளது.

          நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


          கொலம்பியா மாநில அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ‘தமிழீழ விடுதலைப் புலிகள் வெளிநாட்டு அமைப்பு அல்லவென்றும், அது ஒரு மெய்ந்நிலை அரசாங்கம் என்றும், தமிழீழ

          விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டமானது சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையில் பன்னாட்டுச் சட்டக் கொள்கைகளின் படி நடப்பது’ என்றும் தனது வாதுரையின் போது குரல் கொடுத்திருந்தவர்.

          தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு தேசிய விடுதலை இயக்கம் ஆகும், ஈழத்தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் என்றும் ஆகும் அமரர் கிளர்க் உறுதியாக நம்பினார்.

          பொதுவெளிகளிலோ அல்லது சகசட்டத் தரணிகளுடனும் கல்வியாளர்களுடனும் தனிப்பட்ட உரையாடல்களிலோ இதைச் சொல்ல அவர் ஒருபோதும் தயங்கியதில்லை.

          இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் சட்ட அறிவுரையினை அமரர் கிளர்க் அவர்கள் வழங்கி வந்தார்.

          இறுதி போரின் போது தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாவதற்கு எதிராகக் கிளர்க் குரல் கொடுத்தார். அமெரிக்காவில் தமிழர்கள் ஒழுங்கு செய்த போராட்டங்களிலும் கலந்து கொண்டார். குறிப்பாக நியு யோர்க்கில் 5 ஈழத் தமிழர்கள் மேற்கொண்டிருந்த உணவுத்தவிர்ப்பு போராட்டத்தினை நிறைவு செய்து வைத்தவர்.

          2009ம் ஆண்டு பெரும் இனஅழிப்பு போரின் மூலம் தமிழர் தேசம் ஆக்கிரமிப்பு உள்ளான பின்னர், ஈழத்தமிழ் மக்களிள் அரசியல் பெருவிருப்பின் ஜனநாய வடிவமாக இலங்கைத்தீவுக்கு வெளியே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தோற்றம் பெற துணையாக விளங்கிய வளப்பெருமக்களில் அமரர்

          கிளர்க் அவர்களும் ஒருவர். 2010ம் ஆண்டு நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதல் அரசவைத் தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நியு யோர்க் தேர்தல் ஆணையராகப் பணியாற்றினார்.

          தேர்தல் ஆணையர் பொறுப்பை மிகுந்த அக்கறையுடன் நிறைவேற்றினார் என்பதற்கு சான்றாக, வாக்குப்பெட்டிகள் தனது வீட்டுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என அமரர் வலியுறுத்தினார் என ரம்பி கிளார்க்கை நினைவுகூரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருத்திரகுமாரன்,

          இத்தகைய நேர்மை கொண்டு தமது கடமையை அணுகியதன் வாயிலாக அவர் தமது சீரிய பண்பைக் காட்டியது மட்டுமல்ல, ஈழத்தமிழர்கள்பால் பெருமதிப்பையும், பன்னாட்டுலகின் செயலின்மைக்கு நடுவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேவை பற்றிய ஆழ்ந்த புரிதலையும் வெளிப்படுத்தினார் என குறிப்பிடுகின்றார்.


          பிலடெல்பியாவில் உள்ள அமெரிக்காவின் அரசமைப்புக் கூடத்தில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவைக் அமர்வில் கலந்து கொண்டடதோடு, கடந்த பத்தாண்டு காலம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினராகவும் அங்கம் வகித்துள்ளார்.

          ‘ராம்சே உயர்ந்த கொள்கைப் பற்றுறுதியும் பெருந்தன்மையும் மிக்கவர். எமது இலட்சியத்தில் முழுமனதாக நம்பிக்கை கொண்டிருந்தவர். எமது முதல் கூட்டத்தில் எம்மோடிருக்க வேண்டி நியு

          யோர்க்கிலிருந்து பிலடெல்பியாவுக்குத் தொடருந்தில் வந்தவர் என்பது மட்டுமல்லாது பயணக் கட்டணத்தை நாம் கொடுக்க முன்வந்த போதும் அதனை அவர் ஏற்க மறுத்து விட்டார்’ என மேலும் ரம்சி பற்றிய நினைவுகளை பிரதமர் உருத்திரகுமாரன் கூர்ந்தார்.

