Posted in சினிமா

நடிகர் விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது – 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை

நடிகர் விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது – 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை

மாரடைப்பால் மரணமடைந்த நடிகர் விவேக்கின் உடல், 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

நடிகர் விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது – 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை
விவேக்
சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று (ஏப்.16) காலை 11

மணியளவில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (ஏப்.17)

அதிகாலை 4.35 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரின் உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவரது நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து மாலை 4 மணியளவில் விருகம்பாக்கத்தில் இருந்து, மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள மின்மயானத்திற்கு அவரது உடல், ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

விவேக்கின் உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்திய போது எடுத்த புகைப்படம்

விவேக்கின் புகழுக்கு பெருமை சேர்க்க, அவரது கலை, சமூகச் சேவையை கெளரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன், அவரது உடலை அரசு தகனம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது.

அதன்படி நடிகர் விவேக்கின் உடலுக்கு, 78 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறை சார்பில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையடுத்து விவேக்கின் உடலுக்கு அவரது மகள் இறுதிச் சடங்குகளை செய்தார். பின்னர் நடிகர் விவேக்கின் உடல், மேட்டுக்குப்பத்தில் உள்ள மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது.

Posted in சினிமா

மனிதர்கள் மட்டுமல்ல… நீ நட்ட மரங்களும் உனக்காக துக்கம் அனுசரிக்கின்றன – வைரமுத்து இரங்கல்

மனிதர்கள் மட்டுமல்ல… நீ நட்ட மரங்களும் உனக்காக துக்கம் அனுசரிக்கின்றன – வைரமுத்து இரங்கல்

மனிதர்கள் மட்டுமல்ல, நீ நட்ட மரங்களும் உனக்காக துக்கம் அனுசரிக்கின்றன என விவேக் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

மனிதர்கள் மட்டுமல்ல… நீ நட்ட மரங்களும் உனக்காக துக்கம் அனுசரிக்கின்றன – வைரமுத்து இரங்கல்
விவேக், வைரமுத்து


தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவிற்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கவிஞர் வைரமுத்து, விவேக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

“அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!
எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன்
அழவைத்துவிட்டுப் போய்விட்டானே!

திரையில் இனி பகுத்தறிவுக்குப்
பஞ்சம் வந்துவிடுமே!

மனிதர்கள் மட்டுமல்ல விவேக்!
நீ நட்ட மரங்களும் உனக்காக
துக்கம் அனுசரிக்கின்றன.

கலைச் சரித்திரம் சொல்லும் :
நீ ‘காமெடி’க் கதாநாயகன்”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Posted in Uncategorized

துக்கம் தொண்டையை அடைக்கிறது…. நண்பன் விவேக் மறைவுக்கு வடிவேலு கண்ணீர்

துக்கம் தொண்டையை அடைக்கிறது…. நண்பன் விவேக் மறைவுக்கு வடிவேலு கண்ணீர்

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவிற்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நகைச்சுவை நடிகர் வடிவேலு, விவேக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: “என் நண்பன் விவேக் மாரடைப்பால்

இறந்துட்டான் என்று இன்றைக்கு காலையில் செய்திகளில் பார்த்து தெரிந்து கொண்டேன். அந்த செய்தியைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகிவிட்டது. அதை பற்றி பேசவே முடியவில்லை. அவன் இல்லையே என்று நினைக்கும் போது, எனக்கு துக்கம் தொண்டையை அடைக்கிறது.

வடிவேலு

பிறருக்கு உதவும் சிந்தனை அதிகம் உள்ளவன். அப்துல் கலாய் ஐயா அவர்களுடன் நல்ல நெருக்கமாக இருப்பான். அதே மாதிரி விழிப்புணர்வு பிரச்சாரம், மரம் நடுவது என எவ்வளவோ

நல்ல விஷயம் பண்ணுவான். எனக்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் அவனும் ஒருவன். நானும் அவனுக்கு ரசிகன் தான். என்னால் அவனுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை. என்

நெஞ்சார்ந்த இரங்கலை அவன் குடும்பத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று கண்ணீர்மல்க பேசியிருக்கிறார் வடிவே

Posted in உலக செய்திகள்

ஏவுகணை சோதனைக்கு தயராகும் வடகொரியா – உசார் நிலையில் இராணுவம்

ஏவுகணை சோதனைக்கு தயராகும் வடகொரியா – உசார் நிலையில் இராணுவம்

வட கொரியா மீளவும் ஓரும் பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை சோதனை புரியும் நோக்குடன் உள்ளது ,.