          2013ம் ஆண்டு தமிழீழ சுதந்தர சாசனம் முரசறையப்பட்ட நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

          சட்டத்தரணி ரம்சி கிளர்க் மறைவு
          சட்டத்தரணி ரம்சி கிளர்க் மறைவு

          முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை மே 18 – தமிழீழத் தேசிய துக்க நாளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும், ‘முள்ளிவாய்க்கால் நினைவுச் சொற்பொழிவு’ நிகழ்வின் முதலுரையினை அமரர் ரம்சி கிளார்க் அவர்கள் 2015ம் ஆண்டு அவர்கள் வழங்கினார்.

          என சமகாலத்தில் கருத்துவாக்கம் பெற்றுள்ள ‘சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்’ என்ற நிலைப்பாட்டுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

          முன்கையெடுத்திருந்த ‘மில்லியன் கையெழுத்து போhரட்டத்தின்’ முதல் கையெழுத்தினை அமரர் அவர்களே இட்டார் என்பது வரலாற்று பதிவாகவுள்ளது. முதல் மூன்று மாதக் காலத்திற்குள் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட கையொப்பங்களை இவ்வியக்கம் திரட்டியிருந்தது.

          இதேவேளை கருத்துரையினையும், அரசியல் வெளிப்பாட்டு உரிமையினையும் பறிக்கின்ற சிறிலங்காவின் அரசமைப்புக்கான ஆறாம் திருத்தத்தை எதிர்த்து ஐ.நா மனித உரிமைக்குழுவுக்கு விண்ணப்பம் செய்தவர்களில் அமரர் கிளர்க்கும் ஒருவர்.

          ‘கடந்த 25 ஆண்டுக் காலம் ராம்சியுடன் பழகவும் சேர்ந்து உழைக்கவுமான பெரும்பேறு பெற்றேன், எனக்கு தோழராக மட்டுமின்றி எனக்குத் தந்தைபோலவும் விளங்கினார் என குறிப்பிடும் பிரதமர்

          வி.உருத்திரகுமாரன். நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான எமது விடுதலைப் போராட்டத்துக்கு அவரது நினைவு என்பது, ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் தொடர்ந்து வழிகாட்டியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

            Posted in இலங்கை செய்திகள்

            நினைவூட்டல்: நாட்டுப்பற்றாளர் நாள் 2021 – மெல்பேர்ண் அறிவித்தல்

            நினைவூட்டல்: நாட்டுப்பற்றாளர் நாள் 2021 – மெல்பேர்ண் அறிவித்தல்

            நாட்டுப்பற்றாளர் நாள் – 2021 – மெல்பேர்ண் (அறிவித்தல்)

            பாரத தேசத்திடம் இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகரில் மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் 19-03-1988 முதல் 19-04-1988 வரையான முப்பது நாட்கள் உண்ணாநோன்பிருந்து

            ஈகைச் சாவைத் தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது 33-ஆவது ஆண்டு நினைவுநாளும் தாயக விடுதலைப் போராட்டத்திற்குப் பின்புலமாக நின்றுழைத்துச் சாவைத் தழுவிக்கொண்ட நாட்டுப்-பற்றாளர்களையும் மாமனிதர்களையும் நினைவு கூருகின்ற

            நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் இவ்வாண்டும் விக்ரோறியா மாநிலத்தில் மெல்பேர்ணில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

            குடும்ப வாழ்வியலில் ஈடுபட்டிருந்தபோதும் இடர்மிகுந்த நெடிய தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் உறுதுணையாக உழைத்து உயிர்நீத்த நாட்டுப்பற்றாளர்களை நினைவுகூருவது ஒவ்வொரு ஈழத்தமிழனதும் தலையாய கடமையாகும்.

            எமது சுதந்திரமான வாழ்வுக்காக முப்பது நாட்கள் தியாக வேள்வியில் தன்னை உருக்கி தன்னுயிர் ஈந்த தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் மாமனிதர்களையும்

            நினைவுகூருகின்ற இப்புனிதமான நிகழ்வில் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள், பள்ளிமாணவர்கள், பொதுமக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

            நடைபெறும் இடம்: St John’s Parish Hall, 52 Yarra Street, Heidelberg, Vic 3084

            காலம்: 18-04-2021 ஞாயிற்றுக்கிழமை.

            நேரம்: மாலை 6.00 மணிமுதல் 8.00 மணிவரை.

            மேலதிக தொடர்புகளுக்கு: 0433 002 619 & 0406 429 107.

            தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – விக்ரோறியா, அவுஸ்திரேலியா.

            —
            மெல்பேர்ண் தமிழ் ஊடகம்.
            அவுஸ்திரேலியா.
            தொடர்புகள்:
            மின்னஞ்சல்:melbournetamilmedia@gmail.com

              Posted in Uncategorized

              முல்லைத்தீவில் மின்னல் தாக்கி மூவர் மரணம் – அதிர்ச்சியில் மக்கள்

              முல்லைத்தீவில் மின்னல் தாக்கி மூவர் மரணம் – அதிர்ச்சியில் மக்கள்

              முல்லைத்தீவு பகுதியில் வயலுக்கு சென்ற விவசாயிகள் மூவர் திடீரென ஏற்பட்ட மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மரணமாகியுள்ளனர்

              வயலுக்கு நீர்விட சென்றவேளை இந்த தாக்குதல் சமபவம் இடம் பெற்றுள்ளது


              இறந்தவர்கள் ,வாற்றாப்பளை,குமுழமுனை மத்தி,,குமுழமுனை மேற்கு பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்க படுகிறது

              மேற்படி சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

              Posted in Uncategorized

              சவேந்திர சில்வாவை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்க கோரிக்கை

              சவேந்திர சில்வாவை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்க கோரிக்கை

              இலங்கையின் இன்றைய இராணுவ தளபதி சவேந்திர சில்வாவை சர்வதேச நீதிமன்றில் ஏற்றி விசாரிக்க


              கோரி ஐம்பது பக்க அறிக்கை ஜாஸ்மின் சுகாகாவினால் வழங்க பட்டுள்ளது ,மேலும் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் 11 பேரும் இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த கோரி பிரிட்டனிடம் வேண்டுகோள் விடுக்க பட்டுள்ளது

              இறுதிப்போரில் பொழுது ,காணாமல் போதல்,படுகொலைகள் என்பனவற்றை முன் நின்று நடத்திய கொலை

              வெறியர் சவேந்திர சில்வா என மேற்படி ஐம்பது பக்க பக்கத்தினுள் ஐந்துக்கு மேற்பட்ட இடங்களில் சுட்டி காட்ட பட்டுள்ளது

              ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையின் கோரிக்கைகளை தட்டி கழித்து ,மனித

              உரிமைகளிற்கு மதிப்பு அளிக்காது சிங்கள தேசம் செயல் பட்டு வருகின்ற நிலையில் இந்த விடயம் முன் வைக்க பட்டு வருகிறது

              இலங்கை இராணுவவத்திற்கு எதிராக பாரிய நிதி வழங்க பட்டு அதில் இவர்கள் பேசி வருவதாக இலங்கை இராணுவம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                Posted in Uncategorized

                ஆற்றில் மிதந்த மனித தலை – நடந்தது என்ன – விசாரணையில் பொலிஸ்

                ஆற்றில் மிதந்த மனித தலை – நடந்தது என்ன – விசாரணையில் பொலிஸ்

                இலங்கை மாத்தறை பகுதியில் நீரோடை ஒன்றுக்குள் அழுகிய நிலையில் மனித தலை ஒன்று மிதந்து வந்துள்ளது ,

                இதனை கண்ணுற்ற மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் மேற்படி நபரது மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

                கோட்டா ஆட்சியில் ஆறுகளில் இவ்விதம் மனித சடலங்கள் மிதந்து வருகிறது ,இது கொலையா

                ,அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

                மனித தலை
                மனித தலை
                  Posted in Uncategorized

                  ஆற்றில் குளிக்க சென்ற தந்தை மகன் நீரில் மூழ்கி மரணம் – சடலத்தை தேடும் இராணுவம்

                  ஆற்றில் குளிக்க சென்ற தந்தை மகன் நீரில் மூழ்கி மரணம் – சடலத்தை தேடும் இராணுவம்

                  இலங்கை வேலி ஓயா பகுதியில் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற நால்வர் நீரில் மூழ்கினர்