இவ்வகையான ஏவுகணையை தாங்கிய கப்பல் ஒன்று உலவும்காட்சி ஒன்று செய்மதி புகைப்படங்கள் மூலம் பெறப்பட்டுள்ளது

எதிர் வரும் வாரம் அல்லது நாட்களுக்குள் வட கொரியா இந்த புதிய ஏவுகணை சோதனையை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது

எனினும் இது குறும் தூர ஏவுகணையா அல்லது நெடும் தூர ஏவுகணையா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை

வட கொரியாவை மிரட்டி பார்த்த அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகள்; இப்பொழுது வாலை

சுருட்டி கொண்டுள்ள செயலை கண்முன்னே காண முடிகிறது .இது போன்றே இப்பொழுது ஈரான் உருவெடுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

Posted in உலக செய்திகள்

ஈரான் அணு உலைமீது தாக்குதல் நடத்தியவர் கைது

ஈரான் அணு உலைமீது தாக்குதல் நடத்தியவர் கைது

ஈரானின் முக்கிய அணு உலை ஒன்றின் மீது தாக்குதல் நடத்த பட்டது ,இதில் அந்த அணு உலைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது ,

மேற்படி தாக்குதலை இஸ்ரேல் உளவுத்துறையான மொசாட்டே மேற்கொண்டது என ஈரான் குற்றம் சுமத்தி வருகிறது

மேலும் அவர்களுடன் தொடபில் இருந்து தாக்குதலை நடத்திய நபர் ஒருவரது புகைப்படத்தை ஈரான் உளவுத்துறையினர் வெயிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளனர்

இந்த அணு உலை தாக்குதலின் பின்னர் ஈராக்கில் நிலைகொண்டு செயல்பட்டு வந்த இஸ்ரேலின்

உளவுத்துறை இரகசிய முகாம் மீது திடீர் தாக்குதல் நடத்த பட்டது ,இதில் முக்கிய நபர்கள் அங்கு பலியாகி இருந்தனர் .

அதையே தொடர்ந்து இவரது கைது இடம்பெற்றுள்ளது ,தொடர்ந்து தீவிர விசாரணைகள்

இடம்பெற்று வருவதுடன் மேலும் பலர் கைது செய்ய பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது இங்கே சுட்டி காட்ட தக்கது

ஈரான் அணு உலை
ஈரான் அணு உலை
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் மரணவீட்டுக்குள் புகுந்த பொலிஸ் 15 பேருக்கு தண்டம்

பிரிட்டனில் மரணவீட்டுக்குள் புகுந்த பொலிஸ் 15 பேருக்கு தண்டம்

பிரிட்டன் Shandwick Place பகுதியில் நிகழ்கால கொரனோ விதிகளை மீறி மரண வீட்டில் சட்டவிரோதமான

முறையில் கூடியமைக்காக அங்கு கலந்து கொண்ட 12 பேருக்கும் ,இதனை தலைமை ஏற்று நடத்திய முதண்மை நபர்கள் மூவருக்குமாக தண்டம் அறவிட பட்டுள்ளது

மேற்படி தண்டம் எதிர்வரும் 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் தவறின் அது இரட்டிப்பாகும் என்பது விதியாகவுள்ளது

மக்கள் அரசின் விதிகளை மறந்து இவ்விதம் பால்வேறு இடங்களில் ஒன்று கூடி வருகின்ற செயல் தொடரத்தான் செய்கிறது

அவையே இவ்விதம் செய்திகளாக வீழ்கின்றன

பிரிட்டனில் மரணவீட்டுக்குள் புகுந்த பொலிஸ்
பிரிட்டனில் மரணவீட்டுக்குள் புகுந்த பொலிஸ்
    Posted in இலங்கை செய்திகள்

    நாட்டிலுள்ள பல வளங்களை இன்னும் சரியாக நிர்வகிக்க முடியாத நிறை காணப்பட்டு வருகிறது – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