                  ,இதில் இருவர் காப்பாற்ற பட்டனர் ,ஆனால் தந்தை ,மகன் நீரில் டித்து செல்ல பட்டு பலியாகியுள்ளனர்

                  இவ்வாறு பலியானவர்கள் சடலங்களை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகிறது ,இதுவரை சடலங்கள் கண்டு பிடிக்க படவில்லை

                  தேடும் பணிகள் தீவிர படுத்த பட்டுள்ளன

                    Posted in இலங்கை செய்திகள்

                    சாதாரண உடையில் போலீசார் -இவர்களை கைது செய்ய வேட்டை

                    சாதாரண உடையில் போலீசார் -இவர்களை கைது செய்ய வேட்டை

                    இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்தும் முகமாக அரசு பல்வேறு பட்ட

                    விழிப்புணர்வுகளை தெரிவித்து வருகிறது ,ஆனால் மக்களோ அதனை பின்தொடரது அலட்சியமாக சென்று வருகின்றனர்

                    இவ்வாறு விதி மீறல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க தற்பொழுது மக்கள் சாதாரண உடையில் காவல்துறையினர் ஈடுபடுத்த பட்டுள்ளனர்

                    முகக்கவம் அணியாது செல்பவர்களை கண்ட இடத்தில கைது செய்யவும் ,தண்டம் அறவிடவும் இந்த போலீசார் முயல்வார்கள் என நம்ப படுகிறது

                      Posted in இலங்கை செய்திகள்

                      மண்சரிவு அபாயம் – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

                      மண்சரிவு அபாயம் – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

                      இலங்கையில் ஏற்பட்டுளள சீரற்ற காலநிலை காரணமாக மலை பகுதி வழியாக செல்லும் மக்களிற்கு அவசர எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

                      பதுளை பிரதான வீதி, நுவரெலியா சாலைகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது , ஆதலால்

                      இவ் வழியாக பயணப்படுபவர்களை மிக விழிப்பாக செல்லும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

                      பாறைகள் உருண்டு வீதிகளில் விழலாம் என எதிர் பார்க்க படுகிறது ,மக்களே யாக்கிரதை

                        Posted in சீமான் பேச்சு

                        என்னடா மலையாளத்துல ஓட்டு கேக்குறீங்க – video

                        என்னடா மலையாளத்துல ஓட்டு கேக்குறீங்க – video

                        சீமான் கூட்டத்தில் நடந்த விசித்திர நிகழ்வு ,

                        இவர் சொலவ்து நடக்குமா ..? சீமான் தேர்தலில் வெல்வரா..?

                        அப்டின்னா இதை பாருங்கள்

                        click here video

                        Posted in மருத்துவம்

                        கருத்தடை மாத்திரை உட்க்கொண்டால் கரு தரிக்காதா

                        கருத்தடை மாத்திரை உட்க்கொண்டால் கரு தரிக்காதா

                        பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்துக் கொள்வது பெண்களின் கருவுறுதல் திறனை பாதிக்குமா என்ற சந்தேகம் ஏராளமான பெண்களின் மனதில் உள்ளது.

                        பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்துக் கொள்வது பெண்களின் கருவுறுதல் திறனை பாதிக்குமா என்ற சந்தேகம் ஏராளமான பெண்களின் மனதில் உள்ளது.

                        இன்றைய காலத்தில் தாமதமாக குழந்தைப் பெற்றுக் கொள்ள நினைப்பவர்கள் பிறப்புக் கட்டுப்பாட்டு முறையைப்

                        பின்பற்றுகின்றனர். நிறைய பெண்களுக்கு இதை பயன்படுத்திய பிறகு கர்ப்பம் தரிக்க முடியாமல் போய் விடுமோ என்ற எண்ணம் எழுகிறது என்று கூறியுள்ளனர்.