    நாட்டிலுள்ள பல வளங்களை இன்னும் சரியாக நிர்வகிக்க முடியாத நிறை காணப்பட்டு வருகிறது – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

    பைஷல் இஸ்மாயில் –

    எமது நாட்டிலுள்ள பல வளங்களை இன்னும் சரியாக நிர்வகிக்க முடியாத நிறை காணப்பட்டு வருகிறது என்றும், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டுக்கு புதிய துறைகளைக்

    கற்ற துறை சார்ந்தவர்கள் அதிகளவில் தேவைப்படுகிறார்கள். இதனை அரசாங்கத்தினால் மட்டும் செய்துவிட முடியாது என்று கல்வி மறுசீலமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

    பம்பலப்பிட்டி அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

    கலந்துகொண்டார், விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், மாலைதீவுக்கான தூதுவர் ஒமர் ரஸ்ஸாக், பிரதித் தூதுவர் அஸ்லம் சாகிர், சிறைச்சாலை ஆணையாளர் மலின் லியனகே, முன்னாள் கொழும்பு மாகாண சபை அங்கத்தவரும் மனித

    உரிமைகள் அமைப்பின் ஆளுநருமான எ.ஜே.முஹம்மட் பாயிஸ், கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதி எஸ் சந்திரசேகரம் உள்ளிட்ட பல உள்நாட்டு வெளிநாட்டு கல்விமான்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், இன்று இலங்கையின் பொருளாதார கல்வி வளர்ச்சியில் கணிசமான பங்கினை தனியார் துறையை துறையினரே வழங்கி வருகின்றனர். அந்த வகையில் அமேசன்

    உயர் கல்வி நிறுவனத்தின் சேவை உண்மையில் பாராட்டத்தக்கது. இந்த நிறுவனம் வெறும் புத்தக கல்வியை மட்டும் மையமாக கொள்ளாமல், மாணவர்களுக்கிடையே சுய வேலைத்திட்டங்கள், (Individual Project) பயிற்சி பட்டறைகள் (practical workshops), வெளிநாட்டு மாணவர்களின்

    தொடர்பாடல், (Foreign Students exchange), பல உள்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை கை சாத்தி, மாணவர்களுக்கு Individual Training போன்றவற்றை வழங்கி தொழில் சந்தைக்கு ஏற்றவாறு மாணவர்களை தயாரித்து அனுப்புகின்ற நிறுவனமாக இயங்கி வருகின்றது.

    எதிர்வரும் ஆண்டுகளில் உலகிலேயே அதிகமாக தேவைப்படுகின்ற தொழிற்துறையான Robertic Engineering,Green Technology, Solor Technology, Hybrid technology, Cloud Computing, Automated System, Mobile

    Technology, Wireless technology, போன்ற துறைகளுடன் தொடர்புடைய பாடநெகளையும் இந்த கல்வி நிறுவனம் வெகுவிரைவில் ஆரம்பிக்க உள்ளதை நான் பாராட்டுகின்றேன் என்றார்.

    உலகை மாற்றுவதற்கான முதல் சக்தி, கல்வி அறிவு எவருக்கு நல்ல கல்வி அறிவு ஞானம் இருக்கிறதோ அவர்கள் எந்த துறையில் பயணித்தாலும் வெற்றி பெறுவது நிச்சயம் இந்த

    அடிப்படையில் பம்பலப்பிட்டி அமேசன் உயர்கல்வி நிறுவனம் சுமார் 10 வருடங்களாக ஏனைய கல்வி நிறுவனங்களை விடவும் மாறுபட்ட முறையில் தனது கல்வி நடவடிக்கைகளை

    முன்னெடுத்து வருகின்ற அதேவேளை பல சமூக சேவைகளையும், பல இலவச புலமைப்பரிசில் திட்டங்களையும் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

    இந்த பட்டமளிப்பு விழாவில் 140 மாணவர்கள் உளவியலும் உளவளத்துணையும், ஆசிரியர் பயிற்சி நெறி, தகவல் தொழில்நுட்பம், கணக்கியல், போன்ற பல துறைகளுக்கான பட்டச் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.

    அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
    அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
      Posted in உலக செய்திகள்

      பாகிஸ்தானில் சமூக வலைத்தளங்களை பாவிக்க இடைக்கால தடை

      பாகிஸ்தானில் சமூக வலைத்தளங்களை பாவிக்க இடைக்கால தடை

      பாகிஸ்தானா நாட்டில் உலகில் அதிக மக்கள் பயன் படுத்த படும் சமுக வலைத்தளங்களான

      Facebook, Twitter மற்றும் மேலும் சிலது தற்காலிகமாக தடை செய்ய பட்டுள்ளது

      இதன் மூலம் ஆளும் அரசுக்கு எதிரான பரப்புரைகள் அதிகம் முன் வைக்க படுவதால இந்த திடீர்

      தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

      Posted in உலக செய்திகள்

      23,000 கைதிகளை விடுவித்த ஆளும் மியான்மர் அரசு

      23,000 கைதிகளை விடுவித்த ஆளும் மியான்மர் அரசு

      மியானார் நாட்டில் தற்பொழுது இராணுவ ஆட்சி நிலவி வருகிறது ,இங்கு பல்வேறு பட குற்ற

      வழக்கில் சிறையில் அடைக்க பட்ட 23,000 கைதிகளை புத்த தினத்தில் இராணுவ தலைமை விடுதலை செய்துள்ளது

      மிக பெரும் தொகையில் இவ்விதம் விடுதலை செய்ய பட்ட சம்பவம் உலகில் வியந்து பார்க்க

      படுவதுடன் ,மிக பெரும் குற்றவாளிகளும் இவ்வித விடுதலை செய்ய பட்டுள்ளனர் என்ற குற்ற சாட்டும் முன் வைக்க பட்டு வருகின்றமை இங்கே சுட்டி காட்ட தக்கது

      மியான்மர் அரசு
      மியான்மர் அரசு
      Posted in உளவு செய்திகள்

      ஈரான் அணு உற்பத்தியை நிறுத்த மறுத்தால் தாக்குவோம் – இஸ்ரேல் மிரட்டல்

      ஈரான் அணு உற்பத்தியை நிறுத்த மறுத்தால் தாக்குவோம் – இஸ்ரேல் மிரட்டல்

      ஈரான் நாடானது தமது தேசிய பாதுகாப்பிற்கு என அணு ஆயுத உற்பத்தியை மேற்கொள்ளும்

      முகமாக அணு செரிவாக்கத்தை மேற்கொண்டு வருகிறது ,அவ்விதமான அணு உலைமீதே இஸ்ரேல் திடீர் தாக்குதலை நடத்தியது

      தற்போது தாம் அறுபது வீத செறி வாக்கத்தை கடந்து விட்டோம் என ஈரான் அதிரடியாக அறிவித்துள்ள

      நிலையில் ,இஸ்ரேலோ ஈரான் இதனை கைவிட வேண்டும் தவறினால் அதற்கு எவ்வகையான

      தாக்குதல்களையும் தாம் தொடுப்போம் என் அறிவித்துள்ளது நாடுகளுக்கு இடையில் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

      ஈரான் அணு ஆயுதத்தில் திறன்பட்டு விட்டால் ,அது வடகொரியாவை மிஞ்சி விடும் என இஸ்ரேல் கருதுகிறது

      அவ்விதம் உருவாகினால் அது இஸ்ரேல் என்ற நாடே அழிந்து போகும் நிலையை ஈரான்

      உருவாக்கிவிடும் என்ற அச்சத்தில் இஸ்ரேல் உறைந்துள்ளதன் வெளிப்பாடே இந்த தொடர் தாக்குதல்களுக்கு காரணமாக அமைந்துள்ளது குறிப்பிட தக்கது

      Israel warns
      Israel warns
      Posted in உலக செய்திகள்

      அப்பாவி மக்கள் எட்டுபேரை சுட்டு கொன்ற தீவிரவாதி

      அப்பாவி மக்கள் எட்டுபேரை சுட்டு கொன்ற தீவிரவாதி

      அமெரிக்கா Indianapolis பகுதியில் ஆயுதங்களுடன் நுழைந்த நபர் ஒருவர் அங்கிருந்த மக்கள் மீது திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினான்