                        உண்மையில் பல வருடங்களுக்கு முன்பு பயன்படுத்திய கருத்தடை சாதனங்கள் (IUD கள்) சில நேரங்களில் இடுப்பு அழற்சி நோயை ஏற்படுத்தி கருவுறாமைக்கு காரணமாகிறது. ஆனால் தற்போதுள்ள கருத்தடை மருந்துகள் அப்படி இருப்பதில்லை.

                        கருத்தடை மாத்திரை உட்க்கொண்டால் கரு தரிக்காதா

                        நீங்கள் தற்போது மாத்திரை, கருத்தடை சாதனங்கள் என்று எதை பயன்படுத்தினாலும் தற்காலிகமாக கருவுறுதலை தடுப்பதோடு மீண்டும் கருவுறுதலை நிலைநிறுத்த உதவுகின்றன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

                        பொதுவாக பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், முதன் 3-4 மாதங்களுக்கு

                        முறையற்ற மாதவிடாய் சுழற்சியானது ஏற்படும். ஆனால் 4 மாதங்களுக்கு பின்னரும் இந்த நிலை நீடித்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

                        இருப்பினும் உங்க உடல் இதற்கு ஏற்றதாக அமைய வேண்டும். எந்தவொரு ஹார்மோன் சிகிச்சையையும் எடுப்பதற்கு முன் உங்க மகப்பேறு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

                          Posted in Uncategorized

                          கணவர் அடித்து கொடுமைப்படுத்துவதாக நடிகை ராதா கதறல்

                          கணவர் அடித்து கொடுமைப்படுத்துவதாக நடிகை ராதா கதறல்

                          பிரபல தமிழ் சினிமா நடிகை ராதா. இவர் முரளி நடித்த சுந்தரா டிராவல்ஸ், சத்யராஜ் நடித்த அடாவடி, கார்த்திக் நடித்த கேம் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார்.

                          சென்னையில் வசித்து வரும் நடிகை ராதா, கணவரை பிரிந்து மகன் மற்றும் தாயுடன் ஒரே வீட்டில் தங்கி உள்ளார்.

                          இந்த நிலையில் எண்ணூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் வசந்த ராஜா (40) என்பவருடன் ராதாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாம். இருவரும் நெருங்கி பழகி வந்த

                          நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டிலேயே தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

                          இதற்கிடையே வசந்த ராஜா, அடிக்கடி ராதா மீது சந்தேகப்பட்டதாகவும், அவருடன் தகராறில் ஈடுபட்டு சரமாரியாக அடித்து கொடுமைபடுத்தியதாக தெரிகிறது. இதில் மனவேதனை அடைந்த

                          நடிகை ராதா, தன்னை அடித்து கொடுமைப்படுத்திய வசந்த ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

                          ராதா

                          இதையடுத்து இன்ஸ்பெக்டர் நந்தினி இதுபற்றி விசாரணை நடத்தினார். இதில் சப்- இன்ஸ்பெக்டர் வசந்தராஜா, ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி 2 குழந்தைகளுடன் ஆர்.ஏ.புரம் போலீஸ்

                          குடியிருப்பில் வசித்து வருவது தெரியவந்தது. மேலும் வசந்தராஜா திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்தபோது நடிகை ராதாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

                          இதையடுத்து முதல் மனைவிக்கு தெரியாமல் ராதாவை 2-வதாக ரகசியமாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார் வசந்தராஜா.

                          நடிகை ராதா ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு தொழில் அதிபர் ஒருவர் மீதும் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

                          நடிகை ராதா கதறல்
                          நடிகை ராதா கதறல்
                            Posted in சினிமா

                            வாட்ஸ் ஆப் நம்பர் கேட்ட ரசிகருக்கு போலீஸ் நம்பரை கொடுத்த சுருதி ஹாசன்

                            வாட்ஸ் ஆப் நம்பர் கேட்ட ரசிகருக்கு போலீஸ் நம்பரை கொடுத்த சுருதி ஹாசன்

                            தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சுருதிஹாசன், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

                            வாட்ஸ் ஆப் நம்பர் கேட்ட ரசிகருக்கு போலீஸ் நம்பரை கொடுத்த சுருதி ஹாசன்
                            சுருதி ஹாசன்


                            கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதி ஹாசன் இந்தியில் அறிமுகமாகி, பின்னர் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கிராக், வக்கீல் சாப் ஆகிய படங்கள் மாபெரும் வரவேற்பை பெற்றன.