      இதில் எட்டு பேர் பலியாகினர் ,ஆயுத தாரி தன்னை தானும் சுட்டு தற்கொலை செய்துளளர்

      இந்த தாக்குதலுக்குரிய காரணம் தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

      சுட்டு கொன்ற தீவிரவாதி
      சுட்டு கொன்ற தீவிரவாதி
        Posted in Uncategorized

        ஐரோப்பாவுக்குள் நுழைய வந்த அகதி கப்பல் கவிழ்ந்து 41 பேர் மரணம்

        ஐரோப்பாவுக்குள் நுழைய வந்த அகதி கப்பல் கவிழ்ந்து 41 பேர் மரணம்

        துனிசியா நாட்டின் கடல் பரப்பின் ஊடாக இத்தாலிக்குள் நுழையும் முகமாக கப்பல் ஒன்றின்

        மூலம் பயணித்த சட்டவிரோத குடியேற்ற வாசிகளின் கப்பல் கவிழ்ந்ததில் அதில் பயணித்த 41 பேரும் நீரில் மூழ்கி பலியாகினர்

        ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக ஆபத்தான கடல்வழியூடாக பலநூறு மக்கள் நாள் தோறும் முயன்று வருகின்றன

        இவ்விதம் கடல் வழியூடாக பயணம் மேற்கொண்ட சுமார் 20 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கடலில் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

        அகதி கப்பல்
        அகதி கப்பல்
          Posted in Uncategorized

          விவேக்கை கொன்றது அரசு தான் – மன்சூர் அலிகான் – வீடியோ

          விவேக்கை கொன்றது அரசு தான் – மன்சூர் அலிகான் – வீடியோ

          நடிகர் வேவக்கை கொன்றது ஆளும் அரசு தான் என மன்சூர் அலிகான் குற்றம் சுமத்தியுள்ளார்


          ,விவேக்கை பார்க்க சென்றபொழுது தண்னி பார்க்க விடவில்லை என தெரிவிக்க படுகிறது

          முழுமையான காணொளி இது

          https://www.youtube.com/watch?v=bIvHVKz2V2E
            Posted in Uncategorized

            விவேக்கின் உடல் இன்று தகனம் live

            விவேக்கின் உடல் இன்று தகனம்

            சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் உடல் இன்று சனிக்கிழமை மாலை தகனம் செய்யப்படுகிறது.

            மாரடைப்பால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் (59) உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்த நிலையில்

            எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

            இதையடுத்து சின்ன கலைவாணர் விவேக் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

            click here video

            விவேக் காலமானார் என்ற செய்தி அறிந்து திரையுலகினரும், ரசிகர்கள், பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

            இந்நிலையில், சின்ன கலைவாணர் விவேக் உடல் இன்று சனிக்கிழமை மாலை விருகம்பாக்கம் மின் தகன மேடையில் தகனம் செய்யப்படுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

            சினிமா
            சினிமா
              Posted in சினிமா

              கணவர் மீது கொடுத்த புகாரைத் திரும்பப் பெற்றார் நடிகை!

              கணவர் மீது கொடுத்த புகாரைத் திரும்பப் பெற்றார் நடிகை!

              கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் நிலையத்தில் அளித்த புகாரை திரும்ப பெற்றுள்ளார் நடிகை ராதா.

              சுந்தரா டிராவல்ஸ் அடாவடி உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவா் நடிகை ராதா (38). இவா் சென்னை சாலிகிராமம், லோகையா தெருவில் கணவரைப் பிரிந்து தனது மகன், தாயுடன் வசித்து வருகிறாா்.

              எண்ணூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வசந்தராஜா (40) என்பவருடன் ராதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு, இருவரும் வீட்டிலேயே தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனராம். பின்னா், ஒரே வீட்டில் குடும்பம் நடத்தினராம். எனினும் வசந்தராஜா, நடிகை ராதா

              மீது சந்தேகபட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாராம். இதில் மன வேதனை அடைந்த ராதா, தன்னை அடித்து கொடுமைப்படுத்தி வரும் வசந்தராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

              என்று விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இது குறித்து குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

              இந்த விசாரணையில், வசந்தராஜா ஏற்கெனவே திருமணமாகி மனைவி, இரு குழந்தைகளுடன் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள காவலா் குடியிருப்பில் வசித்து வருவது தெரியவந்தது.

              மேலும் வசந்தராஜா, திருவான்மியூா் காவல் நிலையத்தில் பணிபுரிந்துபோது நடிகை ராதாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், வசந்தராஜா, தனது மனைவிக்கு தெரியாமல், ராதாவை

              இரண்டாவதாகத் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளாா். கடந்த மாதம் வரை வடபழனி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த வசந்தராஜா, பல்வேறு பிரச்னைகளில் சிக்கியதால்

              அங்கிருந்து எண்ணூா் காவல் நிலையத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா் என்பது தெரியவந்தது.

              இந்நிலையில் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் நிலையத்தில் அளித்த புகாரை இன்று திரும்பப் பெற்றுக்கொண்டார் நடிகை ராதா.

                Posted in Uncategorized

                இந்தியா இராணுவத்தின் வெடிகுண்டுகள் – இலங்கையில் மீட்பு

                இந்தியா இராணுவத்தின் வெடிகுண்டுகள் – இலங்கையில் மீட்பு

                இந்திய இராணுவத்தால் பயன்படுத்தப்படுவதாக கருதப்படும் இரு கைக்குண்டுகள் செயலிழந்த நிலையில் வவுனியாவில் மீட்கப்பட்டுள்ளது.

                வவுனியா, ஈரப்பெரியகுளம், நவகமுவ பகுதியில் குறித்த இரு கைக்குண்டுகளும் நேற்று (16) மாலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

                குறித்த பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் மழை காரணமாக மண் அரித்துச் செல்லப்பட்ட இடத்தில் சந்தேகத்திற்கிடமான பொருள் காணப்பட்டதையடுத்து ஈரப்பெரியகுளம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.

                இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர். குறித்த இரு கைக்குண்டுகளும் இந்திய இராணுவத்தால்

                பயன்படுத்தப்படுகின்ற மில்ஸ் 36 வகையைச் சேர்ந்த கைக்குண்டுகள் எனவும், அவை செயலிழந்து காணப்பட்டமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

                குறித்த இரு கைக்குண்டுகளையும் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியில் மேலும் வெடிபொருட்கள்

                இருக்கலாம் என்ற சந்தேகத்தில் நீதிமன்ற உத்தரவைப் பெற்று அப்பகுதியில் நிலத்தை அகழ்ந்து தேடுதல் மேற்கொள்ளவும் பொலிசாரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

                  Posted in சினிமா

                  பெண்ணிற்கு தொல்லை கொடுத்த பிக் பாஸ் பிரபலம்

                  பெண்ணிற்கு தொல்லை கொடுத்த பிக் பாஸ் பிரபலம்

                  பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் என்றும் சர்ச்சைக்கு பஞ்சமே இருந்தது இல்லை. அதிலும் ஜூலி, மீரா மிதுன், சுஜித்ரா போன்றவர்கள் பிக் பாஸ்ஸுக்கு பின்னரும் சுஜித்ரா சர்ச்சைகளில்

                  சிக்கினர். இப்படி ஒரு நிலையில் முதன் முறையாக சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகரும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான டேனியல்.

                  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் டேனி. ஆனால், இவர் பிக்பாஸ்

                  நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னதாகவே பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இவர் முதன் முதலாக தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் அறிமுகமானார்.

                  அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்து இருந்தார். அதிலும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற வெளியான ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு என்ற கதாபாத்திரத்தில் இவர் பேசிய ‘பிரெண்டு லவ் மேட்டரு’ என்ற

                  வசனத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார். அதன் பின்னர் இவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பும்.பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த டேனி மேடையில் தனது காதலியான டெனிஷா குறித்து மிகவும் உருக்கமாக பேசி இருந்தார்.

                  பல ஆண்டுகளாக டெனிஷாவை காதலித்து வரும் டேனி வெளியே சென்றதும் அவரை திருமணம் செய்துகொள்வேன் என்றும், தனது திருமணத்தை கமல் முன் நின்று நடத்த வேண்டும் கமல் தெரிவித்திருந்தார்.டேனி கூறியது போலவே வெளியே சென்றதும் தனது நீண்ட வ்ருட காதலியான

                  டெனிஷாவை திருமணம்செய்துகொண்டார். 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி தனது காதலி டெனிஷாவை பதிவு திருமணம் செய்து கொண்ட டேனிக்கு கடந்த ஆண்டு தான் குழந்தை பிறந்தது.