                            தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுருதிஹாசன் அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

                            சுருதி ஹாசனின் டுவிட்டர் பதிவு

                            அப்போது ரசிகர் ஒருவர் ‘மேடம், பிளீஸ் உங்களது வாட்ஸ் ஆப் நம்பரைக் கொடுங்கள்’ என்று கேட்டிருக்கிறார்.

                            இதற்கு பதிலளித்த நடிகை சுருதி ஹாசன், போலீஸ் அவசர உதவி எண் ஆன 100 என்ற நம்பரைக் குறிப்பிட்டிருந்தார். நடிகர் சுருதி ஹாசனின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

                              Posted in Uncategorized

                              AstraZeneca’s ஊசி செலுத்திய பெண் இரத்த உறைவால் மரணம் – அதிர்ச்சியில் மக்கள்

                              AstraZeneca’s ஊசி செலுத்திய பெண் இரத்த உறைவால் மரணம் – அதிர்ச்சியில் மக்கள்

                              அவுஸ்ரேலியாவில் பரவி வரும் கொரனோ நோயில் இருந்து தப்பிக்க AstraZeneca’s தடுப்பூசி

                              செலுத்திய 48 வயதன பெண்மணி ஒருவர் இரத்த உறைதல் ஏற்பட்டதை அடுத்து மரணமடைந்துள்ளார்

                              இந்த ஊசி செலுத்த பட்ட பின்னரே இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                              இவ்வாறு இறந்தவர் சக்கரை நோய்க்கு உள்ளானவர் எனவும் ,தொடர்ந்து இந்த இரத்த உறைதல்

                              எவ்வாறு இடம் பெறுகிறது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                              மேலும் அவுஸ்ரேலியாவில் ஐம்பது வயதுக்கு கீழ் பட்டவர்களுக்கு இந்த ஊசி செலுத்திட தடை

                              விதிக்க பட்டுள்ளது ,ஐரோப்பவில் இந்த ஊசி பயன் படுத்த சில நாடுகள் விதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                பிரிட்டனில் Deliveroo 3 மாதத்தில் 71 மில்லியன் வருமானம் அதிர்ச்சியில் நிறுவனம்

                                பிரிட்டனில் Deliveroo 3 மாதத்தில் 71 மில்லியன் வருமானம் அதிர்ச்சியில் நிறுவனம்

                                பிரிட்டனில் நிலவி வந்த கொரனோ வைரஸ் முடக்கத்தினால் மக்கள் வீடுகளில் இருந்த படியே ஆன்லைன்

                                ஊடக உணவுகளை ஆடர் செய்தனர் ,இவ்வாறு ஆடர் செய்ய பட நிறுவனங்களில் டிலிவரோ முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது

                                இதன் கடந்த மூன்று மாத வருமானம் என்றுமில்லாதவாறு இரட்டிப்பாக அதிகரித்துள்ளது ,அதாவது 71 மில்லியன்

                                என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது ,மேற்படி திடீர் அசுர வளர்ச்சி அந்த நிறுவனத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளதாம்

                                பிரிட்டனில் Deliveroo
                                பிரிட்டனில் Deliveroo
                                  Posted in Uncategorized

                                  இந்தியா பாகிஸ்தான் பேச்சுக்கள் ஆரம்பிக்க உத்தேசம் – பிரியுமா காஸ்மீர் ..?

                                  இந்தியா பாகிஸ்தான் பேச்சுக்கள் ஆரம்பிக்க உத்தேசம் – பிபிரியுமாரியா காஸ்மீர் ..?

                                  இந்தியா பாக்கிஸ்தானுக்கு இடையில் சர்சையில்சி க்கியுள்ள கஸ்மீர் தொடர்பான பேச்சுக்களில் ஈடுபட இரு நாடுகளுக்கும் இணக்கம் தெரிவித்துள்ளன

                                  உயர் மட்ட புலனாய்வு அதிகாரிகள் வட்டத்தில் இருந்து மேற்படி செய்தி கசிந்துள்ளது ,இவ்வாறு

                                  நாடுகளுக்கு இடையில் ஏற்படும் போர் பதட்டத்தை தனித்து இணக்கமான முறையில் செயல் பட இருநாடுகளும் முயன்று வருகின்றன

                                  ஆனால் இந்த பேச்சுக்கள் மூலம் குறித்த நாடுகளுக்கு இடையிலான பிரச்சனைக்கு தீர்வு கிட்டுமா என்பதே கேள்வியாக உள்ளது

                                    Posted in சினிமா

                                    எனது உரிமைகளில் யாரும் குறுக்கிட முடியாது – ஷங்கர் பதிலடி

                                    எனது உரிமைகளில் யாரும் குறுக்கிட முடியாது – ஷங்கர் பதிலடி

                                    அந்நியன் படத்தை இயக்குனர் ஷங்கர் இந்தியில் ரீமேக் செய்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இதையடுத்து, ஷங்கர் தன்னிடம் அனுமதி பெறாமல் ரீமேக்

                                    செய்வதாக அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், இயக்குனர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

                                    இந்நிலையில், இதற்கு விளக்கமளித்து இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: அந்நியன் 2005-ம் ஆண்டு வெளியானது. அந்தப் படம் சம்பந்தப்பட்ட

                                    அனைவருக்குமே, அதன் கதையும், திரைக்கதையும் என்னுடையது என்று தெரியும். கதை, திரைக்கதை, இயக்கம் ஷங்கர் என்கிற பெயருடன்தான் இந்தப் படமும் வெளியானது.

                                    படத்தின் திரைக்கதையை எழுத நான் யாரையும் நியமிக்கவில்லை. ஆதலால், இதன் திரைக்கதையை நான் விரும்பும்படி பயன்படுத்திக் கொள்ள எனக்கு உரிமை உள்ளது. படைப்பை எழுதியவன் என்ற முறையில் எந்தச் சூழலிலும், எனது உரிமைகளில் யாரும் குறுக்கிட முடியாது.

                                    ஷங்கர் வெளியிட்ட அறிக்கை

                                    மறைந்த சுஜாதாவின் பெயரை இதில் சம்பந்தப்படுத்தியதை கண்டு ஆச்சரியமடைந்தேன். இந்தப் படத்துக்கு அவர் வசனங்கள் எழுத மட்டுமே நியமிக்கப்பட்டார். அதற்கான உரிய பெயரும்,

                                    அவருக்கு கொடுக்கப்பட்டது. அவர் எந்த விதத்திலும் திரைக்கதையிலோ, பாத்திரப் படைப்பிலோ சம்பந்தப்படவில்லை. எனவே வசனகர்த்தா என்பதைத் தாண்டி அவர் வேறு எந்த வகையிலும் இதில் ஈடுபடவில்லை.

                                    திரைக்கதை என்னிடம் இருப்பதால் அதை நான் விரும்பும் வகையில் பயன்படுத்திக் கொள்ளும் முழு உரிமை எனக்கு உள்ளது. ஏன், அந்நியனுக்காக நீங்களோ, உங்கள் நிறுவனமோ எந்த

                                    விதமான உரிமைகளையும் கோர முடியாது, ரீமேக் செய்யவும் முடியாது. ஏனெனில் அந்த உரிமை உங்களுக்கு எழுத்துபூர்வமாக தரப்படவில்லை. அப்படி எதுவும் இல்லாத நிலையில், படத்தின்

                                    கதைக்கான உரிமை உங்களிடம் உள்ளது என்பதைச் சொல்ல உங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை.

                                    ஒரு தயாரிப்பாளராக, ‘அந்நியன்’ படத்தின் மூலம் நல்ல லாபம் அடைந்துள்ளீர்கள். தற்போது தேவையின்றி, உங்களுக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத எனது எதிர்கால முயற்சிகளின் மூலம்

                                    ஆதாயம் தேடப் பார்க்கிறீர்கள். இந்த விளக்கத்துக்குப் பின்னராவது உங்களுக்கு ஒழுங்கான புரிதல் வரவேண்டும். இனி இது போன்ற அடிப்படையற்ற விஷயங்களை பேச மாட்டீர்கள் என்று நம்புகிறேன்”. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.