                  பிக் பாஸுக்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வரும் இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பெண் ஒருவருடன் பேசிய ஸ்க்ரீன் ஷாட் ஆதாரங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி ஆதாரங்கள் இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “Thonuchu Solliton” என்ற கணக்கில் இருந்து டேனியல் 17

                  வயது பள்ளி வயது பெண்ணுடன் மோசமாக பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ‘ நான் அந்த பெண்ணின் விவரங்களைச் சேர்க்கவில்லை. டேனியல் போப் இரவு நேர பல பெண்கள் டி.எம்-கிற்கு மெசேஜ் செய்து அவர்களின் படங்களைக் கேட்கிறார்.

                  அவள் 17 வயது பள்ளி பெண் (அவள் புத்திசாலி. அவன் கேட்டபோது அவளுடைய விவரங்கள் எதுவும் அவனுக்குக் கொடுக்கவில்லை) இந்த டேனியல் போப் ஒரு குழந்தையுடன் இந்த நபர் .

                  அவர் தனது படங்களை இரண்டு முறை மற்றும் அதுவும் அதிகாலை 2 மணிக்கு அனுப்பும்படி கேட்டுள்ளார். அவர் எவ்வளவு காலமாக இதைச் செய்கிறார் என்று தெரியவில்லை’ என்று அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                  Posted in Uncategorized

                  வீதி விபத்துக்களில் 40 பேர் மரணம் – வேடிக்கை பார்க்கும் சிங்கள பொலிஸ்

                  வீதி விபத்துக்களில் 40 பேர் மரணம் – வேடிக்கை பார்க்கும் சிங்கள பொலிஸ்

                  இலங்கையில் கடந்த மூன்று நாட்களில் இடம் பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி நாற்பது பேர் பலியாகியுள்ளனர்

                  நாள்தோறும் விபத்துக்களில் சிக்கி பலர் பலியாகி வருகின்றனர்
                  இவ்விதம் ஏற்படுகின்ற

                  விபத்துக்களை தடுத்து மக்களை காப்பற்ற வேண்டிய போலீசார் அவர் தம் கடமையில் இருந்து

                  செயல் பட தவறியதன் விளைவே இந்த விபத்துகளுக்கு ன்காரணம் என தெரிவிக்க படுகிறது

                    Posted in Uncategorized

                    புலிகளை மீள் உருவாக்கம் செய்திட முயன்ற 4 பேர் யாழில் கைது

                    புலிகளை மீள் உருவாக்கம் செய்திட முயன்ற 4 பேர் யாழில் கைது

                    இலங்கை யாழ்ப்பாண பகுதியில் முன்னாள் விடுதலை புலிகளை மீள் உருவாக்கும் முயற்சியில்

                    ஈடுபட்டனர் என்ற குற்ற சாட்டில் நான்கு பேர் பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

                    இவ்வாறு கைதானவர் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,இந்தியாவில்

                    ஆயுதங்களுடன் கைது செய்ய பட்டவர்களுடன் இவர்கள் நேரடி உரையாடலில் இருந்தமையால் இந்த கைது இடம்பெற்றுள்ளது

                      Posted in Uncategorized

                      இணைய தளங்களுக்கு ஆப்பு வைக்கும் முயற்சியில் கோட்டா அரசு

                      இணைய தளங்களுக்கு ஆப்பு வைக்கும் முயற்சியில் கோட்டா அரசு

                      இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக இணையத்தளங்கள் ஊடாக போலியான செய்திகளை பரப்பி பொய்யான

                      குற்ற சாட்டுக்களை முன் வைக்கும் இணைய தளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும்

                      ,அவ்விதமான நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் .ஆளும் அரசு அமைச்சரவை ஒப்புதலுடன் புதிய சட்ட திருத்தும் ஒன்றை ஏற்படுத்தவுள்ளது

                      அடக்கி ஆளும் அடக்குமுறை ஆட்சியின் நீட்சியின் ஒரு பகுதியாக இது பார்க்க படுகிறது